உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 6
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

யாத்திராகமம் முக்கியக் குறிப்புகள்

      • விடுதலை பற்றித் திரும்பவும் வாக்குறுதி கொடுக்கப்படுகிறது (1-13)

        • யெகோவா தன் பெயரைப் பற்றி முழுமையாக வெளிப்படுத்தவில்லை (2, 3)

      • மோசே மற்றும் ஆரோனின் வம்சாவளி (14-27)

      • மோசே மறுபடியும் பார்வோனிடம் போக வேண்டியிருக்கிறது (28-30)

யாத்திராகமம் 6:1

இணைவசனங்கள்

  • +யாத் 14:13
  • +யாத் 9:3; 11:1; 12:29, 31

யாத்திராகமம் 6:3

இணைவசனங்கள்

  • +ஆதி 17:1; 35:10, 11
  • +சங் 83:18; லூ 11:2; யோவா 12:28; அப் 15:14; வெளி 15:3
  • +ஆதி 12:8; 28:16; எரே 32:20

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 7/2020, பக். 1-2

    காவற்கோபுரம்,

    3/15/2004, பக். 25

யாத்திராகமம் 6:4

இணைவசனங்கள்

  • +ஆதி 15:18; 28:4

யாத்திராகமம் 6:5

இணைவசனங்கள்

  • +ஆதி 17:1, 7; யாத் 2:24

யாத்திராகமம் 6:6

இணைவசனங்கள்

  • +உபா 4:20
  • +உபா 26:8; 1நா 17:21; அப் 13:17

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    10/15/2012, பக். 24

யாத்திராகமம் 6:7

இணைவசனங்கள்

  • +யாத் 29:45; உபா 7:6; 2சா 7:24; சங் 33:12

யாத்திராகமம் 6:8

இணைவசனங்கள்

  • +ஆதி 15:18; 26:3; 35:12; யாத் 32:13
  • +யாத் 20:2; ஏசா 42:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    10/15/2012, பக். 24

