உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 19
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

லேவியராகமம் முக்கியக் குறிப்புகள்

      • பரிசுத்தமாக இருப்பது சம்பந்தமான சட்டங்கள் (1-37)

        • அறுவடையின்போது செய்ய வேண்டியவை (9, 10)

        • காது கேட்காதவனுக்கும் கண் தெரியாதவனுக்கும் கரிசனை காட்ட வேண்டும் (14)

        • இல்லாததையும் பொல்லாததையும் பேசக் கூடாது (16)

        • யார்மேலும் பகை வைத்திருக்கக் கூடாது (18)

        • மாயமந்திரமும் ஆவியுலகத் தொடர்பும் தடை செய்யப்படுகின்றன (26, 31)

        • பச்சை குத்துவதற்குத் தடை (28)

        • மூத்தவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் (32)

        • மற்ற தேசத்து ஜனங்களை நேசிக்க வேண்டும் (33, 34)

லேவியராகமம் 19:2

இணைவசனங்கள்

  • +லேவி 11:44; ஏசா 6:3; 1பே 1:15, 16; வெளி 4:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2021, பக். 4

    காவற்கோபுரம்,

    1/1/2010, பக். 30

    8/1/1996, பக். 10-11

லேவியராகமம் 19:3

இணைவசனங்கள்

  • +யாத் 20:12; எபே 6:2; எபி 12:9
  • +யாத் 20:8, 11; 31:13; லூ 6:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2021, பக். 4-5, 8

லேவியராகமம் 19:4

இணைவசனங்கள்

  • +லேவி 26:1; சங் 96:5; ஆப 2:18; 1கொ 10:14
  • +யாத் 20:4, 23; உபா 27:15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2021, பக். 5-6

லேவியராகமம் 19:5

இணைவசனங்கள்

  • +லேவி 3:1
  • +லேவி 7:11, 12

லேவியராகமம் 19:6

இணைவசனங்கள்

  • +லேவி 7:17, 18

லேவியராகமம் 19:7

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 11/2020, பக். 2-3

லேவியராகமம் 19:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 11/2020, பக். 2-3

லேவியராகமம் 19:9

இணைவசனங்கள்

  • +லேவி 23:22; உபா 24:19

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    6/15/2006, பக். 22-23

    12/1/2003, பக். 17

லேவியராகமம் 19:10

இணைவசனங்கள்

  • +உபா 15:7

லேவியராகமம் 19:11

இணைவசனங்கள்

  • +யாத் 20:15; எபே 4:28
  • +லேவி 6:2; நீதி 12:22; எபே 4:25

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2021, பக். 10

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2016, பக். 11-12

லேவியராகமம் 19:12

இணைவசனங்கள்

  • +யாத் 20:7; மத் 5:33, 37; யாக் 5:12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2021, பக். 10

லேவியராகமம் 19:13

அடிக்குறிப்புகள்

  • *

    இந்த வார்த்தை, ஒருவருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் இருப்பதையும் குறிக்கலாம்.

இணைவசனங்கள்

  • +நீதி 22:16; மாற் 10:19
  • +நீதி 22:22
  • +உபா 24:15; எரே 22:13; யாக் 5:4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2021, பக். 10

லேவியராகமம் 19:14

இணைவசனங்கள்

  • +உபா 27:18
  • +லேவி 25:17; நெ 5:15; நீதி 1:7; 8:13; 1பே 2:17

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2021, பக். 8-9

லேவியராகமம் 19:15

இணைவசனங்கள்

  • +யாத் 23:3; உபா 1:16, 17; 16:19; 2நா 19:6; ரோ 2:11; யாக் 2:9

லேவியராகமம் 19:16

அடிக்குறிப்புகள்

  • *

    அல்லது, “அடுத்தவர்களுடைய உயிர் ஆபத்தில் இருக்கும்போது நீங்கள் பக்கத்தில் நின்று வேடிக்கை பார்க்கக் கூடாது.”

இணைவசனங்கள்

  • +சங் 15:1, 3
  • +யாத் 20:16; 1ரா 21:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2021, பக். 14

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 7/2021, பக். 5

    காவற்கோபுரம்,

    6/15/1992, பக். 20

    8/1/1991, பக். 29

லேவியராகமம் 19:17

இணைவசனங்கள்

  • +நீதி 10:18; 1யோ 2:9; 3:15
  • +சங் 141:5; நீதி 9:8; மத் 18:15

லேவியராகமம் 19:18

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “வன்மம்.”

