-
சங்கீதம் 18:31-42பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
31 யெகோவாவைத் தவிர வேறு கடவுள் உண்டா?+
நம் கடவுளைத் தவிர வேறு கற்பாறை உண்டா?+
34 போர் செய்ய என் கைகளுக்குப் பயிற்சி தருகிறார்.
அதனால், என் கைகளால் செம்பு வில்லை வளைக்க முடியும்.
35 உங்களுடைய மீட்பின் கேடயத்தை எனக்குக் கொடுக்கிறீர்கள்.+
உங்கள் வலது கையால் என்னைத் தாங்குகிறீர்கள்.
உங்கள் மனத்தாழ்மையால் என்னை உயர்த்துகிறீர்கள்.+
37 நான் எதிரிகளைத் துரத்திக்கொண்டு போய்ப் பிடிப்பேன்.
அவர்களை அடியோடு அழித்துவிட்டுத்தான் திரும்புவேன்.
41 அவர்கள் உதவி கேட்டுக் கதறுகிறார்கள், ஆனால் அவர்களைக் காப்பாற்ற யாரும் இல்லை.
அவர்கள் யெகோவாவிடமும் கதறுகிறார்கள், ஆனால் அவர் பதில் சொல்வதில்லை.
42 காற்றில் பறக்கிற தூசியைப் போல அவர்களை நான் தூள்தூளாக்குவேன்.
தெருக்களில் கிடக்கிற சேற்றைப் போல அவர்களை வீசியெறிவேன்.
-