உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 21
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

எண்ணாகமம் முக்கியக் குறிப்புகள்

      • ஆராத்தின் ராஜா தோற்கடிக்கப்படுகிறான் (1-3)

      • செம்பினால் செய்யப்பட்ட பாம்பு (4-9)

      • மோவாபைச் சுற்றி இஸ்ரவேலர்கள் முகாம்போடுகிறார்கள் (10-20)

      • எமோரியர்களின் ராஜா சீகோன் தோற்கடிக்கப்படுகிறான் (21-30)

      • எமோரியர்களின் ராஜா ஓக் தோற்கடிக்கப்படுகிறான் (31-35)

எண்ணாகமம் 21:1

இணைவசனங்கள்

  • +எண் 33:40; யோசு 12:7, 14

எண்ணாகமம் 21:3

அடிக்குறிப்புகள்

  • *

    அர்த்தம், “அடியோடு அழித்தல்.”

இணைவசனங்கள்

  • +எண் 14:45

எண்ணாகமம் 21:4

இணைவசனங்கள்

  • +எண் 33:41
  • +எண் 20:21; உபா 2:8; நியா 11:18

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/1/1995, பக். 17

எண்ணாகமம் 21:5

இணைவசனங்கள்

  • +யாத் 14:11; 15:24; எண் 16:13
  • +எண் 20:5
  • +யாத் 16:15; எண் 11:6; சங் 78:24, 25

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    8/15/1999, பக். 26-27

    “வேதாகமம் முழுவதும்”, பக். 35

எண்ணாகமம் 21:6

இணைவசனங்கள்

  • +1கொ 10:6, 9

எண்ணாகமம் 21:7

இணைவசனங்கள்

  • +சங் 78:34
  • +யாத் 32:11

எண்ணாகமம் 21:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    “வேதாகமம் முழுவதும்”, பக். 35

எண்ணாகமம் 21:9

இணைவசனங்கள்

  • +2ரா 18:1, 4
  • +யோவா 3:14, 15
  • +யோவா 6:40

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    8/8/1989, பக். 24-25

எண்ணாகமம் 21:10

இணைவசனங்கள்

  • +எண் 33:43

எண்ணாகமம் 21:11

இணைவசனங்கள்

  • +எண் 33:44

எண்ணாகமம் 21:12

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கின்.”

இணைவசனங்கள்

  • +உபா 2:13

எண்ணாகமம் 21:13

இணைவசனங்கள்

  • +எண் 22:36; நியா 11:18

எண்ணாகமம் 21:14

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்குகள்.”

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    நெருங்கி வாருங்கள், பக். 64

    காவற்கோபுரம்,

    3/15/2009, பக். 32

    8/1/2004, பக். 26

எண்ணாகமம் 21:19

இணைவசனங்கள்

  • +யோசு 13:15, 17

எண்ணாகமம் 21:20

அடிக்குறிப்புகள்

  • *

    அல்லது, “வனாந்தரத்தை.”

இணைவசனங்கள்

  • +எண் 33:49
  • +எண் 23:28
  • +உபா 3:27; 34:1

எண்ணாகமம் 21:21

இணைவசனங்கள்

  • +உபா 2:26-28

எண்ணாகமம் 21:22

இணைவசனங்கள்

  • +எண் 20:14, 17

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    நல்ல தேசம், பக். 8-9

எண்ணாகமம் 21:23

இணைவசனங்கள்

  • +உபா 2:30-35; 29:7; நியா 11:19, 20

எண்ணாகமம் 21:24

இணைவசனங்கள்

  • +சங் 135:10, 11
  • +எண் 21:13; உபா 3:16
  • +நியா 11:21, 22
  • +எண் 32:33; நெ 9:22
  • +எண் 32:1; 1நா 6:77, 81
  • +யோசு 12:1, 2

எண்ணாகமம் 21:25

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா, “அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும்.”

