உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • கலாத்தியர் 2
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

கலாத்தியர் முக்கியக் குறிப்புகள்

      • எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்களை பவுல் சந்திக்கிறார் (1-10)

      • பேதுருவை (கேபாவை) பவுல் திருத்துகிறார் (11-14)

      • விசுவாசத்தால் மட்டுமே நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறோம் (15-21)

கலாத்தியர் 2:1

இணைவசனங்கள்

  • +அப் 9:27
  • +அப் 15:1, 2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/1998, பக். 29

கலாத்தியர் 2:2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    10/2018, பக். 24

கலாத்தியர் 2:3

இணைவசனங்கள்

  • +2கொ 2:13
  • +அப் 16:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/1998, பக். 29

கலாத்தியர் 2:4

இணைவசனங்கள்

  • +கலா 4:9
  • +2கொ 3:17; கலா 5:1
  • +அப் 15:1, 24

கலாத்தியர் 2:5

இணைவசனங்கள்

  • +கலா 2:14

கலாத்தியர் 2:6

இணைவசனங்கள்

  • +கலா 2:9

கலாத்தியர் 2:7

இணைவசனங்கள்

  • +அப் 22:21; ரோ 11:13; 1தீ 2:7

கலாத்தியர் 2:8

இணைவசனங்கள்

  • +அப் 9:15

கலாத்தியர் 2:9

அடிக்குறிப்புகள்

  • *

    பேதுரு என்றும் அழைக்கப்படுகிறார்.

இணைவசனங்கள்

  • +அப் 15:13
  • +எபே 3:8
  • +அப் 13:2; 15:25

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 112

    காவற்கோபுரம்,

    10/15/2005, பக். 12-14

    “வேதாகமம் முழுவதும்”, பக். 250, 251-252

கலாத்தியர் 2:10

இணைவசனங்கள்

  • +அப் 11:29, 30; 1கொ 16:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/2012, பக். 8

    5/1/2006, பக். 5

    7/1/1987, பக். 14

கலாத்தியர் 2:11

அடிக்குறிப்புகள்

  • *

    பேதுரு என்றும் அழைக்கப்படுகிறார்.

  • *

    வே.வா., “அவர் குற்றம் செய்ததால்.”

இணைவசனங்கள்

  • +அப் 11:25, 26; 15:35
  • +யோவா 1:42

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/1/1991, பக். 25

கலாத்தியர் 2:12

இணைவசனங்கள்

  • +அப் 12:17
  • +அப் 10:26, 28; 11:2, 3
  • +அப் 21:20, 21

கலாத்தியர் 2:13

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “வெளிவேஷம் போட்டார்கள்.”

  • *

    வே.வா., “வெளிவேஷம் போட.”

கலாத்தியர் 2:14

அடிக்குறிப்புகள்

  • *

    பேதுரு என்றும் அழைக்கப்படுகிறார்.

இணைவசனங்கள்

  • +அப் 10:34, 35
  • +அப் 15:10, 28, 29

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    2/15/2013, பக். 7

    விழித்தெழு!,

    10/22/1998, பக். 12

கலாத்தியர் 2:16

இணைவசனங்கள்

  • +ரோ 1:17; யாக் 2:23
  • +அப் 13:39; ரோ 5:17; 1கொ 6:11
  • +ரோ 3:20-22

கலாத்தியர் 2:19

இணைவசனங்கள்

  • +ரோ 7:9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2021, பக். 15

    6/2021, பக். 31

கலாத்தியர் 2:20

இணைவசனங்கள்

  • +ரோ 6:6; கலா 5:24
  • +1பே 4:1, 2
  • +2கொ 5:15
  • +1தீ 2:5, 6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    நெருங்கி வாருங்கள், பக். 246-247

