யோபு
1 யோபு*+ என்பவர் ஊத்ஸ் தேசத்தில் வாழ்ந்துவந்தார். அவர் கடவுளுக்குப் பயந்து நடந்தார், நேர்மையானவராகவும் உத்தமராகவும்* இருந்தார்,+ கெட்டதை வெறுத்து ஒதுக்கினார்.+ 2 அவருக்கு ஏழு மகன்களும் மூன்று மகள்களும் இருந்தார்கள். 3 அவர் 7,000 ஆடுகளையும் 3,000 ஒட்டகங்களையும் 1,000 மாடுகளையும் 500 கழுதைகளையும்* ஏராளமான வேலைக்காரர்களையும் வைத்திருந்தார். அதனால், கிழக்குப் பிரதேசங்களில் வாழ்ந்த எல்லாரையும்விட அவர் அதிக மதிப்பும் மரியாதையும் பெற்றவராக இருந்தார்.
4 அவருடைய மகன்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளில் தங்களுடைய வீட்டில் விருந்து வைப்பார்கள். அப்போது, தங்களுடன் சேர்ந்து சாப்பிடவும் குடிக்கவும் தங்களுடைய மூன்று சகோதரிகளையும் கூப்பிடுவார்கள். 5 அந்த விருந்து நாட்கள் முடிந்த பின்பு, அவர்களைப் புனிதப்படுத்துவதற்காக யோபு அவர்களை வரச் சொல்வார். அடுத்த நாள் விடியற்காலையில் எழுந்து அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் தகன பலிகள் செலுத்துவார்.+ “ஒருவேளை என் மகன்கள் பாவம் செய்திருக்கலாம், மனதுக்குள்* கடவுளைக் குறை சொல்லியிருக்கலாம்” என்று நினைத்து அந்தப் பலிகளை வழக்கமாகச் செலுத்திவந்தார்.+
6 ஒருநாள், தேவதூதர்கள்*+ யெகோவாவின் முன்னால் வந்து நின்றார்கள்.+ சாத்தானும்+ அவர்களோடு வந்து நின்றான்.+
7 அப்போது யெகோவா சாத்தானிடம், “எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். அவன் யெகோவாவிடம், “பூமியெங்கும் சுற்றித் திரிந்துவிட்டு வருகிறேன்”+ என்று சொன்னான். 8 அப்போது யெகோவா அவனிடம், “என் ஊழியன் யோபுவைக் கவனித்தாயா? பூமியில் அவனைப் போல் யாருமே இல்லை. அவன் நேர்மையானவன், உத்தமன்.*+ எனக்குப் பயந்து நடக்கிறான், கெட்டதை வெறுத்து ஒதுக்குகிறான்” என்று சொன்னார். 9 சாத்தான் யெகோவாவிடம், “யோபு சும்மாவா உங்களுக்குப் பயந்து நடக்கிறான்?+ 10 நீங்கள்தான் அவனையும் அவன் வீட்டையும் அவனிடம் இருக்கிற எல்லாவற்றையும் சுற்றி வேலிபோட்டு அவனைப் பாதுகாக்கிறீர்களே.+ அவன் செய்வதையெல்லாம் ஆசீர்வதிக்கிறீர்களே.+ அவனுடைய மந்தைகள் தேசத்தில் பெருகியிருக்கின்றனவே. 11 நீங்கள் மட்டும் உங்கள் கையை நீட்டி அவனிடம் இருக்கிற எல்லாவற்றையும் தொட்டுப் பாருங்கள்.* கண்டிப்பாக உங்கள் முகத்துக்கு நேராகவே அவன் உங்களைத் திட்டித் தீர்ப்பான்” என்று சொன்னான். 12 அப்போது யெகோவா சாத்தானைப் பார்த்து, “யோபுவிடம் இருக்கிற எல்லாவற்றையும் உன் கையில் விட்டுவிடுகிறேன். ஆனால், அவன்மேல் மட்டும் கை வைக்காதே!” என்றார். உடனே, சாத்தான் யெகோவாவின் முன்னிலையிலிருந்து புறப்பட்டுப் போனான்.+
13 ஒருநாள், யோபுவின் மகன்களும் மகள்களும் அவருடைய மூத்த மகனின் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டும் திராட்சமது குடித்துக்கொண்டும் இருந்தார்கள்.+ 14 அந்தச் சமயத்தில், வேலைக்காரன் ஒருவன் யோபுவிடம் வந்து, “உங்களுடைய மாடுகள் உழுதுகொண்டிருந்தன, பக்கத்தில் கழுதைகளும் மேய்ந்துகொண்டிருந்தன. 15 அப்போது திடீரென்று சபேயர்கள் வந்து அவற்றைப் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள். வேலைக்காரர்களை வெட்டிக் கொன்றுவிட்டார்கள். நான் ஒருவன் மட்டும்தான் உயிர்தப்பி இதை உங்களுக்குச் சொல்ல வந்திருக்கிறேன்” என்றான்.
16 அவன் பேசிக்கொண்டிருந்தபோதே இன்னொருவன் வந்து, “கடவுள் வானத்திலிருந்து நெருப்பை* அனுப்பி, உங்கள் ஆடுகளையும் வேலைக்காரர்களையும் எரித்து சாம்பலாக்கிவிட்டார்! நான் ஒருவன் மட்டும்தான் உயிர்தப்பி இதை உங்களுக்குச் சொல்ல வந்திருக்கிறேன்” என்றான்.
17 அவன் பேசிக்கொண்டிருந்தபோதே இன்னொருவன் வந்து, “கல்தேயர்கள்+ மூன்று கும்பல்களாகத் திடீரென்று வந்து, உங்கள் ஒட்டகங்களைப் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள். உங்களுடைய வேலைக்காரர்களை வெட்டிக் கொன்றுவிட்டார்கள். நான் ஒருவன் மட்டும்தான் உயிர்தப்பி இதை உங்களுக்குச் சொல்ல வந்திருக்கிறேன்” என்றான்.
18 அவன் பேசிக்கொண்டிருந்தபோதே இன்னொருவனும் வந்து, “உங்கள் மகன்களும் மகள்களும் உங்களுடைய மூத்த மகனின் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டும் திராட்சமது குடித்துக்கொண்டும் இருந்தார்கள். 19 அப்போது, திடீரென்று வனாந்தரத்திலிருந்து சூறாவளிக் காற்று அடித்தது. அது அந்த வீட்டின் நான்கு மூலைகளிலும் அடித்ததால் அந்த வீடு உங்கள் பிள்ளைகள்மேல் இடிந்து விழுந்தது. அவர்கள் எல்லாரும் இறந்துவிட்டார்கள். நான் ஒருவன் மட்டும்தான் உயிர்தப்பி இதை உங்களுக்குச் சொல்ல வந்திருக்கிறேன்” என்றான்.
20 அதைக் கேட்டதும் யோபு எழுந்து, தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டார், தலைமுடியை வெட்டிக்கொண்டார். 21 பிறகு, சாஷ்டாங்கமாக விழுந்து,
யெகோவா கொடுத்தார்,+ யெகோவா எடுத்துக்கொண்டார்.
யெகோவாவின் பெயருக்கு என்றும் புகழ் சேரட்டும்”
என்று சொன்னார். 22 இவ்வளவு நடந்தும் யோபு பாவம் செய்யவில்லை, கடவுள்மேல் எந்தக் குறையும் சொல்லவில்லை.*
2 பின்பு ஒருநாள், தேவதூதர்கள்*+ யெகோவாவின் முன்னால் வந்து நின்றார்கள்.+ சாத்தானும் அவர்களோடு வந்து யெகோவாவின் முன்னால் நின்றான்.+
2 அப்போது யெகோவா சாத்தானிடம், “எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவன் யெகோவாவிடம், “பூமியெங்கும் சுற்றித் திரிந்துவிட்டு வருகிறேன்”+ என்று சொன்னான். 3 அப்போது யெகோவா, “என் ஊழியன் யோபுவைக் கவனித்தாயா? பூமியில் அவனைப் போல் யாருமே இல்லை. அவன் நேர்மையானவன், உத்தமன்.*+ அவன் எனக்குப் பயந்து நடக்கிறான், கெட்டதை வெறுத்து ஒதுக்குகிறான். காரணமில்லாமல் அவனை அழிப்பதற்காக நீ என்னைத் தூண்டிவிடப் பார்த்தாலும்,+ அவன் இன்னமும் எனக்கு உத்தமமாகவே இருக்கிறான்”+ என்று சொன்னார். 4 ஆனால் சாத்தான் யெகோவாவிடம், “ஒரு மனுஷன் எந்த உயிரையும்விட தன்னுடைய உயிரைத்தான் பெரிதாக நினைப்பான். அதைக் காப்பாற்றிக்கொள்ள எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராயிருப்பான்.* 5 அதனால், நீங்கள் அவனுடைய எலும்பையும் சதையையும் தொட்டுப் பாருங்கள்.* கண்டிப்பாக உங்கள் முகத்துக்கு நேராகவே உங்களைத் திட்டித் தீர்ப்பான்”+ என்று சொன்னான்.
6 அதற்கு யெகோவா, “அவனை உன் கையில் விட்டுவிடுகிறேன், அவன் உயிரை மட்டும் எடுத்துவிடாதே” என்று சொன்னார். 7 உடனே, சாத்தான் யெகோவாவின் முன்னிலையிலிருந்து புறப்பட்டுப் போய், யோபுவை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை கொடிய கொப்புளங்களால் வாட்டி வதைத்தான்.+ 8 யோபு தன் உடம்பிலிருந்த கொப்புளங்களைச் சுரண்டுவதற்காக, உடைந்துபோன ஓடு ஒன்றை எடுத்துக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்தார்.+
9 அப்போது அவருடைய மனைவி, “இன்னுமா கடவுள் கடவுள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்?* அவரைத் திட்டித் தீர்த்துவிட்டு செத்துப்போங்கள்!” என்று சொன்னாள். 10 ஆனால் யோபு, “நீ பைத்தியக்காரிபோல் பேசுகிறாய். கடவுள் கொடுக்கிற நல்லதை மட்டும் ஏற்றுக்கொண்டு, கஷ்டத்தை நாம் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாமா?”+ என்று கேட்டார். இதெல்லாம் நடந்தும்கூட, அவர் தன் வாயால் பாவம் செய்யவில்லை.+
11 தேமானியனான எலிப்பாஸ்,+ சுவாகியனான+ பில்தாத்,+ நாகமாத்தியனான சோப்பார்+ ஆகிய மூன்று பேரும் யோபுவின் நண்பர்கள்.* அவருக்கு வந்த கஷ்டங்களைப் பற்றியெல்லாம் அவர்கள் கேள்விப்பட்டபோது, அவரவர் வீடுகளிலிருந்து புறப்பட்டு வந்து ஓர் இடத்தில் சந்தித்தார்கள். யோபுவைப் போய்ப் பார்த்து அவருக்கு அனுதாபம் காட்டவும் ஆறுதல் சொல்லவும் முடிவு செய்தார்கள். 12 யோபுவைத் தூரத்திலிருந்து பார்த்தபோது அவர்களுக்கு அடையாளமே தெரியவில்லை. உடனே, ஓவென்று கத்தி அழ ஆரம்பித்தார்கள். பின்பு, தங்களுடைய உடையைக் கிழித்துக்கொண்டு, மண்ணை வாரி தங்கள் தலையில் போட்டுக்கொண்டார்கள்.+ 13 பின்பு, ஏழு நாட்கள் ராத்திரி பகலாக அவரோடு தரையில் உட்கார்ந்துகொண்டார்கள். யோபு வலியில் பயங்கரமாய்த் துடித்ததை அவர்கள் பார்த்ததால் யாரும் அவரிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.+
3 அதன் பின்பு, யோபு பேச ஆரம்பித்தார். அவர் தன்னுடைய பிறந்த நாளைச் சபித்து,+ 2 இப்படிச் சொன்னார்:
3 “நான் பிறந்த அந்த நாள் வராமலேயே இருந்திருக்க வேண்டும்!+
‘ஆண் குழந்தை பிறந்திருக்கிறது!’ என்று சொல்லப்பட்ட அந்த இரவும் வராமல் போயிருக்க வேண்டும்!
4 அந்த நாள் இருண்டுபோயிருக்க வேண்டும்!
பரலோகத்திலுள்ள கடவுள் அந்த நாளைக் கண்டும்காணாமல் விட்டிருக்க வேண்டும்!
ஒளி அதன்மேல் வீசாமல் போயிருக்க வேண்டும்!
5 கும்மிருட்டு* அந்த நாளைச் சூழ்ந்திருக்க வேண்டும்!
மழைமேகம் அதை மூடியிருக்க வேண்டும்!
பயங்கரமான இருட்டு அதன் வெளிச்சத்தை விழுங்கியிருக்க வேண்டும்!
6 அந்த இரவு படுபயங்கரமான இருளின் பிடியில் சிக்கியிருக்க வேண்டும்!+
அது சந்தோஷத்தையே காணாத நாளாக இருந்திருக்க வேண்டும்!
எந்த மாதத்திலும் அந்த நாள் சேர்க்கப்படாமல் போயிருக்க வேண்டும்!
7 அந்த ராத்திரியில் யாரும் பிறக்காமல் போயிருக்க வேண்டும்!
அன்று சந்தோஷக் குரலே கேட்காமல் போயிருக்க வேண்டும்!
9 அந்த ராத்திரியில் நட்சத்திரங்கள் மின்னாமல் போயிருக்க வேண்டும்!
பகலுக்காக அது காத்திருந்தது வீணாய்ப் போயிருக்க வேண்டும்!
சூரிய உதயத்தை அது காணாமல் போயிருக்க வேண்டும்!
11 நான் பிறக்கும்போதே ஏன் சாகாமல் போனேன்?
தாயின் வயிற்றிலிருந்து வரும்போதே ஏன் அழியாமல் போனேன்?+
12 என் தாயின் மடி ஏன் என்னைத் தாங்கியது?
அவள் மார்பு ஏன் எனக்குப் பாலூட்டியது?
13 நான் தொந்தரவில்லாமல் போய்ச் சேர்ந்திருப்பேனே!+
ஒரேயடியாகத் தூங்கி ஓய்வெடுத்திருப்பேனே!+
14 இப்போது பாழாய்க் கிடக்கிற இடங்களைக் கட்டியிருந்த* ராஜாக்களோடும்
அவர்களுடைய ஆலோசகர்களோடும் அழிந்துபோயிருப்பேனே.
15 தங்கத்தையும் வெள்ளியையும் வீடுகளில் குவித்து வைத்திருந்த இளவரசர்களோடு
நானும் புதைக்கப்பட்டிருப்பேனே.
16 நான் ஏன் கர்ப்பத்திலேயே கலையவில்லை?
ஒளியைப் பார்ப்பதற்கு முன்பே ஏன் ஒழிந்துபோகவில்லை?
18 கைதிகள் எல்லாருக்கும் கல்லறை விடுதலை தருகிறதே.
அவர்களை மிரட்டி வேலை வாங்குபவர்களின் சத்தம் அங்கு கேட்காதே.
19 உயர்ந்தவனுக்கும் தாழ்ந்தவனுக்கும் அங்கே வித்தியாசமில்லை.+
அடிமையை எஜமான் அங்கே ஆட்டிப்படைப்பதில்லை.
20 வேதனைப்படுகிறவனைக் கடவுள் ஏன் வாழ வைக்கிறார்?*
விரக்தியில் இருப்பவர்களை+ ஏன் உயிரோடு விட்டுவைக்கிறார்?
21 அவர்கள் சாவுக்காக ஏங்குகிறார்கள்,+ புதையலைத் தேடுவதைவிட சாவை அதிகமாகத் தேடுகிறார்கள்.
ஆனால் அது வந்த பாடில்லை.
22 கல்லறையைப் பார்த்ததும் பூரித்துப்போகிறார்கள்.
சந்தோஷத்தில் துள்ளுகிறார்கள்.
24 நான் எதையும் சாப்பிடாமல் சதா பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறேன்.+
கொட்டும் அருவிபோல் என் குமுறல் இருக்கிறது.+
25 எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது நடந்துவிட்டது.
எதை நினைத்துப் பயந்தேனோ அது வந்துவிட்டது.
26 எனக்கு நிம்மதியில்லை, அமைதியில்லை, ஓய்வுமில்லை.
வேதனைக்குமேல் வேதனைதான் வருகிறது.”
4 அப்போது, தேமானியனான எலிப்பாஸ்+ யோபுவைப் பார்த்து,
2 “உன்னிடம் பேசினால், நீ பொறுமை இழந்துவிட மாட்டாய்தானே?
ஏனென்றால், இப்போது என்னால் அமைதியாக இருக்க முடியாது.
3 நீ நிறைய பேரைத் திருத்தியிருப்பது உண்மைதான்.
சோர்ந்துபோனவர்களைப் பலப்படுத்தியிருப்பது நிஜம்தான்.
4 தடுமாறி விழுகிறவர்களை உன் வார்த்தைகளால் தூக்கி நிறுத்தினாய்.
தள்ளாடுகிற முழங்கால்கள் உள்ளவர்களைப் பலப்படுத்தினாய்.
5 ஆனால், உனக்குப் பிரச்சினைகள் வந்தவுடன் நிதானம் இழந்துவிட்டாய்.
கஷ்டங்கள் உன்னைத் தாக்கியவுடன் ஆடிப்போய்விட்டாய்.
6 உன் கடவுள்பக்தி உனக்கு நம்பிக்கை தரவில்லையா?
உன்னுடைய உத்தம குணம்,+ நல்லது நடக்குமென்ற உறுதியை* கொடுக்கவில்லையா?
7 தயவுசெய்து யோசித்துப் பார், தப்பு செய்யாதவன் எப்போதாவது அழிந்துபோயிருக்கிறானா?
நேர்மையாக நடப்பவன் எப்போதாவது ஒழிந்துபோயிருக்கிறானா?
8 நான் பார்த்தவரையில், வினை* விதைப்பவன் வினை* அறுக்கிறான்.
கெட்டது செய்பவனுக்குக் கெட்டதுதான் நடக்கிறது.
9 கடவுளுடைய மூச்சுக்காற்று அவனை அழிக்கிறது.
அவருடைய கோபம் அவனைப் பொசுக்குகிறது.
10 சிங்கம் கர்ஜிக்கலாம், இளம் சிங்கம் உறுமலாம்.
ஆனால், பலம் படைத்த சிங்கங்களின் பற்கள்கூட உடைந்துபோகின்றன.
11 இரை கிடைக்காவிட்டால் சிங்கம் செத்துப்போகும்.
சிங்கக்குட்டிகள் சிதறிப்போகும்.
12 எனக்கு ரகசியச் செய்தி ஒன்று வந்தது.
அது லேசாக என் காதில் விழுந்தது.
13 ஜனங்கள் ஆழ்ந்து தூங்கும் ராத்திரி நேரத்தில்,
நான் தரிசனங்களைப் பார்த்துக் கலங்கிப்போனேன்.
14 எனக்குக் குலைநடுங்கியது.
என் எலும்பெல்லாம் ஆடிப்போனது.
15 ஒரு உருவம் என்னைக் கடந்துபோனது.
என் உடம்பெல்லாம் சிலிர்த்தது.
16 பின்பு, அந்த உருவம் அப்படியே நின்றது.
அதன் தோற்றம் எனக்குச் சரியாகத் தெரியவில்லை.
ஆனால், ஏதோவொரு வடிவம் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தது.
கொஞ்ச நேரத்துக்கு ஒரே அமைதி; அதன் பிறகு ஒரு குரல்,
17 ‘அற்ப மனுஷன் கடவுளைவிட நீதியாக இருக்க முடியுமா?
தன்னைப் படைத்தவரைவிட பரிசுத்தமாக இருக்க முடியுமா?’ என்று கேட்டது.
19 அப்படியென்றால், மண்ணில் அஸ்திவாரம் போட்டு,+
களிமண் வீடுகளில் குடியிருந்து,
பூச்சி* போல எளிதில் நசுக்கிக் கொல்லப்படும் மனுஷன் எந்த மூலைக்கு?
20 காலையில் இருக்கிறான், சாயங்காலத்துக்குள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறான்.
நிரந்தரமாக அழிக்கப்படுகிறான்; யாரும் கண்டுகொள்வதில்லை.
21 கயிறு அவிழ்க்கப்பட்ட கூடாரம் போலத்தானே அவன் இருக்கிறான்?
அவன் ஞானம் இல்லாமல் செத்துப்போகிறான்” என்று சொன்னான்.
5 பின்பு அவன்,
“தயவுசெய்து யாரையாவது கூப்பிடு! உனக்குப் பதில் கிடைக்கிறதா என்று பார்க்கலாம்.
எந்தப் பரிசுத்தவானிடம் உதவி கேட்கப்போகிறாய்?
2 பழிவாங்கும் எண்ணம் முட்டாளைக் கொன்றுவிடும்.
பொறாமைக் குணம் ஏமாளியைச் சாகடித்துவிடும்.
3 முட்டாள் சீரும் சிறப்புமாக வாழ்வதை நான் பார்த்திருக்கிறேன்.
ஆனால், அவனுடைய வீடு திடீரென்று சபிக்கப்படும்.
4 அவனுடைய மகன்களுக்குப் பாதுகாப்பு இருக்காது.
நகரவாசலில் அவர்கள் ஒடுக்கப்படுவார்கள்,+
யாரும் அவர்களைக் காப்பாற்ற மாட்டார்கள்.
5 அவன் அறுவடை செய்ததைப் பசியாயிருப்பவன் சாப்பிடுகிறான்.
முட்களுக்கு நடுவில் இருப்பதைக்கூட எடுத்துக்கொள்கிறான்.
அவர்களுடைய சொத்து எல்லாமே பறிபோகும்.
6 கெட்ட காரியங்கள் மண்ணிலிருந்தா முளைக்கின்றன?
கஷ்டங்கள் நிலத்திலிருந்தா துளிர்விடுகின்றன?
7 நெருப்பிலிருந்து தீப்பொறி பறப்பது உறுதி.
அதுபோல், மனுஷனாகப் பிறக்கிறவனுக்குக் கஷ்டம் வருவது உறுதி.
8 ஆனால், நான் கடவுளிடம் முறையிடுவேன்.
என்னுடைய வழக்கை அவரிடம் கொண்டுபோவேன்.
9 மனுஷனுடைய அறிவுக்கு எட்டாத அதிசயங்களைச் செய்கிறவர் அவர்.
எண்ண முடியாதளவுக்கு ஏராளமான அற்புதங்களைச் செய்கிறவர் அவர்.
10 பூமியில் அவர் மழையைப் பொழிகிறார்.
வயல்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறார்.
11 தாழ்ந்தவனை மேலே உயர்த்துகிறார்.
விரக்தியில் மூழ்கியிருப்பவனைத் தூக்கி நிறுத்தி, அவனை மீட்கிறார்.
12 சதிகாரர்களின் திட்டங்களை முறியடிக்கிறார்.
அவர்கள் என்ன செய்தாலும் தோல்வியடைய வைக்கிறார்.
13 ஞானிகளை அவர்களுடைய தந்திரத்தை வைத்தே மடக்குகிறார்.+
சாமர்த்தியசாலிகளின் திட்டங்களைக் கவிழ்க்கிறார்.
14 பகலிலேயே இருள் அவர்களைச் சூழ்ந்துகொள்கிறது.
பட்டப்பகலிலேயே அவர்கள் தட்டுத்தடுமாறுகிறார்கள்.
15 அவர்களுடைய குத்தலான பேச்சிலிருந்து எளியவர்களைக் கடவுள் காப்பாற்றுகிறார்.
பலம் படைத்தவர்களின் பிடியிலிருந்து ஏழைகளை விடுவிக்கிறார்.
16 அதனால் எளியவர்களுக்கு நம்பிக்கை கிடைக்கிறது,
அக்கிரமக்காரர்களின் வாய் அடங்குகிறது.
17 கடவுள் யாரைக் கண்டிக்கிறாரோ அவர் சந்தோஷமானவர்.
அதனால், சர்வவல்லமையுள்ளவர் கண்டித்துத் திருத்துவதை அலட்சியம் செய்யாதே!
18 அவர் காயப்படுத்தினாலும் கட்டுப் போடுவார்.
அடித்தாலும் தன்னுடைய கையாலேயே மருந்து போடுவார்.
19 ஆறு விதமான ஆபத்துகளிலிருந்து உன்னைக் காப்பாற்றுவார்.
ஏழாவது ஆபத்தும் உன்னை நெருங்காது.
20 பஞ்ச காலத்தில் பட்டினியில் சாகும்படி உன்னை விட மாட்டார்.
போர்க் காலத்தில் வாளுக்குப் பலியாகும்படி உன்னை விட மாட்டார்.
22 அழிவும் பஞ்சமும் வந்தால்கூட வாய்விட்டுச் சிரிப்பாய்.
காட்டு மிருகங்களைப் பார்த்தும்கூட பயப்பட மாட்டாய்.
24 உன் கூடாரம் பாதுகாப்பாக இருப்பதை நீ பார்ப்பாய்.*
உன் மந்தையில் ஒன்றும் குறையாமல் இருப்பதைப் பார்ப்பாய்.
25 நிறைய பிள்ளைகளைப் பெற்று சந்தோஷமாக வாழ்வாய்.
உன்னுடைய வம்சம் பூமியிலுள்ள புல்பூண்டுகளைப் போல் அளவில்லாமல் பெருகும்.
26 கல்லறைக்குப் போய்ச் சேரும் காலத்தில்கூட நீ கட்டுறுதியோடு இருப்பாய்.
முற்றிய கதிர்மணிகளைப் போல் இருப்பாய்.
27 இதெல்லாம் நாங்கள் கண்டறிந்த உண்மைகள்.
நன்றாகக் கேட்டு, மனதார ஏற்றுக்கொள்” என்று சொன்னான்.
6 அதற்கு யோபு,
3 அது கடற்கரை மணலைவிட கனமாக இருக்கும்.
அந்த வேதனையைத் தாங்க முடியாமல்தான் ஏதேதோ* பேசிவிட்டேன்.+
4 சர்வவல்லமையுள்ளவரின் அம்புகள் என்னைக் குத்திக் கிழித்தன.
அவற்றின் விஷம் என் உடம்பில் ஏறிக்கொண்டிருக்கிறது.+
கடவுள் என்னை மாறிமாறி தாக்குவதால் நான் பயந்துபோயிருக்கிறேன்.
6 ருசியில்லாத சாப்பாட்டை உப்பில்லாமல் சாப்பிட முடியுமா?
செடியின் வழுவழுப்பான சாறில் ருசி இருக்குமா?
7 அதையெல்லாம் தொடக்கூட எனக்குப் பிடிக்கவில்லை.
பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது.
8 கடவுள் என் வேண்டுதலைக் கேட்டு,
என் ஆசையை நிறைவேற்றி,
10 அப்போதுதான் எனக்கு நிம்மதி கிடைக்கும்.
மரண வலியைக்கூட சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன்.
ஏனென்றால், பரிசுத்தமான கடவுளின்+ பேச்சை நான் மறுக்கவில்லையே.*
11 இன்னும் காத்துக்கொண்டிருக்க என் உடம்பில் பலம் ஏது?+
இனி நான் வாழ்ந்து என்ன பிரயோஜனம்?
12 நான் என்ன பாறாங்கல்லா?
என் உடம்பு என்ன வெண்கலமா?
