-
எரேமியா 25:33பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
33 அன்று யெகோவாவினால் வெட்டி வீழ்த்தப்பட்டவர்கள் பூமியின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைவரை கிடப்பார்கள். அவர்களுக்காக யாரும் அழுது புலம்ப மாட்டார்கள். அவர்கள் அள்ளப்படாமலும், அடக்கம் செய்யப்படாமலும், அப்படியே நிலத்தில் எருவாகிப்போவார்கள்.’
-
-
செப்பனியா 1:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 அது கடவுளுடைய கடும் கோபத்தின் நாள்.+
இக்கட்டும் வேதனையுமான நாள்.+
புயல்காற்றும் பேரழிவும் தாக்கும் நாள்.
அது மங்கலான நாள், இருண்ட நாள்.+
கார்மேகமும் கும்மிருட்டும் சூழ்ந்துகொள்ளும் நாள்.+
-
2 பேதுரு 3:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 இவையெல்லாம் அழியப்போவதால், நீங்கள் எந்தளவுக்குப் பரிசுத்த நடத்தை உள்ளவர்களாகவும் கடவுள்பக்திக்குரிய செயல்களைச் செய்கிறவர்களாகவும் இருக்க வேண்டும்! 12 அதேசமயத்தில், யெகோவாவின்* நாளை*+ எப்போதும் மனதில் வைத்து* அதற்காக எந்தளவுக்கு ஆவலோடு காத்திருக்கிறவர்களாக இருக்க வேண்டும்! அந்த நாளில் வானம் எரிந்து அழிந்துபோகும்,+ மூலப்பொருள்கள் கடும் வெப்பத்தில் உருகிப்போகும்.
-
-
-