    காவற்கோபுரம் (படிப்பு),

    4/2021, பக். 22

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 27

    காவற்கோபுரம் (படிப்பு),

    8/2019, பக். 28

    7/2019, பக். 30-31

    காவற்கோபுரம்,

    8/15/2008, பக். 26

    8/1/2005, பக். 29

    3/1/1996, பக். 6

    4/1/1995, பக். 14

கலாத்தியர் 2:21

இணைவசனங்கள்

  • +யோவா 1:17
  • +கலா 3:21; எபி 7:11

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

கலா. 2:1அப் 9:27
கலா. 2:1அப் 15:1, 2
கலா. 2:32கொ 2:13
கலா. 2:3அப் 16:3
கலா. 2:4கலா 4:9
கலா. 2:42கொ 3:17; கலா 5:1
கலா. 2:4அப் 15:1, 24
கலா. 2:5கலா 2:14
கலா. 2:6கலா 2:9
கலா. 2:7அப் 22:21; ரோ 11:13; 1தீ 2:7
கலா. 2:8அப் 9:15
கலா. 2:9அப் 15:13
கலா. 2:9எபே 3:8
கலா. 2:9அப் 13:2; 15:25
கலா. 2:10அப் 11:29, 30; 1கொ 16:1
கலா. 2:11அப் 11:25, 26; 15:35
கலா. 2:11யோவா 1:42
கலா. 2:12அப் 12:17
கலா. 2:12அப் 10:26, 28; 11:2, 3
கலா. 2:12அப் 21:20, 21
கலா. 2:14அப் 10:34, 35
கலா. 2:14அப் 15:10, 28, 29
கலா. 2:16ரோ 1:17; யாக் 2:23
கலா. 2:16அப் 13:39; ரோ 5:17; 1கொ 6:11
கலா. 2:16ரோ 3:20-22
கலா. 2:19ரோ 7:9
கலா. 2:20ரோ 6:6; கலா 5:24
கலா. 2:201பே 4:1, 2
கலா. 2:202கொ 5:15
கலா. 2:201தீ 2:5, 6
கலா. 2:21யோவா 1:17
கலா. 2:21கலா 3:21; எபி 7:11
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
கலாத்தியர் 2:1-21

கலாத்தியருக்குக் கடிதம்

2 பதினான்கு வருஷங்களுக்குப் பின்பு, தீத்துவையும் கூட்டிக்கொண்டு மறுபடியும் பர்னபாவோடு+ எருசலேமுக்குப் போனேன்.+ 2 அங்கே போகும்படி எனக்கு வெளிப்படுத்தப்பட்டதால் போனேன். நான் மற்ற தேசத்து மக்களுக்குப் பிரசங்கித்துக்கொண்டிருக்கிற நல்ல செய்தியைப் பற்றி மதிப்புக்குரியவர்களிடம் எடுத்துச் சொன்னேன். ஆனாலும், நான் அப்போது செய்துகொண்டிருந்த ஊழியமும் அதுவரை செய்திருந்த ஊழியமும் வீண்போய்விடக் கூடாது என்பதற்காகத் தனிமையில் அவர்களிடம் எடுத்துச் சொன்னேன். 3 என்னோடிருந்த தீத்து+ ஒரு கிரேக்கராக இருந்தாலும் விருத்தசேதனம் செய்துகொள்ளும்படி யாரும் அவரைக் கட்டாயப்படுத்தவில்லை.+ 4 ஆனால், கிறிஸ்து இயேசுவின் சீஷர்களாகிய நாம் அனுபவிக்கிற சுதந்திரத்தைக் கெடுத்து நம்மை முழுவதுமாக அடிமைப்படுத்துவதற்கென்று,+ சபைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்த போலிச் சகோதரர்கள்+ பிரச்சினையைக் கிளப்பினார்கள்.+ 5 நல்ல செய்தியின் சத்தியம் உங்களிடம் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் கொஞ்சம்கூட அவர்களுக்கு அடிபணியவில்லை.+

6 இருந்தாலும், முக்கியமானவர்களாகக் கருதப்பட்டவர்கள்,+ சொல்லப்போனால் மதிப்புக்குரியவர்கள், புதிதாக எதையும் எனக்குச் சொல்லவில்லை. (முன்பு அவர்கள் எந்த நிலையில் இருந்தார்கள் என்பது எனக்கு முக்கியமல்ல. ஏனென்றால், மனிதர்கள் பார்க்கிற விதமாகக் கடவுள் பார்ப்பதில்லை.) 7 ஆனால், விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களுக்கு நல்ல செய்தியை அறிவிக்கும் பொறுப்பு பேதுருவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததைப் போல், விருத்தசேதனம் செய்யப்படாதவர்களுக்கு நல்ல செய்தியை அறிவிக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததை+ அவர்கள் பார்த்தார்கள். 8 (விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களுக்கு அப்போஸ்தலனாகச் செயல்படும் திறனை பேதுருவுக்குக் கொடுத்தவர் மற்ற தேசத்து மக்களுக்கு அப்போஸ்தலனாகச் செயல்படும் திறனை எனக்கும் கொடுத்திருந்தார்.)+ 9 ஆம், சபையின் தூண்கள் என்று கருதப்பட்ட யாக்கோபும்+ கேபாவும்* யோவானும் அந்த அளவற்ற கருணை எனக்குக் கொடுக்கப்பட்டதைப்+ பார்த்தார்கள். அதனால், விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களிடம் அவர்கள் போக வேண்டும் என்றும், நானும் பர்னபாவும்+ மற்ற தேசத்து மக்களிடம் போக வேண்டும் என்றும் தீர்மானித்தார்கள். ஒப்புதலுக்கு அடையாளமாக எங்கள் இரண்டு பேரோடும் கைகுலுக்கினார்கள். 10 வறுமையிலுள்ள சகோதரர்களை மறந்துவிட வேண்டாமென்று மட்டும் கேட்டுக்கொண்டார்கள்; அதைச் செய்வதற்குத்தான் நானும் ஊக்கமாக உழைத்து வந்திருக்கிறேன்.+

