உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 26
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

லேவியராகமம் முக்கியக் குறிப்புகள்

      • சிலைகளை வணங்கக் கூடாது (1, 2)

      • கீழ்ப்படிவதால் வரும் ஆசீர்வாதங்கள் (3-13)

      • கீழ்ப்படியாவிட்டால் வரும் தண்டனைகள் (14-46)

லேவியராகமம் 26:1

இணைவசனங்கள்

  • +யாத் 20:4; லேவி 19:4; அப் 17:29; 1கொ 8:4
  • +உபா 5:8
  • +எண் 33:52
  • +தானி 3:18; 1கொ 10:14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 19

லேவியராகமம் 26:2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 1/2021, பக். 6

லேவியராகமம் 26:3

இணைவசனங்கள்

  • +உபா 11:13-15; பிர 12:13

லேவியராகமம் 26:4

இணைவசனங்கள்

  • +உபா 28:12; ஏசா 30:23; எசே 34:26; யோவே 2:23
  • +சங் 67:6; 85:12

லேவியராகமம் 26:5

இணைவசனங்கள்

  • +லேவி 25:18

லேவியராகமம் 26:6

இணைவசனங்கள்

  • +1நா 22:9; சங் 29:11; ஆகா 2:9
  • +மீ 4:4

லேவியராகமம் 26:8

இணைவசனங்கள்

  • +உபா 28:7; யோசு 23:10; நியா 7:15, 16; 15:15, 16; 1நா 11:20

லேவியராகமம் 26:9

இணைவசனங்கள்

  • +உபா 28:4
  • +யாத் 6:4

லேவியராகமம் 26:11

இணைவசனங்கள்

  • +யாத் 25:8; எசே 37:26; வெளி 21:3

லேவியராகமம் 26:12

இணைவசனங்கள்

  • +உபா 23:14
  • +யாத் 6:7; 2கொ 6:16

லேவியராகமம் 26:14

இணைவசனங்கள்

  • +உபா 28:15

லேவியராகமம் 26:15

இணைவசனங்கள்

  • +2ரா 17:15
  • +யாத் 24:7; உபா 31:16; எபி 8:9

லேவியராகமம் 26:16

இணைவசனங்கள்

  • +உபா 28:22, 33; நியா 6:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 1/2021, பக். 7

லேவியராகமம் 26:17

இணைவசனங்கள்

  • +உபா 28:15, 25; நியா 2:14; 1சா 4:10
  • +சங் 106:41; புல 1:5
  • +லேவி 26:36

லேவியராகமம் 26:19

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “வானம் மழை பொழியாதபடி செய்வேன்.”

  • *

    அதாவது, “பூமி வறண்டுபோகும்படி செய்வேன்.”

இணைவசனங்கள்

  • +உபா 11:17; 1ரா 17:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/2004, பக். 24

லேவியராகமம் 26:20

இணைவசனங்கள்

  • +எரே 12:13; ஆகா 1:6, 10

லேவியராகமம் 26:22

இணைவசனங்கள்

  • +உபா 32:24; எரே 15:3
  • +எசே 5:17
  • +நியா 5:6; ஏசா 33:8; சக 7:14

லேவியராகமம் 26:23

இணைவசனங்கள்

  • +ஏசா 1:16; எரே 2:30; 5:3

லேவியராகமம் 26:25

இணைவசனங்கள்

  • +யாத் 24:7
  • +உபா 28:21; எரே 24:10; ஆமோ 4:10
  • +நியா 2:14; 1சா 4:10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 1/2021, பக். 7

லேவியராகமம் 26:26

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “ரொட்டிக் கோல்களை முறித்துப்போடுவேன்.” இவை ஒருவேளை ரொட்டிகளை மாட்டி வைக்கப் பயன்படுத்தப்பட்ட கோல்களாக இருந்திருக்கலாம்.

இணைவசனங்கள்

  • +எசே 5:16
  • +எசே 4:16
  • +ஏசா 9:20; மீ 6:14; ஆகா 1:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/2004, பக். 24

லேவியராகமம் 26:28

இணைவசனங்கள்

  • +எரே 21:5

லேவியராகமம் 26:29

இணைவசனங்கள்

  • +உபா 28:53; 2ரா 6:29; எரே 19:9; புல 4:10; எசே 5:10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    “வேதாகமம் முழுவதும்”, பக். 26

லேவியராகமம் 26:30

அடிக்குறிப்புகள்

  • *

    இதற்கான எபிரெய வார்த்தை “சாணம்” என்ற வார்த்தையோடு தொடர்புடையதாக இருக்கலாம். வெறுப்பைக் காட்டுவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது.

