உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 33
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

எண்ணாகமம் முக்கியக் குறிப்புகள்

      • வனாந்தரத்தில் இஸ்ரவேலர்கள் பயணம் செய்த இடங்கள் (1-49)

      • கானானைக் கைப்பற்றுவதற்கான அறிவுரைகள் (50-56)

எண்ணாகமம் 33:1

இணைவசனங்கள்

  • +யோசு 24:5; 1சா 12:8
  • +யாத் 13:18
  • +யாத் 12:51

எண்ணாகமம் 33:2

இணைவசனங்கள்

  • +எண் 9:17

எண்ணாகமம் 33:3

இணைவசனங்கள்

  • +யாத் 12:2; 13:4
  • +ஆதி 47:11; யாத் 12:37
  • +யாத் 12:3, 6; உபா 16:1

எண்ணாகமம் 33:4

இணைவசனங்கள்

  • +யாத் 12:29; சங் 78:51
  • +யாத் 12:12; 18:11

எண்ணாகமம் 33:5

இணைவசனங்கள்

  • +யாத் 12:37

எண்ணாகமம் 33:6

இணைவசனங்கள்

  • +யாத் 13:20

எண்ணாகமம் 33:7

இணைவசனங்கள்

  • +யாத் 14:9
  • +யாத் 14:2

எண்ணாகமம் 33:8

இணைவசனங்கள்

  • +யாத் 14:22
  • +யாத் 15:22
  • +யாத் 13:20
  • +யாத் 15:23

எண்ணாகமம் 33:9

இணைவசனங்கள்

  • +யாத் 15:27

எண்ணாகமம் 33:11

இணைவசனங்கள்

  • +யாத் 16:1

எண்ணாகமம் 33:14

இணைவசனங்கள்

  • +யாத் 17:1, 8

எண்ணாகமம் 33:15

இணைவசனங்கள்

  • +யாத் 18:5; 19:1, 2; எண் 1:1; 3:4; 9:1

எண்ணாகமம் 33:16

இணைவசனங்கள்

  • +எண் 11:34; உபா 9:22

எண்ணாகமம் 33:17

இணைவசனங்கள்

  • +எண் 11:35; 12:16

எண்ணாகமம் 33:26

இணைவசனங்கள்

  • +எண் 9:17

எண்ணாகமம் 33:31

இணைவசனங்கள்

  • +உபா 10:6

எண்ணாகமம் 33:33

இணைவசனங்கள்

  • +உபா 10:7

எண்ணாகமம் 33:35

இணைவசனங்கள்

  • +உபா 2:8; 1ரா 9:26

எண்ணாகமம் 33:36

இணைவசனங்கள்

  • +எண் 20:1; 27:14; உபா 32:51; யோசு 15:1

எண்ணாகமம் 33:37

இணைவசனங்கள்

  • +எண் 20:22

எண்ணாகமம் 33:38

இணைவசனங்கள்

  • +உபா 10:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    புதிய உலக மொழிபெயர்ப்பு, பக். 2465, 2564

எண்ணாகமம் 33:40

இணைவசனங்கள்

  • +எண் 21:1

எண்ணாகமம் 33:41

இணைவசனங்கள்

  • +எண் 21:4

எண்ணாகமம் 33:43

இணைவசனங்கள்

  • +எண் 21:10

எண்ணாகமம் 33:44

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “அபாரீமின் இய்யம் (இடிபாடுகள்).” இதுதான் அடுத்த வசனத்தில் இய்யம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இணைவசனங்கள்