13 எனக்கென்று இருந்ததெல்லாம் பறிபோய்விட்டதே.
இனி என்னை நானே எப்படிக் கவனித்துக்கொள்வேன்?
15 என் சகோதரர்கள் எனக்கு ஏமாற்றம் அளிக்கிறார்கள்.+
அவர்கள் வற்றிப்போன குளிர் கால நீரோடைபோல் இருக்கிறார்கள்.
16 அதன் கலங்கலான தண்ணீர் உறைபனி போல இறுகிக் கிடக்கிறது.
அதன் அடியில் இருக்கும் பனிக்கட்டி உருகி ஓடுகிறது.
17 கோடைக் காலத்தில் அது காய்ந்துபோகிறது.
வெயில் காலத்தில் வறண்டுபோகிறது.
18 அதன் பாதை மாறுகிறது.
பாலைவனத்துக்குள் ஓடுகிறது, பின்பு காணாமல் போகிறது.
19 தீமாவின்+ பயணிகள் தண்ணீரைத் தேடி வருகிறார்கள்.
சீபாவிலிருந்து வருகிறவர்கள்*+ அதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
20 நம்பிக்கை வீண்போனதால் அவர்கள் அவமானம் அடைகிறார்கள்.
எதிர்பார்த்தது கிடைக்காததால் ஏமாற்றம் அடைகிறார்கள்.
21 நீங்களும் எனக்கு அந்த நீரோடை போலத்தான் இருக்கிறீர்கள்.+
எனக்கு ஏற்பட்ட கொடுமைகளைப் பார்த்துப் பயப்படுகிறீர்கள்.+
22 ‘எனக்கு ஏதாவது கொடுங்கள்’ என்று உங்களைக் கேட்டேனா?
எனக்காக யாரிடமாவது பணம் கொடுக்கச் சொன்னேனா?
23 எதிரியின் கையிலிருந்து என்னைக் காப்பாற்றும்படி கெஞ்சினேனா?
கொடுமைக்காரர்களின் கையிலிருந்து விடுதலை செய்யும்படி வேண்டினேனா?
25 உள்ளதை உள்ளபடி சொல்வது வேதனை தராது.+
ஆனால் நீங்கள் என்னைக் கண்டிப்பதால் ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா?+
26 என் வார்த்தைகளைச் சுட்டிக்காட்டி என்னைக் கண்டிக்க சதி செய்கிறீர்களா?
விரக்தியில் பேசுகிறவனுடைய வார்த்தைகள்+ காற்றோடு காற்றாகப் போய்விடுவதில்லையா?
28 இப்போது என் முகத்தைப் பாருங்கள்.
உங்கள் முகத்துக்கு நேராக நான் ஏன் பொய் சொல்லப்போகிறேன்?
29 என்னைப் பற்றித் தப்பாக நினைக்காதீர்கள்; தயவுசெய்து உங்கள் அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.
நீங்களே யோசித்துப் பாருங்கள்; நான் இன்னும் நீதிநேர்மையோடுதான் நடக்கிறேன்.
30 நான் ஏதாவது அநியாயமாகப் பேசுகிறேனா?
எனக்கு வந்த கஷ்டத்தைப் பற்றிப் புரியாமல் பேசுகிறேனா?” என்றார்.
7 பின்பு அவர்,
“அற்ப மனுஷனின் வாழ்க்கையே ஒரு போராட்டம்தான்.
அவன் வாழ்க்கை கூலியாட்களின் வாழ்க்கையைப் போலத்தான் இருக்கிறது.+
4 ‘எப்போதுதான் விடியுமோ?’ என்று யோசித்துக்கொண்டே படுக்கிறேன்.+
ராத்திரி மெதுவாக நகருகிறது, விடியும்வரை தூக்கமில்லாமல் புரண்டு புரண்டு படுக்கிறேன்.
6 என்னுடைய காலம் நெசவுத் தறியைவிட வேகமாக ஓடுகிறது.+
எந்த நம்பிக்கையும் இல்லாமல் முடிவுக்கு வருகிறது.+
7 கடவுளே, என் வாழ்க்கை காற்றுபோல் பறந்துவிடும்தானே?+
இனி எங்கே எனக்குச் சந்தோஷம் கிடைக்கப்போகிறது?*
8 இப்போது என்னைப் பார்க்கிறவர்கள் இனிமேல் பார்க்க மாட்டார்கள்.
நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனால் நான் இருக்க மாட்டேன்.+
11 அதனால், இப்போது நான் பேசாமல் இருக்க மாட்டேன்.
என் மனம் படுகிற பாட்டைச் சொல்லாமல் விட மாட்டேன்.
என் உள்ளக் குமுறல்களைக் கொட்டித் தீர்ப்பேன்.+
12 நீங்கள் எனக்குக் காவல் வைக்க நான் என்ன கடலா?
அல்லது கடலில் இருக்கும் ராட்சதப் பிராணியா?
13 என் படுக்கை எனக்கு ஆறுதல் தருமென்று நம்பினேன்.
என் கட்டில் எனக்கு நிம்மதி தருமென்று எதிர்பார்த்தேன்.
14 ஆனால் கடவுளே, நான் படுத்திருக்கும்போது கனவுகளால் என்னைக் கதிகலங்க வைக்கிறீர்கள்.
தரிசனங்களால் திகிலடைய வைக்கிறீர்கள்.
15 நான் மூச்சுத் திணறி செத்துப்போவதே மேல்.
இந்த உடலோடு வாழ்வதைவிட உயிர்விடுவதே மேல்.+
16 எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது;+ உயிரோடு இருக்கவே பிடிக்கவில்லை.
என்னை விட்டுவிடுங்கள், என் வாழ்நாள் வெறும் மூச்சுக்காற்றுதானே?+
17 நீங்கள் மதிக்கிற அளவுக்கு மனுஷன் ஒரு பெரிய ஆளே இல்லை.
நீங்கள் அவனை அக்கறையோடு கவனிக்க வேண்டிய அவசியமே இல்லை.+
18 அப்படியிருந்தும், ஒவ்வொரு நாள் காலையிலும் அவனை ஏன் ஆராய்ந்து பார்க்கிறீர்கள்?
ஒவ்வொரு நொடியும் அவனை ஏன் சோதித்துப் பார்க்கிறீர்கள்?+
19 எவ்வளவு காலம்தான் என்னையே பார்த்துக்கொண்டிருப்பீர்கள்?
எச்சில் விழுங்கும் நேரத்துக்குக்கூட என்னைத் தனியாக விட மாட்டீர்களா?+
20 மனுஷனைக் கவனிக்கிறவரே,+ நான் பாவம் செய்திருந்தாலும் உங்களுக்கு எப்படிக் கெடுதல் செய்ய முடியும்?
ஏன் என்மீதே குறியாக இருக்கிறீர்கள்?
நான் உங்களுக்குப் பாரமாகிவிட்டேனா?
21 என் பாவத்தை ஏன் மன்னிக்காமல் இருக்கிறீர்கள்?
என் குற்றத்தை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள்?
சீக்கிரத்தில் நான் மண்ணோடு மண்ணாகிவிடுவேன்.+
நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனால் நான் இருக்க மாட்டேன்” என்று சொன்னார்.
8 அப்போது, சுவாகியனான+ பில்தாத்+ யோபுவிடம்,
2 “எவ்வளவு நேரம்தான் இப்படியே பேசிக்கொண்டிருப்பாய்?+
உன் வாயிலிருந்து வார்த்தைகள் புயல்போல் சீறிக்கொண்டு வருகின்றன!
3 கடவுள் நியாயமில்லாமல் நடந்துகொள்வாரா?
சர்வவல்லமையுள்ளவர் நீதியைப் புரட்டுவாரா?
4 உன் பிள்ளைகள் அவருக்கு எதிராக ஏதாவது பாவம் செய்திருப்பார்கள்.
அவர்களுடைய குற்றத்துக்குத் தகுந்த தண்டனையைத்தான் கடவுள் கொடுத்திருக்கிறார்.
5 நீ இப்போது கடவுள்மேல் நம்பிக்கை வை.+
சர்வவல்லமையுள்ளவரிடம் கருணைக்காகக் கெஞ்சு.
6 நீ உண்மையிலேயே தூய்மையாகவும் நேர்மையாகவும் நடப்பவனா என்று அவர் பார்ப்பார்.+
நீ நல்லவனாக இருந்தால் உதவி செய்வார்.
பழையபடி உன்னை உயர்த்துவார்.
8 முந்தைய தலைமுறையிடம் தயவுசெய்து கேட்டுப் பார்.
அவர்களுடைய முன்னோர்கள் புரிந்துகொண்ட விஷயங்களை ஆராய்ந்து பார்.+
9 நாம் நேற்று பிறந்தவர்கள், நமக்கு என்ன தெரியும்?
இந்த உலகத்தில் நம் வாழ்க்கை நிழல் போன்றது.
10 அவர்கள் உனக்குக் கற்றுக்கொடுப்பார்கள்.
அவர்களுக்குத் தெரிந்ததைச் சொல்வார்கள்.
11 சேறு இல்லாமல் நாணற்புல்* ஓங்கி வளருமா?
தண்ணீர் இல்லாமல் கோரைப்புல் உயரமாக வளருமா?
12 அது வெட்டப்படாமல் இளசாக இருந்தாலும்,
மற்ற எல்லா புற்களையும்விட சீக்கிரத்தில் காய்ந்துபோகுமே.
13 கடவுளை மறந்துபோகிறவனுக்கும் இதே கதிதான் வரும்.
கெட்டவனின்* எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும்.
14 அவனுடைய நம்பிக்கை வீணானது.
சிலந்தி வலைபோல் உறுதி இல்லாதது.
15 அவன் தன்னுடைய வீட்டின் மேல் சாய்வான், அது சரிந்து விழும்.
அதைப் பிடித்து நிறுத்தப் பார்ப்பான், ஆனால் அது தரைமட்டமாகும்.
16 அவன் சூரிய வெளிச்சத்தில் வளரும் பசுமையான செடிபோல் இருக்கிறான்.
அவனுடைய கிளைகள் தோட்டமெங்கும் படருகின்றன.+
18 ஆனால், அவனுடைய இடத்திலிருந்து வேரோடு பிடுங்கப்படுவான்.
அந்த இடம், ‘நான் உன்னைப் பார்த்ததே இல்லை’ என்று சொல்லும்.+
20 உத்தமர்களை* கடவுள் ஒருபோதும் ஒதுக்கித்தள்ள மாட்டார்.
கெட்டவர்களுக்கு அவர் உதவி செய்யவும் மாட்டார்.
21 இனி அவர் உன்னை வாய்விட்டுச் சிரிக்க வைப்பார்.
சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்க வைப்பார்.
22 உன்னை வெறுக்கிறவர்கள் ரொம்பவே அவமானம் அடைவார்கள்.
கெட்டவர்களின் கூடாரம் அழிந்துபோகும்” என்று சொன்னான்.
9 அதற்கு யோபு,
2 “நீங்கள் சொல்வது சரிதான்.
ஆனால், சாதாரண மனுஷன் எப்படிக் கடவுளோடு வழக்காடி ஜெயிக்க முடியும்?+
3 அவரோடு வாதாட ஒரு மனுஷன் விரும்பினால்,+
அவர் கேட்கிற ஆயிரம் கேள்விகளில் ஒரு கேள்விக்குக்கூட அவனால் பதில் சொல்ல முடியாதே.
4 அவரைப் போல் ஞானமும் மகா வல்லமையும் உள்ளவர் யாராவது உண்டா?+
அவருடன் மோதி யாரால் தப்பிக்க முடியும்?+
5 ஒருவருக்கும் தெரியாதபடி அவர் மலைகளைப் பெயர்க்கிறார்.
கோபத்தில் அவற்றைக் கவிழ்க்கிறார்.
7 சூரியனிடம், ‘பிரகாசிக்காதே!’ என்று கட்டளை கொடுக்கிறார்.
நட்சத்திரங்களின் ஒளியை மறைக்கிறார்.+
8 அவராகவே வானத்தை விரிக்கிறார்.+
பொங்கிவரும் கடல் அலைகளை மிதித்து அமிழ்த்துகிறார்.+
9 ஆஷ்,* கீஸில்,* கிமா* நட்சத்திரக் கூட்டங்களை உண்டாக்கியிருக்கிறார்.+
தெற்கிலுள்ள நட்சத்திரக் கூட்டங்களையும் உருவாக்கியிருக்கிறார்.
10 ஆராய்ந்தறிய முடியாத அதிசயங்களை அவர் செய்கிறார்.+
எண்ண முடியாத அற்புதங்களை நடத்துகிறார்.+
11 அவர் என்னைக் கடந்துபோகிறார், என்னால் பார்க்க முடியவில்லை.
என்னைத் தாண்டிப்போகிறார், என்னால் உணர முடியவில்லை.
12 அவர் நம்மிடமிருந்து எதையாவது பிடுங்கிக்கொண்டால், நம்மால் எதிர்த்துப் போராட முடியுமா?
‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று தட்டிக்கேட்க முடியுமா?+
14 அப்படியென்றால், நான் எவ்வளவு கவனமாக அவருக்குப் பதில் சொல்ல வேண்டும்!
அவரோடு வாதாடும்போது எவ்வளவு ஜாக்கிரதையாகப் பேச வேண்டும்!
15 என் பங்கில் நியாயம் இருந்தாலும், நான் அவரிடம் எதிர்த்துப் பேச மாட்டேன்.+
இரக்கம் காட்டும்படி என் நீதிபதியிடம்* கெஞ்சிக் கேட்பேன்.
16 நான் கூப்பிட்டால் அவர் பதில் சொல்வாரா என்ன?
அவர் என் குரலைக் கேட்பார் என்ற நம்பிக்கையே எனக்கு இல்லை.
17 சுழல்காற்றினால் அவர் என்னைச் சுக்குநூறாக்குகிறார்.
காரணமே இல்லாமல் காயத்துக்குமேல் காயம் உண்டாக்குகிறார்.+
18 மூச்சு இழுக்கக்கூட அவர் என்னை விடுவதில்லை.
நிறைய கஷ்டங்களைக் கொடுத்து என்னை நோகடிக்கிறார்.
19 பலம் என்று வரும்போது, அவர்தான் மகா பலசாலி.+
நியாயம் என்று வரும்போது, ‘யாரும் என்னைக் கேள்வி கேட்க முடியாது’* என்று அவர் சொல்கிறார்.
20 நான் நல்லவனாக இருந்தாலும், என் வாயே என்னைக் கெட்டவன் என்று சொல்லும்.
நான் உத்தமனாக* இருந்தாலும், அவர் என்னைக் குற்றவாளி என்றுதான் சொல்வார்.
21 நான் உத்தமனாக இருந்தாலும், என்மேல் எனக்கே நம்பிக்கை இல்லை.
இந்த வாழ்க்கையே எனக்கு வேண்டாம்.
22 எல்லாம் ஒன்றுதான். அதனால்தான்,
‘நல்லவன், கெட்டவன் என்று பார்க்காமல் எல்லாரையும் அவர் அழிக்கிறார்’ என்று சொல்கிறேன்.
23 திடீரென்று வெள்ளம் வந்து நல்லவனை வாரிக்கொண்டு போனால் அவர் சிரிப்பார்.
அவன் தவிப்பதைப் பார்த்து கேலி செய்வார்.
அவரைத் தவிர வேறு யார் அப்படிச் செய்வார்கள்?
25 ஒரு ஓட்டக்காரனைவிட வேகமாக என் வாழ்நாள் ஓடுகிறது.+
வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பதற்கு முன்பே அது ஓடிவிடுகிறது.
26 நாணல் படகுகளைப் போல் அது விரைவாகப் போகிறது.
இரையின் மேல் பாயும் கழுகுபோல் வேகமாகக் கடந்துபோகிறது.
27 ‘நான் சோகத்தை விட்டுவிட்டு சந்தோஷமாக இருக்க வேண்டும்,
இனி புலம்பக் கூடாது’ என்று முடிவுசெய்தாலும், என்ன பிரயோஜனம்?
28 என் வேதனைகளை நினைத்து நினைத்துப் பயந்துகொண்டுதான் இருப்பேன்.+
கடவுள் எங்கே என்னை நல்லவன் என்று நினைக்கப்போகிறார்?
29 என்னை எப்படியும் குற்றவாளி என்றுதான் சொல்வார்.
அப்படியிருக்கும்போது, நான் ஏன் வீணாகப் போராட வேண்டும்?+
30 உருகும் பனியில் நான் குளித்தாலும்,
கைகளைச் சாம்பல் தேய்த்துக் கழுவினாலும், என்ன பிரயோஜனம்?+
31 அவர்தான் என்னைச் சேற்றுக் குழிக்குள் தள்ளிவிடுவாரே.
அப்போது, நான் போட்டிருக்கிற துணிக்குக்கூட என்னைப் பிடிக்காமல் போய்விடுமே.
32 அவர் என்னைப் போல ஒரு மனுஷனா? என்னால் அவரை எதிர்த்துப் பேச முடியுமா?
என்னால் அவரோடு வழக்காட முடியுமா?+
33 எங்கள் இரண்டு பேருடைய வழக்கையும் விசாரிக்க* யாரும் இல்லை.
எங்களுக்குத் தீர்ப்பு சொல்ல நீதிபதியும் இல்லை.
34 அவர் என்னைத் தாக்குவதை நிறுத்த வேண்டும்.
என்னைப் பயமுறுத்தாமல் இருக்க வேண்டும்.+
35 அப்போதுதான், நான் பயமில்லாமல் அவரிடம் பேசுவேன்.
பயந்து பேசுவது என் சுபாவமே இல்லை” என்று சொன்னார்.
10 பின்பு அவர்,
“எனக்கு வாழ்க்கை கசக்கிறது.+
என் குறைகளை வாய்விட்டுச் சொல்லப்போகிறேன்.
என் உள்ளக் குமுறல்களைக் கொட்டித் தீர்க்கப்போகிறேன்.
2 நான் கடவுளிடம், ‘என்னைக் குற்றவாளி என்று சொல்லிவிடாதீர்கள்.
என்னோடு ஏன் வாதாடுகிறீர்கள் என்று முதலில் விளக்குங்கள்’ என்று சொல்வேன்.
3 அதோடு, ‘என்னைக் கொடுமைப்படுத்துவதால் உங்களுக்கு என்ன லாபம்?
நீங்கள் படைத்த மனுஷன்மேல்+ நீங்களே வெறுப்பைக் கொட்டுவதால் என்ன பிரயோஜனம்?
கெட்டவர்களுடைய திட்டங்களை நீங்கள் ஆதரிக்கலாமா?
4 உங்களுடைய கண்கள் என்ன மனுஷக் கண்களா?
சாதாரண மனுஷன் பார்ப்பது போலவா நீங்கள் பார்க்கிறீர்கள்?
5 உங்கள் வாழ்நாள் மனுஷனின் வாழ்நாளைப் போன்றதா?
அவன் எவ்வளவு காலம் வாழ்கிறானோ அவ்வளவு காலம்தான் நீங்களும் வாழ்கிறீர்களா?+
6 பின்பு ஏன் என்னிடம் குற்றம் கண்டுபிடிக்கப் பார்க்கிறீர்கள்?
நான் பாவம் செய்கிறேனா என்று ஏன் துருவித் துருவிப் பார்க்கிறீர்கள்?+
7 நான் குற்றம் செய்யவில்லை என்று உங்களுக்குத் தெரியுமே.+
யாராலும் என்னை உங்கள் கையிலிருந்து காப்பாற்ற முடியாதே.+
8 உங்கள் கைகளால்தானே என்னைப் பார்த்துப் பார்த்து உண்டாக்கினீர்கள்?+
இப்போது ஏன் என்னை அடியோடு அழிக்கப் பார்க்கிறீர்கள்?
9 என்னை மண்ணால் உருவாக்கியதைத் தயவுசெய்து நினைத்துப் பாருங்கள்.+
இப்போது என்னை மண்ணுக்கே அனுப்ப நினைக்கிறீர்களே!+
11 எலும்புகளாலும் தசைநாண்களாலும் எனக்கு வடிவம் கொடுத்தீர்களே.
தோலாலும் சதையாலும் என்னைப் போர்த்தினீர்களே.+
13 ஆனாலும், எனக்குக் கஷ்டங்களைக் கொடுக்க ரகசியமாகத் திட்டம் போட்டீர்கள்.
இந்த எல்லா கஷ்டங்களையும் கொடுத்தது நீங்கள்தான் என்று எனக்குத் தெரியும்.
14 நான் பாவம் செய்தால், நீங்கள் கவனிக்காமல் இருக்க மாட்டீர்கள்.+
என் குற்றத்தைக் கண்டுகொள்ளாமல் விட மாட்டீர்கள்.
15 நான் குற்றவாளி என்றால், ஒழிந்துபோகிறேன்!
நான் நிரபராதி என்றாலும், என்னால் தலைநிமிர முடியவில்லை.+
ரொம்பவே அசிங்கப்பட்டுவிட்டேன், நொந்துபோய்விட்டேன்.+
16 நான் தலைநிமிர்ந்தாலும், சிங்கத்தை வேட்டையாடுவதுபோல் என்னை வேட்டையாடுகிறீர்கள்.+
உங்கள் பலத்தை மறுபடியும் என்மேல் காட்டுகிறீர்கள்.
17 எனக்கு எதிராகச் சாட்சி சொல்ல நிறைய பேரைக் கொண்டுவருகிறீர்கள்.
என்மேல் இன்னும் அதிகமாகக் கோபத்தைக் கொட்டுகிறீர்கள்.
எனக்குக் கஷ்டத்துக்குமேல் கஷ்டம் வருகிறது.
18 என் தாயின் வயிற்றிலிருந்து ஏன் என்னை வெளியே கொண்டுவந்தீர்கள்?+
யாரும் பார்ப்பதற்கு முன்பே நான் செத்துப்போயிருக்கக் கூடாதா?
19 இப்படிப்பட்ட ஒருவன் இல்லாமலே போயிருப்பானே!
நான் கருவறையிலிருந்து நேராகக் கல்லறைக்குப் போயிருப்பேனே’ என்று கடவுளிடம் சொல்வேன்.
20 இன்னும் கொஞ்ச நாள்தானே வாழப்போகிறேன்?+ அவர் என்னை விட்டுவிடக் கூடாதா?
கொஞ்ச நேரமாவது அவர் என்னைப் பார்க்காமல் இருந்தால் நான் நிம்மதியாக இருப்பேன்.*+
21 அதன் பிறகு, இருட்டிலும் இருட்டான* இடத்துக்குப்+ போய்விடுகிறேன்.
அங்கிருந்து திரும்பிவர மாட்டேன்.+
22 அது பயங்கர இருட்டான ஒரு தேசம்.
கும்மிருட்டும் குழப்பமும் நிறைந்த தேசம்.
அங்கே வெளிச்சம்கூட இருட்டாகத்தான் தெரியும்” என்று சொன்னார்.
11 அதற்கு நாகமாத்தியனான சோப்பார்,+
2 “நீ என்ன பேசினாலும் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள் என்று நினைக்கிறாயா?
ஒருவன் நிறைய* பேசுகிறான் என்பதற்காக நியாயமாகப் பேசுகிறான் என்று அர்த்தமா?
3 அர்த்தமில்லாமல் பேசி மற்றவர்களின் வாயை அடைக்கப் பார்க்கிறாயா?
நீ கிண்டலாகப் பேசுவதை+ யாரும் தட்டிக்கேட்க மாட்டார்களா?
4 நீ கடவுளிடம், ‘நான் பேசுவதெல்லாம்* உண்மை,+
உங்கள் பார்வையில் சுத்தமாக இருக்கிறேன்’+ என்று சொல்கிறாய்.
6 ஞானத்தின் ரகசியங்களை அவர் உனக்கு வெளிப்படுத்துவார்.
அதைப் பற்றிய பல விஷயங்களை உனக்குப் புரிய வைப்பார்.
நீ செய்கிற எல்லா குற்றங்களையும் அவர் கணக்கு வைப்பதில்லை என்று அப்போது புரிந்துகொள்வாய்.
7 சர்வவல்லமையுள்ளவரைப் பற்றி நீ முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியுமா?
அவரைப் பற்றிய ஆழமான விஷயங்களை உன்னால் புரிந்துகொள்ள முடியுமா?
8 ஞானம் வானத்தைவிட உயர்ந்தது. உன்னால் என்ன செய்ய முடியும்?
அது கல்லறையைவிட ஆழமானது. உனக்கு என்ன புரியும்?
9 அது பூமியைவிட நீளமானது.
கடலைவிட அகலமானது.
10 அவர் வந்து ஒருவனைப் பிடித்து விசாரணைக்கு நிறுத்தலாம்.
அவரை யாரால் எதிர்க்க முடியும்?
11 மனுஷன் பித்தலாட்டம் செய்வது அவருக்குத் தெரியாதா?
அவர் தீமையைப் பார்த்தும் பார்க்காததுபோல் இருப்பாரா?
12 காட்டுக் கழுதையால் எப்படி மனுஷனைப் பெற்றெடுக்க* முடியும்?
அதுபோல், புத்தி இல்லாதவனுக்கு எப்படிப் புத்தி வரும்?
14 ஏதாவது தப்பு செய்துகொண்டிருந்தால், அதை விட்டுவிடு.
உன் கூடாரங்களில் அக்கிரமத்துக்கு இடம் கொடுக்காதே.
15 அப்போதுதான், நீ குற்றம் இல்லாதவனாகத் தலைநிமிர்ந்து நிற்க முடியும்.
பயமே இல்லாமல் உறுதியாக நிற்க முடியும்.
16 பின்பு உன் கவலையை மறந்துவிடுவாய்.
உன்னைக் கடந்துபோன வெள்ளம் போல அதை நினைப்பாய்.
17 உன் வாழ்க்கை பட்டப்பகலைவிட பிரகாசமாக இருக்கும்.
இருண்ட நேரங்கள்கூட காலைபோல் வெளிச்சமாக இருக்கும்.
18 நீ நம்பிக்கை பெற்று தைரியமாக இருப்பாய்.
சுற்றிலும் ஆபத்து இல்லாததைப் பார்த்து, பாதுகாப்பாகப் படுத்துக்கொள்வாய்.
19 யாருடைய பயமும் இல்லாமல் நிம்மதியாகத் தூங்குவாய்.
உதவி கேட்டு பலர் உன்னைத் தேடி வருவார்கள்.
20 ஆனால், கெட்டவர்களின் கண்கள் மங்கிப்போகும்.
ஓடி ஒளிய அவர்களுக்கு இடமே இருக்காது.
சாவை மட்டும்தான் அவர்கள் எதிர்பார்க்க முடியும்”+ என்று சொன்னான்.
12 அதற்கு யோபு,
2 “நீங்கள்தான் எல்லாம் தெரிந்தவர்கள் ஆயிற்றே!
உங்களுக்குப் பிறகு ஞானிகள் என்று சொல்லிக்கொள்ள யார் இருக்கப்போகிறார்கள்?
3 ஆனால், நான் எந்த விதத்திலும் உங்களுக்குக் குறைந்தவன் இல்லை.
எனக்கும் புத்தி* இருக்கிறது.
நீங்கள் சொல்கிற விஷயங்களெல்லாம் யாருக்குத்தான் தெரியாது?
நீதிநேர்மையோடு நடப்பவனைக் கண்டாலே எல்லாருக்கும் கிண்டல்தான்.