இணைவசனங்கள்

  • +2நா 34:3; ஏசா 27:9
  • +1ரா 13:2; 2ரா 23:8, 20; எசே 6:5
  • +சங் 78:58, 59

லேவியராகமம் 26:31

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “பலிகளின் இனிய வாசனையை முகர.”

இணைவசனங்கள்

  • +2ரா 25:9, 10; 2நா 36:17; நெ 2:3; ஏசா 1:7; எரே 4:7

லேவியராகமம் 26:32

இணைவசனங்கள்

  • +எரே 9:11
  • +உபா 28:37; 29:22-24; எரே 18:16; புல 2:15; எசே 5:15

லேவியராகமம் 26:33

இணைவசனங்கள்

  • +சங் 44:11
  • +எரே 9:16; எசே 12:14
  • +சக 7:14

லேவியராகமம் 26:34

இணைவசனங்கள்

  • +2நா 36:20, 21

லேவியராகமம் 26:36

இணைவசனங்கள்

  • +ஏசா 24:6
  • +லேவி 26:17; ஏசா 30:17

லேவியராகமம் 26:37

இணைவசனங்கள்

  • +யோசு 7:12; நியா 2:14; எரே 37:10

லேவியராகமம் 26:38

இணைவசனங்கள்

  • +உபா 4:27; 28:48; எரே 42:17

லேவியராகமம் 26:39

இணைவசனங்கள்

  • +யாத் 20:5; எண் 14:18
  • +உபா 28:65

லேவியராகமம் 26:40

இணைவசனங்கள்

  • +1ரா 8:33; நெ 9:2; எசே 6:9; 36:31; தானி 9:5

லேவியராகமம் 26:41

இணைவசனங்கள்

  • +லேவி 26:24
  • +1ரா 8:47; 2நா 36:20
  • +உபா 30:6; எரே 4:4; அப் 7:51

லேவியராகமம் 26:42

இணைவசனங்கள்

  • +ஆதி 28:13
  • +ஆதி 26:3
  • +ஆதி 12:7; உபா 4:31; சங் 106:45

லேவியராகமம் 26:43

இணைவசனங்கள்

  • +லேவி 26:34; 2நா 36:20, 21
  • +2ரா 17:15

லேவியராகமம் 26:44

இணைவசனங்கள்

  • +உபா 4:31; 2ரா 13:23; நெ 9:31
  • +உபா 4:13; எரே 14:21

லேவியராகமம் 26:45

இணைவசனங்கள்

  • +யாத் 24:3, 8; உபா 9:9
  • +எசே 20:9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    “வேதாகமம் முழுவதும்”, பக். 26

