உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 3
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

எண்ணாகமம் முக்கியக் குறிப்புகள்

      • ஆரோனின் மகன்கள் (1-4)

      • வழிபாட்டுக் கூடார சேவைக்கு லேவியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் (5-39)

      • முதல் பிறப்புகள் மீட்கப்பட வேண்டும் (40-51)

எண்ணாகமம் 3:1

இணைவசனங்கள்

  • +யாத் 19:2

எண்ணாகமம் 3:2

இணைவசனங்கள்

  • +லேவி 10:1; 1நா 24:2
  • +யாத் 6:25; உபா 10:6
  • +யாத் 6:23; 38:21; 1நா 6:3

எண்ணாகமம் 3:3

இணைவசனங்கள்

  • +யாத் 28:1; லேவி 8:2, 3

எண்ணாகமம் 3:4

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “தகாத விதத்தில்.”

இணைவசனங்கள்

  • +லேவி 10:1, 2
  • +எண் 3:32; 20:26
  • +எண் 4:28; 7:8

எண்ணாகமம் 3:6

இணைவசனங்கள்

  • +எண் 8:6; 18:2
  • +எண் 1:50; 8:11

எண்ணாகமம் 3:7

அடிக்குறிப்புகள்

  • *

    சொல் பட்டியலைப் பாருங்கள்.

  • *

    சொல் பட்டியலைப் பாருங்கள்.

எண்ணாகமம் 3:8

இணைவசனங்கள்

  • +எண் 4:12
  • +எண் 1:51

எண்ணாகமம் 3:9

இணைவசனங்கள்

  • +எண் 8:15, 16; 18:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/1992, பக். 12

எண்ணாகமம் 3:10

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “ஆரோனின் வம்சத்தைச் சேராத.”

இணைவசனங்கள்

  • +யாத் 40:15; எண் 18:7
  • +எண் 16:39, 40; 1சா 6:19; 2நா 26:16, 18

எண்ணாகமம் 3:12

இணைவசனங்கள்

  • +எண் 3:41, 45

எண்ணாகமம் 3:13

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “புனிதப்படுத்தினேன்.”

இணைவசனங்கள்

  • +யாத் 13:2; 34:19; எண் 18:15; லூ 2:23
  • +யாத் 13:15
  • +லேவி 27:26

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 1/2021, பக். 9

எண்ணாகமம் 3:14

இணைவசனங்கள்

  • +யாத் 19:1

எண்ணாகமம் 3:15

இணைவசனங்கள்

  • +எண் 3:39

எண்ணாகமம் 3:17

இணைவசனங்கள்

  • +யாத் 6:16; எண் 26:57; 1நா 23:6

எண்ணாகமம் 3:18

இணைவசனங்கள்

  • +யாத் 6:17

எண்ணாகமம் 3:19

இணைவசனங்கள்

  • +யாத் 6:18

எண்ணாகமம் 3:20

இணைவசனங்கள்

  • +1நா 6:29
  • +யாத் 6:19

எண்ணாகமம் 3:21

இணைவசனங்கள்

  • +1நா 6:20

எண்ணாகமம் 3:22

இணைவசனங்கள்

  • +எண் 4:38-40

எண்ணாகமம் 3:23

இணைவசனங்கள்

  • +எண் 1:53

எண்ணாகமம் 3:25

இணைவசனங்கள்

  • +எண் 4:24-26
  • +யாத் 26:7
  • +யாத் 26:14
  • +யாத் 26:36

எண்ணாகமம் 3:26

இணைவசனங்கள்

  • +யாத் 27:9
  • +யாத் 27:16

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 1/2021, பக். 9

எண்ணாகமம் 3:27

இணைவசனங்கள்

  • +எண் 3:19

எண்ணாகமம் 3:28

இணைவசனங்கள்

  • +எண் 4:34-36

எண்ணாகமம் 3:29

இணைவசனங்கள்

  • +எண் 1:53

எண்ணாகமம் 3:30

இணைவசனங்கள்

  • +யாத் 6:22; 1நா 6:18

எண்ணாகமம் 3:31

இணைவசனங்கள்

  • +யாத் 25:10
  • +யாத் 25:23
  • +யாத் 25:31
  • +யாத் 27:1, 2; 30:1-3
  • +யாத் 38:3
  • +யாத் 26:31
  • +எண் 4:15

