உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 33:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 நம்முடைய பண்டிகைகள் கொண்டாடப்படும் நகரமான சீயோனைப் பார்!+

      உன் கண்கள் எருசலேமை அமைதியான இடமாகவும்

      நிரந்தரமான கூடாரமாகவும்+ பார்க்கும்.

      அதன் ஆணிகள் ஒருபோதும் பிடுங்கப்படாது.

      அதன் கயிறுகள் எதுவும் அறுந்துபோகாது.

  • ஏசாயா 44:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 என் ஊழியன் சொல்வதெல்லாம் நடக்கும்படி செய்கிறேன்.

      என் தூதுவர்கள் முன்னறிவிக்கிற எல்லாவற்றையும் நிறைவேற்றுகிறேன்.+

      ‘எருசலேமில் ஜனங்கள் குடியிருப்பார்கள்’+ என்றும்,

      ‘யூதாவிலுள்ள நகரங்கள் திரும்பக் கட்டப்படும்,+

      அங்கே இடிந்து கிடப்பதையெல்லாம் சரிசெய்வேன்’+ என்றும் சொல்கிறேன்.

  • எரேமியா 30:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 யெகோவா சொல்வது இதுதான்:

      “சிறைபிடிக்கப்பட்டுப் போன யாக்கோபின் சந்ததியை நான் கூட்டிச்சேர்ப்பேன்.+

      அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்.

      அவர்களுடைய நகரம் மறுபடியும் மலைமேல் கட்டப்படும்.+

      அவர்களுடைய கோட்டை அதற்குரிய இடத்தில் அமைக்கப்படும்.

  • எரேமியா 31:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 அங்கே யூதா ஜனங்களும், அதன் நகரவாசிகளும், விவசாயிகளும், மேய்ப்பர்களும் ஒற்றுமையாகக் குடியிருப்பார்கள்.+

  • எரேமியா 33:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 “யெகோவா சொல்வது இதுதான்: ‘மனுஷர்களோ மிருகங்களோ நடமாட முடியாதளவுக்குப் பாழாகிவிட்டதாக நீங்கள் சொல்கிற யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் 11 ஜனங்கள் சந்தோஷமாக ஆடிப்பாடுகிற சத்தம்+ மறுபடியும் கேட்கும். மணமகனுடைய குரலும் மணமகளுடைய குரலும் கேட்கும். அதோடு, “பரலோகப் படைகளின் யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள், யெகோவா நல்லவர்,+ அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்!”+ என்று எல்லாரும் சொல்கிற சத்தம் கேட்கும்.’

      “யெகோவா சொல்வது இதுதான்: ‘அவர்கள் யெகோவாவின் ஆலயத்துக்கு நன்றிப் பலிகளைக் கொண்டுவருவார்கள்.+ ஏனென்றால், சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை நான் இங்கே கூட்டிக்கொண்டு வந்து பழையபடி நன்றாக வாழ வைப்பேன்.’”

  • எசேக்கியேல் 36:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 உங்கள் ஜனங்களாகிய இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரையும் நான் பெருகப் பண்ணுவேன். பாழாக்கப்பட்ட நகரங்கள் திரும்பக் கட்டப்படும்.+ அங்கே ஜனங்கள் குடியிருப்பார்கள்.+

  • சகரியா 8:4, 5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 “பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘மறுபடியும் எருசலேமின் பொது சதுக்கங்களில், கைத்தடி வைத்திருக்கிற வயதான ஆண்களும் பெண்களும் உட்கார்ந்திருப்பார்கள்.+ 5 நகரத்தின் பொது சதுக்கங்களில் நிறைய பிள்ளைகள் விளையாடிக்கொண்டு இருப்பார்கள்.’”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்