உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 20
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

லேவியராகமம் முக்கியக் குறிப்புகள்

      • மோளேகை வணங்குவது; ஆவியுலகத் தொடர்பு (1-6)

      • பரிசுத்தமாக இருப்பதும், பெற்றோருக்கு மதிப்புக் கொடுப்பதும் (7-9)

      • முறைகேடாக உடலுறவுகொள்கிறவர்கள் கொல்லப்படுவார்கள் (10-21)

      • தேசத்திலிருந்து துரத்தப்படாமல் இருக்க பரிசுத்தமாக இருக்க வேண்டும் (22-26)

      • ஆவிகளோடு பேசுகிறவர்கள் கொல்லப்பட வேண்டும் (27)

லேவியராகமம் 20:2

அடிக்குறிப்புகள்

  • *

    பிள்ளையை நரபலி கொடுப்பதையும் இது அர்த்தப்படுத்தலாம்.

இணைவசனங்கள்

  • +லேவி 18:21; உபா 18:10

லேவியராகமம் 20:3

இணைவசனங்கள்

  • +எசே 5:11

லேவியராகமம் 20:4

இணைவசனங்கள்

  • +உபா 13:6-9

லேவியராகமம் 20:5

இணைவசனங்கள்

  • +யாத் 20:5

லேவியராகமம் 20:6

இணைவசனங்கள்

  • +லேவி 19:31; உபா 18:10-12; கலா 5:19, 20; வெளி 21:8
  • +லேவி 20:27; அப் 16:16
  • +1நா 10:13

லேவியராகமம் 20:7

இணைவசனங்கள்

  • +லேவி 11:44; 1பே 1:15, 16

லேவியராகமம் 20:8

இணைவசனங்கள்

  • +லேவி 18:4; பிர 12:13
  • +யாத் 31:13; லேவி 21:8; 1தெ 5:23; 2தெ 2:13

லேவியராகமம் 20:9

இணைவசனங்கள்

  • +யாத் 21:17; உபா 27:16; நீதி 20:20; மத் 15:4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/2004, பக். 24

லேவியராகமம் 20:10

இணைவசனங்கள்

  • +உபா 5:18; 22:22; ரோ 7:3; 1கொ 6:9, 10

லேவியராகமம் 20:11

இணைவசனங்கள்

  • +லேவி 18:8; உபா 27:20

லேவியராகமம் 20:12

இணைவசனங்கள்

  • +லேவி 18:15, 29

லேவியராகமம் 20:13

இணைவசனங்கள்

  • +ஆதி 19:5; லேவி 18:22; நியா 19:22; ரோ 1:26, 27; 1கொ 6:9, 10; யூ 7

லேவியராகமம் 20:14

இணைவசனங்கள்

  • +லேவி 18:17; உபா 27:23
  • +லேவி 21:9

லேவியராகமம் 20:15

இணைவசனங்கள்

  • +யாத் 22:19; உபா 27:21

லேவியராகமம் 20:16

இணைவசனங்கள்

  • +லேவி 18:23

லேவியராகமம் 20:17

இணைவசனங்கள்

  • +லேவி 18:9; உபா 27:22

லேவியராகமம் 20:18

இணைவசனங்கள்

  • +லேவி 18:19

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/1/1991, பக். 24-25

லேவியராகமம் 20:19

இணைவசனங்கள்

  • +லேவி 18:12, 13

லேவியராகமம் 20:20

இணைவசனங்கள்

  • +லேவி 18:14

லேவியராகமம் 20:21

இணைவசனங்கள்

  • +லேவி 18:16; உபா 25:5

லேவியராகமம் 20:22

இணைவசனங்கள்

  • +யாத் 21:1; உபா 5:1; பிர 12:13
  • +லேவி 18:26, 28

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    2/8/1990, பக். 5

லேவியராகமம் 20:23

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “பழக்கவழக்கங்களை.”