லேவியராகமம் 26:46

இணைவசனங்கள்

  • +லேவி 27:34; உபா 6:1

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

லேவி. 26:1யாத் 20:4; லேவி 19:4; அப் 17:29; 1கொ 8:4
லேவி. 26:1உபா 5:8
லேவி. 26:1எண் 33:52
லேவி. 26:1தானி 3:18; 1கொ 10:14
லேவி. 26:3உபா 11:13-15; பிர 12:13
லேவி. 26:4உபா 28:12; ஏசா 30:23; எசே 34:26; யோவே 2:23
லேவி. 26:4சங் 67:6; 85:12
லேவி. 26:5லேவி 25:18
லேவி. 26:61நா 22:9; சங் 29:11; ஆகா 2:9
லேவி. 26:6மீ 4:4
லேவி. 26:8உபா 28:7; யோசு 23:10; நியா 7:15, 16; 15:15, 16; 1நா 11:20
லேவி. 26:9உபா 28:4
லேவி. 26:9யாத் 6:4
லேவி. 26:11யாத் 25:8; எசே 37:26; வெளி 21:3
லேவி. 26:12உபா 23:14
லேவி. 26:12யாத் 6:7; 2கொ 6:16
லேவி. 26:14உபா 28:15
லேவி. 26:152ரா 17:15
லேவி. 26:15யாத் 24:7; உபா 31:16; எபி 8:9
லேவி. 26:16உபா 28:22, 33; நியா 6:3
லேவி. 26:17உபா 28:15, 25; நியா 2:14; 1சா 4:10
லேவி. 26:17சங் 106:41; புல 1:5
லேவி. 26:17லேவி 26:36
லேவி. 26:19உபா 11:17; 1ரா 17:1
லேவி. 26:20எரே 12:13; ஆகா 1:6, 10
லேவி. 26:22உபா 32:24; எரே 15:3
லேவி. 26:22எசே 5:17
லேவி. 26:22நியா 5:6; ஏசா 33:8; சக 7:14
லேவி. 26:23ஏசா 1:16; எரே 2:30; 5:3
லேவி. 26:25யாத் 24:7
லேவி. 26:25உபா 28:21; எரே 24:10; ஆமோ 4:10
லேவி. 26:25நியா 2:14; 1சா 4:10
லேவி. 26:26எசே 5:16
லேவி. 26:26எசே 4:16
லேவி. 26:26ஏசா 9:20; மீ 6:14; ஆகா 1:6
லேவி. 26:28எரே 21:5
லேவி. 26:29உபா 28:53; 2ரா 6:29; எரே 19:9; புல 4:10; எசே 5:10
லேவி. 26:302நா 34:3; ஏசா 27:9
லேவி. 26:301ரா 13:2; 2ரா 23:8, 20; எசே 6:5
லேவி. 26:30சங் 78:58, 59
லேவி. 26:312ரா 25:9, 10; 2நா 36:17; நெ 2:3; ஏசா 1:7; எரே 4:7
லேவி. 26:32எரே 9:11
லேவி. 26:32உபா 28:37; 29:22-24; எரே 18:16; புல 2:15; எசே 5:15
லேவி. 26:33சங் 44:11
லேவி. 26:33எரே 9:16; எசே 12:14
லேவி. 26:33சக 7:14
லேவி. 26:342நா 36:20, 21
லேவி. 26:36ஏசா 24:6
லேவி. 26:36லேவி 26:17; ஏசா 30:17
லேவி. 26:37யோசு 7:12; நியா 2:14; எரே 37:10
லேவி. 26:38உபா 4:27; 28:48; எரே 42:17
லேவி. 26:39யாத் 20:5; எண் 14:18
லேவி. 26:39உபா 28:65
லேவி. 26:401ரா 8:33; நெ 9:2; எசே 6:9; 36:31; தானி 9:5
லேவி. 26:41லேவி 26:24
லேவி. 26:411ரா 8:47; 2நா 36:20
லேவி. 26:41உபா 30:6; எரே 4:4; அப் 7:51
லேவி. 26:42ஆதி 28:13
லேவி. 26:42ஆதி 26:3
லேவி. 26:42ஆதி 12:7; உபா 4:31; சங் 106:45
லேவி. 26:43லேவி 26:34; 2நா 36:20, 21
லேவி. 26:432ரா 17:15
லேவி. 26:44உபா 4:31; 2ரா 13:23; நெ 9:31
லேவி. 26:44உபா 4:13; எரே 14:21
லேவி. 26:45யாத் 24:3, 8; உபா 9:9
லேவி. 26:45எசே 20:9
லேவி. 26:46லேவி 27:34; உபா 6:1
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
லேவியராகமம் 26:1-46

லேவியராகமம்

26 பின்பு அவர், “‘ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களை நீங்கள் உண்டாக்கக் கூடாது.+ செதுக்கப்பட்ட சிலைகளையோ+ பூஜைத் தூண்களையோ வைத்து வணங்கக் கூடாது. உங்கள் தேசத்தில் கற்சிலைகளை+ வைத்து அவற்றின் முன்னால் தலைவணங்கக் கூடாது.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. 2 நான் சொன்ன ஓய்வுநாட்களை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும், என் வழிபாட்டுக் கூடாரத்துக்கு நீங்கள் பயபக்தி காட்ட வேண்டும். நான் யெகோவா.