5 எதற்கும் கவலைப்படாத ஆட்கள் தங்களுக்கு அழிவே வராது என்று நினைக்கிறார்கள்.
கஷ்டத்தில் துவண்டுபோகிற ஆட்கள்தான்* அழிந்துபோவார்கள் என்று நினைக்கிறார்கள்.
6 கொள்ளைக்காரர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்.+
சிலைகளை வைத்துக் கும்பிடுகிறவர்களும்,
கடவுளைக் கோபப்படுத்துகிறவர்களும் பத்திரமாக இருக்கிறார்கள்.+
7 ஆனால், தயவுசெய்து மிருகங்களைக் கேட்டுப் பாருங்கள்; அவை உங்களுக்குக் கற்றுக்கொடுக்கும்.
பறவைகளை விசாரித்துப் பாருங்கள்; அவை உங்களுக்கு விளக்கிச் சொல்லும்.
8 பூமியைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்;* அது உங்களுக்குச் சொல்லித்தரும்.
கடல்மீனும் உங்களுக்கு எடுத்துச்சொல்லும்.
9 யெகோவாதானே அவற்றையெல்லாம் உண்டாக்கினார்?
இந்த உண்மையை அறியாத படைப்பு எதுவுமே இல்லை.
10 அவருடைய கையில்தான் எல்லா ஜீவன்களின் உயிரும் இருக்கிறது.
மனுஷனின் மூச்சும் அவரிடம்தான் இருக்கிறது.+
17 ஆலோசகர்களை அவர் வெறுங்காலில் அலைய விடுகிறார்.*
நீதிபதிகளை முட்டாள்களாக்குகிறார்.+
18 ராஜாக்களின் அதிகாரத்தைப் பறிக்கிறார்.+
அவர்களை அடிமையாக்குகிறார்.
19 குருமார்களை வெறுங்காலில் அலைய விடுகிறார்.+
அதிகாரமும் செல்வாக்கும் உள்ளவர்களை வீழ்த்துகிறார்.+
20 நம்பகமான ஆலோசகர்களின் வாயை அடைத்துவிடுகிறார்.
பெரியவர்களின் புத்தியை அழித்துவிடுகிறார்.
21 செல்வாக்கு உள்ளவர்களுக்கு மிகுந்த அவமானம் வரும்படி செய்கிறார்.+
பலமுள்ளவர்களைப் பலவீனமாக்குகிறார்.
22 இருட்டுக்குள் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்துகிறார்.+
கும்மிருட்டுக்குள் புதைந்திருப்பவற்றை வெட்டவெளிச்சமாக்குகிறார்.
23 தேசங்களை வளரவிட்டு அவற்றை அழித்துவிடுகிறார்.
ஜனங்களைப் பெருக வைத்து, அவர்களை வேறு தேசத்துக்குக் கைதிகளாக அனுப்பிவிடுகிறார்.
24 ஜனங்களுடைய தலைவர்களின் புத்தியை* மழுங்க வைக்கிறார்.
பாதையில்லாத பொட்டல் காடுகளில் அவர்களைத் திரிய வைக்கிறார்.+
25 அவர்களை இருட்டில் தட்டுத்தடுமாற வைக்கிறார்.+
குடிகாரன் தள்ளாடுவதுபோல் அங்குமிங்கும் தள்ளாட வைக்கிறார்”+ என்று சொன்னார்.
2 உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் எனக்கும் தெரியும்.
நான் உங்களைவிட எந்த விதத்திலும் குறைந்தவன் இல்லை.
3 உங்களிடம் பேசுவதைவிட சர்வவல்லமையுள்ளவரிடம் பேசுவதுதான் நல்லது.
அவரோடு வழக்காடவே நான் விரும்புகிறேன்.+
4 நீங்கள் என்னைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்கிறீர்கள்.
நீங்கள் எதற்கும் லாயக்கில்லாத வைத்தியர்கள்.+
5 நீங்கள் வாயே திறக்காமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
அதுதான் நீங்கள் செய்கிற ஞானமான காரியமாக இருக்கும்.+
6 தயவுசெய்து என் பக்கம் இருக்கிற நியாயத்தைக் கேளுங்கள்.
என்னுடைய விவாதத்தைக் கவனித்துக் கேளுங்கள்.
7 கடவுள் சார்பில் பேசுவதாகச் சொல்லிக்கொண்டு
அநியாயமாகவும் போலித்தனமாகவும் பேசுவீர்களோ?
8 நீங்கள் அவருடைய பக்கம் இருக்கிறீர்களோ?
உண்மைக் கடவுளுக்காக வாதாடுகிறீர்களோ?
9 அவர் சோதித்துப் பார்க்கும்போது, உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்றா நினைக்கிறீர்கள்?+
சாதாரண மனுஷனை முட்டாளாக்குவதுபோல் அவரை முட்டாளாக்கவா பார்க்கிறீர்கள்?
11 அவருடைய மகிமையால் மிரண்டுபோவீர்கள்.
அவர்மேல் உள்ள பயத்தால் குலைநடுங்குவீர்கள்.
12 உங்களுடைய தத்துவங்கள், வெறும் சாம்பல்தான்.
உங்களுடைய வாதங்கள், வெறும் களிமண் கேடயங்கள்தான்.
13 நான் பேசி முடிக்கும்வரை கொஞ்சம் அமைதியாக இருங்கள்.
அதற்குப்பின், எனக்கு நடப்பது நடக்கட்டும்.
14 நானாகவே ஏன் ஆபத்தைத் தேடிக்கொள்ள வேண்டும்?
என் கையாலேயே என் உயிரை ஏன் எடுக்க வேண்டும்?
15 கடவுள் என்னை வெட்டிப்போட்டால்கூட, அவர்மேல் நம்பிக்கையாக இருப்பேன்.+
அவருடைய முகத்துக்கு நேராகவே என் நியாயத்தை எடுத்துச் சொல்வேன்.
17 என் வார்த்தைகளைக் கவனமாகக் கேளுங்கள்.
நான் சொல்வதை நன்றாகக் கவனியுங்கள்.
18 இதோ, என் வாதங்களை எடுத்துச் சொல்லத் தயாராகிவிட்டேன்.
என் பங்கில் நியாயம் இருப்பது எனக்குத் தெரியும்.
19 யார் என்னை எதிர்த்து வழக்காடப் போகிறீர்கள்?
நான் எதுவும் பேசாமல் இருந்தால் செத்தே போய்விடுவேன்.*
20 கடவுளே, என்னுடைய இரண்டு வேண்டுகோள்களை மட்டும் நிறைவேற்றுங்கள்.
அப்போதுதான் உங்களிடமிருந்து ஒளிந்துகொள்ள மாட்டேன்.
22 நீங்கள் பேசுங்கள், நான் பதில் சொல்கிறேன்.
இல்லையென்றால், நான் பேசுகிறேன், நீங்கள் பதில் சொல்லுங்கள்.
23 நான் என்ன குற்றம் செய்தேன்? என்ன பாவம் செய்தேன்?
எதுவாக இருந்தாலும் எனக்குச் சொல்லுங்கள்.
25 காற்றில் அடித்துச் செல்லப்படும் இலையை நீங்கள் பயமுறுத்துவீர்களா?
ஒரு துரும்பைத் துரத்திக்கொண்டு போவீர்களா?
26 எனக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை எழுதி வைக்கிறீர்களே.
சிறுவயதில் நான் செய்த தவறுகளுக்காக என்னைத் தண்டிக்கிறீர்களே.
27 நீங்கள் என் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவிட்டீர்கள்.
என் வழிகளையெல்லாம் துருவித் துருவிப் பார்க்கிறீர்கள்.
என் காலடித் தடங்களையெல்லாம் தேடிப் பார்க்கிறீர்கள்.
28 மனுஷன்* உருக்குலைந்து போகிறானே!
பூச்சி அரித்த துணிபோல் அழிந்துபோகிறானே!” என்று சொன்னார்.
3 ஆனாலும், நீங்கள் அவனையே கண்ணெடுக்காமல் பார்க்கிறீர்கள்.
உங்களோடு வாதாடுவதற்குக் கூப்பிடுகிறீர்கள்.+
4 பாவமுள்ளவன் பாவமில்லாதவனைப் பெற்றெடுக்க முடியுமா?+
முடியவே முடியாதே!
5 மனுஷனின் வாழ்நாள் காலத்துக்கு எல்லை இருக்கிறது.
அது உங்கள் கையில் இருக்கிறது.
நீங்கள் குறித்திருக்கிற எல்லையை மீறி அவன் வாழ முடியாது.+
6 அவனிடமிருந்து உங்கள் பார்வையைக் கொஞ்சம் திருப்புங்கள்.
பாடுபட்டு வேலை செய்தபின் ஓய்வெடுக்கும் கூலியாளைப் போல் அவன் கொஞ்சம் ஓய்வெடுக்கட்டுமே.+
7 ஒரு மரத்துக்குக்கூட நம்பிக்கை இருக்கிறது.
வெட்டிச் சாய்க்கப்பட்டாலும், அது திரும்பவும் துளிர்க்கும்.
மறுபடியும் கிளைகள் விடும்.
8 ஒருவேளை அதன் வேர்கள் பல காலமாக மண்ணுக்குள் கிடக்கலாம்.
அதன் அடிமரம் காய்ந்துபோகலாம்.
9 ஆனாலும், தண்ணீர் பட்டதும் அது துளிர்விடுகிறது.
புதிதாக முளைக்கிற செடிபோல் கிளைகள் விடுகிறது.
11 கடல் காய்ந்துபோகிறது.
நதி வற்றிப்போகிறது.
12 அதுபோலவே, மனுஷன் கண் மூடிவிட்டால் எழுந்திருப்பதில்லை.+
வானம் ஒழிந்துபோகும்வரை அவன் கண்திறக்கப் போவதில்லை.
அவனை யாரும் தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பப் போவதில்லை.+
13 கடவுளே, நீங்கள் என்னைக் கல்லறையில் புதைத்துவைத்து,+
உங்கள் கோபம் தீரும்வரை அங்கேயே மறைத்துவைத்து,
நீங்கள் குறித்திருக்கிற காலம் முடிந்ததும் என்னை நினைத்துப் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!+
14 மனுஷன் செத்த பின்பு மறுபடியும் உயிரோடு வர முடியுமா?+
நான் அடிமைப்பட்டிருக்கும்* காலமெல்லாம் காத்திருப்பேன்.
அதன்பின் அங்கிருந்து எனக்கு விடுதலை கிடைக்கும்.+
15 நீங்கள் என்னைக் கூப்பிடுவீர்கள், நான் பதில் சொல்வேன்.+
உங்கள் கைகளால் உருவாக்கிய என்னைப் பார்க்க நீங்கள் ஏக்கமாக இருப்பீர்கள்.
16 ஆனால், இப்போது நான் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியையும் எண்ணுகிறீர்கள்.
என்னிடம் குற்றம் கண்டுபிடிப்பதிலேயே குறியாக இருக்கிறீர்கள்.
17 என் பாவத்தை மூட்டையில் கட்டி வைத்திருக்கிறீர்கள்.
அதைப் பசைபோட்டு ஒட்டி வைத்திருக்கிறீர்கள்.
18 மலை விழுந்து நொறுங்குவது போலவும்,
பாறை இடம் பெயர்வது போலவும்,
19 தண்ணீர் கற்களைத் தேயச் செய்வது போலவும்,
வெள்ளம் மண்ணை அரித்துவிடுவது போலவும்,
அற்ப மனுஷனின் நம்பிக்கையை நீங்கள் அழித்துவிட்டீர்கள்.
21 அதன்பின் அவனுடைய மகன்கள் கௌரவமாக வாழ்ந்தாலும் அவனுக்குத் தெரிவதில்லை.
அவர்கள் கேவலமாக வாழ்ந்தாலும் தெரிவதில்லை.+
22 உயிரோடு இருக்கும்வரைதான் அவன் வலியில் துடிக்கிறான்.
மூச்சு இருக்கும்வரைதான் அழுது புலம்புகிறான்” என்று சொன்னார்.
15 அதற்கு தேமானியனான எலிப்பாஸ்,+
3 வெறும் வார்த்தைகளால் குத்திக்காட்டுவதில் எந்த லாபமும் இல்லை.
வெட்டிப் பேச்சு பேசுவதில் பிரயோஜனமே இல்லை.
4 நீ பேசுவதைக் கேட்டால், கடவுள்பயமே இல்லாமல் போய்விடும்.
அவரைப் பற்றி நினைக்கவே மனம் வராது.
5 நீ தப்பு செய்திருப்பதால்தான் இப்படியெல்லாம் பேசுகிறாய்.
ரொம்பவே சாமர்த்தியமாகப் பேசுகிறாய்.
6 உன்மேல் குற்றம் இருப்பதாக நானா சொல்கிறேன்? நீயேதான் சொல்லிக்கொள்கிறாய்.
உன் வாயே உனக்கு எதிராகச் சாட்சி சொல்கிறது.+
7 நீதான் இந்த உலகத்தில் முதன்முதலாகப் பிறந்தாயோ?
மலைகள் உண்டாவதற்கு முன்பே பிறந்துவிட்டாயோ?
8 கடவுள் ரகசியம் பேசுவதைக்கூட உன்னால் கேட்க முடிகிறதோ?
நீ மட்டும்தான் ஞானி என்று நினைக்கிறாயோ?
9 எங்களுக்குத் தெரியாத என்ன விஷயம் உனக்குத் தெரிந்துவிட்டது?+
எங்களுக்குப் புரியாத என்ன விஷயம் உனக்குப் புரிந்துவிட்டது?
10 உன் அப்பாவைவிட ரொம்பவே மூத்தவர்களும் நரைமுடி உள்ளவர்களும்
அனுபவம் உள்ளவர்களும்+ எங்களோடு இருக்கிறார்கள்.
11 கடவுள் தருகிற ஆறுதல் உனக்குப் போதாதா?
உன்னிடம் மென்மையாகச் சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கேட்க மாட்டாயா?
12 உனக்கு எப்படி இவ்வளவு துணிச்சல் வந்தது?
பார்க்கிற பார்வையிலேயே எரித்துவிடுவாய் போலிருக்கிறதே!
13 கடவுளையே கோபித்துக்கொள்கிறாயே!
வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுகிறாயே!
16 அப்படியிருக்கும்போது, அருவருப்பும் அக்கிரமமும் நிறைந்த மனுஷன் எந்த மூலைக்கு?+
அநீதி செய்யத் துடிக்கிறவன்* எந்த மூலைக்கு?
17 நான் உனக்கு விளக்குகிறேன், கொஞ்சம் கேள்!
இதுவரை நான் பார்த்ததை வைத்துச் சொல்கிறேன், கொஞ்சம் கவனி!
18 இதெல்லாம் ஞானிகள் சொன்ன விஷயங்கள்.
அவர்களுடைய முன்னோர்கள் அவர்களுக்கு மறைக்காமல் சொன்ன விஷயங்கள்.+
19 அந்த முன்னோர்களுக்கு மட்டும்தான் தேசம் கொடுக்கப்பட்டது.
அன்னியர்கள் யாரும் அங்கு நடமாடவில்லை.
20 அக்கிரமம் செய்கிறவன் ஆயுசு முழுக்க அவஸ்தைப்படுகிறான்.
கொடுமை செய்கிறவன் காலமெல்லாம் கஷ்டப்படுகிறான்.
21 காதில் என்ன சத்தம் விழுந்தாலும் அவன் மிரண்டுபோகிறான்.+
அமைதியான காலத்தில்கூட கொள்ளைக்கூட்டத்திடம் சிக்குகிறான்.
23 அவன் சாப்பாட்டுக்காகக் கூப்பாடு போட்டுக்கொண்டு சுற்றித் திரிகிறான்.
இருண்ட நாள் சீக்கிரத்தில் வரப்போவது அவனுக்குத் தெரியும்.
24 வேதனையும் கவலையும் அவனை ஆட்டிப்படைக்கின்றன.
ராஜா ஒரு நாட்டைப் பிடிப்பதுபோல் அவை அவனைப் பிடித்துக்கொள்கின்றன.
25 அவன்தான் கடவுளையே எதிர்க்கிறானே!
சர்வவல்லமையுள்ளவருக்கே சவால்விடப் பார்க்கிறானே!*
26 கடவுளுடன் மோதியே தீர வேண்டும் என்று ஓட்டமாய் ஓடுகிறான்.
பலமான கேடயத்துடன் பாய்ந்து போகிறான்.
27 அவனுக்கு உடம்பெல்லாம் கொழுப்பு.
அவன் வயிறு தொந்திவிட்டிருக்கிறது.
28 அவனுடைய நகரம் அழிக்கப்படும்.
அவன் வீடு இடிந்துவிழும்.
அங்கே யாரும் குடியிருக்க மாட்டார்கள்.
29 அவனால் வசதியாக வாழ முடியாது; பணமும் பொருளும் சேர்க்க முடியாது.
ஊரெல்லாம் சொத்துகளை வைத்திருக்க முடியாது.
30 இருளிலிருந்து அவன் தப்பிக்க மாட்டான்.
அவனுடைய துளிர்* கருகிவிடும்.
கடவுள் ஒரு ஊது ஊதியதும் அவன் காணாமல் போய்விடுவான்.+
31 அவன் வீணானதை நம்பி அதன் பின்னால் போகக் கூடாது.
அப்படிப் போனால், வீணான பலன்தான் அவனுக்குக் கிடைக்கும்.
32 அவனுடைய நாளுக்கு முன்பே அது நடக்கும்.
அவனுடைய கிளைகள் ஒருநாளும் செழிக்காது.+
33 பிஞ்சுகள் உதிர்ந்த திராட்சைக் கொடிபோல் அவன் இருப்பான்.
பூக்கள் உதிர்ந்த ஒலிவ மரம்போல் இருப்பான்.
35 அவர்கள் கெட்டதை நினைக்கிறார்கள், கெட்டதைச் செய்கிறார்கள்.
மற்றவர்களை எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்றே எப்போதும் யோசிக்கிறார்கள்” என்று சொன்னான்.
16 அதற்கு யோபு,
2 “நான் இதுபோல் எவ்வளவோ கேட்டிருக்கிறேன்.
ஆறுதல்படுத்துவதற்குப் பதிலாக நீங்கள் எல்லாரும் என் மனதை நோகடிக்கிறீர்களே.+
3 அர்த்தமில்லாத பேச்சுக்கு ஒரு முடிவே இல்லை.
என்னிடம் ஏன் இப்படி எரிந்து விழுகிறீர்கள்?
4 எனக்கும் உங்களைப் போலப் பேசத் தெரியும்.
என்னுடைய இடத்தில் நீங்கள் இருந்தால்
என்னாலும் உங்களுக்கு எதிராகச் சாமர்த்தியமாய்ப் பேச முடியும்.
கிண்டலாக உங்களைப் பார்த்துத் தலையசைக்க முடியும்.+
5 ஆனால் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன்; உங்களைத் தைரியப்படுத்துவேன்.
ஆறுதல் சொல்லி உங்கள் கவலைகளைப் போக்குவேன்.+
8 இப்போதும் அவர் என்னை ஆட்டிப்படைப்பதை மற்றவர்கள் கண்கூடாகப் பார்க்கிறார்கள்.
தப்பு செய்ததற்குத் தண்டனையாகத்தான் எலும்பும் தோலுமாக இருக்கிறேன் என்று சொல்கிறார்கள்.
9 கோபத்தில் அவர் என்னை நார்நாராகக் கிழித்துவிட்டார்; என்மேல் வெறியோடு இருக்கிறார்.+
என்னைப் பார்த்துப் பற்களை நறநறவென்று கடிக்கிறார்.
என் எதிரிகளின் கண்கள் என்னைக் குத்திக் கிழிக்கின்றன.+
10 அவர்கள் என்னைப் பற்றி இல்லாததையெல்லாம் சொல்கிறார்கள்.+
கன்னத்தில் அறைந்து அவமானப்படுத்துகிறார்கள்.
எனக்கு எதிராக ஒரு பெரிய கூட்டமே திரண்டிருக்கிறது.+
12 கவலையில்லாமல் இருந்த என்னை நொறுக்கினார்.+
கழுத்தைப் பிடித்துத் தள்ளி என்னை மிதித்தார்.
என்னைத் தாக்குவதிலேயே குறியாக இருந்தார்.
13 அவருடைய வில்வீரர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்.+
அவர் ஈவிரக்கமே இல்லாமல் அம்புகளால் என்னை ஆழமாக* துளைக்கிறார்.+
என் பித்தநீரைத் தரையில் ஊற்றுகிறார்.
14 மதிலைத் துளைப்பதுபோல் என்னை மாறிமாறி துளைக்கிறார்.
போர்வீரனைப் போல் என்மேல் பாய்கிறார்.
15 நான் போட்டுக்கொள்வதற்குத் துக்கத் துணியை* தைத்தேன்.+
என் மானம் மரியாதையைக் குழிதோண்டிப் புதைத்தேன்.+
16 அழுது அழுது என் முகம் சிவந்துவிட்டது.+
கண்ணீர் சிந்தி சிந்தி என் கண்கள் வீங்கிவிட்டன.*
17 இத்தனைக்கும், நான் வன்முறையில் இறங்கியதே இல்லை.
சுத்தமான மனதோடுதான் ஜெபம் செய்கிறேன்.
18 மண்ணே, என் இரத்தத்தை மூடி மறைக்காதே!+
அது எனக்காக ஓயாமல் கதறட்டும்!
19 இதோ, எனக்குச் சாட்சி சொல்பவர் பரலோகத்தில் இருக்கிறார்.
எனக்காக வாதாடுபவர் மேலே இருக்கிறார்.
21 மனுஷனுக்கும் மனுஷனுக்கும் இடையே உள்ள வழக்கை இன்னொரு மனுஷன் தீர்த்துவைப்பது உண்டு.
அதுபோலவே, எனக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள வழக்கை யாராவது தீர்த்துவைக்கட்டும்.+
22 இன்னும் சில வருஷங்கள்தான் நான் வாழப்போகிறேன்.
அதன்பின், திரும்பிவர முடியாத இடத்துக்குப் போய்விடுவேன்”+ என்று சொன்னார்.
2 கேலி செய்கிறவர்கள் என்னைச் சுற்றிலும் இருக்கிறார்கள்.+
அவர்களுடைய அக்கிரமங்களைப் பார்த்துப் பார்த்து எனக்கு அலுத்துவிட்டது.
3 கடவுளே, எனக்காகத் தயவுசெய்து உத்தரவாதம் கொடுங்கள்.
வேறு யார் எனக்குக் கைகொடுத்து, எனக்காக உத்தரவாதம் தருவார்கள்?+
5 நண்பர்களுக்குத் தானம் செய்யப்போவதாக ஒருவன் சொல்கிறான்.
ஆனால், அவனுடைய பிள்ளைகளே மற்றவர்களிடம் கையேந்தி நிற்கிறார்கள்.
8 நீதிநேர்மையோடு நடப்பவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள்.
கெட்டவர்களை* பார்த்து நல்லவர்கள் கொதித்துப்போகிறார்கள்.
10 சரி, நீங்கள் எல்லாரும் தொடர்ந்து வாதாடிப் பாருங்கள்.
ஏனென்றால், இதுவரை நீங்கள் யாருமே ஞானமாகப் பேசியதுபோல் எனக்குத் தெரியவில்லை.+
12 நீங்கள் உண்மை பேசுவதற்குப் பதிலாகப் பொய் பேசுகிறீர்கள்.*
இருள் சூழ்ந்திருக்கும்போது, ‘வெளிச்சம் வரப்போகிறது’ என்று சொல்கிறீர்கள்.
14 சவக்குழியைப்+ பார்த்து, ‘நீதான் என் தகப்பன்!’ என்று சொல்வேன்.
புழுக்களைப் பார்த்து, ‘என் தாயே! என் சகோதரியே!’ என்று சொல்வேன்.
15 எனக்கு எங்கே நம்பிக்கை இருக்கிறது!+
எனக்கு நம்பிக்கை இருப்பதாக யார்தான் நினைப்பார்கள்?
18 அதற்கு சுவாகியனான பில்தாத்,+
2 “உன் புராணத்தை எப்போதுதான் நிறுத்தப்போகிறாய்?
கொஞ்சமாவது புரிந்துகொள்; நாங்களும் பேச வேண்டாமா?
3 எங்களை ஏன் மிருகங்களைப் பார்ப்பதுபோல் பார்க்கிறாய்?+
நாங்களெல்லாம் உனக்கு முட்டாள்களாக* தெரிகிறோமோ?
4 நீ கோபத்தில் உன்னையே குதறிப்போட்டாலும்,
உனக்காக இந்தப் பூமி வெறுமையாகுமா?
அல்லது, பாறைதான் அதன் இடத்தைவிட்டு நகர்ந்துபோகுமா?
6 அவனுடைய கூடாரத்தில் வெளிச்சம் இல்லாமல்போகும்.
அவனுடைய விளக்கு அணைக்கப்படும்.
8 அவனுடைய கால்களே அவனை வலையில் சிக்க வைக்கும்.
அவன் நேராகப் போய் அதில் மாட்டிக்கொள்வான்.
10 அவன் வழியில் ஒரு கயிறு மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
அவன் பாதையில் ஒரு கண்ணி ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது.
13 படுபயங்கரமான நோய் அவனுடைய தோலைத் தின்கிறது.
அவனுடைய உறுப்புகளை அது உருக்குலைக்கிறது.
14 பாதுகாப்பான கூடாரத்தைவிட்டு அவன் வெளியேற்றப்படுகிறான்.+
நடுநடுங்க வைக்கும் ராஜாவிடம்* இழுத்துச் செல்லப்படுகிறான்.
15 முன்பின் தெரியாதவர்கள் அவன் கூடாரத்தில் குடியிருப்பார்கள்.
அவன் வீட்டின் மேல் கந்தகம் தூவப்படும்.+
16 அவனுடைய வேர்கள் காய்ந்துபோகும்.
கிளைகள் பட்டுப்போகும்.
17 அவனைப் பற்றிய நினைவுகள் மண்ணைவிட்டு நீங்கும்.
தெருவில் அவனுடைய பெயர் இல்லாமல்போகும்.
18 அவன் வெளிச்சத்திலிருந்து இருட்டுக்குத் துரத்தப்படுவான்.
வளமான தேசத்தைவிட்டு விரட்டப்படுவான்.
19 அவனுக்கு வாரிசும் இருக்காது, வம்சமும் இருக்காது.
அவனுடைய பேர் சொல்ல ஊரில்* ஆளே இருக்க மாட்டார்கள்.
20 அவனுக்கு அழிவு வரும்போது மேற்கில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைவார்கள்.
கிழக்கில் உள்ளவர்கள் திகிலடைவார்கள்.
21 தப்பு செய்கிறவனின் கூடாரத்துக்கு வரும் கதி இதுதான்.
கடவுளைப் பற்றித் தெரியாதவனுக்கு வரும் நிலைமை இதுதான்” என்று சொன்னான்.
19 அதற்கு யோபு,
3 ஒரு தடவைக்குப் பத்துத் தடவை என்னைக் கேவலமாகப் பேசிவிட்டீர்கள்.
கொஞ்சம்கூட ஈவிரக்கமில்லாமல் நடந்துகொள்கிறீர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா?+
4 அப்படியே நான் தப்பு செய்திருந்தாலும் என்ன?
