எண்ணாகமம்
1 இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டு வந்த இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் முதலாம் நாளில்,+ சீனாய் வனாந்தரத்தில்+ சந்திப்புக் கூடாரத்திலே+ மோசேயிடம் யெகோவா பேசினார். அவர் சொன்னது இதுதான்: 2 “இஸ்ரவேல் ஜனங்களைக் கணக்கெடுங்கள்.+ அவர்கள் ஒவ்வொருவரையும் வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாக, பெயர் பெயராக எண்ணுங்கள். 3 இஸ்ரவேல் படையில் சேவை செய்யத் தகுதியுள்ள 20 வயதும் அதற்கு அதிகமான வயதும் உள்ளவர்களை+ நீயும் ஆரோனும் அணி அணியாக* பெயர்ப்பதிவு செய்ய வேண்டும்.
4 உங்களுக்கு உதவியாக ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். அவருடைய தந்தைவழிக் குடும்பத்துக்கு அவர் தலைவராக இருப்பார்.+ 5 இப்படி உங்களுக்கு உதவியாக இருக்க வேண்டியவர்களின் பெயர்கள்: ரூபன் கோத்திரத்தில், சேதேயூரின் மகன் எலிசூர்.+ 6 சிமியோன் கோத்திரத்தில், சூரிஷதாயின் மகன் செலூமியேல்.+ 7 யூதா கோத்திரத்தில், அம்மினதாபின் மகன் நகசோன்.+ 8 இசக்கார் கோத்திரத்தில், சூவாரின் மகன் நெதனெயேல்.+ 9 செபுலோன் கோத்திரத்தில், ஹேலோனின் மகன் எலியாப்.+ 10 யோசேப்பின் மகன்களில்: எப்பிராயீம்+ கோத்திரத்தில், அம்மியூத்தின் மகன் எலிஷாமா. மனாசே கோத்திரத்தில், பெதாசூரின் மகன் கமாலியேல். 11 பென்யமீன் கோத்திரத்தில், கீதெயோனியின் மகன் அபிதான்.+ 12 தாண் கோத்திரத்தில், அம்மிஷதாயின் மகன் அகியேசேர்.+ 13 ஆசேர் கோத்திரத்தில், ஓகிரானின் மகன் பாகியேல்.+ 14 காத் கோத்திரத்தில், தேகுவேலின் மகன் எலியாசாப்.+ 15 நப்தலி கோத்திரத்தில், ஏனானின் மகன் அகீரா.+ 16 இவர்கள்தான் இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இவர்கள்தான் தங்களுடைய தகப்பன் கோத்திரத்தின் தலைவர்கள்,+ ஆயிரக்கணக்கானோரின் தலைவர்கள்”+ என்றார்.
17 கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஆண்களை மோசேயும் ஆரோனும் தங்களோடு சேர்த்துக்கொண்டார்கள். 18 இரண்டாம் மாதம் முதலாம் நாளில், இஸ்ரவேல் ஜனங்களை அவர்கள் ஒன்றுகூட்டினார்கள். அப்போது, 20 வயதும் அதற்கு அதிகமான வயதும் உள்ளவர்கள்+ பெயர் பெயராக, வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாகப் பதிவு செய்யப்பட்டார்கள். 19 யெகோவா கொடுத்த கட்டளைப்படியே, அவர்களுடைய பெயர்களை சீனாய் வனாந்தரத்தில் மோசே பதிவு செய்தார்.+
20 இஸ்ரவேலின் மூத்த மகனாகிய ரூபனின் மகன்கள்+ பெயர் பெயராக, வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாகப் பதிவு செய்யப்பட்டார்கள். படையில் சேவை செய்யத் தகுதியுள்ள 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள ஆண்கள் ஒவ்வொருவராக எண்ணப்பட்டார்கள். 21 ரூபன் கோத்திரத்தில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 46,500 பேர்.
22 சிமியோனின் மகன்கள்+ பெயர் பெயராக, வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாகப் பதிவு செய்யப்பட்டார்கள். படையில் சேவை செய்யத் தகுதியுள்ள 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள ஆண்கள் ஒவ்வொருவராக எண்ணப்பட்டார்கள். 23 சிமியோன் கோத்திரத்தில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 59,300 பேர்.
24 காத்தின் மகன்கள்+ பெயர் பெயராக, வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாகப் பதிவு செய்யப்பட்டார்கள். படையில் சேவை செய்யத் தகுதியுள்ள 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள ஆண்கள் எல்லாரும் எண்ணப்பட்டார்கள். 25 காத் கோத்திரத்தில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 45,650 பேர்.
26 யூதாவின் மகன்கள்+ பெயர் பெயராக, வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாகப் பதிவு செய்யப்பட்டார்கள். படையில் சேவை செய்யத் தகுதியுள்ள 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள ஆண்கள் எல்லாரும் எண்ணப்பட்டார்கள். 27 யூதா கோத்திரத்தில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 74,600 பேர்.
28 இசக்காரின் மகன்கள்+ பெயர் பெயராக, வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாகப் பதிவு செய்யப்பட்டார்கள். படையில் சேவை செய்யத் தகுதியுள்ள 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள ஆண்கள் எல்லாரும் எண்ணப்பட்டார்கள். 29 இசக்கார் கோத்திரத்தில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 54,400 பேர்.
30 செபுலோனின் மகன்கள்+ பெயர் பெயராக, வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாகப் பதிவு செய்யப்பட்டார்கள். படையில் சேவை செய்யத் தகுதியுள்ள ஆண்களில் 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள எல்லாரும் எண்ணப்பட்டார்கள். 31 செபுலோன் கோத்திரத்தில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 57,400 பேர்.
32 யோசேப்பின் மகனான எப்பிராயீமின் மகன்கள்+ பெயர் பெயராக, வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாகப் பதிவு செய்யப்பட்டார்கள். படையில் சேவை செய்யத் தகுதியுள்ள ஆண்களில் 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள எல்லாரும் எண்ணப்பட்டார்கள். 33 எப்பிராயீம் கோத்திரத்தில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 40,500 பேர்.
34 மனாசேயின் மகன்கள்+ பெயர் பெயராக, வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாகப் பதிவு செய்யப்பட்டார்கள். படையில் சேவை செய்யத் தகுதியுள்ள ஆண்களில் 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள எல்லாரும் எண்ணப்பட்டார்கள். 35 மனாசே கோத்திரத்தில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 32,200 பேர்.
36 பென்யமீனின் மகன்கள்+ பெயர் பெயராக, வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாகப் பதிவு செய்யப்பட்டார்கள். படையில் சேவை செய்யத் தகுதியுள்ள ஆண்களில் 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள எல்லாரும் எண்ணப்பட்டார்கள். 37 பென்யமீன் கோத்திரத்தில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 35,400 பேர்.
38 தாணின் மகன்கள்+ பெயர் பெயராக, வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாகப் பதிவு செய்யப்பட்டார்கள். படையில் சேவை செய்யத் தகுதியுள்ள ஆண்களில் 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள எல்லாரும் எண்ணப்பட்டார்கள். 39 தாண் கோத்திரத்தில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 62,700 பேர்.
40 ஆசேரின் மகன்கள்+ பெயர் பெயராக, வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாகப் பதிவு செய்யப்பட்டார்கள். படையில் சேவை செய்யத் தகுதியுள்ள 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள எல்லாரும் எண்ணப்பட்டார்கள். 41 ஆசேர் கோத்திரத்தில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 41,500 பேர்.
42 நப்தலியின் மகன்கள்+ பெயர் பெயராக, வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாகப் பதிவு செய்யப்பட்டார்கள். படையில் சேவை செய்யத் தகுதியுள்ள 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள எல்லாரும் எண்ணப்பட்டார்கள். 43 நப்தலி கோத்திரத்தில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 53,400 பேர்.
44 இஸ்ரவேலின் தந்தைவழிக் குடும்பங்களுக்குத் தலைவர்களான 12 பேரின் உதவியோடு மோசேயும் ஆரோனும் அவர்கள் எல்லாரையும் பெயர்ப்பதிவு செய்தார்கள். 45 படையில் சேவை செய்யத் தகுதியுள்ள 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள இஸ்ரவேலர்கள் எல்லாரும் பெயர்ப்பதிவு செய்யப்பட்டார்கள். 46 பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 6,03,550 பேர்.+
47 ஆனால், லேவியர்கள்+ தங்களுடைய தந்தைவழிக் குடும்பத்தின்படி, மற்றவர்களுடன் பெயர்ப்பதிவு செய்யப்படவில்லை.+ 48 யெகோவா மோசேயிடம், 49 “லேவி கோத்திரத்தாரை மட்டும் நீ பெயர்ப்பதிவு செய்யக் கூடாது. மற்ற இஸ்ரவேலர்களுடன் சேர்த்து அவர்களை எண்ணக் கூடாது.+ 50 சாட்சிப் பெட்டி+ வைக்கப்பட்டிருக்கிற கூடாரத்தையும் அதன் எல்லா பாத்திரங்களையும் பொருள்களையும் கவனித்துக்கொள்கிற பொறுப்பை லேவியர்களுக்குக் கொடுக்க வேண்டும்.+ வழிபாட்டுக் கூடாரத்தில் அவர்கள் சேவை செய்வார்கள்,+ அதையும் அதிலுள்ள எல்லா பாத்திரங்களையும் அவர்கள் சுமந்துகொண்டு போவார்கள்.+ அவர்கள் வழிபாட்டுக் கூடாரத்தைச் சுற்றியே முகாம்போட வேண்டும்.+ 51 நீங்கள் ஒரு இடத்திலிருந்து புறப்படும்போது, லேவியர்கள்தான் வழிபாட்டுக் கூடாரத்தைப் பிரிக்க வேண்டும்.+ இன்னொரு இடத்துக்குப் போய்ச் சேரும்போது அவர்கள்தான் அதை மறுபடியும் அமைக்க வேண்டும். தகுதி இல்லாத* யாராவது அதன் பக்கத்தில் போனால் அவன் கொல்லப்பட வேண்டும்.+
52 இஸ்ரவேலர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மூன்று மூன்று கோத்திரங்களாகவும் அணி அணியாகவும்* கூடாரம் போட வேண்டும்.+ 53 இஸ்ரவேலர்கள்மேல் என்னுடைய கோபம் பற்றியெரியாமல் இருப்பதற்காக, லேவியர்கள் சாட்சிப் பெட்டி வைக்கப்பட்டிருக்கிற கூடாரத்தைச் சுற்றி முகாம்போட வேண்டும்.+ சாட்சிப் பெட்டி வைக்கப்பட்டிருக்கிற கூடாரத்தைக் கவனித்துக்கொள்வது* லேவியர்களின் பொறுப்பு”+ என்றார்.
54 மோசேக்கு யெகோவா கொடுத்த கட்டளைப்படி இஸ்ரவேல் ஜனங்கள் செய்தார்கள். எல்லாவற்றையும் அவர்கள் அப்படியே செய்தார்கள்.
2 யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும், 2 “மூன்று மூன்று கோத்திரங்களாகப் பிரிக்கப்பட்ட இஸ்ரவேலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் முகாம்போட வேண்டும்.+ ஒவ்வொருவரும் தங்களுடைய தந்தைவழிக் குடும்பத்தின் அடையாளச் சின்னத்துக்குப் பக்கத்தில் முகாம்போட வேண்டும். சந்திப்புக் கூடாரத்தைப் பார்த்தபடி, அதைச் சுற்றிலும் அவர்கள் முகாம்போட வேண்டும்.
3 சூரியன் உதிக்கும் கிழக்குத் திசையில் மூன்று கோத்திரங்கள் அணி அணியாக* முகாம்போட வேண்டும். யூதா கோத்திரம் அவற்றின் நடுவில் முகாம்போட வேண்டும். யூதா கோத்திரத்தின் தலைவர், அம்மினதாபின் மகனாகிய நகசோன்.+ 4 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 74,600 பேர்.+ 5 யூதா கோத்திரத்தின் ஒருபக்கத்தில் இசக்கார் கோத்திரம் முகாம்போட வேண்டும். இசக்கார் கோத்திரத்தின் தலைவர், சூவாரின் மகனாகிய நெதனெயேல்.+ 6 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 54,400 பேர்.+ 7 யூதா கோத்திரத்தின் மறுபக்கத்தில், செபுலோன் கோத்திரம் முகாம்போட வேண்டும். செபுலோன் கோத்திரத்தின் தலைவர், ஹேலோனின் மகனாகிய எலியாப்.+ 8 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 57,400 பேர்.+
9 யூதா கோத்திரத்தின் முகாமில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 1,86,400 பேர். அவர்கள்தான் முதலாவதாகப் புறப்பட வேண்டும்.+
10 தெற்கே மூன்று கோத்திரங்கள் அணி அணியாக* முகாம்போட வேண்டும். ரூபன் கோத்திரம்+ அவற்றின் நடுவில் முகாம்போட வேண்டும். ரூபன் கோத்திரத்தின் தலைவர், சேதேயூரின் மகனாகிய எலிசூர்.+ 11 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 46,500 பேர்.+ 12 ரூபன் கோத்திரத்தின் ஒருபக்கத்தில் சிமியோன் கோத்திரம் முகாம்போட வேண்டும். சிமியோன் கோத்திரத்தின் தலைவர், சூரிஷதாயின் மகனாகிய செலூமியேல்.+ 13 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 59,300 பேர்.+ 14 ரூபன் கோத்திரத்தின் மறுபக்கத்தில், காத் கோத்திரம் முகாம்போட வேண்டும். காத் கோத்திரத்தின் தலைவர், ரெகுவேலின் மகனாகிய எலியாசாப்.+ 15 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 45,650 பேர்.+
16 ரூபன் கோத்திரத்தின் முகாமில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 1,51,450 பேர். அவர்கள்தான் இரண்டாவதாகப் புறப்பட வேண்டும்.+
17 சந்திப்புக் கூடாரத்தை எடுத்துக்கொண்டு போகும்போது,+ லேவியர்களின் கோத்திரம் மற்ற கோத்திரங்களுக்கு நடுவே போக வேண்டும்.
ஒவ்வொரு கோத்திரமும் எந்த வரிசையில் முகாம்போடுகிறதோ அந்த வரிசைப்படி பயணம் செய்ய வேண்டும்.+ மூன்று மூன்று கோத்திரங்களாகப் பயணம் செய்ய வேண்டும்.
18 மேற்கே மூன்று கோத்திரங்கள் அணி அணியாக* முகாம்போட வேண்டும். எப்பிராயீம் கோத்திரம் அவற்றின் நடுவில் முகாம்போட வேண்டும். எப்பிராயீம் கோத்திரத்தின் தலைவர், அம்மியூத்தின் மகனாகிய எலிஷாமா.+ 19 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 40,500 பேர்.+ 20 எப்பிராயீம் கோத்திரத்தின் ஒருபக்கத்தில் மனாசே கோத்திரம்+ முகாம்போட வேண்டும். மனாசே கோத்திரத்தின் தலைவர், பெதாசூரின் மகனாகிய கமாலியேல்.+ 21 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 32,200 பேர்.+ 22 எப்பிராயீம் கோத்திரத்தின் மறுபக்கத்தில், பென்யமீன் கோத்திரம் முகாம்போட வேண்டும். பென்யமீன் கோத்திரத்தின் தலைவர், கீதெயோனியின் மகனாகிய அபிதான்.+ 23 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 35,400 பேர்.+
24 எப்பிராயீம் கோத்திரத்தின் முகாமில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 1,08,100 பேர். அவர்கள்தான் மூன்றாவதாகப் புறப்பட வேண்டும்.+
25 வடக்கே மூன்று கோத்திரங்கள் அணி அணியாக* முகாம்போட வேண்டும். தாண் கோத்திரம் அவற்றின் நடுவில் முகாம்போட வேண்டும். தாண் கோத்திரத்தின் தலைவர், அம்மிஷதாயின் மகனாகிய அகியேசேர்.+ 26 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 62,700 பேர்.+ 27 தாண் கோத்திரத்தின் ஒருபக்கத்தில் ஆசேர் கோத்திரம் முகாம்போட வேண்டும். ஆசேர் கோத்திரத்தின் தலைவர், ஓகிரானின் மகனாகிய பாகியேல்.+ 28 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 41,500 பேர்.+ 29 தாண் கோத்திரத்தின் மறுபக்கத்தில், நப்தலி கோத்திரம் முகாம்போட வேண்டும். நப்தலி கோத்திரத்தின் தலைவர், ஏனானின் மகனாகிய அகீரா.+ 30 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 53,400 பேர்.+
31 தாண் கோத்திரத்தின் முகாமில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 1,57,600 பேர். மூன்று கோத்திர வரிசைப்படி, அவர்கள்தான் கடைசியாகப் புறப்பட வேண்டும்”+ என்றார்.
32 அவரவருடைய தந்தைவழிக் குடும்பத்தின்படி பெயர்ப்பதிவு செய்யப்பட்ட இஸ்ரவேலர்கள் இவர்கள்தான். படையில் சேவை செய்வதற்காகப் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 6,03,550 பேர்.+ 33 ஆனால், மோசேக்கு யெகோவா கொடுத்த கட்டளைப்படி, மற்ற இஸ்ரவேலர்களோடு லேவியர்கள் பெயர்ப்பதிவு செய்யப்படவில்லை.+ 34 மோசேக்கு யெகோவா கொடுத்த கட்டளைப்படியே இஸ்ரவேலர்கள் எல்லாவற்றையும் செய்தார்கள். இப்படித்தான், அவரவர் வம்சத்தின்படியும் தந்தைவழிக் குடும்பத்தின்படியும் மூன்று மூன்று கோத்திரங்களாக முகாம்போட்டார்கள்,+ அந்த வரிசைப்படியே புறப்பட்டும் போனார்கள்.+
3 சீனாய் மலையில்+ மோசேயுடன் யெகோவா பேசிய காலத்தில், ஆரோன் மற்றும் மோசேயின் வம்சத்தாராக இருந்தவர்கள் இவர்கள்தான். 2 ஆரோனுடைய மகன்கள்: மூத்த மகன் நாதாப், பின்பு அபியூ,+ எலெயாசார்,+ இத்தாமார்.+ 3 இவர்கள்தான் குருமார்களாகச் சேவை செய்ய அபிஷேகம் செய்யப்பட்ட ஆரோனின் மகன்கள்.+ 4 ஆனால், நாதாபும் அபியூவும் அத்துமீறி* யெகோவாவுக்குத் தூபம் காட்டியதால் சீனாய் வனாந்தரத்தில் யெகோவாவின் சன்னிதியில் செத்துப்போனார்கள்.+ அவர்களுக்கு மகன்கள் இல்லை. எலெயாசாரும்+ இத்தாமாரும்+ தங்கள் அப்பா ஆரோனோடு சேர்ந்து தொடர்ந்து குருமார்களாகச் சேவை செய்துவந்தார்கள்.
5 பின்பு யெகோவா மோசேயிடம், 6 “குருவாகிய ஆரோனின் முன்பாக லேவி கோத்திரத்தாரை+ நிறுத்து. அவர்கள் அவருக்குப் பணிவிடை செய்ய வேண்டும்.+ 7 வழிபாட்டுக் கூடாரம்* சம்பந்தமாகக் கொடுக்கப்படுகிற எல்லா வேலைகளையும் அவர்கள் செய்ய வேண்டும். ஆரோனுக்கும் எல்லா ஜனங்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் சந்திப்புக் கூடாரத்துக்கு* முன்னால் செய்து முடிக்க வேண்டும். 8 சந்திப்புக் கூடாரத்தின் பொருள்கள்+ அவர்களுடைய பொறுப்பில் இருக்க வேண்டும். வழிபாட்டுக் கூடாரம் சம்பந்தமான வேலைகளைச் செய்து,+ இஸ்ரவேலர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டும். 9 நீ ஆரோனிடமும் அவனுடைய மகன்களிடமும் லேவியர்களை ஒப்படைக்க வேண்டும். இவர்களைத்தான் இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து பிரித்தெடுத்து ஆரோனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறேன்.+ 10 குருமார்களாகச் சேவை செய்ய ஆரோனையும் அவனுடைய மகன்களையும் நீ நியமிக்க வேண்டும்.+ ஆனால், தகுதி இல்லாத* யாராவது வழிபாட்டுக் கூடாரத்தின் பக்கத்தில் வந்தால் அவன் கொல்லப்பட வேண்டும்”+ என்றார்.
11 பின்பு யெகோவா மோசேயிடம், 12 “நான் இஸ்ரவேலர்களிலிருந்து லேவியர்களைப் பிரித்தெடுத்திருக்கிறேன். இஸ்ரவேலர்களின் மூத்த மகன்கள் எல்லாருக்கும் பதிலாக லேவியர்களை ஏற்றுக்கொள்கிறேன்.+ லேவியர்கள் எனக்குச் சொந்தமாவார்கள். 13 ஏனென்றால், முதலில் பிறக்கிற எல்லாமே எனக்குத்தான் சொந்தம்.+ எகிப்தியர்களின் முதல் பிறப்புகளை நான் கொன்றுபோட்ட நாளில்,+ இஸ்ரவேலர்களின் மூத்த மகன்களையும் மிருகங்களின் முதல் குட்டிகளையும் எனக்கென்று பிரித்து வைத்தேன்.*+ முதல் பிறப்புகள் எல்லாமே எனக்குச் சொந்தமாக வேண்டும். நான் யெகோவா” என்றார்.
14 பின்பு யெகோவா சீனாய் வனாந்தரத்தில்+ மோசேயிடம், 15 “லேவியின் மகன்களை அவரவர் வம்சத்தின்படியும் தந்தைவழிக் குடும்பத்தின்படியும் பெயர்ப்பதிவு செய். ஒருமாத ஆண் குழந்தைமுதல் எல்லா ஆண்களையும் பெயர்ப்பதிவு செய்”+ என்றார். 16 அதனால், யெகோவாவின் உத்தரவுப்படி அவர்களை மோசே பெயர்ப்பதிவு செய்தார். கடவுள் கட்டளை கொடுத்தபடியே செய்தார். 17 லேவியின் மகன்களுடைய பெயர்கள்: கெர்சோன், கோகாத், மெராரி.+
18 கெர்சோனின் மகன்களுடைய பெயர்கள்: லிப்னி, சீமேயி.+ இவர்களுடைய பெயர்களிலிருந்துதான் இவர்களுடைய வம்சங்களின் பெயர்கள் வந்தன.
19 கோகாத்தின் மகன்களுடைய பெயர்கள்: அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல்.+ இவர்களுடைய பெயர்களிலிருந்துதான் இவர்களுடைய வம்சங்களின் பெயர்கள் வந்தன.
20 மெராரியின் மகன்களுடைய பெயர்கள்: மகேலி,+ மூசி.+ இவர்களுடைய பெயர்களிலிருந்துதான் இவர்களுடைய வம்சங்களின் பெயர்கள் வந்தன.
இவைதான் அந்தந்த தந்தைவழிக் குடும்பங்களில் வந்த வம்சங்கள்.
21 கெர்சோனின் வழியில் லிப்னியர்களின் வம்சமும்+ சீமேயியர்களின் வம்சமும் வந்தன. இவர்கள்தான் கெர்சோனியர்களின் வம்சத்தார். 22 இவர்களில், ஒருமாத ஆண் குழந்தைமுதல் எல்லா ஆண்களும் பெயர்ப்பதிவு செய்யப்பட்டார்கள். இவர்கள் மொத்தம் 7,500 பேர்.+ 23 கெர்சோனியர்களின் வம்சத்தார் வழிபாட்டுக் கூடாரத்துக்குப் பின்னால்,+ மேற்கே முகாம்போட்டார்கள். 24 கெர்சோனியர்களின் தந்தைவழிக் குடும்பத்துக்குத் தலைவர், லாயேலின் மகன் எலியாசாப். 25 சந்திப்புக் கூடாரத்தில் கெர்சோனின் மகன்களுடைய பொறுப்பில் உள்ளவை இவைதான்:+ வழிபாட்டுக் கூடாரம்,+ அதன் மேல்விரிப்புகள்,+ சந்திப்புக் கூடார வாசலின் திரை,+ 26 வழிபாட்டுக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் சுற்றியுள்ள பிரகாரத்தின் மறைப்புகள்,+ பிரகாரத்தின் நுழைவாசலுக்கான திரை,+ கூடாரக் கயிறுகள், மற்றும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட வேலைகள்.
27 கோகாத்தின் வழியில் அம்ராமியர்களின் வம்சமும் இத்சேயார்களின் வம்சமும் எப்ரோனியர்களின் வம்சமும் ஊசியேலர்களின் வம்சமும் வந்தன. இவர்கள்தான் கோகாத்தியர்களின் வம்சத்தார்.+ 28 இவர்களில், ஒருமாத ஆண் குழந்தைமுதல் எல்லா ஆண்களும் பெயர்ப்பதிவு செய்யப்பட்டார்கள். இவர்கள் மொத்தம் 8,600 பேர். பரிசுத்த இடத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு இவர்களுடையது.+ 29 கோகாத்தின் மகன்களுடைய வம்சத்தார் வழிபாட்டுக் கூடாரத்துக்குத் தெற்கே முகாம்போட்டார்கள்.+ 30 கோகாத்தியர்களின் தந்தைவழிக் குடும்பத்துக்குத் தலைவர், ஊசியேலின்+ மகன் எலிசாப்பான். 31 கோகாத்தியர்களின் பொறுப்பில் உள்ளவை: பெட்டி,+ மேஜை,+ குத்துவிளக்கு,+ பீடங்கள்,+ பரிசுத்த இடத்தின் சேவைக்கான பாத்திரங்கள்,+ திரைச்சீலை,+ மற்றும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட வேலைகள்.+
32 குருவாகிய ஆரோனின் மகன் எலெயாசார், லேவியர்களின் தலைவர்களுக்கெல்லாம் தலைவராக இருந்தார்.+ பரிசுத்த இடத்தின் வேலைகளைக் கவனித்துவந்தவர்களை அவர் கண்காணித்துவந்தார்.
33 மெராரியின் வழியில் மகேலியர்களின் வம்சமும் மூசியர்களின் வம்சமும் வந்தன. இவர்கள்தான் மெராரியின் வம்சத்தார்.+ 34 இவர்களில், ஒருமாத ஆண் குழந்தைமுதல் எல்லா ஆண்களும் பெயர்ப்பதிவு செய்யப்பட்டார்கள். இவர்கள் மொத்தம் 6,200 பேர்.+ 35 அபியாயேலின் மகன் சூரியேல், மெராரியின் தந்தைவழிக் குடும்பத்துக்குத் தலைவராக இருந்தார். மெராரியின் வம்சத்தார் வழிபாட்டுக் கூடாரத்துக்கு வடக்கே முகாம்போட்டார்கள்.+ 36 மெராரியின் மகன்களுடைய பொறுப்பில் உள்ளவை: வழிபாட்டுக் கூடாரத்தின் சட்டங்கள்,+ அதன் கம்புகள்,+ அதன் தூண்கள்,+ அதன் பாதங்கள், அதன் பாத்திரங்கள்,+ அவற்றுடன் சம்பந்தப்பட்ட வேலைகள்,+ 37 பிரகாரத்தைச் சுற்றியுள்ள கம்பங்கள், அவற்றின் பாதங்கள்,+ கூடார ஆணிகள், மற்றும் கூடாரக் கயிறுகள்.
38 சூரியன் உதிக்கும் கிழக்குத் திசையில், அதாவது வழிபாட்டுக் கூடாரமாகிய சந்திப்புக் கூடாரத்துக்கு முன்னால், மோசேயும் ஆரோனும் அவர்களுடைய மகன்களும் கூடாரம் போட்டார்கள். வழிபாட்டுக் கூடாரத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு அவர்களுடையது. இதுதான், இஸ்ரவேலர்களின் சார்பாக அவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமை. தகுதி இல்லாத* யாராவது அதன் பக்கத்தில் வந்தால் அவன் கொல்லப்பட வேண்டும்.+
39 யெகோவாவின் கட்டளைப்படி, லேவியர்களில் ஒருமாத ஆண் குழந்தைமுதல் எல்லா ஆண்களையும் மோசேயும் ஆரோனும் பெயர்ப்பதிவு செய்தார்கள். அவரவர் வம்சத்தின்படி பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 22,000 பேர்.
40 யெகோவா மோசேயிடம், “இஸ்ரவேலர்களுடைய மூத்த மகன்களில், ஒருமாத ஆண் குழந்தைமுதல் எல்லா ஆண்களையும் பெயர்ப்பதிவு செய்.+ அவர்களைக் கணக்குப் போட்டு, அவர்களுடைய பெயர்களைப் பட்டியலிடு. 41 இஸ்ரவேலர்களுடைய மூத்த மகன்களுக்குப் பதிலாக லேவியர்களை எனக்காகப் பிரித்தெடு.+ இஸ்ரவேலர்களுடைய மிருகங்களின் முதல் குட்டிகளுக்குப் பதிலாக லேவியர்களுடைய மிருகங்களின் முதல் குட்டிகளைப் பிரித்தெடு.+ நான் யெகோவா” என்றார். 42 அதனால் யெகோவா கட்டளை கொடுத்தபடி, இஸ்ரவேலர்களின் மூத்த மகன்கள் எல்லாரையும் மோசே பெயர்ப்பதிவு செய்தார். 43 மூத்த மகன்களில், ஒருமாத ஆண் குழந்தைமுதல் எல்லா ஆண்களும் பெயர்ப்பதிவு செய்யப்பட்டார்கள். இவர்கள் மொத்தம் 22,273 பேர்.