இணைவசனங்கள்

  • +ஆதி 10:15, 16; 15:16; யாத் 3:8; உபா 7:1

எண்ணாகமம் 21:29

இணைவசனங்கள்

  • +நியா 11:23, 24; 1ரா 11:7; 2ரா 23:13

எண்ணாகமம் 21:30

இணைவசனங்கள்

  • +யோசு 13:15, 17
  • +யோசு 13:8, 9

எண்ணாகமம் 21:32

இணைவசனங்கள்

  • +எண் 32:1

எண்ணாகமம் 21:33

இணைவசனங்கள்

  • +உபா 3:11; 4:47; யோசு 13:8, 12
  • +உபா 3:1, 8, 10

எண்ணாகமம் 21:34

இணைவசனங்கள்

  • +உபா 20:3
  • +யாத் 23:27; உபா 7:24
  • +உபா 3:2; சங் 135:10, 11

எண்ணாகமம் 21:35

இணைவசனங்கள்

  • +உபா 3:3
  • +யோசு 12:4-6

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

எண். 21:1எண் 33:40; யோசு 12:7, 14
எண். 21:3எண் 14:45
எண். 21:4எண் 33:41
எண். 21:4எண் 20:21; உபா 2:8; நியா 11:18
எண். 21:5யாத் 14:11; 15:24; எண் 16:13
எண். 21:5எண் 20:5
எண். 21:5யாத் 16:15; எண் 11:6; சங் 78:24, 25
எண். 21:61கொ 10:6, 9
எண். 21:7சங் 78:34
எண். 21:7யாத் 32:11
எண். 21:92ரா 18:1, 4
எண். 21:9யோவா 3:14, 15
எண். 21:9யோவா 6:40
எண். 21:10எண் 33:43
எண். 21:11எண் 33:44
எண். 21:12உபா 2:13
எண். 21:13எண் 22:36; நியா 11:18
எண். 21:19யோசு 13:15, 17
எண். 21:20எண் 33:49
எண். 21:20எண் 23:28
எண். 21:20உபா 3:27; 34:1
எண். 21:21உபா 2:26-28
எண். 21:22எண் 20:14, 17
எண். 21:23உபா 2:30-35; 29:7; நியா 11:19, 20
எண். 21:24சங் 135:10, 11
எண். 21:24எண் 21:13; உபா 3:16
எண். 21:24நியா 11:21, 22
எண். 21:24எண் 32:33; நெ 9:22
எண். 21:24எண் 32:1; 1நா 6:77, 81
எண். 21:24யோசு 12:1, 2
எண். 21:25ஆதி 10:15, 16; 15:16; யாத் 3:8; உபா 7:1
எண். 21:29நியா 11:23, 24; 1ரா 11:7; 2ரா 23:13
எண். 21:30யோசு 13:15, 17
எண். 21:30யோசு 13:8, 9
எண். 21:32எண் 32:1
எண். 21:33உபா 3:11; 4:47; யோசு 13:8, 12
எண். 21:33உபா 3:1, 8, 10
எண். 21:34உபா 20:3
எண். 21:34யாத் 23:27; உபா 7:24
எண். 21:34உபா 3:2; சங் 135:10, 11
எண். 21:35உபா 3:3
எண். 21:35யோசு 12:4-6
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
எண்ணாகமம் 21:1-35

எண்ணாகமம்

21 கானானைச் சேர்ந்த ஆராத் நகரத்தின் ராஜா,+ நெகேபில் வாழ்ந்துவந்தான். அத்தாரிம் வழியாக இஸ்ரவேலர்கள் வருவதை அவன் கேள்விப்பட்டபோது, உடனே போய் அவர்களைத் தாக்கினான். அவர்களில் சிலரைப் பிடித்துக்கொண்டு போனான். 2 அதனால் இஸ்ரவேலர்கள் யெகோவாவிடம், “இந்த எதிரிகளை நீங்கள் எங்கள் கையில் கொடுத்தால், அவர்களுடைய நகரங்களை நாங்கள் நிச்சயம் அழிப்போம்” என்று சொல்லி நேர்ந்துகொண்டார்கள். 3 இஸ்ரவேலர்கள் நேர்ந்துகொண்டதை யெகோவா கேட்டு, கானானியர்களை அவர்கள் கையில் கொடுத்தார். அவர்கள் அந்த கானானியர்களையும் அவர்களுடைய நகரங்களையும் அடியோடு அழித்தார்கள். அதனால் அந்த இடத்துக்கு ஓர்மா*+ என்று பெயர் வைத்தார்கள்.

4 பின்பு, அவர்கள் ஓர் என்ற மலையிலிருந்து+ செங்கடலுக்குப் போகும் வழியாகத் தொடர்ந்து பயணம் செய்தார்கள். இப்படி, ஏதோம் தேசத்தைச் சுற்றிப் பயணம் செய்ததால்+ சோர்ந்துபோனார்கள். 5 அதனால், கடவுளுக்கும் மோசேக்கும் எதிராக அவர்கள் முணுமுணுத்துக்கொண்டே இருந்தார்கள்.+ “எங்களைச் சாகடிக்கவா எகிப்திலிருந்து இந்த வனாந்தரத்துக்குக் கொண்டுவந்தீர்கள்? இங்கே உணவும் இல்லை, தண்ணீரும் இல்லை.+ இந்தப் பாழாய்ப்போன மன்னாவைப் பார்த்தாலே வெறுப்பாக இருக்கிறது”+ என்றார்கள். 6 அதனால், அவர்களுக்கு நடுவே விஷப்பாம்புகளை யெகோவா அனுப்பினார். அந்தப் பாம்புகள் கடித்ததால் இஸ்ரவேலர்களில் ஏராளமானவர்கள் செத்துப்போனார்கள்.+