எண்ணாகமம் 3:32

இணைவசனங்கள்

  • +எண் 4:16; 20:28

எண்ணாகமம் 3:33

இணைவசனங்கள்

  • +எண் 3:20; 26:58

எண்ணாகமம் 3:34

இணைவசனங்கள்

  • +எண் 4:42-44

எண்ணாகமம் 3:35

இணைவசனங்கள்

  • +எண் 1:53

எண்ணாகமம் 3:36

இணைவசனங்கள்

  • +யாத் 36:20
  • +யாத் 36:31
  • +யாத் 26:32, 37; 36:37, 38
  • +யாத் 27:19
  • +எண் 4:31, 32

எண்ணாகமம் 3:37

இணைவசனங்கள்

  • +யாத் 27:10, 11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 1/2021, பக். 9

எண்ணாகமம் 3:38

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “லேவியனாக இல்லாத.”

இணைவசனங்கள்

  • +எண் 3:10

எண்ணாகமம் 3:40

இணைவசனங்கள்

  • +எண் 3:15

எண்ணாகமம் 3:41

இணைவசனங்கள்

  • +எண் 3:12
  • +யாத் 13:2; எண் 18:15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/1/1995, பக். 16

எண்ணாகமம் 3:45

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/1/1995, பக். 16

எண்ணாகமம் 3:46

இணைவசனங்கள்

  • +எண் 3:39, 43
  • +எண் 18:15

எண்ணாகமம் 3:47

அடிக்குறிப்புகள்

  • *

    ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

  • *

    வே.வா., “பரிசுத்த இடத்து.”

  • *

    ஒரு கேரா என்பது 0.57 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +எண் 18:15, 16
  • +லேவி 27:25

எண்ணாகமம் 3:50

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “பரிசுத்த இடத்து.”

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

எண். 3:1யாத் 19:2
எண். 3:2லேவி 10:1; 1நா 24:2
எண். 3:2யாத் 6:25; உபா 10:6
எண். 3:2யாத் 6:23; 38:21; 1நா 6:3
எண். 3:3யாத் 28:1; லேவி 8:2, 3
எண். 3:4லேவி 10:1, 2
எண். 3:4எண் 3:32; 20:26
எண். 3:4எண் 4:28; 7:8
எண். 3:6எண் 8:6; 18:2
எண். 3:6எண் 1:50; 8:11
எண். 3:8எண் 4:12
எண். 3:8எண் 1:51
எண். 3:9எண் 8:15, 16; 18:6
எண். 3:10யாத் 40:15; எண் 18:7
எண். 3:10எண் 16:39, 40; 1சா 6:19; 2நா 26:16, 18
எண். 3:12எண் 3:41, 45
எண். 3:13யாத் 13:2; 34:19; எண் 18:15; லூ 2:23
எண். 3:13யாத் 13:15
எண். 3:13லேவி 27:26
எண். 3:14யாத் 19:1
எண். 3:15எண் 3:39
எண். 3:17யாத் 6:16; எண் 26:57; 1நா 23:6
எண். 3:18யாத் 6:17
எண். 3:19யாத் 6:18
எண். 3:201நா 6:29
எண். 3:20யாத் 6:19
எண். 3:211நா 6:20
எண். 3:22எண் 4:38-40
எண். 3:23எண் 1:53
எண். 3:25எண் 4:24-26
எண். 3:25யாத் 26:7
எண். 3:25யாத் 26:14
எண். 3:25யாத் 26:36
எண். 3:26யாத் 27:9
எண். 3:26யாத் 27:16
எண். 3:27எண் 3:19
எண். 3:28எண் 4:34-36
எண். 3:29எண் 1:53
எண். 3:30யாத் 6:22; 1நா 6:18
எண். 3:31யாத் 25:10
எண். 3:31யாத் 25:23
எண். 3:31யாத் 25:31
எண். 3:31யாத் 27:1, 2; 30:1-3
எண். 3:31யாத் 38:3
எண். 3:31யாத் 26:31
எண். 3:31எண் 4:15
எண். 3:32எண் 4:16; 20:28
எண். 3:33எண் 3:20; 26:58
எண். 3:34எண் 4:42-44
எண். 3:35எண் 1:53
எண். 3:36யாத் 36:20
எண். 3:36யாத் 36:31
எண். 3:36யாத் 26:32, 37; 36:37, 38
எண். 3:36யாத் 27:19
எண். 3:36எண் 4:31, 32
எண். 3:37யாத் 27:10, 11
எண். 3:38எண் 3:10
எண். 3:40எண் 3:15
எண். 3:41எண் 3:12
எண். 3:41யாத் 13:2; எண் 18:15
எண். 3:46எண் 3:39, 43
எண். 3:46எண் 18:15
எண். 3:47எண் 18:15, 16
எண். 3:47லேவி 27:25
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
எண்ணாகமம் 3:1-51