இணைவசனங்கள்

  • +லேவி 18:3, 24; உபா 12:30
  • +லேவி 18:27; உபா 9:5

லேவியராகமம் 20:24

இணைவசனங்கள்

  • +யாத் 3:17; 6:8; உபா 8:7-9; எசே 20:6
  • +யாத் 19:5; 33:16; 1ரா 8:53; 1பே 2:9

லேவியராகமம் 20:25

இணைவசனங்கள்

  • +லேவி 11:46, 47; உபா 14:4-20
  • +லேவி 11:43

லேவியராகமம் 20:26

இணைவசனங்கள்

  • +லேவி 19:2; சங் 99:5; 1பே 1:15, 16; வெளி 4:8
  • +உபா 7:6

லேவியராகமம் 20:27

இணைவசனங்கள்

  • +யாத் 22:18; லேவி 19:31; 20:6; உபா 18:10-12; வெளி 21:8

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

லேவி. 20:2லேவி 18:21; உபா 18:10
லேவி. 20:3எசே 5:11
லேவி. 20:4உபா 13:6-9
லேவி. 20:5யாத் 20:5
லேவி. 20:6லேவி 19:31; உபா 18:10-12; கலா 5:19, 20; வெளி 21:8
லேவி. 20:6லேவி 20:27; அப் 16:16
லேவி. 20:61நா 10:13
லேவி. 20:7லேவி 11:44; 1பே 1:15, 16
லேவி. 20:8லேவி 18:4; பிர 12:13
லேவி. 20:8யாத் 31:13; லேவி 21:8; 1தெ 5:23; 2தெ 2:13
லேவி. 20:9யாத் 21:17; உபா 27:16; நீதி 20:20; மத் 15:4
லேவி. 20:10உபா 5:18; 22:22; ரோ 7:3; 1கொ 6:9, 10
லேவி. 20:11லேவி 18:8; உபா 27:20
லேவி. 20:12லேவி 18:15, 29
லேவி. 20:13ஆதி 19:5; லேவி 18:22; நியா 19:22; ரோ 1:26, 27; 1கொ 6:9, 10; யூ 7
லேவி. 20:14லேவி 18:17; உபா 27:23
லேவி. 20:14லேவி 21:9
லேவி. 20:15யாத் 22:19; உபா 27:21
லேவி. 20:16லேவி 18:23
லேவி. 20:17லேவி 18:9; உபா 27:22
லேவி. 20:18லேவி 18:19
லேவி. 20:19லேவி 18:12, 13
லேவி. 20:20லேவி 18:14
லேவி. 20:21லேவி 18:16; உபா 25:5
லேவி. 20:22யாத் 21:1; உபா 5:1; பிர 12:13
லேவி. 20:22லேவி 18:26, 28
லேவி. 20:23லேவி 18:3, 24; உபா 12:30
லேவி. 20:23லேவி 18:27; உபா 9:5
லேவி. 20:24யாத் 3:17; 6:8; உபா 8:7-9; எசே 20:6
லேவி. 20:24யாத் 19:5; 33:16; 1ரா 8:53; 1பே 2:9
லேவி. 20:25லேவி 11:46, 47; உபா 14:4-20
லேவி. 20:25லேவி 11:43
லேவி. 20:26லேவி 19:2; சங் 99:5; 1பே 1:15, 16; வெளி 4:8
லேவி. 20:26உபா 7:6
லேவி. 20:27யாத் 22:18; லேவி 19:31; 20:6; உபா 18:10-12; வெளி 21:8
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
லேவியராகமம் 20:1-27

லேவியராகமம்

20 பின்பு யெகோவா மோசேயைப் பார்த்து, 2 “நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘இஸ்ரவேலைச் சேர்ந்த ஒருவனோ இஸ்ரவேலில் குடியிருக்கிற மற்ற தேசத்தைச் சேர்ந்த ஒருவனோ மோளேகு தெய்வத்துக்குத் தன் பிள்ளையை அர்ப்பணித்தால்,* அவன் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+ அவனை நீங்கள் கல்லெறிந்து கொல்ல வேண்டும். 3 தன்னுடைய பிள்ளையை மோளேகுக்குக் கொடுக்கிறவன் என் பரிசுத்த இடத்தின் புனிதத்தைக் கெடுக்கிறான், என் பரிசுத்த பெயரைக் களங்கப்படுத்துகிறான். அதனால் நான் அவனை ஒதுக்கித்தள்ளி, அவனை அழித்துவிடுவேன்.+ 4 அந்த மனுஷன் தன்னுடைய பிள்ளையை மோளேகுக்குக் கொடுப்பதைப் பார்த்தும் நீங்கள் அதைக் கண்டுகொள்ளாமலும், அவனைக் கொல்லாமலும் விட்டுவிட்டால்,+ 5 நான் நிச்சயம் அவனையும் அவனுடைய குடும்பத்தையும் ஒதுக்கித்தள்ளுவேன்.+ அவனை மட்டுமல்லாமல், அவனோடு சேர்ந்து மோளேகை வணங்கி எனக்குத் துரோகம் செய்த எல்லாரையும் அழித்துவிடுவேன்.

