உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 28:49, 50
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 49 பூமியின் ஒரு எல்லையில் இருக்கிற தொலைதூர தேசத்தாரை உங்களுக்கு எதிராக யெகோவா அனுப்புவார்.+ அவர்கள் கழுகைப் போல் வேகமாகப் பாய்ந்து வருவார்கள்.+ அவர்களுடைய மொழி உங்களுக்குப் புரியாது.+ 50 பார்க்கவே அவர்கள் பயங்கரமாக இருப்பார்கள். வயதில் பெரியவர்களுக்கு மதிப்புக் காட்டவோ, வயதில் சிறியவர்களுக்குக் கரிசனை காட்டவோ மாட்டார்கள்.+

  • 2 ராஜாக்கள் 15:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 பெக்கா ராஜா இஸ்ரவேலை ஆட்சி செய்த காலத்தில், ஈயோன், ஆபேல்-பெத்-மாக்கா,+ யநோகா, கேதேஸ்,+ ஆத்சோர், கீலேயாத்,+ கலிலேயா, அதாவது நப்தலி பகுதி+ முழுவதையும், அசீரிய ராஜாவான திகிலாத்-பிலேசர்+ முற்றுகையிட்டுக் கைப்பற்றினான். அதோடு, அங்கிருந்த மக்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனான்.+

  • 2 ராஜாக்கள் 17:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 ஓசெயா ஆட்சி செய்த ஒன்பதாம் வருஷத்தில், சமாரியாவை அசீரிய ராஜா கைப்பற்றினான்.+ பின்பு, இஸ்ரவேல் மக்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போய்+ ஆலாவிலும் கோசான் ஆற்றுக்குப்+ பக்கத்திலிருந்த ஆபோரிலும் மேதியர்களுடைய நகரங்களிலும் குடியேற்றினான்.+

  • ஏசாயா 7:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 ஆற்றின்* பகுதியிலிருந்து வாடகைக்கு வாங்கப்பட்ட சவரக்கத்தியைக் கொண்டு, அதாவது அசீரிய ராஜாவைக் கொண்டு,+ தலையிலும் கால்களிலும் உள்ள முடியை யெகோவா சிரைத்துவிடுவார்; தாடியைக்கூட விட்டுவைக்க மாட்டார்.

  • ஏசாயா 8:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 ஏனென்றால், ‘அம்மா,’ ‘அப்பா’ என்று அவன் கூப்பிடுவதற்கு முன்பே அசீரியர்கள் தமஸ்குவின் சொத்துகளையும் சமாரியாவில் கைப்பற்றிய பொருள்களையும் தங்கள் ராஜாவுக்கு முன்பாகக் கொண்டுபோவார்கள்”+ என்று சொன்னார்.

  • ஏசாயா 10:5, 6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 அவர் உங்களிடம், “இதோ, அசீரியன் வருகிறான்.+

      என் கோபத்தைக் காட்ட நான் பயன்படுத்தும் பிரம்பு அவன்தான்.

      தண்டனை கொடுக்க நான் பயன்படுத்தும் தடி அவன்தான்.+

       6 என்னைவிட்டு விலகிய* தேசத்துக்கு எதிராகவும்,+

      என் கோபத்தைக் கிளறிவிட்ட ஜனங்களுக்கு எதிராகவும் நான் அவனை அனுப்புவேன்.

      தேசத்தை முழுமையாகச் சூறையாடவும் கைப்பற்றவும் அவனுக்குக் கட்டளை கொடுப்பேன்.

      தெருவில் கிடக்கும் சேற்றைப் போல அவர்களை மிதித்துப் போடவும் கட்டளை கொடுப்பேன்.+

  • ஓசியா 10:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 அசீரியாவின் மகா ராஜாவுக்கு அது பரிசாகக் கொண்டுபோகப்படும்.+

      எப்பிராயீம் அவமானப்படுத்தப்படுவான்.

      ஆலோசனை கேட்டதற்காக இஸ்ரவேல் வெட்கமடைவான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்