எண்ணாகமம்

3 சீனாய் மலையில்+ மோசேயுடன் யெகோவா பேசிய காலத்தில், ஆரோன் மற்றும் மோசேயின் வம்சத்தாராக இருந்தவர்கள் இவர்கள்தான். 2 ஆரோனுடைய மகன்கள்: மூத்த மகன் நாதாப், பின்பு அபியூ,+ எலெயாசார்,+ இத்தாமார்.+ 3 இவர்கள்தான் குருமார்களாகச் சேவை செய்ய அபிஷேகம் செய்யப்பட்ட ஆரோனின் மகன்கள்.+ 4 ஆனால், நாதாபும் அபியூவும் அத்துமீறி* யெகோவாவுக்குத் தூபம் காட்டியதால் சீனாய் வனாந்தரத்தில் யெகோவாவின் சன்னிதியில் செத்துப்போனார்கள்.+ அவர்களுக்கு மகன்கள் இல்லை. எலெயாசாரும்+ இத்தாமாரும்+ தங்கள் அப்பா ஆரோனோடு சேர்ந்து தொடர்ந்து குருமார்களாகச் சேவை செய்துவந்தார்கள்.

5 பின்பு யெகோவா மோசேயிடம், 6 “குருவாகிய ஆரோனின் முன்பாக லேவி கோத்திரத்தாரை+ நிறுத்து. அவர்கள் அவருக்குப் பணிவிடை செய்ய வேண்டும்.+ 7 வழிபாட்டுக் கூடாரம்* சம்பந்தமாகக் கொடுக்கப்படுகிற எல்லா வேலைகளையும் அவர்கள் செய்ய வேண்டும். ஆரோனுக்கும் எல்லா ஜனங்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் சந்திப்புக் கூடாரத்துக்கு* முன்னால் செய்து முடிக்க வேண்டும். 8 சந்திப்புக் கூடாரத்தின் பொருள்கள்+ அவர்களுடைய பொறுப்பில் இருக்க வேண்டும். வழிபாட்டுக் கூடாரம் சம்பந்தமான வேலைகளைச் செய்து,+ இஸ்ரவேலர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டும். 9 நீ ஆரோனிடமும் அவனுடைய மகன்களிடமும் லேவியர்களை ஒப்படைக்க வேண்டும். இவர்களைத்தான் இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து பிரித்தெடுத்து ஆரோனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறேன்.+ 10 குருமார்களாகச் சேவை செய்ய ஆரோனையும் அவனுடைய மகன்களையும் நீ நியமிக்க வேண்டும்.+ ஆனால், தகுதி இல்லாத* யாராவது வழிபாட்டுக் கூடாரத்தின் பக்கத்தில் வந்தால் அவன் கொல்லப்பட வேண்டும்”+ என்றார்.