  • +ஆதி 19:36, 37; எண் 21:11, 13

எண்ணாகமம் 33:45

இணைவசனங்கள்

  • +எண் 32:34

எண்ணாகமம் 33:47

இணைவசனங்கள்

  • +உபா 34:1
  • +எண் 27:12; உபா 32:48, 49

எண்ணாகமம் 33:48

இணைவசனங்கள்

  • +எண் 22:1

எண்ணாகமம் 33:49

இணைவசனங்கள்

  • +எண் 25:1; யோசு 2:1

எண்ணாகமம் 33:51

இணைவசனங்கள்

  • +யோசு 3:17

எண்ணாகமம் 33:52

இணைவசனங்கள்

  • +லேவி 26:1
  • +லேவி 19:4; உபா 27:15
  • +யாத் 23:24; 34:13, 17; உபா 7:5; 12:3

எண்ணாகமம் 33:53

இணைவசனங்கள்

  • +உபா 32:8

எண்ணாகமம் 33:54

இணைவசனங்கள்

  • +நீதி 16:33
  • +எண் 26:53, 54
  • +யோசு 15:1; 16:1; 18:11

எண்ணாகமம் 33:55

இணைவசனங்கள்

  • +நியா 1:21; சங் 106:34
  • +யாத் 23:31-33; உபா 7:3, 4; யோசு 23:12, 13; நியா 2:2, 3

எண்ணாகமம் 33:56

இணைவசனங்கள்

  • +லேவி 18:28; யோசு 23:15

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

எண். 33:1யோசு 24:5; 1சா 12:8
எண். 33:1யாத் 13:18
எண். 33:1யாத் 12:51
எண். 33:2எண் 9:17
எண். 33:3யாத் 12:2; 13:4
எண். 33:3ஆதி 47:11; யாத் 12:37
எண். 33:3யாத் 12:3, 6; உபா 16:1
எண். 33:4யாத் 12:29; சங் 78:51
எண். 33:4யாத் 12:12; 18:11
எண். 33:5யாத் 12:37
எண். 33:6யாத் 13:20
எண். 33:7யாத் 14:9
எண். 33:7யாத் 14:2
எண். 33:8யாத் 14:22
எண். 33:8யாத் 15:22
எண். 33:8யாத் 13:20
எண். 33:8யாத் 15:23
எண். 33:9யாத் 15:27
எண். 33:11யாத் 16:1
எண். 33:14யாத் 17:1, 8
எண். 33:15யாத் 18:5; 19:1, 2; எண் 1:1; 3:4; 9:1
எண். 33:16எண் 11:34; உபா 9:22
எண். 33:17எண் 11:35; 12:16
எண். 33:26எண் 9:17
எண். 33:31உபா 10:6
எண். 33:33உபா 10:7
எண். 33:35உபா 2:8; 1ரா 9:26
எண். 33:36எண் 20:1; 27:14; உபா 32:51; யோசு 15:1
எண். 33:37எண் 20:22
எண். 33:38உபா 10:6
எண். 33:40எண் 21:1
எண். 33:41எண் 21:4
எண். 33:43எண் 21:10
எண். 33:44ஆதி 19:36, 37; எண் 21:11, 13
எண். 33:45எண் 32:34
எண். 33:47உபா 34:1
எண். 33:47எண் 27:12; உபா 32:48, 49
எண். 33:48எண் 22:1
எண். 33:49எண் 25:1; யோசு 2:1
எண். 33:51யோசு 3:17
எண். 33:52லேவி 26:1
எண். 33:52லேவி 19:4; உபா 27:15
எண். 33:52யாத் 23:24; 34:13, 17; உபா 7:5; 12:3
எண். 33:53உபா 32:8
எண். 33:54நீதி 16:33
எண். 33:54எண் 26:53, 54
எண். 33:54யோசு 15:1; 16:1; 18:11
எண். 33:55நியா 1:21; சங் 106:34
எண். 33:55யாத் 23:31-33; உபா 7:3, 4; யோசு 23:12, 13; நியா 2:2, 3
எண். 33:56லேவி 18:28; யோசு 23:15
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
எண்ணாகமம் 33:1-56