6 ஆவிகளோடு பேசுகிறவர்களிடமும்+ குறிசொல்கிறவர்களிடமும்+ போவதன் மூலம் எனக்குத் துரோகம் செய்கிறவனை நான் ஒதுக்கித்தள்ளி, அவனை அழித்துவிடுவேன்.+

7 நீங்கள் உங்களைப் புனிதப்படுத்திக்கொண்டு, பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+ ஏனென்றால், நான் உங்களுடைய கடவுளாகிய யெகோவா. 8 நீங்கள் என் சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.+ உங்களைப் புனிதப்படுத்துகிற யெகோவா நானே.+

9 அப்பாவையோ அம்மாவையோ ஒருவன் சபித்தால் அவன் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+ அப்பாவையோ அம்மாவையோ சபித்ததால், அவனுடைய சாவுக்கு அவன்தான் பொறுப்பு.

10 ஒருவன் இன்னொருவனுடைய மனைவியோடு உறவுகொண்டு தன் மனைவிக்குத் துரோகம் செய்தால், தவறு செய்த இரண்டு பேரும் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+ 11 தன்னுடைய அப்பாவின் மனைவியோடு உடலுறவுகொள்கிறவன் தன் அப்பாவை அவமானப்படுத்துகிறான்.+ அவனும் அவளும் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும். அவர்களுடைய சாவுக்கு அவர்கள்தான் பொறுப்பு. 12 ஒருவன் தன்னுடைய மருமகளோடு உடலுறவுகொண்டால், அவர்கள் இரண்டு பேரும் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும். அவர்கள் செய்தது இயற்கைக்கு முரணானது. அவர்களுடைய சாவுக்கு அவர்கள்தான் பொறுப்பு.+

13 ஒருவன் பெண்ணோடு உடலுறவுகொள்வதுபோல் ஆணோடு உடலுறவுகொண்டால், அது அருவருப்பானது.+ அவர்கள் இரண்டு பேரும் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும். அவர்களுடைய சாவுக்கு அவர்கள்தான் பொறுப்பு.

14 ஒருவன் ஒருத்தியைக் கல்யாணம் செய்துகொண்டு அவளுடைய தாயோடும் உடலுறவுகொண்டால், அது வெட்கங்கெட்ட செயல்.+ அவனும் அவர்களும் கொல்லப்பட்டு, எரிக்கப்பட வேண்டும்.+ அப்போதுதான், இப்படிப்பட்ட வெட்கங்கெட்ட செயல் உங்கள் மத்தியில் நடக்காது.

15 ஒருவன் ஒரு மிருகத்தோடு உறவுகொண்டால் அவன் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும், அந்த மிருகமும் கொல்லப்பட வேண்டும்.+ 16 ஒரு பெண் ஒரு மிருகத்தோடு உறவுகொண்டால்,+ அவளையும் அந்த மிருகத்தையும் நீங்கள் கொல்ல வேண்டும். மிருகத்தோடு உறவுகொள்கிறவர்கள் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும். அவர்கள் சாவுக்கு அவர்கள்தான் பொறுப்பு.

17 ஒருவன் தன்னுடைய சகோதரியோடு, அதாவது தன்னுடைய அப்பாவுக்கோ அம்மாவுக்கோ பிறந்தவளோடு, உடலுறவுகொண்டால் அது வெட்கக்கேடு.+ அவர்கள் இரண்டு பேரும் ஜனங்களின் கண் முன்னால் கொல்லப்பட வேண்டும். அவன் தன்னுடைய சகோதரியை அவமானப்படுத்திய குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட வேண்டும்.

