உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 8
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

எண்ணாகமம் முக்கியக் குறிப்புகள்

      • ஆரோன் ஏழு அகல் விளக்குகளை ஏற்றிவைக்கிறார் (1-4)

      • லேவியர்கள் தூய்மைப்படுத்தப்பட்டு, வேலையை ஆரம்பிக்கிறார்கள் (5-22)

      • சந்திப்புக் கூடார வேலைகளைச் செய்கிற லேவியர்களின் வயது வரம்பு (23-26)

எண்ணாகமம் 8:2

இணைவசனங்கள்

  • +யாத் 25:37; 40:24, 25; லேவி 24:2

எண்ணாகமம் 8:3

இணைவசனங்கள்

  • +எபி 9:2

எண்ணாகமம் 8:4

இணைவசனங்கள்

  • +யாத் 37:17
  • +யாத் 25:9, 40; 1நா 28:12, 19

எண்ணாகமம் 8:6

இணைவசனங்கள்

  • +யாத் 29:4; ஏசா 52:11

எண்ணாகமம் 8:7

இணைவசனங்கள்

  • +யாத் 30:18, 19; லேவி 16:28; எண் 19:7

எண்ணாகமம் 8:8

இணைவசனங்கள்

  • +லேவி 1:3
  • +லேவி 2:1
  • +லேவி 4:3

எண்ணாகமம் 8:9

இணைவசனங்கள்

  • +லேவி 8:2, 3

எண்ணாகமம் 8:10

இணைவசனங்கள்

  • +எண் 3:9, 41

எண்ணாகமம் 8:11

இணைவசனங்கள்

  • +லேவி 7:30; எண் 8:21
  • +எண் 1:50; 3:6; 2நா 31:2

எண்ணாகமம் 8:12

இணைவசனங்கள்

  • +யாத் 29:10
  • +லேவி 1:4

எண்ணாகமம் 8:14

இணைவசனங்கள்

  • +எண் 3:45; 16:9

எண்ணாகமம் 8:16

இணைவசனங்கள்

  • +எண் 3:12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/1992, பக். 12

எண்ணாகமம் 8:17

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “புனிதப்படுத்தினேன்.”

இணைவசனங்கள்

  • +யாத் 13:2, 12; லேவி 27:26
  • +யாத் 12:29; 13:15

எண்ணாகமம் 8:19

இணைவசனங்கள்

  • +எண் 3:9; 18:6; 1நா 23:32; எசே 44:11
  • +எண் 1:53; 18:5; 1சா 6:19

எண்ணாகமம் 8:21

இணைவசனங்கள்

  • +எண் 8:7
  • +எண் 8:11
  • +எண் 8:12

எண்ணாகமம் 8:25

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    8/1/2004, பக். 25

எண்ணாகமம் 8:26

இணைவசனங்கள்

  • +எண் 1:53; 3:32; 18:4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    8/1/2004, பக். 25

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

எண். 8:2யாத் 25:37; 40:24, 25; லேவி 24:2
எண். 8:3எபி 9:2
எண். 8:4யாத் 37:17
எண். 8:4யாத் 25:9, 40; 1நா 28:12, 19
எண். 8:6யாத் 29:4; ஏசா 52:11
எண். 8:7யாத் 30:18, 19; லேவி 16:28; எண் 19:7
எண். 8:8லேவி 1:3
எண். 8:8லேவி 2:1
எண். 8:8லேவி 4:3
எண். 8:9லேவி 8:2, 3
எண். 8:10எண் 3:9, 41
எண். 8:11லேவி 7:30; எண் 8:21
எண். 8:11எண் 1:50; 3:6; 2நா 31:2
எண். 8:12யாத் 29:10
எண். 8:12லேவி 1:4
எண். 8:14எண் 3:45; 16:9
எண். 8:16எண் 3:12
எண். 8:17யாத் 13:2, 12; லேவி 27:26
எண். 8:17யாத் 12:29; 13:15
எண். 8:19எண் 3:9; 18:6; 1நா 23:32; எசே 44:11
எண். 8:19எண் 1:53; 18:5; 1சா 6:19
எண். 8:21எண் 8:7
எண். 8:21எண் 8:11
எண். 8:21எண் 8:12
எண். 8:26எண் 1:53; 3:32; 18:4
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
எண்ணாகமம் 8:1-26

