உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 31
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

எண்ணாகமம் முக்கியக் குறிப்புகள்

      • மீதியானியர்களைப் பழிவாங்குகிறார்கள் (1-12)

        • பிலேயாம் கொல்லப்படுகிறான் (8)

      • கைப்பற்றப்பட்ட பொருள்கள் சம்பந்தமான அறிவுரைகள் (13-54)

எண்ணாகமம் 31:2

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “உன் முன்னோர்களுடன் சேர்க்கப்படுவாய்.” எபிரெயுவில் கவிதை நடையிலுள்ள இந்த வார்த்தைகள் மரணத்தைக் குறிக்கின்றன.

இணைவசனங்கள்

  • +எண் 22:7; 25:1-3, 17, 18; 1கொ 10:8; வெளி 2:14
  • +சங் 94:1; ஏசா 1:24; நாகூ 1:2
  • +எண் 27:12, 13; உபா 32:48-50

எண்ணாகமம் 31:5

இணைவசனங்கள்

  • +எண் 26:51

எண்ணாகமம் 31:6

இணைவசனங்கள்

  • +எண் 25:7, 8
  • +எண் 10:2, 9

எண்ணாகமம் 31:8

இணைவசனங்கள்

  • +எண் 22:12; 2பே 2:15; வெளி 2:14

எண்ணாகமம் 31:12

இணைவசனங்கள்

  • +எண் 22:1

எண்ணாகமம் 31:16

இணைவசனங்கள்

  • +எண் 25:17, 18; உபா 4:3; யோசு 22:17
  • +எண் 25:1, 2; வெளி 2:14
  • +எண் 25:9; 1கொ 10:8

எண்ணாகமம் 31:18

இணைவசனங்கள்

  • +எண் 31:35

எண்ணாகமம் 31:19

இணைவசனங்கள்

  • +எண் 5:2; 19:11, 16
  • +எண் 19:20

எண்ணாகமம் 31:23

இணைவசனங்கள்

  • +எண் 19:9

எண்ணாகமம் 31:24

இணைவசனங்கள்

  • +எண் 19:19, 20

எண்ணாகமம் 31:27

இணைவசனங்கள்

  • +யோசு 22:7, 8; 1சா 30:24

எண்ணாகமம் 31:29

இணைவசனங்கள்

  • +எண் 18:20, 29

எண்ணாகமம் 31:30

இணைவசனங்கள்

  • +உபா 12:19
  • +எண் 3:6, 7; 18:2, 3; 1நா 23:32

எண்ணாகமம் 31:35

இணைவசனங்கள்

  • +எண் 31:18

எண்ணாகமம் 31:41

இணைவசனங்கள்

  • +எண் 18:8, 19

எண்ணாகமம் 31:47

இணைவசனங்கள்

  • +எண் 3:6, 7; 18:2, 3; 1நா 23:32
  • +உபா 12:19

எண்ணாகமம் 31:48

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “ஆயிரம் வீரர்கள் கொண்ட பிரிவுகளின்.”

இணைவசனங்கள்

  • +எண் 31:4

எண்ணாகமம் 31:49

இணைவசனங்கள்

  • +யாத் 23:27; லேவி 26:7, 8

எண்ணாகமம் 31:52

அடிக்குறிப்புகள்

  • *

    ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

எண். 31:2எண் 22:7; 25:1-3, 17, 18; 1கொ 10:8; வெளி 2:14
எண். 31:2சங் 94:1; ஏசா 1:24; நாகூ 1:2
எண். 31:2எண் 27:12, 13; உபா 32:48-50
எண். 31:5எண் 26:51
எண். 31:6எண் 25:7, 8
எண். 31:6எண் 10:2, 9
எண். 31:8எண் 22:12; 2பே 2:15; வெளி 2:14
எண். 31:12எண் 22:1
எண். 31:16எண் 25:17, 18; உபா 4:3; யோசு 22:17
எண். 31:16எண் 25:1, 2; வெளி 2:14
எண். 31:16எண் 25:9; 1கொ 10:8
எண். 31:18எண் 31:35
எண். 31:19எண் 5:2; 19:11, 16
எண். 31:19எண் 19:20
எண். 31:23எண் 19:9
எண். 31:24எண் 19:19, 20
எண். 31:27யோசு 22:7, 8; 1சா 30:24
எண். 31:29எண் 18:20, 29
எண். 31:30உபா 12:19
எண். 31:30எண் 3:6, 7; 18:2, 3; 1நா 23:32
எண். 31:35எண் 31:18
எண். 31:41எண் 18:8, 19
எண். 31:47எண் 3:6, 7; 18:2, 3; 1நா 23:32
எண். 31:47உபா 12:19
எண். 31:48எண் 31:4
எண். 31:49யாத் 23:27; லேவி 26:7, 8
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
எண்ணாகமம் 31:1-54