18 மாதவிலக்கு ஏற்பட்ட ஒரு பெண்ணோடு ஒருவன் உடலுறவுகொண்டால், அவர்கள் இரண்டு பேரும் இரத்தத்தின் புனிதத்தை அவமதிக்கிறார்கள் என்று அர்த்தம்.+ அவர்கள் இரண்டு பேரும் கொல்லப்பட வேண்டும்.

19 உங்களுடைய அம்மாவின் சகோதரியோடு அல்லது அப்பாவின் சகோதரியோடு உடலுறவுகொள்ளக் கூடாது. ஏனென்றால், அது இரத்த சொந்தத்தை அவமானப்படுத்துவதாக இருக்கும்.+ அந்தக் குற்றத்துக்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். 20 தன் அப்பாவுடைய சகோதரனின் மனைவியோடு உடலுறவுகொள்கிறவன் தன் அப்பாவுடைய சகோதரனை அவமானப்படுத்துகிறான்.+ அவனும் அவளும் அந்தப் பாவத்துக்காகத் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்குப் பிள்ளைகள் பிறக்கக் கூடாது, அவர்கள் கொல்லப்பட வேண்டும். 21 ஒருவன் தன்னுடைய சகோதரனின் மனைவியோடு உடலுறவுகொண்டால், அது கேவலமான செயல்.+ அவன் தன்னுடைய சகோதரனை அவமானப்படுத்துகிறான். அவர்களுக்குப் பிள்ளைகள் பிறக்கக் கூடாது, அவர்கள் கொல்லப்பட வேண்டும்.

22 என்னுடைய எல்லா சட்டதிட்டங்களுக்கும் நீதித்தீர்ப்புகளுக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.+ அப்போதுதான், நீங்கள் குடியிருப்பதற்காக நான் கூட்டிக்கொண்டு போகும் தேசத்திலிருந்து துரத்தப்பட மாட்டீர்கள்.+ 23 நான் உங்களைவிட்டு விரட்டியடிக்கிற ஜனங்களின் சட்டதிட்டங்களை* நீங்கள் பின்பற்றக் கூடாது.+ இப்படிப்பட்ட எல்லா செயல்களையும் அவர்கள் செய்திருக்கிறார்கள், அவர்களை நான் அருவருக்கிறேன்.+ 24 அதனால்தான் நான் உங்களிடம், “அவர்களுடைய தேசத்தை நீங்கள் சொந்தமாக்கிக்கொள்வீர்கள். பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நான் உங்களுக்குக் கொடுப்பேன்.+ மற்ற எல்லா ஜனங்களிலிருந்தும் உங்களைப் பிரித்து வைத்திருக்கிற உங்கள் கடவுளாகிய யெகோவா நானே”+ என்று சொன்னேன். 25 சுத்தமான மிருகத்துக்கும் அசுத்தமான மிருகத்துக்கும், சுத்தமான பறவைக்கும் அசுத்தமான பறவைக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும்.+ அசுத்தமென்று நான் விலக்கிய மிருகத்தாலோ பறவையாலோ ஊரும் பிராணியாலோ நீங்கள் உங்களை அருவருப்பானவர்களாக ஆக்கிக்கொள்ளக் கூடாது.+ 26 யெகோவாவாகிய நான் பரிசுத்தமாக இருப்பதால், நீங்களும் என்முன் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+ நீங்கள் என் சொந்த ஜனங்களாய் இருப்பதற்காக மற்ற எல்லா ஜனங்களிலிருந்தும் உங்களைப் பிரித்து வைத்திருக்கிறேன்.+

27 ஆவிகளோடு பேசுகிற அல்லது குறிசொல்கிற ஒருவனோ ஒருத்தியோ நிச்சயம் கொல்லப்பட வேண்டும்.+ ஜனங்கள் அவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும். அவர்களுடைய சாவுக்கு அவர்கள்தான் பொறுப்பு’” என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்