11 ஆனாலும், அந்தியோகியாவுக்கு+ கேபா*+ வந்தபோது அவர் நடந்துகொண்ட விதம் தவறாக இருந்ததால்* அதை நேருக்கு நேர் சுட்டிக்காட்டினேன். 12 யாக்கோபிடமிருந்து+ சில ஆட்கள் வருவதற்கு முன்பு அவர் மற்ற தேசத்து மக்களோடு சேர்ந்து சாப்பிட்டு வந்தார்.+ ஆனால் அவர்கள் வந்தபோது, விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களுக்குப் பயந்து, மற்ற தேசத்து மக்களை விட்டுவிலகி, ஒதுங்கியே இருந்துவிட்டார்.+ 13 மற்ற யூதர்களும் அவரைப் போலவே பாசாங்கு செய்தார்கள்.* சொல்லப்போனால், பர்னபாவும் அவர்களோடு சேர்ந்து பாசாங்கு செய்ய* தூண்டப்பட்டார். 14 நல்ல செய்தியின் சத்தியத்துக்கு ஏற்ப அவர்கள் நேர்மையாக நடக்காததை நான் பார்த்தபோது,+ அவர்கள் எல்லாருக்கும் முன்பாக கேபாவை* பார்த்து, “யூதராக இருக்கிற நீங்களே ஒரு யூதரைப் போல் நடக்காமல் மற்ற தேசத்து மக்களைப் போல் நடக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது, யூத வழக்கப்படி நடக்க வேண்டும் என்று மற்ற தேசத்து மக்களை நீங்கள் எப்படிக் கட்டாயப்படுத்தலாம்?”+ என்று கேட்டேன்.

15 நாம் பிறப்பால் யூதர்கள், மற்ற தேசத்தைச் சேர்ந்த பாவிகள் கிடையாது. 16 இருந்தாலும், திருச்சட்டத்தின் செயல்களால் அல்ல, கிறிஸ்து இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தால்தான்+ ஒருவன் நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்படுகிறான்+ என்று அறிந்திருக்கிறோம். அதனால், நாமும் திருச்சட்டத்தின் செயல்களால் அல்ல, கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தால் நீதிமான்கள் என்று ஏற்றுக்கொள்ளப்படுவதற்காக கிறிஸ்து இயேசுவின் மீது விசுவாசம் வைக்கிறோம். ஏனென்றால், எந்த மனிதனும் திருச்சட்டத்தின் செயல்களால் நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டான்.+ 17 கிறிஸ்துவின் மூலம் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முயற்சி செய்கிற நாம் பாவிகளாகக் கருதப்படுகிறோம் என்றால், கிறிஸ்து பாவத்துக்குத் துணைபோகிறார் என்று அர்த்தமா? இல்லவே இல்லை. 18 ஒருகாலத்தில் நான் எதையெல்லாம் இடித்துப்போட்டேனோ அதையெல்லாம் மறுபடியும் கட்டினால், நானே என்னைக் குற்றவாளியாகக் காட்டிக்கொள்கிறவனாய் இருப்பேன். 19 நான் கடவுளுக்கென்று வாழ்வதற்காக, திருச்சட்டத்தின் மூலம் திருச்சட்டத்துக்கு இறந்துவிட்டேன்.+ 20 கிறிஸ்துவோடுகூட நான் மரக் கம்பத்தில் வைத்து ஆணியடிக்கப்பட்டிருக்கிறேன்.+ இனி வாழ்வது நான் அல்ல,+ என்னோடு ஒன்றுபட்டிருக்கிற கிறிஸ்துதான் வாழ்கிறார். சொல்லப்போனால், இப்போது நான் வாழும் வாழ்க்கை கடவுளுடைய மகன் மீதுள்ள விசுவாசத்தால்தான்.+ அவர்தான் என்மேல் அன்பு வைத்து எனக்காகத் தன்னையே தியாகம் செய்தார்.+ 21 கடவுளுடைய அளவற்ற கருணையை நான் ஒதுக்கித்தள்ளுவதில்லை;+ திருச்சட்டத்தின் மூலம் ஒருவன் நீதிமானாக முடியுமென்றால், கிறிஸ்து இறந்தது வீணாக இருக்குமே.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்