உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 11
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

எண்ணாகமம் முக்கியக் குறிப்புகள்

      • ஜனங்கள் முணுமுணுத்ததால் கடவுள் நெருப்பை அனுப்புகிறார் (1-3)

      • இறைச்சிக்காக ஜனங்கள் அழுது புலம்புகிறார்கள் (4-9)

      • தலைமைதாங்க தன்னால் முடியாதென்று மோசே நினைக்கிறார் (10-15)

      • பெரியோர்களான 70 பேருக்கு யெகோவா தன் சக்தியைக் கொடுக்கிறார் (16-25)

      • எல்தாதும் மேதாதும்; மோசேயிடம் யோசுவாவுக்கு இருக்கும் மதிப்பு (26-30)

      • காடைகள் அனுப்பப்படுகின்றன; ஜனங்களுடைய பேராசைக்குத் தண்டனை (31-35)

எண்ணாகமம் 11:2

இணைவசனங்கள்

  • +யாத் 32:11; உபா 9:19; சங் 106:23; யாக் 5:16

எண்ணாகமம் 11:3

அடிக்குறிப்புகள்

  • *

    அர்த்தம், “பற்றியெரிதல்.”

இணைவசனங்கள்

  • +உபா 9:22

எண்ணாகமம் 11:4

அடிக்குறிப்புகள்

  • *

    அநேகமாக, “இஸ்ரவேலர்கள் அல்லாத ஜனங்கள்.”

  • *

    வே.வா., “பேராசைப்பட்டார்கள்.”

இணைவசனங்கள்

  • +யாத் 12:37, 38; லேவி 24:10
  • +1கொ 10:6, 10
  • +சங் 78:18, 22; 106:14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/1/1995, பக். 15

எண்ணாகமம் 11:5

இணைவசனங்கள்

  • +யாத் 16:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    11/2020, பக். 25-26

    காவற்கோபுரம்,

    8/1/1992, பக். 24

எண்ணாகமம் 11:6

இணைவசனங்கள்

  • +யாத் 16:35; எண் 21:5

எண்ணாகமம் 11:7

அடிக்குறிப்புகள்

  • *

    சில மரங்களிலிருந்து கிடைக்கும் ஒருவித வாசனைப் பிசின். பார்ப்பதற்கு முத்துபோல் இருந்தது; ஒளி ஊடுருவக்கூடியதாக இருந்தது.

இணைவசனங்கள்

  • +யாத் 16:14; நெ 9:20; யோவா 6:31
  • +யாத் 16:31

எண்ணாகமம் 11:8

இணைவசனங்கள்

  • +யாத் 16:16, 23

எண்ணாகமம் 11:9

இணைவசனங்கள்

  • +சங் 78:24

எண்ணாகமம் 11:10

இணைவசனங்கள்

  • +எண் 11:1

எண்ணாகமம் 11:11

இணைவசனங்கள்

  • +யாத் 17:4; உபா 1:12

எண்ணாகமம் 11:12

இணைவசனங்கள்

  • +ஆதி 13:14, 15; 26:3

எண்ணாகமம் 11:14

இணைவசனங்கள்

  • +யாத் 18:17, 18; உபா 1:9

எண்ணாகமம் 11:15

இணைவசனங்கள்

  • +1ரா 19:2, 4; யோபு 6:8, 9

எண்ணாகமம் 11:16

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “மூப்பர்களிலும்.”

இணைவசனங்கள்

  • +உபா 16:18

எண்ணாகமம் 11:17

இணைவசனங்கள்

  • +யாத் 19:11; 25:22; 34:5; எண் 12:5
  • +எண் 11:25; 12:8
  • +1சா 10:6; 2ரா 2:15; நெ 9:20; அப் 2:17
  • +யாத் 18:21, 22

எண்ணாகமம் 11:18

இணைவசனங்கள்

  • +யாத் 19:10
  • +எண் 11:4, 5
  • +யாத் 16:7
  • +யாத் 16:8

எண்ணாகமம் 11:20

இணைவசனங்கள்

  • +சங் 78:29
  • +எண் 21:5

எண்ணாகமம் 11:21

இணைவசனங்கள்

  • +யாத் 12:37; 38:26; எண் 1:45, 46

எண்ணாகமம் 11:23

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “யெகோவாவின் கை ரொம்பச் சிறியது.”