44 பின்பு யெகோவா மோசேயிடம், 45 “இஸ்ரவேலர்களுடைய மூத்த மகன்களுக்குப் பதிலாக லேவியர்களைப் பிரித்தெடு. இஸ்ரவேலர்களுடைய மிருகங்களுக்குப் பதிலாக லேவியர்களுடைய மிருகங்களைப் பிரித்தெடு. லேவியர்கள் எனக்குச் சொந்தமாவார்கள். நான் யெகோவா. 46 லேவியர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருந்த இஸ்ரவேலர்களின் மூத்த மகன்கள் 273 பேருக்காக+ மீட்புவிலை+ வாங்க வேண்டும். 47 ஒவ்வொருவருக்காகவும் நீ ஐந்து சேக்கல்* வாங்க வேண்டும்.+ அது பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி இருக்க வேண்டும். ஒரு சேக்கல் என்பது 20 கேரா.*+ 48 லேவியர்களைவிட அதிகமாக இருந்தவர்களிடமிருந்து வாங்கிய மீட்புவிலையை ஆரோனிடமும் அவனுடைய மகன்களிடமும் நீ கொடுக்க வேண்டும்” என்றார். 49 அதனால், லேவியர்களைவிட அதிகமாக இருந்தவர்களை மீட்பதற்காக அவர்களிடமிருந்து மீட்புவிலையை மோசே வாங்கிக்கொண்டார். 50 பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி, இஸ்ரவேலர்களின் மூத்த மகன்களிடமிருந்து 1,365 சேக்கல் வாங்கிக்கொண்டார். 51 பின்பு யெகோவா சொன்னபடி, அந்த மீட்புவிலையை ஆரோனிடமும் அவருடைய மகன்களிடமும் கொடுத்தார். யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார்.
4 யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும், 2 “லேவியின் வழிவந்த கோகாத்தியர்களை+ அவரவர் வம்சத்தின்படியும், தந்தைவழிக் குடும்பத்தின்படியும் கணக்கெடுக்க வேண்டும். 3 சந்திப்புக் கூடார வேலைகளுக்கு நியமிக்கப்பட்ட எல்லாரையும், அதாவது 30+ வயதுமுதல் 50 வயதுவரை+ உள்ள எல்லாரையும், கணக்கெடுக்க வேண்டும்.+
4 சந்திப்புக் கூடாரம் சம்பந்தமாக கோகாத்தியர்களுக்கு நியமிக்கப்பட்ட மிகப் பரிசுத்தமான வேலை+ இதுதான்: 5 இஸ்ரவேலர்கள் புறப்படும்போது, ஆரோனும் அவனுடைய மகன்களும் வந்து திரைச்சீலையைக்+ கீழே இறக்கி, அதை வைத்து சாட்சிப் பெட்டியை+ மூட வேண்டும். 6 பின்பு, அதன்மேல் கடல்நாய்த் தோல் விரிப்பைப் போட்டு, அதை நீல நிறத் துணியால் மூட வேண்டும். அதைச் சுமப்பதற்குப் பயன்படுத்தப்படும் கம்புகள்+ அதனதன் இடத்தில் இருக்க வேண்டும்.
7 படையல் ரொட்டிகளுக்கான மேஜைமேல்+ நீல நிறத் துணியை விரிக்க வேண்டும். அதன்மேல் தட்டுகள், கோப்பைகள், கிண்ணங்கள், திராட்சமது காணிக்கைக்கான கூஜாக்கள்+ ஆகியவற்றை வைக்க வேண்டும். தவறாமல் செலுத்தப்படுகிற ரொட்டிகளும்+ அதன்மேல் இருக்க வேண்டும். 8 அவற்றைக் கருஞ்சிவப்புத் துணியால் போர்த்தி, பின்பு கடல்நாய்த் தோல் விரிப்பால் மூட வேண்டும். அதைச் சுமப்பதற்குப் பயன்படுத்தப்படும் கம்புகள்+ அதனதன் இடத்தில் இருக்க வேண்டும். 9 பின்பு நீல நிறத் துணியை எடுத்து, விளக்குத்தண்டையும்,+ அதன் அகல் விளக்குகளையும்,+ இடுக்கிகளையும், தீய்ந்துபோன திரிகளை எடுத்து வைப்பதற்கான கரண்டிகளையும்,+ குத்துவிளக்குக்கான எண்ணெய்ப் பாத்திரங்களையும் மூட வேண்டும். 10 குத்துவிளக்கையும் அதற்கான எல்லா சாமான்களையும் கடல்நாய்த் தோல் விரிப்பில் சுற்றி, சுமப்பதற்கான ஒரு கோலில் இணைத்துக்கட்ட வேண்டும். 11 தங்கப் பீடத்தை+ நீல நிறத் துணியால் போர்த்தி, கடல்நாய்த் தோல் விரிப்பால் அதை மூட வேண்டும். அதைச் சுமப்பதற்குப் பயன்படுத்தப்படும் கம்புகள்+ அதனதன் இடத்தில் இருக்க வேண்டும். 12 பரிசுத்த இடத்தில் தவறாமல் சேவை செய்யப் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள்+ எல்லாவற்றையும் எடுத்து நீல நிறத் துணியில் வைக்க வேண்டும். அதைக் கடல்நாய்த் தோல் விரிப்பால் மூடி, சுமப்பதற்கான ஒரு கோலில் இணைத்துக்கட்ட வேண்டும்.
13 பலிபீடத்திலிருந்து+ சாம்பலை எடுத்துவிட்டு, அதை ஊதா நிற கம்பளியால் போர்த்த வேண்டும். 14 பலிபீடத்தில் சேவை செய்யப் பயன்படுத்தும் பாத்திரங்கள் எல்லாவற்றையும், அதாவது தணல் அள்ளும் கரண்டிகள், முள்கரண்டிகள், சாம்பல் அள்ளும் கரண்டிகள், கிண்ணங்கள் போன்ற எல்லாவற்றையும்+ அதன்மேல் வைத்து கடல்நாய்த் தோல் விரிப்பால் மூட வேண்டும். பலிபீடத்தைச் சுமப்பதற்குப் பயன்படுத்தப்படும் கம்புகள்+ அதனதன் இடத்தில் இருக்க வேண்டும்.
15 இஸ்ரவேலர்கள் புறப்படும்போது, பரிசுத்த இடத்துக்கான எல்லா பொருள்களையும் ஆரோனும் அவனுடைய மகன்களும் போர்த்திவைக்க வேண்டும்.+ அதன்பின், கோகாத்தியர்கள் வந்து அவற்றை எடுத்துக்கொண்டு போக வேண்டும்.+ ஆனால், பரிசுத்த இடத்துக்கான பொருள்களை அவர்கள் தொடக் கூடாது. அப்படித் தொட்டால் அவர்கள் செத்துப்போவார்கள்.+ இவைதான் சந்திப்புக் கூடாரம் சம்பந்தமாக கோகாத்தியர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொருள்களாகும்.
16 விளக்குகளுக்கான எண்ணெய்,+ தூபப்பொருள்,+ தவறாமல் செலுத்தப்படும் உணவுக் காணிக்கை, அபிஷேகத் தைலம்+ ஆகியவற்றுக்கு குருவாகிய ஆரோனின் மகன் எலெயாசார்தான்+ பொறுப்பு. வழிபாட்டுக் கூடாரத்துக்கும் அதிலுள்ள எல்லா பொருள்களுக்கும், பரிசுத்த இடத்துக்கும் அதிலுள்ள எல்லா சாமான்களுக்கும் அவர்தான் பொறுப்பு” என்று சொன்னார்.
17 பின்பு யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும், 18 “லேவியர்களில் கோகாத் வம்சத்தார்+ அழிந்துபோகாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். 19 அவர்கள் மகா பரிசுத்தமான பொருள்களின் பக்கத்தில் வந்து சாகாதபடி இப்படிச் செய்யுங்கள்.+ ஆரோனும் அவனுடைய மகன்களும் வழிபாட்டுக் கூடாரத்துக்குள்ளே போக வேண்டும். பின்பு, கோகாத்தியர்கள் ஒவ்வொருவரும் என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்றும், என்னென்ன பொருள்களைச் சுமக்க வேண்டும் என்றும் சொல்ல வேண்டும். 20 கோகாத்தியர்கள் கூடாரத்துக்குள் போய் பரிசுத்த பொருள்களை ஒரு நொடிகூட பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால், அவர்கள் செத்துப்போவார்கள்”+ என்றார்.
21 பின்பு யெகோவா மோசேயிடம், 22 “கெர்சோனியர்களை+ அவரவர் வம்சத்தின்படியும், தந்தைவழிக் குடும்பத்தின்படியும் கணக்கெடுக்க வேண்டும். 23 சந்திப்புக் கூடாரம் சம்பந்தமான வேலைகளுக்கு நியமிக்கப்பட்ட எல்லாரையும், அதாவது 30 வயதுமுதல் 50 வயதுவரை உள்ள எல்லாரையும், கணக்கெடுக்க வேண்டும். 24 கெர்சோன் வம்சத்தாரின் பொறுப்பிலுள்ள பொருள்களும் அவர்கள் சுமக்க வேண்டிய பொருள்களும் இவைதான்:+ 25 சட்டங்களின் மேலுள்ள நாரிழை விரிப்பு,*+ அதற்கு மேலுள்ள கம்பளி,* அதற்கும் மேலுள்ள விரிப்பு, அதற்கும் மேலுள்ள கடல்நாய்த் தோல் விரிப்பு,+ சந்திப்புக் கூடார வாசலின் திரை,+ 26 வழிபாட்டுக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் சுற்றியுள்ள பிரகாரத்தின் மறைப்புகள்,+ பிரகார நுழைவாசலின் திரை,+ கூடாரக் கயிறுகள், வழிபாட்டுக் கூடாரச் சேவைக்குப் பயன்படுத்தப்படுகிற பாத்திரங்கள் மற்றும் வேறு சில பொருள்கள். இவைதான் அவர்களுடைய பொறுப்பில் இருக்கின்றன. 27 ஆரோனும் அவனுடைய மகன்களும் கெர்சோனியர்கள்+ செய்கிற எல்லா வேலைகளையும் அவர்கள் சுமக்கிற சுமைகளையும் மேற்பார்வை செய்ய வேண்டும். இந்த எல்லா சுமைகளையும் சுமக்கும் பொறுப்பை நீங்கள் அவர்களுக்குத் தர வேண்டும். 28 இதுதான் சந்திப்புக் கூடாரம் சம்பந்தமாக கெர்சோனியர்கள் செய்ய வேண்டிய சேவை.+ குருவாகிய ஆரோனின் மகன் இத்தாமாரின் தலைமையில் அவர்கள் தங்களுடைய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்.+
29 மெராரியர்களை+ அவரவர் வம்சத்தின்படியும், தந்தைவழிக் குடும்பத்தின்படியும் நீ பெயர்ப்பதிவு செய்ய வேண்டும். 30 சந்திப்புக் கூடார வேலைகளுக்கு நியமிக்கப்பட்ட எல்லாரையும், அதாவது 30 வயதுமுதல் 50 வயதுவரை உள்ள எல்லாரையும், பெயர்ப்பதிவு செய்ய வேண்டும். 31 மெராரியர்கள் சுமக்க வேண்டிய சந்திப்புக் கூடாரப் பொருள்கள் இவைதான்:+ வழிபாட்டுக் கூடாரத்தின் சட்டங்கள்,+ கம்புகள்,+ தூண்கள்,+ பாதங்கள்,+ 32 பிரகாரத்தைச் சுற்றியுள்ள கம்பங்கள்,+ அவற்றின் பாதங்கள்,+ கூடார ஆணிகள்,+ கூடாரக் கயிறுகள், மற்றும் வேறு சில கருவிகள். அதனுடன் சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளையும் அவர்கள் செய்ய வேண்டும். யார் யார் எதை எதைச் சுமந்துகொண்டு போக வேண்டுமென்று நீங்கள் சொல்ல வேண்டும். 33 இதுதான் சந்திப்புக் கூடாரம் சம்பந்தமாக மெராரியர்கள்+ செய்ய வேண்டிய வேலை. குருவாகிய ஆரோனின் மகன் இத்தாமாரின் தலைமையில் அவர்கள் தங்களுடைய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்”+ என்றார்.
34 பின்பு, கோகாத்தியர்களை+ அவரவர் வம்சத்தின்படியும் தந்தைவழிக் குடும்பத்தின்படியும் மோசேயும் ஆரோனும் ஜனங்களின் தலைவர்களும்+ பெயர்ப்பதிவு செய்தார்கள். 35 சந்திப்புக் கூடார வேலைகளுக்கு நியமிக்கப்பட்ட எல்லாரையும், அதாவது 30 வயதுமுதல் 50 வயதுவரை உள்ள எல்லாரையும்,+ அப்படிப் பெயர்ப்பதிவு செய்தார்கள். 36 அவரவர் வம்சங்களின்படி பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 2,750 பேர்.+ 37 இவர்கள்தான் கோகாத் வம்சத்தில் சந்திப்புக் கூடார வேலைக்காகப் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள். மோசேக்கு யெகோவா கொடுத்த கட்டளைப்படியே, மோசேயும் ஆரோனும் இவர்களைப் பெயர்ப்பதிவு செய்தார்கள்.+
38 பின்பு, கெர்சோனியர்கள்+ அவரவர் வம்சத்தின்படியும் தந்தைவழிக் குடும்பத்தின்படியும் பெயர்ப்பதிவு செய்யப்பட்டார்கள். 39 சந்திப்புக் கூடார வேலைகளுக்கு நியமிக்கப்பட்ட எல்லாரும், அதாவது 30 வயதுமுதல் 50 வயதுவரை உள்ள எல்லாரும், பெயர்ப்பதிவு செய்யப்பட்டார்கள். 40 வம்சத்தின்படியும் தந்தைவழிக் குடும்பத்தின்படியும் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 2,630 பேர்.+ 41 இவர்கள்தான் கெர்சோன் வம்சத்தில் சந்திப்புக் கூடார வேலைகளுக்காகப் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள். யெகோவாவின் கட்டளைப்படியே, மோசேயும் ஆரோனும் இவர்களைப் பெயர்ப்பதிவு செய்தார்கள்.+
42 மெராரியர்கள் அவரவர் வம்சத்தின்படியும் தந்தைவழிக் குடும்பத்தின்படியும் பெயர்ப்பதிவு செய்யப்பட்டார்கள். 43 சந்திப்புக் கூடார வேலைகளுக்கு நியமிக்கப்பட்ட எல்லாரும், அதாவது 30 வயதுமுதல் 50 வயதுவரை உள்ள எல்லாரும்,+ பெயர்ப்பதிவு செய்யப்பட்டார்கள். 44 அவரவர் வம்சங்களின்படி பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 3,200 பேர்.+ 45 இவர்கள்தான் மெராரி வம்சத்தில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள். மோசேக்கு யெகோவா கொடுத்த கட்டளைப்படியே, மோசேயும் ஆரோனும் இவர்களைப் பெயர்ப்பதிவு செய்தார்கள்.+
46 இந்த எல்லா லேவியர்களையும் அவரவர் வம்சத்தின்படியும் தந்தைவழிக் குடும்பத்தின்படியும் மோசேயும் ஆரோனும் ஜனங்களின் தலைவர்களும் பெயர்ப்பதிவு செய்தார்கள். 47 30 வயதுமுதல் 50 வயதுவரை உள்ள அந்த ஆட்கள் எல்லாரும் சந்திப்புக் கூடார வேலைகளுக்கும் அதன் பொருள்களைச் சுமக்கிற வேலைகளுக்கும் நியமிக்கப்பட்டார்கள்.+ 48 பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 8,580 பேர்.+ 49 மோசேக்கு யெகோவா கொடுத்த உத்தரவுப்படி, அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வேலையைச் செய்யவும் சுமையைச் சுமக்கவும் நியமிக்கப்பட்டு, பெயர்ப்பதிவு செய்யப்பட்டார்கள். யெகோவா மோசேக்குக் கட்டளை கொடுத்தபடியே அவர்கள் பெயர்ப்பதிவு செய்யப்பட்டார்கள்.
5 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “தொழுநோயாளிகளையும்+ பிறப்புறுப்பில் ஒழுக்கு நோய் உள்ளவர்களையும்+ பிணத்தால் தீட்டுப்பட்டவர்களையும்+ முகாமிலிருந்து அனுப்பிவிடும்படி இஸ்ரவேலர்களுக்கு நீ கட்டளை கொடு. 3 ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களை நீ அனுப்பிவிட வேண்டும். முகாம் முழுவதும் தீட்டுப்படாதபடி அவர்களை அங்கிருந்து வெளியே அனுப்ப வேண்டும்.+ ஏனென்றால், நான் உங்கள் மத்தியில் இருக்கிறேன்”+ என்றார். 4 அதன்படி, இஸ்ரவேலர்கள் அவர்களை முகாமுக்கு வெளியே அனுப்பிவிட்டார்கள். யெகோவா மோசேக்குச் சொன்னபடியே இஸ்ரவேலர்கள் செய்தார்கள்.
5 பின்பு யெகோவா மோசேயிடம், 6 “நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘ஒரு ஆணோ பெண்ணோ ஏதோவொரு பாவத்தைச் செய்து யெகோவாவுக்குத் துரோகம் பண்ணினால் அவர் குற்றவாளியாக இருப்பார்.+ 7 அந்தப் பாவத்தை அவர் ஒத்துக்கொள்ள வேண்டும்.+ குற்றத்துக்கு அபராதமாக முழு நஷ்ட ஈட்டையும், அதன் மதிப்பில் ஐந்திலொரு பாகத்தையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.+ யாருக்கு எதிராகக் குற்றம் செய்தாரோ அந்த நபருக்கு அதைத் தர வேண்டும். 8 ஆனால் அந்த நபர் இறந்துவிட்டால், அந்த நஷ்ட ஈட்டை வாங்கிக்கொள்ள அவருக்கு நெருங்கிய சொந்தக்காரரும் இல்லாவிட்டால், அதை யெகோவாவுக்குக் கொடுக்க வேண்டும். அது குருவானவருக்குச் சொந்தமாகும். அதோடு, குற்றம் செய்தவருடைய பாவத்துக்குப் பரிகாரமாகக் குருவானவர் செலுத்தும் செம்மறியாட்டுக் கடாவும் அவருக்கே சொந்தமாகும்.+
9 இஸ்ரவேலர்கள் குருவானவருக்குக் கொடுக்கிற எல்லா பரிசுத்த காணிக்கைகளும்+ அவருக்கே சொந்தமாகும்.+ 10 ஒவ்வொருவரும் கொடுக்கிற பரிசுத்த பொருள்கள் குருவானவருக்குப் போய்ச் சேரும். ஒருவர் குருவானவருக்கு எதைக் கொடுத்தாலும் அது குருவானவருக்கே சொந்தமாகும்’” என்றார்.
11 பின்பு யெகோவா மோசேயிடம், 12 “நீ இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொல்: ‘ஒருவனுடைய மனைவி நடத்தைகெட்டுப்போய் அவனுக்குத் துரோகம் செய்திருக்கலாம். 13 அவள் வேறொருவனோடு உறவுகொண்டது+ அவளுடைய கணவனுக்குத் தெரியாமல் இருக்கலாம், மற்றவர்களுக்கும் தெரியாமல் இருக்கலாம். அவள் களங்கப்பட்டிருந்தும் அவளுக்கு எதிராகச் சாட்சிகள் இல்லாமலோ அவள் கையும் களவுமாகப் பிடிபடாமலோ இருக்கலாம். 14 அவள் அப்படிக் களங்கப்பட்டிருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவளுடைய நடத்தையைக் கணவன் சந்தேகப்பட்டால், 15 குருவானவரிடம் அவளைக் கூட்டிக்கொண்டு வர வேண்டும். அதோடு, அவளுக்காக ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* பார்லி மாவைக் காணிக்கையாய்க் கொண்டுவர வேண்டும். அவன் அந்த மாவில் எண்ணெய் ஊற்றவோ சாம்பிராணியை வைக்கவோ கூடாது. ஏனென்றால், அது சந்தேகத்தின் காரணமாகச் செலுத்தப்படுகிற உணவுக் காணிக்கை, குற்றத்தைக் கவனத்துக்குக் கொண்டுவரும் உணவுக் காணிக்கை.
16 குருவானவர் அவளைக் கூப்பிட்டு யெகோவாவின் முன்னிலையில் நிறுத்துவார்.+ 17 பின்பு ஒரு மண்பாத்திரத்தில் சுத்தமான* தண்ணீரை எடுத்து, வழிபாட்டுக் கூடாரத்தின் தரையிலுள்ள மண்ணில் கொஞ்சத்தை அதில் போடுவார். 18 அதன்பின் அவளை யெகோவாவின் முன்னிலையில் நிறுத்தி, அவளுடைய தலைமுடியை அவிழ்ப்பார். அதோடு, சந்தேகத்தின் காரணமாகச் செலுத்தப்படும் உணவுக் காணிக்கையை+ ஒரு நினைப்பூட்டுதலாக அவள் கையில் வைப்பார். சாபத்தைக் கொண்டுவரும் அந்தக் கசப்பான தண்ணீரைக்+ குருவானவர் தன் கையில் வைத்திருப்பார்.
19 பின்பு, குருவானவர் அவளைச் சத்தியம் செய்ய வைத்து, இப்படிச் சொல்ல வேண்டும்: “உன் கணவனுக்குச் சொந்தமாக இருக்கும் நீ+ வேறு எந்த ஆணோடும் உறவுகொள்ளாமல் கற்புள்ளவளாக இருந்தால், இந்தக் கசப்பான தண்ணீர் உனக்கு எந்தச் சாபத்தையும் கொண்டுவராது. 20 நீ உன் கணவனுக்குச் சொந்தமானவளாக இருந்தும் நடத்தைகெட்டுப்போய் வேறொருவனோடு உறவுகொண்டிருந்தால்+—” 21 ‘தப்பு செய்திருந்தால் சாபம் வரட்டும்’ என்று உறுதிமொழி எடுக்கும்படி அவளிடம் குருவானவர் சொல்வார். பின்பு குருவானவர் அவளிடம், “ஜனங்கள் உன்னுடைய கெட்ட உதாரணத்தைச் சொல்லி சபிக்கும்படியும் ஆணையிடும்படியும் யெகோவா செய்யட்டும். யெகோவா உன் தொடையை* அழுகச் செய்து,* உன் வயிற்றை வீங்கச் செய்யட்டும். 22 சாபத்தைக் கொண்டுவரும் தண்ணீர் உன் குடலுக்குள் போய் உன் வயிற்றை வீங்க வைத்து, உன் தொடையை அழுகச் செய்யட்டும்” என்று சொல்வார். அதற்கு அந்தப் பெண், “ஆமென்! ஆமென்!”* என்று சொல்ல வேண்டும்.
23 பின்பு, குருவானவர் இந்தச் சாபங்களை ஒரு புத்தகத்தில் எழுதி அந்தக் கசப்பான தண்ணீரில் அவற்றைக் கழுவ வேண்டும். 24 அதன்பின், சாபத்தைக் கொண்டுவரும் கசப்பான தண்ணீரை அவளுக்குக் குடிக்கக் கொடுக்க வேண்டும். அந்தத் தண்ணீர் அவளுடைய உடலுக்குள் போய்க் கசப்பான விளைவை உண்டாக்கும். 25 சந்தேகத்தின் காரணமாகச் செலுத்தப்படுகிற உணவுக் காணிக்கையை+ அவளுடைய கையிலிருந்து குருவானவர் வாங்கி யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்ட வேண்டும். பின்பு, பலிபீடத்தின் பக்கத்தில் கொண்டுவர வேண்டும். 26 குருவானவர் அந்த உணவுக் காணிக்கையிலிருந்து ஒரு கைப்பிடி எடுத்து, மொத்த காணிக்கைக்கும் அடையாளமாக அதைப் பலிபீடத்தில் எரிப்பார்.+ பின்பு, அந்தத் தண்ணீரைக் குடிக்கும்படி அவளிடம் சொல்வார். 27 அவள் தன்னைக் களங்கப்படுத்தி தன் கணவனுக்குத் துரோகம் செய்திருந்தால், சாபத்தைக் கொண்டுவரும் அந்தத் தண்ணீரை அவள் குடித்தவுடன் அது அவளுக்குள் போய்க் கசப்பான விளைவை உண்டாக்கும். அவள் வயிறு வீங்கும், தொடை அழுகும், ஜனங்கள் மத்தியில் அவள் சாபக்கேடாக இருப்பாள். 28 ஆனால், அவள் தன்னைக் களங்கப்படுத்தாமல் தூய்மையாக இருந்தால், அப்படிப்பட்ட எந்தக் கேடும் அவளுக்கு வராது. அவள் கர்ப்பமாகி குழந்தை பெறுவாள்.
29 ஒரு பெண் தன் கணவனுக்குச் சொந்தமானவளாக இருக்கும்போது வழிதவறிப் போய்த் தன்னைக் களங்கப்படுத்தினால், 30 அல்லது ஒருவன் தன்னுடைய மனைவியின் நடத்தையைச் சந்தேகப்பட்டால் பின்பற்ற வேண்டிய சட்டங்கள் இவைதான்.+ அவன் தன்னுடைய மனைவியை யெகோவாவின் முன்னிலையில் நிறுத்த வேண்டும், குருவானவர் இந்தச் சட்டங்களின்படி அவளுக்குச் செய்ய வேண்டும். 31 அப்போது, அந்த மனிதன் குற்றமில்லாதவனாக இருப்பான், ஆனால் அவனுடைய மனைவி அந்தக் குற்றத்துக்காகத் தண்டிக்கப்படுவாள்’” என்றார்.
6 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “நீ இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொல்: ‘யெகோவாவுக்கு நசரேயராய்*+ இருப்பதாக ஒரு ஆணோ பெண்ணோ விசேஷமாக நேர்ந்துகொண்டால், 3 திராட்சமதுவையும் வேறெந்த மதுவையும் அவர் குடிக்கக் கூடாது. திராட்சமதுவிலோ வேறெந்த மதுவிலோ செய்யப்படும் காடியைக் குடிக்கக் கூடாது.+ திராட்சையில் தயாரிக்கப்படும் எந்தப் பானத்தையும் குடிக்கக் கூடாது. பழுத்த திராட்சையையோ உலர்ந்த திராட்சையையோ சாப்பிடக் கூடாது. 4 அவர் நசரேயராக இருக்கும் நாளெல்லாம் திராட்சைக் கொடிகளிலிருந்து கிடைக்கும் எதையுமே சாப்பிடக் கூடாது. திராட்சைக் காய்களையும் தோல்களையும்கூட சாப்பிடக் கூடாது.
5 நசரேயராய் இருப்பதாக அவர் நேர்ந்துகொண்ட நாளெல்லாம் தன்னுடைய தலைமுடியை வெட்டக் கூடாது.+ யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணித்த காலம் முழுவதும் தன் தலைமுடியை நீளமாக வளர்த்து, பரிசுத்தமாக இருக்க வேண்டும். 6 யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணித்த அந்தக் காலம் முழுவதும் எந்தப் பிணத்தின்* பக்கத்திலும் அவர் போகக் கூடாது. 7 அப்பாவோ அம்மாவோ சகோதரனோ சகோதரியோ இறந்தால்கூட பக்கத்தில் போய்த் தன்னைத் தீட்டுப்படுத்தக் கூடாது.+ ஏனென்றால், அவர் கடவுளுக்கு நசரேயராக இருக்கிறார். அவருடைய தலைமுடி அதற்கு அடையாளமாக இருக்கிறது.
8 அவர் நசரேயராக இருக்கும் நாளெல்லாம் யெகோவாவுக்குப் பரிசுத்தமாக இருக்கிறார். 9 ஆனால், தனக்குப் பக்கத்தில் இருக்கிற யாராவது திடீரென்று இறந்துவிட்டால் அந்த நசரேயர் தீட்டுப்பட்டுவிடுவார்.+ அப்போது, கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்ததற்கு அடையாளமாக இருக்கிற தலைமுடியை அவர் சிரைத்துவிட வேண்டும்.+ தன்னைத் தூய்மைப்படுத்தும் நாளில், அதாவது ஏழாம் நாளில், தன் தலைமுடியைச் சிரைத்துக்கொள்ள வேண்டும். 10 எட்டாம் நாளில், இரண்டு காட்டுப் புறாக்களையோ இரண்டு புறாக் குஞ்சுகளையோ கொண்டுவந்து சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் குருவானவரிடம் கொடுக்க வேண்டும். 11 குருவானவர் அவற்றில் ஒன்றைப் பாவப் பரிகார பலியாகவும் மற்றொன்றைத் தகன பலியாகவும் செலுத்துவார். இப்படி, இறந்தவரால் தீட்டுப்பட்ட அந்த நசரேயருக்காகப் பாவப் பரிகாரம் செய்வார்.+ அந்த நாள்முதல் நசரேயர் தன்னைப் புனிதப்படுத்திக்கொள்ள* வேண்டும். 12 அப்போது, அவர் யெகோவாவுக்கு நசரேயராக இருக்கும் நாட்கள் மறுபடியும் ஆரம்பிக்கும். அதற்காக, ஒருவயது செம்மறியாட்டுக் கடாக் குட்டியைக் குற்ற நிவாரண பலியாகக் கொண்டுவர வேண்டும். அவர் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்டதால், ஏற்கெனவே நசரேயராக இருந்த நாட்கள் கணக்கில் சேராது.
13 நசரேயருக்கான சட்டம் இதுதான்: ஒருவர் நசரேயராக இருக்கும் காலம் முடியும்போது+ அவரைச் சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்குக் கூட்டிக்கொண்டு வர வேண்டும். 14 அங்கே அவர் யெகோவாவுக்குக் காணிக்கைகள் கொடுக்க வேண்டும். அதாவது, குறையற்ற ஒருவயது செம்மறியாட்டுக் கடாக் குட்டியைத் தகன பலியாகவும்,+ குறையற்ற ஒருவயது பெண் செம்மறியாட்டுக் குட்டியைப் பாவப் பரிகார பலியாகவும்,+ குறையற்ற செம்மறியாட்டுக் கடாவைச் சமாதான பலியாகவும்+ கொடுக்க வேண்டும். 15 அதோடு ஒரு கூடையில், நைசான மாவிலே எண்ணெய் கலந்து சுடப்பட்ட புளிப்பில்லாத வட்ட ரொட்டிகளையும், எண்ணெய் தடவிய மெல்லிய ரொட்டிகளையும், அவற்றுக்கான உணவுக் காணிக்கையையும்,+ திராட்சமது காணிக்கையையும்+ கொடுக்க வேண்டும். 16 குருவானவர் அவற்றை யெகோவாவின் முன்னிலையில் கொண்டுவந்து, அந்த நசரேயருடைய பாவப் பரிகார பலியையும் தகன பலியையும் செலுத்துவார். 17 கூடையிலுள்ள புளிப்பில்லாத ரொட்டிகளோடு, ஒரு செம்மறியாட்டுக் கடாவை யெகோவாவுக்குச் சமாதான பலியாகச் செலுத்துவார். அவற்றோடு, உணவுக் காணிக்கையையும்+ திராட்சமது காணிக்கையையும் செலுத்துவார்.
