உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 23
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

லேவியராகமம் முக்கியக் குறிப்புகள்

      • பரிசுத்தமான நாட்களும் பண்டிகைகளும் (1-44)

        • ஓய்வுநாள் (3)

        • பஸ்கா (4, 5)

        • புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை (6-8)

        • முதல் விளைச்சலைக் காணிக்கையாகக் கொடுப்பது (9-14)

        • வாரங்களின் பண்டிகை (15-21)

        • அறுவடையின்போது கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைகள் (22)

        • எக்காளம் ஊதி அறிவிப்பு செய்யப்படுகிற பண்டிகை (23-25)

        • பாவப் பரிகார நாள் (26-32)

        • கூடாரப் பண்டிகை (33-43)

லேவியராகமம் 23:2

இணைவசனங்கள்

  • +யாத் 23:14; லேவி 23:37
  • +எண் 10:10

லேவியராகமம் 23:3

இணைவசனங்கள்

  • +யாத் 16:30; 20:10; அப் 15:21
  • +நெ 13:22

லேவியராகமம் 23:5

இணைவசனங்கள்

  • +எண் 9:2, 3; 28:16
  • +யாத் 12:3, 6; உபா 16:1; 1கொ 5:7

லேவியராகமம் 23:6

இணைவசனங்கள்

  • +எண் 28:17; 1கொ 5:8
  • +யாத் 12:15; 13:6; 34:18

லேவியராகமம் 23:7

இணைவசனங்கள்

  • +யாத் 12:16

லேவியராகமம் 23:10

இணைவசனங்கள்

  • +1கொ 15:20, 23
  • +எண் 18:8, 12; நீதி 3:9; எசே 44:30

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2007, பக். 26

லேவியராகமம் 23:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2007, பக். 26

லேவியராகமம் 23:13

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “சுமார் 2 கிலோ.”

  • *

    நே.மொ., “ஒரு ஹின் அளவில் நான்கில் ஒரு பங்கு.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

லேவியராகமம் 23:15

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “ஓய்வுநாட்களை.”

இணைவசனங்கள்

  • +யாத் 34:22; உபா 16:9, 10

லேவியராகமம் 23:16

இணைவசனங்கள்

  • +அப் 2:1
  • +எண் 28:26-31; உபா 16:16

லேவியராகமம் 23:17

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “சுமார் 2 கிலோ.”

இணைவசனங்கள்

  • +லேவி 7:11, 13
  • +யாத் 23:16; 34:22

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 1/2021, பக். 4

    காவற்கோபுரம்,

    3/1/1998, பக். 13

லேவியராகமம் 23:18

இணைவசனங்கள்

  • +எண் 28:26, 27

லேவியராகமம் 23:19

இணைவசனங்கள்

  • +லேவி 4:23
  • +லேவி 3:1

லேவியராகமம் 23:20

இணைவசனங்கள்

  • +லேவி 7:34; 10:14; எண் 18:9; உபா 18:4; 1கொ 9:13

லேவியராகமம் 23:21

இணைவசனங்கள்

  • +எண் 10:10

லேவியராகமம் 23:22

இணைவசனங்கள்

  • +லேவி 19:9; உபா 24:19; ரூ 2:2, 3
  • +லேவி 19:33; ஏசா 58:7

லேவியராகமம் 23:24

இணைவசனங்கள்

  • +எண் 10:10; 29:1

லேவியராகமம் 23:27

அடிக்குறிப்புகள்

  • *

    விரதம் இருப்பதன் மூலமோ வேறு விதத்தின் மூலமோ தங்களைத் தாங்களே கஷ்டப்படுத்திக்கொள்வதைக் குறிக்கலாம்.

இணைவசனங்கள்

  • +யாத் 30:10; லேவி 25:9
  • +லேவி 16:29, 30; எண் 29:7

லேவியராகமம் 23:28

இணைவசனங்கள்

  • +லேவி 16:34; எபி 9:12, 24-26; 10:10; 1யோ 2:1, 2

லேவியராகமம் 23:29

அடிக்குறிப்புகள்

  • *

    அல்லது, “அன்று விரதமிருக்காத.”