எண்ணாகமம்

33 மோசே மற்றும் ஆரோனின் தலைமையில்,+ இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து அணி அணியாகப்+ புறப்பட்டு,+ பல இடங்களில் பயணம் செய்தார்கள். 2 யெகோவாவின் கட்டளைப்படி, அவர்கள் பயணம் செய்த ஒவ்வொரு இடத்தையும் பற்றி மோசே பதிவு செய்தார். அவர்கள் பயணம் செய்த இடங்கள் இவைதான்:+ 3 முதல் மாதம் 15-ஆம் நாளில்,+ ராமசேசிலிருந்து அவர்கள் புறப்பட்டார்கள்.+ பஸ்காவுக்கு அடுத்த நாளே,+ எகிப்தியர்களின் கண் முன்னால் இஸ்ரவேலர்கள் வீரநடை போட்டுக்கொண்டு போனார்கள். 4 அப்போது எகிப்தியர்கள், யெகோவா கொன்றுபோட்ட தங்களுடைய மூத்த மகன்களை அடக்கம் செய்துகொண்டிருந்தார்கள்.+ அவர்களுடைய தெய்வங்களுக்கு யெகோவா தண்டனை கொடுத்திருந்தார்.+

5 இஸ்ரவேலர்கள் ராமசேசைவிட்டுப் புறப்பட்டு சுக்கோத்தில் முகாம்போட்டார்கள்.+ 6 பின்பு, சுக்கோத்திலிருந்து புறப்பட்டு வனாந்தரத்தின் எல்லையில் இருந்த ஈத்தாமில் முகாம்போட்டார்கள்.+ 7 அதன்பின், ஈத்தாமிலிருந்து புறப்பட்டு பாகால்-செபோனுக்கு எதிரில் உள்ள பிககிரோத்துக்குத்+ திரும்பி, மிக்தோலுக்கு முன்னால் முகாம்போட்டார்கள்.+ 8 பின்பு, பிககிரோத்திலிருந்து புறப்பட்டு கடலின் நடுவே நடந்து+ வனாந்தரத்துக்குப் போனார்கள்.+ ஈத்தாம் வனாந்தரத்தில்+ மூன்று நாள் பயணம் செய்து, மாராவில் முகாம்போட்டார்கள்.+

9 அதன்பின், மாராவிலிருந்து புறப்பட்டு ஏலிமுக்கு வந்தார்கள். ஏலிமில் 12 நீரூற்றுகளும் 70 பேரீச்ச மரங்களும் இருந்ததால் அங்கே முகாம்போட்டார்கள்.+ 10 அடுத்ததாக, ஏலிமிலிருந்து புறப்பட்டு செங்கடலுக்குப் பக்கத்தில் முகாம்போட்டார்கள். 11 அதன்பின், செங்கடலுக்குப் பக்கத்திலிருந்து புறப்பட்டு சின் வனாந்தரத்தில் முகாம்போட்டார்கள்.+ 12 பின்பு, சின் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு தொப்காவில் முகாம்போட்டார்கள். 13 அடுத்ததாக, தொப்காவிலிருந்து புறப்பட்டு ஆலூசில் முகாம்போட்டார்கள். 14 அதன்பின், ஆலூசிலிருந்து புறப்பட்டு ரெவிதீமில் முகாம்போட்டார்கள்.+ அங்கு அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கிடைக்கவில்லை. 15 பின்பு, ரெவிதீமிலிருந்து புறப்பட்டு சீனாய் வனாந்தரத்தில் முகாம்போட்டார்கள்.+

16 அடுத்ததாக, சீனாய் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு கிப்ரோத்-அத்தாவாவில் முகாம்போட்டார்கள்.+ 17 பின்பு, கிப்ரோத்-அத்தாவாவிலிருந்து புறப்பட்டு ஆஸ்ரோத்தில் முகாம்போட்டார்கள்.+ 18 அதன்பின், ஆஸ்ரோத்திலிருந்து புறப்பட்டு ரித்மாவில் முகாம்போட்டார்கள். 19 அடுத்ததாக, ரித்மாவிலிருந்து புறப்பட்டு ரிம்மோன்-பேரேசில் முகாம்போட்டார்கள். 20 பின்பு, ரிம்மோன்-பேரேசிலிருந்து புறப்பட்டு லிப்னாவில் முகாம்போட்டார்கள். 21 அதன்பின், லிப்னாவிலிருந்து புறப்பட்டு ரீசாவில் முகாம்போட்டார்கள். 22 பிறகு, ரீசாவிலிருந்து புறப்பட்டு கேலத்தாவில் முகாம்போட்டார்கள். 23 பின்பு, கேலத்தாவிலிருந்து புறப்பட்டு சாப்பேர் மலையில் முகாம்போட்டார்கள்.