18 பின்பு, சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் அந்த நசரேயர் தன் தலைமுடியைச் சிரைத்துக்கொள்ள வேண்டும்.+ நசரேயராக இருக்கும்போது வளர்த்த அந்தத் தலைமுடியைச் சமாதான பலியின் கீழே எரிகிற நெருப்பில் போட வேண்டும். 19 நசரேயருக்கு அடையாளமாக இருக்கும் தலைமுடியை அவர் சிரைத்துக்கொண்ட பின்பு, வேக வைத்த+ செம்மறியாட்டுக் கடாவின் முன்னங்காலையும், கூடையிலுள்ள புளிப்பில்லாத வட்ட ரொட்டிகளில் ஒன்றையும், மெல்லிய ரொட்டிகளில் ஒன்றையும் குருவானவர் எடுத்து அந்த நசரேயரின் கைகளில் வைக்க வேண்டும். 20 பின்பு, அவற்றை அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் குருவானவர் அசைவாட்ட வேண்டும்.+ அந்தக் காணிக்கை பரிசுத்தமானது, குருவானவருக்குச் சொந்தமானது. அசைவாட்டும் காணிக்கையாகிய மார்க்கண்டத்தோடும்* பரிசுத்த பங்காகிய காலோடும் அவை குருவானவருக்குக் கொடுக்கப்படும்.+ அதன்பின், அந்த நசரேயர் திராட்சமதுவைக் குடிக்கலாம்.
21 நசரேயராய்+ இருப்பதாக நேர்ந்துகொள்ளும் ஒருவருக்கான சட்டம் இதுதான்: நசரேயர்கள் செலுத்த வேண்டிய காணிக்கைகள் தவிர வேறு காணிக்கைகளையும் செலுத்துவதாக அவர் யெகோவாவிடம் நேர்ந்துகொண்டால், அதையும் நிறைவேற்ற வேண்டும்’” என்றார்.
22 பின்பு யெகோவா மோசேயிடம், 23 “நீ ஆரோனிடமும் அவனுடைய மகன்களிடமும் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நீங்கள் இஸ்ரவேலர்களை வாழ்த்தும்போது,+
24 “யெகோவா உங்களை ஆசீர்வதிக்கட்டும்,+ அவர் உங்களைப் பாதுகாக்கட்டும்.
25 யெகோவா தன்னுடைய முகத்தை உங்கள்மேல் பிரகாசிக்கச் செய்து,+ உங்களுக்குக் கருணை காட்டட்டும்.
26 யெகோவா உங்களைக் கரிசனையோடு பார்த்து,* உங்களுக்குச் சமாதானம் தரட்டும்”+ என்று சொல்லி வாழ்த்த வேண்டும்’”
என்றார். 27 “அவர்கள் என் பெயரைச் சொல்லி இஸ்ரவேலர்களை வாழ்த்த வேண்டும்,+ நான் அவர்களுக்கு ஆசீர்வாதம் தருவேன்”+ என்றும் சொன்னார்.
7 வழிபாட்டுக் கூடாரத்தை மோசே அமைத்து முடித்ததும்,+ அதே நாளில் அந்தக் கூடாரத்தையும் அதன் சாமான்களையும் பலிபீடத்தையும் எல்லா பாத்திரங்களையும் அபிஷேகம் செய்து+ புனிதப்படுத்தினார்.+ அப்படி அபிஷேகம் செய்து புனிதப்படுத்திய பின்பு,+ 2 இஸ்ரவேலின் கோத்திரத் தலைவர்கள்,+ அதாவது தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள், தங்களுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள். இவர்கள்தான் பெயர்ப்பதிவு வேலையைக் கண்காணித்த கோத்திரத் தலைவர்கள். 3 இரண்டிரண்டு கோத்திரத் தலைவர்களுக்கு ஒரு கூண்டுவண்டி* என ஆறு கூண்டுவண்டிகளையும், ஒவ்வொரு கோத்திரத் தலைவருக்கு ஒரு காளை என 12 காளைகளையும் இவர்கள் கொண்டுவந்து வழிபாட்டுக் கூடாரத்தின் முன்னால், யெகோவாவின் முன்னிலையில் கொடுத்தார்கள். 4 அப்போது யெகோவா மோசேயிடம், 5 “இவற்றை அவர்களிடமிருந்து வாங்கி, சந்திப்புக் கூடார வேலைகளுக்காக லேவியர்களிடம் கொடு. அவரவர் செய்யும் வேலைகளுக்கு ஏற்றபடி அவரவருக்குக் கொடு” என்றார்.
6 அதனால், மோசே அந்த வண்டிகளையும் காளைகளையும் அவர்களிடமிருந்து வாங்கி லேவியர்களிடம் கொடுத்தார். 7 கெர்சோனியர்களின் வேலைகளுக்கு ஏற்றபடி,+ அவர்களுக்கு இரண்டு வண்டிகளையும் நான்கு காளைகளையும் கொடுத்தார். 8 மெராரியர்களின் வேலைகளுக்கு ஏற்றபடி, அவர்களுக்கு நான்கு வண்டிகளையும் எட்டுக் காளைகளையும் கொடுத்தார். அவர்கள் எல்லாருடைய வேலைகளையும் குருவாகிய ஆரோனின் மகன் இத்தாமார் மேற்பார்வை செய்தார்.+ 9 ஆனால், கோகாத்தியர்களுக்கு மோசே ஒன்றும் கொடுக்கவில்லை. ஏனென்றால், பரிசுத்த இடத்தின் பொருள்களை+ அவர்கள் தங்களுடைய தோள்களில் சுமந்தார்கள்.+
10 பலிபீடம் அபிஷேகம் செய்யப்பட்ட நாளில், அதாவது அது அர்ப்பணிக்கப்பட்ட நாளில்,+ கோத்திரத் தலைவர்கள் தங்களுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள். அவற்றைப் பலிபீடத்துக்கு முன்னால் கொண்டுவந்து கொடுத்தபோது, 11 யெகோவா மோசேயிடம், “ஒரு நாளுக்கு ஒருவர் என கோத்திரத் தலைவர்கள் தங்களுடைய காணிக்கைகளைப் பலிபீடத்தின் அர்ப்பணத்துக்காகக் கொண்டுவர வேண்டும்” என்றார்.
12 முதலாம் நாளில், யூதா கோத்திரத்தைச் சேர்ந்த அம்மினதாபின் மகன் நகசோன்+ தன்னுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார். 13 அவருடைய காணிக்கைகள்: பரிசுத்த* சேக்கலின்* கணக்குப்படி,+ 130 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித் தட்டு, 70 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம்—உணவுக் காணிக்கையாகிய எண்ணெய் கலந்த நைசான மாவு அவற்றில் நிரப்பப்பட்டிருந்தது;+ 14 10 சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கோப்பை—அது தூபப்பொருளால் நிரப்பப்பட்டிருந்தது; 15 தகன பலியாக+ ஓர் இளம் காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள செம்மறியாட்டுக் கடாக் குட்டி; 16 பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டி;+ 17 சமாதான பலியாக+ 2 மாடுகள், 5 செம்மறியாட்டுக் கடாக்கள், 5 வெள்ளாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 5 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள். இவைதான் அம்மினதாபின் மகன் நகசோன்+ கொண்டுவந்த காணிக்கைகள்.
18 இரண்டாம் நாளில், இசக்கார் கோத்திரத்தின் தலைவரும் சூவாரின் மகனுமாகிய நெதனெயேல்+ தன்னுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார். 19 அவருடைய காணிக்கைகள்: பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி,+ 130 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித் தட்டு, 70 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம்—உணவுக் காணிக்கையாகிய எண்ணெய் கலந்த நைசான மாவு அவற்றில் நிரப்பப்பட்டிருந்தது;+ 20 10 சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கோப்பை—அது தூபப்பொருளால் நிரப்பப்பட்டிருந்தது; 21 தகன பலியாக+ ஓர் இளம் காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒரு வயதுள்ள செம்மறியாட்டுக் கடாக் குட்டி; 22 பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டி;+ 23 சமாதான பலியாக+ 2 மாடுகள், 5 செம்மறியாட்டுக் கடாக்கள், 5 வெள்ளாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 5 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள். இவைதான் சூவாரின் மகன் நெதனெயேல் கொண்டுவந்த காணிக்கைகள்.
24 மூன்றாம் நாளில், செபுலோன் கோத்திரத்தின் தலைவரும் ஹேலோனின் மகனுமாகிய எலியாப்+ தன்னுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார். 25 அவருடைய காணிக்கைகள்: பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி,+ 130 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித் தட்டு, 70 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம்—உணவுக் காணிக்கையாகிய எண்ணெய் கலந்த நைசான மாவு அவற்றில் நிரப்பப்பட்டிருந்தது;+ 26 10 சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கோப்பை—அது தூபப்பொருளால் நிரப்பப்பட்டிருந்தது; 27 தகன பலியாக+ ஓர் இளம் காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள செம்மறியாட்டுக் கடாக் குட்டி; 28 பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டி;+ 29 சமாதான பலியாக+ 2 மாடுகள், 5 செம்மறியாட்டுக் கடாக்கள், 5 வெள்ளாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 5 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள். இவைதான் ஹேலோனின் மகன் எலியாப்+ கொண்டுவந்த காணிக்கைகள்.
30 நான்காம் நாளில், ரூபன் கோத்திரத்தின் தலைவரும் சேதேயூரின் மகனுமாகிய எலிசூர்+ தன்னுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார். 31 அவருடைய காணிக்கைகள்: பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி,+ 130 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித் தட்டு, 70 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம்—உணவுக் காணிக்கையாகிய எண்ணெய் கலந்த நைசான மாவு அவற்றில் நிரப்பப்பட்டிருந்தது;+ 32 10 சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கோப்பை—அது தூபப்பொருளால் நிரப்பப்பட்டிருந்தது; 33 தகன பலியாக+ ஓர் இளம் காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள செம்மறியாட்டுக் கடாக் குட்டி; 34 பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டி;+ 35 சமாதான பலியாக+ 2 மாடுகள், 5 செம்மறியாட்டுக் கடாக்கள், 5 வெள்ளாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 5 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள். இவைதான் சேதேயூரின் மகன் எலிசூர்+ கொண்டுவந்த காணிக்கைகள்.
36 ஐந்தாம் நாளில், சிமியோன் கோத்திரத்தின் தலைவரும் சூரிஷதாயின் மகனுமாகிய செலூமியேல்+ தன்னுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார். 37 அவருடைய காணிக்கைகள்: பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி,+ 130 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித் தட்டு, 70 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம்—உணவுக் காணிக்கையாகிய எண்ணெய் கலந்த நைசான மாவு அவற்றில் நிரப்பப்பட்டிருந்தது;+ 38 10 சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கோப்பை—அது தூபப்பொருளால் நிரப்பப்பட்டிருந்தது; 39 தகன பலியாக+ ஓர் இளம் காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள செம்மறியாட்டுக் கடாக் குட்டி; 40 பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டி;+ 41 சமாதான பலியாக+ 2 மாடுகள், 5 செம்மறியாட்டுக் கடாக்கள், 5 வெள்ளாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 5 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள். இவைதான் சூரிஷதாயின் மகன் செலூமியேல்+ கொண்டுவந்த காணிக்கைகள்.
42 ஆறாம் நாளில், காத் கோத்திரத்தின் தலைவரும் தேகுவேலின் மகனுமாகிய எலியாசாப்+ தன்னுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார். 43 அவருடைய காணிக்கைகள்: பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி,+ 130 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித் தட்டு, 70 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம்—உணவுக் காணிக்கையாகிய எண்ணெய் கலந்த நைசான மாவு அவற்றில் நிரப்பப்பட்டிருந்தது;+ 44 10 சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கோப்பை—அது தூபப்பொருளால் நிரப்பப்பட்டிருந்தது; 45 தகன பலியாக+ ஓர் இளம் காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள செம்மறியாட்டுக் கடாக் குட்டி; 46 பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டி;+ 47 சமாதான பலியாக+ 2 மாடுகள், 5 செம்மறியாட்டுக் கடாக்கள், 5 வெள்ளாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 5 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள். இவைதான் தேகுவேலின் மகன் எலியாசாப்+ கொண்டுவந்த காணிக்கைகள்.
48 ஏழாம் நாளில், எப்பிராயீம் கோத்திரத்தின் தலைவரும் அம்மியூத்தின் மகனுமாகிய எலிஷாமா+ தன்னுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார். 49 அவருடைய காணிக்கைகள்: பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி,+ 130 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித் தட்டு, 70 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம்—உணவுக் காணிக்கையாகிய எண்ணெய் கலந்த நைசான மாவு அவற்றில் நிரப்பப்பட்டிருந்தது;+ 50 10 சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கோப்பை—அது தூபப்பொருளால் நிரப்பப்பட்டிருந்தது; 51 தகன பலியாக+ ஓர் இளம் காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள செம்மறியாட்டுக் கடாக் குட்டி; 52 பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டி;+ 53 சமாதான பலியாக+ 2 மாடுகள், 5 செம்மறியாட்டுக் கடாக்கள், 5 வெள்ளாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 5 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள். இவைதான் அம்மியூத்தின் மகன் எலிஷாமா+ கொண்டுவந்த காணிக்கைகள்.
54 எட்டாம் நாளில், மனாசே கோத்திரத்தின் தலைவரும் பெதாசூரின் மகனுமாகிய கமாலியேல்+ தன்னுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார். 55 அவருடைய காணிக்கைகள்: பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி+ 130 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித் தட்டு, 70 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம்—உணவுக் காணிக்கையாகிய எண்ணெய் கலந்த நைசான மாவு அவற்றில் நிரப்பப்பட்டிருந்தது;+ 56 10 சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கோப்பை—அது தூபப்பொருளால் நிரப்பப்பட்டிருந்தது; 57 தகன பலியாக+ ஓர் இளம் காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள செம்மறியாட்டுக் கடாக் குட்டி; 58 பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டி;+ 59 சமாதான பலியாக+ 2 மாடுகள், 5 செம்மறியாட்டுக் கடாக்கள், 5 வெள்ளாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 5 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள். இவைதான் பெதாசூரின் மகன் கமாலியேல்+ கொண்டுவந்த காணிக்கைகள்.
60 ஒன்பதாம் நாளில், பென்யமீன் கோத்திரத்தின் தலைவரும்+ கீதெயோனியின் மகனுமாகிய அபிதான்+ தன்னுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார். 61 அவருடைய காணிக்கைகள்: பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி,+ 130 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித் தட்டு, 70 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம்—உணவுக் காணிக்கையாகிய எண்ணெய் கலந்த நைசான மாவு அவற்றில் நிரப்பப்பட்டிருந்தது;+ 62 10 சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கோப்பை—அது தூபப்பொருளால் நிரப்பப்பட்டிருந்தது; 63 தகன பலியாக+ ஓர் இளம் காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள செம்மறியாட்டுக் கடாக் குட்டி; 64 பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டி;+ 65 சமாதான பலியாக+ 2 மாடுகள், 5 செம்மறியாட்டுக் கடாக்கள், 5 வெள்ளாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 5 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள். இவைதான் கீதெயோனியின் மகன் அபிதான்+ கொண்டுவந்த காணிக்கைகள்.
66 பத்தாம் நாளில், தாண் கோத்திரத்தின் தலைவரும் அம்மிஷதாயின் மகனுமாகிய அகியேசேர்+ தன்னுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார். 67 அவருடைய காணிக்கைகள்: பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி,+ 130 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித் தட்டு, 70 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம்—உணவுக் காணிக்கையாகிய எண்ணெய் கலந்த நைசான மாவு அவற்றில் நிரப்பப்பட்டிருந்தது;+ 68 10 சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கோப்பை—அது தூபப்பொருளால் நிரப்பப்பட்டிருந்தது; 69 தகன பலியாக+ ஓர் இளம் காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள செம்மறியாட்டுக் கடாக் குட்டி; 70 பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டி;+ 71 சமாதான பலியாக+ 2 மாடுகள், 5 செம்மறியாட்டுக் கடாக்கள், 5 வெள்ளாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 5 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள். இவைதான் அம்மிஷதாயின் மகன் அகியேசேர்+ கொண்டுவந்த காணிக்கைகள்.
72 பதினோராம் நாளில், ஆசேர் கோத்திரத்தின் தலைவரும் ஓகிரானின் மகனுமாகிய பாகியேல்+ தன்னுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார். 73 அவருடைய காணிக்கைகள்: பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி,+ 130 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித் தட்டு, 70 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம்—உணவுக் காணிக்கையாகிய எண்ணெய் கலந்த நைசான மாவு அவற்றில் நிரப்பப்பட்டிருந்தது;+ 74 10 சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கோப்பை—அது தூபப்பொருளால் நிரப்பப்பட்டிருந்தது; 75 தகன பலியாக+ ஓர் இளம் காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள செம்மறியாட்டுக் கடாக் குட்டி; 76 பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டி;+ 77 சமாதான பலியாக+ 2 மாடுகள், 5 செம்மறியாட்டுக் கடாக்கள், 5 வெள்ளாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 5 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள். இவைதான் ஓகிரானின் மகன் பாகியேல்+ கொண்டுவந்த காணிக்கைகள்.
78 பன்னிரண்டாம் நாளில், நப்தலி கோத்திரத்தின் தலைவரும் ஏனானின் மகனுமாகிய அகீரா+ தன்னுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார். 79 அவருடைய காணிக்கைகள்: பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி,+ 130 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித் தட்டு, 70 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம்—உணவுக் காணிக்கையாகிய எண்ணெய் கலந்த நைசான மாவு அவற்றில் நிரப்பப்பட்டிருந்தது;+ 80 10 சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கோப்பை—அது தூபப்பொருளால் நிரப்பப்பட்டிருந்தது; 81 தகன பலியாக+ ஓர் இளம் காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள செம்மறியாட்டுக் கடாக் குட்டி; 82 பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டி;+ 83 சமாதான பலியாக+ 2 மாடுகள், 5 செம்மறியாட்டுக் கடாக்கள், 5 வெள்ளாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 5 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள். இவைதான் ஏனானின் மகன் அகீரா+ கொண்டுவந்த காணிக்கைகள்.
84 பலிபீடம் அபிஷேகம் செய்யப்பட்ட நாளில், அதன் அர்ப்பணத்துக்காக இஸ்ரவேலின் கோத்திரத் தலைவர்கள் கொண்டுவந்த காணிக்கைகள்+ இவைதான்: 12 வெள்ளித் தட்டுகள், 12 வெள்ளிக் கிண்ணங்கள், 12 தங்கக் கோப்பைகள்.+ 85 பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி,+ ஒவ்வொரு வெள்ளித் தட்டின் எடை 130 சேக்கல், ஒவ்வொரு வெள்ளிக் கிண்ணத்தின் எடை 70 சேக்கல். வெள்ளிப் பாத்திரங்களின் மொத்த எடை 2,400 சேக்கல். 86 பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி, தூபப்பொருளால் நிரப்பப்பட்ட 12 தங்கக் கோப்பைகள் ஒவ்வொன்றின் எடை 10 சேக்கல். தங்கக் கோப்பைகளின் மொத்த எடை 120 சேக்கல். 87 தகன பலியாக 12 காளைகள், 12 செம்மறியாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 12 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றையும், அவற்றுக்கான உணவுக் காணிக்கைகளையும், பாவப் பரிகார பலியாக 12 வெள்ளாட்டுக் குட்டிகளையும் அவர்கள் கொண்டுவந்தார்கள். 88 சமாதான பலியாக அவர்கள் கொண்டுவந்தவை: 24 காளைகள், 60 செம்மறியாட்டுக் கடாக்கள், 60 வெள்ளாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 60 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள். பலிபீடம் அபிஷேகம் செய்யப்பட்ட பின்பு,+ அதன் அர்ப்பணத்துக்காகக் கொண்டுவரப்பட்ட காணிக்கைகள்+ இவைதான்.
89 கடவுளோடு பேசுவதற்காக மோசே சந்திப்புக் கூடாரத்துக்குள் போகும்போதெல்லாம்,+ சாட்சிப் பெட்டியின் மூடிக்கு மேலிருந்து கடவுள் பேசுவதைக் கேட்பார்.+ இரண்டு கேருபீன்களுக்கு+ நடுவிலிருந்து கடவுள் அவரிடம் பேசுவார்.
8 யெகோவா மோசேயிடம், 2 “நீ ஆரோனிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நீ விளக்கேற்றும்போது, ஏழு அகல் விளக்குகளும் குத்துவிளக்கின் முன்பக்கம் ஒளிவீசும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்’”+ என்றார். 3 யெகோவா மோசேக்குக் கட்டளை கொடுத்தபடியே, குத்துவிளக்கின் முன்பக்கம் ஒளிவீசும்படி அகல் விளக்குகளை ஆரோன் ஏற்றினார்.+ 4 இந்தக் குத்துவிளக்கு, அதன் தண்டுமுதல் மலர்கள்வரை தங்கத்தால் தகடு அடிக்கப்பட்டிருந்தது.+ தரிசனத்தில் மோசேக்கு யெகோவா காட்டியபடியே குத்துவிளக்கு செய்யப்பட்டிருந்தது.+
5 மறுபடியும் யெகோவா மோசேயிடம், 6 “இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து லேவியர்களைப் பிரித்தெடுத்து அவர்களைத் தூய்மைப்படுத்து.+ 7 நீ அவர்களைத் தூய்மைப்படுத்த வேண்டிய விதம்: பாவச் சுத்திகரிப்பு நீரை அவர்கள்மேல் தெளிக்க வேண்டும். அவர்கள் தங்களுடைய உடலிலுள்ள எல்லா முடியையும் சவரக்கத்தியால் சிரைத்து, உடைகளைத் துவைத்து, தங்களைத் தூய்மைப்படுத்த வேண்டும்.+ 8 பின்பு ஒரு இளம் காளையையும்,+ அதற்கான உணவுக் காணிக்கையாக+ எண்ணெய் கலந்த நைசான மாவையும் அவர்கள் கொண்டுவர வேண்டும். அதன்பின், பாவப் பரிகார பலியாக மற்றொரு இளம் காளையை நீ கொண்டுவர வேண்டும்.+ 9 சந்திப்புக் கூடாரத்தின் முன்னால் லேவியர்களை நீ நிறுத்த வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரையும் ஒன்றுகூடிவரச் செய்ய வேண்டும்.+ 10 லேவியர்களை யெகோவாவின் முன்னிலையில் நீ நிறுத்தும்போது, இஸ்ரவேலர்கள் தங்களுடைய கைகளை அவர்கள்மேல் வைக்க வேண்டும்.+ 11 அப்போது, ஆரோன் லேவியர்களை இஸ்ரவேலர்களுடைய அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவுக்கு முன்னால் அசைவாட்ட வேண்டும்.+ லேவியர்கள் யெகோவாவுக்குச் சேவை செய்வார்கள்.+
12 லேவியர்கள் தங்களுடைய கைகளை அந்தக் காளைகளின் தலையில் வைக்க வேண்டும்.+ அதன் பிறகு, லேவியர்களுக்குப் பாவப் பரிகாரம் செய்வதற்காக அதில் ஒன்றைப் பாவத்துக்கான பலியாகவும் மற்றொன்றைத் தகன பலியாகவும் யெகோவாவுக்குக் கொடுக்க வேண்டும்.+ 13 பின்பு, நீ ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் முன்பாக லேவியர்களை நிறுத்தி, அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவுக்கு முன்னால் அவர்களை அசைவாட்ட வேண்டும். 14 லேவியர்களை இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து நீ பிரித்தெடுக்க வேண்டும், லேவியர்கள் எனக்குச் சொந்தமாவார்கள்.+ 15 அதன்பின், அவர்கள் வந்து சந்திப்புக் கூடாரத்தின் வேலைகளைச் செய்வார்கள். இப்படி நீ அவர்களைத் தூய்மைப்படுத்தி, அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்ட வேண்டும். 16 ஏனென்றால், அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, எனக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். இஸ்ரவேலர்களின் மூத்த மகன்கள் எல்லாருக்கும் பதிலாக லேவியர்களை+ எனக்காக ஏற்றுக்கொள்கிறேன். 17 ஏனென்றால், இஸ்ரவேலர்களுக்கும் அவர்களுடைய மிருகங்களுக்கும் முதலில் பிறக்கிற எல்லாமே எனக்குத்தான் சொந்தம்.+ எகிப்தியர்களின் முதல் பிறப்புகளை நான் கொன்றுபோட்ட நாளில், இஸ்ரவேலர்களின் முதல் பிறப்புகளை எனக்கென்று பிரித்து வைத்தேன்.*+ 18 இஸ்ரவேலர்களின் மூத்த மகன்கள் எல்லாருக்கும் பதிலாக லேவியர்களை நான் ஏற்றுக்கொள்வேன். 19 லேவியர்களை இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து பிரித்தெடுத்து, ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் அன்பளிப்பாகக் கொடுப்பேன். லேவியர்கள் இஸ்ரவேலர்களின் சார்பாகச் சந்திப்புக் கூடாரத்தின் வேலைகளைச் செய்து,+ அவர்களுக்காகப் பாவப் பரிகாரம் செய்வார்கள். இஸ்ரவேலர்கள் பரிசுத்த இடத்துக்குப் பக்கத்தில் வந்து தண்டிக்கப்படாமல் இருப்பதற்காகத்தான் இந்த ஏற்பாட்டைச் செய்கிறேன்”+ என்றார்.
20 மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் லேவியர்களுக்கு அப்படியே செய்தார்கள். லேவியர்கள் சம்பந்தமாக மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியெல்லாம் இஸ்ரவேலர்கள் செய்தார்கள். 21 லேவியர்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, தங்களுடைய உடைகளைத் துவைத்தார்கள்.+ பின்பு, ஆரோன் அவர்களை யெகோவாவுக்கு முன்னால் அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டினார்.+ அதன்பின், அவர்களைப் பரிசுத்தப்படுத்துவதற்காகப் பாவப் பரிகாரம் செய்தார்.+ 22 பிற்பாடு, லேவியர்கள் வந்து சந்திப்புக் கூடாரத்தின் வேலைகளை ஆரோனுக்கும் அவருடைய மகன்களுக்கும் முன்னால் செய்தார்கள். லேவியர்கள் சம்பந்தமாக மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே ஜனங்கள் செய்தார்கள்.
23 பின்பு யெகோவா மோசேயிடம், 24 “லேவியர்களுக்கான சட்டம் இதுதான்: 25 வயதும் அதற்கு அதிகமான வயதும் உள்ளவர்கள் சந்திப்புக் கூடாரத்தின் வேலைகளைச் செய்கிறவர்களோடு சேர்ந்துகொள்ள வேண்டும். 25 ஆனால், 50 வயதைத் தாண்டியவர்கள் வேலையிலிருந்து ஓய்வுபெற வேண்டும். 26 சந்திப்புக் கூடார வேலைகளைச் செய்கிற தங்கள் சகோதரர்களுக்கு அவர்கள் உதவி செய்யலாம். ஆனால், வேறு எந்தச் சேவையும் அங்கே செய்யக் கூடாது. லேவியர்கள் சம்பந்தமாகவும் அவர்களுடைய பொறுப்புகள் சம்பந்தமாகவும் நீ பின்பற்ற வேண்டிய சட்டங்கள் இவைதான்”+ என்றார்.
9 இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்த இரண்டாம் வருஷம் முதலாம் மாதம்,+ சீனாய் வனாந்தரத்தில் யெகோவா மோசேயிடம், 2 “இஸ்ரவேலர்கள் நான் சொன்ன சமயத்தில்+ பஸ்கா பண்டிகையைக்+ கொண்டாட வேண்டும். 3 அதாவது, இந்த மாதம் 14-ஆம் நாள் சாயங்காலத்தில் அதைக் கொண்டாட வேண்டும். அது சம்பந்தமாக நான் கொடுத்த எல்லா சட்டதிட்டங்களையும் முறைமைகளையும் பின்பற்ற வேண்டும்”+ என்றார்.
4 அவர் சொன்னது போலவே, பஸ்கா பண்டிகையைக் கொண்டாடும்படி மோசே இஸ்ரவேலர்களிடம் சொன்னார். 5 முதலாம் மாதம் 14-ஆம் நாள் சாயங்காலத்தில் சீனாய் வனாந்தரத்தில் அவர்கள் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடினார்கள். மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியெல்லாம் இஸ்ரவேலர்கள் செய்தார்கள்.
6 அந்த நாளில் சிலர் ஒரு பிணத்தைத் தொட்டதால் தீட்டுப்பட்டிருந்தார்கள்.+ அதனால், பஸ்கா பண்டிகையைக் கொண்டாட முடியாத நிலையில் இருந்தார்கள். அவர்கள் அன்றைக்கு மோசேயிடமும் ஆரோனிடமும் வந்து,+ 7 “பிணத்தைத் தொட்டதால் நாங்கள் தீட்டுப்பட்டிருக்கிறோம். யெகோவா சொன்ன இந்த நாளில், எல்லாரோடும் சேர்ந்து நாங்கள் பண்டிகையைக் கொண்டாடவே முடியாதா?”+ என்று கேட்டார்கள். 8 அதற்கு மோசே, “கொஞ்சம் பொறுங்கள், யெகோவா என்ன சொல்கிறார் என்று கேட்டுச் சொல்கிறேன்”+ என்றார்.