3 நீங்கள் என்னுடைய சட்டதிட்டங்களைக் கடைப்பிடித்து என்னுடைய கட்டளைகளின்படி நடந்துவந்தால்,+ 4 அந்தந்த பருவங்களில் மழை பெய்யும்படி செய்வேன்.+ நிலம் விளைச்சல் தரும்,+ மரம் கனி கொடுக்கும். 5 திராட்சையின் அறுவடைக் காலம்வரை போரடிப்புக் காலம் நீடிக்கும். விதைப்புக் காலம்வரை திராட்சையின் அறுவடைக் காலம் நீடிக்கும். நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு உங்களுடைய தேசத்தில் பாதுகாப்பாகக் குடியிருப்பீர்கள்.+ 6 தேசத்தில் நான் சமாதானத்தைத் தருவேன்.+ நீங்கள் யாரைக் கண்டும் பயப்படாமல் நிம்மதியாகப் படுத்துத் தூங்குவீர்கள்.+ தேசத்திலிருந்து கொடிய மிருகங்களைத் துரத்தியடிப்பேன். யாரும் வாளை எடுத்துக்கொண்டு உங்களோடு போர் செய்ய வர மாட்டார்கள். 7 எதிரிகளை நீங்கள் துரத்திக்கொண்டு போவீர்கள், அவர்கள் உங்களுடைய வாளுக்குப் பலியாவார்கள். 8 உங்களில் 5 பேர் 100 பேரைத் துரத்திக்கொண்டு போவீர்கள், 100 பேர் 10,000 பேரைத் துரத்திக்கொண்டு போவீர்கள். எதிரிகள் உங்களுடைய வாளுக்குப் பலியாவார்கள்.+

9 நான் உங்கள்மேல் கருணை காட்டுவேன். உங்களுடைய வம்சத்தைத் தழைக்கச் செய்வேன்.+ உங்களுடன் செய்த ஒப்பந்தத்தைக் காப்பேன்.+ 10 உங்களுக்கு அமோக விளைச்சல் கிடைக்கும். அடுத்த வருஷம்வரை சாப்பிட்டாலும் அது தீராது. புதிய தானியத்தை வைப்பதற்காகப் பழையதைத் தூக்கிப்போடும் அளவுக்கு ஏராளமான விளைச்சல் கிடைக்கும். 11 உங்கள் நடுவில் என் வழிபாட்டுக் கூடாரத்தை அமைப்பேன்.+ உங்களை நான் ஒதுக்கித்தள்ள மாட்டேன். 12 நான் உங்கள் நடுவே நடந்து, உங்கள் கடவுளாக இருப்பேன்.+ நீங்கள் என் ஜனங்களாக இருப்பீர்கள்.+ 13 நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. எகிப்தில் அடிமைகளாக இருந்த உங்களை நான் விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்தேன். உங்கள் நுகத்தடியை உடைத்துப்போட்டு உங்களைத் தலைநிமிர்ந்து நடக்க வைத்தேன்.

14 நீங்கள் என் பேச்சைக் கேட்காமலும், இந்த எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாமலும்,+ 15 என் சட்டதிட்டங்களை ஒதுக்கி,+ என் நீதித்தீர்ப்புகளை வெறுத்து, என் ஒப்பந்தத்தை மீறி,+ என் கட்டளைகளைக் கடைப்பிடிக்காமல் போனால், 16 நானும் என் பங்குக்கு இப்படியெல்லாம் உங்களைத் தண்டிப்பேன்: உங்களுக்குப் பீதி உண்டாக்குவேன். காசநோயாலும் கடும் காய்ச்சலாலும் உங்களை அவதிப்பட வைப்பேன். அவை உங்கள் பார்வையை மங்க வைக்கும், உங்கள் சக்தியை உறிஞ்சிவிடும். நீங்கள் விதை விதைத்தாலும் பிரயோஜனம் இல்லாமல் போகும், எதிரிகள் அவற்றைத் தின்றுவிடுவார்கள்.+ 17 நான் உங்களை ஒதுக்கித்தள்ளுவேன். எதிரிகள் உங்களை வீழ்த்துவார்கள்.+ உங்களை வெறுப்பவர்கள் உங்கள்மேல் ஏறி மிதிப்பார்கள்.+ யாரும் விரட்டாமலேயே நீங்கள் தலைதெறிக்க ஓடுவீர்கள்.+

18 அதன் பின்பும் நீங்கள் என் பேச்சைக் கேட்காவிட்டால், உங்கள் பாவங்களுக்காக ஏழு மடங்கு உங்களைத் தண்டிப்பேன். 19 உங்கள் அகங்காரத்தையும் ஆணவத்தையும் அடக்குவேன். உங்கள் வானத்தை இரும்பைப் போல மாற்றுவேன்,*+ உங்கள் பூமியைச் செம்பைப் போல ஆக்குவேன்.* 20 உங்கள் நிலத்தில் விளைச்சல் இருக்காது, மரங்களில் பழம் காய்க்காது. நீங்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும் உங்கள் சக்தியெல்லாம் வீணாய்ப்போகும்.+

