உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 14
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

லேவியராகமம் முக்கியக் குறிப்புகள்

      • தொழுநோயிலிருந்து சுத்திகரிப்பது (1-32)

      • தொழுநோய் பிடித்த வீட்டைச் சுத்திகரிப்பது (33-57)

லேவியராகமம் 14:2

இணைவசனங்கள்

  • +லேவி 13:2; மத் 8:4; மாற் 1:44; லூ 5:14; 17:14

லேவியராகமம் 14:4

இணைவசனங்கள்

  • +லேவி 14:49-53; எண் 19:6, 9; சங் 51:7

லேவியராகமம் 14:7

இணைவசனங்கள்

  • +லேவி 16:22

லேவியராகமம் 14:10

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “சுமார் 3 கிலோவும்.”

  • *

    நே.மொ., “ஒரு லாகு அளவும்.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +லேவி 4:32
  • +லேவி 2:1
  • +மாற் 1:44

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    2/1/1988, பக். 9

லேவியராகமம் 14:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    2/1/1988, பக். 9

லேவியராகமம் 14:12

இணைவசனங்கள்

  • +லேவி 6:6
  • +லேவி 14:21, 24

லேவியராகமம் 14:13

இணைவசனங்கள்

  • +லேவி 1:10, 11; 4:3, 4
  • +லேவி 2:3; 7:7; 1கொ 9:13; 10:18
  • +லேவி 6:25

லேவியராகமம் 14:15

இணைவசனங்கள்

  • +லேவி 14:10

லேவியராகமம் 14:18

இணைவசனங்கள்

  • +லேவி 6:7; 1யோ 1:7; 2:1, 2

லேவியராகமம் 14:19

இணைவசனங்கள்

  • +லேவி 5:6

லேவியராகமம் 14:20

இணைவசனங்கள்

  • +லேவி 2:1; 14:10; எண் 15:4
  • +மத் 8:4
  • +லேவி 14:9; மாற் 1:44; லூ 5:14; 17:14

லேவியராகமம் 14:21

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “சுமார் ஒரு கிலோவும்.”

லேவியராகமம் 14:22

இணைவசனங்கள்

  • +லேவி 1:14; 5:7; 12:8

லேவியராகமம் 14:23

இணைவசனங்கள்

  • +லேவி 15:13, 14
  • +லேவி 14:10, 11

லேவியராகமம் 14:24

இணைவசனங்கள்

  • +லேவி 6:6
  • +லேவி 14:12

லேவியராகமம் 14:25

இணைவசனங்கள்

  • +லேவி 14:14

லேவியராகமம் 14:26

இணைவசனங்கள்

  • +லேவி 14:15-18

லேவியராகமம் 14:30

இணைவசனங்கள்

  • +லேவி 12:8; 14:22

லேவியராகமம் 14:31

இணைவசனங்கள்

  • +லேவி 5:7
  • +லேவி 14:20

லேவியராகமம் 14:34

அடிக்குறிப்புகள்

  • *

    இந்தத் தொழுநோய் ஒருவகை பூஞ்சணமாகவோ பூஞ்சக்காளானாகவோ இருந்திருக்கலாம், உறுதியாகத் தெரியாது. சொல் பட்டியலைப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +ஆதி 17:8; எண் 35:10
  • +உபா 7:12, 15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    1/2006, பக். 14

லேவியராகமம் 14:38

இணைவசனங்கள்

  • +லேவி 13:4, 50; எண் 12:15

லேவியராகமம் 14:44

இணைவசனங்கள்

  • +லேவி 13:51

லேவியராகமம் 14:45

இணைவசனங்கள்

  • +லேவி 14:41

லேவியராகமம் 14:46

இணைவசனங்கள்

  • +லேவி 14:38
  • +லேவி 11:23-25; 15:8; 17:15; 22:4-6

லேவியராகமம் 14:49

இணைவசனங்கள்

  • +லேவி 14:3, 4; எண் 19:6, 7

லேவியராகமம் 14:51

இணைவசனங்கள்

  • +லேவி 14:6, 7

லேவியராகமம் 14:54

இணைவசனங்கள்

  • +லேவி 13:30

லேவியராகமம் 14:55

இணைவசனங்கள்

  • +லேவி 13:47; 14:34

லேவியராகமம் 14:56

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “பொருக்குகளும்.” இவை, இரத்தமும் நீரும் கசிந்து காய்ந்துபோகும்போது உண்டாகும் கெட்டியான தோல்கள்.