இணைவசனங்கள்

  • +ஆதி 18:14; ஏசா 59:1; மாற் 10:27; லூ 1:37

எண்ணாகமம் 11:24

இணைவசனங்கள்

  • +எண் 11:16

எண்ணாகமம் 11:25

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “தீர்க்கதரிசனம் சொல்ல.”

இணைவசனங்கள்

  • +யாத் 33:9; எண் 12:5; உபா 31:15
  • +சங் 99:7
  • +எண் 11:17; 2ரா 2:9, 15
  • +1சா 10:6; 19:20

எண்ணாகமம் 11:28

இணைவசனங்கள்

  • +யாத் 17:9; 24:13; 33:11; எண் 27:18-20; உபா 31:3
  • +மாற் 9:38

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    1/2017, பக். 30

எண்ணாகமம் 11:29

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    1/2017, பக். 30

    காவற்கோபுரம்,

    8/1/2004, பக். 26

    9/15/1995, பக். 18

எண்ணாகமம் 11:31

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +யாத் 16:13; சங் 78:26, 27

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள்,

    8/2020, பக். 3-4

எண்ணாகமம் 11:32

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

எண்ணாகமம் 11:33

இணைவசனங்கள்

  • +சங் 78:30, 31; 1கொ 10:10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/1/1995, பக். 15

எண்ணாகமம் 11:34

அடிக்குறிப்புகள்

  • *

    அர்த்தம், “ஆலாய்ப் பறந்தவர்களின் கல்லறைகள்.”

இணைவசனங்கள்

  • +1கொ 10:6
  • +எண் 33:16; உபா 9:22

எண்ணாகமம் 11:35

இணைவசனங்கள்

  • +எண் 33:17

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

எண். 11:2யாத் 32:11; உபா 9:19; சங் 106:23; யாக் 5:16
எண். 11:3உபா 9:22
எண். 11:4யாத் 12:37, 38; லேவி 24:10
எண். 11:41கொ 10:6, 10
எண். 11:4சங் 78:18, 22; 106:14
எண். 11:5யாத் 16:3
எண். 11:6யாத் 16:35; எண் 21:5
எண். 11:7யாத் 16:14; நெ 9:20; யோவா 6:31
எண். 11:7யாத் 16:31
எண். 11:8யாத் 16:16, 23
எண். 11:9சங் 78:24
எண். 11:10எண் 11:1
எண். 11:11யாத் 17:4; உபா 1:12
எண். 11:12ஆதி 13:14, 15; 26:3
எண். 11:14யாத் 18:17, 18; உபா 1:9
எண். 11:151ரா 19:2, 4; யோபு 6:8, 9
எண். 11:16உபா 16:18
எண். 11:17யாத் 19:11; 25:22; 34:5; எண் 12:5
எண். 11:17எண் 11:25; 12:8
எண். 11:171சா 10:6; 2ரா 2:15; நெ 9:20; அப் 2:17
எண். 11:17யாத் 18:21, 22
எண். 11:18யாத் 19:10
எண். 11:18எண் 11:4, 5
எண். 11:18யாத் 16:7
எண். 11:18யாத் 16:8
எண். 11:20சங் 78:29
எண். 11:20எண் 21:5
எண். 11:21யாத் 12:37; 38:26; எண் 1:45, 46
எண். 11:23ஆதி 18:14; ஏசா 59:1; மாற் 10:27; லூ 1:37
எண். 11:24எண் 11:16
எண். 11:25யாத் 33:9; எண் 12:5; உபா 31:15
எண். 11:25சங் 99:7
எண். 11:25எண் 11:17; 2ரா 2:9, 15
எண். 11:251சா 10:6; 19:20
எண். 11:28யாத் 17:9; 24:13; 33:11; எண் 27:18-20; உபா 31:3
எண். 11:28மாற் 9:38
எண். 11:31யாத் 16:13; சங் 78:26, 27
எண். 11:33சங் 78:30, 31; 1கொ 10:10
எண். 11:341கொ 10:6
எண். 11:34எண் 33:16; உபா 9:22
எண். 11:35எண் 33:17
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
எண்ணாகமம் 11:1-35

