உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 22:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 என்னைப் பார்க்கிற எல்லாரும் கேலி செய்கிறார்கள்.+

      என்னைக் கிண்டல் செய்து, ஏளனமாகத் தலையை ஆட்டுகிறார்கள்.+

  • சங்கீதம் 34:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 அவருடைய எல்லா எலும்புகளையும் அவர் பாதுகாக்கிறார்.

      அவற்றில் ஒன்றுகூட முறிக்கப்படுவதில்லை.+

  • சங்கீதம் 69:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 உணவுக்குப் பதிலாக எனக்கு விஷத்தை* கொடுத்தார்கள்.+

      என் தாகத்துக்குக் காடியைத் தந்தார்கள்.+

  • சங்கீதம் 118:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 கட்டிடம் கட்டுகிறவர்கள் ஒதுக்கித்தள்ளிய கல்லே

      மூலைக்குத் தலைக்கல்லாக ஆனது.+

  • ஏசாயா 50:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 என்னை அடித்தவர்களுக்கு என் முதுகைக் காட்டினேன்.

      என் தாடியைப் பிடித்து இழுத்தவர்களுக்கு* என் கன்னங்களைக் காட்டினேன்.

      என்னைக் கேவலப்படுத்தி என்மேல் காறித் துப்பியவர்களுக்கு என் முகத்தை மறைக்கவில்லை.+

  • ஏசாயா 53:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 வலிகளையும் வியாதிகளையும் அவர் நன்கு புரிந்து வைத்திருந்தார்.

      ஆனாலும், ஜனங்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டார்.+

      ஒருவிதத்தில், அவருடைய முகம் நம்மிடமிருந்து மறைக்கப்பட்டது.*

      நாம் அவரை வெறுத்தோம்; அவரைக் கொஞ்சம்கூட மதிக்கவில்லை.+

  • ஏசாயா 53:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 ஆனால், நம்முடைய குற்றத்துக்காகத்தான் அவர் குத்தப்பட்டார்.+

      நம்முடைய பாவங்களுக்காகத்தான் அவர் கொடுமைப்படுத்தப்பட்டார்.+

      நமக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைப்பதற்காகத்தான் அவர் தண்டனையை ஏற்றுக்கொண்டார்.+

      அவருடைய காயங்களால்தான் நாம் குணமானோம்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்