இணைவசனங்கள்

  • +லேவி 13:2

லேவியராகமம் 14:57

இணைவசனங்கள்

  • +லேவி 10:10; எசே 44:23
  • +உபா 24:8

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

லேவி. 14:2லேவி 13:2; மத் 8:4; மாற் 1:44; லூ 5:14; 17:14
லேவி. 14:4லேவி 14:49-53; எண் 19:6, 9; சங் 51:7
லேவி. 14:7லேவி 16:22
லேவி. 14:10லேவி 4:32
லேவி. 14:10லேவி 2:1
லேவி. 14:10மாற் 1:44
லேவி. 14:12லேவி 6:6
லேவி. 14:12லேவி 14:21, 24
லேவி. 14:13லேவி 1:10, 11; 4:3, 4
லேவி. 14:13லேவி 2:3; 7:7; 1கொ 9:13; 10:18
லேவி. 14:13லேவி 6:25
லேவி. 14:15லேவி 14:10
லேவி. 14:18லேவி 6:7; 1யோ 1:7; 2:1, 2
லேவி. 14:19லேவி 5:6
லேவி. 14:20லேவி 2:1; 14:10; எண் 15:4
லேவி. 14:20மத் 8:4
லேவி. 14:20லேவி 14:9; மாற் 1:44; லூ 5:14; 17:14
லேவி. 14:22லேவி 1:14; 5:7; 12:8
லேவி. 14:23லேவி 15:13, 14
லேவி. 14:23லேவி 14:10, 11
லேவி. 14:24லேவி 6:6
லேவி. 14:24லேவி 14:12
லேவி. 14:25லேவி 14:14
லேவி. 14:26லேவி 14:15-18
லேவி. 14:30லேவி 12:8; 14:22
லேவி. 14:31லேவி 5:7
லேவி. 14:31லேவி 14:20
லேவி. 14:34ஆதி 17:8; எண் 35:10
லேவி. 14:34உபா 7:12, 15
லேவி. 14:38லேவி 13:4, 50; எண் 12:15
லேவி. 14:44லேவி 13:51
லேவி. 14:45லேவி 14:41
லேவி. 14:46லேவி 14:38
லேவி. 14:46லேவி 11:23-25; 15:8; 17:15; 22:4-6
லேவி. 14:49லேவி 14:3, 4; எண் 19:6, 7
லேவி. 14:51லேவி 14:6, 7
லேவி. 14:54லேவி 13:30
லேவி. 14:55லேவி 13:47; 14:34
லேவி. 14:56லேவி 13:2
லேவி. 14:57லேவி 10:10; எசே 44:23
லேவி. 14:57உபா 24:8
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
லேவியராகமம் 14:1-57

லேவியராகமம்

14 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “தொழுநோயாளி சுத்திகரிக்கப்படும் நாளில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய சட்டங்கள் இவைதான்: அவனைக் குருவானவரிடம் கொண்டுவர வேண்டும்.+ 3 குருவானவர் முகாமுக்கு வெளியே போய் அவனைப் பரிசோதிக்க வேண்டும். அவன் குணமாகியிருந்தால், 4 அவனைச் சுத்திகரிப்பதற்காகச் சுத்தமான இரண்டு பறவைகளையும் தேவதாரு மரக்கட்டையையும் கருஞ்சிவப்பு துணியையும் மருவுக்கொத்தையும் கொண்டுவரும்படி குருவானவர் அவனிடம் சொல்ல வேண்டும்.+ 5 பின்பு, அந்தப் பறவைகளில் ஒன்றை ஊற்றுநீருள்ள ஒரு மண்பாத்திரத்தில் வைத்துக் கொல்லும்படி அவர் கட்டளை கொடுக்க வேண்டும். 6 ஆனால், உயிரோடிருக்கிற பறவையையும் தேவதாரு மரக்கட்டையையும் கருஞ்சிவப்பு துணியையும் மருவுக்கொத்தையும் ஒன்றாக எடுத்து ஊற்றுநீரில் கொல்லப்பட்ட அந்தப் பறவையின் இரத்தத்தில் அவர் முக்கியெடுக்க வேண்டும். 7 பின்பு, தொழுநோயிலிருந்து சுத்திகரிக்கப்படுகிற ஆளின் மேல் அதை ஏழு தடவை அவர் தெளிக்க வேண்டும். அவன் தீட்டில்லாதவன் என்று அறிவிக்க வேண்டும். உயிரோடிருக்கிற பறவையை வெட்டவெளியில் விட்டுவிட வேண்டும்.+