7 அதனால் ஜனங்கள் மோசேயிடம் வந்து, “நாங்கள் பாவம் செய்துவிட்டோம், யெகோவாவுக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பேசிவிட்டோம்.+ இந்தப் பாம்புகளை விரட்டச் சொல்லி எங்களுக்காக யெகோவாவிடம் கெஞ்சுங்கள்” என்று சொன்னார்கள். மோசே ஜனங்களுக்காகக் கடவுளிடம் கெஞ்சினார்.+ 8 அப்போது யெகோவா மோசேயிடம், “விஷப்பாம்பின் உருவத்தைச் செய்து ஒரு கம்பத்தில் மாட்டி வை. பாம்பு கடித்தவர்கள் அதைப் பார்த்தால் உயிர்பிழைப்பார்கள்” என்றார். 9 உடனடியாக மோசே செம்பினால் ஒரு பாம்பைச் செய்து+ அதைக் கம்பத்தில் மாட்டி வைத்தார்.+ பாம்பு கடித்தவர்கள் அந்தச் செம்புப் பாம்பைப் பார்த்தபோது உயிர்பிழைத்தார்கள்.+

10 அதன்பின் இஸ்ரவேலர்கள் புறப்பட்டுப் போய் ஓபோத்தில் முகாம்போட்டார்கள்.+ 11 பின்பு ஓபோத்திலிருந்து புறப்பட்டுப் போய், மோவாபுக்கு எதிரில் கிழக்குப் பக்கமாக இருக்கிற வனாந்தரத்திலே, இய்யா-அபாரீமில் முகாம்போட்டார்கள்.+ 12 அடுத்ததாக, அங்கிருந்து போய் சேரெத் பள்ளத்தாக்கின்*+ பக்கத்தில் முகாம்போட்டார்கள். 13 பின்பு அங்கிருந்து போய், எமோரியர்களின் எல்லையிலிருந்து தொடங்கும் வனாந்தரத்திலுள்ள அர்னோன் பிரதேசத்தில்+ முகாம்போட்டார்கள். அந்த அர்னோன் மோவாபுக்கும் எமோரியர்களின் தேசத்துக்கும் இடையில் இருக்கிற மோவாபின் எல்லை. 14 அதனால்தான், யெகோவாவின் போர்கள் என்ற புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “சூப்பாவிலுள்ள வாகேப், அர்னோனின் பள்ளத்தாக்குகள்,* 15 அவற்றில் ஓடுகிற கிளை ஆறுகள். இவை ஆர் நகரம்வரை போய் மோவாபின் எல்லையைத் தொடுகின்றன.”

16 அடுத்ததாக, அவர்கள் பேயேர் என்ற இடத்துக்கு வந்துசேர்ந்தார்கள். அங்கிருந்த கிணற்றைப் பற்றித்தான் யெகோவா மோசேயிடம், “ஜனங்களை ஒன்றுகூடிவரச் சொல், நான் அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன்” என்று சொன்னார்.

17 அந்தச் சமயத்தில் இஸ்ரவேலர்கள்,

“கிணறே, நீ ஊற்றெடு! ஜனங்களே, பாடுங்கள்!

18 அதிகாரக்கோலைப் பிடித்துக்கொண்டு அதிபதிகள் தோண்டிய கிணறு நீதானே!

கோலை எடுத்துக்கொண்டு தலைவர்கள் வெட்டிய கிணறு நீதானே!” என்று பாடினார்கள்.

பின்பு, வனாந்தரத்தைவிட்டு மாத்தனா என்ற இடத்துக்குப் போனார்கள். 19 அதன்பின், மாத்தனாவிலிருந்து நகாலியேலுக்கும் நகாலியேலிலிருந்து பாமோத்துக்கும்+ போனார்கள். 20 பாமோத்திலிருந்து மோவாப் தேசத்திலுள்ள+ பள்ளத்தாக்குக்குப் போனார்கள். அது எஷிமோனை* பார்த்தபடி+ பிஸ்காவின் உச்சியில்+ இருக்கிறது.