இணைவசனங்கள்

  • +எண் 9:13; 15:30

லேவியராகமம் 23:32

இணைவசனங்கள்

  • +லேவி 16:29-31; 23:27; எண் 29:7

லேவியராகமம் 23:34

இணைவசனங்கள்

  • +யாத் 23:16; எண் 29:12; உபா 16:13; எஸ்றா 3:4; நெ 8:14-18; யோவா 7:2

லேவியராகமம் 23:36

இணைவசனங்கள்

  • +நெ 8:18

லேவியராகமம் 23:37

இணைவசனங்கள்

  • +யாத் 23:14; உபா 16:16
  • +எண் 28:26; 29:7
  • +லேவி 1:3
  • +லேவி 2:1, 11
  • +எண் 15:5; 28:6, 7

லேவியராகமம் 23:38

இணைவசனங்கள்

  • +யாத் 16:23; 20:8; 31:13
  • +யாத் 28:38; எண் 18:29
  • +உபா 12:11
  • +எண் 29:39; உபா 12:6; 1நா 29:9; 2நா 35:8; எஸ்றா 2:68

லேவியராகமம் 23:39

இணைவசனங்கள்

  • +உபா 16:13
  • +எண் 29:12

லேவியராகமம் 23:40

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கிலுள்ள.”

இணைவசனங்கள்

  • +நெ 8:15; வெளி 7:9
  • +உபா 16:15; நெ 8:10

லேவியராகமம் 23:41

இணைவசனங்கள்

  • +எண் 29:12

லேவியராகமம் 23:42

இணைவசனங்கள்

  • +உபா 31:10, 11

லேவியராகமம் 23:43

இணைவசனங்கள்

  • +யாத் 12:37, 38; எண் 24:5
  • +உபா 31:13; சங் 78:6

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

லேவி. 23:2யாத் 23:14; லேவி 23:37
லேவி. 23:2எண் 10:10
லேவி. 23:3யாத் 16:30; 20:10; அப் 15:21
லேவி. 23:3நெ 13:22
லேவி. 23:5எண் 9:2, 3; 28:16
லேவி. 23:5யாத் 12:3, 6; உபா 16:1; 1கொ 5:7
லேவி. 23:6எண் 28:17; 1கொ 5:8
லேவி. 23:6யாத் 12:15; 13:6; 34:18
லேவி. 23:7யாத் 12:16
லேவி. 23:101கொ 15:20, 23
லேவி. 23:10எண் 18:8, 12; நீதி 3:9; எசே 44:30
லேவி. 23:15யாத் 34:22; உபா 16:9, 10
லேவி. 23:16அப் 2:1
லேவி. 23:16எண் 28:26-31; உபா 16:16
லேவி. 23:17லேவி 7:11, 13
லேவி. 23:17யாத் 23:16; 34:22
லேவி. 23:18எண் 28:26, 27
லேவி. 23:19லேவி 4:23
லேவி. 23:19லேவி 3:1
லேவி. 23:20லேவி 7:34; 10:14; எண் 18:9; உபா 18:4; 1கொ 9:13
லேவி. 23:21எண் 10:10
லேவி. 23:22லேவி 19:9; உபா 24:19; ரூ 2:2, 3
லேவி. 23:22லேவி 19:33; ஏசா 58:7
லேவி. 23:24எண் 10:10; 29:1
லேவி. 23:27யாத் 30:10; லேவி 25:9
லேவி. 23:27லேவி 16:29, 30; எண் 29:7
லேவி. 23:28லேவி 16:34; எபி 9:12, 24-26; 10:10; 1யோ 2:1, 2
லேவி. 23:29எண் 9:13; 15:30
லேவி. 23:32லேவி 16:29-31; 23:27; எண் 29:7
லேவி. 23:34யாத் 23:16; எண் 29:12; உபா 16:13; எஸ்றா 3:4; நெ 8:14-18; யோவா 7:2
லேவி. 23:36நெ 8:18
லேவி. 23:37யாத் 23:14; உபா 16:16
லேவி. 23:37எண் 28:26; 29:7
லேவி. 23:37லேவி 1:3
லேவி. 23:37லேவி 2:1, 11
லேவி. 23:37எண் 15:5; 28:6, 7
லேவி. 23:38யாத் 16:23; 20:8; 31:13
லேவி. 23:38யாத் 28:38; எண் 18:29
லேவி. 23:38உபா 12:11
லேவி. 23:38எண் 29:39; உபா 12:6; 1நா 29:9; 2நா 35:8; எஸ்றா 2:68
லேவி. 23:39உபா 16:13
லேவி. 23:39எண் 29:12
லேவி. 23:40நெ 8:15; வெளி 7:9
லேவி. 23:40உபா 16:15; நெ 8:10
லேவி. 23:41எண் 29:12
லேவி. 23:42உபா 31:10, 11
லேவி. 23:43யாத் 12:37, 38; எண் 24:5
லேவி. 23:43உபா 31:13; சங் 78:6
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
லேவியராகமம் 23:1-44