8 சுத்திகரிக்கப்படுபவன் தன் உடைகளைத் துவைத்து, தன்னுடைய எல்லா முடியையும் சவரம் செய்துகொண்டு, குளிக்க வேண்டும். அப்போது, அவன் தீட்டில்லாதவனாக இருப்பான். அதன்பின், அவன் முகாமுக்குள் வரலாம். ஆனால், தன் கூடாரத்துக்கு வெளியே ஏழு நாட்கள் தங்கியிருக்க வேண்டும். 9 ஏழாம் நாளில் அவன் தன்னுடைய தலைமுடியையும் தாடியையும் புருவங்களையும் சவரம் செய்துகொள்ள வேண்டும். எல்லா முடியையும் சவரம் செய்த பின்பு, தன்னுடைய உடையைத் துவைத்து, குளிக்க வேண்டும். அப்போது அவன் தீட்டில்லாதவனாக இருப்பான்.

10 எட்டாம் நாளில், குறையில்லாத இரண்டு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் குறையில்லாத ஒருவயது பெண் செம்மறியாட்டுக் குட்டியையும்+ அவன் எடுத்துவர வேண்டும். அதோடு, உணவுக் காணிக்கையாக, எண்ணெய் கலந்த நைசான மாவை+ ஒரு எப்பா அளவிலே பத்தில் மூன்று பங்கும்,* எண்ணெயைச் சுமார் 300 மில்லியும்* எடுத்துவர வேண்டும்.+ 11 சுத்திகரிக்கப்போகிற குருவானவர் அந்த மனுஷனை சந்திப்புக் கூடாரத்தின் பிரகார நுழைவாசலில் நிறுத்தி, யெகோவாவின் முன்னிலையில் அவனுடைய காணிக்கைகளைச் செலுத்த வேண்டும். 12 சுமார் 300 மில்லி எண்ணெயோடு, ஒரு செம்மறியாட்டுக் கடாக் குட்டியைக் குற்ற நிவாரண பலியாகக்+ குருவானவர் செலுத்த வேண்டும். அவற்றை அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்ட வேண்டும்.+ 13 பின்பு, பாவப் பரிகார பலியும் தகன பலியும் வழக்கமாக வெட்டப்படுகிற இடத்தில், அதாவது பரிசுத்த இடத்தில், செம்மறியாட்டுக் கடாக் குட்டியை வெட்ட வேண்டும்.+ ஏனென்றால், பாவப் பரிகார பலியைப் போலக் குற்ற நிவாரண பலியும் குருவானவருக்குச் சொந்தமானது.+ அது மிகவும் பரிசுத்தமானது.+

14 குற்ற நிவாரண பலியின் இரத்தத்தில் கொஞ்சத்தைக் குருவானவர் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிற நபரின் வலது காது மடலிலும் வலது கை கட்டைவிரலிலும் வலது கால் பெருவிரலிலும் பூச வேண்டும். 15 அதோடு, குருவானவர் சுமார் 300 மில்லி எண்ணெயில்+ கொஞ்சத்தைத் தன்னுடைய இடது உள்ளங்கையில் ஊற்ற வேண்டும். 16 பின்பு, தன்னுடைய இடது உள்ளங்கையில் உள்ள எண்ணெயை வலது கைவிரலில் தொட்டு, யெகோவாவின் முன்னிலையில் ஏழு தடவை தெளிக்க வேண்டும். 17 குருவானவர் தன்னுடைய உள்ளங்கையில் மீதியிருக்கும் எண்ணெயில் கொஞ்சத்தை எடுத்து, சுத்திகரிக்கப்படுபவரின் வலது காது மடலிலும் வலது கை கட்டைவிரலிலும் வலது கால் பெருவிரலிலும் பூச வேண்டும். அதாவது, ஏற்கெனவே பூசப்பட்ட குற்ற நிவாரண பலியின் இரத்தத்தின் மேல் பூச வேண்டும். 18 குருவானவர் தன்னுடைய உள்ளங்கையில் இன்னும் மீதியிருக்கும் எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுபவரின் தலையில் தடவி, யெகோவாவின் முன்னிலையில் அவனுக்காகப் பாவப் பரிகாரம் செய்ய வேண்டும்.+