11 பின்பு யெகோவா மோசேயிடம், 12 “நான் இஸ்ரவேலர்களிலிருந்து லேவியர்களைப் பிரித்தெடுத்திருக்கிறேன். இஸ்ரவேலர்களின் மூத்த மகன்கள் எல்லாருக்கும் பதிலாக லேவியர்களை ஏற்றுக்கொள்கிறேன்.+ லேவியர்கள் எனக்குச் சொந்தமாவார்கள். 13 ஏனென்றால், முதலில் பிறக்கிற எல்லாமே எனக்குத்தான் சொந்தம்.+ எகிப்தியர்களின் முதல் பிறப்புகளை நான் கொன்றுபோட்ட நாளில்,+ இஸ்ரவேலர்களின் மூத்த மகன்களையும் மிருகங்களின் முதல் குட்டிகளையும் எனக்கென்று பிரித்து வைத்தேன்.*+ முதல் பிறப்புகள் எல்லாமே எனக்குச் சொந்தமாக வேண்டும். நான் யெகோவா” என்றார்.

14 பின்பு யெகோவா சீனாய் வனாந்தரத்தில்+ மோசேயிடம், 15 “லேவியின் மகன்களை அவரவர் வம்சத்தின்படியும் தந்தைவழிக் குடும்பத்தின்படியும் பெயர்ப்பதிவு செய். ஒருமாத ஆண் குழந்தைமுதல் எல்லா ஆண்களையும் பெயர்ப்பதிவு செய்”+ என்றார். 16 அதனால், யெகோவாவின் உத்தரவுப்படி அவர்களை மோசே பெயர்ப்பதிவு செய்தார். கடவுள் கட்டளை கொடுத்தபடியே செய்தார். 17 லேவியின் மகன்களுடைய பெயர்கள்: கெர்சோன், கோகாத், மெராரி.+

18 கெர்சோனின் மகன்களுடைய பெயர்கள்: லிப்னி, சீமேயி.+ இவர்களுடைய பெயர்களிலிருந்துதான் இவர்களுடைய வம்சங்களின் பெயர்கள் வந்தன.

19 கோகாத்தின் மகன்களுடைய பெயர்கள்: அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல்.+ இவர்களுடைய பெயர்களிலிருந்துதான் இவர்களுடைய வம்சங்களின் பெயர்கள் வந்தன.

20 மெராரியின் மகன்களுடைய பெயர்கள்: மகேலி,+ மூசி.+ இவர்களுடைய பெயர்களிலிருந்துதான் இவர்களுடைய வம்சங்களின் பெயர்கள் வந்தன.

இவைதான் அந்தந்த தந்தைவழிக் குடும்பங்களில் வந்த வம்சங்கள்.

21 கெர்சோனின் வழியில் லிப்னியர்களின் வம்சமும்+ சீமேயியர்களின் வம்சமும் வந்தன. இவர்கள்தான் கெர்சோனியர்களின் வம்சத்தார். 22 இவர்களில், ஒருமாத ஆண் குழந்தைமுதல் எல்லா ஆண்களும் பெயர்ப்பதிவு செய்யப்பட்டார்கள். இவர்கள் மொத்தம் 7,500 பேர்.+ 23 கெர்சோனியர்களின் வம்சத்தார் வழிபாட்டுக் கூடாரத்துக்குப் பின்னால்,+ மேற்கே முகாம்போட்டார்கள். 24 கெர்சோனியர்களின் தந்தைவழிக் குடும்பத்துக்குத் தலைவர், லாயேலின் மகன் எலியாசாப். 25 சந்திப்புக் கூடாரத்தில் கெர்சோனின் மகன்களுடைய பொறுப்பில் உள்ளவை இவைதான்:+ வழிபாட்டுக் கூடாரம்,+ அதன் மேல்விரிப்புகள்,+ சந்திப்புக் கூடார வாசலின் திரை,+ 26 வழிபாட்டுக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் சுற்றியுள்ள பிரகாரத்தின் மறைப்புகள்,+ பிரகாரத்தின் நுழைவாசலுக்கான திரை,+ கூடாரக் கயிறுகள், மற்றும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட வேலைகள்.