21 நீங்கள் என் பேச்சைக் கேட்காமல் எனக்கு விரோதமாக நடந்துகொண்டே இருந்தால், உங்கள் பாவங்களுக்கு ஏற்றபடி இன்னும் ஏழு மடங்கு உங்களைத் தண்டிப்பேன். 22 கொடிய மிருகங்களை உங்கள் நடுவில் அனுப்புவேன்.+ அவை உங்கள் பிள்ளைகளைக் கொன்றுபோடும்,+ ஆடுமாடுகளைக் கடித்துக் குதறிவிடும். கொஞ்சம் பேர்தான் மிஞ்சுவீர்கள், உங்கள் சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கும்.+

23 இத்தனை நடந்தும் நீங்கள் திருந்தாமல்+ பிடிவாதத்தோடு எனக்கு விரோதமாக நடந்தால், 24 நானும் உங்களுக்கு விரோதமாக நடவடிக்கை எடுப்பேன். உங்கள் பாவங்களுக்காக ஏழு மடங்கு உங்களைத் தண்டிப்பேன். 25 என் ஒப்பந்தத்தை மீறியதற்காக உங்களை வாளால் பழிதீர்ப்பேன்.+ நீங்கள் நகரங்களுக்குள் ஓடி ஒளிந்தாலும் உங்கள் நடுவில் நோயைப் பரப்புவேன்.+ எதிரியின் கையில் உங்களைச் சிக்க வைப்பேன்.+ 26 உங்கள் உணவுப் பொருள்களை அழித்துப்போடுவேன்.*+ அப்போது, 10 பெண்கள் ஒரே அடுப்பில் ரொட்டி சுடுவார்கள். அதையும் அளந்து அளந்துதான் கொடுப்பார்கள்.+ நீங்கள் சாப்பிட்டாலும் உங்கள் பசி தீராது.+

27 அதன் பின்பும் நீங்கள் என் பேச்சைக் கேட்காமல் பிடிவாதத்தோடு எனக்கு விரோதமாக நடந்தால், 28 நானும் உங்களுக்கு விரோதமாக இன்னும் கடுமையான நடவடிக்கை எடுப்பேன்.+ உங்கள் பாவங்களுக்காக ஏழு மடங்கு உங்களைத் தண்டிப்பேன். 29 அதனால், உங்களுடைய மகன்களின் சதையையும் மகள்களின் சதையையும் நீங்கள் தின்பீர்கள்.+ 30 நான் உங்களுடைய ஆராதனை மேடுகளை அழிப்பேன்,+ தூபபீடங்களை உடைப்பேன். வெறும் ஜடமாயிருக்கிற அருவருப்பான* சிலைகள்மேல் உங்கள் பிணங்களைக் குவிப்பேன்.+ அருவருப்புடன் உங்களைவிட்டுத் திரும்பிக்கொள்வேன்.+ 31 உங்கள் நகரங்களை நாசம் செய்வேன்,+ உங்கள் புனித ஸ்தலங்களைப் பாழாக்குவேன். உங்களுடைய பலிகளை ஏற்றுக்கொள்ள* மாட்டேன். 32 தேசத்தைப் பாழாக்குவேன்,+ அதில் குடியிருக்கப்போகிற எதிரிகள் அதிர்ச்சியுடன் அதைப் பார்ப்பார்கள்.+ 33 பல தேசங்களுக்கு உங்களைச் சிதறிப்போகப் பண்ணுவேன்.+ நான் உருவி வீசும் வாள் உங்களைத் துரத்தும்.+ உங்கள் தேசம் பாழாக்கப்படும்,+ உங்கள் நகரங்கள் சின்னாபின்னமாகும்.

34 நீங்கள் எதிரிகளின் தேசத்தில் இருக்கும்போது உங்கள் நிலம் பாழாய்க் கிடக்கும். அது அனுபவிக்காமல்போன ஓய்வு வருஷங்களை அப்போது அனுபவிக்கும். அந்தக் காலமெல்லாம் நிலம் ஓய்ந்திருக்கும். அதற்குக் கிடைத்திருக்க வேண்டிய ஓய்வு வருஷங்கள் கிடைக்க வேண்டும்.+ 35 அந்த நிலம் பாழாய்க் கிடக்கும் காலமெல்லாம் ஓய்ந்திருக்கும். ஏனென்றால், அந்தத் தேசத்தில் நீங்கள் குடியிருந்தபோது ஓய்வுநாள் சட்டத்தின்படி நீங்கள் நிலத்துக்கு ஓய்வு தரவில்லை.