அந்தப் பழியை நான்தானே சுமக்கப்போகிறேன்?
5 என்னைவிட நீங்கள்தான் ரொம்ப யோக்கியம் என்று நினைக்கிறீர்கள்.
‘நீ செய்த தப்புக்குத்தான் நன்றாக அனுபவிக்கிறாய்’ என்று சொல்கிறீர்கள்.
6 ஆனால் ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள்; கடவுள்தான் எனக்கு மோசம் செய்துவிட்டார்.
என்னை வலை விரித்துப் பிடித்துவிட்டார்.
7 ‘கொடுமை தாங்க முடியவில்லையே!’ என்று கதறுகிறேன், ஆனால் பதிலே இல்லை.+
உதவிக்காகக் கதறுகிறேன், ஆனால் நியாயம் கிடைத்த பாடில்லை.+
8 நான் தாண்டிப்போக முடியாதபடி அவர் என் வழியைக் கற்சுவரால் அடைத்துவிட்டார்.
என் பாதைகளையெல்லாம் இருட்டாக்கிவிட்டார்.+
9 என் கௌரவத்தைப் பறித்துவிட்டார்.
என் தலையிலுள்ள கிரீடத்தை எடுத்துவிட்டார்.
10 நான் செத்தால் போதும் என்று எல்லா பக்கத்திலிருந்தும் தாக்குகிறார்.
என் நம்பிக்கையை வேரோடு பிடுங்குகிறார்.
12 அவருடைய படைகள் திரண்டு வந்து என்னை வளைத்துக்கொள்கின்றன.
என் கூடாரத்தைச் சுற்றி முகாம்போடுகின்றன.
13 என் அண்ணன் தம்பிகளையே என்னிடம் அண்ட விடாமல் செய்துவிட்டார்.
பழக்கமானவர்கள் என் பக்கத்தில்கூட வருவதில்லை.+
14 ஒட்டி உறவாடியவர்கள்* ஒதுங்கிவிட்டார்கள்.
எனக்கு நன்றாகத் தெரிந்தவர்கள்கூட என்னைச் சுத்தமாக மறந்துவிட்டார்கள்.+
15 என் வீட்டு விருந்தாளிகளும்+ வேலைக்காரிகளும் என்னை வெளியாளாக நினைக்கிறார்கள்.
யாரோ எவரோ என்பதுபோல் பார்க்கிறார்கள்.
16 வேலைக்காரனை நான் கூப்பிட்டாலும், அவன் கண்டுகொள்வதே இல்லை.
உதவிக்காக அவனிடம் கெஞ்சிக் கூத்தாட வேண்டியிருக்கிறது.
17 என்னுடைய மூச்சுக்காற்று பட்டால்கூட என் மனைவி ஒதுங்கிப் போகிறாள்.+
என் அண்ணன் தம்பிகளே என்னை அருவருக்கிறார்கள்.
18 சின்னப் பிள்ளைகளுக்குக்கூட என்னைப் பார்த்தால் கேவலமாக இருக்கிறது.
நான் எழுந்து நின்றால் கிண்டலாகச் சிரிக்கிறார்கள்.
21 நண்பர்களே, இரக்கம் காட்டுங்கள்! தயவுசெய்து எனக்கு இரக்கம் காட்டுங்கள்!
கடவுளுடைய கை என்னைத் தாக்கிவிட்டது.+
22 அவரைப் போல் நீங்களும் ஏன் என்னைப் பாடாய்ப் படுத்துகிறீர்கள்?+
ஏன் விடாமல் தாக்கிக்கொண்டே இருக்கிறீர்கள்?+
23 என் வார்த்தைகள் எழுதி வைக்கப்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
அதெல்லாம் ஒரு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டால் சந்தோஷப்படுவேனே!
24 என்றென்றும் அழியாதபடி அவை பாறையில் செதுக்கப்படக் கூடாதா?
இரும்பு எழுத்தாணியாலும் ஈயத்தாலும் பொறிக்கப்படக் கூடாதா?
25 என்னை விடுவிக்கிறவர்+ உயிரோடு இருக்கிறார் என்று எனக்குத் தெரியும்.
அவர் பிற்பாடு வருவார், பூமிமேல்* எழுந்து நிற்பார்.
26 என் தோல் சிதைந்துபோன பிறகு,
உயிர் இருக்கும்போதே நான் கடவுளைப் பார்ப்பேன்.
27 நானே அவரைப் பார்ப்பேன்.
வேறொருவரின் கண்கள் அல்ல, என் கண்களே அவரைப் பார்க்கும்.+
ஆனாலும், இப்போது என் மனம் துடியாய்த் துடிக்கிறது.
28 ‘நாங்கள் எப்போது உன்னைப் பாடாய்ப் படுத்தினோம்?’+ என்று கேட்கிறீர்கள்.
பிரச்சினைக்குக் காரணமே நான்தான் என்பதுபோல் பேசுகிறீர்களே.
29 நீங்கள் வாளுக்குப் பயப்படுங்கள்.+
தப்பு செய்கிறவர்களை அது தண்டிக்கும்.
நீதிபதி ஒருவர் இருக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்!”+ என்று சொன்னார்.
20 அப்போது, நாகமாத்தியனான சோப்பார்,+
2 “நீ பேசுவதைக் கேட்டு என் இரத்தம் கொதிக்கிறது.
என் மனதில் இருப்பதையெல்லாம் சொல்ல என் வாய் துடிக்கிறது.
4 நான் சொல்லப்போவது ஒன்றும் உனக்குத் தெரியாத விஷயம் இல்லை.
மனுஷன் படைக்கப்பட்ட காலத்திலிருந்தே எல்லாருக்கும் தெரிந்த உண்மைதான்.+
5 பொல்லாதவனுடைய கூத்தும் கும்மாளமும் கொஞ்ச நாளுக்குத்தான்.
6 அவனுடைய புகழ் வானத்தைத் தொடலாம்.
அவனுடைய பெருமை மேகத்தை எட்டலாம்.
7 ஆனாலும், அவனுடைய மலத்தைப் போல அவனும் மண்ணோடு மண்ணாகிப்போவான்.
அவனுக்குப் பழக்கமானவர்கள், ‘அவன் எங்கே?’ என்று கேட்பார்கள்.
8 கனவைப் போல அவன் கலைந்துபோவான்; அவர்கள் தேடினாலும் அவன் கிடைக்க மாட்டான்.
ராத்திரியில் வரும் தரிசனம்போல் அவன் மறைந்துபோவான்.
10 அவனுடைய பிள்ளைகள் ஏழைகளிடம் கையேந்தி நிற்பார்கள்.
மற்றவர்களிடமிருந்து பறித்துக்கொண்ட பொருள்களை அவனே திருப்பிக்கொடுப்பான்.+
12 கெட்டதைச் செய்வது அவனுக்கு இனிப்பு சாப்பிடுவதுபோல் இருக்கலாம்.
அதைத் துப்புவதற்கு மனதே இல்லாமல்,
13 நாக்கின் அடியில் வைத்து,
ரசித்து ருசித்துக்கொண்டே இருக்கலாம்.
14 ஆனால் அது வயிற்றுக்குள் போனதும்,
கசப்பாக மாறி, நாகப்பாம்புகளின் விஷம்போல் ஆகிவிடும்.
15 மற்றவர்களின் சொத்துகளை அவன் விழுங்கினான்; ஆனால், விழுங்கியதையெல்லாம் வாந்தியெடுப்பான்.
கடவுள்தான் அவனை வாந்தியெடுக்க வைப்பார்.
16 நாகப்பாம்பின் விஷத்தை அவன் குடிப்பான்.
விரியன் பாம்பு அவன் உயிரைக் குடிக்கும்.
17 இனி நீரோடைகள் அவன் கண்ணில் படாது.
ஆறுபோல் ஓடும் தேனும் நெய்யும் அவனுக்குக் கிடைக்காது.
18 சேர்த்து வைத்த பொருள்களை அனுபவிக்காமலேயே திருப்பிக் கொடுப்பான்.
அவன் சம்பாதித்தவை அவனுக்குச் சந்தோஷம் தராது.+
19 ஏனென்றால், அவன் ஏழைகளைக் கொடுமைப்படுத்தினான், ஒதுக்கித்தள்ளினான்.
மற்றவர்களுடைய வீடுகளைப் பிடுங்கிக்கொண்டான்.
20 ஆனாலும், அவனுக்கு நிம்மதியே இருக்காது.
அவனுடைய சொத்து அவனைக் காப்பாற்றாது.
21 ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் அவன் விழுங்கிவிட்டான்.
அதனால், அவனுடைய செல்வமும் செழிப்பும் நிலைக்காது.
22 அவனுக்குப் பணம் வந்து குவியும்போது கவலைகளும் வந்து குவியும்.
அவனுக்கு அடுத்தடுத்து பல அசம்பாவிதங்கள் நடக்கும்.
23 அவன் வயிறு நிறைய சாப்பிடுவான்.
அப்போது, கடவுள் அவன்மேல் தன்னுடைய கோபக் கனலைக் கொட்டுவார்.
அதை அவன் வயிற்றில் கொட்டுவார்.
24 இரும்பு ஆயுதங்களுக்குப் பயந்து அவன் தப்பியோடும்போது,
செம்பு வில்லிலிருந்து பாயும் அம்புகள் அவனைத் துளைக்கும்.
25 முதுகிலிருந்து ஒரு அம்பை உருவி எடுப்பான்.
பித்தப்பையில் பாய்ந்த பளபளக்கும் அம்பைப் பிடுங்கி எடுப்பான்.
பயத்தில் குலைநடுங்கி நிற்பான்.+
26 அவன் சொத்துகளெல்லாம் அழிந்துவிடும்.
யாரும் பற்ற வைக்காத* நெருப்பு அவனைப் பொசுக்கிவிடும்.
அவனுடைய கூடாரத்தில் மிச்சமிருக்கிற எல்லாருக்கும் அழிவு வரும்.
27 வானம் அவனுடைய குற்றத்தை வெளிப்படுத்தும்.
பூமி அவனுக்கு எதிராகச் சாட்சி சொல்லும்.
28 கடவுள் கோபத்தைக் காட்டப்போகிற நாளில் பெருவெள்ளம் வரும்.
அது அவனுடைய வீட்டை அடித்துக்கொண்டு போகும்.
29 இதுதான் கெட்டவனுக்குக் கடவுள் கொடுக்கும் கூலி.
இதுதான் கடவுள் அவனுக்கு ஒதுக்கியிருக்கும் சொத்து” என்று சொன்னான்.
21 அதற்கு யோபு,
2 “நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்.
அப்படிக் கேட்டாலே நீங்கள் எனக்கு ஆறுதல் சொல்வதுபோல் இருக்கும்.
3 கொஞ்ச நேரம் நான் பேசுவதைப் பொறுத்துக்கொள்ளுங்கள்.
அதன் பின்பு என்னை எப்படி வேண்டுமானாலும் கேலி செய்யுங்கள்.+
4 ஒரு மனுஷனிடமா என் குறையைச் சொல்கிறேன்?
அப்படிச் சொல்லியிருந்தால், பொறுமை இழந்திருப்பேனே.
5 என்னை உற்றுப் பாருங்கள், அப்போது ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.
உங்கள் வாயைக் கையால் பொத்திக்கொள்வீர்கள்.
6 நடந்ததையெல்லாம் நினைக்கும்போது என் மனம் படபடக்கிறது.
உடம்பெல்லாம் நடுநடுங்குகிறது.
7 கெட்டவர்கள் ஏன் ஒழிந்துபோவதில்லை?+
அவர்கள் சொத்துசுகத்தோடு* ரொம்ப நாள் வாழ்கிறார்கள்.+
8 எப்போதும் பிள்ளைகளோடு சேர்ந்து இருக்கிறார்கள்.
பேரப்பிள்ளைகளைப் பார்க்கும் பாக்கியமும் அவர்களுக்குக் கிடைக்கிறது.
9 எந்தப் பயமும் இல்லாமல் வீட்டில் பத்திரமாக இருக்கிறார்கள்.+
கடவுள் அவர்களுக்குத் தண்டனை கொடுப்பதில்லை.
10 அவர்களுடைய காளைகள் இணைசேருவது வீணாவதில்லை.
அவர்களுடைய பசுக்களுக்கு நல்லபடியாகக் கன்றுகள் பிறக்கின்றன.*
11 அவர்களுடைய பிள்ளைகள் ஆடுகளைப் போல வெளியே துள்ளி ஓடுகிறார்கள்.
சந்தோஷத்தில் குதித்தாடுகிறார்கள்.
14 ஆனால் அவர்கள் உண்மைக் கடவுளிடம், ‘எங்களை விட்டுவிடுங்கள்!
உங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள எங்களுக்கு விருப்பமே இல்லை’ என்று சொல்கிறார்கள்.+
15 அதோடு, ‘சர்வவல்லமையுள்ளவரா? யார் அவர்? அவரை நாங்கள் ஏன் வணங்க வேண்டும்?+
அவரைப் பற்றித் தெரிந்துகொள்வதால் எங்களுக்கு என்ன பிரயோஜனம்?’ என்று கேட்கிறார்கள்.+
16 ஆனால், அவர்களுடைய செல்வச்செழிப்பு அவர்கள் கையில் இல்லை என்று எனக்குத் தெரியும்.+
பொல்லாதவர்களைப் போல் நான் யோசிப்பதே* கிடையாது.+
17 பொல்லாதவர்களுடைய வாழ்க்கை எப்போதாவது இருண்டுபோயிருக்கிறதா?*+
அவர்களுக்கு எப்போதாவது ஆபத்து வந்திருக்கிறதா?
கடவுள் அவர்களை எப்போதாவது கோபத்தில் அழித்திருக்கிறாரா?
18 அவர்கள் காற்றில் அடித்துச் செல்லப்படும் துரும்பைப் போலக் காணாமல்போகிறார்களா?
புயல்காற்றில் பறந்துபோகும் பதரைப் போல மறைந்துபோகிறார்களா?
19 ஒருவனுக்குக் கொடுக்க வேண்டிய தண்டனையை அவனுடைய மகன்களுக்குக் கடவுள் கொடுப்பார்.
ஆனால், அவனுடைய தப்பை உணர்த்துவதற்காக அவனையே கடவுள் தண்டிக்கட்டும்.+
20 அவனுக்கு வருகிற அழிவை அவனே பார்க்கட்டும்.
சர்வவல்லமையுள்ளவரின் கோபக் கிண்ணத்திலிருந்து அவன் குடிக்கட்டும்.+
22 கடவுளுக்கு யார் கற்றுத்தர* முடியும்?+
உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்குக்கூட அவர்தானே தீர்ப்பு கொடுக்கிறார்?+
23 ஒருவன் இளமைத்துடிப்போடு இருக்கும்போது,
கவலையே இல்லாமல் நிம்மதியாக இருக்கும்போது,+
24 தொடைகள் கொழுத்திருக்கும்போது,
எலும்புகள் பலமாக இருக்கும்போது செத்துப்போகிறான்.+
25 ஆனால், இன்னொருவன் நல்லது எதையுமே அனுபவிக்காமல்
வேதனைக்குமேல் வேதனைப்பட்டு சாகிறான்.
27 இப்போது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.
28 ‘அதிபதியின் வீடு அழிந்துவிட்டதே!
கெட்டவனின் கூடாரம் காணாமல் போய்விட்டதே!’ என்று நீங்கள் சொல்கிறீர்கள்.+
29 ஊர் ஊராகப் பயணம் செய்பவர்களிடம் நீங்கள் கேட்கவில்லையா?
அவர்கள் சொன்னதையெல்லாம் கவனமாக யோசித்துப் பார்க்கவில்லையா?
30 அழிவு நாளில் கெட்டவனுக்கு ஒன்றும் ஆவதில்லை,
கடும் கோபத்தின் நாளில் அவன் தப்பித்துக்கொள்கிறான் என்றுதானே அவர்கள் சொல்லியிருப்பார்கள்.
31 கெட்டவன் செய்கிற தவறுகளை யாராவது தட்டிக்கேட்கிறார்களா?
அவனுக்கு யாராவது தண்டனை கொடுக்கிறார்களா?
32 அவன் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவான்.
அவனுடைய சமாதிக்குக் காவல் வைக்கப்படும்.
33 மண்ணுக்குள் படுத்திருப்பது அவனுக்குச் சொகுசாக இருக்கும்.+
அவனுக்குமுன் கணக்குவழக்கு இல்லாத ஆட்கள் அங்கே போயிருக்கிறார்கள்.+
அவனுக்குப் பின்னும் மனுஷர்கள் எல்லாரும் அங்குதான் போவார்கள்.
34 அதனால், ஏன் வீணாக எனக்கு ஆறுதல் சொல்கிறீர்கள்?+
உங்கள் பேச்சில் பொய்யும் புரட்டும் தவிர வேறொன்றும் இல்லை” என்று சொன்னார்.
22 அதற்கு தேமானியனான எலிப்பாஸ்,+
2 “மனுஷனால் கடவுளுக்கு ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா?
ஒருவன் விவேகமாக* இருப்பதால் அவருக்கு என்ன பயன்?+
3 நீ நீதிமானாக இருப்பதைப் பார்த்து சர்வவல்லமையுள்ளவர் சந்தோஷப்படுகிறாரா?
நீ உத்தமமாக இருப்பதால் அவருக்கு ஏதாவது லாபம் கிடைக்கப்போகிறதா?+
4 கடவுள் ஏன் உனக்குக் கஷ்டம் கொடுத்தார் என்று நினைக்கிறாய்?
அவருக்குப் பயந்து நடப்பதாலா உனக்குத் தண்டனை கொடுத்தார்?
8 உன்னைப் போன்ற செல்வாக்குள்ள ஆட்கள் நிலங்களைப் பறித்துக்கொண்டார்கள்.+
அப்படிப்பட்டவர்கள்தான் அங்கே குடியிருக்கிறார்கள்.
10 அதனால்தான் சுற்றிவர ஆபத்துகளில்* சிக்கியிருக்கிறாய்.+
எதிர்பாராத சம்பவங்களால் ஆடிப்போயிருக்கிறாய்.
11 அதனால்தான் பயங்கரமான இருட்டுக்குள் கண் தெரியாமல் கிடக்கிறாய்.
வெள்ளத்தில் தத்தளிக்கிறாய்.
12 நட்சத்திரங்கள் எவ்வளவு உயரத்தில் இருக்கிறதென்று பார்.
கடவுள் அதைவிட உயரத்தில்தானே இருக்கிறார்?
13 ஆனால் நீ, ‘கடவுளுக்கு என்ன தெரியும்?
இருண்ட மேகங்கள் வழியாகப் பார்த்து அவரால் தீர்ப்பு சொல்ல முடியுமா?’ என்று கேட்கிறாய்.
15 முன்பு வாழ்ந்த கெட்டவர்களை நீ பின்பற்றுவாயா?
அவர்கள் போன பாதையில் நீயும் போவாயா?
16 வாழ வேண்டிய காலத்தில் அவர்கள் அழிந்துபோனார்களே.
வெள்ளம் அடித்துக்கொண்டு போவதுபோல் அடித்துக்கொண்டு போகப்பட்டார்களே.+
17 அவர்கள் உண்மைக் கடவுளை நினைக்கவே இல்லை.
‘சர்வவல்லமையுள்ளவர் எங்களுக்கு என்ன செய்துவிட முடியும்?’ என்று கேட்டார்கள்.
18 ஆனால், அவர்களுடைய வீட்டை நல்ல பொருள்களால் நிரப்பியது அவர்தான்.
(அப்படிப்பட்ட கெட்ட எண்ணம் எனக்கு இல்லவே இல்லை.)
19 நீதிமான்கள் அவர்களுடைய அழிவைப் பார்த்து சந்தோஷப்படுவார்கள்.
நேர்மையானவர்கள் அதைப் பார்த்து சிரிப்பார்கள்.
20 ‘நம் எதிரிகள் அழிந்துபோனார்கள்.
அவர்கள் விட்டுவிட்டுப் போனதெல்லாம் நெருப்பில் அழிக்கப்படும்’ என்று சொல்வார்கள்.
21 கடவுளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள், அப்போது நிம்மதியாக இருப்பாய்.
நிறைய ஆசீர்வாதங்களை அனுபவிப்பாய்.
23 சர்வவல்லமையுள்ளவரின் பேச்சைக் கேள்; அப்போது பழைய நிலைமைக்கு வந்துவிடுவாய்.+
அநியாயம் செய்வதை விட்டுவிடு.
24 நீ சேர்த்து வைத்திருக்கிற தங்கக்கட்டிகளைத் தூக்கியெறி.
ஓப்பீரின்* தங்கத்தைப்+ பள்ளத்தாக்கிலே வீசிவிடு.
25 அப்போது, சர்வவல்லமையுள்ளவர் உனக்குத் தங்கக்கட்டிபோல் இருப்பார்.
விலைமதிப்புள்ள வெள்ளி போலவும் இருப்பார்.
27 அவரிடம் வேண்டிக்கொள்வாய், அவர் அதைக் கேட்பார்.
நீ உன்னுடைய நேர்த்திக்கடன்களைச் செலுத்துவாய்.
28 நீ நினைப்பதெல்லாம் நடக்கும்.
உன் வாழ்க்கை பிரகாசமாகும்.
29 அகம்பாவத்துடன் பேசினால் உனக்கு அவமானம்தான் வரும்.
தாழ்மையுள்ள ஆட்களைத்தான் அவர் பாதுகாப்பார்.
30 அப்பாவிகளை அவர் விடுவிப்பார்.
உன் கைகள் சுத்தமாக இருந்தால் நிச்சயம் உன்னைக் காப்பாற்றுவார்” என்று சொன்னான்.
23 அதற்கு யோபு,
2 “நீங்கள் என்ன சொன்னாலும் சரி, எனக்காக வாதாடுவதை நிறுத்த மாட்டேன்.+
பெருமூச்சுவிட்டு பெருமூச்சுவிட்டு என் பலமெல்லாம் போய்விட்டது.
3 கடவுள் எங்கே இருக்கிறார் என்று தெரிந்தால் நன்றாக இருக்குமே!+
அங்கேயே நான் போய்விடுவேனே!+
4 என் வழக்கை அவரிடம் கொண்டுபோவேன்.
என் பக்கம் இருக்கிற நியாயத்தையெல்லாம் சொல்வேன்.
5 அவர் சொல்லும் பதிலைக் கேட்பேன்.
அவர் பேசும்போது நன்றாகக் கவனிப்பேன்.
6 மிகுந்த அதிகாரத்தோடு அவர் என்னிடம் வாதாடுவாரா?
வாதாட மாட்டார், நான் சொல்வதை நிச்சயம் கேட்பார்.+
7 நேர்மையானவனுக்கு அவர் நல்ல தீர்ப்பு கொடுப்பார்.
என் நீதிபதி என்னை நிரபராதி என்று சொல்வார்.
8 ஆனால், நான் கிழக்கே போனாலும் அவர் இல்லை.
மேற்கே போனாலும் அவர் இல்லை.
9 அவர் இடது பக்கம் வேலை செய்யும்போது அவரை என்னால் பார்க்க முடிவதில்லை.
அவர் வலது பக்கம் திரும்பும்போதும் என்னால் பார்க்க முடிவதில்லை.
10 ஆனாலும், நான் எந்த வழியில் போகிறேன் என்று அவருக்குத் தெரியும்.+
அவர் என்னைப் புடமிட்டுப் பார்த்தபின் நான் சுத்தமான தங்கம்போல் ஆவேன்.+
12 அவருடைய கட்டளைகளை நான் மீறியதே இல்லை.
அவர் என்னிடம் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே அவருடைய வார்த்தையைப் பொக்கிஷமாக மதித்தேன்.+
13 அவர் ஒரு முடிவெடுத்தால் அதை யாரால் மாற்ற முடியும்?+
அவர் ஒன்றைச் செய்ய நினைத்தால் கண்டிப்பாக அதைச் செய்வார்.+
14 என் வாழ்க்கையில் செய்ய நினைத்திருப்பதையும் செய்து முடிப்பார்.
இதுபோல் இன்னும் நிறைய செய்யப்போகிறார்.
15 அதனால்தான், கவலையாக இருக்கிறேன்.
அவரைப் பற்றி நினைத்தாலே எனக்குப் பயம் அதிகமாகிறது.
16 கடவுள் என்னை ஒரு கோழையாக்கிவிட்டார்.
சர்வவல்லமையுள்ளவர் என்னை நடுங்க வைத்துவிட்டார்.
17 இருள் என்னைச் சூழ்ந்துகொண்டது, என் வாழ்க்கையே இருண்டுவிட்டது.
ஆனாலும், நான் பேசாமல் இருக்க மாட்டேன்” என்று சொன்னார்.
24 பின்பு அவர்,
“சர்வவல்லமையுள்ளவர் தண்டனைத் தீர்ப்பு நாளை ஏன் குறிக்காமல் இருக்கிறார்?+
அவரைப் பற்றித் தெரிந்தவர்கள் அந்த நாளை ஏன் உணராமல் இருக்கிறார்கள்?
2 அவர்கள் மற்றவர்களுடைய நிலத்தின் எல்லைக் குறியைத் தள்ளிவைக்கிறார்கள்.+
ஆட்டு மந்தைகளைத் திருடி தங்களுடைய மேய்ச்சல் நிலத்துக்குக் கொண்டுபோகிறார்கள்.
3 அப்பா இல்லாத பிள்ளையின் கழுதையை ஓட்டிக்கொண்டு போகிறார்கள்.
விதவையின் காளையை அடமானமாகப் பிடுங்கிக்கொள்கிறார்கள்.+
5 காட்டுக் கழுதைகள்+ உணவுக்காக வனாந்தரத்தில் அலைவது போல ஏழைகளும் அலைகிறார்கள்.
பிள்ளைகளுக்காக உணவு தேடி பாலைவனத்தில் சுற்றித்திரிகிறார்கள்.
6 அவர்கள் வேறொருவரின் வயலில் அறுவடை செய்கிறார்கள்.*
கெட்டவனின் திராட்சைத் தோட்டத்தில் பழங்களைப் பொறுக்குகிறார்கள்.
7 உடை இல்லாததால் ராத்திரியில் வெறும் உடம்போடு படுத்துக்கொள்கிறார்கள்.+
குளிரில் போர்த்திக்கொள்ள அவர்களிடம் எதுவும் இல்லை.
8 மலைமேல் பெய்யும் மழையில் தொப்பலாக நனைந்துவிடுகிறார்கள்.
ஒதுங்க இடமில்லாமல் பாறைகளை ஒட்டி நிற்கிறார்கள்.
9 கெட்டவர்கள், விதவைத் தாயிடம் பால் குடித்துக்கொண்டிருக்கிற குழந்தையைப் பறித்துக்கொண்டு போகிறார்கள்.+
ஏழைகளின் துணிமணிகளை அடமானமாக எடுத்துக்கொள்கிறார்கள்.+
10 அவர்களை வெறும் உடம்போடு அலைய விடுகிறார்கள்.
பசியோடு கதிர்க் கட்டுகளைச் சுமக்க வைக்கிறார்கள்.
11 மதில்கள் சூழ்ந்த திராட்சைத் தோட்டங்களிலே ஏழைகள் உச்சி வெயிலில் பாடுபடுகிறார்கள்.*
திராட்சரச ஆலைகளில் கால்வலிக்க திராட்சைகளை மிதிக்கிறார்கள், ஆனாலும் தாகத்தில் தவிக்கிறார்கள்.+
12 சாகக் கிடப்பவர்கள் நகரத்தில் முனகிக்கொண்டிருக்கிறார்கள்.