21 இஸ்ரவேலர்கள் எமோரியர்களின் ராஜாவான சீகோனிடம் ஆட்களை அனுப்பி,+ 22 “உங்கள் தேசத்தின் வழியாகப் போக எங்களுக்கு அனுமதி கொடுங்கள். அங்குள்ள எந்த வயலிலும் திராட்சைத் தோட்டத்திலும் நாங்கள் கால்வைக்க மாட்டோம். எந்தக் கிணற்றிலிருந்தும் தண்ணீர் குடிக்க மாட்டோம். நேராக ராஜ பாதையில் நடந்து உங்கள் தேசத்தைக் கடந்துபோவோம்”+ என்று சொன்னார்கள். 23 ஆனால், சீகோன் தன்னுடைய தேசத்தின் வழியாகப் போக இஸ்ரவேலர்களை அனுமதிக்கவில்லை. அவன் தன்னுடைய ஆட்கள் எல்லாரையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேலர்களுக்கு எதிராக வனாந்தரத்திலே போர் செய்யக் கிளம்பினான். அவன் யாகாசுக்குப் போய், அங்கே இஸ்ரவேலர்களோடு போர் செய்தான்.+ 24 ஆனால், இஸ்ரவேலர்கள் அவனை வாளால் வீழ்த்தி,+ அர்னோனிலிருந்து+ யாபோக் வரையுள்ள+ அவன் தேசத்தைக் கைப்பற்றினார்கள்.+ யாபோக் அம்மோனியர்களின் தேசத்துக்குப் பக்கத்தில் இருந்தது. ஆனால், யாசேர்+ அம்மோனியர்களின் எல்லையாக இருந்ததால்+ அதைத் தாண்டி அவர்கள் போகவில்லை.

25 எமோரியர்களின் இந்த எல்லா நகரங்களையும் இஸ்ரவேலர்கள் கைப்பற்றி அவற்றில் குடியிருக்க ஆரம்பித்தார்கள்.+ அவர்கள் எஸ்போனிலும் அதன் சிற்றூர்களிலும்* வாழத் தொடங்கினார்கள். 26 இந்த எஸ்போன், எமோரியர்களின் ராஜாவான சீகோனின் நகரம். சீகோன், மோவாபின் ராஜாவுடன் போர் செய்து, அர்னோன்வரை அவனுடைய தேசத்தைக் கைப்பற்றியிருந்தான். 27 இதனால்தான் இப்படிக் கேலியாகச் சொல்வது ஜனங்களிடையே வழக்கமானது:

“எஸ்போனுக்கு வாருங்கள்.

சீகோனின் நகரத்தைக் கட்டுங்கள், அதை எடுத்து நிறுத்துங்கள்.

28 எஸ்போனிலிருந்து நெருப்பு வந்தது, சீகோனின் நகரிலிருந்து தீப்பொறி பறந்தது.

அது மோவாபின் ஆர் நகரைச் சுட்டெரித்தது, அர்னோன் மேடுகளின் அதிபதிகளைப் பொசுக்கியது.

29 மோவாபே, உனக்குக் கேடுதான் வரும்! கேமோஷ் பக்தர்களே,+ உங்களுக்கு அழிவுதான் வரும்!

கேமோஷ் தன் பக்தர்களை அகதிகளாக்கிவிட்டான்! பக்தைகளை எமோரிய ராஜா சீகோனிடம் பிடித்துக் கொடுத்துவிட்டான்!

30 அவர்கள்மேல் அம்பு எறிவோம்.

எஸ்போன் நகரம் தீபோன்வரை+ தரைமட்டமாகும்.

அதை நோப்பாவரை நாம் பாழாக்குவோம்.

மேதேபா+ வரையில் தீ பரவும்.”

31 இப்படி, இஸ்ரவேலர்கள் எமோரியர்களின் தேசத்தில் குடியிருக்க ஆரம்பித்தார்கள். 32 பின்பு, யாசேர் நகரத்தை+ உளவு பார்க்க சில ஆட்களை மோசே அனுப்பினார். இஸ்ரவேலர்கள் அதன் சிற்றூர்களைக் கைப்பற்றி, அங்கிருந்த எமோரியர்களைத் துரத்தியடித்தார்கள். 33 அதன்பின் அவர்கள் அங்கிருந்து திரும்பி, பாசானுக்குப் போகும் சாலை வழியாகப் போனார்கள். அப்போது, அவர்களோடு போர் செய்வதற்காக பாசானின் ராஜாவாகிய ஓக்+ தன்னுடைய ஆட்கள் எல்லாரையும் கூட்டிக்கொண்டு எத்ரேய்க்கு வந்தான்.+ 34 அப்போது யெகோவா மோசேயிடம், “அவனைப் பார்த்துப் பயப்படாதே.+ அவனையும் அவனுடைய ஆட்கள் எல்லாரையும் அவனுடைய தேசத்தையும் நான் உன்னுடைய கையில் கொடுப்பேன்.+ எஸ்போனில் வாழ்ந்துவந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்குச் செய்தது போலவே அவனுக்கும் நீ செய்வாய்”+ என்று சொன்னார். 35 அவர் சொன்னபடியே, இஸ்ரவேலர்கள் அவனையும் அவனுடைய மகன்களையும் அவனுடைய ஆட்கள் எல்லாரையும் ஒருவர்விடாமல் வெட்டி வீழ்த்தினார்கள்.+ அதன்பின், அவர்கள் அந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்