27 கோகாத்தின் வழியில் அம்ராமியர்களின் வம்சமும் இத்சேயார்களின் வம்சமும் எப்ரோனியர்களின் வம்சமும் ஊசியேலர்களின் வம்சமும் வந்தன. இவர்கள்தான் கோகாத்தியர்களின் வம்சத்தார்.+ 28 இவர்களில், ஒருமாத ஆண் குழந்தைமுதல் எல்லா ஆண்களும் பெயர்ப்பதிவு செய்யப்பட்டார்கள். இவர்கள் மொத்தம் 8,600 பேர். பரிசுத்த இடத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு இவர்களுடையது.+ 29 கோகாத்தின் மகன்களுடைய வம்சத்தார் வழிபாட்டுக் கூடாரத்துக்குத் தெற்கே முகாம்போட்டார்கள்.+ 30 கோகாத்தியர்களின் தந்தைவழிக் குடும்பத்துக்குத் தலைவர், ஊசியேலின்+ மகன் எலிசாப்பான். 31 கோகாத்தியர்களின் பொறுப்பில் உள்ளவை: பெட்டி,+ மேஜை,+ குத்துவிளக்கு,+ பீடங்கள்,+ பரிசுத்த இடத்தின் சேவைக்கான பாத்திரங்கள்,+ திரைச்சீலை,+ மற்றும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட வேலைகள்.+

32 குருவாகிய ஆரோனின் மகன் எலெயாசார், லேவியர்களின் தலைவர்களுக்கெல்லாம் தலைவராக இருந்தார்.+ பரிசுத்த இடத்தின் வேலைகளைக் கவனித்துவந்தவர்களை அவர் கண்காணித்துவந்தார்.

33 மெராரியின் வழியில் மகேலியர்களின் வம்சமும் மூசியர்களின் வம்சமும் வந்தன. இவர்கள்தான் மெராரியின் வம்சத்தார்.+ 34 இவர்களில், ஒருமாத ஆண் குழந்தைமுதல் எல்லா ஆண்களும் பெயர்ப்பதிவு செய்யப்பட்டார்கள். இவர்கள் மொத்தம் 6,200 பேர்.+ 35 அபியாயேலின் மகன் சூரியேல், மெராரியின் தந்தைவழிக் குடும்பத்துக்குத் தலைவராக இருந்தார். மெராரியின் வம்சத்தார் வழிபாட்டுக் கூடாரத்துக்கு வடக்கே முகாம்போட்டார்கள்.+ 36 மெராரியின் மகன்களுடைய பொறுப்பில் உள்ளவை: வழிபாட்டுக் கூடாரத்தின் சட்டங்கள்,+ அதன் கம்புகள்,+ அதன் தூண்கள்,+ அதன் பாதங்கள், அதன் பாத்திரங்கள்,+ அவற்றுடன் சம்பந்தப்பட்ட வேலைகள்,+ 37 பிரகாரத்தைச் சுற்றியுள்ள கம்பங்கள், அவற்றின் பாதங்கள்,+ கூடார ஆணிகள், மற்றும் கூடாரக் கயிறுகள்.