படுகாயம் அடைந்தவர்கள் உதவிக்காகக் கதறுகிறார்கள்.+
ஆனால், கடவுள் அதைக் கண்டுகொள்வதே இல்லை.*
13 வெளிச்சத்தை வெறுக்கும் ஆட்கள் சிலர் இருக்கிறார்கள்.+
அதன் வழிகளை அவர்கள் புரிந்துகொள்வதில்லை.
அதன் பாதைகளில் நடப்பதுமில்லை.
14 கொலைகாரன் விடியற்காலையில் எழுந்திருக்கிறான்.
ஆதரவற்றவர்களையும் ஏழைகளையும் கொலை செய்கிறான்.+
ராத்திரியில் திருடுகிறான்.
15 மனைவிக்குத் துரோகம் செய்பவன் இருட்டுவதற்காகக் காத்திருக்கிறான்.+
‘யாரும் என்னைப் பார்க்க மாட்டார்கள்’ என்று நினைக்கிறான்.+
தன்னுடைய முகத்தையும் மூடிக்கொள்கிறான்.
16 அவர்கள் ராத்திரியில் வீடுகளை உடைத்து உள்ளே நுழைகிறார்கள்.
பகலில் தங்கள் வீட்டில் பதுங்கிக்கொள்கிறார்கள்.
வெளிச்சத்தில் அவர்கள் தலைகாட்டுவதில்லை.+
17 மற்றவர்கள் ராத்திரிக்குப் பயப்படுவதுபோல் அவர்கள் பகலுக்குப் பயப்படுகிறார்கள்.
ஆனால், ராத்திரி நேர திகில்களுக்கு அவர்கள் பழக்கப்பட்டிருக்கிறார்கள்.
18 வெள்ளத்தில் அவர்கள் வேகமாக அடித்துச் செல்லப்படுவார்கள்.
அவர்களுடைய நிலம் சபிக்கப்படும்.+
அவர்களுடைய திராட்சைத் தோட்டத்துக்கு அவர்கள் திரும்பிவர மாட்டார்கள்.
20 அவனைப் பெற்றவள் அவனை மறந்துவிடுவாள். புழுக்கள் அவனைத் தின்றுவிடும்.
அவனை யாரும் நினைத்துப் பார்க்க மாட்டார்கள்.+
அந்த அக்கிரமக்காரன் மரத்தைப் போல் வெட்டிச் சாய்க்கப்படுவான்.
21 ஏனென்றால், குழந்தையில்லாத பெண்ணிடம் அவன் கேவலமாக நடந்துகொள்கிறான்.
விதவையைக் கொடுமைப்படுத்துகிறான்.
22 பலமுள்ளவனைக் கடவுள் தன்னுடைய பலத்தால் அழிப்பார்.
அவன் உயர்ந்த நிலையை அடைந்தாலும் அவனுடைய உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
23 கடவுள் அவனைத் தைரியத்தோடும் பாதுகாப்போடும் வாழ விடுகிறார்.+
ஆனால், அவன் செய்வதையெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.+
24 அவன் கொஞ்சக் காலத்துக்கு உயர்ந்த நிலையில் இருந்தாலும், பின்பு காணாமல் போய்விடுவான்.+
அவன் தாழ்த்தப்படுவான்,+ மற்ற எல்லாரையும் போலச் செத்துப்போவான்.
கதிர்கள் வெட்டப்படுவது போல வெட்டப்படுவான்.
25 இதெல்லாம் பொய் என்று யாராவது சொல்ல முடியுமா?
நான் சொல்வதை யாராவது மறுக்க முடியுமா?” என்றார்.
25 அதற்கு சுவாகியனான பில்தாத்,+
2 “கடவுளிடம் அரசாட்சியும் மகா சக்தியும் இருக்கிறது.
அவர் பரலோகத்தில் சமாதானத்தை ஏற்படுத்துகிறார்.
3 அவருடைய படைகளை எண்ண முடியுமா?
அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமல் இருக்கிறது?
4 அப்பேர்ப்பட்ட கடவுளுக்குமுன் அற்ப மனுஷன் நீதிமானாக இருக்க முடியுமா?+
பெண்ணின் வயிற்றில் பிறந்தவன் குற்றமற்றவனாக* இருக்க முடியுமா?+
5 அவருடைய கண்களுக்கு நிலவுகூட பிரகாசமாக இல்லை.
நட்சத்திரங்களும் தூய்மையாக இல்லை.
6 அப்படியிருக்கும்போது, சாதாரண மனுஷன் எந்த மூலைக்கு!
அவன் அவருக்குமுன் ஒரு சின்ன புழுவைப் போலத்தானே இருக்கிறான்!” என்று சொன்னான்.
26 அதற்கு யோபு,
2 “சோர்ந்துபோனவனுக்கு ரொம்பவே உதவி செய்துவிட்டீர்கள்!
சக்தி இல்லாமல் கிடந்தவனை நன்றாகவே தூக்கி நிறுத்திவிட்டீர்கள்!+
3 புத்தி* இல்லாதவனுக்குப் பெரிதாகப் புத்தி சொல்லிவிட்டீர்கள்!+
நீங்கள் பெரிய ஞானி என்று காட்டிவிட்டீர்கள்!
4 யாரைப் பார்த்துப் பேசுகிறீர்கள்?
இப்படியெல்லாம் பேச யார் உங்களைத் தூண்டிவிட்டது?
5 செத்துக் கிடக்கிறவர்கள்* கடவுளுக்கு முன்னால் நடுங்குகிறார்கள்.
அவர்கள் கடலையும் கடல் பிராணிகளையும்விட கீழ்மட்டத்தில் இருக்கிறார்கள்.
7 வெறுமையான இடத்தில் அவர் வானத்தை* விரித்தார்.+
பூமியை அந்தரத்தில் தொங்கவிட்டார்.
8 மேகத்தில் தண்ணீரைக் கட்டி வைக்கிறார்.+
அதன் எடையால் மேகம் கிழிவதில்லை.
9 அவருடைய சிம்மாசனத்தை மறைக்கிறார்.
மேகத்தால் அதை மூடுகிறார்.+
10 கடலும் வானமும் தொடுவதுபோல் ஒரு எல்லைக்கோட்டைப் போட்டிருக்கிறார்.+
வெளிச்சத்துக்கும் இருட்டுக்கும் ஒரு எல்லையைக் குறித்திருக்கிறார்.
11 வானத்தின் தூண்கள் அதிர்கின்றன.
அவர் அதட்டும்போது அவை நடுங்குகின்றன.
12 அவருடைய சக்தியால் கடலைக் கொந்தளிக்க வைக்கிறார்.+
அவருடைய புத்தியால்* ராட்சதக் கடல் பிராணியை* நொறுக்குகிறார்.+
13 வானத்திலுள்ள மேகங்களை அவருடைய மூச்சுக்காற்றால்* கலைக்கிறார்.
நழுவி* செல்லும் பாம்பை அவருடைய கையால் குத்திக் கொல்கிறார்.
14 இவையெல்லாம் அவருடைய வழிகளின் ஓரங்கள்தான்!+
அவரைப் பற்றி நம் காதில் விழுந்திருப்பதெல்லாம் ரொம்பவே லேசான சத்தம்தான்!
அப்படியிருக்கும்போது, அவர் உண்டாக்குகிற மாபெரும் இடிமுழக்கத்தை யார்தான் புரிந்துகொள்ள முடியும்?”+ என்று சொன்னார்.
27 பின்பு யோபு தன்னுடைய பேச்சைத் தொடர்ந்தார். அவர் அவர்களிடம்,
2 “எனக்கு நியாயம் செய்யாத கடவுள்மேல்+ ஆணையாகச் சொல்கிறேன்,*
என் வாழ்க்கையைக் கசப்பாக்கிவிட்ட சர்வவல்லமையுள்ளவர்மேல் சத்தியமாகச் சொல்கிறேன்,+
3 நான் உயிரோடு இருக்கிற வரைக்கும்,
கடவுள் கொடுத்த உயிர்மூச்சு எனக்குள் இருக்கிற வரைக்கும்,+
4 அநியாயமாக எதையும் பேச மாட்டேன்.
பொய் சொல்ல மாட்டேன்.
5 உங்களையெல்லாம் நீதிமான்கள் என்று சொல்ல எனக்கு வாயே வராது.
சாகும்வரை நான் என்னுடைய உத்தமத்தை விட மாட்டேன்.*+
6 நான் எப்போதும் நீதியாக நடந்துகொள்வேன், ஒருபோதும் அநியாயம் செய்ய மாட்டேன்.+
உயிரோடு இருக்கும்வரை என் உள்ளம் என்னை உறுத்தாது.
7 என் எதிரிகள் பொல்லாதவர்களைப் போல நாசமாகட்டும்.
என்னைத் தாக்குகிறவர்கள் அநியாயம் செய்கிறவர்களைப் போல ஒழிந்துபோகட்டும்.
10 அப்படிப்பட்டவன் சர்வவல்லமையுள்ளவரை வணங்குவதில்* சந்தோஷப்படுவானா?
எப்போதும் அவரிடம் ஜெபம் செய்வானா?
11 கடவுள் எவ்வளவு வல்லமை உள்ளவர் என்று* நான் உங்களுக்குச் சொல்லித்தருவேன்.
சர்வவல்லமையுள்ளவரைப் பற்றி எதையும் மறைக்காமல் சொல்வேன்.
12 தரிசனங்களைப் பார்த்ததாக நீங்கள் எல்லாரும் சொல்கிறீர்கள்.
ஆனால், நீங்கள் சொல்வது எல்லாமே முட்டாள்தனமாக இருக்கிறதே!
13 கெட்டவனுக்குக் கடவுள் என்ன கொடுக்கப்போகிறார் தெரியுமா?+
கொடுமை செய்கிறவனுக்கு சர்வவல்லமையுள்ளவர் என்ன செய்யப்போகிறார் தெரியுமா?
14 அவனுக்கு நிறைய மகன்கள் பிறந்தாலும் அவர்கள் வாளால் சாவார்கள்.+
அவனுடைய பிள்ளைகள் பசியில் தவிப்பார்கள்.
15 அவனுக்குப் பின்பு உயிரோடு இருக்கிறவர்கள் பயங்கரமான வியாதியால் செத்துப்போவார்கள்.
அவர்களுடைய மனைவிகள் அவர்களுக்காக அழ மாட்டார்கள்.
16 வெள்ளியை அவன் ஏராளமாக* குவித்து வைத்தாலும்,
நல்ல துணிமணிகளை நிறைய* சேர்த்து வைத்தாலும்,
17 அவன் சேர்த்து வைத்ததையெல்லாம்
நீதிமான்கள்தான் உடுத்திக்கொள்வார்கள்.+
அவனுடைய வெள்ளியைப் பழிபாவம் இல்லாதவர்கள்தான் அனுபவிப்பார்கள்.
18 அவன் கட்டுகிற வீடு ஒரு பூச்சியின்* கூட்டைப் போலவும்,
வயலைக் காவல்காப்பவனுடைய பந்தல் போலவும்+ உறுதியில்லாமல் இருக்கும்.
19 அவன் பணக்காரனாகத் தூங்கப் போனாலும், சொத்துகள் சேர்த்திருக்க மாட்டான்.
அவன் கண்திறந்து பார்க்கும்போது ஒன்றுமே இருக்காது.
20 வெள்ளத்தில் மூழ்குவது போல அவன் பயத்தில் மூழ்குவான்.
ராத்திரியில் புயல்காற்று அவனை அடித்துக்கொண்டு போய்விடும்.+
21 கிழக்குக் காற்று அவனை இழுத்துக்கொண்டு போய்விடும்.
அவனுடைய இடத்திலிருந்து அவனை அடித்துக்கொண்டு போய்விடும், அவன் இல்லாமல்போவான்.+
23 அது அவனைப் பார்த்துக் கைதட்டிச் சிரிக்கும்.
அதன் இடத்திலிருந்து அவனைப் பார்த்துக் கிண்டலாக விசில் அடிக்கும்”*+ என்று சொன்னார்.
28 பின்பு அவர்,
“வெள்ளியைத் தோண்டி எடுக்க ஒரு இடம் இருக்கிறது.
தங்கத்தைப் புடமிடவும் ஒரு இடம் இருக்கிறது.+
3 அதற்காக நிலத்துக்கு அடியிலுள்ள இருட்டையும் வெளிச்சமாக்குகிறான்.
கும்மிருட்டுக்குள் எவ்வளவு தூரம் இறங்க முடியுமோ அவ்வளவு தூரம் இறங்குகிறான்.
விலைமதிப்புள்ள பொருள்களைத் தேடுகிறான்.
4 ஜனங்கள் குடியிருக்கிற இடத்தைவிட்டு ரொம்பத் தூரத்தில் சுரங்கம் தோண்டுகிறான்.
மனுஷ நடமாட்டமே இல்லாமல்போன இடத்தில் தோண்டுகிறான்.
சிலர் கயிற்றில் தொங்கிக்கொண்டு கீழே இறங்கி வேலை செய்கிறார்கள்.
6 அங்கே இருக்கிற பாறைகளில் நீலமணிக் கல் கிடைக்கிறது.
அங்கே இருக்கிற மண்ணில் தங்கம் கலந்திருக்கிறது.
7 அந்தச் சுரங்கப் பாதை எந்தக் கழுகின் கண்ணுக்கும் தெரியாது.
கறுப்புப் பருந்தும் அதைப் பார்த்தது கிடையாது.
8 கொடிய மிருகங்கள் அங்கே நடமாடியதில்லை.
இளம் சிங்கம் அங்கே சுற்றித் திரிந்ததில்லை.
9 கெட்டியான பாறையை மனுஷன் உடைக்கிறான்.
மலைகளைப் புரட்டிப் போடுகிறான்.
11 நிலத்தடி நீரோடைகளுக்கு அணை போடுகிறான்.
மறைந்து கிடப்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறான்.
14 ‘அது எனக்குள்ளே இல்லை’ என்று ஆழ்கடல் சொல்கிறது.
‘அது என்னிடம் இல்லை’ என்று பெருங்கடலும் சொல்கிறது.+
16 ஓப்பீரின்* தங்கத்தைக் கொடுத்து அதை வாங்க முடியாது.+
அபூர்வமாகக் கிடைக்கிற கோமேதகத்தையும் நீலமணிக் கல்லையும் கொடுத்தால்கூட அது கிடைக்காது.
17 தங்கமும் விலை உயர்ந்த கண்ணாடியும் அதன் பக்கத்தில் வர முடியாது.
சொக்கத்தங்கத்தில் செய்த பாத்திரத்தைக் கொடுத்தாலும் அது கிடைக்காது.+
18 பவளமும் படிகக்கல்லும் அதன் பக்கத்தில் நெருங்க முடியாது.+
பை நிறைய இருக்கிற முத்துக்களைவிட ஞானம் ரொம்பவே மதிப்புள்ளது.
19 எத்தியோப்பியாவின்* புஷ்பராகக் கல்லும்+ அதற்குச் சமமாகாது.
சுத்தமான தங்கத்தைக் கொடுத்தாலும் அதை வாங்க முடியாது.
21 எல்லா உயிர்களின் கண்ணுக்கும் அது மறைவாக இருக்கிறது.+
வானத்தில் பறக்கிற பறவைகளாலும் அதைப் பார்க்க முடியாது.
23 அதை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்று கடவுளுக்கு மட்டும்தான் தெரியும்.
அது எங்கே இருக்கிறது என்று அவருக்கு மட்டும்தான் தெரியும்.+
24 அவருடைய கண் பூமி முழுவதையும் பார்க்கிறது.
வானத்துக்குக் கீழே இருக்கிற எல்லாவற்றையும் அவர் கவனிக்கிறார்.+
25 அவர் காற்றுக்குப் பலத்தைக் கொடுத்தபோது,+
தண்ணீரை அளந்து வைத்தபோது,+
26 மழைக்குச் சட்டம் போட்டபோது,+
மழைமேகத்துக்கும் இடிமுழக்கத்துக்கும் வழியை உண்டாக்கியபோது,+
27 அவர் ஞானத்தைப் பார்த்தார், அதை விளக்கிக் காட்டினார்.
அதை நிலைநிறுத்தினார், அதைச் சீர்தூக்கிப் பார்த்தார்.
28 அவர் மனுஷனிடம்,
‘யெகோவாவுக்குப் பயப்படுவதுதான் ஞானம்.+
கெட்ட காரியங்களை விட்டு விலகுவதுதான் புத்திக்கு* அடையாளம்’+ என்று சொன்னார்” என்றார்.
29 பின்பு யோபு தன் பேச்சைத் தொடர்ந்தார். அவர் அவர்களிடம்,
2 “நான் முன்புபோல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
அப்போதெல்லாம் கடவுள் என்னை நன்றாகக் கவனித்துக்கொண்டார்.
3 அவருடைய வெளிச்சம் என்மேல் பிரகாசித்தது.
அதனால், இருட்டிலும் என்னால் நடக்க முடிந்தது.+
4 நான் இளமைத்துடிப்போடு வாழ்ந்தேன்.
கடவுளோடு எனக்கிருந்த நட்பினால் என் கூடாரம் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தது.+
5 சர்வவல்லமையுள்ளவர் எனக்குத் துணையாக இருந்தார்.
என் பிள்ளைகள்* என்னைச் சுற்றி இருந்தார்கள்.
6 நான் நடந்துபோன பாதைகளில் நெய் ஓடியது.
எனக்காகப் பாறைகளிலிருந்து எண்ணெய் ஆறாகப் பாய்ந்து வந்தது.+
பொது சதுக்கத்தில் உட்கார்ந்தபோது,+
8 வயதில் சிறியவர்கள் மரியாதையோடு ஒதுங்கி நின்றார்கள்.
வயதில் பெரியவர்களும் எழுந்து நின்றார்கள்.+
9 அதிகாரிகள் என் முன்னால் பேசக்கூடத் தயங்கினார்கள்.
கையால் தங்கள் வாயைப் பொத்திக்கொண்டார்கள்.
10 பெரிய மனுஷர்களுடைய குரல் அடங்கிப்போனது.
அவர்களுடைய நாக்கு மேல்வாயோடு ஒட்டிக்கொண்டது.
11 நான் பேசியதைக் கேட்டவர்கள் என்னைப் புகழ்ந்து பாராட்டினார்கள்.
என்னைப் பார்த்தவர்கள் எனக்கு ஆதரவாகப் பேசினார்கள்.
12 ஏனென்றால், உதவிக்காகக் கதறிய ஏழைகளை நான் காப்பாற்றினேன்.+
அப்பா இல்லாத பிள்ளைகளுக்கும் ஆதரவற்ற ஜனங்களுக்கும் உதவினேன்.+
14 நீதியை உடைபோல் உடுத்தியிருந்தேன்.
என் நியாயம் மேலாடை போலவும் தலைப்பாகை போலவும் இருந்தது.
15 கண் இல்லாதவர்களுக்குக் கண்ணாக இருந்தேன்.
கால் இல்லாதவர்களுக்குக் காலாக இருந்தேன்.
18 உயிருள்ள வரைக்கும் என் வீட்டிலேயே இருப்பேன் என்று நினைத்தேன்.+
எண்ண முடியாத மணலைப் போல என்னுடைய ஆயுசு நாள் இருக்கும் என்று நினைத்தேன்.
19 அதுமட்டுமல்ல, ‘என் வேர்கள் தண்ணீர் பக்கமாகப் பரவியிருக்கும்.
என் கிளைகள் ராத்திரியெல்லாம் பனியில் நனைந்திருக்கும்.
20 என் மதிப்புக் கூடிக்கொண்டே போகும்.
என் வில்லிலிருந்து அம்புகள் பாய்ந்துகொண்டே இருக்கும்’ என்றெல்லாம் நினைத்தேன்.
21 நான் பேசியதையெல்லாம் ஜனங்கள் ஆர்வமாகக் கேட்டார்கள்.
என் அறிவுரைகளுக்காக அமைதியாகக் காத்திருந்தார்கள்.+
22 அவர்கள் என் பேச்சுக்கு மறுபேச்சு பேசவில்லை.
நான் சொன்னதெல்லாம் அவர்களுடைய காதுக்கு இனிமையாக இருந்தது.
23 மழைக்காகக் காத்திருப்பது போல அவர்கள் எனக்காகக் காத்திருந்தார்கள்.
மழைநீரைப் பயிர் உறிஞ்சுவது போல என் வார்த்தைகளை உறிஞ்சிக்கொண்டார்கள்.+
24 நான் அன்பாகச் சிரித்ததைப் பார்த்து அவர்கள் ரொம்பச் சந்தோஷப்பட்டார்கள்.
என்னுடைய பிரகாசமான முகத்தைப் பார்த்ததும் அவர்களுக்குள் நம்பிக்கை பிறந்தது.*
25 தலைவனாக இருந்து அவர்களுக்கு வழிகாட்டினேன்.
படைபலம் உள்ள ராஜாவைப் போல இருந்தேன்.+
அழுகிறவர்களுக்கு ஆறுதல் சொன்னேன்”+ என்றார்.
30 பின்பு அவர்,
“இப்போது பார்த்தால்,
வயதில் சிறியவர்கள்கூட என்னைக் கேலி செய்கிறார்கள்.*+
அவர்களுடைய அப்பாக்கள் எதற்கும் லாயக்கில்லாதவர்கள்.
என் ஆடுகளைக் காவல்காத்த நாய்களின் பக்கத்தில்கூட அவர்களை நான் விட்டிருக்க மாட்டேன்.
2 அவர்களுடைய கைகளால் எனக்கு என்ன பிரயோஜனம் இருந்தது?
அவர்களுடைய பலமெல்லாம் போய்விட்டதே.
3 சாப்பாடு தண்ணீர் இல்லாமல் இளைத்துப்போயிருக்கிறார்கள்.
பாழாய்க் கிடக்கிற வறண்ட நிலத்தில் அலைந்து திரிகிறார்கள்.
அங்குள்ள மண்ணை மென்று தின்கிறார்கள்.
4 உப்புக் கரிக்கும் இலைகளைப் புதர்களிலிருந்து பறிக்கிறார்கள்.
காட்டுச்செடியின் கசப்பான வேரைப் பிடுங்கிச் சாப்பிடுகிறார்கள்.
5 அவர்கள் ஊரைவிட்டு விரட்டப்படுகிறார்கள்.+
திருடர்களைப் பார்த்துக் கூச்சல் போடுவதுபோல் ஜனங்கள் அவர்களைப் பார்த்துக் கூச்சல் போடுகிறார்கள்.
6 அதனால் அவர்கள் பள்ளத்தாக்குகளில்* போய்க் குடியிருக்கிறார்கள்.
நிலத்திலுள்ள பொந்துகளிலும் பாறை இடுக்குகளிலும் தங்குகிறார்கள்.
7 புதர்களுக்குள் இருந்து கதறுகிறார்கள்.
முட்செடிகளுக்கு இடையில் கும்பல் கும்பலாகக் கூடியிருக்கிறார்கள்.
8 அவர்கள் அறிவில்லாதவர்களின் பிள்ளைகள், ஒன்றுக்கும் உதவாதவர்களுக்குப் பிறந்தவர்கள்.
ஊரைவிட்டே துரத்தப்பட்டவர்கள்.
9 அப்படிப்பட்ட ஆட்கள் இப்போது என்னைக் கேலி செய்து பாட்டுப் பாடுகிறார்கள்.+
என்னைப் பார்த்தாலே அவர்களுக்குக் கிண்டலாகத் தெரிகிறது.+
11 என்னால் எதுவும் பண்ண முடியாதபடி கடவுள் செய்துவிட்டார்; என்னைத் துவண்டுபோக வைத்துவிட்டார்.
அதனால், அவர்கள் இன்னும் அதிகமாக என்னை ஆட்டிப்படைக்கிறார்கள்.*
12 என்னைத் தாக்குவதற்காக என்னுடைய வலது பக்கத்தில் கும்பலாக வருகிறார்கள்.
என்னை ஓட ஓட விரட்டுகிறார்கள்.
என்னை வளைத்துப் பிடித்து சாகடிப்பதற்காக வழியெல்லாம் முட்டுக்கட்டைகளைப் போடுகிறார்கள்.
13 நான் ஓடுகிற பாதைகளை நாசமாக்குகிறார்கள்.
நான் தப்பிக்கவே முடியாதபடி செய்கிறார்கள்.+
அவர்களைத் தடுக்க* யாருமே இல்லை.
14 பெரிதாகப் பிளந்து நிற்கும் மதில் வழியாக வருவதுபோல் பாய்ந்து வருகிறார்கள்.
சீரழிவுக்குமேல் சீரழிவை உண்டாக்குகிறார்கள்.
15 எனக்குக் கதிகலங்குகிறது.
என் கௌரவம் காற்றில் பறந்துவிட்டது.
பிழைப்பேன் என்ற நம்பிக்கைகூட மேகம்போல் மறைந்துவிட்டது.
18 நான் உடுத்தியிருக்கிற துணி ரொம்பப் பலமாக இழுக்கப்படுகிறது.*
இறுக்கமான கழுத்துப்பட்டையைப் போல அது என் குரல்வளையை நெரிக்கிறது.
19 கடவுள் என்னைச் சேற்றில் தள்ளிவிட்டார்.
நான் தூசி போலவும் சாம்பல் போலவும் ஆகிவிட்டேன்.
20 கடவுளே, உங்களிடம் கதறுகிறேன்; நீங்களோ கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள்.+
உங்கள் முன்னால் எழுந்து நிற்கிறேன்; நீங்களோ பார்த்தும் பார்க்காததுபோல் இருக்கிறீர்கள்.
23 நீங்கள் என்னைச் சாகடிக்கப்போகிறீர்கள் என்று எனக்குத் தெரியும்.
எல்லாரும் கடைசியில் போய்ச் சேரும் இடத்துக்கு என்னை அனுப்பப்போகிறீர்கள்.
25 அவதிப்பட்ட ஜனங்களுக்காக நான் அழவில்லையா?
ஏழைகளுக்காக மனம் உருகவில்லையா?+
26 எனக்கு நல்லது நடக்கும் என்று நம்பினேன்; ஆனால் கெட்டதுதான் நடந்தது.
என் வாழ்க்கை பிரகாசமாகும் என்று நினைத்தேன்; ஆனால் இருண்டுதான் போனது.
27 என் மனம் தவியாய்த் தவித்தது.
கஷ்டத்துக்குமேல் கஷ்டம் வந்தது.
28 நான் சோகத்தோடு நடமாடுகிறேன்;+ என் வாழ்க்கையில் சூரியன் உதிப்பதே இல்லை.
எல்லாருக்கும் முன்னால் எழுந்து நின்று உதவிக்காகக் கதறுகிறேன்.
31 துக்கம் கொண்டாடுவதற்கு மட்டும்தான் யாழை எடுக்கிறேன்.
சோக கீதம் வாசிப்பதற்கு மட்டும்தான் குழலை எடுக்கிறேன்” என்றார்.
31 பின்பு அவர்,
“என் கண்களை அலையவிடக் கூடாது என்று தீர்மானம் செய்திருக்கிறேன்.*+
அப்படியிருக்கும்போது, இன்னொரு பெண்ணை* நான் எப்படிக் கெட்ட எண்ணத்தோடு பார்ப்பேன்?+
2 அப்படி நான் பார்த்தால், கடவுள் என்னை ஆசீர்வதிப்பாரா?