9 யெகோவா மோசேயிடம், 10 “நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘உங்களிலோ உங்களுக்குப் பின்வரும் தலைமுறைகளிலோ யாராவது ஒரு பிணத்தைத் தொட்டுத் தீட்டுப்பட்டிருந்தால்+ அல்லது நீண்டதூரப் பயணம் போயிருந்தால், அவரும் யெகோவாவுக்குப் பஸ்கா பண்டிகையைக் கொண்டாட வேண்டும். 11 ஆனால், இரண்டாம் மாதம்+ 14-ஆம் நாள் சாயங்காலத்தில் அதைக் கொண்டாட வேண்டும். பலி கொடுக்கும் ஆட்டைப் புளிப்பில்லாத ரொட்டியோடும் கசப்பான கீரையோடும் சாப்பிட வேண்டும்.+ 12 எதையும் காலைவரை மீதி வைக்கக் கூடாது.+ ஆட்டின் எந்த எலும்பையும் முறிக்கக் கூடாது.+ பஸ்கா பண்டிகை சம்பந்தப்பட்ட எல்லா சட்டதிட்டங்களையும் அவர்கள் பின்பற்ற வேண்டும். 13 ஆனால் ஒருவன் பிணத்தினால் தீட்டுப்படாமலோ, நீண்டதூரப் பயணம் போகாமலோ இருந்தும் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடாமல் அதை அலட்சியப்படுத்தினால், அவன் கொல்லப்பட வேண்டும்.+ ஏனென்றால், யெகோவாவின் பண்டிகையை அதற்கான நாளில் அவன் கொண்டாடவில்லை. அந்தப் பாவத்துக்காக அவன் தண்டிக்கப்படுவான்.
14 வேறு தேசத்தைச் சேர்ந்த ஒருவன் உங்களோடு வாழ்ந்துவந்தால் அவனும் யெகோவாவுக்கு பஸ்கா பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.+ அதற்கான எல்லா சட்டதிட்டங்களையும் பின்பற்ற வேண்டும்.+ இஸ்ரவேல் குடிமக்களாகிய உங்களுக்கும் சரி, உங்களோடு வாழ்கிற வேறு தேசத்து ஜனங்களுக்கும் சரி, ஒரே சட்டம்தான் இருக்க வேண்டும்’”+ என்றார்.
15 வழிபாட்டுக் கூடாரம், அதாவது சாட்சிப் பெட்டியின் கூடாரம், அமைக்கப்பட்ட நாளில்+ அதன்மேல் மேகம் தங்கியது. ஆனால், சாயங்காலத்திலிருந்து காலைவரை அது நெருப்புபோல் தெரிந்தது.+ 16 இதேபோல் தினமும் நடந்துவந்தது. பகலில் வழிபாட்டுக் கூடாரத்தின் மேல் மேகம் தங்கியிருக்கும், ராத்திரியில் அது நெருப்புபோல் தெரியும்.+ 17 கூடாரத்தைவிட்டு மேகம் மேலே எழும்பும்போதெல்லாம் இஸ்ரவேலர்கள் உடனடியாக அங்கிருந்து புறப்படுவார்கள்.+ எந்த இடத்தில் மேகம் தங்குகிறதோ, அங்கே அவர்கள் முகாம்போடுவார்கள்.+ 18 யெகோவாவின் கட்டளைப்படியே அவர்கள் புறப்படுவார்கள், யெகோவாவின் கட்டளைப்படியே முகாம்போடுவார்கள்.+ வழிபாட்டுக் கூடாரத்தின் மேல் மேகம் தங்கியிருக்கும்வரை அவர்கள் அந்த இடத்திலேயே தங்கியிருப்பார்கள். 19 வழிபாட்டுக் கூடாரத்தின் மேல் மேகம் பல நாட்கள் தங்கியிருந்தாலும் இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து அங்கேயே இருப்பார்கள்.+ 20 சிலசமயம், அந்த மேகம் வழிபாட்டுக் கூடாரத்தின் மேல் சில நாட்கள் மட்டும்தான் தங்கியிருக்கும். யெகோவாவின் கட்டளைப்படியே அவர்கள் முகாம்போடுவார்கள், யெகோவாவின் கட்டளைப்படியே புறப்படுவார்கள். 21 சிலசமயம் சாயங்காலத்திலிருந்து காலை வரைக்கும்தான் அந்த மேகம் தங்கியிருக்கும். காலையில் மேகம் மேலே எழும்பும்போது, அவர்கள் அங்கிருந்து புறப்படுவார்கள். பகலோ ராத்திரியோ, மேகம் மேலே எழும்பும்போது அவர்கள் புறப்படுவார்கள்.+ 22 இரண்டு நாட்களோ, ஒரு மாதமோ, அதற்கும் அதிகமான காலமோ, வழிபாட்டுக் கூடாரத்தின் மேல் மேகம் தங்கியிருக்கும்போது அவர்களும் அங்கேயே தங்கியிருப்பார்கள். ஆனால், மேகம் மேலே எழும்பும்போது அங்கிருந்து புறப்படுவார்கள். 23 இப்படி, யெகோவாவின் கட்டளைப்படியே அவர்கள் முகாம்போடுவார்கள், யெகோவாவின் கட்டளைப்படியே புறப்படுவார்கள். மோசே மூலம் யெகோவா கொடுத்த கட்டளையின்படி அவர்கள் செய்தார்கள், யெகோவாவின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
10 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “நீ வெள்ளியைத் தகடாக அடித்து, உனக்காக இரண்டு எக்காளங்களைச் செய்துகொள்.+ ஜனங்களை ஒன்றுகூடி வரச் சொல்வதற்கும், வேறொரு இடத்துக்குப் புறப்படச் சொல்வதற்கும் அவற்றை ஊத வேண்டும். 3 இரண்டு எக்காளங்களையும் சேர்த்து ஊதும்போது, சந்திப்புக் கூடாரத்தின் பிரகார நுழைவாசலில் ஜனங்கள் எல்லாரும் உன் முன்னால் ஒன்றுகூடி வர வேண்டும்.+ 4 ஒன்றை மட்டும் ஊதும்போது, ஆயிரக்கணக்கானோரின் தலைவர்களான கோத்திரத் தலைவர்கள் மட்டும் உன்னைச் சந்திக்க வர வேண்டும்.+
5 எக்காளத்தை ஏற்ற இறக்கத்துடன் ஊதும்போது கிழக்கே முகாம்போட்டிருப்பவர்கள்+ புறப்பட வேண்டும். 6 இரண்டாவது தடவை ஏற்ற இறக்கத்துடன் ஊதும்போது தெற்கே முகாம்போட்டிருப்பவர்கள்+ புறப்பட வேண்டும். இப்படி, ஒவ்வொரு பிரிவையும் புறப்படச் சொல்வதற்கு எக்காளம் ஊத வேண்டும்.
7 ஜனங்களைச் சபையாக ஒன்றுகூட்டும்போது எக்காளங்கள் ஊத வேண்டும்,+ ஆனால் ஏற்ற இறக்கத்துடன் ஊதக் கூடாது. 8 குருமார்களாகச் சேவை செய்யும் ஆரோனின் மகன்கள் எக்காளங்களை ஊத வேண்டும்.+ இது தலைமுறை தலைமுறைக்கும் உங்களுக்குக் கொடுக்கப்படும் சட்டம்.
9 உங்கள் தேசத்தில் உங்களை அடக்கி ஒடுக்குபவனோடு போர் செய்யக் கிளம்பும்போது, எக்காளங்கள் ஊதி போர் முழக்கம் செய்ய வேண்டும்.+ அப்போது, உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை நினைத்துப் பார்த்து, எதிரியிடமிருந்து உங்களைக் காப்பாற்றுவார்.
10 அதோடு சந்தோஷமான காலங்களில்,+ அதாவது பண்டிகை சமயங்களிலும்+ மாதப்பிறப்புகளிலும், எக்காளங்கள் ஊத வேண்டும். நீங்கள் தகன பலிகளையும்+ சமாதான பலிகளையும்+ செலுத்தும்போது எக்காளங்கள் ஊத வேண்டும். அதைக் கேட்டு உங்கள் கடவுள் உங்கள்மேல் கவனத்தைத் திருப்புவார். நான் உங்கள் கடவுளாகிய யெகோவா”+ என்றார்.
11 இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் 20-ஆம் நாளில்,+ சாட்சிப் பெட்டி வைக்கப்பட்டிருக்கிற கூடாரத்தின் மேலிருந்து மேகம் எழும்பியது.+ 12 உடனே, இஸ்ரவேலர்கள் சீனாய் வனாந்தரத்திலிருந்து அவரவர் வரிசைப்படியே புறப்பட்டுப் போனார்கள்.+ பின்பு, பாரான் வனாந்தரத்தில் அந்த மேகம் தங்கியது.+ 13 மோசேக்கு யெகோவா கொடுத்த கட்டளைப்படி+ அவர்கள் செய்த முதல் பயணம் இதுதான்.
14 முதலாவதாக, யூதாவின் முகாமைச் சேர்ந்த மூன்று கோத்திரங்கள் அணி அணியாக* புறப்பட்டன. யூதா கோத்திரத்தின் அணிக்கு அம்மினதாபின் மகன் நகசோன் தலைவராக இருந்தார்.+ 15 இசக்கார் கோத்திரத்தின் அணிக்கு சூவாரின் மகன் நெதனெயேல் தலைவராக இருந்தார்.+ 16 செபுலோன் கோத்திரத்தின் அணிக்கு ஹேலோனின் மகன் எலியாப் தலைவராக இருந்தார்.+
17 வழிபாட்டுக் கூடாரம் பிரிக்கப்பட்ட பின்பு+ கெர்சோனியர்களும்+ மெராரியர்களும்+ அதை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்கள்.
18 அடுத்ததாக, ரூபனின் முகாமைச் சேர்ந்த மூன்று கோத்திரங்கள் அணி அணியாக* புறப்பட்டன. ரூபன் கோத்திரத்தின் அணிக்கு சேதேயூரின் மகன் எலிசூர் தலைவராக இருந்தார்.+ 19 சிமியோன் கோத்திரத்தின் அணிக்கு சூரிஷதாயின் மகன் செலூமியேல் தலைவராக இருந்தார்.+ 20 காத் கோத்திரத்தின் அணிக்கு தேகுவேலின் மகன் எலியாசாப் தலைவராக இருந்தார்.+
21 பின்பு, புனிதப் பொருள்களை கோகாத்தியர்கள் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்.+ அவர்கள் போய்ச் சேருவதற்கு முன்பு வழிபாட்டுக் கூடாரம் அமைக்கப்பட வேண்டியிருந்தது.
22 பின்பு, எப்பிராயீமின் முகாமைச் சேர்ந்த மூன்று கோத்திரங்கள் அணி அணியாக* புறப்பட்டன. எப்பிராயீம் கோத்திரத்தின் அணிக்கு அம்மியூத்தின் மகன் எலிஷாமா தலைவராக இருந்தார்.+ 23 மனாசே கோத்திரத்தின் அணிக்கு பெதாசூரின் மகன் கமாலியேல் தலைவராக இருந்தார்.+ 24 பென்யமீன் கோத்திரத்தின் அணிக்கு கீதெயோனியின் மகன் அபிதான் தலைவராக இருந்தார்.+
25 பின்பு, தாணின் முகாமைச் சேர்ந்த மூன்று கோத்திரங்கள் அணி அணியாக* புறப்பட்டன. அவை மற்ற எல்லா கோத்திரங்களுக்கும் பின்னால் காவலாகப் போயின. தாண் கோத்திரத்தின் அணிக்கு அம்மிஷதாயின் மகன் அகியேசேர் தலைவராக இருந்தார்.+ 26 ஆசேர் கோத்திரத்தின் அணிக்கு ஓகிரானின் மகன் பாகியேல் தலைவராக இருந்தார்.+ 27 நப்தலி கோத்திரத்தின் அணிக்கு ஏனானின் மகன் அகீரா தலைவராக இருந்தார்.+ 28 இஸ்ரவேலர்கள் புறப்பட்டபோதெல்லாம், இந்த வரிசையில்தான் அணி அணியாக* போனார்கள்.+
29 அப்போது மோசே, தன்னுடைய மாமனாரும் மீதியானியருமான ரெகுவேலின்*+ மகன் ஒபாபிடம், “யெகோவா எங்களுக்குக் கொடுப்பதாகச் சொன்ன+ இடத்துக்கு நாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம். நீங்களும் எங்களோடு வாருங்கள்.+ நாங்கள் உங்களை நன்றாகக் கவனித்துக்கொள்வோம். இஸ்ரவேலர்களுக்கு நிறைய ஆசீர்வாதங்கள் தரப்போவதாக யெகோவா வாக்குறுதி கொடுத்திருக்கிறார்”+ என்றார். 30 அதற்கு அவர், “என்னால் உங்களோடு வர முடியாது. நான் என்னுடைய தேசத்துக்குத் திரும்பிப் போய் என்னுடைய சொந்த ஜனங்களோடு வாழ வேண்டும்” என்றார். 31 அப்போது மோசே, “தயவுசெய்து எங்களைவிட்டுப் போகாதீர்கள். இந்த வனாந்தரத்தில் நாங்கள் எங்கெங்கே முகாம்போட வேண்டுமென்று உங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். அதனால் நீங்கள் எங்களுக்கு வழிகாட்டியாக இருங்கள். 32 எங்களோடு வந்தால்,+ யெகோவா எங்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்கிறாரோ அதையெல்லாம் நாங்களும் உங்களுக்குச் செய்வோம்” என்றார்.
33 அவர்கள் யெகோவாவின் மலையிலிருந்து+ புறப்பட்டு மூன்று நாட்களாகப் பயணம் செய்தார்கள். அடுத்ததாக, அவர்கள் தங்க வேண்டிய இடத்தைக் காட்டுவதற்கு யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டி+ அந்த மூன்று நாட்களும் அவர்களுக்கு முன்னால் போனது.+ 34 அவர்கள் முகாமிலிருந்து புறப்பட்டுப் போனபோது, பகலில் யெகோவாவின் மேகம்+ அவர்களுக்கு முன்னால் போனது.
35 ஒப்பந்தப் பெட்டியை இன்னொரு இடத்துக்கு எடுத்துக்கொண்டு போகும்போது, “யெகோவாவே, எழுந்து வந்து+ உங்கள் எதிரிகளைச் சிதறியோட வையுங்கள், உங்களை வெறுப்பவர்களைப் பயந்தோட வையுங்கள்!” என்று மோசே சொல்வார். 36 அந்தப் பெட்டி இறக்கி வைக்கப்படும்போது, “யெகோவாவே, லட்சக்கணக்கில் பெருகியிருக்கிற இஸ்ரவேல்+ ஜனங்களிடம் தங்குங்கள்” என்று சொல்வார்.
11 பின்பு, ஜனங்கள் யெகோவாவின் முன்னால் பயங்கரமாக முணுமுணுக்க ஆரம்பித்தார்கள். அதை யெகோவா கேட்டபோது, அவருக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது. உடனே, யெகோவாவிடமிருந்து நெருப்பு வந்து முகாமின் எல்லையிலிருந்த சிலர்மேல் பற்றியெரிந்தது. 2 அதனால், ஜனங்கள் மோசேயிடம் கதறினார்கள். உடனே அவர் யெகோவாவிடம் மன்றாடினார்,+ அப்போது நெருப்பு அணைந்தது. 3 யெகோவாவிடமிருந்து வந்த நெருப்பு அவர்கள்மேல் பற்றியெரிந்ததால் அந்த இடத்துக்கு தபேரா* என்று பெயர் வைக்கப்பட்டது.+
4 அவர்களோடு இருந்த பலதரப்பட்ட ஜனங்கள்*+ உணவுக்காக ஆலாய்ப் பறந்தார்கள்.*+ இஸ்ரவேலர்கள்கூட மறுபடியும் அழுது புலம்பி, “யார் நமக்கு இறைச்சி தருவார்கள்?+ 5 எகிப்தில் காசே கொடுக்காமல் மீன், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, வெங்காயம், வெள்ளைப்பூண்டு எல்லாம் சாப்பிட்டோமே! அதை நினைத்தாலே வாய் ஊறுகிறது.+ 6 ஆனால், இப்போது ஒன்றுமே கிடைக்காமல் காய்ந்து கிடக்கிறோம். இந்த மன்னாவைத் தவிர வேறொன்றுமே நம் கண்ணில் படுவதில்லை”+ என்றார்கள்.
7 அந்த மன்னா,+ பார்ப்பதற்குக் கொத்துமல்லி விதை போலவும்,+ வெள்ளைப் பிசின்* போலவும் இருந்தது. 8 ஜனங்கள் போய் அதை எடுத்துக்கொண்டு வந்து, திரிகைக் கல்லில் அரைத்தார்கள் அல்லது உரலில் இடித்தார்கள். பின்பு, பானைகளில் வேக வைத்தார்கள் அல்லது வட்ட ரொட்டிகளாகச் சுட்டார்கள்.+ அதன் ருசி, எண்ணெய் கலந்து சுடப்பட்ட இனிப்பான அப்பத்தின் ருசி போல இருந்தது. 9 ராத்திரி நேரம் முகாமில் பனி விழுந்தபோது அதன்மேல் மன்னாவும் விழுந்தது.+
10 ஜனங்கள் ஒவ்வொருவரும், குடும்பம் குடும்பமாக, அவரவருடைய கூடாரத்தின் வாசலில் அழுது புலம்புவதை மோசே கேட்டார். அதனால், அவர்கள்மேல் யெகோவா மிகவும் கோபப்பட்டார்,+ மோசேயும் எரிச்சல் அடைந்தார். 11 பின்பு மோசே யெகோவாவிடம், “உங்கள் ஊழியனாகிய என்னை ஏன் கஷ்டப்படுத்துகிறீர்கள்? உங்களுக்கு என்மேல் கருணையே இல்லையா? இந்த எல்லா ஜனங்களையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை என்மேல் சுமத்திவிட்டீர்களே.+ 12 இவர்களுடைய முன்னோர்களுக்கு நீங்கள் கொடுப்பதாகச் சொன்ன தேசத்துக்கு+ இவர்களைக் கூட்டிக்கொண்டு போகச் சொன்னீர்களே. இந்த ஜனங்களையெல்லாம் நானா வயிற்றில் சுமந்தேன்? நானா இவர்களைப் பெற்றெடுத்தேன்? பின்பு ஏன் என்னிடம், ‘பால்குடிக்கும் குழந்தையைப் பணியாளன் சுமப்பதுபோல் நீ இவர்களை நெஞ்சில் சுமந்துகொண்டு போ’ என்று சொன்னீர்கள்? 13 இவர்கள் எல்லாருக்கும் நான் எங்கிருந்து இறைச்சியைக் கொண்டுவந்து கொடுப்பேன்? ‘எங்களுக்கு இறைச்சி வேண்டும்!’ என்று என்னிடம் புலம்பிக்கொண்டே இருக்கிறார்களே! 14 இந்த எல்லா ஜனங்களையும் என்னால் தனியாகச் சமாளிக்க முடியவில்லை. எனக்குப் போதும் போதுமென்று ஆகிவிட்டது!+ 15 இப்படியே என்னைக் கஷ்டப்படுத்துவதாக இருந்தால், தயவுசெய்து இப்போதே என்னைக் கொன்றுவிடுங்கள்.+ என்மேல் உங்களுக்குப் பிரியம் இருந்தால், இனியும் என்னை வேதனைப்படுத்தாதீர்கள்” என்றார்.
16 அதற்கு யெகோவா மோசேயிடம், “இஸ்ரவேலில் உனக்குத் தெரிந்த பெரியோர்களிலும்* அதிகாரிகளிலும்+ 70 பேரை சந்திப்புக் கூடாரத்துக்குக் கூட்டிக்கொண்டு வா. அங்கே அவர்களை உன்னோடு நிறுத்து. 17 அப்போது, நான் இறங்கி வந்து+ உன்னோடு பேசுவேன்.+ நான் உனக்குக் கொடுத்திருக்கிற சக்தியில்+ கொஞ்சத்தை எடுத்து அவர்கள்மேல் வைப்பேன். ஜனங்களைக் கவனித்துக்கொள்ள அவர்கள் உனக்கு உதவியாக இருப்பார்கள். ஜனங்கள் எல்லாரையும் இனி நீ தனியாகச் சமாளிக்க வேண்டியதில்லை.+ 18 நீ அவர்களிடம், ‘நாளைக்காக உங்களைப் புனிதப்படுத்துங்கள்.+ நாளைக்கு நீங்கள் நிச்சயம் இறைச்சி சாப்பிடுவீர்கள். “யார் எங்களுக்கு இறைச்சி தருவார்கள்? எகிப்திலே நாங்கள் நன்றாக இருந்தோமே”+ என்றெல்லாம் நீங்கள் அழுது புலம்பியதை யெகோவா கேட்டார்.+ யெகோவா உங்களுக்குக் கண்டிப்பாக இறைச்சி தருவார், அதை நீங்கள் சாப்பிடுவீர்கள்.+ 19 ஒரு நாளோ, இரண்டு நாளோ, ஐந்து நாளோ, பத்து நாளோ, இருபது நாளோ அல்ல, 20 ஒரு மாதம் முழுவதும் சாப்பிடுவீர்கள். அது உங்கள் மூக்கு வழியாகப் பிதுங்கிக்கொண்டு வந்து, உங்களுக்கே அருவருப்பாக ஆகும்வரை அதைச் சாப்பிடுவீர்கள்.+ உங்கள் நடுவிலிருக்கும் யெகோவாவை நீங்கள் ஒதுக்கித்தள்ளிவிட்டு, “ஏன்தான் எகிப்திலிருந்து வந்தோமோ?” என்று சொல்லி அவர் முன்னால் புலம்பினீர்களே’+ என்று சொல்ல வேண்டும்” என்றார்.
21 பின்பு மோசே கடவுளிடம், “என்னோடு இருக்கிற வீரர்கள் மட்டுமே 6,00,000 பேர்.+ அப்படியிருக்கும்போது, ‘ஒரு மாதம் முழுவதும் சாப்பிடுவதற்குத் தேவையான இறைச்சியை நான் அவர்களுக்குத் தருவேன்’ என்று சொல்கிறீர்களே. 22 மந்தைகளிலுள்ள எல்லா ஆடுமாடுகளையும் வெட்டினால்கூட அவர்களுக்குப் போதாதே! கடலிலுள்ள எல்லா மீன்களையும் பிடித்து வந்தால்கூட போதாதே!” என்றார்.
23 அதற்கு யெகோவா மோசேயிடம், “யெகோவாவினால் இதைச் செய்ய முடியாது* என்றா நினைக்கிறாய்?+ நான் சொன்னது நடக்குமா இல்லையா என்பதை நீயே இப்போது பார்ப்பாய்” என்றார்.
24 அதன்பின் மோசே அங்கிருந்து போய் யெகோவா சொன்னதை ஜனங்களிடம் சொன்னார். பெரியோர்களில் 70 பேரைக் கூப்பிட்டு, வழிபாட்டுக் கூடாரத்தைச் சுற்றிலும் நிறுத்தினார்.+ 25 பின்பு, யெகோவா மேகத்தில் இறங்கிவந்து+ அவரிடம் பேசினார்.+ அவருக்குக் கொடுத்திருந்த சக்தியில் கொஞ்சத்தை எடுத்து+ அந்தப் பெரியோர்கள் 70 பேர்மேலும் வைத்தார். அந்தச் சக்தி கிடைத்ததும் அவர்கள் தீர்க்கதரிசிகளைப் போல நடந்துகொள்ள* ஆரம்பித்தார்கள்.+ ஆனால், அதன்பின் அவர்கள் அப்படிச் செய்யவில்லை.
26 பெரியோர்களில் இரண்டு பேர் முகாமிலேயே இருந்துவிட்டார்கள். அவர்களில் ஒருவர் பெயர் எல்தாத், மற்றொருவர் பெயர் மேதாத். அவர்களுடைய பெயர்கள் பட்டியலில் எழுதப்பட்டிருந்தும் அவர்கள் வழிபாட்டுக் கூடாரத்துக்குப் போகவில்லை. அவர்கள்மேலும் கடவுளுடைய சக்தி இறங்கியதால் முகாமிலேயே தீர்க்கதரிசிகளைப் போல நடந்துகொள்ள ஆரம்பித்தார்கள். 27 பின்பு, ஓர் இளைஞன் மோசேயிடம் ஓடிவந்து, “முகாமில் எல்தாதும் மேதாதும் தீர்க்கதரிசிகளைப் போல நடந்துகொள்கிறார்கள்” என்று சொன்னான். 28 இளவயதிலிருந்தே மோசேயின் உதவியாளராக இருந்த நூனின் மகனாகிய யோசுவா+ அவரிடம், “மோசே அவர்களே, என் எஜமானே! அவர்களைத் தடுத்து நிறுத்துங்கள்!”+ என்றார். 29 ஆனால் மோசே, “இப்போது என்னுடைய மதிப்புக் குறைந்துவிடும் என்று பயப்படுகிறாயா? யெகோவாவின் ஜனங்கள் எல்லாருமே யெகோவாவின் சக்தியைப் பெற்று தீர்க்கதரிசிகளாய் ஆக வேண்டும் என்றுதான் நான் ஆசைப்படுகிறேன்” என்றார். 30 பிற்பாடு, மோசே இஸ்ரவேலின் பெரியோர்களோடு முகாமுக்குத் திரும்பி வந்தார்.
31 பின்பு, யெகோவா பெருங்காற்றை வீச வைத்தார். அந்தக் காற்று கடலிலிருந்து காடைகளை அடித்துக்கொண்டு வந்தது.+ அவை ஒருநாள் பயணத் தூரத்தின் அளவுக்கு முகாமின் எல்லா பக்கங்களிலும் வந்து, தரைக்கு மேலே சுமார் இரண்டு முழ* உயரத்துக்குக் குவிந்தன. 32 அதனால், ஜனங்கள் அன்று ராத்திரி பகலாகவும், அடுத்த நாள் முழுவதும் காடைகளைச் சேகரித்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் சேகரித்த காடைகள் 10 ஹோமர் அளவுக்கும்* அதிகமாக இருந்தது. பின்பு, முகாம் முழுக்க அவற்றைப் பரப்பி வைத்தார்கள். 33 ஆனால், அவர்கள் அந்த இறைச்சியைத் தின்றுதீர்ப்பதற்கு முன்பே, அதை மென்றுகொண்டிருக்கும்போதே, யெகோவாவின் கோபம் அவர்கள்மேல் பற்றியெரிந்தது. அவர்களில் ஏராளமானவர்களை யெகோவா கொன்று குவித்தார்.+
34 உணவுக்காக ஆலாய்ப் பறந்தவர்கள் அங்கே அடக்கம் செய்யப்பட்டார்கள்.+ அதனால், அந்த இடத்துக்கு கிப்ரோத்-அத்தாவா*+ என்று பெயர் வைக்கப்பட்டது. 35 பின்பு, ஜனங்கள் அங்கிருந்து புறப்பட்டு ஆஸ்ரோத்துக்குப் போய் அங்கே தங்கினார்கள்.+
12 கூஷ் தேசத்துப் பெண்ணை மோசே கல்யாணம் செய்திருந்ததால்+ மிரியாமும் ஆரோனும் அவருக்கு விரோதமாக முணுமுணுத்தார்கள். 2 “மோசே மூலம்தான் யெகோவா பேசினாரா? ஏன், எங்கள் மூலம் பேசவில்லையா?”+ என்றும் முணுமுணுத்தார்கள். இதையெல்லாம் யெகோவா கேட்டுக்கொண்டிருந்தார்.+ 3 பூமியிலுள்ள எல்லா மனிதர்களையும்விட மோசே மிகவும் தாழ்மையானவராக* இருந்தார்.+
4 உடனே யெகோவா மோசேயையும் ஆரோனையும் மிரியாமையும் பார்த்து, “மூன்று பேரும் சந்திப்புக் கூடாரத்துக்கு வாருங்கள்” என்றார். மூன்று பேரும் புறப்பட்டுப் போனார்கள். 5 பின்பு, யெகோவா மேகத் தூணில் இறங்கி வந்து+ கூடார வாசலில் நின்று, ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டார். அவர்கள் இரண்டு பேரும் முன்னால் போனார்கள். 6 அப்போது யெகோவா, “தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் நடுவில் என் தீர்க்கதரிசி இருந்தால், தரிசனத்தில் என்னைப் பற்றி அவருக்கு வெளிப்படுத்துவேன்,+ கனவில் அவனோடு பேசுவேன்.+ 7 ஆனால், என் ஊழியனாகிய மோசேயின் விஷயத்தில் அப்படி இல்லை! என் ஜனங்கள் எல்லாரையும் அவனிடம் ஒப்படைத்திருக்கிறேன்.*+ 8 அவனிடம் நான் நேருக்கு நேராகப் பேசுகிறேன்.+ மர்மமாகப் பேசாமல் தெளிவாகப் பேசுகிறேன். யெகோவாவாகிய நான் அவன் முன்னால் தோன்றுகிறேன். அப்படியிருக்கும்போது, என்னுடைய ஊழியனாகிய மோசேக்கு விரோதமாகப் பேச உங்களுக்கு எப்படித் துணிச்சல் வந்தது?” என்றார்.