எண்ணாகமம்

11 பின்பு, ஜனங்கள் யெகோவாவின் முன்னால் பயங்கரமாக முணுமுணுக்க ஆரம்பித்தார்கள். அதை யெகோவா கேட்டபோது, அவருக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது. உடனே, யெகோவாவிடமிருந்து நெருப்பு வந்து முகாமின் எல்லையிலிருந்த சிலர்மேல் பற்றியெரிந்தது. 2 அதனால், ஜனங்கள் மோசேயிடம் கதறினார்கள். உடனே அவர் யெகோவாவிடம் மன்றாடினார்,+ அப்போது நெருப்பு அணைந்தது. 3 யெகோவாவிடமிருந்து வந்த நெருப்பு அவர்கள்மேல் பற்றியெரிந்ததால் அந்த இடத்துக்கு தபேரா* என்று பெயர் வைக்கப்பட்டது.+

4 அவர்களோடு இருந்த பலதரப்பட்ட ஜனங்கள்*+ உணவுக்காக ஆலாய்ப் பறந்தார்கள்.*+ இஸ்ரவேலர்கள்கூட மறுபடியும் அழுது புலம்பி, “யார் நமக்கு இறைச்சி தருவார்கள்?+ 5 எகிப்தில் காசே கொடுக்காமல் மீன், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, வெங்காயம், வெள்ளைப்பூண்டு எல்லாம் சாப்பிட்டோமே! அதை நினைத்தாலே வாய் ஊறுகிறது.+ 6 ஆனால், இப்போது ஒன்றுமே கிடைக்காமல் காய்ந்து கிடக்கிறோம். இந்த மன்னாவைத் தவிர வேறொன்றுமே நம் கண்ணில் படுவதில்லை”+ என்றார்கள்.

7 அந்த மன்னா,+ பார்ப்பதற்குக் கொத்துமல்லி விதை போலவும்,+ வெள்ளைப் பிசின்* போலவும் இருந்தது. 8 ஜனங்கள் போய் அதை எடுத்துக்கொண்டு வந்து, திரிகைக் கல்லில் அரைத்தார்கள் அல்லது உரலில் இடித்தார்கள். பின்பு, பானைகளில் வேக வைத்தார்கள் அல்லது வட்ட ரொட்டிகளாகச் சுட்டார்கள்.+ அதன் ருசி, எண்ணெய் கலந்து சுடப்பட்ட இனிப்பான அப்பத்தின் ருசி போல இருந்தது. 9 ராத்திரி நேரம் முகாமில் பனி விழுந்தபோது அதன்மேல் மன்னாவும் விழுந்தது.+

10 ஜனங்கள் ஒவ்வொருவரும், குடும்பம் குடும்பமாக, அவரவருடைய கூடாரத்தின் வாசலில் அழுது புலம்புவதை மோசே கேட்டார். அதனால், அவர்கள்மேல் யெகோவா மிகவும் கோபப்பட்டார்,+ மோசேயும் எரிச்சல் அடைந்தார். 11 பின்பு மோசே யெகோவாவிடம், “உங்கள் ஊழியனாகிய என்னை ஏன் கஷ்டப்படுத்துகிறீர்கள்? உங்களுக்கு என்மேல் கருணையே இல்லையா? இந்த எல்லா ஜனங்களையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை என்மேல் சுமத்திவிட்டீர்களே.+ 12 இவர்களுடைய முன்னோர்களுக்கு நீங்கள் கொடுப்பதாகச் சொன்ன தேசத்துக்கு+ இவர்களைக் கூட்டிக்கொண்டு போகச் சொன்னீர்களே. இந்த ஜனங்களையெல்லாம் நானா வயிற்றில் சுமந்தேன்? நானா இவர்களைப் பெற்றெடுத்தேன்? பின்பு ஏன் என்னிடம், ‘பால்குடிக்கும் குழந்தையைப் பணியாளன் சுமப்பதுபோல் நீ இவர்களை நெஞ்சில் சுமந்துகொண்டு போ’ என்று சொன்னீர்கள்? 13 இவர்கள் எல்லாருக்கும் நான் எங்கிருந்து இறைச்சியைக் கொண்டுவந்து கொடுப்பேன்? ‘எங்களுக்கு இறைச்சி வேண்டும்!’ என்று என்னிடம் புலம்பிக்கொண்டே இருக்கிறார்களே! 14 இந்த எல்லா ஜனங்களையும் என்னால் தனியாகச் சமாளிக்க முடியவில்லை. எனக்குப் போதும் போதுமென்று ஆகிவிட்டது!+ 15 இப்படியே என்னைக் கஷ்டப்படுத்துவதாக இருந்தால், தயவுசெய்து இப்போதே என்னைக் கொன்றுவிடுங்கள்.+ என்மேல் உங்களுக்குப் பிரியம் இருந்தால், இனியும் என்னை வேதனைப்படுத்தாதீர்கள்” என்றார்.