சர்வவல்லமையுள்ள கடவுளிடமிருந்து நான் எதையாவது எதிர்பார்க்க முடியுமா?
5 நான் எப்போதாவது பொய் பேசியிருக்கிறேனா?*
மற்றவர்களை ஏமாற்றியிருக்கிறேனா?
6 கடவுள் என்னைத் தராசில்* வைத்து நிறுத்துப் பார்க்கட்டும்.+
அப்போது நான் உத்தமன் என்று புரிந்துகொள்வார்.+
7 என் கால் தவறான வழியில் போயிருந்தால்,+
என் கண்கள் போகிற போக்கில் என் இதயம் போயிருந்தால்,+
என் கைகளில் கறை படிந்திருந்தால்,
8 நான் பயிர் செய்வதை இன்னொருவன் சாப்பிடட்டும்.+
நான் நடுவதை வேறொருவன் பிடுங்கிப்போடட்டும்.*
9 என் இதயம் ஒரு பெண்ணிடம் மயங்கியிருந்தால்,+
அவளுக்காக நான் அடுத்தவனின் வாசலில் காத்துக் கிடந்திருந்தால்,+
10 என் மனைவி இன்னொருவனுக்கு மனைவியாகட்டும்.*
மற்ற ஆண்கள் அவளோடு படுக்கட்டும்.+
11 நான் ஒழுக்கக்கேடாக நடந்திருந்தால் அது படுகேவலமாக இருந்திருக்கும்.
அந்தக் குற்றத்துக்காக நீதிபதிகள் என்னைத் தண்டிப்பதே நியாயமாக இருந்திருக்கும்.+
12 எல்லாவற்றையும் பொசுக்கி நாசமாக்குகிற நெருப்பைப் போல
அந்தப் பாவம் எனக்குச் சொந்தமான எல்லாவற்றையும் அழித்திருக்கும்.+
13 வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும் என்மேலுள்ள மனக்குறையைச் சொன்னபோது,*
நான் நியாயத்தை அசட்டை பண்ணியிருந்தால்,
14 கடவுள் அதைப் பற்றிக் கேட்கும்போது என்ன செய்வேன்?
அவர் என்னிடம் விளக்கம் கேட்டால் என்ன பதில் சொல்வேன்?+
15 தாயின் வயிற்றில் என்னை உருவாக்கியவர்தானே அவர்களையும் உருவாக்கினார்?+
பிறப்பதற்கு முன்பே எங்களுக்கு உருவம் கொடுத்தவரும் அவர்தானே?+
16 ஏழைகள் கேட்டதை நான் கொடுக்காமல் இருந்தேனா?+
விதவைகளுக்கு உதவி செய்யாமல் அவர்களைத் தவிக்க வைத்தேனா?+
17 என் உணவை நான் மட்டும் சாப்பிட்டேனா?
அநாதைகளோடு அதைப் பகிர்ந்துகொள்ளாமல் இருந்தேனா?+
18 (நினைவு தெரிந்த நாளிலிருந்தே நான் அவர்களுக்கு ஒரு அப்பா போலத்தான் இருந்திருக்கிறேன்.
என் வாழ்க்கை முழுவதும் விதவைகளுக்கு ஆதரவாகத்தான் இருந்திருக்கிறேன்.)
19 போட்டுக்கொள்ள துணியில்லாமல் குளிரில் யாராவது செத்துப்போவதை நான் கண்டும்காணாமல் இருந்தேனா?
போர்த்திக்கொள்ள எதுவும் இல்லாமல் ஒரு ஏழை தவிப்பதைப் பார்த்தும் பார்க்காததுபோல் இருந்தேனா?+
20 குளிரில் போர்த்திக்கொள்ள என் கம்பளியைக் கொடுக்காமல் இருந்தேனா?
அதற்கு அவன் நன்றி சொல்லாமல் இருந்தானா?+
21 என் உதவியைத் தேடி நகரவாசலுக்கு+ வந்த*
அநாதைகளை மிரட்டுவதற்காக கையை ஓங்கினேனா?+
22 அப்படிச் செய்திருந்தால் என்னுடைய கை தோள்பட்டையிலிருந்து முறிந்து விழட்டும்.
என் முழங்கை உடைந்து போகட்டும்.
23 உண்மையில், கடவுள் என்னைக் கொன்றுவிடுவாரோ என்று பயந்தேன்.
அவருடைய மகிமைக்குமுன் என்னால் நிற்க முடியவில்லை.
24 தங்கத்தின் மேல் நான் நம்பிக்கை வைத்தேனா?
அல்லது, சொக்கத்தங்கம்தான் எனக்குப் பாதுகாப்பு என்று சொன்னேனா?+
25 எனக்கு நிறைய சொத்து இருந்தது.+
ஆனால், அதுதான் சந்தோஷத்தைத் தரும் என்று நினைத்தேனா?+
26 சூரியன் பிரகாசிப்பதைப் பார்த்தபோதோ,
நிலா அழகாக உலா போவதைக் கண்டபோதோ,+
28 அப்படிச் செய்திருந்தால், உண்மைக் கடவுளுக்குத் துரோகம் செய்தது போல ஆகியிருக்கும்.
அந்தக் குற்றத்துக்கு நீதிபதிகள் என்னைத் தண்டிப்பதே நியாயமாக இருந்திருக்கும்.
29 என் எதிரி அழிந்துபோவதைப் பார்த்து நான் எப்போதாவது சந்தோஷப்பட்டேனா?+
அவனுக்குக் கெட்டது நடந்தபோது எனக்குக் கொண்டாட்டமாக இருந்ததா?
30 அவன் நாசமாய்ப் போக வேண்டும் என்று நான் சபித்ததே இல்லை.
என் வாயால் அந்தப் பாவத்தைச் செய்ததே இல்லை.+
31 என் வீட்டில் வயிறார சாப்பிடாதவர்கள் யாருமே இருந்ததில்லை.+
இதை என் வீட்டு ஆட்கள்கூட எப்போதும் சொல்வார்கள்.
32 வெளியூரிலிருந்து வந்தவர்கள் தெருவில் தங்கியதே இல்லை.+
அவர்களுக்காக என் வீட்டு வாசல் திறந்தே இருந்தது.
34 ஜனங்கள் என்ன சொல்வார்கள் என்று பயந்தோ,
அக்கம்பக்கத்தார் என்னை அவமதிப்பார்கள் என்று நினைத்தோ,
வாயை மூடிக்கொண்டு வீட்டுக்குள்ளேயே இருந்துவிட்டேனா?
35 நான் சொல்வதை யாராவது கேட்கக் கூடாதா?+
வேண்டுமென்றால், எழுதி கையெழுத்துகூட போட்டுத் தருகிறேன்.
சர்வவல்லமையுள்ளவர் எனக்குப் பதில் சொல்லட்டும்.+
என்னைக் குற்றம்சாட்டுபவர், நான் என்ன குற்றம் செய்தேன் என்று பத்திரத்தில் எழுதித் தரட்டும்.
36 அதை என் தோள்மேல் சுமப்பேன்.
அதைக் கிரீடம் போலத் தலையில் வைத்துக்கொள்வேன்.
37 நான் செய்த ஒவ்வொன்றுக்கும் அவரிடம் விளக்கம் தருவேன்.
ஒரு இளவரசனைப் போல அவரிடம் தைரியமாகப் போவேன்.
38 என் வயல் என்னைப் பார்த்துப் புலம்பியிருந்தால்,
அதன் சால்கள்* ஒன்றுசேர்ந்து அழுதிருந்தால்,
39 விவசாயிகளுக்குக் கூலி கொடுக்காமல் அதன் விளைச்சலை நான் சாப்பிட்டிருந்தால்,+
அந்த வயலை மற்றவர்களிடமிருந்து நான் பிடுங்கியிருந்தால்,+
40 கோதுமைக்குப் பதிலாக முட்செடிகள் அங்கே முளைக்கட்டும்.
பார்லிக்குப் பதிலாக நாற்றமடிக்கும் களைகள் அங்கே வளரட்டும்” என்றார்.
இப்படியாக, யோபு பேசி முடித்தார்.
32 அந்த மூன்று பேரும் யோபுவுக்குப் பதிலே சொல்லவில்லை; ஏனென்றால், தன்மேல் எந்தக் குற்றமும் இல்லை என்று யோபு ஆணித்தரமாகப் பேசினார்.*+ 2 யோபு கடவுளைவிட தன்னை நல்லவராகக் காட்டிக்கொள்ள நினைத்ததால்+ எலிகூவுக்கு ரொம்பவே கோபம் வந்தது; இவர் ராமின் வம்சத்திலும், பூசின்+ குடும்பத்திலும் பிறந்த பரகெயேலின் மகன். 3 யோபுவின் மூன்று நண்பர்கள்மேலும் எலிகூவுக்குப் பயங்கர கோபம் வந்தது. ஏனென்றால், அவர்கள் யோபு கேட்ட கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்வதை விட்டுவிட்டு கடவுளைக் கெட்டவர் என்று குற்றம்சாட்டினார்கள்.+ 4 யோபுவிடம் பேசுவதற்காக எலிகூ அவ்வளவு நேரமாகக் காத்திருந்தார். ஏனென்றால், அங்கிருந்த எல்லாரையும்விட அவர் வயதில் சின்னவர்.+ 5 அந்த மூன்று நண்பர்களால் எதுவும் பேச முடியாமல் போனதைப் பார்த்தபோது எலிகூவுக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது. 6 அதனால், பூஸ் என்பவரின் குடும்பத்தில் பிறந்த பரகெயேலின் மகன் எலிகூ அவர்களிடம்,
“நான் வயதில் சின்னவன்,
ஆனால் நீங்கள் பெரியவர்கள்.+
அதனால், உங்களுக்கு மதிப்புக் கொடுத்து பேசாமல் இருந்தேன்.+
எனக்குத் தெரிந்ததைக்கூட சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.
7 ‘பெரியவர்கள் பேசட்டும்,
வயதானவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும்’ என்று நினைத்தேன்.
8 ஆனால், கடவுள் தரும் சக்திதான் ஜனங்களுக்குப் புத்தியைக் கொடுக்கிறது.
சர்வவல்லமையுள்ளவரின் மூச்சுதான் அவர்களுக்குப் புரிந்துகொள்ளும் திறனைக் கொடுக்கிறது.+
9 வயதாகிவிட்டால் மட்டும் ஞானம் வந்துவிடாது.
பெரியவர்களுக்கு மட்டும்தான் நல்லது கெட்டது தெரியும் என்று சொல்ல முடியாது.+
10 அதனால், நானும் எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்,
தயவுசெய்து கேளுங்கள்.
11 நீங்கள் பேசி முடிக்கும்வரை காத்திருந்தேன்.
நீங்கள் யோசித்து பதில் சொல்லும்வரை அமைதியாக இருந்தேன்.+
உங்களுடைய கருத்துகளைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.+
12 நீங்கள் சொன்னதையெல்லாம் நன்றாகக் கவனித்தேன்.
ஆனால், உங்கள் ஒருவரால்கூட யோபுவின் பக்கம் தப்பு இருப்பதாக நிரூபிக்க முடியவில்லை.*
அவர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை.
13 அதனால், உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்பதுபோல் பேசாதீர்கள்.
‘மனுஷனால் அல்ல, கடவுளால்தான் யோபுவின் வாதங்கள் தவறென்று நிரூபிக்க முடியும்’ என்று சொல்லாதீர்கள்.
14 யோபு என்னைப் பார்த்து எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.
அதனால், நீங்கள் நியாயமில்லாமல் அவரிடம் பேசியதைப் போல நான் பேச மாட்டேன்.
15 நீங்கள் எல்லாரும் குழம்பிப்போய் இருக்கிறீர்கள்; பேசுவதற்கு இனி உங்களிடம் வார்த்தைகளே இல்லை.
என்ன சொல்வதென்றே உங்களுக்குத் தெரியவில்லை.
16 நீங்கள் தொடர்ந்து பேசுவீர்கள் என்று காத்திருந்தேன்.
ஆனால், ஒன்றும் பேசாமல் அப்படியே இருந்தீர்கள்.
17 அதனால், இப்போது நான் பேசுகிறேன்.
எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்.
18 பேச நிறைய விஷயம் இருக்கிறது.
அதைச் சொல்ல எனக்குள் இருக்கும் சக்தி என்னைத் தூண்டுகிறது.
20 பேசினால்தான் என் பாரம் குறையும்.
அதனால், என் மனதில் இருப்பதை இப்போது சொல்கிறேன்.
21 நான் பாரபட்சமாகப் பேச மாட்டேன்.+
போலியாக யாரையும் புகழ மாட்டேன்.
22 எனக்கு அப்படியெல்லாம் பேசத் தெரியாது.
அப்படிப் பேசினால், என்னைப் படைத்தவர் என்னைக் கொன்றே விடுவார்” என்று சொன்னார்.
33 பின்பு அவர்,
“யோபுவே, நான் பேசுவதைத் தயவுசெய்து கேளுங்கள்.
நான் சொல்கிற எல்லாவற்றையும் கவனியுங்கள்.
2 தயவுசெய்து கவனியுங்கள், நான் பேசியே ஆக வேண்டும்.
என்னால் இனியும் அமைதியாக இருக்க முடியாது.
5 எனக்குப் பதில் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள்.
என்னோடு வாதாடுவதற்குத் தயாராக இருங்கள்.
6 உண்மைக் கடவுளுக்கு முன்னால் நீங்களும் நானும் ஒன்றுதான்.
என்னையும் மண்ணிலிருந்துதான் அவர் படைத்தார்.+
7 அதனால், என்னைப் பார்த்து நீங்கள் பயப்பட வேண்டாம்.
நான் சொல்வதைக் கேட்டு ஆடிப்போக வேண்டாம்.
8 நீங்கள் பேசியதையெல்லாம் கவனித்தேன்.
உங்கள் வார்த்தைகளையெல்லாம் கேட்டேன்.
9 நீங்கள் எங்களிடம், ‘நான் நேர்மையானவன், எந்தக் குற்றமும் செய்யவில்லை.+
நான் நல்லவன், எந்தத் தப்பும் பண்ணவில்லை’+ என்று சொன்னீர்கள்.
11 என் கால்களைத் தொழுமரத்தில் மாட்டுகிறார்.
என் வழிகளையெல்லாம் துருவித் துருவிப் பார்க்கிறார்’+ என்றும் சொன்னீர்கள்.
12 நீங்கள் பேசியதில் நியாயமே இல்லை; இப்போது நான் பேசுகிறேன், கேளுங்கள்.
அற்ப மனுஷனைவிட கடவுள் எவ்வளவு பெரியவர்!+
13 அப்படிப்பட்டவரை ஏன் குறை சொல்கிறீர்கள்?+
நீங்கள் கேட்டதற்கெல்லாம் அவர் பதில் சொல்லாமல் இருந்ததாலா?+
14 உண்மையில், கடவுள் திரும்பத் திரும்பப் பேசுகிறார்.
ஆனால், ஜனங்கள்தான் கவனிப்பதே இல்லை.
15 அவர் கனவில் பேசுகிறார்.
தரிசனத்தின் மூலம் பேசுகிறார்.+
ஜனங்கள் ஆழ்ந்து தூங்கும்போது பேசுகிறார்.
16 அவர்களுடைய காதுகளைத் திறக்கிறார்.+
தன் அறிவுரைகளை அவர்கள் மனதில் பதிய வைக்கிறார்.
17 இப்படி, மனுஷன் கெட்ட வழியைவிட்டு விலகுவதற்கும்,+
கர்வம் அடையாமல் இருப்பதற்கும் உதவுகிறார்.+
18 சவக்குழிக்கு* போகாதபடி அவனுடைய உயிரைப் பாதுகாக்கிறார்.+
வாளால்* அழியாதபடி அவனைக் காப்பாற்றுகிறார்.
19 ஒருவன் தன்னுடைய படுக்கையில் வேதனைப்படும்போதும்
தீராத எலும்பு வலியால் துடிக்கும்போதும்
தன்னுடைய தப்பை உணருகிறான்.*
20 சாப்பாட்டைக் கண்டாலே அவனுக்கு வெறுப்பாக இருக்கிறது.
பிடித்தமான சாப்பாடுகூட அவனுக்கு அருவருப்பாக இருக்கிறது.+
21 அவனுடைய உடம்பு வற்றிப்போய்,
எலும்புகள் மட்டும்தான் தெரிகிறது.
22 சீக்கிரத்தில் அவன் சவக்குழிக்குப் போகப்போகிறான்.
அவனை அழிக்க நினைக்கிறவர்களின் கையில் அவனுடைய உயிர் சிக்கப்போகிறது.
23 ஆயிரம் தேவதூதர்களில் ஒருவர்
நீதியான வழிகளை எடுத்துச் சொல்ல அவனிடம் வந்தால்,
24 கடவுள் அவனுக்குக் கருணை காட்டி,
‘சவக்குழிக்குள் போகாதபடி அவனைக் காப்பாற்று.+
அவனை மீட்பதற்கு வழி* கண்டுபிடித்துவிட்டேன்.+
25 அவனுடைய உடல் இளமையில் இருந்ததைவிட ஆரோக்கியம் அடையும்.+
அவன் மறுபடியும் இளமைத் துடிப்போடு வாழ்வான்’*+ என்று சொல்வார்.
26 அவன் கடவுளிடம் கெஞ்சி ஜெபம் செய்வான்,+ அதை அவர் கேட்பார்.
அவன் சந்தோஷம் பொங்க அவருடைய முகத்தைப் பார்ப்பான்.
அவர் அவனைத் திரும்பவும் நீதியான வழிக்குக் கொண்டுவருவார்.
27 அவன் மற்றவர்களைப் பார்த்து,
‘நான் பாவம் செய்தேன்;+ உண்மையைத் திரித்துப் பேசினேன்.
ஆனாலும், அதற்குத் தகுந்த தண்டனையைக் கடவுள் எனக்குத் தரவில்லை.*
28 நான் சவக்குழிக்குள் போகாதபடி அவர் என் உயிரை மீட்டுக்கொண்டார்.+
என் வாழ்க்கை இனி பிரகாசமாக இருக்கும்’ என்று சொல்வான்.
29 இதையெல்லாம் மனுஷனுக்காகக் கடவுள் செய்கிறார்.
ஒரு தடவை மட்டுமல்ல, பல தடவை செய்கிறார்.
30 இப்படி, அவனைச் சவக்குழியிலிருந்து காப்பாற்றுகிறார்.
வாழ்வின் ஒளியை அவன்மேல் பிரகாசிக்க வைக்கிறார்.+
31 அதனால் யோபுவே, நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள்.
நான் பேசுவதை அமைதியாகக் கேளுங்கள்.
32 ஏதாவது சொல்ல வேண்டியிருந்தால் சொல்லுங்கள்.
தயங்காமல் பேசுங்கள், நீங்கள் நல்லவர் என்பதை எல்லாருக்கும் காட்ட நான் ஆசைப்படுகிறேன்.
33 சொல்வதற்கு எதுவும் இல்லையென்றால், நான் சொல்வதைக் கேளுங்கள்.
எது ஞானம் என்பதைச் சொல்லித்தருகிறேன், அமைதியாகக் கவனியுங்கள்” என்று சொன்னார்.
34 பின்பு எலிகூ,
2 “ஞானிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்;
அறிவாளிகளே, நான் சொல்வதைக் கவனியுங்கள்.
3 சாப்பாட்டை நாக்கு ருசி பார்க்கிறது.
அது போல, வார்த்தைகளைக் காது சோதித்துப் பார்க்கிறது.
4 எது சரியானது என்று இப்போது நாம் முடிவுசெய்யலாம்.
எது நல்லது என்று தீர்மானிக்கலாம்.
6 நியாயம் கிடைக்க எனக்குத் தகுதி இல்லை என்று நான் பொய்யா சொல்ல முடியும்?
நான் எந்தத் தப்பும் செய்யவில்லை, ஆனாலும் என் காயம் ஆறாமல் இருக்கிறது’+ என்று சொல்கிறார்.
7 யோபுவைப் போலக் கேலிப்பேச்சை அமைதியாகக் கேட்கிறவர்கள்
யாராவது இருக்க முடியுமா?
10 புத்திசாலிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்.
உண்மைக் கடவுள் ஒருபோதும் கெட்டது செய்ய மாட்டார்.+
சர்வவல்லமையுள்ளவர் ஒருபோதும் அநியாயம் செய்ய மாட்டார்.+
11 மனுஷன் என்ன செய்கிறானோ அதற்கு ஏற்ற கூலிதான் அவனுக்குக் கிடைக்கிறது.+
அதற்குத் தகுந்த பலனைத்தான் அவன் அனுபவிக்கிறான்.
12 கடவுள் அக்கிரமம் செய்ய மாட்டார் என்பது நிச்சயம்.+
சர்வவல்லமையுள்ளவர் நியாயத்தைப் புரட்ட மாட்டார் என்பது உறுதி.+
13 பூமியை அவருடைய பொறுப்பில் விட்டது யார்?
உலகத்தை அவர் கையில் ஒப்படைத்தது யார்?
14 மனுஷர்கள்மேல் அவர் பகையைக் காட்டி,
அவர்களுடைய உயிரையும் சுவாசத்தையும் எடுத்துக்கொண்டால்,
15 எல்லா மனுஷர்களும் அழிந்துவிடுவார்களே.+
அவர்கள் எல்லாரும் மண்ணுக்குப் போய்விடுவார்களே.+
16 நீங்கள் புத்திசாலியாக இருந்தால், நான் சொல்வதைக் கேளுங்கள்.
நான் பேசும்போது நன்றாகக் கவனியுங்கள்.
17 நியாயத்தை வெறுக்கிற ஒருவரால் ஆட்சி செய்ய முடியுமா?
அதிகாரமும் நீதியும் உள்ளவர்மேல் நீங்கள் குற்றம் சுமத்துவீர்களா?
18 ஒரு ராஜாவைப் பார்த்து, ‘நீ எதற்குமே லாயக்கில்லாதவன்’ என்று சொல்வீர்களா?
உங்கள் தலைவனைப் பார்த்து, ‘நீ ஒரு அயோக்கியன்’ என்று சொல்வீர்களா?+
19 அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்குத் தனி சலுகை காட்டாத ஒருவர் இருக்கிறார்.+
ஏழைகளைவிட பணக்காரர்களை* அவர் உயர்வாக நினைக்க மாட்டார்.+
ஏனென்றால், அவர்கள் எல்லாரையும் படைத்தவர் அவர்தான்.
20 அவர்கள் திடீரென்று நடுராத்திரியில்கூட+ செத்துப்போய்விடலாம்.+
அவர்கள் குலைநடுங்கிப்போய் இறந்துவிடலாம்.
பலம் படைத்தவர்கள்கூட மனுஷனுக்கு அப்பாற்பட்ட சக்தியால் ஒழிக்கப்படலாம்.+
21 ஏனென்றால், மனுஷன் செய்வதையெல்லாம் கடவுள் கவனிக்கிறார்.+
அவன் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியையும் அவர் பார்க்கிறார்.
22 தப்பு செய்கிறவர்கள் எங்கேயும் ஒளிந்துகொள்ள முடியாது.
எப்பேர்ப்பட்ட இருட்டிலும் மறைந்துகொள்ள முடியாது.+
23 கடவுள் எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு கொடுப்பார்.
அதற்காக அவர் முன்கூட்டியே யாருக்கும் நேரம் குறிப்பதில்லை.
24 அதிகாரத்தில் இருப்பவர்களை அவர் விசாரணை செய்துதான் நீக்க வேண்டும் என்றில்லை.
அவர்களுடைய இடத்தில் யாரை வேண்டுமானாலும் வைப்பார்.+
25 ஏனென்றால், அவர்கள் செய்வதெல்லாம் அவருக்குத் தெரியும்.+
அவர்களை ஒரே ராத்திரியில் கவிழ்ப்பார், அவர்கள் ஒழிந்துபோவார்கள்.+
26 அவர்கள் செய்த அக்கிரமத்துக்காக அவர்களைத் தண்டிப்பார்.
எல்லாருடைய கண் முன்னாலும் அதைச் செய்வார்.+
27 ஏனென்றால், அவரைவிட்டு அவர்கள் விலகிவிட்டார்கள்.+
அவருடைய வழிகளை அவர்கள் மதிப்பதே இல்லை.+
28 அவர்களுடைய கொடுமை தாங்காமல் ஏழைகள் கடவுளிடம் கதறி அழுகிறார்கள்.
ஆதரவற்றவர்களின் கதறலை அவர் கேட்கிறார்.+
29 ஆனால் அவர் ஒன்றும் செய்யாமல் இருந்தால், யார் அவரைக் குற்றப்படுத்த முடியும்?
அவர் முகத்தை மறைத்துக்கொண்டால், யார் அவரைப் பார்க்க முடியும்?
ஒரு தேசமானாலும் சரி, தனி மனுஷனானாலும் சரி, வித்தியாசம் இல்லை.
30 ஆட்சி செய்யவோ ஜனங்களை ஆட்டிப்படைக்கவோ
31 நீங்கள் கடவுளிடம்,
‘தப்பு செய்யாமலேயே நான் தண்டனையை அனுபவிக்கிறேன்.+
32 எனக்கு ஏதாவது புரியாமல் இருந்தால் அதைப் புரிய வையுங்கள்.
நான் ஏதாவது தப்பு செய்திருந்தால் என்னைத் திருத்திக்கொள்கிறேன்’ என்று சொல்கிறீர்கள்.
33 அவருடைய தீர்ப்பை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
அப்படியிருக்கும்போது, நீங்கள் சொல்கிறபடி மட்டும் அவர் உங்களை ஆசீர்வதிக்க வேண்டுமா?
இதில் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை, நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.
உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்றால், அதைச் சொல்லுங்கள்.
34 புத்திசாலிகள் என்னிடம் என்ன சொல்வார்கள் தெரியுமா?
நான் பேசுவதைக் கேட்கிற ஞானிகள் என்ன சொல்வார்கள் தெரியுமா?
35 ‘யோபு அறிவில்லாமல் பேசுகிறார்;+
அவருடைய பேச்சில் அர்த்தமே* இல்லை’ என்றுதான் சொல்வார்கள்.
36 யோபு முழுமையாகச் சோதிக்கப்பட வேண்டும்.*
ஏனென்றால், அக்கிரமக்காரர்கள் பேசுவதுபோல் அவர் பேசிக்கொண்டிருக்கிறார்.
37 பாவத்துக்குமேல் பாவம் செய்கிறார்.+
நம் முன்னால் கைகொட்டிச் சிரிக்கிறார்.
உண்மைக் கடவுளுக்கு எதிராக ஏதேதோ பேசுகிறார்”+ என்று சொன்னார்.
35 பின்பு எலிகூ,
3 ‘நான் நீதிமானாக இருந்து என்ன பிரயோஜனம்?*
பாவம் செய்யாததால் அப்படி என்ன பலன் கிடைத்துவிட்டது?’+ என்று கேட்கிறீர்களே.
5 வானத்தைக் கொஞ்சம் அண்ணாந்து பாருங்கள்.