எண்ணாகமம்

8 யெகோவா மோசேயிடம், 2 “நீ ஆரோனிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நீ விளக்கேற்றும்போது, ஏழு அகல் விளக்குகளும் குத்துவிளக்கின் முன்பக்கம் ஒளிவீசும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்’”+ என்றார். 3 யெகோவா மோசேக்குக் கட்டளை கொடுத்தபடியே, குத்துவிளக்கின் முன்பக்கம் ஒளிவீசும்படி அகல் விளக்குகளை ஆரோன் ஏற்றினார்.+ 4 இந்தக் குத்துவிளக்கு, அதன் தண்டுமுதல் மலர்கள்வரை தங்கத்தால் தகடு அடிக்கப்பட்டிருந்தது.+ தரிசனத்தில் மோசேக்கு யெகோவா காட்டியபடியே குத்துவிளக்கு செய்யப்பட்டிருந்தது.+

5 மறுபடியும் யெகோவா மோசேயிடம், 6 “இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து லேவியர்களைப் பிரித்தெடுத்து அவர்களைத் தூய்மைப்படுத்து.+ 7 நீ அவர்களைத் தூய்மைப்படுத்த வேண்டிய விதம்: பாவச் சுத்திகரிப்பு நீரை அவர்கள்மேல் தெளிக்க வேண்டும். அவர்கள் தங்களுடைய உடலிலுள்ள எல்லா முடியையும் சவரக்கத்தியால் சிரைத்து, உடைகளைத் துவைத்து, தங்களைத் தூய்மைப்படுத்த வேண்டும்.+ 8 பின்பு ஒரு இளம் காளையையும்,+ அதற்கான உணவுக் காணிக்கையாக+ எண்ணெய் கலந்த நைசான மாவையும் அவர்கள் கொண்டுவர வேண்டும். அதன்பின், பாவப் பரிகார பலியாக மற்றொரு இளம் காளையை நீ கொண்டுவர வேண்டும்.+ 9 சந்திப்புக் கூடாரத்தின் முன்னால் லேவியர்களை நீ நிறுத்த வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரையும் ஒன்றுகூடிவரச் செய்ய வேண்டும்.+ 10 லேவியர்களை யெகோவாவின் முன்னிலையில் நீ நிறுத்தும்போது, இஸ்ரவேலர்கள் தங்களுடைய கைகளை அவர்கள்மேல் வைக்க வேண்டும்.+ 11 அப்போது, ஆரோன் லேவியர்களை இஸ்ரவேலர்களுடைய அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவுக்கு முன்னால் அசைவாட்ட வேண்டும்.+ லேவியர்கள் யெகோவாவுக்குச் சேவை செய்வார்கள்.+