24 அதன்பின், சாப்பேர் மலையிலிருந்து புறப்பட்டு ஆரதாவில் முகாம்போட்டார்கள். 25 அடுத்ததாக, ஆரதாவிலிருந்து புறப்பட்டு மக்கெலோத்தில் முகாம்போட்டார்கள். 26 பின்பு, மக்கெலோத்திலிருந்து புறப்பட்டு+ தாகாத்தில் முகாம்போட்டார்கள். 27 அதன்பின், தாகாத்திலிருந்து புறப்பட்டு தேராகுவில் முகாம்போட்டார்கள். 28 பிறகு, தேராகுவிலிருந்து புறப்பட்டு மித்காவில் முகாம்போட்டார்கள். 29 பின்பு, மித்காவிலிருந்து புறப்பட்டு அஸ்மோனாவில் முகாம்போட்டார்கள். 30 அதன்பின், அஸ்மோனாவிலிருந்து புறப்பட்டு மோசெரோத்தில் முகாம்போட்டார்கள். 31 அடுத்ததாக, மோசெரோத்திலிருந்து புறப்பட்டு பெனெ-யாக்கானில் முகாம்போட்டார்கள்.+ 32 பின்பு, பெனெ-யாக்கானிலிருந்து புறப்பட்டு ஓர்-அகித்துகாத்தில் முகாம்போட்டார்கள். 33 அதன்பின், ஓர்-அகித்துகாத்திலிருந்து புறப்பட்டு யோத்பாத்தாவில் முகாம்போட்டார்கள்.+ 34 பிறகு, யோத்பாத்தாவிலிருந்து புறப்பட்டு எப்ரோனாவில் முகாம்போட்டார்கள். 35 அதன்பின், எப்ரோனாவிலிருந்து புறப்பட்டு எசியோன்-கேபேரில் முகாம்போட்டார்கள்.+ 36 பிற்பாடு, எசியோன்-கேபேரிலிருந்து புறப்பட்டு சீன் வனாந்தரத்திலே+ காதேசில் முகாம்போட்டார்கள்.

37 அடுத்ததாக, காதேசிலிருந்து புறப்பட்டு ஏதோம் தேசத்தின் எல்லையிலுள்ள ஓர் என்ற மலைக்குப் பக்கத்தில் முகாம்போட்டார்கள்.+ 38 யெகோவாவின் கட்டளைப்படி, குருவாகிய ஆரோன் ஓர் என்ற அந்த மலைமேல் ஏறிப் போனார். இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட 40-ஆம் வருஷம், ஐந்தாம் மாதம், முதல் நாளில் அவர் அங்கே இறந்தார்.+ 39 ஓர் என்ற மலையில் ஆரோன் இறந்தபோது அவருக்கு 123 வயது.

40 கானான் தேசத்திலே நெகேபில் வாழ்ந்துவந்த கானானியனாகிய ஆராத் ராஜா,+ இஸ்ரவேலர்கள் வருவதைக் கேள்விப்பட்டான்.