எண்ணாகமம்

31 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “இஸ்ரவேலர்களுக்காக மீதியானியர்களை+ நீ பழிவாங்கு.+ அதன்பின், நீ இறந்துபோவாய்”*+ என்றார்.

3 அதனால் மோசே ஜனங்களிடம், “யெகோவாவின் சார்பாக மீதியானியர்களை நீங்கள் பழிவாங்க வேண்டும். அவர்களோடு போர் செய்வதற்காக ஆட்களைத் தயார்படுத்துங்கள். 4 ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் 1,000 பேரை நீங்கள் போருக்கு அனுப்ப வேண்டும்” என்றார். 5 அதன்படியே, லட்சக்கணக்கில் இருந்த இஸ்ரவேலர்களின்+ ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் 1,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மொத்தம் 12,000 பேர் போருக்காகத் தயார்படுத்தப்பட்டார்கள்.

6 ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் 1,000 பேரை மோசே போருக்கு அனுப்பினார். அவர்களுடன் குருவாகிய எலெயாசாரின் மகன் பினெகாசை+ அனுப்பினார். இவர் பரிசுத்த பாத்திரங்களையும் போர் எக்காளங்களையும்+ கையில் எடுத்துக்கொண்டு போனார். 7 மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே மீதியான் தேசத்துக்கு எதிராக இஸ்ரவேலர்கள் போர் செய்து, எல்லா ஆண்களையும் கொன்றுபோட்டார்கள். 8 மீதியான் தேசத்தின் ஐந்து ராஜாக்களான ஏவி, ரெக்கேம், சூர், ஹூர், ரேபா ஆகியவர்களையும் வெட்டி வீழ்த்தினார்கள். பெயோரின் மகன் பிலேயாமையும்+ வாளால் வெட்டிப்போட்டார்கள். 9 ஆனால், மீதியானியப் பெண்களையும் பிள்ளைகளையும் பிடித்துக்கொண்டு போனார்கள். மீதியானியர்களின் எல்லா மந்தைகளையும் எல்லா பொருள்களையும் சூறையாடினார்கள். 10 அவர்கள் குடியிருந்த எல்லா நகரங்களையும் முகாம்களையும் தீ வைத்துக் கொளுத்தினார்கள். 11 பின்பு, தாங்கள் பிடித்துவந்த ஆட்களையும் மிருகங்களையும் கூட்டிக்கொண்டு, 12 சூறையாடிய பொருள்களை எடுத்துக்கொண்டு மோசேயிடமும் எலெயாசாரிடமும் ஜனங்களிடமும் வந்தார்கள். அதாவது, எரிகோவுக்குப் பக்கத்தில் யோர்தானை ஒட்டியுள்ள மோவாப் பாலைநிலத்தில் இருந்த முகாமுக்கு+ வந்தார்கள்.