19 தீட்டிலிருந்து சுத்திகரிக்கப்படுகிற நபருக்காக, குருவானவர் பாவப் பரிகார பலியைச்+ செலுத்தி பாவப் பரிகாரம் செய்ய வேண்டும். அதன் பின்பு, தகன பலிக்குரியதை வெட்ட வேண்டும். 20 பின்பு, தகன பலியையும் உணவுக் காணிக்கையையும்+ பலிபீடத்தில் செலுத்தி, அவனுக்காகப் பாவப் பரிகாரம் செய்ய வேண்டும்.+ அப்போது, அவன் தீட்டில்லாதவனாக இருப்பான்.+

21 இவற்றைச் செலுத்த வசதியில்லாத ஒரு ஏழையாக அவன் இருந்தால், பாவப் பரிகாரம் செய்வதற்காக ஒரு செம்மறியாட்டுக் கடாக் குட்டியைக் குற்ற நிவாரண பலியாகவும் அசைவாட்டும் காணிக்கையாகவும் அவன் கொண்டுவர வேண்டும். உணவுக் காணிக்கையாக, எண்ணெய் கலந்த நைசான மாவை ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கும்,* எண்ணெயைச் சுமார் 300 மில்லியும் கொண்டுவர வேண்டும். 22 அதோடு, இரண்டு காட்டுப் புறாக்களையோ இரண்டு புறாக் குஞ்சுகளையோ கொண்டுவர வேண்டும். ஒன்றைப் பாவப் பரிகார பலியாகவும் மற்றொன்றைத் தகன பலியாகவும்+ கொடுக்க வேண்டும். 23 எட்டாம் நாளில்+ தன்னுடைய சுத்திகரிப்புக்காக இவற்றைக் கொண்டுவந்து சந்திப்புக் கூடாரத்தின் பிரகார நுழைவாசலில் யெகோவாவின் முன்னிலையில் குருவானவரிடம் கொடுக்க வேண்டும்.+

24 குற்ற நிவாரண பலிக்கான செம்மறியாட்டுக் கடாக் குட்டியையும்+ சுமார் 300 மில்லி எண்ணெயையும் குருவானவர் எடுத்து, அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்ட வேண்டும்.+ 25 குற்ற நிவாரண பலிக்கான செம்மறியாட்டுக் கடாக் குட்டியை குருவானவர் வெட்ட வேண்டும். பின்பு, குற்ற நிவாரண பலியின் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து, சுத்திகரிக்கப்படுகிற நபரின் வலது காது மடலிலும் வலது கை கட்டைவிரலிலும் வலது கால் பெருவிரலிலும் பூச வேண்டும்.+ 26 அதோடு, தன்னுடைய இடது உள்ளங்கையில் கொஞ்சம் எண்ணெயை ஊற்றி,+ 27 தன்னுடைய வலது கைவிரலில் தொட்டு யெகோவாவின் முன்னிலையில் ஏழு தடவை தெளிக்க வேண்டும். 28 பின்பு, குருவானவர் தன்னுடைய உள்ளங்கையில் மீதியிருக்கும் எண்ணெயில் கொஞ்சத்தை எடுத்து, சுத்திகரிக்கப்படுபவரின் வலது காது மடலிலும் வலது கை கட்டைவிரலிலும் வலது கால் பெருவிரலிலும் பூச வேண்டும். அதாவது, ஏற்கெனவே பூசப்பட்ட குற்ற நிவாரண பலியின் இரத்தத்தின் மேல் பூச வேண்டும். 29 குருவானவர் தன்னுடைய உள்ளங்கையில் இன்னும் மீதியிருக்கும் எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுபவரின் தலையில் தடவி, யெகோவாவின் முன்னிலையில் அவனுக்காகப் பாவப் பரிகாரம் செய்ய வேண்டும்.