16 அதற்கு யெகோவா மோசேயிடம், “இஸ்ரவேலில் உனக்குத் தெரிந்த பெரியோர்களிலும்* அதிகாரிகளிலும்+ 70 பேரை சந்திப்புக் கூடாரத்துக்குக் கூட்டிக்கொண்டு வா. அங்கே அவர்களை உன்னோடு நிறுத்து. 17 அப்போது, நான் இறங்கி வந்து+ உன்னோடு பேசுவேன்.+ நான் உனக்குக் கொடுத்திருக்கிற சக்தியில்+ கொஞ்சத்தை எடுத்து அவர்கள்மேல் வைப்பேன். ஜனங்களைக் கவனித்துக்கொள்ள அவர்கள் உனக்கு உதவியாக இருப்பார்கள். ஜனங்கள் எல்லாரையும் இனி நீ தனியாகச் சமாளிக்க வேண்டியதில்லை.+ 18 நீ அவர்களிடம், ‘நாளைக்காக உங்களைப் புனிதப்படுத்துங்கள்.+ நாளைக்கு நீங்கள் நிச்சயம் இறைச்சி சாப்பிடுவீர்கள். “யார் எங்களுக்கு இறைச்சி தருவார்கள்? எகிப்திலே நாங்கள் நன்றாக இருந்தோமே”+ என்றெல்லாம் நீங்கள் அழுது புலம்பியதை யெகோவா கேட்டார்.+ யெகோவா உங்களுக்குக் கண்டிப்பாக இறைச்சி தருவார், அதை நீங்கள் சாப்பிடுவீர்கள்.+ 19 ஒரு நாளோ, இரண்டு நாளோ, ஐந்து நாளோ, பத்து நாளோ, இருபது நாளோ அல்ல, 20 ஒரு மாதம் முழுவதும் சாப்பிடுவீர்கள். அது உங்கள் மூக்கு வழியாகப் பிதுங்கிக்கொண்டு வந்து, உங்களுக்கே அருவருப்பாக ஆகும்வரை அதைச் சாப்பிடுவீர்கள்.+ உங்கள் நடுவிலிருக்கும் யெகோவாவை நீங்கள் ஒதுக்கித்தள்ளிவிட்டு, “ஏன்தான் எகிப்திலிருந்து வந்தோமோ?” என்று சொல்லி அவர் முன்னால் புலம்பினீர்களே’+ என்று சொல்ல வேண்டும்” என்றார்.

21 பின்பு மோசே கடவுளிடம், “என்னோடு இருக்கிற வீரர்கள் மட்டுமே 6,00,000 பேர்.+ அப்படியிருக்கும்போது, ‘ஒரு மாதம் முழுவதும் சாப்பிடுவதற்குத் தேவையான இறைச்சியை நான் அவர்களுக்குத் தருவேன்’ என்று சொல்கிறீர்களே. 22 மந்தைகளிலுள்ள எல்லா ஆடுமாடுகளையும் வெட்டினால்கூட அவர்களுக்குப் போதாதே! கடலிலுள்ள எல்லா மீன்களையும் பிடித்து வந்தால்கூட போதாதே!” என்றார்.

23 அதற்கு யெகோவா மோசேயிடம், “யெகோவாவினால் இதைச் செய்ய முடியாது* என்றா நினைக்கிறாய்?+ நான் சொன்னது நடக்குமா இல்லையா என்பதை நீயே இப்போது பார்ப்பாய்” என்றார்.

