உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 65:13, 14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா இப்படிச் சொல்கிறார்:

      “என் ஊழியர்கள் சாப்பிடுவார்கள், ஆனால் நீங்கள் பசியில் வாடுவீர்கள்.+

      என் ஊழியர்கள் குடிப்பார்கள்,+ ஆனால் நீங்கள் தாகத்தில் தவிப்பீர்கள்.

      என் ஊழியர்கள் சந்தோஷமாக இருப்பார்கள்,+ ஆனால் நீங்கள் அவமானத்தில் கூனிக்குறுகுவீர்கள்.+

      14 என் ஊழியர்கள் சந்தோஷம் பொங்கும் இதயத்தோடு ஆரவாரம் செய்வார்கள்.

      ஆனால், நீங்கள் வேதனை நிறைந்த இதயத்தோடு அலறுவீர்கள்.

      துக்கத்தினால் அழுது புலம்புவீர்கள்.

  • எரேமியா 17:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய யெகோவாவே,

      உங்களைவிட்டு விலகிப்போகிற* எல்லாரும் அவமானம் அடைவார்கள்.

      உங்களுக்குத் துரோகம் செய்கிறவர்களின் பெயர்கள் மண்ணில்தான் எழுதப்படும்.+

      ஏனென்றால், வாழ்வு தரும் நீரூற்றாகிய யெகோவாவை அவர்கள் விட்டுவிட்டார்கள்.+

  • எரேமியா 17:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 என்னைத் துன்புறுத்துகிறவர்களுக்கு அவமானம் வரட்டும்.+

      ஆனால், எனக்கு அவமானம் வர அனுமதிக்காதீர்கள்.

      அவர்கள் திகிலடையட்டும்.

      ஆனால், நான் திகிலடைய அனுமதிக்காதீர்கள்.

      அவர்களுக்கு எதிராக அழிவு நாளைக் கொண்டுவாருங்கள்.+

      அவர்களை நொறுக்கிப்போடுங்கள், அடியோடு அழித்துவிடுங்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்