41 பிற்பாடு, அவர்கள் ஓர் என்ற மலைக்குப்+ பக்கத்திலிருந்து புறப்பட்டு சல்மோனாவில் முகாம்போட்டார்கள். 42 பின்பு, சல்மோனாவிலிருந்து புறப்பட்டு பூனோனில் முகாம்போட்டார்கள். 43 அதன்பின், பூனோனிலிருந்து புறப்பட்டு ஓபோத்தில் முகாம்போட்டார்கள்.+ 44 அடுத்ததாக, ஓபோத்திலிருந்து புறப்பட்டு மோவாபின் எல்லையிலுள்ள இய்யா-அபாரீமில்* முகாம்போட்டார்கள்.+ 45 பிற்பாடு, இய்யமிலிருந்து புறப்பட்டு தீபோன்-காத்தில்+ முகாம்போட்டார்கள். 46 பிறகு, தீபோன்-காத்திலிருந்து புறப்பட்டு அல்மோன்-திப்லத்தாயிமில் முகாம்போட்டார்கள். 47 அதன்பின், அல்மோன்-திப்லத்தாயிமிலிருந்து புறப்பட்டு நேபோவுக்கு+ முன்னால் உள்ள அபாரீம் மலைத்தொடர்களில்+ முகாம்போட்டார்கள். 48 கடைசியாக, அபாரீம் மலைத்தொடர்களிலிருந்து புறப்பட்டு எரிகோவுக்குப் பக்கத்தில் யோர்தானை ஒட்டியுள்ள மோவாப் பாலைநிலத்தில் முகாம்போட்டார்கள்.+ 49 யோர்தானை ஒட்டியுள்ள அந்த மோவாப் பாலைநிலத்தில், பெத்-யெசிமோத் பகுதியிலிருந்து ஆபேல்-சித்தீம்வரை+ அவர்கள் தங்கியிருந்தார்கள்.

50 எரிகோவுக்குப் பக்கத்தில் யோர்தானை ஒட்டியுள்ள மோவாப் பாலைநிலத்தில் யெகோவா மோசேயிடம், 51 “நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நீங்கள் யோர்தானைக் கடந்து கானான் தேசத்துக்குள் போகப் போகிறீர்கள்.+ 52 அந்தத் தேசத்து ஜனங்கள் எல்லாரையும் நீங்கள் துரத்தியடிக்க வேண்டும். அவர்கள் வைத்திருக்கும் எல்லா கற்சிலைகளையும்+ உலோகச் சிலைகளையும்+ உடைத்துப்போட வேண்டும். அவர்களுடைய ஆராதனை மேடுகள் எல்லாவற்றையும் இடித்துப்போட வேண்டும்.+ 53 அவர்களுடைய தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு அங்கே குடியிருக்க வேண்டும். அந்தத் தேசத்தை நான் நிச்சயம் உங்கள் கையில் கொடுப்பேன்.+ 54 நீங்கள் அந்தத் தேசத்தை அந்தந்த கோத்திரங்களுக்கும் குடும்பங்களுக்கும் குலுக்கல் முறையில் பங்குபோட்டுக் கொடுக்க வேண்டும்.+ ஒரு தொகுதியில் நிறைய பேர் இருந்தால் அதிக நிலத்தைக் கொடுக்க வேண்டும், கொஞ்சம் பேர் மட்டும் இருந்தால் கொஞ்சம் நிலத்தை மட்டும் கொடுக்க வேண்டும்.+ குலுக்கல் முறையில் ஒரு கோத்திரத்துக்கு எந்த இடம் விழுகிறதோ அந்த இடத்தைக் கொடுக்க வேண்டும். உங்கள் தகப்பன்களுடைய கோத்திரங்களின்படி உங்களுக்குச் சொத்து கிடைக்கும்.+

55 ஆனால், அந்தத் தேசத்திலுள்ள ஜனங்களை நீங்கள் துரத்தியடிக்காவிட்டால்,+ அவர்கள் உங்களுடைய கண்களை உறுத்துகிற துரும்பைப் போலவும் உங்களுடைய விலாவில் குத்துகிற முள்ளைப் போலவும் இருப்பார்கள். நீங்கள் குடியிருக்கும் தேசத்தில் அவர்கள் உங்களைப் பாடாய்ப் படுத்துவார்கள்.+ 56 நான் அவர்களுக்குச் செய்ய நினைத்ததை உங்களுக்குச் செய்வேன்’”+ என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்