9 அப்போது, அவர்கள்மேல் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்தது. அவர் அவர்களைவிட்டுப் போய்விட்டார். 10 கூடாரத்தைவிட்டு மேகம் விலகிப்போனது. உடனே மிரியாமைத் தொழுநோய் தாக்கியது, அவளுடைய உடல் வெண்மையான பனி போல மாறியது.+ அவளுக்குத் தொழுநோய் பிடித்திருந்ததை+ ஆரோன் பார்த்தார். 11 உடனே அவர் மோசேயிடம், “என் எஜமானே, கெஞ்சிக் கேட்கிறேன்! எங்களுடைய பாவத்துக்காகத் தயவுசெய்து எங்களைத் தண்டிக்க வேண்டாம்! நாங்கள் முட்டாள்தனமாக நடந்துகொண்டோம்! 12 தாயின் வயிற்றிலேயே செத்து, பாதி அழுகிப்போய்ப் பிறக்கிற குழந்தையைப் போல இவள் ஆகிவிட்டாளே! தயவுசெய்து இவளை இப்படியே விட்டுவிட வேண்டாம்!” என்றார். 13 அப்போது யெகோவாவிடம் மோசே கெஞ்சிக் கதறி, “கடவுளே, தயவுசெய்து என் அக்காவைக் குணப்படுத்துங்கள்! தயவுசெய்து குணப்படுத்துங்கள்!” என்றார்.+
14 அப்போது யெகோவா மோசேயிடம், “இவளுடைய அப்பா இவள் முகத்தில் காறித் துப்பினால், இவள் ஏழு நாட்கள் வெட்கப்பட வேண்டாமா? அதுபோலவே, ஏழு நாட்கள் இவள் முகாமுக்கு வெளியே ஒதுக்கி வைக்கப்பட வேண்டும்,+ அதன்பின் இவளை உள்ளே கூட்டிக்கொண்டு வரலாம்” என்றார். 15 அதனால், மிரியாம் முகாமுக்கு வெளியே ஏழு நாட்கள் ஒதுக்கி வைக்கப்பட்டாள்.+ மிரியாமைத் திரும்பவும் முகாமுக்குள் கூட்டிக்கொண்டு வரும்வரை ஜனங்கள் புறப்படவில்லை. 16 அதன்பின், ஜனங்கள் எல்லாரும் ஆஸ்ரோத்திலிருந்து+ புறப்பட்டு பாரான் வனாந்தரத்துக்குப் போய் முகாம்போட்டார்கள்.+
13 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “இஸ்ரவேலர்களுக்கு நான் தரப்போகிற கானான் தேசத்தை உளவு பார்க்க சில ஆட்களை அனுப்பு. ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு தலைவரை+ அனுப்பு”+ என்றார்.
3 யெகோவாவின் கட்டளைப்படியே, மோசே அவர்களை பாரான் வனாந்தரத்திலிருந்து அனுப்பினார்.+ அந்த ஆட்கள் எல்லாரும் இஸ்ரவேலர்களின் தலைவர்களாக இருந்தார்கள். 4 அவர்களுடைய பெயர்கள் இவைதான்: ரூபன் கோத்திரத்திலிருந்து சக்கூரின் மகன் சம்முவா. 5 சிமியோன் கோத்திரத்திலிருந்து ஓரியின் மகன் சாப்பாத். 6 யூதா கோத்திரத்திலிருந்து எப்புன்னேயின் மகன் காலேப்.+ 7 இசக்கார் கோத்திரத்திலிருந்து யோசேப்பின் மகன் ஈகால். 8 எப்பிராயீம் கோத்திரத்திலிருந்து நூனின் மகன் ஓசெயா.+ 9 பென்யமீன் கோத்திரத்திலிருந்து ரப்பூவின் மகன் பல்த்தி. 10 செபுலோன் கோத்திரத்திலிருந்து சோதியின் மகன் காதியேல். 11 யோசேப்பு கோத்திரத்தைச்+ சேர்ந்த மனாசே கோத்திரத்திலிருந்து+ சூசியின் மகன் கேதி. 12 தாண் கோத்திரத்திலிருந்து கெமல்லியின் மகன் அம்மியேல். 13 ஆசேர் கோத்திரத்திலிருந்து மிகாவேலின் மகன் சேத்தூர். 14 நப்தலி கோத்திரத்திலிருந்து ஒப்பேசியின் மகன் நாகபி. 15 காத் கோத்திரத்திலிருந்து மாகியின் மகன் கூவேல். 16 இவர்கள்தான் கானான் தேசத்தை உளவு பார்ப்பதற்காக மோசே அனுப்பி வைத்த ஆட்கள். நூனின் மகனாகிய ஓசெயாவின் பெயரை யோசுவா*+ என்று மோசே மாற்றினார்.
17 கானான் தேசத்தை உளவு பார்ப்பதற்காக மோசே அவர்களை அனுப்பியபோது அவர்களிடம், “நீங்கள் நெகேபுக்குப் போங்கள். அதன் பின்பு மலைப்பகுதிக்குப் போங்கள்.+ 18 அந்தத் தேசம் எப்படிப்பட்ட தேசம்,+ அங்குள்ள ஜனங்கள் பலசாலிகளா பலம் இல்லாதவர்களா, கொஞ்சம் பேரா நிறைய பேரா என்று பாருங்கள். 19 அது நல்ல தேசமா மோசமான தேசமா, அவர்கள் குடியிருக்கும் நகரங்கள் மதில் உள்ளவையா, மதில் இல்லாதவையா என்றும் பாருங்கள். 20 அது செழிப்பான நிலமா, தரிசு நிலமா,+ அங்கே மரங்கள் இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் பாருங்கள். நீங்கள் பயப்படாமல்,+ அங்கு விளைகிறவற்றில் கொஞ்சத்தை எடுத்துக்கொண்டு வாருங்கள்” என்று சொன்னார். முதல் திராட்சைகள் பழுக்கும் காலமாக அது இருந்தது.+
21 மோசே சொன்னபடி, அவர்கள் போய் சீன் வனாந்தரத்திலிருந்து+ லெபோ-காமாத்*+ பக்கத்திலுள்ள ரேகோப்+ வரையிலும் அந்தத் தேசத்தை உளவு பார்த்தார்கள். 22 அவர்கள் நெகேபுக்குப் போய் எப்ரோன் நகரத்துக்கு+ வந்துசேர்ந்தார்கள். அங்கே ஏனாக்கியர்களான+ அகீமானும் சேசாயும் தல்மாயும்+ வாழ்ந்துவந்தார்கள். அந்த எப்ரோன் நகரம், எகிப்திலுள்ள சோவான் நகரம் கட்டப்படுவதற்கு ஏழு வருஷங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. 23 அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கை*+ அடைந்து, அங்கே ஒரு திராட்சைக் கொடியிலிருந்த ஒரு குலையை அறுத்தார்கள். அதை இரண்டு பேர் ஒரு கம்பத்தில் கட்டித் தூக்கிக்கொண்டு வர வேண்டியிருந்தது. சில மாதுளம்பழங்களையும் அத்திப்பழங்களையும்கூட அவர்கள் எடுத்துக்கொண்டார்கள்.+ 24 அந்த இஸ்ரவேலர்கள் அங்கே திராட்சைக் குலையை அறுத்ததால் அந்த இடத்துக்கு எஸ்கோல்* பள்ளத்தாக்கு+ என்று பெயர் வைக்கப்பட்டது.
25 இப்படி, அவர்கள் அந்தத் தேசத்தை 40 நாட்கள்+ உளவு பார்த்துவிட்டு, 26 மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் இருந்த இடத்துக்கு, அதாவது பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு,+ திரும்பி வந்தார்கள். அந்தத் தேசத்தில் பார்த்ததையெல்லாம் ஜனங்களுக்குச் சொன்னார்கள். அங்கு விளைந்த பழங்களையும் காட்டினார்கள். 27 அவர்கள் மோசேயிடம், “நீங்கள் அனுப்பிய தேசத்துக்கு நாங்கள் போனோம். அது நிஜமாகவே பாலும் தேனும் ஓடுகிற தேசம்தான்.+ இதெல்லாம் அங்கு விளைந்ததுதான்.+ 28 ஆனால், அங்கே வாழ்கிற ஜனங்கள் பலசாலிகள். அவர்களுடைய நகரங்கள் மதில் சூழ்ந்த மிகப் பெரிய நகரங்கள். அங்கே ஏனாக்கியர்களையும் பார்த்தோம்.+ 29 நெகேபில்+ அமலேக்கியர்கள்+ குடியிருக்கிறார்கள். மலைப்பகுதியில் ஏத்தியர்களும் எபூசியர்களும்+ எமோரியர்களும்+ வாழ்கிறார்கள். கடல் பக்கத்திலும்+ யோர்தானை ஒட்டியும் கானானியர்கள்+ வாழ்கிறார்கள்” என்றார்கள்.
30 அப்போது, காலேப் மோசேக்கு முன்னால் நின்ற ஜனங்களிடம், “நாம் உடனே அங்கு போகலாம். அதை நிச்சயம் கைப்பற்றிவிடுவோம், சுலபமாக ஜெயித்துவிடுவோம்”+ என்று சொல்லி அவர்களை அமைதிப்படுத்த முயற்சி செய்தார். 31 ஆனால் அவருடன் போயிருந்த ஆட்கள், “அங்கே போக வேண்டாம், அவர்கள் நம்மைவிட பலசாலிகள், நம்மால் அவர்களை எதிர்க்க முடியாது” என்றார்கள்.+ 32 அதுமட்டுமல்ல, அந்தத் தேசத்தைப் பற்றி இப்படி மோசமாகப் பேசிக்கொண்டே இருந்தார்கள்:+ “நாங்கள் உளவு பார்த்த தேசம் அதன் குடிமக்களையே கொன்றுவிடுகிற தேசம். அங்குள்ள ஜனங்களுடைய உருவத்தைப் பார்த்தாலே பயங்கரமாக இருக்கிறது.+ 33 ராட்சதர்களின் வம்சத்தில் வந்த ஏனாக்கியர்களை அங்கே பார்த்தோம்.+ அந்த ராட்சதர்களுக்குப் பக்கத்தில் நாங்கள் வெறும் வெட்டுக்கிளிகளைப் போலத் தெரிந்தோம். அவர்களும் எங்களை அப்படித்தான் பார்த்தார்கள்.”
14 அதைக் கேட்ட ஜனங்கள் எல்லாரும் அந்த ராத்திரி முழுவதும் சத்தமாக அழுது புலம்பிக்கொண்டே இருந்தார்கள்.+ 2 அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முணுமுணுத்தார்கள்.+ “நாம் எகிப்திலேயே செத்துப்போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும்! இந்த வனாந்தரத்திலேயே செத்துப்போனால்கூட பரவாயில்லை! 3 யெகோவா எதற்காக நம்மை அந்தத் தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு போய் எதிரிகளின் வாளுக்குப் பலியாக்கப் பார்க்கிறார்?+ நம் மனைவிமக்களை அந்த ஜனங்கள் பிடித்து வைத்துக்கொள்வார்களே.+ எகிப்துக்குத் திரும்பிப் போவதுதான் நல்லது” என்றெல்லாம் முணுமுணுத்தார்கள்.+ 4 “நமக்கு ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு எகிப்துக்கே திரும்பிப் போய்விடுவோம்” என்றுகூட பேசிக்கொண்டார்கள்.+
5 இதைக் கேட்டபோது மோசேயும் ஆரோனும் சாஷ்டாங்கமாக விழுந்தார்கள். இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். 6 அந்தத் தேசத்தை உளவு பார்த்துவிட்டு வந்த நூனின் மகனாகிய யோசுவாவும்+ எப்புன்னேயின் மகனாகிய காலேபும்+ தங்களுடைய உடையைக் கிழித்துக்கொண்டு, 7 இஸ்ரவேலர்கள் எல்லாரிடமும், “நாங்கள் உளவு பார்த்த தேசம் ரொம்ப ரொம்ப நல்ல தேசம்.+ 8 யெகோவாவுக்கு நம்மேல் பிரியம் இருந்தால், அந்தத் தேசத்துக்கு நிச்சயம் நம்மைக் கூட்டிக்கொண்டு போவார், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குத் தருவார்.+ 9 யெகோவாவின் பேச்சை மாத்திரம் மீறிவிடாதீர்கள். அங்குள்ள ஜனங்களை நினைத்துப் பயப்படாதீர்கள்,+ அவர்களை நாம் ஒழித்துக்கட்டுவோம். அவர்களைப் பாதுகாக்க யாரும் இல்லை, ஆனால் நம்மோடு யெகோவா இருக்கிறார்.+ அவர்களை நினைத்துப் பயப்படாதீர்கள்” என்று சொன்னார்கள்.
10 அதைக் கேட்ட இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும், அந்த இரண்டு பேர்மேலும் கல்லெறிய வேண்டுமென்று பேசிக்கொண்டார்கள்.+ அப்போது, சந்திப்புக் கூடாரத்தின் மேல் யெகோவாவின் மகிமை தோன்றியதை அந்த ஜனங்கள் பார்த்தார்கள்.+
11 பின்பு யெகோவா மோசேயிடம், “இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த ஜனங்கள் எனக்கு மரியாதை காட்டாமல் இருப்பார்கள்?+ இவர்கள் நடுவில் நான் பல அற்புதங்களைச் செய்திருந்தும் எத்தனை நாளைக்குத்தான் என்மேல் விசுவாசம் வைக்காமல் இருப்பார்கள்?+ 12 நான் இவர்களைக் கொள்ளைநோயால் தாக்கி, அழிக்கப்போகிறேன். ஆனால் உன்னை, இவர்களைவிட பெரிய தேசமாகவும் பலமான தேசமாகவும் ஆக்கப்போகிறேன்”+ என்றார்.
13 ஆனால் மோசே யெகோவாவிடம், “இவர்களை உங்களுடைய வல்லமையால் எகிப்தியர்களிடமிருந்து விடுவித்துக்கொண்டு வந்தீர்களே. இப்போது இவர்களை நீங்கள் அழித்துவிட்டால் அந்த எகிப்தியர்கள் அதைக் கேள்விப்பட மாட்டார்களா?+ 14 அதைப் பற்றி கானான் தேசத்து ஜனங்களுக்குச் சொல்ல மாட்டார்களா? யெகோவாவாகிய நீங்கள் இஸ்ரவேலர்களோடு இருக்கிறீர்கள், இவர்கள் முன்னால் நேருக்கு நேராகத் தோன்றியிருக்கிறீர்கள்+ என்பதையெல்லாம் அந்தத் தேசத்து ஜனங்களும் கேள்விப்பட்டிருக்கிறார்களே.+ அதுமட்டுமல்ல, நீங்கள் யெகோவா, உங்களுடைய மேகம் இவர்களுக்கு மேலே இருக்கிறது, பகலில் மேகத் தூணிலும் ராத்திரியில் நெருப்புத் தூணிலும் இவர்களுக்கு முன்னால் போகிறீர்கள்+ என்பதையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறார்களே. 15 அப்படியிருக்கும்போது, இஸ்ரவேல் ஜனங்களை நீங்கள் ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டால், உங்களுடைய பெயரையும் புகழையும் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிற தேசத்தாரெல்லாம் என்ன சொல்வார்கள்? 16 ‘இந்த ஜனங்களுக்குக் கொடுப்பதாகச் சொன்ன தேசத்துக்கு யெகோவாவினால் இவர்களைக் கூட்டிக்கொண்டு போக முடியவில்லை, அதனால்தான் இவர்களை வனாந்தரத்தில் அழித்துவிட்டார்’ என்று சொல்ல மாட்டார்களா?+ 17 யெகோவாவே, நீங்கள் எவ்வளவு மகத்தானவர் என்று தயவுசெய்து காட்டுங்கள். ஏனென்றால், 18 ‘யெகோவா சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்,+ குற்றத்தையும் மீறுதலையும் மன்னிப்பவர். ஆனால், குற்றவாளியை அவர் ஒருபோதும் தண்டிக்காமல் விட மாட்டார். தகப்பன்கள் செய்யும் குற்றத்துக்காக மகன்களையும் மூன்றாம் நான்காம் தலைமுறைகளைச் சேர்ந்தவர்களையும் தண்டிப்பார்’ என்று நீங்கள் வாக்குறுதி கொடுத்திருக்கிறீர்கள்.+ 19 தயவுசெய்து உங்களுடைய அளவுகடந்த அன்பை* காட்டி இந்த ஜனங்களுடைய பாவத்தை மன்னியுங்கள். எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்ததிலிருந்து மன்னித்தது போலவே இப்போதும் மன்னியுங்கள்” என்றார்.+
20 அதற்கு யெகோவா, “நீ கேட்டுக்கொண்டபடியே நான் இவர்களை மன்னிக்கிறேன்.+ 21 ஆனால், என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* இந்தப் பூமியெல்லாம் யெகோவாவின் மகிமையால் நிறைந்திருக்கும்.+ 22 இவர்கள் என் மகிமையைப் பார்த்திருந்தும், எகிப்திலும் வனாந்தரத்திலும் நான் செய்த அற்புதங்களைப் பார்த்திருந்தும்,+ பத்துத் தடவை என்னைச் சோதித்துப் பார்த்தார்கள்,+ என் பேச்சைக் காதில் வாங்கவே இல்லை.+ 23 அதனால், இவர்களுடைய முன்னோர்களுக்கு நான் வாக்குக் கொடுத்த தேசத்தை இவர்களில் யாருமே பார்க்க மாட்டார்கள். எனக்கு மரியாதை காட்டாத யாரும் அதைப் பார்க்க மாட்டார்கள்.+ 24 ஆனால், என் ஊழியனாகிய காலேப்+ இவர்களைப் போல் நடந்துகொள்ளாமல், முழு இதயத்தோடு எனக்குக் கீழ்ப்படிந்துவருகிறான். அதனால், அவன் உளவு பார்த்த தேசத்துக்கு அவனை நான் நிச்சயம் கூட்டிக்கொண்டு போவேன், அவனுடைய வம்சத்தார் அதைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.+ 25 அமலேக்கியர்களும் கானானியர்களும் பள்ளத்தாக்கிலே குடியிருப்பதால்,+ நாளைக்கு நீங்கள் இங்கிருந்து திரும்பி, செங்கடலுக்குப் போகும் வழியாக வனாந்தரத்துக்குப் புறப்பட்டுப் போக வேண்டும்”+ என்றார்.
26 யெகோவா மோசேயையும் ஆரோனையும் பார்த்து, 27 “இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்தப் பொல்லாத ஜனங்கள் எனக்கு விரோதமாக முணுமுணுத்துக்கொண்டே இருப்பார்கள்?+ இவர்கள் என்ன சொல்லி முணுமுணுக்கிறார்கள் என்பதை நான் கேட்டேன்.+ 28 நீ இவர்களிடம், ‘யெகோவா சொல்வது என்னவென்றால், “என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* என் காதுபட நீங்கள் பேசியபடியே உங்களுக்குச் செய்வேன்.+ 29 எனக்கு விரோதமாக முணுமுணுத்த நீங்கள் எல்லாரும் இந்த வனாந்தரத்திலேயே செத்துப்போவீர்கள்.+ பெயர்ப்பதிவு செய்யப்பட்ட 20 வயதும் அதற்கு அதிகமான வயதும் உள்ள நீங்கள் எல்லாரும் கண்டிப்பாகச் சாவீர்கள்.+ 30 நான் உங்களுக்குத் தருவதாக வாக்குக் கொடுத்த தேசத்துக்கு+ எப்புன்னேயின் மகனாகிய காலேபையும் நூனின் மகனாகிய யோசுவாவையும் தவிர வேறு யாரும் போக மாட்டீர்கள்.+
31 உங்கள் பிள்ளைகளை எதிரிகள் பிடித்து வைத்துக்கொள்வார்கள் என்று சொன்னீர்களே, அதே பிள்ளைகளை நான் அந்தத் தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு போவேன்.+ நீங்கள் ஒதுக்கித்தள்ளிய தேசத்தை+ அவர்கள் அனுபவிப்பார்கள். 32 ஆனால், நீங்கள் இந்த வனாந்தரத்தில் சாவீர்கள். 33 உங்கள் மகன்கள் தங்களுடைய மந்தைகளை 40 வருஷங்களுக்கு+ இந்த வனாந்தரத்தில் மேய்க்க வேண்டியிருக்கும். நீங்கள் செய்த துரோகங்களுக்காக அவர்கள் தண்டனையை அனுபவிப்பார்கள். நீங்கள் எல்லாருமே இந்த வனாந்தரத்தில் சாகும்வரை அவர்கள் தண்டனையை அனுபவிப்பார்கள்.+ 34 நீங்கள் அந்தத் தேசத்தை உளவு பார்த்த 40 நாட்களின்படியே,+ ஒரு நாளுக்கு ஒரு வருஷம் என்ற கணக்கில் 40 வருஷங்கள்+ உங்கள் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படுவீர்கள். என்னை எதிர்த்தால் உங்களுடைய கதி என்னவாகும் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
35 யெகோவாவாகிய நான் இதைச் சொல்லியிருக்கிறேன். எனக்கு எதிராக ஒன்றுகூடிய இந்தப் பொல்லாத ஜனங்களை நான் தண்டிப்பேன். இந்த வனாந்தரத்தில் அவர்களுக்கு முடிவு வரும், இங்கேயே அவர்கள் செத்துப்போவார்கள்.+ 36 உளவு பார்ப்பதற்காக மோசே அனுப்பிய ஆட்கள், திரும்பி வந்து அந்தத் தேசத்தைப் பற்றி மோசமாகப் பேசியதாலும், அவருக்கு எதிராக முணுமுணுக்க ஜனங்களைத் தூண்டியதாலும்+ தண்டிக்கப்படுவார்கள். 37 அந்தத் தேசத்தைப் பற்றி மோசமாகப் பேசிய ஆட்கள் தண்டிக்கப்பட்டு, யெகோவாவின் முன்னால் செத்துப்போவார்கள்.+ 38 ஆனால், அந்தத் தேசத்தை உளவு பார்க்கப் போனவர்களில் நூனின் மகனாகிய யோசுவாவும் எப்புன்னேயின் மகனாகிய காலேபும் நிச்சயம் உயிர்பிழைப்பார்கள்”’”+ என்றார்.
39 மோசே இவற்றை இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாருக்கும் சொன்னபோது, அவர்கள் மிகவும் அழுது புலம்ப ஆரம்பித்தார்கள். 40 பின்பு விடியற்காலையில் எழுந்து, “நாங்கள் பாவம் செய்துவிட்டோம், யெகோவா சொல்லியிருந்த இடத்துக்குப் போக இப்போது தயாராக இருக்கிறோம்” என்று சொல்லிக்கொண்டு உயரமான மலைப்பகுதிக்குப் போகப் பார்த்தார்கள்.+ 41 ஆனால் மோசே அவர்களிடம், “நீங்கள் ஏன் யெகோவாவின் கட்டளையை மீறி நடக்கிறீர்கள்? நீங்கள் நினைப்பது நிச்சயம் நடக்காது. 42 அதனால் போகாதீர்கள், யெகோவா உங்களோடு இல்லை, மீறிப் போனால் எதிரிகள் உங்களை வீழ்த்திவிடுவார்கள்.+ 43 அங்கே அமலேக்கியர்களும் கானானியர்களும் இருக்கிறார்கள்.+ நீங்கள் வாளால் கொல்லப்படுவீர்கள். நீங்கள் யெகோவாவிடமிருந்து விலகிவிட்டதால் யெகோவா உங்களோடு இருக்க மாட்டார்”+ என்றார்.
44 அவர்கள் மோசேயின் பேச்சைக் கேட்காமல் அகங்காரத்தோடு* அந்த மலைப்பகுதிக்குப் போனார்கள்.+ ஆனால், யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியும் மோசேயும் முகாமிலிருந்து போகவில்லை.+ 45 அப்போது அந்த மலைப்பகுதியில் குடியிருந்த அமலேக்கியர்களும் கானானியர்களும் இறங்கிவந்து அவர்களைத் தாக்கி, ஓர்மாவரை துரத்திக்கொண்டு போனார்கள்.+
15 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நான் கொடுக்கப்போகிற தேசத்துக்கு+ நீங்கள் போய்ச் சேர்ந்த பின்பு, 3 ஒரு மாட்டையோ ஆட்டையோ யெகோவாவுக்குப் பிடித்த வாசனை பலியாக+ அவருடைய பலிபீடத்தில் செலுத்த நீங்கள் விரும்பலாம். அதைத் தகன பலியாகவோ,+ விசேஷமாக நேர்ந்துகொண்டதை நிறைவேற்றும் பலியாகவோ, நீங்களாகவே விருப்பப்பட்டு செலுத்தும் பலியாகவோ,+ பண்டிகைகளுக்கான பலியாகவோ+ யெகோவாவுக்குச் செலுத்தினால், 4 அதற்கான உணவுக் காணிக்கையாக, ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* நைசான மாவில்+ ஒரு லிட்டர்* எண்ணெய் கலந்து யெகோவாவுக்குக் கொண்டுவர வேண்டும். 5 அந்தத் தகன பலியுடன் அல்லது ஒவ்வொரு செம்மறியாட்டுக் கடாக் குட்டியுடன் ஒரு லிட்டர் திராட்சமதுவைக் காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும்.+ 6 அல்லது ஒரு செம்மறியாட்டுக் கடாவைச் செலுத்தினால், அதற்கான உணவுக் காணிக்கையாக, ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு* நைசான மாவில் ஒன்றேகால் லிட்டர்* எண்ணெய் கலந்து கொண்டுவர வேண்டும். 7 அதோடு, ஒன்றேகால் லிட்டர் திராட்சமதுவைக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.
8 ஆனால், ஒரு காளையைத் தகன பலியாகவோ+ விசேஷமாக நேர்ந்துகொண்டதை நிறைவேற்றும் பலியாகவோ+ சமாதான பலியாகவோ யெகோவாவுக்குச் செலுத்தினால்,+ 9 அதற்கான உணவுக் காணிக்கையாக,+ ஒரு எப்பா அளவிலே பத்தில் மூன்று பங்கு* நைசான மாவில் ஒன்றே முக்கால் லிட்டர் எண்ணெயைக் கலந்து கொண்டுவர வேண்டும். 10 அதோடு, ஒன்றே முக்கால் லிட்டர் திராட்சமதுவைக் காணிக்கையாகக்+ கொண்டுவந்து பலிபீடத்தின் நெருப்பில் ஊற்ற வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். 11 ஒவ்வொரு காளையுடனும் செம்மறியாட்டுக் கடாவுடனும் செம்மறியாட்டுக் கடாக் குட்டியுடனும் வெள்ளாட்டுடனும் இவற்றைச் செலுத்த வேண்டும். 12 நீங்கள் எத்தனை மிருகங்களைச் செலுத்தினாலும் சரி, ஒவ்வொன்றோடும் இவற்றைக் கொண்டுவர வேண்டும். 13 இஸ்ரவேல் குடிமக்கள் ஒவ்வொருவரும் இப்படித்தான் தகன பலி செலுத்த வேண்டும். அதன் வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.
14 உங்களோடு தங்கியிருக்கிற வேறு தேசத்தைச் சேர்ந்தவனோ தலைமுறை தலைமுறையாக உங்களோடு குடியிருக்கிற வேறு தேசத்தைச் சேர்ந்தவனோ தகன பலியைச் செலுத்த விரும்பினால், நீங்கள் செலுத்துவது போலவே அவனும் செலுத்த வேண்டும்.+ அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். 15 இஸ்ரவேல் சபையாராகிய உங்களுக்கும் சரி, உங்களோடு குடியிருக்கும் வேறு தேசத்து ஜனங்களுக்கும் சரி, ஒரே சட்டம் இருக்க வேண்டும். அந்தச் சட்டத்தைத் தலைமுறை தலைமுறைக்கும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். நீங்களும் சரி, வேறு தேசத்து ஜனங்களும் சரி, யெகோவாவின் சட்டத்தை ஒரே விதமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.+ 16 உங்களுக்கும் சரி, உங்களோடு குடியிருக்கும் வேறு தேசத்து ஜனங்களுக்கும் சரி, ஒரே சட்டமும் ஒரே நியாயமும்* இருக்க வேண்டும்’” என்றார்.
17 பின்பு யெகோவா மோசேயிடம், 18 “நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நான் கூட்டிக்கொண்டு போகிற தேசத்துக்கு நீங்கள் வந்தபின், 19 அந்தத் தேசத்தில் விளைவதை நீங்கள் சாப்பிடும்போது,+ யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்த வேண்டும். 20 முதல் விளைச்சலின்+ முதல் மாவில்* வட்ட ரொட்டிகள் சுட்டு காணிக்கையாகச் செலுத்த வேண்டும். களத்துமேட்டிலிருந்து கொண்டுவந்து செலுத்தும் காணிக்கையைப் போலவே இதையும் செலுத்த வேண்டும். 21 முதல் விளைச்சலின் முதல் மாவில்* ரொட்டிகள் சுட்டு யெகோவாவுக்குக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும். தலைமுறை தலைமுறைக்கும் இதை நீங்கள் செலுத்த வேண்டும்.
22 நீங்கள் ஒரு தவறு செய்து, மோசே மூலம் யெகோவா கொடுத்த இந்தக் கட்டளைகளைத் தெரியாத்தனமாக மீறிவிட்டால், 23 அதாவது தலைமுறை தலைமுறையாக நீங்கள் கடைப்பிடிப்பதற்காக மோசே மூலம் யெகோவா கொடுத்த கட்டளைகளைத் தெரியாத்தனமாக மீறிவிட்டால், ஜனங்கள் யாருக்கும் தெரியாமல் அதைச் செய்துவிட்டால், யெகோவாவுக்காக 24 ஜனங்கள் எல்லாரும் ஒரு இளம் காளையைத் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். அதற்கான உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் வழக்கமான முறைப்படி செலுத்த வேண்டும்.+ பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் செலுத்த வேண்டும்.+ 25 இஸ்ரவேலர்கள் எல்லாருக்காகவும் குருவானவர் பாவப் பரிகாரம் செய்வார், அப்போது அவர்களுடைய பாவம் மன்னிக்கப்படும்.+ ஏனென்றால், அவர்கள் தெரியாத்தனமாகத் தவறு செய்துவிட்டார்கள். அதற்காக யெகோவாவுக்குத் தகன பலியையும் பாவப் பரிகார பலியையும் யெகோவாவின் முன்னிலையில் கொண்டுவந்தார்கள். 26 இஸ்ரவேல் ஜனங்களும் அவர்களோடு குடியிருக்கிற வேறு தேசத்து ஜனங்களும் தெரியாத்தனமாகத் தவறு செய்ததால் மன்னிப்பு பெறுவார்கள்.