12 லேவியர்கள் தங்களுடைய கைகளை அந்தக் காளைகளின் தலையில் வைக்க வேண்டும்.+ அதன் பிறகு, லேவியர்களுக்குப் பாவப் பரிகாரம் செய்வதற்காக அதில் ஒன்றைப் பாவத்துக்கான பலியாகவும் மற்றொன்றைத் தகன பலியாகவும் யெகோவாவுக்குக் கொடுக்க வேண்டும்.+ 13 பின்பு, நீ ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் முன்பாக லேவியர்களை நிறுத்தி, அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவுக்கு முன்னால் அவர்களை அசைவாட்ட வேண்டும். 14 லேவியர்களை இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து நீ பிரித்தெடுக்க வேண்டும், லேவியர்கள் எனக்குச் சொந்தமாவார்கள்.+ 15 அதன்பின், அவர்கள் வந்து சந்திப்புக் கூடாரத்தின் வேலைகளைச் செய்வார்கள். இப்படி நீ அவர்களைத் தூய்மைப்படுத்தி, அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்ட வேண்டும். 16 ஏனென்றால், அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, எனக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். இஸ்ரவேலர்களின் மூத்த மகன்கள் எல்லாருக்கும் பதிலாக லேவியர்களை+ எனக்காக ஏற்றுக்கொள்கிறேன். 17 ஏனென்றால், இஸ்ரவேலர்களுக்கும் அவர்களுடைய மிருகங்களுக்கும் முதலில் பிறக்கிற எல்லாமே எனக்குத்தான் சொந்தம்.+ எகிப்தியர்களின் முதல் பிறப்புகளை நான் கொன்றுபோட்ட நாளில், இஸ்ரவேலர்களின் முதல் பிறப்புகளை எனக்கென்று பிரித்து வைத்தேன்.*+ 18 இஸ்ரவேலர்களின் மூத்த மகன்கள் எல்லாருக்கும் பதிலாக லேவியர்களை நான் ஏற்றுக்கொள்வேன். 19 லேவியர்களை இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து பிரித்தெடுத்து, ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் அன்பளிப்பாகக் கொடுப்பேன். லேவியர்கள் இஸ்ரவேலர்களின் சார்பாகச் சந்திப்புக் கூடாரத்தின் வேலைகளைச் செய்து,+ அவர்களுக்காகப் பாவப் பரிகாரம் செய்வார்கள். இஸ்ரவேலர்கள் பரிசுத்த இடத்துக்குப் பக்கத்தில் வந்து தண்டிக்கப்படாமல் இருப்பதற்காகத்தான் இந்த ஏற்பாட்டைச் செய்கிறேன்”+ என்றார்.

20 மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் லேவியர்களுக்கு அப்படியே செய்தார்கள். லேவியர்கள் சம்பந்தமாக மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியெல்லாம் இஸ்ரவேலர்கள் செய்தார்கள். 21 லேவியர்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, தங்களுடைய உடைகளைத் துவைத்தார்கள்.+ பின்பு, ஆரோன் அவர்களை யெகோவாவுக்கு முன்னால் அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டினார்.+ அதன்பின், அவர்களைப் பரிசுத்தப்படுத்துவதற்காகப் பாவப் பரிகாரம் செய்தார்.+ 22 பிற்பாடு, லேவியர்கள் வந்து சந்திப்புக் கூடாரத்தின் வேலைகளை ஆரோனுக்கும் அவருடைய மகன்களுக்கும் முன்னால் செய்தார்கள். லேவியர்கள் சம்பந்தமாக மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே ஜனங்கள் செய்தார்கள்.

23 பின்பு யெகோவா மோசேயிடம், 24 “லேவியர்களுக்கான சட்டம் இதுதான்: 25 வயதும் அதற்கு அதிகமான வயதும் உள்ளவர்கள் சந்திப்புக் கூடாரத்தின் வேலைகளைச் செய்கிறவர்களோடு சேர்ந்துகொள்ள வேண்டும். 25 ஆனால், 50 வயதைத் தாண்டியவர்கள் வேலையிலிருந்து ஓய்வுபெற வேண்டும். 26 சந்திப்புக் கூடார வேலைகளைச் செய்கிற தங்கள் சகோதரர்களுக்கு அவர்கள் உதவி செய்யலாம். ஆனால், வேறு எந்தச் சேவையும் அங்கே செய்யக் கூடாது. லேவியர்கள் சம்பந்தமாகவும் அவர்களுடைய பொறுப்புகள் சம்பந்தமாகவும் நீ பின்பற்ற வேண்டிய சட்டங்கள் இவைதான்”+ என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்