13 அப்போது, மோசேயும் குருவாகிய எலெயாசாரும் ஜனங்களின் தலைவர்கள் எல்லாரும் அவர்களைச் சந்திக்க முகாமுக்கு வெளியே போனார்கள். 14 போரிலிருந்து திரும்பி வந்த படைத் தலைவர்களைப் பார்த்து, அதாவது 1,000 வீரர்களுக்குத் தலைவர்களையும் 100 வீரர்களுக்குத் தலைவர்களையும் பார்த்து, மோசே கோபப்பட்டார். 15 மோசே அவர்களிடம், “பெண்கள் எல்லாரையும் உயிரோடு விட்டுவிட்டீர்களா? 16 பேயோரின் விஷயத்தில்,+ இவர்கள்தானே பிலேயாமின் பேச்சைக் கேட்டு இஸ்ரவேலர்களை யெகோவாவுக்கு விரோதமாகத் துரோகம் செய்ய வைத்தார்கள்!+ இவர்கள்தானே யெகோவாவின் ஜனங்கள்மேல் கொள்ளைநோயை வர வைத்தார்கள்!+ 17 அதனால் ஆண் பிள்ளைகள் எல்லாரையும், ஆணோடு உறவுகொண்ட பெண்கள் எல்லாரையும் கொன்றுபோட வேண்டும். 18 ஆனால், எந்த ஆணோடும் உறவுகொள்ளாத பெண்கள் எல்லாரையும் உயிரோடு விட்டுவிடலாம்.+ 19 நீங்கள் ஏழு நாட்கள் முகாமுக்கு வெளியே தங்க வேண்டும். போரில் கொலை செய்தவர்களும் கொலை செய்யப்பட்டவர்களின் உடலைத் தொட்டவர்களும்+ தங்களை மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தூய்மைப்படுத்த வேண்டும்.+ நீங்கள் பிடித்துக்கொண்டு வந்தவர்களும் நீங்களும் இப்படிச் செய்ய வேண்டும். 20 எல்லா உடைகளையும், தோல் பொருள்களையும், வெள்ளாட்டு மயிரில் செய்யப்பட்ட பொருள்களையும், மரச் சாமான்களையும் தூய்மைப்படுத்த வேண்டும்” என்றார்.

21 பின்பு, குருவாகிய எலெயாசார் போரிலிருந்து திரும்பி வந்த ஆட்களைப் பார்த்து, “யெகோவா மோசேக்குக் கொடுத்த சட்டம் என்னவென்றால், 22 ‘நெருப்பைத் தாக்குப்பிடிக்கிற எல்லாவற்றையும், அதாவது தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, தகரம், ஈயம் போன்ற எல்லாவற்றையும், 23 நீங்கள் நெருப்பில் போட வேண்டும். அப்போது அவை சுத்தமாகும். அதேசமயத்தில், அவற்றைச் சுத்திகரிப்பு நீராலும்+ தூய்மைப்படுத்த வேண்டும். ஆனால், நெருப்பைத் தாக்குப்பிடிக்காத எல்லாவற்றையும் தண்ணீரில் கழுவ வேண்டும். 24 ஏழாம் நாளில் உங்களுடைய உடைகளைத் துவைக்க வேண்டும், அப்போது நீங்கள் சுத்தமாவீர்கள். அதன்பின் முகாமுக்குள் வரலாம்’”+ என்றார்.

25 பின்பு யெகோவா மோசேயிடம், 26 “பிடித்துக்கொண்டு வந்த மனுஷர்களையும், மிருகங்களையும் நீ கணக்கெடுக்க வேண்டும். குருவாகிய எலெயாசாருடனும் தந்தைவழிக் குடும்பத் தலைவர்களுடனும் சேர்ந்து இதைச் செய்ய வேண்டும். 27 பின்பு, அந்த மனுஷர்களையும் மிருகங்களையும் இரண்டு பங்காகப் பிரித்து, போருக்குப் போனவர்களுக்கு ஒரு பங்கும் ஜனங்களுக்கு ஒரு பங்கும் கொடுக்க வேண்டும்.+ 28 போருக்குப் போன வீரர்களுக்குக் கொடுக்கிற மனுஷர்களிலும், மாடுகளிலும், கழுதைகளிலும், ஆடுகளிலும் 500-க்கு ஒன்றைப் பிரித்தெடுத்து யெகோவாவுக்காகக் கொடுக்க வேண்டும். 29 அவர்களுக்குக் கிடைத்த பாதிப் பங்கிலிருந்து இந்த மனுஷர்களையும் மிருகங்களையும் பிரித்தெடுத்து யெகோவாவுக்குக் காணிக்கையாகக் குருவாகிய எலெயாசாரிடம் கொடுக்க வேண்டும்.+ 30 இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கிடைத்த பாதிப் பங்கில், அதாவது மனுஷர்களிலும் மாடுகளிலும் கழுதைகளிலும் ஆடுகளிலும் வீட்டு விலங்குகளிலும், 50-க்கு ஒன்றைப் பிரித்தெடுத்து லேவியர்களுக்குக் கொடுக்க வேண்டும்.+ ஏனென்றால், யெகோவாவின் கூடாரத்தில் செய்ய வேண்டிய வேலைகளை அவர்கள் செய்கிறார்கள்”+ என்றார்.