27 உங்களில் ஒருவன் தெரியாத்தனமாகத் தவறு செய்தால், பாவப் பரிகார பலியாக ஒருவயது பெண் வெள்ளாட்டுக் குட்டியை அவன் கொண்டுவர வேண்டும்.+ 28 அவனுக்காகக் குருவானவர் யெகோவாவுக்கு முன்னால் பாவப் பரிகாரம் செய்வார். அப்போது, அவனுடைய பாவம் மன்னிக்கப்படும்.+ 29 தெரியாத்தனமாகத் தவறு செய்யும் இந்த விஷயத்தில், இஸ்ரவேல் குடிமக்களாகிய உங்களுக்கும் சரி, உங்களோடு குடியிருக்கிற வேறு தேசத்து ஜனங்களுக்கும் சரி, ஒரே சட்டம் இருக்க வேண்டும்.+
30 ஒருவன் வேண்டுமென்றே பாவம் செய்தால்,+ அவன் இஸ்ரவேல் குடிமக்களில் ஒருவனாக இருந்தாலும் சரி, வேறு தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி, அது யெகோவாவைப் பழிப்பதற்குச் சமம். அவன் கொல்லப்பட வேண்டும். 31 அவன் யெகோவாவின் வார்த்தையை அலட்சியம் செய்து அவருடைய கட்டளையை மீறியதால், கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+ அவனுடைய குற்றத்துக்காக அவன் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்’”+ என்றார்.
32 இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் இருந்தபோது, ஒருவன் ஓய்வுநாளில்+ விறகு பொறுக்குவதைச் சிலர் பார்த்தார்கள். 33 அவர்கள் அவனை மோசேக்கும் ஆரோனுக்கும் ஜனங்களுக்கும் முன்னால் கொண்டுவந்து நிறுத்தினார்கள். 34 அவன் செய்த குற்றத்துக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டுமென்று கடவுளுடைய சட்டத்தில் கொடுக்கப்படாததால் அவன் காவலில் வைக்கப்பட்டான்.+
35 அப்போது யெகோவா மோசேயிடம், “அவன் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்,+ ஜனங்கள் எல்லாரும் அவனை முகாமுக்கு வெளியே கொண்டுபோய்க் கல்லெறிந்து கொல்ல வேண்டும்”+ என்றார். 36 மோசே மூலம் யெகோவா கொடுத்த கட்டளைப்படியே ஜனங்கள் எல்லாரும் அவனை முகாமுக்கு வெளியே கொண்டுபோய்க் கல்லெறிந்து கொன்றார்கள்.
37 பின்பு யெகோவா மோசேயிடம், 38 “இஸ்ரவேலர்கள் தங்களுடைய அங்கிகளின் ஓரங்களில் தொங்கல்கள் வைத்து, அந்தத் தொங்கல்களுக்கு மேலே நீல நிற நாடாவைத் தைக்க வேண்டுமென்று அவர்களிடம் சொல். தலைமுறை தலைமுறைக்கும் அவர்கள் இப்படிச் செய்ய வேண்டும்.+ 39 ‘ஏனென்றால், நீங்கள் அந்தத் தொங்கல்களைப் பார்க்கும்போது, யெகோவாவின் கட்டளைகள் எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்து அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.+ உங்களுடைய மனதும்* கண்ணும் போகிற போக்கில் போய் நீங்கள் எனக்குத் துரோகம் செய்யக் கூடாது.+ 40 நீங்கள் என்னுடைய எல்லா கட்டளைகளையும் ஞாபகத்தில் வைத்துக் கடைப்பிடிப்பதற்கும், உங்கள் கடவுளாகிய என் முன்னால் பரிசுத்தமாக இருப்பதற்கும்+ இந்தச் சட்டம் உதவும். 41 நானே உங்கள் கடவுளாகிய யெகோவா. நான்தான் உங்கள் கடவுள் என்பதை நிரூபிப்பதற்காக உங்களை எகிப்து தேசத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தேன்.+ நானே உங்கள் கடவுளாகிய யெகோவா’”+ என்றார்.
16 பின்பு, லேவியின்+ கொள்ளுப்பேரனும் கோகாத்தின்+ பேரனும் இத்சேயாரின் மகனுமாகிய+ கோராகு,+ தாத்தானோடும் அபிராமோடும் ஓனோடும் கிளம்பினார். தாத்தானும் அபிராமும் ரூபனின்+ மகனாகிய எலியாபுக்குப்+ பிறந்தவர்கள். ஓன் என்பவன் ரூபனின் மகனாகிய பேலேத்துக்குப் பிறந்தவன். 2 கோராகு, தாத்தான், அபிராம், ஓன் ஆகிய நான்கு பேரும், இஸ்ரவேலர்களில் இன்னும் 250 பேரும் மோசேக்கு எதிராகத் திரண்டார்கள். இந்த 250 பேரும் ஜனங்களின் தலைவர்கள், சபையின் பிரதிநிதிகள், பிரபலமானவர்கள். 3 அவர்கள் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகத் திரண்டு வந்து,+ “உங்களால் நாங்கள் பட்டது போதும்! ஜனங்கள் எல்லாருமே பரிசுத்தமானவர்கள்.+ யெகோவா அவர்களோடு இருக்கிறார்.+ அப்படியிருக்கும்போது, நீங்கள் ஏன் யெகோவாவின் சபையாரைவிட பெரிய ஆளாகக் காட்டிக்கொள்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
4 மோசே அதைக் கேட்டவுடன் சாஷ்டாங்கமாக விழுந்தார். 5 பின்பு, அவர் கோராகுவையும் அவருடைய கூட்டாளிகளையும் பார்த்து, “யெகோவாவுக்குச் சொந்தமானவரும்,+ பரிசுத்தமானவரும், அவருடைய முன்னிலையில் போவதற்குத் தகுதியானவரும்+ யார் என்று அவர் காலையில் சொல்வார். அவர் யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ+ அவர்தான் அவருடைய முன்னிலையில் போவார். 6 கோராகுவே! கோராகுவின் கூட்டாளிகளே!+ தூபக்கரண்டிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.+ 7 அதில் தணல் போட்டு, நாளைக்கு யெகோவாவின் முன்னால் தூபம் காட்டுங்கள். யெகோவா யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ+ அவர்தான் பரிசுத்தமானவர். லேவியின் வம்சத்தாரே,+ நீங்கள் அத்துமீறிப் போய்விட்டீர்கள்!” என்றார்.
8 பின்பு மோசே கோராகுவிடம், “லேவியின் வம்சத்தாரே, தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள். 9 இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா உங்களைப் பிரித்தெடுத்து,+ வழிபாட்டுக் கூடாரத்தில் அவருக்கு முன்பாகவும், ஜனங்களுக்கு முன்பாகவும் சேவை செய்ய வாய்ப்புத் தந்திருப்பது+ சாதாரண விஷயமா? 10 உன்னையும் லேவியின் வம்சத்தாராகிய உன் சகோதரர்கள் எல்லாரையும் அவர் தன் பக்கத்தில் வர விட்டிருப்பது சின்ன விஷயமா? இதெல்லாம் போதாதென்று, குருமார்களாகவும் சேவை செய்ய நினைக்கிறீர்களா?+ 11 நீயும் உன்னோடு திரண்டு வந்திருக்கிற உன் கூட்டாளிகளும் யெகோவாவுக்கு விரோதமாக நடந்துகொள்கிறீர்கள். ஆரோன் என்ன செய்தாரென்று அவருக்கு எதிராக முணுமுணுக்கிறீர்கள்?”+ என்றார்.
12 பின்பு மோசே, எலியாபின் மகன்களாகிய தாத்தானையும் அபிராமையும்+ கூட்டிக்கொண்டு வரச் சொல்லி ஆட்களை அனுப்பினார். ஆனால் அவர்கள், “நாங்கள் வர மாட்டோம்! 13 பாலும் தேனும் ஓடுகிற தேசத்திலிருந்து நீங்கள் எங்களைக் கொண்டுவந்து இந்த வனாந்தரத்தில் சாகடிக்கப் பார்ப்பது என்ன சாதாரண விஷயமா?+ இப்போது, கொடுங்கோலன் போல எங்களை அடக்கி ஆளவும் நினைக்கிறீர்களா? 14 பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்கு+ நீங்கள் எங்களைக் கொண்டுபோகவும் இல்லை, வயலையும் திராட்சைத் தோட்டத்தையும் எங்களுக்குச் சொத்தாகக் கொடுக்கவும் இல்லை. இந்த ஆட்களுடைய* கண்ணைப் பிடுங்கப் பார்க்கிறீர்களா?* நாங்கள் வர மாட்டோம்!” என்றார்கள்.
15 அப்போது, மோசேக்குப் பயங்கரமாகக் கோபம் வந்தது. உடனே அவர் யெகோவாவிடம், “இவர்களுடைய உணவுக் காணிக்கையை ஏற்றுக்கொள்ளாதீர்கள். இவர்களிடமிருந்து நான் ஒரு கழுதையைக்கூட எடுத்துக்கொள்ளவில்லை, யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லை”+ என்றார்.
16 பின்பு மோசே கோராகுவிடம், “நாளைக்கு நீயும் உன் கூட்டாளிகளும் யெகோவாவின் முன்னிலையில் நிற்க வேண்டும், நீயும் அவர்களும் ஆரோனும் நிற்க வேண்டும். 17 நீங்கள் ஒவ்வொருவரும் தூபக்கரண்டியை எடுத்து அதில் தூபம்போட்டு யெகோவாவின் முன்னிலையில் கொண்டுவர வேண்டும். ஆளுக்கு ஒன்றாக மொத்தம் 250 தூபக்கரண்டிகளைக் கொண்டுவர வேண்டும். நீயும் ஆரோனும்கூட தூபக்கரண்டியைக் கொண்டுவர வேண்டும்” என்றார். 18 அதனால், ஒவ்வொருவரும் தங்கள் தூபக்கரண்டியை எடுத்துக்கொண்டார்கள். அதில் தணலும் தூபப்பொருளும் போட்டு, மோசேயோடும் ஆரோனோடும் சேர்ந்து சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் நின்றார்கள். 19 மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக கோராகு தன்னுடைய கூட்டாளிகளை+ சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்கு முன்னால் ஒன்றுகூடி வரும்படி செய்தார். அப்போது, அங்கிருந்த எல்லா ஜனங்களுக்கும் முன்னால் யெகோவாவின் மகிமை தோன்றியது.+
20 அப்போது யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும், 21 “இந்தக் கூட்டத்தைவிட்டு விலகி நில்லுங்கள், இவர்களை நான் ஒரே நிமிஷத்தில் அழிக்கப்போகிறேன்”+ என்றார். 22 உடனே அவர்கள் சாஷ்டாங்கமாக விழுந்து, “கடவுளே, உயிருள்ள எல்லாருக்கும் சுவாசத்தைத் தருகிறவரே,+ ஒரேவொரு மனுஷன் செய்த தப்புக்காக எல்லா ஜனங்கள்மேலும் நீங்கள் கோபப்படுவீர்களா?”+ என்று கேட்டார்கள்.
23 அதற்கு யெகோவா மோசேயிடம், 24 “கோராகு, தாத்தான், அபிராமின்+ கூடாரங்களைவிட்டுத் தள்ளி நிற்கும்படி ஜனங்களிடம் சொல்” என்றார்.
25 பின்பு, மோசே எழுந்து தாத்தானிடமும் அபிராமிடமும் போனார். இஸ்ரவேலின் பெரியோர்களும்*+ அவருடன் போனார்கள். 26 அவர் அங்கிருந்த ஜனங்களிடம், “தயவுசெய்து இந்த அக்கிரமக்காரர்களின் கூடாரங்களைவிட்டு விலகி நில்லுங்கள், அவர்களுடைய பொருள்கள் எதையும் தொடாதீர்கள். தொட்டால், அவர்களுடைய பாவங்களுக்காக நீங்களும் அழிந்துபோவீர்கள்” என்றார். 27 உடனே கோராகு, தாத்தான், அபிராம் ஆகியவர்களுடைய கூடாரங்களைச் சுற்றிலும் இருந்தவர்கள் விலகிப்போனார்கள். தாத்தானும் அபிராமும் தங்கள் கூடாரங்களைவிட்டு வெளியே வந்து, தங்களுடைய மனைவிகளோடும் மகன்களோடும் சிறுபிள்ளைகளோடும் வாசலில் நின்றார்கள்.
28 அப்போது மோசே, “என் இஷ்டப்படி நான் எதையும் செய்யவில்லை, யெகோவா சொன்னதைத்தான் செய்தேன். இனி நடக்கப்போவதை வைத்து அதை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். 29 எல்லாரும் இயற்கையாகச் சாவதுபோல் இந்த ஆட்கள் செத்தால், எல்லாருக்கும் கிடைக்கிற தண்டனையே இந்த ஆட்களுக்கும் கிடைத்தால், யெகோவா என்னை அனுப்பவில்லை என்று அர்த்தம்.+ 30 ஆனால், இதுவரை யாரும் கேள்விப்படாத விதத்தில் யெகோவா இவர்களைத் தண்டித்தால், அதாவது பூமி பிளந்து இவர்களையும் இவர்களுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் அப்படியே விழுங்கினால், இவர்கள் உயிரோடு கல்லறைக்குள் புதைந்துபோனால், இவர்கள் யெகோவாவை மதிக்கவில்லை என்று நிச்சயம் தெரிந்துகொள்வீர்கள்” என்றார்.
31 அவர் இதையெல்லாம் பேசி முடித்தவுடனே, அவர்கள் நின்றுகொண்டிருந்த நிலம் இரண்டாகப் பிளந்தது.+ 32 பூமி பிளந்து அவர்களையும் அவர்களுடைய குடும்பத்தாரையும் கோராகுவுக்குச் சொந்தமான எல்லாரையும்+ அவர்களுடைய எல்லா பொருள்களையும் விழுங்கியது. 33 அவர்களும் அவர்களுக்குச் சொந்தமான எல்லாரும் உயிரோடு கல்லறைக்குள் புதைந்துபோனார்கள். பூமி அவர்களை மூடிக்கொண்டது. அவர்கள் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள்.+ 34 அவர்களைச் சுற்றியிருந்த இஸ்ரவேலர்கள் எல்லாரும் அவர்கள் போட்ட கூச்சலைக் கேட்டு, “ஐயோ! நாமும் மண்ணுக்குள் புதைந்துவிடுவோம்!” என்று அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள். 35 அப்போது, யெகோவாவின் முன்னிலையிலிருந்து நெருப்பு வந்து,+ தூபம்காட்டிய 250 பேரையும் பொசுக்கியது.+
36 பின்பு யெகோவா மோசேயிடம், 37 “தூபக்கரண்டிகள்+ பரிசுத்தமானவையாக இருப்பதால் அவற்றை நெருப்பிலிருந்து எடுக்கும்படி குருவாகிய ஆரோனின் மகன் எலெயாசாரிடம் சொல். அதோடு, தணலையும் தூரமாக எடுத்துக் கொண்டுபோய்க் கொட்டச் சொல். 38 பாவம் செய்து செத்துப்போன அந்த ஆட்களின் தூபக்கரண்டிகள் சன்னமான தகடுகளாக அடிக்கப்பட்டு, பலிபீடத்தைச்+ சுற்றிலும் பொருத்தப்பட வேண்டும். அந்தத் தூபக்கரண்டிகளை அவர்கள் யெகோவாவின் முன்னிலையில் கொண்டுவந்ததால் அவை பரிசுத்தமாகிவிட்டன. இஸ்ரவேலர்களை எச்சரிக்கும் அடையாளமாக அவை இருக்க வேண்டும்”+ என்றார். 39 அதனால் குருவாகிய எலெயாசார், நெருப்பில் பொசுங்கிய ஆட்களின் செம்புத் தூபக்கரண்டிகளைப் பலிபீடத்தைச் சுற்றிலும் பொருத்துவதற்காகத் தகடுகளாக அடித்தார். 40 யெகோவா மோசேயின் மூலம் சொன்னபடியே அவர் செய்தார். தகுதி இல்லாத யாரும், அதாவது ஆரோனின் வம்சத்தைச் சேராத யாரும், யெகோவாவின் முன்னிலையில் தூபம்காட்டக் கூடாது+ என்பதையும், கோராகுவையும் அவருடைய கூட்டாளிகளையும் போல யாரும் ஆகிவிடக் கூடாது+ என்பதையும் அந்தத் தகடுகள் இஸ்ரவேலர்களுக்கு ஞாபகப்படுத்தின.
41 அடுத்த நாளே இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முணுமுணுக்க ஆரம்பித்தார்கள்.+ “நீங்கள் இரண்டு பேரும் யெகோவாவின் ஜனங்களைக் கொன்றுவிட்டீர்கள்!” என்று குற்றம்சாட்டினார்கள். 42 மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக ஒன்றுகூடிய ஜனங்கள் எல்லாரும் சந்திப்புக் கூடாரத்தின் பக்கம் திரும்பியபோது, அதன்மேல் மேகம் தங்கியிருந்தது, யெகோவாவின் மகிமை தெரிய ஆரம்பித்தது.+
43 உடனே, மோசேயும் ஆரோனும் சந்திப்புக் கூடாரத்துக்கு முன்னால் போய் நின்றார்கள்.+ 44 யெகோவா மோசேயிடம், 45 “நீங்கள் இந்தக் கூட்டத்தைவிட்டு விலகி நில்லுங்கள். இவர்களை நான் ஒரே நிமிஷத்தில் அழிக்கப்போகிறேன்”+ என்றார். அப்போது, அவர்கள் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள்.+ 46 அதன்பின் மோசே ஆரோனைப் பார்த்து, “பலிபீடத்தின் தணலைத்+ தூபக்கரண்டியில் எடுத்து, அதன்மேல் தூபப்பொருளைப் போட்டு, சீக்கிரமாக ஜனங்களிடம் போய் அவர்களுக்காகப் பாவப் பரிகாரம் செய்.+ யெகோவாவின் கோபம் பற்றியெரிகிறது. கொள்ளைநோய் தாக்க ஆரம்பித்துவிட்டது!” என்றார். 47 மோசே சொன்னபடியே, ஆரோன் உடனடியாக அதை எடுத்துக்கொண்டு சபையாரின் நடுவில் ஓடினார். கொள்ளைநோய் ஜனங்களைத் தாக்க ஆரம்பித்திருந்ததைப் பார்த்தார். அதனால், அவர் தூபக்கரண்டியில் தூபம்போட்டு ஜனங்களுக்காகப் பாவப் பரிகாரம் செய்தார். 48 செத்தவர்களுக்கும் உயிருள்ளவர்களுக்கும் நடுவில் அவர் நின்றுகொண்டே இருந்தார். கடைசியில் கொள்ளைநோயின் தாக்குதல் ஓய்ந்தது. 49 கோராகுவினால் இறந்தவர்கள் போக, இந்தக் கொள்ளைநோயினால் இறந்தவர்கள் 14,700 பேர். 50 கொள்ளைநோயின் தாக்குதல் ஓய்ந்த பிறகு, சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் இருந்த மோசேயிடம் ஆரோன் திரும்பி வந்தார்.
17 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “நீ இஸ்ரவேலர்களிடம் பேசி, ஒவ்வொரு கோத்திரத்துக்கும் ஒரு கோல் என மொத்தம் 12 கோல்களை அந்தந்த கோத்திரத் தலைவரிடமிருந்து+ வாங்கிக்கொள். அவரவர் பெயரை அவரவர் கோலில் எழுது. 3 ஆரோனின் பெயரை லேவியின் கோலில் எழுது. ஒவ்வொரு கோத்திரத் தலைவருக்கும் இருக்கிற கோலை 4 சந்திப்புக் கூடாரத்திலே, நான் உங்களைத் தவறாமல் சந்திக்கிற+ சாட்சிப் பெட்டிக்கு+ முன்னால் வை. 5 நான் தேர்ந்தெடுக்கிறவரின்+ கோல் மட்டும் துளிர்த்து மொட்டுவிடும்படி செய்வேன். இப்படி, எனக்கு எதிராகவும் உங்களுக்கு எதிராகவும்+ இனி இஸ்ரவேலர்கள் முணுமுணுக்காதபடி+ செய்வேன்” என்றார்.
6 இவற்றை மோசே இஸ்ரவேலர்களிடம் சொன்னார். அவர்களுடைய கோத்திரத் தலைவர்கள் எல்லாரும் ஆளுக்கு ஒரு கோல் என 12 கோல்களைக் கொண்டுவந்து கொடுத்தார்கள். அவர்களுடைய கோல்களுடன் ஆரோனின் கோலும் இருந்தது. 7 பின்பு, மோசே அந்தக் கோல்களைச் சாட்சிப் பெட்டி வைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் யெகோவாவின் முன்னிலையில் வைத்தார்.
8 அடுத்த நாள், சாட்சிப் பெட்டி வைக்கப்பட்டிருந்த கூடாரத்துக்குள் மோசே போனார். அப்போது, லேவி கோத்திரத்தைச் சேர்ந்த ஆரோனின் கோல் மட்டும் துளிர்த்து, மொட்டுவிட்டு, பூப்பூத்திருந்தது. அதில் வாதுமைப் பழங்களும் இருந்தன. 9 பின்பு, மோசே அந்தக் கோல்களை யெகோவாவின் முன்னிலையிலிருந்து எடுத்து இஸ்ரவேல் ஜனங்களிடம் கொண்டுவந்தார். அவர்கள் அதைப் பார்த்தார்கள். பின்பு, எல்லாரும் அவரவர் கோலை எடுத்துக்கொண்டார்கள்.
10 அப்போது யெகோவா மோசேயிடம், “ஆரோனின் கோலைத்+ திரும்பவும் சாட்சிப் பெட்டிக்கு முன்னால் வை. எனக்கு அடங்கி நடக்காதவர்களை+ எச்சரிக்கும் அடையாளமாக அது இருக்கும்.+ அப்போதுதான் அவர்கள் எனக்கு எதிராக முணுமுணுக்கவோ, அதனால் அழிந்துபோகவோ மாட்டார்கள்” என்றார். 11 யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே உடனடியாகச் செய்தார். அவர் அப்படியே செய்தார்.
12 பின்பு இஸ்ரவேல் ஜனங்கள் மோசேயிடம், “ஐயோ! நாங்கள் செத்துவிடுவோம், நாங்கள் அழிந்துவிடுவோம், நாங்கள் எல்லாருமே அழிந்துவிடுவோம்! 13 யெகோவாவின் கூடாரத்துக்குப் பக்கத்தில் வந்தால்கூட செத்துவிடுவோம்!+ எங்களுக்கு இப்படித்தான் சாவு வர வேண்டுமா?”+ என்றார்கள்.
18 பின்பு யெகோவா ஆரோனிடம், “வழிபாட்டுக் கூடாரம்+ சம்பந்தப்பட்ட சட்டங்களை யாராவது மீறினால், நீயும் உன் மகன்களும் உன் தந்தைவழிக் குடும்பத்தாரும் அதற்குப் பதில் சொல்ல வேண்டும். குருமார்களுக்கான சட்டங்களை யாராவது மீறினால், நீயும் உன் மகன்களும் அதற்குப் பதில் சொல்ல வேண்டும்.+ 2 உன் தகப்பனின் கோத்திரமான லேவி கோத்திரத்தைச் சேர்ந்த உன் சகோதரர்களை உனக்கும் உன் மகன்களுக்கும் ஒத்தாசையாக வைத்துக்கொள்.+ சாட்சிப் பெட்டி வைக்கப்பட்டுள்ள கூடாரத்தின் முன்னால் சேவை செய்வதில் அவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.+ 3 நீ கொடுக்கும் பொறுப்புகளையும் வழிபாட்டுக் கூடாரத்தின் மற்ற பொறுப்புகளையும் அவர்கள் கவனித்துக்கொள்வார்கள்.+ ஆனால், பரிசுத்த இடத்தின் பாத்திரங்களுக்கும் பலிபீடத்துக்கும் பக்கத்தில் அவர்கள் வரக் கூடாது. அப்படி வந்தால் அவர்களும் செத்துவிடுவார்கள், நீங்களும் செத்துவிடுவீர்கள்.+ 4 அவர்கள் உன்னோடு சேர்ந்து, சந்திப்புக் கூடாரம் சம்பந்தப்பட்ட பொறுப்புகளையும் மற்ற எல்லா வேலைகளையும் செய்வார்கள். தகுதி இல்லாத* யாரும் உங்களுக்குப் பக்கத்தில் வரக் கூடாது.+ 5 இஸ்ரவேல் ஜனங்களை இனிமேலும் கடவுள் தண்டிக்காமல் இருப்பதற்காக,+ பரிசுத்த இடத்திலும் பலிபீடத்திலும் செய்ய வேண்டிய கடமைகளை+ நீங்கள் செய்ய வேண்டும். 6 இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து உங்கள் சகோதரர்களாகிய லேவியர்களை நான் பிரித்தெடுத்து உங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறேன்.+ சந்திப்புக் கூடாரச் சேவையைச் செய்ய அவர்கள் யெகோவாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறார்கள்.+ 7 பலிபீடத்திலும் திரைச்சீலையின் உள்ளேயும் குருமார்கள் செய்ய வேண்டிய வேலைகளை நீயும் உன் மகன்களும் கவனித்துக்கொள்ள வேண்டும்.+ குருத்துவச் சேவைக்கு நீங்கள்தான் பொறுப்பு.+ அதை நான் உங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறேன். தகுதி இல்லாத* யாராவது வழிபாட்டுக் கூடாரத்தின் பக்கத்தில் வந்தால் அவன் கொல்லப்பட வேண்டும்”+ என்றார்.
8 பின்பு யெகோவா ஆரோனிடம், “எனக்கு வருகிற காணிக்கைகளை உன் பொறுப்பில் விடுகிறேன்.+ இஸ்ரவேலர்கள் எனக்குக் காணிக்கையாகக் கொடுக்கிற பரிசுத்த பொருள்கள் எல்லாவற்றிலும் ஒரு பங்கை உனக்கும் உன் மகன்களுக்கும் தந்திருக்கிறேன். அது உங்களுடைய நிரந்தரப் பங்காக இருக்கும்.+ 9 தகன பலியாகச் செலுத்தப்படுகிற மிகவும் பரிசுத்தமான பலிகளில் உங்களுக்கு ஒரு பங்கு கிடைக்கும். உணவுக் காணிக்கை,+ பாவப் பரிகார பலி,+ குற்ற நிவாரண பலி+ என ஜனங்கள் எனக்குக் கொண்டுவருகிற எல்லா பலிகளிலும் உங்களுக்கு ஒரு பங்கு கிடைக்கும். அது உனக்கும் உன் மகன்களுக்கும் மிகப் பரிசுத்தமானது. 10 மிகவும் பரிசுத்தமான இடத்தில் நீ அதைச் சாப்பிட வேண்டும்.+ எல்லா ஆண்களும் அதைச் சாப்பிடலாம், அது பரிசுத்தமானது.+ 11 இஸ்ரவேலர்கள் செலுத்துகிற அசைவாட்டும் காணிக்கைகளும்,+ அவற்றோடு கொடுக்கிற மற்ற எல்லா காணிக்கைகளும்+ உன்னுடையது. அவற்றை உனக்கும் உன் மகன்களுக்கும் மகள்களுக்கும் நிரந்தரப் பங்காகத் தந்திருக்கிறேன்.+ உன் வீட்டில் தீட்டில்லாமல் இருக்கிற எல்லாரும் அதைச் சாப்பிடலாம்.+
12 யெகோவாவாகிய எனக்கு முதல் விளைச்சலிலிருந்து+ அவர்கள் கொடுக்கிற உயர்தரமான எண்ணெய், உயர்தரமான புதிய திராட்சமது, உயர்தரமான தானியம் ஆகியவற்றை நான் உனக்குத் தருகிறேன்.+ 13 அவர்களுடைய நிலத்தின் முதல் விளைச்சலிலிருந்து யெகோவாவுக்குக் கொண்டுவருகிற எல்லாமே உன்னுடையது.+ உன் வீட்டில் தீட்டில்லாமல் இருக்கிற எல்லாரும் அதைச் சாப்பிடலாம்.
14 இஸ்ரவேலில் கடவுளுக்காக அர்ப்பணிக்கப்படுகிற எல்லாமே உனக்குத்தான் சொந்தமாக வேண்டும்.+
15 யெகோவாவுக்காக ஜனங்கள் அர்ப்பணிக்கிற முதல் ஆண்குழந்தைகளும் அவர்களுடைய மிருகங்களின் முதல் குட்டிகளும்+ உனக்குத்தான் சொந்தமாக வேண்டும். ஆனாலும், முதல் ஆண்குழந்தைகள் கண்டிப்பாக மீட்கப்பட வேண்டும்.+ தீட்டான மிருகங்களின் முதல் குட்டிகளும் மீட்கப்பட வேண்டும்.+ 16 அவை பிறந்து ஒரு மாதமோ அதற்கும் அதிகமாகவோ ஆகியிருந்தால், பரிசுத்த* சேக்கலின்* கணக்குப்படி ஐந்து வெள்ளி சேக்கல்+ கொடுத்து அவற்றை மீட்க வேண்டும். ஒரு சேக்கல் என்பது 20 கேரா.* 17 முதலில் பிறக்கிற காளைக் கன்றையோ செம்மறியாட்டுக் கடாக் குட்டியையோ வெள்ளாட்டுக் கடாக் குட்டியையோ மட்டும் மீட்கக் கூடாது.+ அவை பரிசுத்தமானவை. அவற்றின் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் நீ தெளிக்க வேண்டும்.+ அவற்றின் கொழுப்பைத் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+ 18 அவற்றின் சதைப்பகுதி உன்னுடையது. அசைவாட்டும் காணிக்கையாகிய மார்க்கண்டத்தையும்* வலது காலையும் போல அது உன்னுடையது.+ 19 இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்குச் செலுத்துகிற பரிசுத்த காணிக்கைகள் எல்லாவற்றையும்+ நான் உனக்கும் உன் மகன்களுக்கும் மகள்களுக்கும் நிரந்தரப் பங்காகக் கொடுத்திருக்கிறேன்.+ இது உன்னோடும் உன் வம்சத்தாரோடும் யெகோவா செய்கிற நிரந்தர ஒப்பந்தம்”* என்றார்.