அவ்வளவு உயரத்தில் இருக்கிற மேகங்களைக் கவனித்துப் பாருங்கள்.+
6 நீங்கள் பாவம் செய்வதால் கடவுளுக்கு என்ன பாதிப்பு வரப்போகிறது?+
அக்கிரமங்கள் செய்வதால் அவருக்கு என்ன ஆகப்போகிறது?+
8 நீங்கள் அக்கிரமம் செய்வதால் பாதிக்கப்படுவது உங்களைப் போன்ற மனுஷர்கள்தான்.
உங்கள் நீதியினால் நன்மை அடைவதும் மனுஷர்கள்தான்.
9 கொடுமை தாங்க முடியாமல் ஜனங்கள் கதறி அழுகிறார்கள்.
அடக்கி ஒடுக்குகிறவர்களின் கையிலிருந்து காப்பாற்றும்படி கெஞ்சுகிறார்கள்.+
10 ஆனால் யாருமே, ‘என்னுடைய மகத்தான படைப்பாளராகிய கடவுள் எங்கே?+
ராத்திரியில் நான் புகழ் பாடல்களைப் பாடுவதற்குக் காரணமானவர் எங்கே?’+ என்று கேட்பதில்லை.
11 மிருகங்களைவிட+ நமக்கு அதிகமான அறிவைக் கடவுள் கொடுத்திருக்கிறார்.+
பறவைகளைவிட நமக்கு அதிகமான புத்தியைக் கொடுத்திருக்கிறார்.
12 ஆனால், கெட்ட ஜனங்கள் பெருமைபிடித்து அலைகிறார்கள்.+
அதனால்தான், அவர்கள் உதவிக்காகக் கெஞ்சினாலும் கடவுள் கேட்பதில்லை.+
13 அவரிடம் நாம் போலித்தனமாகக் கெஞ்சினால் அவர் கேட்பாரா?+
சர்வவல்லமையுள்ளவர் கண்டிப்பாக அதைக் காதில் வாங்க மாட்டார்.
14 அப்படியிருக்கும்போது, அவர் உங்களைக் கண்டுகொள்வதில்லை என்று புலம்பினால்+ அவர் கேட்பாரா?
அவர்தான் உங்களுக்குத் தீர்ப்பு சொல்லப்போகிறார்; அதுவரை பொறுமையோடு காத்திருங்கள்.+
16 யோபுவே, நீங்கள் தேவையில்லாமல் நிறைய பேசிவிட்டீர்கள்.
அறிவில்லாமல் வார்த்தைகளைக் கொட்டிவிட்டீர்கள்”+ என்று சொன்னார்.
36 அதன் பிறகு எலிகூ,
2 “கடவுளுடைய சார்பில் இன்னும் சில விஷயங்களை நான் பேச வேண்டியிருக்கிறது.
அதனால், இன்னும் கொஞ்ச நேரத்துக்குப் பொறுத்துக்கொள்ளுங்கள்.
3 எனக்குத் தெரிந்ததை விவரமாகச் சொல்கிறேன்.
என்னைப் படைத்தவர் எவ்வளவு நீதியுள்ளவர்+ என்று காட்டுகிறேன்.
4 நான் சொல்வது எதுவுமே பொய் கிடையாது.
எல்லாம் தெரிந்தவரிடம்*+ கற்றுக்கொண்ட விஷயங்களைத்தான் சொல்கிறேன்.
5 கடவுளுக்கு நிறைய சக்தி இருக்கிறது;+ அவர் யாரையுமே ஒதுக்கித்தள்ள மாட்டார்.
அவருக்குப் புரியாத விஷயமே இல்லை.
8 அவர்கள் சங்கிலியால் கட்டப்படும்போது,
வேதனையின் கயிறுகளால் நெருக்கப்படும்போது,
9 அவர்கள் செய்த தப்பைச் சுட்டிக்காட்டுகிறார்.
அவர்கள் கர்வத்தோடு செய்த குற்றங்களை உணர்த்துகிறார்.
11 அவர்கள் கீழ்ப்படிந்து அவருக்குச் சேவை செய்தால்,
சீரும் சிறப்புமாக வாழ்வார்கள்.
காலமெல்லாம் சந்தோஷமாக இருப்பார்கள்.+
13 கெட்டவர்கள்* தங்கள் நெஞ்சத்தில் பகையை வளர்த்துக்கொள்வார்கள்.
கடவுள் அவர்களைக் கட்டிப்போட்டாலும் உதவிக்காக அவரிடம் கெஞ்ச மாட்டார்கள்.
14 அவர்கள் வாலிப வயதிலேயே செத்துப்போகிறார்கள்.+
கோயிலில் விபச்சாரம் செய்கிற ஆண்களோடு+ சேர்ந்து வாழ்க்கையை வீணடிக்கிறார்கள்.*
15 கஷ்டப்படுகிறவர்களை அவர்களுடைய கஷ்டத்திலிருந்து கடவுள் காப்பாற்றுகிறார்.
அவர்கள் கொடுமைக்கு ஆளாகும்போது தன் ஆலோசனைகளைக் கேட்க வைக்கிறார்.
16 அவர் உங்களை வேதனையின் பிடியிலிருந்து விடுவிப்பார்.+
நெருக்கடியே இல்லாத விசாலமான இடத்தில் வாழ வைப்பார்.+
விருந்து வைத்து உங்கள் மனதைச் சந்தோஷப்படுத்துவார்.+
17 அவர் நியாயமான தீர்ப்பைக் கொடுக்கும்போது,
கெட்டவர்கள் தண்டிக்கப்படுவதைப்+ பார்த்து நீங்கள் நிம்மதி அடைவீர்கள்.
18 ஆனால், ஆத்திரத்தில் கெட்ட எண்ணத்தோடு நடந்துகொள்ளாதபடி* கவனமாக இருங்கள்.+
நிறைய லஞ்சம் கிடைக்கும் என்ற ஆசையில் கெட்டதைச் செய்துவிடாதீர்கள்.
20 ராத்திரி நேரம் எப்போது வரும் என்று காத்துக்கொண்டு இருக்காதீர்கள்.
ஜனங்கள் எப்போது இல்லாமல் போவார்கள் என்று பார்த்துக்கொண்டு இருக்காதீர்கள்.
21 தப்பான வழியில் போகாதபடி ஜாக்கிரதையாக இருங்கள்.
கஷ்டத்திலிருந்து தப்பிக்க குறுக்கு வழியைத் தேடாதீர்கள்.+
22 கடவுள் மகா சக்தி உள்ளவர்.
கற்றுக்கொடுப்பதில் அவரை மிஞ்ச யாருமே இல்லை.
23 என்ன செய்ய வேண்டும் என்று யாராவது அவருக்குச் சொல்ல முடியுமா?*+
அல்லது, அவர் செய்வது தப்பு என்று யாராவது சொல்ல முடியுமா?+
24 நிறைய பேர் அவருடைய செயல்களைப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள்.+
நீங்களும் அவரைப் புகழ்ந்து பேச மறந்துவிடாதீர்கள்.+
25 மனுஷர்கள் எல்லாரும் அவற்றைப் பார்க்கிறார்கள்.
அற்ப மனுஷன் அவற்றைத் தூரத்திலிருந்து பார்க்கிறான்.
26 நாம் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்குக் கடவுள் அற்புதமானவர்.+
அவர் எவ்வளவு காலம் வாழ்ந்திருக்கிறார் என்பதை நம்மால் கற்பனைகூட செய்ய முடியாது.+
27 அவர் தண்ணீரை ஆவியாக மேலே போக வைக்கிறார்.+
அதை மழையாகவும் பனியாகவும் கீழே வர வைக்கிறார்.
28 அது மேகங்களிலிருந்து பொழிகிறது.+
மனுஷர்கள்மேல் பெய்கிறது.
29 மேகங்கள் திரண்டிருக்கும் அதிசயத்தை யாராவது புரிந்துகொள்ள முடியுமா?
அவருடைய கூடாரத்திலிருந்து இடியோசை கேட்கும் அற்புதத்தை யாராவது விளக்க முடியுமா?+
37 பின்பு அவர்,
“என் நெஞ்சு படபடக்கிறது.
வெளியே தெறித்து விடும்போல் இருக்கிறது.
2 அதிர வைக்கும் அவருடைய குரலைக் கவனமாகக் கேளுங்கள்.
அவர் இடிபோல் முழங்குவதைக் கேளுங்கள்.
4 பின்பு, அவர் கர்ஜிக்கிறார்.
கம்பீரமாக முழங்குகிறார்.+
அப்போதும் மின்னலை நிறுத்தாமல் மின்ன வைக்கிறார்.
5 கடவுள் இடிபோல் முழங்குவது+ ஒரு அற்புதம்.
நம்மால் புரிந்துகொள்ள முடியாத அதிசயங்களை அவர் செய்கிறார்.+
6 பனியைப் பார்த்து, ‘பூமியில் இறங்கு’ என்று சொல்கிறார்.+
மழையைப் பார்த்து, ‘பலமாகக் கொட்டு’ என்று சொல்கிறார்.+
7 அவருடைய செயலை அற்ப மனுஷர்கள் எல்லாரும் புரிந்துகொள்வதற்காக
அவர்களுடைய வேலைகளையெல்லாம் நிறுத்துகிறார்.
8 காட்டு மிருகங்கள் குகைக்குள் போகின்றன.
அங்கேயே பதுங்கியிருக்கின்றன.
11 அவர் மேகங்களைத் தண்ணீர்த் துளிகளால் நிரப்புகிறார்.
அந்த மேகங்களில் மின்னலைத் தெறிக்க வைக்கிறார்.+
12 அவர் அனுப்புகிற இடங்களுக்கு மேகங்கள் சுழன்று சுழன்று போகின்றன.
அவர் கொடுக்கிற கட்டளைகளைப் பூமியில் நிறைவேற்றுகின்றன.+
13 அவற்றால் அவர் தண்டனையும் கொடுக்கிறார்,+ நிலத்துக்கு நீரும் பாய்ச்சுகிறார்,+
மாறாத அன்பையும் காட்டுகிறார்.
14 யோபுவே, இதைக் கேளுங்கள்.
கடவுள் செய்திருக்கிற அற்புதங்களைக் கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பாருங்கள்.+
15 கடவுள் எப்படி மேகங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்* தெரியுமா?
மேகங்களில் மின்னலை எப்படி மின்ன வைக்கிறார் என்று தெரியுமா?
16 மேகங்களை எப்படி வானத்தில் மிதக்க வைக்கிறார் என்று தெரியுமா?+
எல்லாம் தெரிந்தவர்* செய்கிற அற்புதங்கள் இவை.+
17 தெற்கிலிருந்து வீசும் காற்றினால் உலகமே ஸ்தம்பித்துப்போகும்போது,
உங்கள் உடை ஏன் சூடாகிறது என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?+
18 அவரோடு சேர்ந்து வானத்தை விரிக்க உங்களால் முடியுமா?+
பளபளப்பான உலோகத்தை* போல அதை உறுதியாக்க முடியுமா?
19 இப்போது அவரிடம் என்ன சொல்வது?
அவருக்கு எப்படிப் பதில் சொல்ல முடியும்? நாம் இருட்டில் இருக்கிறோமே.
20 நான் கடவுளிடம், ‘உங்களுக்கு ஒரு விஷயத்தைத் தெரிவிக்க வேண்டும்’ என்று சொல்ல முடியுமா?
அவருக்குத் தெரிய வேண்டிய ஒன்றை யாராவது இதுவரை சொன்னது உண்டா?+
21 மேகத்தில் மறைந்திருக்கும் சூரியனைக்கூட மனுஷனால் பார்க்க முடியாது.
அது வானத்தில் பிரகாசித்தாலும்,
காற்று அடித்து, மேகங்கள் கலைந்த பின்புதான் அவனுடைய கண்களுக்குத் தெரியும்.
23 சர்வவல்லமையுள்ளவரை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது.+
அவர் மகா வல்லமை உள்ளவர்.+
அவர் ஒருபோதும் நியாயத்தைப் புரட்ட மாட்டார்;+ எப்போதும் நீதியாக நடந்துகொள்வார்.+
24 அதனால், ஜனங்கள் அவருக்குப் பயந்து நடக்க வேண்டும்.+
தங்களுக்கே எல்லாம் தெரியும் என்று நினைக்கிற மேதாவிகளுக்கு அவர் உதவி செய்யவே மாட்டார்”+ என்று சொன்னார்.
38 அப்போது, புயல்காற்றிலிருந்து யெகோவா யோபுவிடம்,+
3 மனுஷனே, தயவுசெய்து தயாராகு.
நான் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்.
4 நான் பூமிக்கு அஸ்திவாரம் போட்டபோது+ நீ எங்கே இருந்தாய்?
உனக்குத் தெரியும் என்றால் சொல்.
5 அதற்கு அளவுகள் குறித்தது யார் என்று சொல்ல முடியுமா?
நூல் பிடித்து அதை அளந்தது யார் என்று தெரியுமா?
6 அதன் அஸ்திவாரம் எதன்மேல் போடப்பட்டது?
அதற்கு மூலைக்கல் வைத்தது யார்?+
7 விடியற்கால நட்சத்திரங்கள்+ ஒன்றுசேர்ந்து சந்தோஷமாகப் பாடியபோது,
கடவுளுடைய தூதர்கள்*+ சந்தோஷ ஆரவாரம் செய்தபோது, நீ எங்கே இருந்தாய்?
8 கருப்பையிலிருந்து வருவதுபோல் கடல் புரண்டு வந்தபோது,
அதற்கு அணை போட்டது யார்?+
9 நான் மேகங்களால் அதைப் போர்த்தினேன்.
கருமேகங்களால் அதை மூடினேன்.
10 அதற்கு ஒரு எல்லைக்கோடு கிழித்தேன்.
கதவுகளும் தாழ்ப்பாள்களும் வைத்தேன்.+
11 ‘பொங்கிவரும் அலைகள் இதுவரை வரலாம், இதற்குமேல் வரக் கூடாது.
இந்தக் கோட்டைத் தாண்டக் கூடாது’ என்று கட்டளை போட்டேன்;+ அப்போதெல்லாம் நீ எங்கே இருந்தாய்?
12 பொழுது விடிய வேண்டும் என்று நீ கட்டளை கொடுத்தது உண்டா?
அது எங்கே விடிய வேண்டும்+ என்று நீ சொன்னது உண்டா?
13 அது பூமி முழுவதையும் வெளிச்சமாக்குகிறது.
கெட்டவர்களை ஓடி ஒளிய வைக்கிறது.+
14 களிமண்ணில் பதியும் முத்திரைபோல் பூமியின் தோற்றம் தெளிவாகத் தெரிகிறது.
அதன் இயற்கை அமைப்புகள் ஒரு உடையிலுள்ள வடிவங்கள்போல் பளிச்சென்று தெரிகின்றன.
17 மரணத்தின் வாசலை+ யாராவது உனக்குக் காட்டியிருக்கிறார்களா?
மரண இருளின் வாசலை+ நீ பார்த்திருக்கிறாயா?
18 பூமி எவ்வளவு பெரியது என்று உனக்குத் தெரியுமா?+
இதற்கெல்லாம் உன்னிடம் பதில் இருந்தால் சொல்.
இருள் எங்கிருந்து வருகிறது?
20 அங்கே போகும் வழி உனக்குத் தெரியுமா?
அங்கேயே அவற்றைத் திருப்பி அனுப்ப உன்னால் முடியுமா?
21 இதெல்லாம் படைக்கப்பட்ட சமயத்திலேயே நீ பிறந்துவிட்டாயோ?
காலம்காலமாக வாழ்ந்து, எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறாயோ?
22 நீ பனியின் கிடங்குக்குப் போயிருக்கிறாயா?+
ஆலங்கட்டியின்* கிடங்கைப் பார்த்திருக்கிறாயா?+
23 அவற்றை அழிவு நாளுக்காக நான் சேமித்து வைத்திருக்கிறேன்.
போர் நாளுக்காகச் சேர்த்து வைத்திருக்கிறேன்.+
25 மேலே உள்ள தண்ணீர் கீழே இறங்குவதற்குக் கால்வாய் வெட்டியது யார்?
மழைமேகத்துக்கும் இடிமுழக்கத்துக்கும் வழியை உண்டாக்கியது யார்?+
26 மனுஷ நடமாட்டமே இல்லாத இடத்தில் மழையைக் கொட்டுவது யார்?
ஜனங்கள் வாழாத வனாந்தரத்தில் அதைப் பெய்ய வைப்பது யார்?+
27 மழைநீரால் பொட்டல் காடுகளைப் பசுமையாக்குவது யார்?
புல்பூண்டுகளை முளைக்கச் செய்வது யார்?+
29 பனிக்கட்டியைப் பிறப்பித்தது யார்?
உறைபனியை உண்டாக்கியது யார்?+
30 தண்ணீரைக் கல் போல மாற்றுகிறவர் யார்?
கடலின் மேற்பரப்பை உறைய வைக்கிறவர் யார்?+
31 கிமா* நட்சத்திரக் கூட்டத்தை உன்னால் ஒன்றுசேர்த்துக் கட்ட முடியுமா?
32 ஒரு நட்சத்திரக் கூட்டத்தை அதன் காலத்தில் வரப்பண்ண முடியுமா?
35 மின்னலைப் பார்த்து, ‘புறப்பட்டுப் போ!’ என்று கட்டளை கொடுக்க முடியுமா?
அது திரும்பி வந்து, ‘இதோ, வந்துவிட்டேன்!’ என்று உன்னிடம் சொல்லுமா?
37 மேகங்களைக் கணக்கிடும் அளவுக்குப் புத்திசாலி யாராவது உண்டா?
வானத்தின் தண்ணீர் ஜாடிகளைச் சாய்க்கும் அளவுக்குத் திறமைசாலி யாராவது உண்டா?+
38 மழைநீரை மண்ணோடு கலந்து சேறாக ஓட வைக்கிறவர் யார்?
மண்கட்டிகளை ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ள வைக்கிறவர் யார்?
39 சிங்கம் குகையில் பதுங்கியிருக்கும்போது,
சீறிப் பாயக் காத்திருக்கும்போது,
40 அதற்காக நீ இரையை வேட்டையாடித் தர முடியுமா?
சிங்கக் குட்டிகளின் பசியைத் தீர்க்க முடியுமா?+
41 அண்டங்காக்கைக் குஞ்சுகள் பசியில் தள்ளாடும்போது,
கடவுளிடம் உதவி கேட்டுக் கெஞ்சும்போது,
அவற்றுக்கு உணவு தருவது யார்?”+ என்று கேட்டார்.
39 பின்பு அவர்,
“வரையாடுகள் எப்போது குட்டிபோடும் என்று உனக்குத் தெரியுமா?+
மான்கள் குட்டிபோடுவதை நீ பார்த்திருக்கிறாயா?+
2 அவை எத்தனை மாதங்கள் குட்டிகளைச் சுமக்கும் என்று தெரியுமா?
எப்போது குட்டிபோடும் என்று தெரியுமா?
3 அவை குனிந்து, கால்களை மடக்கி, குட்டிகளைப் போடுகின்றன.
பின்பு வலியை மறந்துவிடுகின்றன.
4 அந்தக் குட்டிகள் வெட்டவெளியில் வளர்ந்து, புஷ்டியாகின்றன.
தாயைவிட்டுப் பிரிந்து போகின்றன, திரும்பி வருவதே இல்லை.
6 நான்தான் பாலைநிலத்தை அதற்கு வீடாகக் கொடுத்தேன்.
உப்புநிலத்தில் அதைத் தங்க வைத்தேன்.
7 நகரத்தின் சந்தடியை அது வெறுக்கிறது.
மனுஷன் அதட்டுவதைக் காதில் வாங்க மறுக்கிறது.
8 மேய்ச்சலுக்காக மலைகளில் திரிகிறது.
எல்லா விதமான புல்பூண்டுகளையும் தேடுகிறது.
9 காட்டு எருது உனக்கு வேலை செய்யுமா?+
ராத்திரியில் அது உன்னுடைய தொழுவத்தில் தங்குமா?
10 அதைக் கயிற்றால் கட்டி உழுவதற்காகக் கொண்டுபோக உன்னால் முடியுமா?
பள்ளத்தாக்கை உழுவதற்காக* அது உன் பின்னால் வருமா?
11 அதற்கு இருக்கும் அபார பலத்தை நம்பி,
கடினமான வேலைகளை அதற்குக் கொடுப்பாயா?
12 நீ அறுவடை செய்ததை அது சுமந்துவரும் என்று எதிர்பார்ப்பாயா?
களத்துமேட்டுக்கு அவற்றை எடுத்துக்கொண்டு வரும் என்று காத்திருப்பாயா?
13 நெருப்புக்கோழி சந்தோஷமாகச் சிறகுகளை அடிக்கிறது.
ஆனால், நாரையின் சிறகுகளோடும் இறகுகளோடும் அவற்றை ஒப்பிட முடியுமா?+
14 நெருப்புக்கோழி மண்ணைத் தோண்டி முட்டையிடுகிறது.
அங்கே அடைகாக்கிறது.
15 மனுஷனின் கால்பட்டு அது உடைந்துபோகுமே என்று கவலைப்படுவதில்லை.
மிருகங்களால் மிதிபட்டு நொறுங்குமே என்றும் நினைப்பதில்லை.
16 இரக்கமே இல்லாமல் குஞ்சுகளை விட்டுவிட்டுப் போய்விடுகிறது.
அவை தன் குஞ்சுகள் என்பதையே மறந்துவிடுகிறது;+
முட்டை போட்டதும் அடைகாத்ததும் வீணாகிவிடுமே என்று அது கவலைப்படுவது இல்லை.
18 ஆனால் அது எழுந்து, சிறகுகளை அடித்துக்கொண்டு ஓடும்போது,
குதிரையையும் குதிரைவீரனையும் பார்த்து சிரிக்கிறது.
19 அந்தக் குதிரைக்கு நீயா பலம் கொடுத்தாய்?+
அதன் கழுத்தில் நீயா பிடரிமயிரை வளர வைத்தாய்?
20 அதை வெட்டுக்கிளிபோல் துள்ள வைக்க உன்னால் முடியுமா?
அதனுடைய கம்பீரமான சத்தம் நடுநடுங்க வைக்கிறது.+
22 பயம் என்றாலே அது அலட்சியமாகச் சிரிக்கிறது; எதற்குமே பயப்படுவது இல்லை.+
வாளைப் பார்த்துக்கூட பின்வாங்குவது இல்லை.
23 அது ஓடும் வேகத்தில் வீரனின் அம்புகள் கலகலக்கின்றன.
அவனுடைய ஈட்டிகள் பளபளக்கின்றன.
24 அது துள்ளிக்கொண்டு, வெறித்தனமாகத் தாவி ஓடுகிறது.
ஊதுகொம்பை ஊதிவிட்டால் அதை யாரும் பிடித்து நிறுத்த முடியாது.*
25 ஊதுகொம்பின் சத்தம் கேட்டதும், சந்தோஷத்தில் கனைக்கிறது.
தூரத்திலிருந்தே போரை மோப்பம் பிடிக்கிறது.
படைத் தளபதிகள் கட்டளையிடும் சத்தத்தையும் போர் முழக்கத்தையும் கேட்கிறது.+
27 நீ கட்டளை கொடுத்ததால்தான் கழுகு மேலே பறக்கிறதா?+
நீ சொன்னதால்தான் அது உயரத்தில் கூடு கட்டுகிறதா?+
28 அல்லது, பாறை உச்சியில் இரவைக் கழிக்கிறதா?
மலைமேல் இருக்கிற அதன் கோட்டையில் தங்குகிறதா?
40 பின்பு யெகோவா யோபுவிடம்,
2 “சர்வவல்லமையுள்ளவரைக் குறை சொல்லி, யாராவது அவரோடு வாதாட முடியுமா?+
அவரிடம் குற்றம் கண்டுபிடிக்க* நினைப்பவன் இதற்குப் பதில் சொல்லட்டும்”+ என்றார்.
3 அப்போது யோபு யெகோவாவிடம்,
4 “நான் எதற்குமே தகுதி இல்லாதவன்.+
என்னால் எப்படி உங்களுக்குப் பதில் சொல்ல முடியும்?
என் வாயைப் பொத்திக்கொள்கிறேன்.+
5 ஒன்றிரண்டு தடவை பேசிவிட்டேன், இனி பேச மாட்டேன்.
இனி வாயே திறக்க மாட்டேன்” என்று சொன்னார்.
6 அப்போது யெகோவா புயல்காற்றிலிருந்து யோபுவிடம்,+
8 என் தீர்ப்பையே நீ தப்பு என்று சொல்வாயா?
நீ செய்வதுதான் சரி என்பதுபோல் என்னைக் குற்றப்படுத்துவாயா?+
10 உன் மேன்மையையும் மகிமையையும் கொஞ்சம் காட்டு.
உன் பெருமையையும் சிறப்பையும் காட்டு.
11 உன் கோபத்தையும் ஆவேசத்தையும் கொட்டு.
தலைக்கனம் பிடித்த எல்லாரையும் தலைகுனிய வை.
12 அகங்காரம் பிடித்த எல்லாரையும் அடக்கு.
கெட்டவர்களை அவர்கள் நிற்கும் இடத்திலேயே மிதித்துப் போடு.
13 அவர்கள் எல்லாரையும் மண்ணில் புதைத்துவிடு.
இருட்டுக்குள் கட்டிப்போடு.
14 இப்படியெல்லாம் செய்ய முடிந்தால் நீ வல்லவன் என்று ஒத்துக்கொள்வேன்.*
உன்னை நீயே காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று நம்புவேன்.
15 பிகெமோத்தை* கொஞ்சம் பார்; உன்னைப் படைத்தது போலத்தான் அதையும் படைத்தேன்.
அது காளையைப் போலப் புல்லைத் தின்கிறது.
16 அதன் இடுப்பில் இருக்கும் பலத்தைப் பார்.
வயிற்றுத் தசைகளில் உள்ள சக்தியைப் பார்.
17 அது தன் வாலை, மரம்போல் நேராக நீட்டுகிறது.
அதன் தொடைகள் தசைநாண்களால் பின்னப்பட்டிருக்கின்றன.
18 அதன் எலும்புகள் செம்புக் குழாய்கள்.
அதன் கால்கள் உறுதியான இரும்புக் கம்பிகள்.
19 அது கடவுளுடைய படைப்புகளில் முதல் இடம் பிடிக்கிறது.
படைத்தவரால் மட்டும்தான் அதை வாளால் வெட்டி வீழ்த்த முடியும்.
20 மலையெங்கும் உள்ள புல்பூண்டுகளை அது சாப்பிடுகிறது.
அதைச் சுற்றி காட்டு மிருகங்கள் விளையாடுகின்றன.
21 முட்புதர்களின் கீழ் அது படுத்துக்கொள்கிறது.
சேற்றில் வளரும் நாணல்களின் நிழலில் தங்குகிறது.
23 ஆறு கரைபுரண்டு ஓடினாலும் அது பதறுவதில்லை.
யோர்தான் ஆற்றின்+ வெள்ளம் அதன் முகத்தில் மோதினாலும் அது பயப்படுவதில்லை.
24 யாராவது நேருக்குநேர் போய் அதைப் பிடிக்க முடியுமா?
கொக்கியால்* அதன் மூக்கைத் துளைக்க முடியுமா?” என்றார்.
41 பின்பு அவர்,
“லிவியாதானை*+ தூண்டில் போட்டுப் பிடிக்க உன்னால் முடியுமா?
அதன் நாக்கைக் கயிற்றால் அழுத்திப் பிடிக்க முடியுமா?