31 யெகோவா கட்டளை கொடுத்தபடியே, மோசேயும் குருவாகிய எலெயாசாரும் செய்தார்கள். 32 போரிலிருந்து திரும்பியவர்கள் பயன்படுத்தியது தவிர மீதியிருந்தவை இவைதான்: 6,75,000 ஆடுகள், 33 72,000 மாடுகள், 34 61,000 கழுதைகள். 35 எந்த ஆணுடனும் உறவுகொள்ளாத பெண்கள்+ மொத்தம் 32,000 பேர். 36 போருக்குப் போனவர்களுக்குக் கிடைத்த பாதிப் பங்கில் 3,37,500 ஆடுகள் இருந்தன. 37 அவற்றில் யெகோவாவுக்கான பங்கு 675. 38 அவர்களுடைய பங்கில் 36,000 மாடுகள் இருந்தன. அவற்றில் யெகோவாவுக்கான பங்கு 72. 39 அவர்களுடைய பங்கில் 30,500 கழுதைகள் இருந்தன. அவற்றில் யெகோவாவுக்கான பங்கு 61. 40 அவர்களுடைய பங்கில் 16,000 மனிதர்கள் இருந்தார்கள். அவர்களில் யெகோவாவுக்கான பங்கு 32 பேர். 41 யெகோவாவுக்கான பங்கை குருவாகிய எலெயாசாரிடம் மோசே கொடுத்தார்.+ இப்படி, யெகோவா கட்டளை கொடுத்தபடியே செய்தார்.

42 போர் செய்யப் போனவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தது தவிர, இஸ்ரவேல் ஜனங்களுக்கு மோசே, 43 3,37,500 ஆடுகளையும், 44 36,000 மாடுகளையும், 45 30,500 கழுதைகளையும், 46 16,000 மனிதர்களையும் பிரித்துக் கொடுத்தார். 47 பின்பு, இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்த பாதிப் பங்கில், அதாவது மனிதர்களிலும் மிருகங்களிலும், 50-க்கு ஒன்றைப் பிரித்தெடுத்து, யெகோவாவின் கூடாரத்தில் வேலை செய்த+ லேவியர்களுக்கு மோசே கொடுத்தார்.+ யெகோவா கட்டளை கொடுத்தபடியே அவர் செய்தார்.

48 அதன்பின் படைப்பிரிவுகளின்* தலைவர்களான 1,000 வீரர்களுக்குத்+ தலைவர்களும் 100 வீரர்களுக்குத் தலைவர்களும் மோசேயிடம் வந்து, 49 “எங்களுக்குக் கீழுள்ள வீரர்களை உங்கள் ஊழியர்களாகிய நாங்கள் கணக்கெடுத்தோம், அவர்களில் ஒருவர்கூட குறையவில்லை.+ 50 அதனால், நாங்கள் ஒவ்வொருவரும் கைப்பற்றிய தங்கச் சாமான்கள், கொலுசுகள், காப்புகள், முத்திரை மோதிரங்கள், தோடுகள், மற்ற நகைகள் எல்லாவற்றையும் யெகோவாவுக்குக் காணிக்கையாகத் தருகிறோம். யெகோவாவின் முன்னிலையில் எங்களுக்குப் பாவப் பரிகாரமாக இவற்றைத் தருகிறோம்” என்றார்கள்.

51 அவர்கள் கொடுத்த தங்க நகைகளை மோசேயும் குருவாகிய எலெயாசாரும் வாங்கிக்கொண்டார்கள். 52 1,000 வீரர்களுக்குத் தலைவர்களும் 100 வீரர்களுக்குத் தலைவர்களும் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுத்த தங்கத்தின் எடை மொத்தம் 16,750 சேக்கல்.* 53 போருக்குப் போன வீரர்கள் ஒவ்வொருவருக்கும் கைப்பற்றப்பட்ட பொருள்களிலிருந்து ஒரு பங்கு கிடைத்தது. 54 1,000 வீரர்களுக்குத் தலைவர்களும் 100 வீரர்களுக்குத் தலைவர்களும் கொடுத்த தங்கத்தை மோசேயும் குருவாகிய எலெயாசாரும் சந்திப்புக் கூடாரத்துக்குள் கொண்டுவந்தார்கள். இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு நினைப்பூட்டுதலாக இருக்கும்படி அந்தத் தங்கத்தை யெகோவாவுக்கு முன்னால் வைத்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்