  • *

    வே.வா., “சக மனிதர்மேலும்.”

இணைவசனங்கள்

  • +நீதி 20:22; ரோ 12:19
  • +மத் 5:43, 44; 22:39; ரோ 13:9; கலா 5:14; யாக் 2:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2021, பக். 10-12

    காவற்கோபுரம்,

    4/15/2011, பக். 22

    12/1/2006, பக். 26-27

    “வேதாகமம் முழுவதும்”, பக். 29

லேவியராகமம் 19:19

இணைவசனங்கள்

  • +உபா 22:9
  • +உபா 22:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2021, பக். 6

லேவியராகமம் 19:21

இணைவசனங்கள்

  • +லேவி 6:6, 7

லேவியராகமம் 19:23

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2021, பக். 6-7

லேவியராகமம் 19:24

இணைவசனங்கள்

  • +உபா 26:1, 2; நீதி 3:9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2021, பக். 6-7

லேவியராகமம் 19:25

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2021, பக். 6-7

லேவியராகமம் 19:26

இணைவசனங்கள்

  • +லேவி 3:17; 17:13; உபா 12:23; அப் 15:20, 29
  • +யாத் 8:7; உபா 18:10-12; கலா 5:19, 20; வெளி 21:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    12/8/1993, பக். 24

லேவியராகமம் 19:27

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “வெட்டிக்கொள்ள.”

  • *

    இது புறமத பழக்கங்களைக் குறிக்கலாம்.

இணைவசனங்கள்

  • +லேவி 21:1, 5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/2004, பக். 24

    விழித்தெழு!,

    1/22/2000, பக். 22-24

    9/22/1999, பக். 30

லேவியராகமம் 19:28

இணைவசனங்கள்

  • +உபா 14:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 50

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 1/2021, பக். 3

    காவற்கோபுரம்,

    7/15/2003, பக். 27

    விழித்தெழு!,

    8/8/2000, பக். 14

    10/8/1995, பக். 30

லேவியராகமம் 19:29

இணைவசனங்கள்

  • +உபா 23:17
  • +எபி 13:4; 1பே 4:3

லேவியராகமம் 19:30

இணைவசனங்கள்

  • +யாத் 20:10; 31:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 1/2021, பக். 6

லேவியராகமம் 19:31

இணைவசனங்கள்

  • +லேவி 20:6; உபா 18:10-12; 1நா 10:13; ஏசா 8:19
  • +லேவி 20:27; அப் 16:16

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 24

லேவியராகமம் 19:32

இணைவசனங்கள்

  • +நீதி 16:31; 20:29
  • +யோபு 32:6; நீதி 23:22; 1தீ 5:1
  • +யோபு 28:28; நீதி 1:7; 8:13; 1பே 2:17

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    10/15/2008, பக். 21

    6/15/2000, பக். 21

    8/1/1999, பக். 20

    8/1/1994, பக். 27

    விழித்தெழு!,

    11/8/2004, பக். 16-17

    4/8/1999, பக். 31

    குடும்ப மகிழ்ச்சி, பக். 149

லேவியராகமம் 19:33

இணைவசனங்கள்

  • +யாத் 23:9

லேவியராகமம் 19:34

இணைவசனங்கள்

  • +யாத் 12:49
  • +யாத் 22:21

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2021, பக். 12

லேவியராகமம் 19:35

இணைவசனங்கள்

  • +உபா 25:13, 15; நீதி 20:10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2021, பக். 10

லேவியராகமம் 19:36

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “எப்பாவையும்.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

  • *

    நே.மொ., “ஹின் அளவையும்.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +நீதி 11:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2021, பக். 10