லேவியராகமம்

23 பின்பு யெகோவா மோசேயைப் பார்த்து, 2 “நீ இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொல்: ‘யெகோவாவின் பண்டிகை நாட்கள்,+ பரிசுத்த மாநாடுகளுக்காக எல்லாரும் ஒன்றுகூடி வர வேண்டிய நாட்கள். நீங்கள் அறிவிப்பு+ செய்ய வேண்டிய அந்தப் பண்டிகை நாட்கள் இவைதான்:

3 ஆறு நாட்கள் நீங்கள் வேலை செய்யலாம். ஆனால், ஏழாம் நாள் உங்களுக்கு முழு ஓய்வுநாள்.+ பரிசுத்த மாநாட்டுக்காக அன்றைக்கு நீங்கள் ஒன்றுகூடி வர வேண்டும். எந்த வேலையும் செய்யக் கூடாது. நீங்கள் எங்கே குடியிருந்தாலும் யெகோவாவுக்காக ஓய்வுநாளை அனுசரிக்க வேண்டும்.+

4 யெகோவாவின் பண்டிகைகளை எந்தெந்த நாட்களில் கொண்டாட வேண்டுமென்று நீங்கள் அறிவிப்பு செய்ய வேண்டும். பரிசுத்த மாநாடுகளுக்காக நீங்கள் ஒன்றுகூடி வர வேண்டிய அந்த நாட்கள் இவைதான்: 5 முதலாம் மாதம் 14-ஆம் நாள்+ சாயங்காலத்தில் யெகோவாவுக்காக பஸ்கா பண்டிகை+ கொண்டாட வேண்டும்.

6 அந்த மாதம் 15-ஆம் நாளில், புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையை யெகோவாவுக்காகக் கொண்டாட வேண்டும்.+ ஏழு நாட்களுக்குப் புளிப்பில்லாத ரொட்டி சாப்பிட வேண்டும்.+ 7 முதலாம் நாளில் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும்.+ அன்றைக்குக் கடினமான வேலை எதுவும் செய்யக் கூடாது. 8 ஏழு நாட்கள் யெகோவாவுக்குத் தகன பலி செலுத்த வேண்டும். ஏழாம் நாளில் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும். அன்றைக்குக் கடினமான வேலை எதுவும் நீங்கள் செய்யக் கூடாது’” என்றார்.

9 பின்பு யெகோவா மோசேயைப் பார்த்து, 10 “நீ இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொல்: ‘நான் கொடுக்கும் தேசத்துக்குப் போய் நீங்கள் அறுவடை செய்யும்போது, முதல் விளைச்சலில் கிடைக்கும் ஒரு கதிர்க்கட்டை+ குருவானவரிடம் கொண்டுவர வேண்டும்.+ 11 யெகோவா உங்களை ஏற்றுக்கொள்வதற்காக அவருடைய முன்னிலையில் அந்தக் கதிர்க்கட்டை குருவானவர் அசைவாட்ட வேண்டும். 12 அந்தக் கதிர்க்கட்டு அசைவாட்டப்படும் நாளில், குறையில்லாத ஒருவயது செம்மறியாட்டுக் கடாக் குட்டியை யெகோவாவுக்குத் தகன பலியாக நீங்கள் கொண்டுவர வேண்டும். 13 அதோடு, உணவுக் காணிக்கையாக ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு* நைசான மாவில் எண்ணெய் கலந்து கொண்டுவர வேண்டும். அதைத் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். தகன பலியோடு சேர்த்து ஒரு லிட்டர்* திராட்சமதுவைக் காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். 14 புது தானியத்தை நீங்கள் கடவுளுக்குக் காணிக்கையாகக் கொண்டுவரும் நாள்வரை, அதை ரொட்டி செய்தோ வறுத்தோ பச்சையாகவோ சாப்பிடக் கூடாது. நீங்கள் எங்கு குடியிருந்தாலும் இதுவே தலைமுறை தலைமுறைக்கும் உங்களுக்குக் கொடுக்கப்படும் சட்டம்.