யாத்திராகமம் 6:9

இணைவசனங்கள்

  • +யாத் 5:21

யாத்திராகமம் 6:12

இணைவசனங்கள்

  • +யாத் 5:21; 6:9
  • +யாத் 4:10; அப் 7:22

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    12/15/2015, பக். 14-15

யாத்திராகமம் 6:14

இணைவசனங்கள்

  • +ஆதி 49:3
  • +ஆதி 46:9

யாத்திராகமம் 6:15

இணைவசனங்கள்

  • +1நா 4:24

யாத்திராகமம் 6:16

இணைவசனங்கள்

  • +ஆதி 29:34
  • +ஆதி 46:11; எண் 26:57

யாத்திராகமம் 6:17

இணைவசனங்கள்

  • +எண் 3:18

யாத்திராகமம் 6:18

இணைவசனங்கள்

  • +எண் 3:19

யாத்திராகமம் 6:19

இணைவசனங்கள்

  • +எண் 3:20

யாத்திராகமம் 6:20

இணைவசனங்கள்

  • +யாத் 2:1; எண் 26:59
  • +1நா 23:13

யாத்திராகமம் 6:21

இணைவசனங்கள்

  • +எண் 16:1, 32; 26:10

யாத்திராகமம் 6:22

இணைவசனங்கள்

  • +லேவி 10:4; எண் 3:30

யாத்திராகமம் 6:23

இணைவசனங்கள்

  • +ரூ 4:19-21; மத் 1:4
  • +எண் 3:2

யாத்திராகமம் 6:24

இணைவசனங்கள்

  • +எண் 26:10, 11
  • +எண் 26:58; 1நா 9:19

யாத்திராகமம் 6:25

இணைவசனங்கள்

  • +எண் 3:32
  • +எண் 25:7; 31:6; யோசு 22:31; நியா 20:28
  • +யாத் 6:19

யாத்திராகமம் 6:26

இணைவசனங்கள்

  • +யாத் 7:2, 4; 12:41; அப் 7:35

யாத்திராகமம் 6:27

இணைவசனங்கள்

  • +சங் 77:20

யாத்திராகமம் 6:30

இணைவசனங்கள்

  • +யாத் 4:10; 6:12

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

யாத். 6:1யாத் 14:13
யாத். 6:1யாத் 9:3; 11:1; 12:29, 31
யாத். 6:3ஆதி 17:1; 35:10, 11
யாத். 6:3சங் 83:18; லூ 11:2; யோவா 12:28; அப் 15:14; வெளி 15:3
யாத். 6:3ஆதி 12:8; 28:16; எரே 32:20
யாத். 6:4ஆதி 15:18; 28:4
யாத். 6:5ஆதி 17:1, 7; யாத் 2:24
யாத். 6:6உபா 4:20
யாத். 6:6உபா 26:8; 1நா 17:21; அப் 13:17
யாத். 6:7யாத் 29:45; உபா 7:6; 2சா 7:24; சங் 33:12
யாத். 6:8ஆதி 15:18; 26:3; 35:12; யாத் 32:13
யாத். 6:8யாத் 20:2; ஏசா 42:8
யாத். 6:9யாத் 5:21
யாத். 6:12யாத் 5:21; 6:9
யாத். 6:12யாத் 4:10; அப் 7:22
யாத். 6:14ஆதி 49:3
யாத். 6:14ஆதி 46:9
யாத். 6:151நா 4:24
யாத். 6:16ஆதி 29:34
யாத். 6:16ஆதி 46:11; எண் 26:57
யாத். 6:17எண் 3:18
யாத். 6:18எண் 3:19
யாத். 6:19எண் 3:20
யாத். 6:20யாத் 2:1; எண் 26:59
யாத். 6:201நா 23:13
யாத். 6:21எண் 16:1, 32; 26:10
யாத். 6:22லேவி 10:4; எண் 3:30
யாத். 6:23ரூ 4:19-21; மத் 1:4
யாத். 6:23எண் 3:2
யாத். 6:24எண் 26:10, 11
யாத். 6:24எண் 26:58; 1நா 9:19
யாத். 6:25எண் 3:32
யாத். 6:25எண் 25:7; 31:6; யோசு 22:31; நியா 20:28
யாத். 6:25யாத் 6:19
யாத். 6:26யாத் 7:2, 4; 12:41; அப் 7:35
யாத். 6:27சங் 77:20
யாத். 6:30யாத் 4:10; 6:12
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
யாத்திராகமம் 6:1-30

யாத்திராகமம்

6 அதற்கு யெகோவா மோசேயிடம், “பார்வோனை நான் என்ன செய்யப்போகிறேன் என்று நீ இப்போது பார்ப்பாய்.+ என்னுடைய கைபலத்தை நான் அவனுக்குக் காட்டுவேன், அப்போது இஸ்ரவேலர்களை அவன் அனுப்பிவிடுவான். என்னுடைய கைபலத்தைப் பார்த்து, இந்தத் தேசத்திலிருந்தே அவர்களைத் துரத்திவிடுவான்”+ என்றார்.

2 பின்பு மோசேயிடம், “நான் யெகோவா. 3 நான் சர்வவல்லமையுள்ள கடவுள் என்று ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தெரியப்படுத்தினேன்.+ ஆனால் யெகோவா என்ற என்னுடைய பெயரைப்+ பற்றி அவர்களுக்கு முழுமையாக வெளிப்படுத்தவில்லை.+ 4 அவர்கள் அன்னியர்களாகக் குடியிருந்த கானான் தேசத்தை அவர்களுக்கே தருவதாக நான் ஒப்பந்தம் செய்தேன்.+ 5 இப்போது, எகிப்தியர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிற இஸ்ரவேலர்களின் குமுறல்களைக் கேட்டு, என்னுடைய ஒப்பந்தத்தை நினைத்துப் பார்க்கிறேன்.+

6 அதனால் நீ இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொல்: ‘நான் யெகோவா. எகிப்தியர்கள் உங்கள்மேல் சுமத்திய சுமைகளை நான் நீக்குவேன். அடிமைத்தனத்திலிருந்து உங்களை விடுவிப்பேன்.+ எகிப்தியர்களைக் கடுமையாகத் தண்டித்து, என்னுடைய மகா வல்லமையால் உங்களைக் காப்பாற்றுவேன்.+ 7 நீங்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பீர்கள், நான் உங்களுடைய கடவுளாக இருப்பேன்.+ எகிப்தியர்கள் சுமத்திய சுமைகளிலிருந்து உங்களை விடுவிக்கும் உங்கள் கடவுளாகிய யெகோவா நானே என்று நீங்கள் நிச்சயம் தெரிந்துகொள்வீர்கள். 8 ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் எந்தத் தேசத்தைக் கொடுப்பதாக நான் உறுதிமொழி தந்தேனோ அந்தத் தேசத்துக்கு உங்களைக் கூட்டிக்கொண்டு போவேன். அதை உங்களுக்குச் சொந்தமாகக் கொடுப்பேன்.+ நான் யெகோவா’”+ என்றார்.