20 பின்பு யெகோவா ஆரோனிடம், “இஸ்ரவேல் தேசத்தில் உனக்கு எந்தச் சொத்தும் இருக்காது, அவர்களுடைய நிலத்தில் எதுவும் உனக்குச் சொந்தமாகாது.+ இஸ்ரவேலர்களின் நடுவில் நானே உன் சொத்து.+
21 சந்திப்புக் கூடாரத்தில் லேவியின் வம்சத்தார் செய்கிற சேவைக்காக, இஸ்ரவேலர்களுக்கு இருக்கிற எல்லாவற்றிலும் பத்திலொரு பாகத்தை அவர்களுக்குச் சொத்தாகக் கொடுத்திருக்கிறேன்.+ 22 இனிமேல் இஸ்ரவேல் ஜனங்களில் யாரும் சந்திப்புக் கூடாரத்துக்குப் பக்கத்தில் வரக் கூடாது. அப்படி வந்தால், அவர்கள் குற்றத்துக்கு ஆளாகி செத்துப்போவார்கள். 23 சந்திப்புக் கூடாரச் சேவையை லேவியர்கள் மட்டும்தான் செய்ய வேண்டும். பரிசுத்த இடத்துக்கு விரோதமாக ஜனங்கள் செய்கிற குற்றத்துக்கு அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.+ இஸ்ரவேலர்களின் நடுவில் அவர்களுக்கு எந்தச் சொத்தும் இருக்கக் கூடாது. இது தலைமுறை தலைமுறைக்கும் அவர்களுக்குக் கொடுக்கப்படும் சட்டம்.+ 24 யெகோவாவாகிய எனக்கு பத்திலொரு பாகமாக இஸ்ரவேலர்கள் கொடுக்கிற காணிக்கைகள் எல்லாவற்றையுமே நான் லேவியர்களுக்குச் சொத்தாகக் கொடுத்திருக்கிறேன். அதனால்தான், ‘இஸ்ரவேலர்களின் நடுவில் அவர்களுக்கு எந்தச் சொத்தும் இருக்கக் கூடாது’ என்று அவர்களிடம் சொன்னேன்”+ என்றார்.
25 பின்பு யெகோவா மோசேயிடம், 26 “நீ லேவியர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘இஸ்ரவேலர்கள் கொடுக்கும் பத்திலொரு பாகம் உங்களுக்குக் கிடைக்கும். அதை நான் அவர்களிடமிருந்து வாங்கி உங்களுக்குச் சொத்தாகக் கொடுத்திருக்கிறேன்.+ நீங்கள் அந்தப் பத்திலொரு பாகத்திலிருந்து பத்திலொரு பாகத்தை எடுத்து யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும்.+ 27 அதை உங்களுடைய காணிக்கையாக ஏற்றுக்கொள்வேன். அதை உங்களுடைய களத்துமேட்டின் தானியத்தைப் போலவும்,+ உங்களுடைய ஆலையின் திராட்சரசத்தை அல்லது எண்ணெயைப் போலவும் ஏற்றுக்கொள்வேன். 28 இப்படி, இஸ்ரவேலர்கள் உங்களுக்குத் தருகிற பத்திலொரு பாகத்தில் நீங்களும் யெகோவாவுக்குக் காணிக்கை கொடுக்க வேண்டும். அவற்றை யெகோவாவுக்குக் காணிக்கையாக ஆரோனிடம் கொடுக்க வேண்டும். 29 உங்களுக்குக் கொடுக்கப்படுகிற பரிசுத்த காணிக்கைகளில் மிகச் சிறந்ததை நீங்கள் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும்.’+
30 நீ அவர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘லேவியர்களாகிய உங்களுக்குக் கிடைக்கிற பொருள்களில் மிகச் சிறந்ததை நீங்கள் காணிக்கையாகக் கொடுக்கும்போது, அவை உங்களுடைய களத்துமேட்டிலிருந்து கிடைத்த தானியத்தைப் போலவும், உங்களுடைய ஆலையிலிருந்து கிடைத்த திராட்சரசத்தை அல்லது எண்ணெயைப் போலவும் ஏற்றுக்கொள்ளப்படும். 31 நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் அதைச் சாப்பிடலாம். ஏனென்றால், அது சந்திப்புக் கூடாரத்தில் செய்த சேவைக்காக உங்களுக்குக் கொடுக்கப்படுகிற கூலி.+ 32 அவற்றில் மிகச் சிறந்ததைக் காணிக்கையாகக் கொடுக்கும்வரை, நீங்கள் குற்றத்துக்கு ஆளாக மாட்டீர்கள். இஸ்ரவேல் ஜனங்கள் தரும் பரிசுத்த பொருள்களை நீங்கள் அவமதிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் நிச்சயம் சாவீர்கள்’”+ என்றார்.
19 யெகோவா மறுபடியும் மோசேயிடமும் ஆரோனிடமும், 2 “யெகோவாவின் சட்டம் இதுதான்: ‘குறையோ ஊனமோ இல்லாத+ சிவப்பான இளம் பசு ஒன்றை உங்களுக்காகக் கொண்டுவரும்படி இஸ்ரவேலர்களிடம் சொல்லுங்கள். அது இதுவரை நுகத்தடியில் பூட்டப்படாததாக இருக்க வேண்டும். 3 அதை நீங்கள் வாங்கி குருவாகிய எலெயாசாரிடம் கொடுக்க வேண்டும். அவர் அதை முகாமுக்கு வெளியே ஓட்டிக்கொண்டு போவார். அங்கே அவர் முன்னால் அது கொல்லப்பட வேண்டும். 4 பின்பு, குருவாகிய எலெயாசார் அதன் இரத்தத்தில் கொஞ்சத்தைத் தன் விரலில் தொட்டு, சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்கு முன்னால் ஏழு தடவை தெளிக்க வேண்டும்.+ 5 பின்பு, அந்தப் பசு அவர் கண்ணுக்கு முன்னால் சுட்டெரிக்கப்பட வேண்டும். அதன் தோல், சதை, இரத்தம், சாணம் ஆகிய எல்லாமே சுட்டெரிக்கப்பட வேண்டும்.+ 6 அதன்பின், தேவதாரு மரக்கட்டையையும் மருவுக்கொத்தையும்+ கருஞ்சிவப்பு துணியையும் குருவானவர் எடுத்து, அந்தப் பசு எரிக்கப்படுகிற நெருப்பில் போட வேண்டும். 7 பின்பு, அவர் தன் உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அதற்குப்பின் அவர் முகாமுக்குள் வரலாம். ஆனால், அவர் சாயங்காலம்வரை தீட்டுள்ளவராக இருப்பார்.
8 அந்தப் பசுவைச் சுட்டெரித்தவர் தன் உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவர் சாயங்காலம்வரை தீட்டுள்ளவராக இருப்பார்.
9 தீட்டில்லாத ஒருவர் அந்தப் பசுவின் சாம்பலை+ எடுத்து, முகாமுக்கு வெளியே சுத்தமான ஒரு இடத்தில் கொட்ட வேண்டும். சுத்திகரிப்பு நீரைத்+ தயாரிப்பதற்காக ஜனங்கள் அந்தச் சாம்பலை அங்கே வைத்திருக்க வேண்டும். அந்தப் பசுதான் பாவப் பரிகார பலி. 10 அதன் சாம்பலை அள்ளுகிறவர் தன் உடைகளைத் துவைக்க வேண்டும். அவர் சாயங்காலம்வரை தீட்டுள்ளவராக இருப்பார்.
இதுதான் இஸ்ரவேலர்களுக்கும் அவர்களோடு வாழ்கிற மற்ற தேசத்து ஜனங்களுக்கும் கொடுக்கப்படுகிற நிரந்தரச் சட்டம்.+ 11 பிணத்தைத் தொடுகிற எவனும் ஏழு நாட்கள் தீட்டுள்ளவனாக இருப்பான்.+ 12 மூன்றாம் நாளில் அவன் தன்னைச் சுத்திகரிப்பு நீரினால் தூய்மைப்படுத்த வேண்டும், அப்போது ஏழாம் நாளில் அவன் சுத்தமாவான். மூன்றாம் நாளில் அவன் தன்னைத் தூய்மைப்படுத்தாவிட்டால், ஏழாம் நாளில் சுத்தமாக மாட்டான். 13 பிணத்தைத் தொடுகிறவன் தன்னைத் தூய்மைப்படுத்தாவிட்டால், யெகோவாவின் கூடாரத்தைத் தீட்டுப்படுத்துகிறான் என்று அர்த்தம்.+ அதனால் அவன் கொல்லப்பட வேண்டும்.+ சுத்திகரிப்பு நீர்+ அவன்மேல் தெளிக்கப்படாததால் அந்தத் தீட்டு அவன் மேலேயே இருக்கும், அது அவனைவிட்டுப் போகாது.
14 யாராவது கூடாரத்தில் இறந்துவிட்டால் பின்பற்ற வேண்டிய சட்டம் இதுதான்: அந்தக் கூடாரத்துக்குள் போகிறவர்களும், அதற்குள் இருந்தவர்களும் ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள். 15 நன்றாக மூடி வைக்கப்படாத எந்தப் பாத்திரமும் தீட்டுள்ளதாக இருக்கும்.+ 16 வெளியில் இருக்கிற ஒருவன், வாளால் கொல்லப்பட்டவனையோ வேறு விதத்தில் செத்தவனையோ ஒரு மனுஷனின் எலும்பையோ கல்லறையையோ தொட்டால், ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவனாக இருப்பான்.+ 17 அவனைச் சுத்திகரிப்பதற்காக இப்படிச் செய்ய வேண்டும்: பாவப் பரிகார பலியாகச் சுட்டெரிக்கப்பட்ட பசுவின் சாம்பலைக் கொஞ்சம் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் ஊற்றுநீரைக் கலக்க வேண்டும். 18 அதன்பின், தீட்டில்லாத ஒருவர்+ மருவுக்கொத்தை+ எடுத்து, அந்தத் தண்ணீரில் முக்கி, கூடாரத்தின்மேலும் எல்லா பாத்திரங்களின்மேலும் அங்கு இருந்தவர்களின்மேலும் தெளிக்க வேண்டும். அதேபோல், கொல்லப்பட்டவனையோ வேறு விதத்தில் செத்தவனையோ எலும்பையோ கல்லறையையோ தொட்டவன்மேலும் தெளிக்க வேண்டும். 19 தீட்டில்லாதவர் தீட்டுப்பட்டவன்மேல் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் அதைத் தெளிக்க வேண்டும். ஏழாம் நாளில் அவனைப் பாவத்திலிருந்து சுத்திகரிக்க வேண்டும்.+ அதன்பின், சுத்திகரிக்கப்படுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். சாயங்காலத்தில் அவன் சுத்தமாவான்.
20 ஆனால், தீட்டுப்பட்ட ஒருவன் தன்னைத் தூய்மைப்படுத்தாவிட்டால் அவன் சபையில் இல்லாதபடி கொல்லப்பட வேண்டும்.+ ஏனென்றால், அவன் யெகோவாவின் கூடாரத்தைத் தீட்டுப்படுத்திவிட்டான். சுத்திகரிப்பு நீர் அவன்மேல் தெளிக்கப்படாததால் அவன் தீட்டுள்ளவன்.
21 சுத்திகரிப்பு நீரைத் தெளிப்பவரும்+ தன் உடைகளைத் துவைக்க வேண்டும். சுத்திகரிப்பு நீரைத் தொடுகிறவர் சாயங்காலம்வரை தீட்டுள்ளவராக இருப்பார். இது நிரந்தரச் சட்டம். 22 தீட்டுள்ளவன் எதைத் தொட்டாலும் அது தீட்டுப்பட்டுவிடும். அதைத் தொடுகிற எவனும் சாயங்காலம்வரை தீட்டுள்ளவனாக இருப்பான்’”+ என்றார்.
20 முதலாம் மாதத்தில், இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் சீன் வனாந்தரத்துக்கு வந்துசேர்ந்து, காதேசில் தங்கினார்கள்.+ அங்குதான் மிரியாம்+ இறந்துபோனாள், அங்குதான் அவள் அடக்கம் செய்யப்பட்டாள்.
2 அங்கே ஜனங்களுக்குத் தண்ணீர் கிடைக்காததால்,+ அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூடிவந்தார்கள். 3 அவர்கள் மோசேயோடு வாக்குவாதம் செய்து,+ “யெகோவாவின் முன்னால் எங்கள் சகோதரர்கள் செத்தபோதே நாங்களும் செத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்! 4 யெகோவாவின் சபையாரை எதற்காக இந்த வனாந்தரத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்தீர்கள்? நாங்களும் எங்கள் ஆடுமாடுகளும் இங்கே சாவதற்காகவா?+ 5 எதற்காக எங்களை எகிப்திலிருந்து இந்தப் பயங்கரமான இடத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்தீர்கள்?+ இங்கே பயிர்கள், அத்தி மரங்கள், திராட்சைக் கொடிகள், மாதுளைச் செடிகள் எதுவுமே இல்லை, குடிக்கத் தண்ணீர்கூட இல்லை”+ என்றார்கள். 6 உடனே, மோசேயும் ஆரோனும் சபையாரைவிட்டு சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்கு வந்து, சாஷ்டாங்கமாக விழுந்தார்கள். அப்போது, யெகோவாவின் மகிமை அவர்களுக்குத் தெரிய ஆரம்பித்தது.+
7 யெகோவா மோசேயிடம், 8 “உன் கையில் கோலை எடுத்துக்கொள். நீயும் உன் அண்ணன் ஆரோனும் ஜனங்கள் எல்லாரையும் ஒன்றுகூட்டுங்கள். அந்தக் கற்பாறை தண்ணீரைத் தரும்படி அவர்களுடைய கண் முன்னால் அதனிடம் பேசுங்கள். இப்படி, அந்தக் கற்பாறையிலிருந்து தண்ணீரை வரவைத்து, அதை ஜனங்களுக்கும் ஆடுமாடுகளுக்கும் குடிக்கக் கொடுங்கள்”+ என்றார்.
9 யெகோவா கட்டளை கொடுத்தபடி அவர் சன்னிதியில் இருந்த கோலை மோசே எடுத்துக்கொண்டார்.+ 10 பின்பு, மோசேயும் ஆரோனும் அந்தக் கற்பாறையின் முன்னால் சபையாரை ஒன்றுகூட்டினார்கள். மோசே அவர்களிடம், “அடங்காதவர்களே! இந்தக் கற்பாறையிலிருந்து நாங்கள் உங்களுக்குத் தண்ணீர் தர வேண்டுமா?” என்று சொல்லி,+ 11 கையை ஓங்கி, அந்தக் கோலால் கற்பாறையை இரண்டு தடவை அடித்தார். உடனே, அதிலிருந்து தண்ணீர் பாய்ந்து வந்தது. ஜனங்கள் குடித்தார்கள், அவர்களுடைய ஆடுமாடுகளும் குடித்தன.+
12 பிற்பாடு யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும், “இஸ்ரவேல் ஜனங்கள் முன்னால் நீங்கள் என்மேல் விசுவாசம் காட்டவில்லை, என்னைப் பரிசுத்தப்படுத்தவில்லை. அதனால், நான் கொடுக்கப்போகும் தேசத்துக்கு இந்தச் சபையாரை நீங்கள் கூட்டிக்கொண்டு போக மாட்டீர்கள்”+ என்றார். 13 அது மேரிபாவின்* தண்ணீர்+ என்று அழைக்கப்பட்டது. ஏனென்றால், அங்குதான் இஸ்ரவேலர்கள் யெகோவாவுடன் வாக்குவாதம் செய்தார்கள். அங்குதான் அவர்களுக்கு முன்னால் கடவுள் தன்னைப் பரிசுத்தப்படுத்தினார்.
14 மோசே காதேசிலிருந்து ஏதோம் ராஜாவிடம் ஆட்களை அனுப்பி,+ “உங்கள் சகோதரன் இஸ்ரவேல்+ சொல்லி அனுப்பும் செய்தி இதுதான்: ‘நாங்கள் இதுவரை பட்ட கஷ்டமெல்லாம் உங்களுக்கே நன்றாகத் தெரியும். 15 எங்கள் முன்னோர்கள் எகிப்துக்குப் போனார்கள்.+ அங்குதான் நாங்கள் பல வருஷங்கள் குடியிருந்தோம்.+ ஆனால், எங்களையும் எங்கள் முன்னோர்களையும் எகிப்தியர்கள் கொடுமைப்படுத்தினார்கள்.+ 16 நாங்கள் யெகோவாவிடம் கதறினோம்.+ அவர் அதைக் கேட்டு, ஒரு தூதரை அனுப்பி+ எங்களை எகிப்திலிருந்து கொண்டுவந்திருக்கிறார். இப்போது நாங்கள் உங்களுடைய தேசத்தின் எல்லையிலுள்ள காதேஸ் நகரத்தில் இருக்கிறோம். 17 உங்கள் தேசத்தின் வழியாகப் போக தயவுசெய்து எங்களுக்கு அனுமதி கொடுங்கள். உங்கள் வயல்கள் வழியாகவோ திராட்சைத் தோட்டங்கள் வழியாகவோ நாங்கள் போக மாட்டோம். எந்தக் கிணற்றிலிருந்தும் தண்ணீர் குடிக்க மாட்டோம். வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பாமல் நேராக ராஜ பாதையிலேயே நடந்து, உங்கள் தேசத்தைக் கடந்துபோவோம்’”+ என்று சொன்னார்.
18 அதற்கு ஏதோம் ராஜா, “எங்களுடைய தேசத்தின் வழியாக நீங்கள் போகக் கூடாது, மீறினால் வாளுடன் உங்களைச் சந்திப்பேன்” என்றான். 19 அதற்கு இஸ்ரவேலர்கள், “நாங்கள் நெடுஞ்சாலை வழியாகப் போய்க்கொள்கிறோம். நாங்களும் எங்கள் ஆடுமாடுகளும் உங்கள் தண்ணீரைக் குடித்தால், அதற்கான விலையைக் கொடுத்துவிடுகிறோம்.+ உங்கள் தேசத்தின் வழியாக நடந்து போவதற்கு மட்டும் அனுமதியுங்கள், வேறொன்றும் வேண்டாம்”+ என்றார்கள். 20 ஆனாலும் அவன், “நீங்கள் இந்த வழியாகப் போகக் கூடாது” என்றான்.+ அதுமட்டுமல்ல, அவர்களுக்கு எதிராக ஒரு பெரிய கூட்டத்தோடும் பலம்படைத்த படையோடும் வந்தான். 21 தன் தேசத்தின் வழியாகப் போக இஸ்ரவேலர்களை ஏதோம் ராஜா அனுமதிக்காததால் இஸ்ரவேலர்கள் அவனைவிட்டு விலகிப்போனார்கள்.+
22 இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் காதேசைவிட்டுப் புறப்பட்டு ஓர் என்ற மலைக்கு வந்துசேர்ந்தார்கள்.+ 23 ஏதோம் தேசத்தின் எல்லையிலிருந்த அந்த மலையில் யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும், 24 “ஆரோன் இறந்துபோவான்.*+ இஸ்ரவேலர்களுக்கு நான் கொடுக்கப்போகிற தேசத்துக்குள் அவன் போக மாட்டான். மேரிபாவின் தண்ணீர் விஷயத்தில் நீங்கள் இரண்டு பேரும் என் கட்டளையை மீறிவிட்டீர்கள்.+ 25 ஆரோனையும் அவனுடைய மகன் எலெயாசாரையும் நீ கூட்டிக்கொண்டு இந்த ஓர் மலைமேல் ஏறி வா. 26 ஆரோனுடைய குருத்துவ அங்கிகளைக் கழற்றி+ அவனுடைய மகன் எலெயாசாருக்குப்+ போட்டுவிடு. அங்கே ஆரோன் இறந்துபோவான்” என்றார்.
27 யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார். ஜனங்களுடைய கண் முன்னால் ஓர் என்ற மலைமேல் அவர்கள் ஏறினார்கள். 28 அங்கு ஆரோனுடைய குருத்துவ அங்கிகளைக் கழற்றி அவருடைய மகன் எலெயாசாருக்கு மோசே போட்டுவிட்டார். அதன்பின், அந்த மலை உச்சியில் ஆரோன் இறந்துபோனார்.+ பின்பு, மோசேயும் எலெயாசாரும் மலையிலிருந்து இறங்கி வந்தார்கள். 29 ஆரோன் இறந்துபோனதை இஸ்ரவேல் ஜனங்கள் தெரிந்துகொண்டபோது, அவர்கள் எல்லாரும் அவருக்காக 30 நாட்கள் துக்கம் அனுசரித்தார்கள்.+
21 கானானைச் சேர்ந்த ஆராத் நகரத்தின் ராஜா,+ நெகேபில் வாழ்ந்துவந்தான். அத்தாரிம் வழியாக இஸ்ரவேலர்கள் வருவதை அவன் கேள்விப்பட்டபோது, உடனே போய் அவர்களைத் தாக்கினான். அவர்களில் சிலரைப் பிடித்துக்கொண்டு போனான். 2 அதனால் இஸ்ரவேலர்கள் யெகோவாவிடம், “இந்த எதிரிகளை நீங்கள் எங்கள் கையில் கொடுத்தால், அவர்களுடைய நகரங்களை நாங்கள் நிச்சயம் அழிப்போம்” என்று சொல்லி நேர்ந்துகொண்டார்கள். 3 இஸ்ரவேலர்கள் நேர்ந்துகொண்டதை யெகோவா கேட்டு, கானானியர்களை அவர்கள் கையில் கொடுத்தார். அவர்கள் அந்த கானானியர்களையும் அவர்களுடைய நகரங்களையும் அடியோடு அழித்தார்கள். அதனால் அந்த இடத்துக்கு ஓர்மா*+ என்று பெயர் வைத்தார்கள்.
4 பின்பு, அவர்கள் ஓர் என்ற மலையிலிருந்து+ செங்கடலுக்குப் போகும் வழியாகத் தொடர்ந்து பயணம் செய்தார்கள். இப்படி, ஏதோம் தேசத்தைச் சுற்றிப் பயணம் செய்ததால்+ சோர்ந்துபோனார்கள். 5 அதனால், கடவுளுக்கும் மோசேக்கும் எதிராக அவர்கள் முணுமுணுத்துக்கொண்டே இருந்தார்கள்.+ “எங்களைச் சாகடிக்கவா எகிப்திலிருந்து இந்த வனாந்தரத்துக்குக் கொண்டுவந்தீர்கள்? இங்கே உணவும் இல்லை, தண்ணீரும் இல்லை.+ இந்தப் பாழாய்ப்போன மன்னாவைப் பார்த்தாலே வெறுப்பாக இருக்கிறது”+ என்றார்கள். 6 அதனால், அவர்களுக்கு நடுவே விஷப்பாம்புகளை யெகோவா அனுப்பினார். அந்தப் பாம்புகள் கடித்ததால் இஸ்ரவேலர்களில் ஏராளமானவர்கள் செத்துப்போனார்கள்.+
7 அதனால் ஜனங்கள் மோசேயிடம் வந்து, “நாங்கள் பாவம் செய்துவிட்டோம், யெகோவாவுக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பேசிவிட்டோம்.+ இந்தப் பாம்புகளை விரட்டச் சொல்லி எங்களுக்காக யெகோவாவிடம் கெஞ்சுங்கள்” என்று சொன்னார்கள். மோசே ஜனங்களுக்காகக் கடவுளிடம் கெஞ்சினார்.+ 8 அப்போது யெகோவா மோசேயிடம், “விஷப்பாம்பின் உருவத்தைச் செய்து ஒரு கம்பத்தில் மாட்டி வை. பாம்பு கடித்தவர்கள் அதைப் பார்த்தால் உயிர்பிழைப்பார்கள்” என்றார். 9 உடனடியாக மோசே செம்பினால் ஒரு பாம்பைச் செய்து+ அதைக் கம்பத்தில் மாட்டி வைத்தார்.+ பாம்பு கடித்தவர்கள் அந்தச் செம்புப் பாம்பைப் பார்த்தபோது உயிர்பிழைத்தார்கள்.+
10 அதன்பின் இஸ்ரவேலர்கள் புறப்பட்டுப் போய் ஓபோத்தில் முகாம்போட்டார்கள்.+ 11 பின்பு ஓபோத்திலிருந்து புறப்பட்டுப் போய், மோவாபுக்கு எதிரில் கிழக்குப் பக்கமாக இருக்கிற வனாந்தரத்திலே, இய்யா-அபாரீமில் முகாம்போட்டார்கள்.+ 12 அடுத்ததாக, அங்கிருந்து போய் சேரெத் பள்ளத்தாக்கின்*+ பக்கத்தில் முகாம்போட்டார்கள். 13 பின்பு அங்கிருந்து போய், எமோரியர்களின் எல்லையிலிருந்து தொடங்கும் வனாந்தரத்திலுள்ள அர்னோன் பிரதேசத்தில்+ முகாம்போட்டார்கள். அந்த அர்னோன் மோவாபுக்கும் எமோரியர்களின் தேசத்துக்கும் இடையில் இருக்கிற மோவாபின் எல்லை. 14 அதனால்தான், யெகோவாவின் போர்கள் என்ற புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “சூப்பாவிலுள்ள வாகேப், அர்னோனின் பள்ளத்தாக்குகள்,* 15 அவற்றில் ஓடுகிற கிளை ஆறுகள். இவை ஆர் நகரம்வரை போய் மோவாபின் எல்லையைத் தொடுகின்றன.”
16 அடுத்ததாக, அவர்கள் பேயேர் என்ற இடத்துக்கு வந்துசேர்ந்தார்கள். அங்கிருந்த கிணற்றைப் பற்றித்தான் யெகோவா மோசேயிடம், “ஜனங்களை ஒன்றுகூடிவரச் சொல், நான் அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன்” என்று சொன்னார்.
17 அந்தச் சமயத்தில் இஸ்ரவேலர்கள்,
“கிணறே, நீ ஊற்றெடு! ஜனங்களே, பாடுங்கள்!
18 அதிகாரக்கோலைப் பிடித்துக்கொண்டு அதிபதிகள் தோண்டிய கிணறு நீதானே!
கோலை எடுத்துக்கொண்டு தலைவர்கள் வெட்டிய கிணறு நீதானே!” என்று பாடினார்கள்.
பின்பு, வனாந்தரத்தைவிட்டு மாத்தனா என்ற இடத்துக்குப் போனார்கள். 19 அதன்பின், மாத்தனாவிலிருந்து நகாலியேலுக்கும் நகாலியேலிலிருந்து பாமோத்துக்கும்+ போனார்கள். 20 பாமோத்திலிருந்து மோவாப் தேசத்திலுள்ள+ பள்ளத்தாக்குக்குப் போனார்கள். அது எஷிமோனை* பார்த்தபடி+ பிஸ்காவின் உச்சியில்+ இருக்கிறது.
21 இஸ்ரவேலர்கள் எமோரியர்களின் ராஜாவான சீகோனிடம் ஆட்களை அனுப்பி,+ 22 “உங்கள் தேசத்தின் வழியாகப் போக எங்களுக்கு அனுமதி கொடுங்கள். அங்குள்ள எந்த வயலிலும் திராட்சைத் தோட்டத்திலும் நாங்கள் கால்வைக்க மாட்டோம். எந்தக் கிணற்றிலிருந்தும் தண்ணீர் குடிக்க மாட்டோம். நேராக ராஜ பாதையில் நடந்து உங்கள் தேசத்தைக் கடந்துபோவோம்”+ என்று சொன்னார்கள். 23 ஆனால், சீகோன் தன்னுடைய தேசத்தின் வழியாகப் போக இஸ்ரவேலர்களை அனுமதிக்கவில்லை. அவன் தன்னுடைய ஆட்கள் எல்லாரையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேலர்களுக்கு எதிராக வனாந்தரத்திலே போர் செய்யக் கிளம்பினான். அவன் யாகாசுக்குப் போய், அங்கே இஸ்ரவேலர்களோடு போர் செய்தான்.+ 24 ஆனால், இஸ்ரவேலர்கள் அவனை வாளால் வீழ்த்தி,+ அர்னோனிலிருந்து+ யாபோக் வரையுள்ள+ அவன் தேசத்தைக் கைப்பற்றினார்கள்.+ யாபோக் அம்மோனியர்களின் தேசத்துக்குப் பக்கத்தில் இருந்தது. ஆனால், யாசேர்+ அம்மோனியர்களின் எல்லையாக இருந்ததால்+ அதைத் தாண்டி அவர்கள் போகவில்லை.
25 எமோரியர்களின் இந்த எல்லா நகரங்களையும் இஸ்ரவேலர்கள் கைப்பற்றி அவற்றில் குடியிருக்க ஆரம்பித்தார்கள்.+ அவர்கள் எஸ்போனிலும் அதன் சிற்றூர்களிலும்* வாழத் தொடங்கினார்கள். 26 இந்த எஸ்போன், எமோரியர்களின் ராஜாவான சீகோனின் நகரம். சீகோன், மோவாபின் ராஜாவுடன் போர் செய்து, அர்னோன்வரை அவனுடைய தேசத்தைக் கைப்பற்றியிருந்தான். 27 இதனால்தான் இப்படிக் கேலியாகச் சொல்வது ஜனங்களிடையே வழக்கமானது:
“எஸ்போனுக்கு வாருங்கள்.
சீகோனின் நகரத்தைக் கட்டுங்கள், அதை எடுத்து நிறுத்துங்கள்.
28 எஸ்போனிலிருந்து நெருப்பு வந்தது, சீகோனின் நகரிலிருந்து தீப்பொறி பறந்தது.
அது மோவாபின் ஆர் நகரைச் சுட்டெரித்தது, அர்னோன் மேடுகளின் அதிபதிகளைப் பொசுக்கியது.
29 மோவாபே, உனக்குக் கேடுதான் வரும்! கேமோஷ் பக்தர்களே,+ உங்களுக்கு அழிவுதான் வரும்!