3 அது உன்னைப் பார்த்துக் கெஞ்சுமா?
சாந்தமாகப் பேசுமா?
4 அது உன்னோடு ஒப்பந்தம் செய்துகொண்டு,
கடைசி வரைக்கும் உனக்கு அடிமையாக இருக்குமா?
5 குருவியைக் கொஞ்சுவதுபோல் அதை நீ கொஞ்சுவாயா?
உன் செல்ல மகள்கள் விளையாடுவதற்காக அதைக் கட்டிப் போடுவாயா?
6 வியாபாரிகள் அதன் விலையைப் பேரம் பேச முடியுமா?
அதைக் கூறு போட்டு விற்க முடியுமா?
8 அதன்மேல் உன் கையை வைத்துப் பார்.
அது உன்னை உண்டு இல்லை என்றாக்கிவிடும்; அதன் பிறகு அந்தப் பக்கமே நீ போக மாட்டாய்.
9 அதை ஜெயிக்க முடியும் என்று கற்பனைகூட செய்யாதே.
அதைப் பார்த்தாலே விழுந்தடித்து ஓடுவாய்.
10 அதைச் சீண்டிப் பார்க்க ஒருவனுக்கும் துணிச்சல் வராது.
அப்படியென்றால், என்னோடு மோத யாரால் முடியும்?+
11 நான் கைமாறு செய்யும்படி முன்னதாகவே எனக்கு எதையாவது கொடுத்தவன் யார்?+
வானத்தின் கீழிருக்கிற எல்லாமே எனக்குத்தான் சொந்தம்.+
12 லிவியாதானின் உறுப்புகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?
அதன் பலத்தையும் அழகான வடிவத்தையும் பற்றிச் சொல்கிறேன், கேள்.
13 அதன் தோலை யாராவது உரித்திருக்கிறார்களா?
அதன் வாய்க்குள் யாராவது நுழைந்திருக்கிறார்களா?
14 அதன் வாயைப் பிளக்க யாருக்காவது துணிச்சல் வருமா?
அதன் பற்களைப் பார்த்து நடுங்காதவர்கள் உண்டா?
15 அதன் முதுகில் அடுக்கடுக்காகச் செதில்கள் இருக்கும்.*
அந்தச் செதில்கள் நெருக்க நெருக்கமாக இருக்கும்.
16 காற்று போகக்கூட இடைவெளி இருக்காது.
அவ்வளவு இறுக்கமாக இணைந்திருக்கும்.
17 அவை நன்றாக ஒட்டிக்கொண்டிருக்கும்.
பிரிக்க முடியாத அளவுக்குப் பிணைந்திருக்கும்.
18 அது தும்மல் போடும்போது மின்னல் வெட்டுவதுபோல் இருக்கும்.
கண்களைத் திறக்கும்போது சூரியன் உதிப்பதுபோல் இருக்கும்.
19 அதன் வாயிலிருந்து தீப்பிழம்புகள் புறப்படும்.
தீப்பொறிகள் பறக்கும்.
21 அதன் மூச்சுக்காற்று நிலக்கரியைக்கூட கொளுத்திவிடும்.
அதன் வாயிலிருந்து தீ ஜுவாலை புறப்படும்.
22 அதன் கழுத்தில் அதிக பலம் இருக்கும்.
அதன் முன்னால் வருபவர்களுக்குக் குலைநடுங்கும்.
23 அதன் வயிற்றுப் பகுதி மடிப்பு மடிப்பாக இருக்கும்.
அது இரும்புபோல் கெட்டியாகவும் அசைக்க முடியாததாகவும் இருக்கும்.
25 அது எழும்பும்போது பலசாலிகள்கூட பயந்து நடுங்குவார்கள்.
அது வாலை அடித்துக்கொண்டு நீந்தும்போது மிரண்டுபோவார்கள்.
27 அதற்கு இரும்புகூட வெறும் துரும்பு.
செம்புகூட உளுத்துப்போன மரக்கொம்பு.
28 அம்புகளை எறிந்தாலும் அது ஓடாமல் நிற்கும்.
கற்களைச் சுழற்றி வீசினாலும் தூசிபோல் உதறித்தள்ளும்.
29 பெரிய தடியைக்கூட ஒரு புல்லைப் போலப் பார்க்கும்.
ஈட்டியின் சத்தம் கேட்டு கிண்டலாகச் சிரிக்கும்.
30 அதன் அடிப்பகுதி கூர்மையான ஓடுகளை அடுக்கி வைத்ததுபோல் இருக்கும்.
31 அது ஆவேசமாக நீந்தும்போது, உலைபானையைப் போலக் கடல்* பொங்கியெழும்.
எண்ணெய்ச் சட்டியில் நுரை வருவது போலக் கடலில் நுரை வரும்.
32 அது நீந்திப்போகிற வழியெல்லாம் வெள்ளி போல மின்னும்.
கடலுக்கு நரை தட்டியது போலத் தெரியும்.
33 பூமியில் அது போன்ற பிராணியே கிடையாது.
அதற்கு இருக்கும் துணிச்சல் வேறு எதற்குமே கிடையாது.
34 கர்வமுள்ள எல்லா பிராணிகளையும் அது முறைத்துப் பார்க்கிறது.
பலம் படைத்த எல்லா காட்டு மிருகங்களுக்கும் அதுவே ராஜா” என்று சொன்னார்.
42 அப்போது யோபு யெகோவாவிடம்,
2 “உங்களால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை என்று புரிந்துகொண்டேன்.
நினைப்பதையெல்லாம் செய்ய உங்களால் முடியும் என்று தெரிந்துகொண்டேன்.+
3 ‘நான் சொல்வதை அறிவே இல்லாமல் மாற்றிப் பேசுவது யார்?’+ என்று நீங்கள் கேட்டீர்கள்.
உண்மையில், நான்தான் புரிந்துகொள்ளாமல் பேசிவிட்டேன்.
என் புத்திக்கு எட்டாத விஷயங்களைப்+ பற்றித் தப்பாகப் பேசிவிட்டேன்.
4 நீங்கள் என்னிடம், ‘நான் பேசுவதைத் தயவுசெய்து கேள்.
நான் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்’+ என்றீர்கள்.
5 உங்களைப் பற்றி என் காதுகளால் கேட்டிருக்கிறேன்.
இப்போது என் கண்களாலேயே உங்களைப் பார்க்கிறேன்.
6 அதனால், நான் சொன்னதையெல்லாம் திரும்ப* வாங்கிக்கொள்கிறேன்.+
மண்ணிலும் சாம்பலிலும் உட்கார்ந்து வருத்தப்படுகிறேன்”+ என்று சொன்னார்.
7 யெகோவா யோபுவிடம் பேசிய பின்பு தேமானியனான எலிப்பாசிடம் பேசினார். யெகோவா அவனிடம்,
“உன்மேலும் உன் நண்பர்கள்மேலும்+ என் கோபம் பற்றியெரிகிறது. என் ஊழியன் யோபு என்னைப் பற்றிச் சரியாகப் பேசியதுபோல் நீங்கள் பேசவில்லை.+ 8 இப்போது ஏழு காளைகளையும் ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும் எடுத்துக்கொண்டு என் ஊழியன் யோபுவிடம் போங்கள். அங்கே உங்கள் பாவத்துக்காக அவற்றைத் தகன பலி செலுத்துங்கள். என் ஊழியன் யோபு உங்களுக்காக ஜெபம் செய்வான்.+ அவன் என்னைப் பற்றிச் சரியாகப் பேசியதுபோல் நீங்கள் பேசவில்லை. ஆனாலும், உங்களுடைய முட்டாள்தனத்துக்காக உங்களைத் தண்டிக்க வேண்டாமென்று அவன் என்னிடம் கெஞ்சுவான். என் ஊழியன் யோபுவுடைய ஜெபத்தை நான் நிச்சயமாகக் கேட்பேன்” என்றார்.
9 தேமானியனான எலிப்பாசும், சுவாகியனான பில்தாத்தும், நாகமாத்தியனான சோப்பாரும் யெகோவா சொன்னபடியே செய்தார்கள். யெகோவாவும் யோபு செய்த ஜெபத்தைக் கேட்டார்.
10 நண்பர்களுக்காக யோபு ஜெபம் செய்த பின்பு+ அவருடைய எல்லா கஷ்டங்களையும் யெகோவா தீர்த்தார்.+ மறுபடியும் சீரும் சிறப்புமாக வாழ வைத்தார். முன்பு இருந்ததைவிட இரண்டு மடங்கு ஆசீர்வாதங்களை யெகோவா தந்தார்.+ 11 யோபுவின் சகோதரர்களும் சகோதரிகளும் நண்பர்களும்+ அவருடைய வீட்டுக்கு வந்து அவரோடு விருந்து சாப்பிட்டார்கள். அவருக்குப் பல கஷ்டங்கள் வரும்படி யெகோவா அனுமதித்திருந்ததை நினைத்து அவர்மேல் அனுதாபப்பட்டார்கள், அவருக்கு ஆறுதல் சொன்னார்கள். பின்பு, ஆளுக்கொரு வெள்ளிக் காசையும் தங்க வளையத்தையும் அவருக்குக் கொடுத்தார்கள்.
12 யெகோவா முன்பைவிட அதிகமாக யோபுவை ஆசீர்வதித்தார்.+ 14,000 ஆடுகளையும் 6,000 ஒட்டகங்களையும் 1,000 ஜோடி மாடுகளையும் 1,000 கழுதைகளையும்* கொடுத்தார்.+ 13 யோபுவுக்குத் திரும்பவும் ஏழு மகன்களும் மூன்று மகள்களும் பிறந்தார்கள்.+ 14 மூத்த மகளின் பெயர் எமீமாள், அடுத்தவள் பெயர் கெத்சீயாள், கடைசி மகளின் பெயர் கேரேனாப்புக். 15 யோபுவின் மகள்களைப் போல அழகான பெண்கள் அந்தத் தேசத்திலேயே இருக்கவில்லை. மகன்களுக்குக் கொடுத்தது போலவே மகள்களுக்கும் யோபு சொத்துகளைக் கொடுத்தார்.
16 அதன் பிறகு யோபு 140 வருஷங்கள் உயிர்வாழ்ந்து, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என நான்கு தலைமுறையைப் பார்த்தார். 17 இப்படி, யோபு நிறைய காலம் மனநிறைவோடு வாழ்ந்து, பின்பு இறந்துபோனார்.
ஒருவேளை இதன் அர்த்தம், “பகைக்கப்படுகிறவர்.”
வே.வா., “குற்றமற்றவராகவும்.”
நே.மொ., “பெட்டைக் கழுதைகளையும்.”
நே.மொ., “இதயத்தில்.”
நே.மொ., “உண்மைக் கடவுளின் மகன்கள்.”
வே.வா., “குற்றமற்றவன்.”
வே.வா., “தாக்கிப் பாருங்கள்.”
அல்லது, “மின்னலை.”
நே.மொ., “நிர்வாணமாக.”
வே.வா., “கடவுளைப் பற்றி எதுவுமே தப்பாகப் பேசவில்லை.”
நே.மொ., “உண்மைக் கடவுளின் மகன்கள்.”
வே.வா., “குற்றமற்றவன்.”
நே.மொ., “தோலுக்குத் தோல். ஒரு மனுஷன் தன் உயிருக்காகத் தன்னிடம் இருக்கிற எல்லாவற்றையும் கொடுப்பான்.”
வே.வா., “தாக்கிப் பாருங்கள்.”
வே.வா., “இன்னுமா உங்கள் உத்தமத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள்?”
வே.வா., “யோபுவுக்குத் தெரிந்தவர்கள்.”
வே.வா., “இருட்டும் சாவின் நிழலும்.”
இது ஒரு முதலை அல்லது நீரில் வாழும் வேறு ஏதாவது ராட்சதப் பிராணி என்று கருதப்படுகிறது.
அல்லது, “பாழான இடங்களைத் தங்களுக்குக் கட்டிக்கொண்ட.”
நே.மொ., “வேதனைப்படுகிறவனுக்குக் கடவுள் ஏன் வெளிச்சம் தருகிறார்?”
நே.மொ., “அவனுக்கு ஏன் வெளிச்சம் தருகிறார்?”
வே.வா., “நம்பிக்கையை.”
வே.வா., “தீமையை.”
வே.வா., “தீமையை.”
வே.வா., “தூதுவர்களிடமே.”
நே.மொ., “அந்துப்பூச்சி.”
வே.வா., “உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்யும்.”
வே.வா., “உன் கூடாரத்தில் நிம்மதியாக இருப்பாய்.”
வே.வா., “யோசிக்காமல் கொள்ளாமல்.”
வே.வா., “தட்டவில்லையே.”
வே.வா., “மாறாத அன்பு காட்டாதவன்.”
வே.வா., “பயணம் செய்கிற சபேயர்கள்.”
வே.வா., “பேரம் பேசுவீர்கள்.”
நே.மொ., “நல்லது நடக்கப்போகிறது?”
அதாவது, “பாப்பிரஸ் புல்.”
வே.வா., “கடவுளைவிட்டு விலகியவனின்; விசுவாசதுரோகியின்.”
வே.வா., “கற்களாலான வீட்டைப் பார்க்கிறான்.”
வே.வா., “குற்றமற்றவர்களை.”
இது அர்சா மேஜர் என்ற பெருங்கரடி நட்சத்திரக் கூட்டத்தைக் குறிக்கலாம்.
இது ஓரியன் நட்சத்திரக் கூட்டத்தைக் குறிக்கலாம்.
இது ரிஷப நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கும் கார்த்திகை நட்சத்திரங்களைக் குறிக்கலாம்.
ராகாப் என்பது ராட்சதக் கடல் பிராணியைக் குறிக்கலாம்.
அல்லது, “என்மீது வழக்கு தொடுத்திருப்பவரிடம்.”
வே.வா., “வழக்காட வரச்சொல்லி எனக்கு உத்தரவு போட முடியாது.”
வே.வா., “நிரபராதியாக.”
வே.வா., “எங்கள் இரண்டு பேருக்கும் மத்தியஸ்தராக இருக்க.”
நே.மொ., “நீங்கள் என்னைப் பால் போல ஊற்றவில்லையா?”
நே.மொ., “பாலாடைக் கட்டி போல உறைய வைக்கவில்லையா?”
வே.வா., “உயிர்மூச்சை.”
வே.வா., “கொஞ்சம் சந்தோஷப்படுவேன்.”
வே.வா., “இருட்டும் சாவின் நிழலும் உள்ள.”
வே.வா., “பெருமை.”
வே.வா., “போதிப்பதெல்லாம்.”
வே.வா., “காட்டுக்கழுதை எப்படி மனுஷனாகப் பிறக்க.”
வே.வா., “தயார்படுத்து.”
வே.வா., “புரிந்துகொள்ளும் திறன்.”
வே.வா., “அடி சறுக்கியவர்கள்தான்.”
அல்லது, “பூமியிடம் பேசிப் பாருங்கள்.”
வே.வா., “புரிந்துகொள்ளும் திறன்.”
வே.வா., “நோக்கமும்; தீர்மானமும்.”
வே.வா., “ஆலோசகர்களிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துவிடுகிறார்.”
வே.வா., “புரிந்துகொள்ளும் திறனை.”
வே.வா., “கடவுளைவிட்டு விலகியவர்கள்; விசுவாசதுரோகிகள்.”
அல்லது, “யாராவது அப்படிச் செய்ய முடியுமென்றால், நான் அமைதியாக இருந்து உயிரை விட்டுவிடுகிறேன்.”
நே.மொ., “மறைத்துக்கொள்கிறீர்கள்.”
நே.மொ., “அவன்.” ஒருவேளை யோபுவைக் குறிக்கலாம்.
வே.வா., “அவன் வாழ்க்கையே வேதனைகள் நிறைந்ததுதான்.”
அல்லது, “கிள்ளி எறியப்படுகிறான்.”
அதாவது, “கல்லறையில் இருக்கும்.”
நே.மொ., “தன் வயிற்றைக் கிழக்குக் காற்றால் நிரப்புவானா?” கிழக்குக் காற்று என்பது பாலைவனங்களிலிருந்து வீசும் கொடிய வெப்பக் காற்றைக் குறிக்கிறது.
நே.மொ., “அநியாயத்தைத் தண்ணீர்போல் குடிக்கிறவன்.”
வே.வா., “சர்வவல்லமையுள்ளவரையே ஜெயிக்கப் பார்க்கிறானே!”
அதாவது, “பழையபடி நல்ல நிலைமை வருமென்ற நம்பிக்கை.”
வே.வா., “கடவுளைவிட்டு விலகியவர்களின்; விசுவாசதுரோகிகளின்.”
வே.வா., “என்னோடு கூடி வாழ்ந்த.”
நே.மொ., “என் சிறுநீரகங்களை.”
சொல் பட்டியலைப் பாருங்கள்.
வே.வா., “என் கண்களில் சாவு நிழலாடுகிறது.”
அல்லது, “நான் கண் மூடாமல் கடவுளுக்காகக் காத்திருக்கிறேன்.”
வே.வா., “பகுத்தறிவை.”
வே.வா., “கடவுளைவிட்டு விலகியவர்களை; விசுவாசதுரோகிகளை.”
நே.மொ., “அவர்கள் இரவைப் பகலாக்குகிறார்கள்.”
அதாவது, “என் நம்பிக்கை.”
நே.மொ., “கல்லறையின் கதவுகளுக்குள்.”
அல்லது, “அசுத்தமாக.”
வே.வா., “கொடூரமான சாவைச் சந்திக்க.”
வே.வா., “அவன் குடியிருக்கும் இடத்தில்.”
வே.வா., “என் உறவினர்கள்.”
நே.மொ., “என் பற்களின் மேலுள்ள தோல்தான் தப்பியிருக்கிறது.”
நே.மொ., “மண்மேல்.”
வே.வா., “புரிந்துகொள்ளும் திறன்.”
வே.வா., “கடவுளைவிட்டு விலகியவனின்; விசுவாசதுரோகியின்.”
நே.மொ., “அவனுடைய எலும்புகள்.”
வே.வா., “கிளறிவிடாத.”
வே.வா., “செல்வாக்கோடு.”
வே.வா., “கன்றுகள் செத்துப் பிறப்பதில்லை.”
வே.வா., “ஒரு நொடியில்.” அதாவது, “வேதனைப்படாமல் சட்டென.”
வே.வா., “சதி செய்வதே.”
நே.மொ., “பொல்லாதவர்களுடைய விளக்கு எப்போதாவது அணைந்துபோயிருக்கிறதா?”
வே.வா., “அறிவைப் புகட்ட.”
அல்லது, “என்னைத் தாக்க.”
வே.வா., “ஒருவனுக்கு ஆழமான புரிந்துகொள்ளுதல்.”
வே.வா., “அநாதைகளுக்கு.”
வே.வா., “கண்ணிகளில்.”
நே.மொ., “வானத்தின் வட்டத்தில்.”
ஓப்பீர் என்ற இடம், உயர்தரமான தங்கத்துக்குப் பேர்போனது.
வே.வா., “சர்வவல்லமையுள்ளவரில்.”
அல்லது, “மிருகங்களுக்காகப் புல்லை அறுக்கிறார்கள்.”
அல்லது, “மதில்கள் சூழ்ந்த இடத்தில் எண்ணெயைப் பிழிந்தெடுக்கிறார்கள்.”
அல்லது, “அதற்காகக் கடவுள் யாரையும் குற்றப்படுத்துவதே இல்லை.”
வே.வா., “சுத்தமானவனாக.”
வே.வா., “ஞானம்.”
வே.வா., “செத்து செயலிழந்து போனவர்கள்.”
நே.மொ., “வடக்குப் பகுதியை.”
வே.வா., “புரிந்துகொள்ளுதலால்.”
நே.மொ., “ராகாபை.”
வே.வா., “அவருடைய காற்றை அனுப்பி.”
வே.வா, “நெளிந்து.”
வே.வா., “கடவுள் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
வே.வா., “நான் கடவுளுக்கு உண்மையாக இருப்பேன்.”
வே.வா., “கடவுளைவிட்டு விலகியவனை; விசுவாசதுரோகியை.”
வே.வா., “சர்வவல்லமையுள்ளவரில்.”
அல்லது, “கடவுளுடைய உதவியால்.”
நே.மொ., “மண்ணைப் போல்.”
நே.மொ., “களிமண்ணைப் போல்.”
நே.மொ., “அந்துப்பூச்சியின்.”
அல்லது, “அவனைப் பார்த்து அவர்கள் கைதட்டிச் சிரிப்பார்கள், அவர்களுடைய இடத்திலிருந்து விசில் அடிப்பார்கள்.”
அநேகமாக, சுரங்க வேலையைக் குறிக்கலாம்.
வே.வா., “புரிந்துகொள்ளுதல்.”
ஓப்பீர் என்ற இடம், உயர்தரமான தங்கத்துக்குப் பேர்போனது.
எபிரெயுவில், “கூஷின்.”
வே.வா., “புரிந்துகொள்ளுதல்.”
நே.மொ., “அழிவும்.”
வே.வா., “புரிந்துகொள்ளுதலுக்கு.”
வே.வா., “வேலைக்காரர்கள்.”
நே.மொ., “தாடைகளை உடைத்தேன்.”
நே.மொ., “அவர்களுடைய பற்களில்.”
அல்லது, “அவர்கள் என் முகத்தின் பிரகாசத்தை மங்கச் செய்யவில்லை.”
வே.வா., “என்னைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்குகளில்.”
வே.வா., “தங்கள் கடிவாளத்தைக் கழற்றி வீசுகிறார்கள்.”
அல்லது, “அவர்களுக்கு உதவ.”
வே.வா., “ராத்திரியில் வலி என் எலும்புகளைத் துளைக்கிறது.”
அல்லது, “வேதனையின் கொடுமையால் அடையாளம் தெரியாதபடி ஆகிவிட்டேன்.”
அல்லது, “நொறுக்கிப் போடுகிறீர்கள்.”
நே.மொ., “எலும்பெல்லாம்.”
நே.மொ., “என் கண்களோடு ஒப்பந்தம் செய்திருக்கிறேன்.”
வே.வா., “கன்னிப் பெண்ணை.”
அல்லது, “பொய் பேசுகிறவர்களோடு கூட்டுச் சேர்ந்திருக்கிறேனா?”
நே.மொ., “நீதியின் தராசில்.”
வே.வா., “என் சந்ததி அழிந்துபோகட்டும்.”
நே.மொ., “மாவு அரைக்கட்டும்.”
வே.வா., “என்னோடு வழக்காடியபோது.”
அல்லது, “நகரவாசலில் எனக்குச் செல்வாக்கு இருந்ததால், அங்கு வந்த”
நே.மொ., “இதயம்.”
நே.மொ., “என் வாயால் என் கையை முத்தமிட்டேனா?”
நே.மொ., “உடையின் மடிப்பில் என் பாவத்தை மறைத்து வைத்தேனா?”
சால்கள் என்பது உழும்போது நிலத்தில் ஏற்படும் பள்ளங்கள்.
வே.வா., “யோபு தன் பார்வைக்கு நீதிமானாக இருந்தார்.”
வே.வா., “யோபுவைக் கண்டிக்க முடியவில்லை.”
நே.மொ., “என் இதயம் அடைத்து வைக்கப்பட்ட திராட்சமதுவைப் போல இருக்கிறது.”
நே.மொ., “வெடிக்கப்போகும் புதிய திராட்சமது தோல்பையைப் போல அது இருக்கிறது.”
வே.வா., “கல்லறைக்கு.”
வே.வா., “ஆயுதத்தால்.”
வே.வா., “அவன் கண்டிக்கப்படுகிறான்.”
நே.மொ., “ஒரு மீட்கும்பொருளை நான்.”
வே.வா., “அவன் இளமைத் துடிப்போடு இருந்த நாட்களுக்குத் திரும்புவான்.”
அல்லது, “அதனால் எனக்கு லாபம் கிடைக்கவில்லை.”
வே.வா., “அந்தஸ்து இல்லாதவர்களைவிட அந்தஸ்து உள்ளவர்களை.”
வே.வா., “கடவுளைவிட்டு விலகியவனை; விசுவாசதுரோகியை.”
வே.வா., “ஆழமான புரிந்துகொள்ளுதலே.”
அல்லது, “என் தகப்பனே, யோபு சோதிக்கப்படட்டும்.”
ஒருவேளை, “கடவுளுக்கு என்ன பிரயோஜனம்?”
வே.வா., “எல்லா அறிவும் உள்ளவரிடம்.”
அல்லது, “ராஜாக்களை.”
வே.வா., “ஆயுதத்தால்.”
வே.வா., “கடவுளைவிட்டு விலகியவர்கள்; விசுவாசதுரோகிகள்.”
அல்லது, “முடித்துக்கொள்கிறார்கள்.”
வே.வா., “வன்மத்தோடு கைகொட்டிச் சிரிக்காதபடி.”
அல்லது, “அவரை யாராவது குறைசொல்ல முடியுமா?; தட்டிக்கேட்க முடியுமா?”
அல்லது, “ஆதரிக்கிறார்.”
அல்லது, “என்ன வருகிறதென்று.”
கடல், ஆறு, ஏரி போன்றவை.
வே.வா., “மேகங்களுக்குக் கட்டளை கொடுக்கிறார்.”
வே.வா., “எல்லா அறிவும் உள்ளவர்.”
வே.வா., “உலோகக் கண்ணாடியை.”
நே.மொ., “மகன்கள் எல்லாரும்.”
வே.வா., “கெட்டவர்களின் பகல் வெளிச்சம்.”
அதாவது, “பனிக்கட்டியின்.”
அல்லது, “மின்னல்.”
இது ரிஷப நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கும் கார்த்திகை நட்சத்திரங்களைக் குறிக்கலாம்.
இது ஓரியன் நட்சத்திரக் கூட்டத்தைக் குறிக்கலாம்.
இது அர்சா மேஜர் என்ற பெருங்கரடி நட்சத்திரக் கூட்டத்தைக் குறிக்கலாம்.
நே.மொ., “கூட்டத்துக்கும் அதன் மகன்களுக்கும்.”
அல்லது, “அவர்.”
அல்லது, “மனுஷர்களுக்கு.”
அல்லது, “மனதுக்கு.”
வே.வா., “உழுது சமப்படுத்துவதற்காக.”
வே.வா., “புரிந்துகொள்ளும் திறனை.”
அல்லது, “ஊதுகொம்பின் சத்தத்தை அது நம்புவதில்லை.”
வே.வா., “புரிந்துகொள்ளும் திறனால்தான்.”
வே.வா., “அவரைக் கண்டிக்க.”
வே.வா., “பாராட்டுவேன்.”
அதாவது, “நீர்யானையை.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கின்.”
நே.மொ., “கண்ணியால்.”
ஒருவேளை, “முதலையை.”
நே.மொ., “முள்ளால்.”
அல்லது, “அடுக்கடுக்கான செதில்கள் அதற்குப் பெருமை சேர்க்கும்.”
வே.வா., “காய்ந்த நாணற்புல்லினால் எரியும்.”
வே.வா., “திரிகைக் கல்லின் அடிக்கல்லை.”
அதாவது, “தானியங்களைப் போரடிக்கும் பலகையை.”
இதற்கான எபிரெய வார்த்தை பெரிய ஆற்றையும் குறிக்கலாம்.
வே.வா., “வாபஸ்.”
நே.மொ., “பெட்டைக் கழுதைகளையும்.”