36 எதிரிகளின் தேசத்தில் மீதியாக இருப்பவர்களின்+ இதயத்தை நான் பதற வைப்பேன். காற்றில் பறக்கும் இலையின் சத்தம் கேட்டால்கூட அவர்கள் தலைதெறிக்க ஓடுவார்கள். யாரும் துரத்தாமலேயே வாளுக்குத் தப்பியோடுவது போல ஓடி விழுவார்கள்.+ 37 யாரும் துரத்தாவிட்டால்கூட வாளுக்குத் தப்பியோடுவதுபோல் ஓடி, ஒருவர்மேல் ஒருவர் மோதி விழுவார்கள். உங்களால் எதிரிகளை எதிர்த்து நிற்க முடியாது.+ 38 மற்ற தேசத்தார் மத்தியில் நீங்கள் அழிந்துபோவீர்கள்,+ எதிரிகளின் தேசம் உங்களை விழுங்கிவிடும். 39 உங்களில் மீதியாக இருப்பவர்கள் தாங்கள் செய்த குற்றத்தையும் தங்களுடைய முன்னோர்கள் செய்த குற்றத்தையும்+ நினைத்து எதிரிகளின் தேசத்தில் வாடி வதங்குவார்கள்.+ 40 அப்போது, அவர்கள் செய்த குற்றத்தையும் அவர்களுடைய முன்னோர்கள் செய்த குற்றத்தையும் துரோகத்தையும் அவர்கள் ஒத்துக்கொள்வார்கள். எனக்கு விரோதமாக நடந்து எனக்குத் துரோகம் செய்ததை ஒத்துக்கொள்வார்கள்.+ 41 அவர்கள் எனக்குத் துரோகம் செய்ததால் நானும் அவர்களுக்கு விரோதமாக நடவடிக்கை எடுத்தேன்.+ எதிரிகளின் தேசத்துக்கு அவர்களைக் கொண்டுபோனேன்.+

அவர்கள் ஒருவேளை தங்களுடைய இதயத்திலுள்ள பிடிவாத குணத்தை விட்டுவிட்டுத்+ தங்களுடைய குற்றத்துக்குத் தகுந்த தண்டனையை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைத்துதான் அப்படிக் கொண்டுபோனேன். 42 யாக்கோபோடு நான் செய்த ஒப்பந்தத்தையும்+ ஈசாக்கோடு நான் செய்த ஒப்பந்தத்தையும்+ ஆபிரகாமோடு நான் செய்த ஒப்பந்தத்தையும்+ நினைத்துப் பார்ப்பேன். தேசத்தையும் நான் நினைத்துப் பார்ப்பேன். 43 அவர்களால் தேசம் வெறுமையாக விடப்படும்போது, அது அனுபவிக்க வேண்டிய ஓய்வு வருஷங்களை அனுபவிக்கும்,+ அவர்கள் இல்லாமல் பாழாய்க் கிடக்கும்; அவர்கள் என்னுடைய நீதித்தீர்ப்புகளை ஒதுக்கித்தள்ளியதாலும் என் சட்டதிட்டங்களை வெறுத்ததாலும் தங்களுடைய குற்றத்துக்குத் தகுந்த தண்டனையைப் பெறுவார்கள்.+ 44 அதன் பின்பும், எதிரிகளின் தேசத்தில் நான் அவர்களை ஒரேயடியாக ஒதுக்கித்தள்ளவோ, அடியோடு அழிக்கவோ மாட்டேன்.+ அப்படிச் செய்தால் அவர்களோடு செய்த ஒப்பந்தத்தை நான் மீறுவதாக இருக்கும்.+ நான் அவர்களுடைய கடவுளாகிய யெகோவா. 45 அவர்களுடைய முன்னோர்களோடு செய்த ஒப்பந்தத்தை+ அவர்களுக்காக நான் நினைத்துப் பார்ப்பேன். நான் அவர்களுடைய கடவுள் என்பதை நிரூபிப்பதற்காக, மற்ற தேசத்தாரின் கண் முன்னாலேயே எகிப்து தேசத்திலிருந்து அவர்களுடைய முன்னோர்களைக் கூட்டிக்கொண்டு வந்தேன்.+ நான் யெகோவா’” என்றார்.

46 சீனாய் மலையில் மோசேயின் மூலம் இஸ்ரவேலர்களுக்கு யெகோவா தந்த விதிமுறைகளும் நீதித்தீர்ப்புகளும் சட்டங்களும் இவைதான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்