-
உபாகமம் 30:1-3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
30 பின்பு அவர், “நான் உங்கள் முன்னால் வைத்த ஆசீர்வாதங்களும் சாபங்களும் நிறைவேறும்போது,+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைச் சிதறிப்போக வைக்கும் தேசங்களில்+ அவற்றை நினைத்துப் பார்த்து,+ 2 உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் ஒருவேளை நீங்கள் திரும்பி வரலாம்.+ ஒருவேளை நீங்களும் உங்கள் மகன்களும் இன்று நான் கொடுக்கிற எல்லா கட்டளைகளையும் கேட்டு, முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால்,+ 3 சிறைபிடிக்கப்பட்டிருந்த உங்களை உங்கள் கடவுளாகிய யெகோவா விடுதலை செய்வார்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள்மேல் இரக்கம் காட்டுவார்.+ உங்களைச் சிதறிப்போக வைத்த தேசங்களிலிருந்து மறுபடியும் உங்களைக் கூட்டிச்சேர்ப்பார்.+
-
-
எரேமியா 30:3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 “காலம் வரப்போகிறது” என்று யெகோவா சொல்கிறார். “அப்போது, இஸ்ரவேலிலிருந்தும் யூதாவிலிருந்தும் சிறைபிடிக்கப்பட்டுப் போன என் ஜனங்களை நான் கூட்டிச்சேர்ப்பேன்.+ அவர்களுடைய முன்னோர்களுக்கு நான் கொடுத்த தேசத்துக்கே அவர்களைக் கூட்டிக்கொண்டு வருவேன். அவர்கள் மறுபடியும் அங்கே குடியிருப்பார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.’”
-
-
ஆமோஸ் 9:14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 சிறைபிடிக்கப்பட்டுப் போன என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களைத் திரும்பவும் கூட்டிக்கொண்டு வருவேன்.+
இடிந்து கிடக்கும் நகரங்களை அவர்கள் மறுபடியும் கட்டி அவற்றில் குடியிருப்பார்கள்.+
திராட்சைத் தோட்டங்களை அமைத்து, அவற்றிலிருந்து கிடைக்கும் திராட்சமதுவைக் குடிப்பார்கள்.+
பழத் தோட்டங்களை அமைத்து அவற்றின் பழங்களைச் சாப்பிடுவார்கள்.’+
-