30 அவன் தன்னுடைய வசதியைப் பொறுத்து காட்டுப் புறாக்களையோ, புறாக் குஞ்சுகளையோ கொடுக்க வேண்டும்.+ 31 அவற்றில் ஒன்றைப் பாவப் பரிகார பலியாகவும் மற்றொன்றைத் தகன பலியாகவும் கொடுக்க வேண்டும்.+ அவற்றை உணவுக் காணிக்கையோடு சேர்த்துக் கொடுக்க வேண்டும். பின்பு, சுத்திகரிக்கப்படும் நபருக்காக யெகோவாவின் முன்னிலையில் குருவானவர் பாவப் பரிகாரம் செய்ய வேண்டும்.+

32 வசதியில்லாத ஒருவனுக்குத் தொழுநோய் பிடித்திருந்தால் அவன் தன்னைச் சுத்திகரிப்பதற்காகக் கடைப்பிடிக்க வேண்டிய சட்டங்கள் இவைதான்” என்றார்.

33 பின்பு யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும், 34 “நான் உங்களுக்குச் சொத்தாகத் தருகிற கானான் தேசத்துக்கு+ நீங்கள் போய்ச் சேர்ந்த பின்பு, நான் அங்குள்ள ஒரு வீட்டைத் தொழுநோய்* பிடிக்க விட்டுவிட்டால்,+ 35 அந்த வீட்டின் சொந்தக்காரன் குருவானவரிடம் வந்து, ‘என் வீட்டில் ஏதோவொரு தொற்று வந்திருக்கிறது’ என்று சொல்ல வேண்டும். 36 குருவானவர் அந்தத் தொற்றைப் பரிசோதிக்கப் போவதற்கு முன்பே, அந்த வீட்டிலுள்ள எல்லா பொருள்களையும் வெளியே எடுத்துவிடும்படி கட்டளை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அங்குள்ள எல்லா பொருள்களையும் தீட்டானதாக அறிவிக்க வேண்டியிருக்கும். அவை வெளியே எடுக்கப்பட்ட பின்பு அவர் போய் அந்த வீட்டைப் பரிசோதிக்க வேண்டும். 37 அந்த வீட்டின் சுவர்களை அவர் பார்வையிடும்போது தொற்று வந்திருக்கிற இடத்தில் மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலோ சிவப்பு நிறத்திலோ குழிகள் விழுந்திருந்தாலும், அது மற்ற பகுதிகளைவிட பள்ளமாகத் தெரிந்தாலும், 38 குருவானவர் அந்த வீட்டைவிட்டு வெளியே போய் அதை ஏழு நாட்களுக்கு அடைத்து வைக்க வேண்டும்.+

39 பின்பு, குருவானவர் ஏழாம் நாளில் மறுபடியும் வந்து அந்த வீட்டைப் பரிசோதிக்க வேண்டும். வீட்டின் சுவர்களில் அந்தத் தொற்று பரவியிருப்பதை அவர் பார்த்தால், 40 தொற்று பரவிய இடத்திலுள்ள கற்களைப் பெயர்த்து, அவற்றை நகரத்துக்கு வெளியே அசுத்தமான பொருள்களைக் கொட்டும் இடத்தில் எறிந்துவிடும்படி கட்டளை கொடுக்க வேண்டும். 41 பின்பு, அந்த வீட்டுக்குள் இருக்கிற சுவர்களின் காரையை முழுவதுமாகக் கொத்தியெடுக்கச் சொல்ல வேண்டும். கொத்தியெடுக்கப்பட்ட காரையை நகரத்துக்கு வெளியே அசுத்தமான பொருள்கள் கொட்டும் இடத்தில் எறிந்துவிடும்படி கட்டளை கொடுக்க வேண்டும். 42 பின்பு, பெயர்த்தெடுக்கப்பட்ட கற்களுக்குப் பதிலாக வேறு கற்களை வைத்துக் கட்டி, காரை பூசும்படி சொல்ல வேண்டும்.

