-
2 சாமுவேல் 22:32-43பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
32 யெகோவாவைத் தவிர வேறு கடவுள் உண்டா?+
நம் கடவுளைத் தவிர வேறு கற்பாறை உண்டா?+
35 போர் செய்ய என் கைகளுக்குப் பயிற்சி தருகிறார்;
அதனால், என் கைகளால் செம்பு வில்லை வளைக்க முடியும்.
36 உங்களுடைய மீட்பின் கேடயத்தை எனக்குக் கொடுக்கிறீர்கள்,
உங்கள் மனத்தாழ்மையால் என்னை உயர்த்துகிறீர்கள்.+
38 நான் எதிரிகளைத் துரத்திக்கொண்டு போய்த் தீர்த்துக்கட்டுவேன்.
அவர்களை அடியோடு அழித்துவிட்டுத்தான் திரும்புவேன்.
39 அவர்களை ஒழித்துக்கட்டுவேன், மறுபடியும் எழுந்து வர முடியாதபடி நொறுக்குவேன்;+
அவர்கள் என் காலடியில் விழுவார்கள்.
42 அவர்கள் உதவி கேட்டுக் கதறுகிறார்கள், ஆனால் அவர்களைக் காப்பாற்ற யாரும் இல்லை.
அவர்கள் யெகோவாவிடமும் கதறுகிறார்கள், ஆனால் அவர் பதில் சொல்வதில்லை.+
43 தரையில் கிடக்கிற தூசியைப் போல் அவர்களை நான் தூள்தூளாக்குவேன்;
அவர்களைச் சுக்குநூறாக்கி, தெருக்களில் கிடக்கிற சேற்றைப் போல் மிதித்துப்போடுவேன்.
-