லேவியராகமம் 19:37

இணைவசனங்கள்

  • +லேவி 18:5; உபா 4:6

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

லேவி. 19:2லேவி 11:44; ஏசா 6:3; 1பே 1:15, 16; வெளி 4:8
லேவி. 19:3யாத் 20:12; எபே 6:2; எபி 12:9
லேவி. 19:3யாத் 20:8, 11; 31:13; லூ 6:5
லேவி. 19:4லேவி 26:1; சங் 96:5; ஆப 2:18; 1கொ 10:14
லேவி. 19:4யாத் 20:4, 23; உபா 27:15
லேவி. 19:5லேவி 3:1
லேவி. 19:5லேவி 7:11, 12
லேவி. 19:6லேவி 7:17, 18
லேவி. 19:9லேவி 23:22; உபா 24:19
லேவி. 19:10உபா 15:7
லேவி. 19:11யாத் 20:15; எபே 4:28
லேவி. 19:11லேவி 6:2; நீதி 12:22; எபே 4:25
லேவி. 19:12யாத் 20:7; மத் 5:33, 37; யாக் 5:12
லேவி. 19:13நீதி 22:16; மாற் 10:19
லேவி. 19:13நீதி 22:22
லேவி. 19:13உபா 24:15; எரே 22:13; யாக் 5:4
லேவி. 19:14உபா 27:18
லேவி. 19:14லேவி 25:17; நெ 5:15; நீதி 1:7; 8:13; 1பே 2:17
லேவி. 19:15யாத் 23:3; உபா 1:16, 17; 16:19; 2நா 19:6; ரோ 2:11; யாக் 2:9
லேவி. 19:16சங் 15:1, 3
லேவி. 19:16யாத் 20:16; 1ரா 21:13
லேவி. 19:17நீதி 10:18; 1யோ 2:9; 3:15
லேவி. 19:17சங் 141:5; நீதி 9:8; மத் 18:15
லேவி. 19:18நீதி 20:22; ரோ 12:19
லேவி. 19:18மத் 5:43, 44; 22:39; ரோ 13:9; கலா 5:14; யாக் 2:8
லேவி. 19:19உபா 22:9
லேவி. 19:19உபா 22:11
லேவி. 19:21லேவி 6:6, 7
லேவி. 19:24உபா 26:1, 2; நீதி 3:9
லேவி. 19:26லேவி 3:17; 17:13; உபா 12:23; அப் 15:20, 29
லேவி. 19:26யாத் 8:7; உபா 18:10-12; கலா 5:19, 20; வெளி 21:8
லேவி. 19:27லேவி 21:1, 5
லேவி. 19:28உபா 14:1
லேவி. 19:29உபா 23:17
லேவி. 19:29எபி 13:4; 1பே 4:3
லேவி. 19:30யாத் 20:10; 31:13
லேவி. 19:31லேவி 20:6; உபா 18:10-12; 1நா 10:13; ஏசா 8:19
லேவி. 19:31லேவி 20:27; அப் 16:16
லேவி. 19:32நீதி 16:31; 20:29
லேவி. 19:32யோபு 32:6; நீதி 23:22; 1தீ 5:1
லேவி. 19:32யோபு 28:28; நீதி 1:7; 8:13; 1பே 2:17
லேவி. 19:33யாத் 23:9
லேவி. 19:34யாத் 12:49
லேவி. 19:34யாத் 22:21
லேவி. 19:35உபா 25:13, 15; நீதி 20:10
லேவி. 19:36நீதி 11:1
லேவி. 19:37லேவி 18:5; உபா 4:6
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
லேவியராகமம் 19:1-37

லேவியராகமம்

19 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரிடமும் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. நான் பரிசுத்தமானவர், அதனால் நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+

3 நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய அம்மா அப்பாவுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்.+ ஓய்வுநாட்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. 4 ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களை நீங்கள் வணங்கக் கூடாது,+ சிலைகளை வார்த்து அவற்றைக் கும்பிடக் கூடாது.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.

5 நீங்கள் யெகோவாவுக்குச் சமாதான பலி செலுத்தினால்,+ அவர் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அதைச் செலுத்த வேண்டும்.+ 6 பலி செலுத்தும் நாளில் அதைச் சாப்பிட வேண்டும், அடுத்த நாளிலும் அதைச் சாப்பிடலாம். ஆனால், மூன்றாம் நாள்வரை மீதியாக இருப்பதை எரித்துவிட வேண்டும்.+ 7 மூன்றாம் நாளிலும் சாப்பிட்டால், அது அருவருப்பானது. நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். 8 அதைச் சாப்பிடுகிறவன் அந்தக் குற்றத்துக்காகத் தண்டிக்கப்படுவான். ஏனென்றால், யெகோவா பரிசுத்தமாக நினைப்பதை அவன் அவமதிக்கிறான். அதனால் அவன் கொல்லப்பட வேண்டும்.