15 அசைவாட்டும் காணிக்கையாகக் கதிர்க்கட்டை நீங்கள் கொண்டுவரும் ஓய்வுநாளிலிருந்து ஏழு வாரங்களை* கணக்கிட வேண்டும்.+ 16 அதாவது, ஏழாம் ஓய்வுநாளுக்கு அடுத்த நாளாகிய 50-ஆம் நாள்வரை+ கணக்கிட வேண்டும். அந்த நாளில் புது தானியத்தில் செய்யப்பட்ட உணவுக் காணிக்கையை யெகோவாவுக்குக் கொண்டுவர வேண்டும்.+ 17 அசைவாட்டும் காணிக்கையாக உங்கள் வீடுகளிலிருந்து இரண்டு ரொட்டிகளைக் கொண்டுவர வேண்டும். ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு* நைசான மாவைப் புளிக்க வைத்து, அந்த ரொட்டிகளைச் சுட வேண்டும்.+ முதல் விளைச்சலின் காணிக்கையாக அவற்றை யெகோவாவுக்குக் கொண்டுவர வேண்டும்.+ 18 அந்த ரொட்டிகளோடு, எந்தக் குறையும் இல்லாத ஒருவயதுள்ள ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும், ஒரு இளம் காளையையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும் கொண்டுவந்து யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்த வேண்டும்.+ அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். அவற்றோடு கொடுக்கும் உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் கொண்டுவர வேண்டும். 19 பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும்+ சமாதான பலியாக ஒருவயதுள்ள இரண்டு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் கொண்டுவர வேண்டும்.+ 20 முதல் விளைச்சலில் செய்யப்பட்ட ரொட்டிகளோடு, இரண்டு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் யெகோவாவுக்கு அசைவாட்டும் காணிக்கையாகக் குருவானவர் அசைவாட்ட வேண்டும். அவை யெகோவாவுக்குப் பரிசுத்தமானவையாக இருக்கும், அவை குருவானவருடைய பங்காக இருக்கும்.+ 21 பரிசுத்த மாநாட்டுக்காக அந்த நாளில் ஒன்றுகூடி வர வேண்டுமென்று அறிவிப்பு செய்யுங்கள்.+ அன்றைக்குக் கடினமான வேலை எதுவும் நீங்கள் செய்யக் கூடாது. நீங்கள் எங்கு குடியிருந்தாலும் இதுவே தலைமுறை தலைமுறைக்கும் உங்களுக்குக் கொடுக்கப்படும் சட்டம்.

22 உங்கள் வயலில் அறுவடை செய்யும்போது வரப்பு ஓரத்தில் உள்ள கதிர்களை முழுமையாக அறுவடை செய்யக் கூடாது, சிந்திய கதிர்களை எடுக்கவும் கூடாது.+ அவற்றை ஏழைகளுக்காகவும் உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்து ஜனங்களுக்காகவும் விட்டுவிட வேண்டும்.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா’” என்றார்.

23 பின்பு யெகோவா மோசேயைப் பார்த்து, 24 “இஸ்ரவேலர்களிடம் நீ இப்படிச் சொல்: ‘ஏழாம் மாதம் முதலாம் நாளில் நீங்கள் முழுமையாக ஓய்ந்திருக்க வேண்டும். எக்காளம் ஊதி அந்த நாளை அறிவிப்பு செய்ய வேண்டும்.+ அந்த நாளில் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும். 25 அன்றைக்கு நீங்கள் கடினமான வேலை எதுவும் செய்யக் கூடாது. யெகோவாவுக்குத் தகன பலி செலுத்த வேண்டும்’” என்றார்.

26 பின்பு யெகோவா மோசேயிடம், 27 “இந்த ஏழாம் மாதம் பத்தாம் நாள் உங்களுக்குப் பாவப் பரிகார நாள்.+ அன்று பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும். உங்களையே வருத்திக்கொண்டு,*+ யெகோவாவுக்குத் தகன பலி செலுத்த வேண்டும். 28 அன்று நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது. ஏனென்றால், அது பாவப் பரிகார நாள். அன்று, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் உங்களுக்குப் பாவப் பரிகாரம் செய்யப்படும்.+ 29 அன்று தன்னையே வருத்திக்கொள்ளாத* எவனும் கொல்லப்பட வேண்டும்.+ 30 அந்த நாளில் ஒருவன் எந்த வேலை செய்தாலும் அவனை நான் அழித்துவிடுவேன். 31 அன்று நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது. நீங்கள் எங்கு குடியிருந்தாலும் இதுவே தலைமுறை தலைமுறைக்கும் உங்களுக்குக் கொடுக்கப்படும் சட்டம். 32 அந்த நாள் நீங்கள் முழுமையாக ஓய்ந்திருக்க வேண்டிய ஓய்வுநாள். அந்த மாதம் ஒன்பதாம் நாள் சாயங்காலத்தில் உங்களையே வருத்திக்கொள்ள வேண்டும்.+ அந்த நாள் சாயங்காலத்திலிருந்து அடுத்த நாள் சாயங்காலம்வரை உங்களுக்கு ஓய்வுநாள்” என்றார்.

