-
பிரசங்கி 2:18, 19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 சூரியனுக்குக் கீழே எதையெல்லாம் பாடுபட்டுச் சேர்த்தேனோ அதையெல்லாம் வெறுத்தேன்,+ ஏனென்றால் எனக்குப் பின்னால் வருகிறவனுக்குத்தானே அதையெல்லாம் விட்டுவிட்டுப் போக வேண்டும்!+ 19 அவன் ஞானமுள்ளவனாக இருப்பானா முட்டாளாக இருப்பானா என்று யாருக்குத் தெரியும்?+ எப்படியிருந்தாலும், சூரியனுக்குக் கீழே நான் ஞானத்தோடு பாடுபட்டுச் சம்பாதித்த எல்லாவற்றையும் அவன்தான் ஆண்டு அனுபவிப்பான். இதுவும் வீண்தான்.
-
-
பிரசங்கி 4:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 ஒருவன் தன்னந்தனியாக இருக்கிறான், அவனுக்கு நண்பனும் இல்லை, மகனும் இல்லை, சகோதரனும் இல்லை. ஆனாலும், ராத்திரி பகலாக உழைக்கிறான். எவ்வளவுதான் சொத்து இருந்தாலும் அவனுடைய கண்கள் திருப்தி அடைவதில்லை.+ ‘நல்லது எதையும் அனுபவிக்காமல் யாருக்காக இப்படி ஓடி ஓடி உழைக்கிறேன்?’+ என்று அவன் எப்போதாவது யோசிக்கிறானா? இதுவும் வீண்தான், வேதனையான வேலைதான்.+
-
-
லூக்கா 12:19, 20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 அதன் பிறகு என்னிடம் நானே, “பல வருஷங்களுக்குத் தேவையான நல்ல நல்ல பொருள்களை உனக்காகச் சேர்த்து வைத்திருக்கிறேன்; அதனால் நீ ஓய்வெடு, சாப்பிட்டுக் குடித்துச் சந்தோஷமாக இரு” என்று சொல்வேன்’ எனத் தனக்குள் சொல்லிக்கொண்டான். 20 ஆனால் கடவுள் அவனிடம், ‘புத்தியில்லாதவனே, இன்று ராத்திரி உன் உயிரை உன்னிடமிருந்து எடுத்துவிடுவார்கள், அப்போது நீ சேர்த்து வைத்திருப்பதெல்லாம் யாருக்குச் சொந்தமாகும்?’+ என்று கேட்டார்.
-