9 உங்கள் வயலில் அறுவடை செய்யும்போது வரப்பு ஓரத்தில் உள்ள கதிர்களை முழுமையாக அறுவடை செய்யக் கூடாது, சிந்திய கதிர்களை எடுக்கவும் கூடாது.+ 10 அதோடு, உங்கள் திராட்சைத் தோட்டத்தில் பறிக்காமல் விடப்பட்ட பழங்களையோ கீழே விழுந்து கிடக்கிற பழங்களையோ எடுக்கக் கூடாது. அவற்றை ஏழைகளுக்காகவும் உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்து ஜனங்களுக்காகவும் விட்டுவிட வேண்டும்.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.

11 நீங்கள் திருடக் கூடாது,+ ஏமாற்றக் கூடாது,+ யாருக்கும் அநியாயம் செய்யக் கூடாது. 12 நீங்கள் என்னுடைய பெயரில் பொய் சத்தியம் செய்து என் பெயரைக் களங்கப்படுத்தக் கூடாது.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. 13 நீங்கள் மோசடி செய்யக் கூடாது,+ கொள்ளையடிக்க* கூடாது.+ கூலியாளுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்தை அடுத்த நாள் காலைவரை நீங்களே வைத்திருக்கக் கூடாது.+

14 காது கேட்காதவனைச் சபித்துப் பேசக் கூடாது. கண் தெரியாதவனுக்கு முன்னால் எதையாவது போட்டு அவனைத் தடுக்கி விழ வைக்கக் கூடாது.+ உங்கள் கடவுளுக்கு நீங்கள் பயந்து நடக்க வேண்டும்.+ நான் யெகோவா.

15 நீங்கள் அநியாயமாகத் தீர்ப்பு சொல்லக் கூடாது. ஏழைக்குப் பாரபட்சம் காட்டவோ பணக்காரனுக்குச் சலுகை காட்டவோ கூடாது.+ எல்லாருக்கும் நியாயமாகத் தீர்ப்பு சொல்ல வேண்டும்.

16 அடுத்தவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசிக்கொண்டு திரியக் கூடாது.+ அவர்களுடைய உயிருக்கு உலை வைக்கக் கூடாது.*+ நான் யெகோவா.

17 உள்ளத்தில்கூட உங்கள் சகோதரனை வெறுக்காதீர்கள்.+ ஒருவன் பாவம் செய்தால் அவனைக் கண்டியுங்கள்.+ இல்லாவிட்டால், நீங்களும் அவனுடைய பாவத்துக்கு உடந்தையாகிவிடுவீர்கள்.

18 உங்கள் ஜனங்களை நீங்கள் பழிவாங்கக் கூடாது.+ அவர்கள்மேல் பகை* வைத்திருக்கக் கூடாது. உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும்* அன்பு காட்ட வேண்டும்.+ நான் யெகோவா.

19 நான் கொடுக்கும் இந்தச் சட்டதிட்டங்களை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்: இரண்டு விதமான வீட்டு விலங்குகளை இனக்கலப்பு செய்யக் கூடாது. இரண்டு வகையான தானியங்களைக் கலந்து உங்கள் வயலில் விதைக்கக் கூடாது.+ இரண்டு விதமான நூல்களைக் கலந்து நெய்யப்பட்ட உடையை உடுத்தக் கூடாது.+

20 ஒரு அடிமைப் பெண் இன்னொருவனுக்கு நிச்சயிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால், அவள் மீட்கப்படாமலோ விடுதலை செய்யப்படாமலோ இருக்கலாம். அவளோடு ஒருவன் உடலுறவுகொண்டால் அவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும். ஆனால், அவர்களைக் கொல்லக் கூடாது. ஏனென்றால், அவள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. 21 அவன் யெகோவாவுக்குக் குற்ற நிவாரண பலி செலுத்த ஒரு செம்மறியாட்டுக் கடாவைச்+ சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்குக் கொண்டுவர வேண்டும். 22 அவன் செய்த பாவத்துக்காகக் குருவானவர் அந்தச் செம்மறியாட்டுக் கடாவை யெகோவாவின் சன்னிதியில் கொண்டுவந்து அவனுக்குப் பாவப் பரிகாரம் செய்வார். அப்போது, அவனுடைய பாவம் மன்னிக்கப்படும்.