9 மோசே இந்த வார்த்தைகளை இஸ்ரவேலர்களிடம் சொன்னார். ஆனால், அவர்கள் நொந்துபோயிருந்ததாலும் அடிமைத்தனத்தில் சிக்கித் தவித்ததாலும் மோசே சொன்னதைக் காதில் வாங்கவே இல்லை.+

10 பின்பு யெகோவா மோசேயிடம், 11 “இஸ்ரவேலர்களை இந்தத் தேசத்திலிருந்து அனுப்பும்படி எகிப்தின் ராஜாவான பார்வோனிடம் போய்ச் சொல்” என்றார். 12 ஆனால் மோசே யெகோவாவிடம், “நான் சொன்னதை இஸ்ரவேலர்களே கேட்கவில்லை,+ பார்வோன் எப்படிக் கேட்பான்? அதுவும் நான் திக்கித்திணறிப் பேசுகிறேனே”+ என்றார். 13 யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் மறுபடியும் பேசி, இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வருவது சம்பந்தமாக இஸ்ரவேலர்களுக்கும் பார்வோனுக்கும் என்னென்ன கட்டளைகள் கொடுக்க வேண்டுமென்று சொன்னார்.

14 இஸ்ரவேல் குடும்பங்களின் தலைவர்கள் இவர்கள்தான்: இஸ்ரவேலின் மூத்த மகனான ரூபனுடைய+ மகன்கள்: ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ.+ இவர்கள்தான் ரூபனின் வம்சத்தார்.

15 சிமியோனின் மகன்கள்: எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானியப் பெண்ணுக்குப் பிறந்த சாவூல்.+ இவர்கள்தான் சிமியோனின் வம்சத்தார்.

16 அவரவர் குடும்பங்களுக்குத் தலைவர்களாய் இருந்த லேவியின்+ மகன்கள்: கெர்சோன், கோகாத், மெராரி.+ இந்த லேவி 137 வருஷங்கள் வாழ்ந்தார்.

17 அவரவர் குடும்பங்களுக்குத் தலைவர்களாய் இருந்த கெர்சோனின் மகன்கள்: லிப்னி, சீமேயி.+

18 கோகாத்தின் மகன்கள்: அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல்.+ இந்த கோகாத் 133 வருஷங்கள் வாழ்ந்தார்.

19 மெராரியின் மகன்கள்: மகேலி, மூசி.

இவர்கள் எல்லாரும் லேவியின் மகன்களுடைய வழிவந்த வம்சத்தார்.+

20 அம்ராம் தன்னுடைய அப்பாவின் சகோதரி யோகெபேத்தைக் கல்யாணம் செய்தார்.+ அவள் ஆரோனையும் மோசேயையும் அவருக்குப் பெற்றுக் கொடுத்தாள்.+ அம்ராம் 137 வருஷங்கள் வாழ்ந்தார்.

21 இத்சேயாரின் மகன்கள்: கோராகு,+ நெப்பேக், சிக்ரி.

22 ஊசியேலின் மகன்கள்: மீஷாவேல், எல்சாப்பான்,+ சித்ரி.

23 அம்மினதாபின் மகளும் நகசோனின்+ சகோதரியுமான எலிசபாளை ஆரோன் கல்யாணம் செய்தார். நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார்+ என்ற மகன்களை அவள் அவருக்குப் பெற்றுக் கொடுத்தாள்.

24 கோராகுவின் மகன்கள்: ஆசீர், எல்க்கானா, அபியாசாப்.+ இவர்கள்தான் கோராகியர்களின் வம்சத்தார்.+

25 ஆரோனின் மகன் எலெயாசார்+ பூத்தியேலின் மகள்களில் ஒருத்தியைக் கல்யாணம் செய்தார். அவள் பினெகாஸ்+ என்ற மகனை அவருக்குப் பெற்றுக் கொடுத்தாள்.

இவர்கள்தான் அவரவர் வம்சங்களின்படி, லேவியர்களுடைய தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள்.+

26 இந்த ஆரோனிடமும் மோசேயிடமும்தான், “எகிப்து தேசத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை அணி அணியாகக் கூட்டிக்கொண்டு வாருங்கள்” என்று யெகோவா சொன்னார்.+ 27 எகிப்து தேசத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களைக் கூட்டிக்கொண்டு வருவதற்காக எகிப்தின் ராஜாவான பார்வோனிடம் பேசியது இந்த மோசேயும் ஆரோனும்தான்.+

28 எகிப்து தேசத்திலிருந்த மோசேயிடம் யெகோவா பேசிய அந்த நாளில், 29 யெகோவா அவரிடம், “நான் யெகோவா. நான் உன்னிடம் சொல்கிற எல்லாவற்றையும் எகிப்தின் ராஜாவான பார்வோனிடம் சொல்” என்றார். 30 அப்போது மோசே யெகோவாவிடம், “நானே திக்கித்திணறிப் பேசுகிறேன், அப்படியிருக்கும்போது நான் சொல்வதை பார்வோன் கேட்பானா?” என்றார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்