24 அதன்பின் மோசே அங்கிருந்து போய் யெகோவா சொன்னதை ஜனங்களிடம் சொன்னார். பெரியோர்களில் 70 பேரைக் கூப்பிட்டு, வழிபாட்டுக் கூடாரத்தைச் சுற்றிலும் நிறுத்தினார்.+ 25 பின்பு, யெகோவா மேகத்தில் இறங்கிவந்து+ அவரிடம் பேசினார்.+ அவருக்குக் கொடுத்திருந்த சக்தியில் கொஞ்சத்தை எடுத்து+ அந்தப் பெரியோர்கள் 70 பேர்மேலும் வைத்தார். அந்தச் சக்தி கிடைத்ததும் அவர்கள் தீர்க்கதரிசிகளைப் போல நடந்துகொள்ள* ஆரம்பித்தார்கள்.+ ஆனால், அதன்பின் அவர்கள் அப்படிச் செய்யவில்லை.

26 பெரியோர்களில் இரண்டு பேர் முகாமிலேயே இருந்துவிட்டார்கள். அவர்களில் ஒருவர் பெயர் எல்தாத், மற்றொருவர் பெயர் மேதாத். அவர்களுடைய பெயர்கள் பட்டியலில் எழுதப்பட்டிருந்தும் அவர்கள் வழிபாட்டுக் கூடாரத்துக்குப் போகவில்லை. அவர்கள்மேலும் கடவுளுடைய சக்தி இறங்கியதால் முகாமிலேயே தீர்க்கதரிசிகளைப் போல நடந்துகொள்ள ஆரம்பித்தார்கள். 27 பின்பு, ஓர் இளைஞன் மோசேயிடம் ஓடிவந்து, “முகாமில் எல்தாதும் மேதாதும் தீர்க்கதரிசிகளைப் போல நடந்துகொள்கிறார்கள்” என்று சொன்னான். 28 இளவயதிலிருந்தே மோசேயின் உதவியாளராக இருந்த நூனின் மகனாகிய யோசுவா+ அவரிடம், “மோசே அவர்களே, என் எஜமானே! அவர்களைத் தடுத்து நிறுத்துங்கள்!”+ என்றார். 29 ஆனால் மோசே, “இப்போது என்னுடைய மதிப்புக் குறைந்துவிடும் என்று பயப்படுகிறாயா? யெகோவாவின் ஜனங்கள் எல்லாருமே யெகோவாவின் சக்தியைப் பெற்று தீர்க்கதரிசிகளாய் ஆக வேண்டும் என்றுதான் நான் ஆசைப்படுகிறேன்” என்றார். 30 பிற்பாடு, மோசே இஸ்ரவேலின் பெரியோர்களோடு முகாமுக்குத் திரும்பி வந்தார்.

31 பின்பு, யெகோவா பெருங்காற்றை வீச வைத்தார். அந்தக் காற்று கடலிலிருந்து காடைகளை அடித்துக்கொண்டு வந்தது.+ அவை ஒருநாள் பயணத் தூரத்தின் அளவுக்கு முகாமின் எல்லா பக்கங்களிலும் வந்து, தரைக்கு மேலே சுமார் இரண்டு முழ* உயரத்துக்குக் குவிந்தன. 32 அதனால், ஜனங்கள் அன்று ராத்திரி பகலாகவும், அடுத்த நாள் முழுவதும் காடைகளைச் சேகரித்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் சேகரித்த காடைகள் 10 ஹோமர் அளவுக்கும்* அதிகமாக இருந்தது. பின்பு, முகாம் முழுக்க அவற்றைப் பரப்பி வைத்தார்கள். 33 ஆனால், அவர்கள் அந்த இறைச்சியைத் தின்றுதீர்ப்பதற்கு முன்பே, அதை மென்றுகொண்டிருக்கும்போதே, யெகோவாவின் கோபம் அவர்கள்மேல் பற்றியெரிந்தது. அவர்களில் ஏராளமானவர்களை யெகோவா கொன்று குவித்தார்.+

34 உணவுக்காக ஆலாய்ப் பறந்தவர்கள் அங்கே அடக்கம் செய்யப்பட்டார்கள்.+ அதனால், அந்த இடத்துக்கு கிப்ரோத்-அத்தாவா*+ என்று பெயர் வைக்கப்பட்டது. 35 பின்பு, ஜனங்கள் அங்கிருந்து புறப்பட்டு ஆஸ்ரோத்துக்குப் போய் அங்கே தங்கினார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்