23 நான் கொடுக்கிற தேசத்துக்கு வந்தபின் அங்கே ஏதாவது பழ மரத்தை நீங்கள் நட்டால், அதன் பழங்களை மூன்று வருஷங்களுக்குச் சாப்பிடக் கூடாது. தடை செய்யப்பட்ட அசுத்தமான பழங்களாக அவற்றைக் கருத வேண்டும். 24 ஆனால், நான்காம் வருஷத்தில் அதன் பழங்கள் பரிசுத்தமாக இருக்கும், நீங்கள் அவற்றை யெகோவாவுக்குச் சந்தோஷமாகப் படைக்க வேண்டும்.+ 25 ஐந்தாம் வருஷத்தில் அதன் பழங்களை நீங்கள் சாப்பிடலாம். அந்த மரம் உங்களுக்கு ஏராளமான பழங்களைக் கொடுக்கும். நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.

26 இரத்தம் கலந்த எதையும் நீங்கள் சாப்பிடக் கூடாது.+

நீங்கள் சகுனம் பார்க்கவோ மாயமந்திரம் செய்யவோ கூடாது.+

27 உங்களுடைய கிருதாவைச் சிரைத்துக்கொள்ள* கூடாது. உங்கள் தாடியை வெட்டி அலங்கோலமாக்கக் கூடாது.*+

28 இறந்தவர்களுக்காக உங்கள் உடலைக் கீறிக் கிழித்துக்கொள்ளக் கூடாது,+ உங்கள் உடலில் பச்சை குத்திக்கொள்ளக் கூடாது. நான் யெகோவா.

29 உங்களுடைய மகளை விபச்சாரியாக்கி அவளை அவமானப்படுத்தக் கூடாது.+ அப்படிச் செய்தால், உங்கள் தேசம் விபச்சாரிகளால் சீரழிந்துவிடும். அங்கே ஒழுக்கக்கேடு பெருகிவிடும்.+

30 நான் கட்டளை கொடுத்த ஓய்வுநாட்களை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்,+ என் வழிபாட்டுக் கூடாரத்துக்கு நீங்கள் பயபக்தி காட்ட வேண்டும். நான் யெகோவா.

31 ஆவிகளோடு பேசுகிறவர்களிடம் நீங்கள் போகக் கூடாது.+ குறிசொல்கிறவர்களிடம் குறி கேட்டு, உங்களை அசுத்தமாக்கிவிடக் கூடாது.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.

32 நரைமுடி உள்ளவருக்கு முன்னால் நீங்கள் எழுந்து நிற்க வேண்டும்,+ வயதில் மூத்தவருக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டும்.+ உங்கள் கடவுளுக்கு நீங்கள் பயந்து நடக்க வேண்டும்.+ நான் யெகோவா.

33 உங்கள் தேசத்தில் குடியிருக்கிற வேறு தேசத்து ஜனங்களை நீங்கள் மோசமாக நடத்தக் கூடாது.+ 34 உங்களோடு குடியிருக்கிற வேறு தேசத்து ஜனங்களை உங்கள் தேசத்து ஜனங்களைப் போலவே நடத்த வேண்டும்.+ உங்களை நேசிப்பது போல அவர்களையும் நேசிக்க வேண்டும். நீங்களும் வேறு தேசத்தில், அதாவது எகிப்தில், குடியிருந்தீர்களே.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.

35 எதையாவது அளக்கும்போதோ எடை போடும்போதோ நீங்கள் ஏமாற்றக் கூடாது.+ 36 சரியான தராசையும் சரியான எடைக்கல்லையும் சரியான படியையும்* சரியான ஆழாக்கையும்* நீங்கள் பயன்படுத்த வேண்டும்.+ எகிப்து தேசத்திலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய யெகோவா நானே. 37 என்னுடைய எல்லா சட்டதிட்டங்களையும் நீதித்தீர்ப்புகளையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும், அவற்றைப் பின்பற்ற வேண்டும்.+ நான் யெகோவா’” என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்