உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 49:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 ஷைலோ* வரும்வரை+ யூதாவைவிட்டு செங்கோல் விலகாது,+ அவன் பாதங்களுக்கு இடையிலிருந்து அதிகாரக்கோலும் விலகாது. ஜனங்கள் எல்லாரும் ஷைலோவுக்குக் கீழ்ப்படிவார்கள்.+

  • 1 நாளாகமம் 5:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 யூதா+ தன்னுடைய சகோதரர்களைவிட உயர்ந்தவராக இருந்தார், வருங்காலத் தலைவர் அவருடைய வம்சத்தில்தான் வரவிருந்தார்;+ இருந்தாலும், மூத்த மகனின் உரிமை யோசேப்புக்கே கிடைத்தது.

  • ஏசாயா 9:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 நமக்காக ஒருவர் பிறந்திருக்கிறார்.+

      நமக்காக ஒரு மகன் கொடுக்கப்பட்டிருக்கிறார்.

      ஆட்சி செய்யும் அதிகாரம் அவருடைய தோளின் மேல் இருக்கும்.+

      ஞானமுள்ள ஆலோசகர்,+ வல்லமையுள்ள கடவுள்,+ என்றென்றுமுள்ள* தகப்பன், சமாதானத்தின் அதிபதி என்றெல்லாம் அவர் அழைக்கப்படுவார்.

  • மத்தேயு 2:4-6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 அதனால், ஏரோது முதன்மை குருமார்களையும் வேத அறிஞர்களையும் ஒன்றுகூட்டி, கிறிஸ்து* எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். 5 அதற்கு அவர்கள், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில்+ பிறப்பார்; ஏனென்றால், தீர்க்கதரிசி மூலம் இப்படி எழுதப்பட்டிருக்கிறது: 6 ‘யூதா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் ஆளுநர்களுடைய பார்வையில் நீ அற்பமான நகரமே கிடையாது; ஏனென்றால், என் மக்களான இஸ்ரவேலர்களை ஆளப்போகும்* தலைவர்+ உன்னிடமிருந்து வருவார்’” என்று சொன்னார்கள்.

  • லூக்கா 1:32, 33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 அவர் உயர்ந்தவராக இருப்பார்;+ உன்னதமான கடவுளின் மகன் என்று அழைக்கப்படுவார்;+ அவருடைய தந்தையான தாவீதின் சிம்மாசனத்தைக் கடவுளாகிய யெகோவா* அவருக்குக் கொடுப்பார்.+ 33 அவர் ராஜாவாக யாக்கோபுடைய வம்சத்தை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய ஆட்சிக்கு முடிவே இருக்காது”+ என்று சொன்னார்.

  • லூக்கா 2:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 இன்று தாவீதின் ஊரில்+ உங்களுக்கு ஒரு மீட்பர்+ பிறந்திருக்கிறார், அவர்தான் எஜமானாகிய கிறிஸ்து.+

  • யோவான் 7:42
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 42 அவர் தாவீதின் வம்சத்தில்,+ தாவீது குடியிருந்த+ பெத்லகேம்+ கிராமத்திலிருந்துதான் வருவாரென வேதவசனம் சொல்கிறது, இல்லையா?” என்றார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்