38 சூரியன் உதிக்கும் கிழக்குத் திசையில், அதாவது வழிபாட்டுக் கூடாரமாகிய சந்திப்புக் கூடாரத்துக்கு முன்னால், மோசேயும் ஆரோனும் அவர்களுடைய மகன்களும் கூடாரம் போட்டார்கள். வழிபாட்டுக் கூடாரத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு அவர்களுடையது. இதுதான், இஸ்ரவேலர்களின் சார்பாக அவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமை. தகுதி இல்லாத* யாராவது அதன் பக்கத்தில் வந்தால் அவன் கொல்லப்பட வேண்டும்.+

39 யெகோவாவின் கட்டளைப்படி, லேவியர்களில் ஒருமாத ஆண் குழந்தைமுதல் எல்லா ஆண்களையும் மோசேயும் ஆரோனும் பெயர்ப்பதிவு செய்தார்கள். அவரவர் வம்சத்தின்படி பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 22,000 பேர்.

40 யெகோவா மோசேயிடம், “இஸ்ரவேலர்களுடைய மூத்த மகன்களில், ஒருமாத ஆண் குழந்தைமுதல் எல்லா ஆண்களையும் பெயர்ப்பதிவு செய்.+ அவர்களைக் கணக்குப் போட்டு, அவர்களுடைய பெயர்களைப் பட்டியலிடு. 41 இஸ்ரவேலர்களுடைய மூத்த மகன்களுக்குப் பதிலாக லேவியர்களை எனக்காகப் பிரித்தெடு.+ இஸ்ரவேலர்களுடைய மிருகங்களின் முதல் குட்டிகளுக்குப் பதிலாக லேவியர்களுடைய மிருகங்களின் முதல் குட்டிகளைப் பிரித்தெடு.+ நான் யெகோவா” என்றார். 42 அதனால் யெகோவா கட்டளை கொடுத்தபடி, இஸ்ரவேலர்களின் மூத்த மகன்கள் எல்லாரையும் மோசே பெயர்ப்பதிவு செய்தார். 43 மூத்த மகன்களில், ஒருமாத ஆண் குழந்தைமுதல் எல்லா ஆண்களும் பெயர்ப்பதிவு செய்யப்பட்டார்கள். இவர்கள் மொத்தம் 22,273 பேர்.

44 பின்பு யெகோவா மோசேயிடம், 45 “இஸ்ரவேலர்களுடைய மூத்த மகன்களுக்குப் பதிலாக லேவியர்களைப் பிரித்தெடு. இஸ்ரவேலர்களுடைய மிருகங்களுக்குப் பதிலாக லேவியர்களுடைய மிருகங்களைப் பிரித்தெடு. லேவியர்கள் எனக்குச் சொந்தமாவார்கள். நான் யெகோவா. 46 லேவியர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருந்த இஸ்ரவேலர்களின் மூத்த மகன்கள் 273 பேருக்காக+ மீட்புவிலை+ வாங்க வேண்டும். 47 ஒவ்வொருவருக்காகவும் நீ ஐந்து சேக்கல்* வாங்க வேண்டும்.+ அது பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி இருக்க வேண்டும். ஒரு சேக்கல் என்பது 20 கேரா.*+ 48 லேவியர்களைவிட அதிகமாக இருந்தவர்களிடமிருந்து வாங்கிய மீட்புவிலையை ஆரோனிடமும் அவனுடைய மகன்களிடமும் நீ கொடுக்க வேண்டும்” என்றார். 49 அதனால், லேவியர்களைவிட அதிகமாக இருந்தவர்களை மீட்பதற்காக அவர்களிடமிருந்து மீட்புவிலையை மோசே வாங்கிக்கொண்டார். 50 பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி, இஸ்ரவேலர்களின் மூத்த மகன்களிடமிருந்து 1,365 சேக்கல் வாங்கிக்கொண்டார். 51 பின்பு யெகோவா சொன்னபடி, அந்த மீட்புவிலையை ஆரோனிடமும் அவருடைய மகன்களிடமும் கொடுத்தார். யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்