33 பின்பு யெகோவா மோசேயைப் பார்த்து, 34 “நீ இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொல்: ‘இந்த ஏழாம் மாதம் 15-ஆம் நாளிலிருந்து நீங்கள் யெகோவாவுக்காக ஏழு நாட்கள் கூடாரப் பண்டிகை கொண்டாட வேண்டும்.+ 35 அந்த முதலாம் நாளில் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும். அன்று கடினமான வேலை எதுவும் நீங்கள் செய்யக் கூடாது. 36 ஏழு நாட்களும் யெகோவாவுக்குத் தகன பலி செலுத்த வேண்டும். எட்டாம் நாளில் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும்.+ அது ஒரு விசேஷ மாநாடு. அன்று நீங்கள் யெகோவாவுக்குத் தகன பலி செலுத்த வேண்டும். கடினமான வேலை எதுவும் செய்யக் கூடாது.

37 நீங்கள் யெகோவாவுக்காக இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும்போது,+ பரிசுத்த மாநாடுகளுக்காக ஒன்றுகூடி வர வேண்டுமென்று அறிவிப்பு செய்ய வேண்டும்.+ அந்தப் பண்டிகைகளின்போது யெகோவாவுக்கு அந்தந்த நாளில் செலுத்த வேண்டிய தகன பலியையும்,+ உணவுக் காணிக்கையையும்,+ திராட்சமது காணிக்கையையும்+ கொண்டுவர வேண்டும். 38 யெகோவாவுக்கான ஓய்வுநாட்களில்+ நீங்கள் கொண்டுவரும் காணிக்கைகள்,+ நன்கொடைகள், நேர்ந்துகொண்ட பலிகள்,+ நீங்களாகவே விருப்பப்பட்டு செலுத்தும் காணிக்கைகள்+ ஆகியவை தவிர அவற்றையும் அந்தப் பண்டிகைகளின்போது யெகோவாவுக்காகக் கொண்டுவர வேண்டும். 39 ஏழாம் மாதம் 15-ஆம் நாளிலிருந்து, அதாவது உங்களுடைய நிலத்தில் விளைந்ததைச் சேகரிக்கும் நாளிலிருந்து, ஏழு நாட்களுக்கு யெகோவாவுக்காகப் பண்டிகை கொண்டாட வேண்டும்.+ முதலாம் நாளிலும் எட்டாம் நாளிலும் நீங்கள் முழுமையாக ஓய்ந்திருக்க வேண்டும்.+ 40 முதல் நாளில், பெரிய மரங்களின் பழங்களையும், பேரீச்ச மரங்களின் ஓலைகளையும்,+ அடர்த்தியான மரங்களின் கிளைகளையும், பள்ளத்தாக்கிலுள்ள* காட்டரசு மரக் கிளைகளையும் கொண்டுவந்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் ஏழு நாட்களுக்குச் சந்தோஷமாக இருக்க வேண்டும்.+ 41 யெகோவாவுக்காக இந்தப் பண்டிகையை வருஷத்தில் ஏழு நாட்கள் கொண்டாட வேண்டும்.+ ஏழாம் மாதம் இந்தப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும். இதுதான் தலைமுறை தலைமுறைக்கும் உங்களுக்குக் கொடுக்கப்படும் சட்டம். 42 ஏழு நாட்களுக்கு நீங்கள் கூடாரங்களில் தங்க வேண்டும்.+ இஸ்ரவேல் குடிமக்கள் எல்லாரும் கூடாரங்களில் தங்க வேண்டும். 43 அப்போதுதான், இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தபோது நான் அவர்களைக் கூடாரங்களில் தங்க வைத்தேன்+ என்பதை வருங்காலச் சந்ததிகள் தெரிந்துகொள்வார்கள்.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா’” என்றார்.

44 யெகோவா சொன்ன இந்தப் பண்டிகைகளைப் பற்றி மோசே இஸ்ரவேலர்களுக்குச் சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்