43 அந்தக் கற்களைப் பெயர்த்துவிட்டு சுவரைக் கொத்திப் பூசிய பின்பும் தொற்று வந்திருந்தால், 44 குருவானவர் அந்த வீட்டுக்குள்ளே போய் அதைப் பரிசோதிக்க வேண்டும். அந்தத் தொற்று வீட்டில் பரவியிருந்தால், அது பயங்கரமான தொற்று.+ அந்த வீடு தீட்டானது. 45 அந்த வீட்டை முழுவதுமாக இடித்துப் போட்டு அதன் கற்களையும் பலகைகளையும் காரையையும் நகரத்துக்கு வெளியே அசுத்தமான பொருள்கள் கொட்டும் இடத்தில் எறியச் சொல்ல வேண்டும்.+ 46 அந்த வீடு அடைத்து வைக்கப்பட்டுள்ள நாட்களில்+ அதற்குள்ளே போகிறவன் சாயங்காலம்வரை தீட்டுப்பட்டிருப்பான்.+ 47 அந்த வீட்டில் படுத்திருந்தவனும் சாப்பிட்டவனும் தன் உடைகளைத் துவைக்க வேண்டும்.

48 ஆனால், அந்த வீட்டைக் கொத்திப் பூசிய பிறகு குருவானவர் வந்து பார்க்கும்போது தொற்று பரவியிருக்கவில்லை என்றால், அந்த வீடு தீட்டில்லாதது என்று அறிவிக்க வேண்டும். ஏனென்றால், அந்தத் தொற்று மறைந்துவிட்டது. 49 அந்த வீட்டைத் தீட்டிலிருந்து சுத்திகரிப்பதற்காக, இரண்டு பறவைகளையும் தேவதாரு மரக்கட்டையையும் கருஞ்சிவப்பு துணியையும் மருவுக்கொத்தையும் அவர் கொண்டுபோக வேண்டும்.+ 50 பின்பு, அந்தப் பறவைகளில் ஒன்றை ஊற்றுநீருள்ள ஒரு மண்பாத்திரத்தில் வைத்துக் கொல்ல வேண்டும். 51 தேவதாரு மரக்கட்டையையும் மருவுக்கொத்தையும் கருஞ்சிவப்பு துணியையும் உயிரோடிருக்கிற பறவையையும் எடுத்து, ஊற்றுநீரில் கொல்லப்பட்ட அந்தப் பறவையின் இரத்தத்தில் முக்கியெடுக்க வேண்டும். பின்பு, அந்த இரத்தத்தை அந்த வீட்டின் முன்னால் ஏழு தடவை அவர் தெளிக்க வேண்டும்.+ 52 கொல்லப்பட்ட பறவையின் இரத்தம், ஊற்றுநீர், உயிரோடிருக்கிற பறவை, தேவதாரு மரக்கட்டை, மருவுக்கொத்து, கருஞ்சிவப்பு துணி ஆகியவற்றால் அந்த வீட்டைத் தீட்டிலிருந்து அவர் தூய்மைப்படுத்த வேண்டும். 53 பின்பு, உயிரோடிருக்கிற பறவையை நகரத்துக்கு வெளியே வெட்டவெளியில் விட்டுவிட்டு அந்த வீட்டைச் சுத்திகரிக்க வேண்டும். அப்போது, அது தீட்டில்லாததாக இருக்கும்.

54 எல்லா விதமான தொழுநோயும், தலையிலோ தாடியிலோ வருகிற தொற்றும்,+ 55 உடை அல்லது வீட்டில் பிடிக்கிற தொழுநோயும்,+ 56 தோலில் வருகிற தடிப்புகளும், புண்களும்,* திட்டுகளும்+ 57 எப்போது தீட்டுள்ளவை, எப்போது தீட்டில்லாதவை என்பதைத் தீர்மானிப்பதற்கான+ சட்டங்கள் இவைதான். தொழுநோயைப் பற்றிய சட்டங்கள் இவைதான்”+ என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்