கேமோஷ் தன் பக்தர்களை அகதிகளாக்கிவிட்டான்! பக்தைகளை எமோரிய ராஜா சீகோனிடம் பிடித்துக் கொடுத்துவிட்டான்!
30 அவர்கள்மேல் அம்பு எறிவோம்.
எஸ்போன் நகரம் தீபோன்வரை+ தரைமட்டமாகும்.
அதை நோப்பாவரை நாம் பாழாக்குவோம்.
மேதேபா+ வரையில் தீ பரவும்.”
31 இப்படி, இஸ்ரவேலர்கள் எமோரியர்களின் தேசத்தில் குடியிருக்க ஆரம்பித்தார்கள். 32 பின்பு, யாசேர் நகரத்தை+ உளவு பார்க்க சில ஆட்களை மோசே அனுப்பினார். இஸ்ரவேலர்கள் அதன் சிற்றூர்களைக் கைப்பற்றி, அங்கிருந்த எமோரியர்களைத் துரத்தியடித்தார்கள். 33 அதன்பின் அவர்கள் அங்கிருந்து திரும்பி, பாசானுக்குப் போகும் சாலை வழியாகப் போனார்கள். அப்போது, அவர்களோடு போர் செய்வதற்காக பாசானின் ராஜாவாகிய ஓக்+ தன்னுடைய ஆட்கள் எல்லாரையும் கூட்டிக்கொண்டு எத்ரேய்க்கு வந்தான்.+ 34 அப்போது யெகோவா மோசேயிடம், “அவனைப் பார்த்துப் பயப்படாதே.+ அவனையும் அவனுடைய ஆட்கள் எல்லாரையும் அவனுடைய தேசத்தையும் நான் உன்னுடைய கையில் கொடுப்பேன்.+ எஸ்போனில் வாழ்ந்துவந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்குச் செய்தது போலவே அவனுக்கும் நீ செய்வாய்”+ என்று சொன்னார். 35 அவர் சொன்னபடியே, இஸ்ரவேலர்கள் அவனையும் அவனுடைய மகன்களையும் அவனுடைய ஆட்கள் எல்லாரையும் ஒருவர்விடாமல் வெட்டி வீழ்த்தினார்கள்.+ அதன்பின், அவர்கள் அந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டார்கள்.+
22 பின்பு, இஸ்ரவேல் ஜனங்கள் புறப்பட்டுப் போய் மோவாப் பாலைநிலத்தில் முகாம்போட்டார்கள். அது யோர்தானுக்கு இக்கரையில், எரிகோவுக்கு எதிரில் இருந்தது.+ 2 எமோரியர்கள்மேல் இஸ்ரவேலர்கள் நடத்திய தாக்குதல்கள் எல்லாவற்றையும் சிப்போரின் மகன் பாலாக்+ கேள்விப்பட்டிருந்தான். 3 அதோடு, இஸ்ரவேலர்கள் ஏராளமாக இருந்ததால், அவர்களை நினைத்து அவனுடைய ஜனங்களான மோவாபியர்கள் மிகவும் பயந்தார்கள், சொல்லப்போனால் கதிகலங்கினார்கள்.+ 4 அதனால், அவர்கள் மீதியான் தேசத்துப் பெரியோர்களிடம்,*+ “காட்டிலுள்ள புல்லை மாடுகள் மேய்ந்துவிடுவதுபோல், இந்த ஜனங்கள் நம்மைச் சுற்றியிருக்கிற எல்லாவற்றையும் மேய்ந்துவிடுவார்கள் போலிருக்கிறதே” என்றார்கள்.
சிப்போரின் மகன் பாலாக் அந்தச் சமயத்தில் மோவாப் தேசத்தின் ராஜாவாக இருந்தான். 5 பெயோரின் மகன் பிலேயாமைக்+ கூட்டிக்கொண்டு வருவதற்காக பாலாக் தன்னுடைய தூதுவர்களை அனுப்பினான். பிலேயாமுடைய தேசத்தின் ஆற்றுக்கு* பக்கத்தில் இருக்கிற பெத்தூருக்கு அவர்களை அனுப்பி, “எகிப்திலிருந்து ஒரு பெரிய கூட்டமே வந்திருக்கிறது. தேசமெங்கும் அவர்கள் பரவியிருக்கிறார்கள்,+ என் எதிரிலேயே குடியிருக்கிறார்கள். 6 அவர்கள் என்னைவிட பலசாலிகள். அதனால், தயவுசெய்து நீங்கள் வந்து எனக்காக அவர்களைச் சபியுங்கள்.+ அப்போது ஒருவேளை நான் அவர்களைத் தோற்கடித்து, இந்தத் தேசத்தைவிட்டுத் துரத்தியடிக்க முடியும். ஏனென்றால், நீங்கள் யாரை ஆசீர்வதிக்கிறீர்களோ அவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், யாரைச் சபிக்கிறீர்களோ அவர்கள் சபிக்கப்படுவார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்” என்று சொல்லச் சொன்னான்.
7 அதனால், மோவாப் தேசத்துப் பெரியோர்களும் மீதியான் தேசத்துப் பெரியோர்களும், சபிப்பதற்கான* கூலியை எடுத்துக்கொண்டு பிலேயாமிடம்+ போனார்கள். பாலாக் சொல்லி அனுப்பிய செய்தியை அவனிடம் சொன்னார்கள். 8 அதற்கு அவன், “இன்றைக்கு ராத்திரி இங்கேயே தங்கியிருங்கள். யெகோவா எனக்கு என்ன சொல்கிறார் என்பதைக் கேட்டுவிட்டு உங்களுக்குச் சொல்கிறேன்” என்றான். அதனால், மோவாபின் அதிகாரிகள் பிலேயாமுடன் தங்கினார்கள்.
9 கடவுள் பிலேயாமுக்குத் தோன்றி,+ “உன்னோடு இருக்கிற இந்த ஆட்கள் யார்?” என்று கேட்டார். 10 அதற்கு பிலேயாம் உண்மைக் கடவுளிடம், “மோவாபின் ராஜாவும் சிப்போரின் மகனுமாகிய பாலாக் இவர்களை என்னிடம் அனுப்பி, 11 ‘எகிப்திலிருந்து ஒரு பெரிய கூட்டமே வந்திருக்கிறது. தேசமெங்கும் அவர்கள் பரவியிருக்கிறார்கள். எனக்காக நீங்கள் வந்து அவர்களைச் சபியுங்கள்.+ அப்போது ஒருவேளை நான் அவர்களோடு போர் செய்து அவர்களைத் துரத்தியடிக்க முடியும்’ என்று சொல்லியிருக்கிறான்” என்றான். 12 அதற்குக் கடவுள் பிலேயாமிடம், “நீ இந்த ஆட்களுடன் போகக் கூடாது. அந்த ஜனங்களைச் சபிக்கவும் கூடாது, அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்”+ என்றார்.
13 பிலேயாம் காலையில் எழுந்து பாலாக்கின் அதிகாரிகளிடம், “நீங்கள் உங்களுடைய தேசத்துக்குப் போங்கள், உங்களுடன் வருவதற்கு யெகோவா எனக்கு அனுமதி தரவில்லை” என்றான். 14 அதனால், மோவாபின் அதிகாரிகள் கிளம்பி பாலாக்கிடம் வந்து, “பிலேயாம் எங்களோடு வர முடியாதென்று சொல்லிவிட்டார்” என்றார்கள்.
15 உடனே பாலாக் இன்னும் நிறைய அதிகாரிகளை, அதுவும் பெரிய பெரிய அதிகாரிகளை அனுப்பினான். 16 அவர்கள் பிலேயாமிடம் போய், “சிப்போரின் மகன் பாலாக் உங்களிடம் இப்படிச் சொல்லச் சொன்னார்: ‘தயவுசெய்து வாருங்கள், வராமல் மட்டும் இருந்துவிடாதீர்கள். 17 நான் உங்களை ரொம்பவே கௌரவப்படுத்துவேன், நீங்கள் எதைச் செய்யச் சொன்னாலும் செய்வேன். தயவுசெய்து வந்து எனக்காக இந்த ஜனங்களைச் சபியுங்கள்’” என்றார்கள். 18 ஆனால் பிலேயாம் பாலாக்கின் ஊழியர்களிடம், “எனக்காக பாலாக் தன்னுடைய மாளிகையையே கொடுத்தாலும், அதில் வெள்ளியையும் தங்கத்தையும் கொட்டிக் கொடுத்தாலும், என் கடவுளாகிய யெகோவாவின் கட்டளைக்கு விரோதமாக என்னால் ஒன்றும் செய்ய முடியாது. சின்ன விஷயமோ பெரிய விஷயமோ எதையும் செய்ய முடியாது.+ 19 ஆனால், இன்றைக்கு ராத்திரியும் தயவுசெய்து இங்கே தங்கியிருங்கள், யெகோவா என்னிடம் வேறெதாவது சொல்கிறாரா என்று பார்க்கலாம்” என்றான்.+
20 அன்றைக்கு ராத்திரி கடவுள் பிலேயாமிடம் தோன்றி, “இந்த ஆட்கள் உன்னைக் கூட்டிக்கொண்டு போக வந்திருந்தால், அவர்களுடன் போ. ஆனால், நான் சொல்லச் சொல்வதை மட்டும்தான் நீ சொல்ல வேண்டும்”+ என்றார். 21 பிலேயாம் காலையில் எழுந்து, தன்னுடைய கழுதைமேல் சேணம்* வைத்து, மோவாபின் அதிகாரிகளோடு புறப்பட்டான்.+
22 ஆனாலும், அவன் போனதால் கடவுள் அவன்மேல் மிகவும் கோபப்பட்டார். பிலேயாம் தன்னுடைய வேலைக்காரர்கள் இரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு, கழுதையின் மேல் ஏறிப்போனான். அப்போது, யெகோவாவின் தூதர் அவனுக்கு எதிராக வந்து வழியில் நின்றார். 23 உருவிய வாளுடன் யெகோவாவின் தூதர் வழியில் நிற்பதை அந்தக் கழுதை பார்த்தபோது, வழியைவிட்டு விலகி வயலுக்குள் போக முயற்சி செய்தது. கழுதையை மறுபடியும் வழிக்குக் கொண்டுவருவதற்காக பிலேயாம் அதை அடித்தான். 24 அப்போது, இரண்டு திராட்சைத் தோட்டங்களுக்கு நடுவிலிருந்த குறுகிய பாதையில் யெகோவாவின் தூதர் நின்றுகொண்டார். அதன் இரண்டு பக்கங்களிலும் கற்சுவர்கள் இருந்தன. 25 அந்தக் கழுதை யெகோவாவின் தூதரைப் பார்த்தபோது, மதிலோடு மதிலாக நெருக்கிக்கொண்டு போனது. அதனால், பிலேயாமின் கால் அந்தச் சுவரில் நசுங்கியது. அவன் மறுபடியும் அதை அடித்தான்.
26 யெகோவாவின் தூதர் மீண்டும் அங்கிருந்து போய், அந்தக் கழுதை வலது பக்கமோ இடது பக்கமோ திரும்ப முடியாதபடி ஒரு குறுகலான இடத்தில் நின்றுகொண்டார். 27 யெகோவாவின் தூதரைப் பார்த்தபோது அந்தக் கழுதை அப்படியே உட்கார்ந்துகொண்டது. அதனால் பிலேயாம் ஆத்திரமடைந்து, தன்னுடைய தடியால் கழுதையைப் போட்டு அடித்தான். 28 கடைசியில், யெகோவா அந்தக் கழுதையைப் பேச வைத்தார்.+ அது பிலேயாமிடம், “இப்படி என்னை மூன்று தடவை அடிப்பதற்கு+ நான் உங்களுக்கு என்ன செய்தேன்?” என்று கேட்டது. 29 அதற்கு பிலேயாம் அந்தக் கழுதையைப் பார்த்து, “நீ என்னை முட்டாளாக்குகிறாய். என் கையில் ஒரு வாள் மட்டும் இருந்திருந்தால், உன்னைக் கொன்றே போட்டிருப்பேன்!” என்றான். 30 அதற்கு அந்தக் கழுதை, “உங்கள் வாழ்நாளெல்லாம் நான்தானே உங்களைச் சுமந்து வந்திருக்கிறேன்? இதற்கு முன்பு எப்போதாவது இப்படிச் செய்திருக்கிறேனா?” என்று கேட்டது. அதற்கு அவன், “இல்லை!” என்றான். 31 அப்போது யெகோவா பிலேயாமின் கண்களைத் திறந்தார்.+ உருவிய வாளுடன் யெகோவாவின் தூதர் நிற்பதை அவன் பார்த்தான். உடனே, சாஷ்டாங்கமாக விழுந்தான்.
32 அப்போது யெகோவாவின் தூதர் அவனிடம், “ஏன் உன்னுடைய கழுதையை மூன்று தடவை அடித்தாய்? இதோ! உனக்கு எதிராக நான் வந்திருக்கிறேன். நீ என் விருப்பத்துக்கு நேர்மாறாகப் போய்க்கொண்டிருக்கிறாய்.+ 33 உன் கழுதை என்னைப் பார்த்து மூன்று தடவை விலகிப் போக முயற்சி செய்தது.+ அது மட்டும் விலகிப் போகாமல் இருந்திருந்தால், நான் உன்னைக் கொன்றிருப்பேன். அதை உயிரோடு விட்டிருப்பேன்” என்றார். 34 அதற்கு பிலேயாம் யெகோவாவின் தூதரிடம், “நான் பாவம் செய்துவிட்டேன். என்னைச் சந்திப்பதற்காக நீங்கள்தான் வழியில் நின்றுகொண்டிருந்தீர்கள் என்று எனக்குத் தெரியாது. உங்களுக்குப் பிடிக்காவிட்டால், நான் திரும்பிப் போய்விடுகிறேன்” என்றான். 35 அதற்கு யெகோவாவின் தூதர் பிலேயாமிடம், “நீ அந்த ஆட்களுடன் போ. ஆனால், நான் சொல்லச் சொல்வதை மட்டும்தான் நீ சொல்ல வேண்டும்” என்றார். அதனால், பாலாக்கின் அதிகாரிகளுடன் பிலேயாம் போனான்.
36 பிலேயாம் வருவதை பாலாக் கேள்விப்பட்டதுமே, அவனைச் சந்திக்க தன்னுடைய தேசத்தின் எல்லையில் இருந்த மோவாபின் நகரத்துக்குப் போனான். அது அர்னோன் கரையோரத்தில் இருந்தது. 37 அங்கே பாலாக் பிலேயாமிடம், “நான் உங்களைக் கூட்டிக்கொண்டு வருவதற்கு ஆட்களை அனுப்பினேனே, நீங்கள் ஏன் வரவில்லை? உங்களை என்னால் பெரிதாகக் கௌரவப்படுத்த முடியாதென்று நினைத்தீர்களா?”+ என்றான். 38 அதற்கு பிலேயாம் பாலாக்கிடம், “நான்தான் இப்போது வந்துவிட்டேனே. இருந்தாலும், என் இஷ்டப்படி என்னால் எப்படிப் பேச முடியும்? கடவுள் என் வாயில் அருளுகிற வார்த்தைகளைத்தான் என்னால் பேச முடியும்”+ என்றான்.
39 பிலேயாம் பாலாக்குடன் போனான். அவர்கள் கீரியாத்-ஊசோத்துக்கு வந்துசேர்ந்தார்கள். 40 பாலாக் ஆடுமாடுகளைப் பலி செலுத்தி, அவற்றில் கொஞ்சத்தை பிலேயாமுக்கும் அவனுடன் இருந்த அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்தான். 41 பாமோத்-பாகால் என்ற இடம் வசதியாக இருக்கும் என்பதால் காலையில் பிலேயாமை பாலாக் அங்கு கூட்டிக்கொண்டு வந்தான். அங்கிருந்து அவனால் எல்லா இஸ்ரவேலர்களையும் பார்க்க முடிந்தது.+
23 பின்பு பிலேயாம் பாலாக்கிடம், “இந்த இடத்தில் ஏழு பலிபீடங்களைக் கட்டி,+ ஏழு காளைகளையும் ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும் எனக்காகக் கொண்டுவாருங்கள்” என்றான். 2 பிலேயாம் சொன்னபடி பாலாக் உடனே செய்தான். அவர்கள் இரண்டு பேரும் ஒவ்வொரு பலிபீடத்திலும் ஒரு காளையையும் ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் பலி செலுத்தினார்கள்.+ 3 பின்பு பிலேயாம் பாலாக்கிடம், “உங்களுடைய தகன பலியின் பக்கத்திலேயே நில்லுங்கள், நான் போகிறேன். ஒருவேளை யெகோவா என்னைச் சந்திக்கலாம். அவர் எனக்குச் சொல்வதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றான். அதன்பின், அவன் ஒரு குன்றின் மேல் ஏறிப்போனான்.
4 பிலேயாமைக் கடவுள் சந்தித்தார்.+ அப்போது அவன் அவரிடம், “நான் ஏழு பலிபீடங்களை வரிசையாக வைத்து, ஒவ்வொரு பலிபீடத்திலும் ஒரு காளையையும் ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் பலி செலுத்தினேன்” என்றான். 5 யெகோவா பிலேயாமின் வாயில் தன்னுடைய வார்த்தைகளை அருளி,+ “நீ பாலாக்கிடம் போய் இதைப் பேசு” என்றார். 6 அதன்படியே அவன் போனபோது, பாலாக்கும் மோவாபின் அதிகாரிகள் எல்லாரும் அவனுடைய தகன பலியின் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார்கள். 7 அப்போது அவன்,
“மோவாப் ராஜா என்னை அராமிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்.+
பாலாக் ராஜா என்னைக் கிழக்கு மலைகளிலிருந்து அழைத்து வந்தார்.
அவருக்காக யாக்கோபைச் சபிக்கச் சொன்னார்.
இஸ்ரவேலைக் கண்டனம் செய்யச் சொன்னார்.+
8 கடவுள் சபிக்காத ஜனங்களை நான் சபிக்க முடியுமா?
யெகோவா கண்டனம் செய்யாத மக்களை நான் கண்டனம் செய்ய முடியுமா?+
9 குன்றின் உச்சியிலிருந்து அவர்களைப் பார்க்கிறேன்.
கற்பாறையின் மேலிருந்து அவர்களைக் காண்கிறேன்.
அவர்கள் அங்கே தனியாக வாழ்கிறார்கள்.+
மற்ற ஜனங்களிலிருந்து தாங்கள் வித்தியாசப்பட்டவர்கள் என்று நினைக்கிறார்கள்.+
10 மணல்போல் பரந்துகிடக்கும் யாக்கோபின் வம்சத்தை யாரால் எண்ண முடியும்?+
இஸ்ரவேலில் கால்வாசியைக்கூட ஒருவராலும் எண்ண முடியாது.
நேர்மையான ஜனங்களைப் போல நான் சாக வேண்டும்.
அவர்களுக்கு வரும் முடிவைப் போல என் முடிவு இருக்க வேண்டும்”
என்று பாடினான்.+
11 பாலாக் இதைக் கேட்டதும் பிலேயாமிடம், “என்ன காரியம் செய்திருக்கிறாய்! என்னுடைய எதிரிகளைச் சபிக்கச் சொல்லித்தானே உன்னைக் கூட்டிக்கொண்டு வந்தேன். ஆனால் நீ அவர்களை ஆசீர்வதித்துவிட்டாயே”+ என்றான். 12 அதற்கு அவன், “யெகோவா என் வாயில் அருளுவதைத்தானே நான் பேச வேண்டும்?”+ என்றான்.
13 அப்போது பாலாக், “தயவுசெய்து இன்னொரு இடத்துக்கு என்னோடு வா. அங்கே அவர்கள் எல்லாரையும் உன்னால் பார்க்க முடியாது, சிலரை மட்டும்தான் பார்க்க முடியும். எனக்காக அவர்களை அங்கிருந்து சபி”+ என்றான். 14 அதன்படியே, பிலேயாமை பிஸ்காவின் உச்சியிலுள்ள+ சோப்பீமின் வெட்டவெளிக்குக் கூட்டிக்கொண்டு போனான். அங்கே ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஒவ்வொரு பலிபீடத்திலும் ஒரு காளையையும் ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் பலி செலுத்தினான்.+ 15 அதன்பின் பிலேயாம் பாலாக்கிடம், “உங்களுடைய தகன பலிக்குப் பக்கத்திலேயே நில்லுங்கள். நான் போய் கடவுளிடம் பேசிவிட்டு வருகிறேன்” என்றான். 16 பின்பு, பிலேயாமை யெகோவா சந்தித்தார். அவனுடைய வாயில் வார்த்தைகளை அருளி,+ “நீ பாலாக்கிடம் போய் இதைப் பேசு” என்றார். 17 அதன்படியே, அவன் பாலாக்கிடம் வந்தான். அப்போது, பாலாக் தன்னுடைய தகன பலியின் பக்கத்தில் காத்துக்கொண்டிருந்தான். மோவாபின் அதிகாரிகள் அவனுடன் இருந்தார்கள். பாலாக் அவனிடம், “யெகோவா என்ன சொன்னார்?” என்று கேட்டான். 18 அதற்கு அவன்,
“பாலாக்கே, எழுந்து என் வார்த்தையைக் கேள்.
சிப்போரின் மகனே, நான் சொல்வதைக் கேள்.
அவர் சொல்வதைச் செய்யாமல் இருப்பாரா?
அவர் சொன்னதை நிறைவேற்றாமல் இருப்பாரா?+
20 இதோ! ஆசீர்வதிக்கும்படி எனக்குக் கட்டளை கிடைத்தது.
21 எந்த மந்திர சக்தியும் யாக்கோபிடம் பலிக்க அவர் விட மாட்டார்.
எந்தக் கெடுதலும் இஸ்ரவேலுக்கு வர அவர் அனுமதிக்க மாட்டார்.
அவர்களுடைய கடவுளான யெகோவா அவர்களுக்குத் துணையாக இருக்கிறார்.+
அவர்களுடைய ராஜாவாக அவர் போற்றிப் புகழப்படுகிறார்.
22 அவர்களை எகிப்திலிருந்து அவர் கூட்டிக்கொண்டு வருகிறார்.+
அவர்களுக்குக் காட்டு எருதின் கொம்புகள் போல அவர் இருக்கிறார்.+
23 யாக்கோபுக்கு எதிராக யாரும் மாயமந்திரம் செய்ய முடியாது.+
இஸ்ரவேலுக்கு எதிராக யாரும் குறிசொல்ல முடியாது.+
இப்போது யாக்கோபையும் இஸ்ரவேலையும் பார்த்து,
‘இதோ! கடவுள் செய்த அற்புதத்தைப் பாருங்கள்!’ என்று எல்லாரும் சொல்வார்கள்.
இரையைத் தின்றுதீர்க்கும்வரை ஓயாது.
இரத்தத்தைக் குடித்து முடிக்கும்வரை தூங்காது” என்று பாடினான்.+
25 அதற்கு பாலாக் பிலேயாமிடம், “அவர்களை உன்னால் சபிக்க முடியாதென்றால் அவர்களை ஆசீர்வதிக்கவும் கூடாது” என்றான். 26 அதற்கு பிலேயாம், “‘யெகோவா சொல்கிறபடியெல்லாம் செய்வேன்’ என்று நான் உங்களிடம் சொல்லவில்லையா?”+ என்றான்.
27 அப்போது பாலாக், “தயவுசெய்து என்னோடு வா, நான் உன்னை இன்னொரு இடத்துக்குக் கூட்டிக்கொண்டு போகிறேன். எனக்காக நீ அங்கிருந்து அவர்களைச் சபிப்பது உண்மைக் கடவுளுடைய விருப்பமாக இருக்கலாம்”+ என்றான். 28 அப்படிச் சொல்லி, பேயோரின் உச்சிக்கு பிலேயாமைக் கூட்டிக்கொண்டு போனான். அது எஷிமோனை* பார்த்தபடி இருந்தது.+ 29 அப்போது பிலேயாம் பாலாக்கிடம், “இந்த இடத்தில் ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஏழு காளைகளையும் ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும் எனக்காகக் கொண்டுவாருங்கள்”+ என்றான். 30 பிலேயாம் சொன்னபடியே பாலாக் செய்தான். ஒவ்வொரு பலிபீடத்திலும் ஒரு காளையையும் ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் பலி செலுத்தினான்.
24 இஸ்ரவேலர்களை ஆசீர்வதிக்கத்தான் யெகோவா விரும்புகிறார் என்பதை பிலேயாம் புரிந்துகொண்டபோது, மறுபடியும் மாயமந்திரத்தைத் தேடிப்போகாமல்+ வனாந்தரத்தின் பக்கமாகத் திரும்பினான். 2 இஸ்ரவேலர்கள் கோத்திரம் கோத்திரமாக முகாம்போட்டிருப்பதை+ பிலேயாம் பார்த்தபோது, கடவுளுடைய சக்தி அவனுக்குக் கிடைத்தது.+ 3 அப்போது அவன்,
“பெயோரின் மகன் பிலேயாம் பேசுகிறேன்,
கண்கள் திறக்கப்பட்டவன் சொல்கிறேன்.
4 தேவ வார்த்தையைக் காதில் கேட்டவன்,
சர்வவல்லமையுள்ளவரின் தரிசனத்தைப் பார்த்தவன்,
கண் மூடாமல் கீழே விழுந்தவன், பேசுகிறேன்.+
5 யாக்கோபே, உன் கூடாரம் எவ்வளவு அழகாக இருக்கிறது!
இஸ்ரவேலே, நீ குடியிருக்கும் இடங்களைப் பார்த்தால் எவ்வளவு பிரமிப்பாக இருக்கிறது!+
6 நீளமாக நெளிந்து போகும் பள்ளத்தாக்குகள்* போலவும்,+
ஆற்றின் கரையில் இருக்கும் தோட்டங்கள் போலவும்,
யெகோவா நட்டு வைத்த அகில் மரக்கன்றுகள் போலவும்,
நீரோடைக்குப் பக்கத்தில் ஓங்கி நிற்கும் தேவதாரு மரங்கள் போலவும் அவை இருக்கின்றன.
7 அவருடைய வாளிகளில் தண்ணீர் வழிந்தோடுகிறது.
8 அவர்களை எகிப்திலிருந்து அவர் கூட்டிக்கொண்டு வருகிறார்.
அவர்களுக்குக் காட்டு எருதின் கொம்புகள் போல அவர் இருக்கிறார்.
தன்னை ஒடுக்கும் தேசங்களை அவன் ஒழித்துக்கட்டுவான்.+
அவர்களுடைய எலும்புகளைக் கடித்து நொறுக்குவான்.
அம்புகளால் அவர்களைத் துளைப்பான்.
9 சிங்கம் போல அவன் உட்கார்ந்திருக்கிறான், சிங்கம் போலப் படுத்திருக்கிறான்.
அவனை எழுப்ப யாருக்குத் துணிச்சல் இருக்கிறது?
10 அப்போது பிலேயாமின் மேல் பாலாக் பயங்கரமாகக் கோபப்பட்டான். பின்பு, ஏளனமாகத் தன் கைகளைத் தட்டி, “என்னுடைய எதிரிகளைச் சபிக்கச் சொல்லி உன்னைக் கூட்டிக்கொண்டு வந்தேன்.+ ஆனால் இந்த மூன்று தடவையும் நீ அவர்களை ஆசீர்வதித்துவிட்டாய். 11 இப்போதே உன் வீட்டுக்குப் போய்விடு. நான் உன்னை ரொம்பவே கௌரவிக்க நினைத்தேன்,+ ஆனால் யெகோவா அதைத் தடுத்துவிட்டார்” என்றான்.
12 அதற்கு பிலேயாம் பாலாக்கிடம், “நான் உங்கள் ஆட்களிடம், 13 ‘எனக்காக பாலாக் தன்னுடைய மாளிகையையே கொடுத்தாலும், அதில் வெள்ளியையும் தங்கத்தையும் கொட்டிக் கொடுத்தாலும், என் கடவுளாகிய யெகோவாவின் கட்டளைக்கு விரோதமாக என்னால் ஒன்றும் செய்ய முடியாது. சின்ன விஷயமோ பெரிய விஷயமோ எதையும் செய்ய முடியாது. யெகோவா சொல்வதைத்தான் நான் சொல்வேன்’ என்று சொல்லவில்லையா?+ 14 இப்போது நான் என் ஜனங்களிடம் போகிறேன். வாருங்கள், எதிர்காலத்தில் இந்த ஜனங்கள் உங்களுடைய ஜனங்களுக்கு என்ன செய்வார்கள் என்பதைச் சொல்கிறேன்” என்றான். 15 பின்பு அவன்,
“பெயோரின் மகன் பிலேயாம் பேசுகிறேன்,
கண்கள் திறக்கப்பட்டவன் சொல்கிறேன்.+
16 தேவ வார்த்தையைக் காதில் கேட்டவன்,
உன்னதமான கடவுளின் அறிவைப் பெற்றவன்,
சர்வவல்லமையுள்ளவரின் தரிசனத்தைப் பார்த்தவன்,
கண் மூடாமல் கீழே விழுந்தவன், பேசுகிறேன்:
17 நான் அவரைப் பார்ப்பேன், ஆனால் இப்போது அல்ல.
நான் அவரைப் பார்ப்பேன், ஆனால் சீக்கிரத்தில் அல்ல.
மோவாபின் நெற்றிப்பொட்டில் அவர் கண்டிப்பாகத் தாக்குவார்.+
வெறிபிடித்த ஜனங்களின் மண்டையோட்டை நிச்சயமாக உடைப்பார்.
20 அமலேக்கியர்களைப் பார்த்தபோது அவன்,
“நீ கோட்டையிலே குடியிருக்கிறாய், கற்பாறையில் கூடு கட்டியிருக்கிறாய்.
22 ஆனால் கேயினைச் சுட்டெரிக்க ஒருவன் வருவான்.
அசீரியா உன்னைப் பிடித்துக்கொண்டு போவதற்கு எவ்வளவு காலமாகும்?” என்று பாடினான்.
23 அதன்பின் அவன்,
“ஐயோ! கடவுள் இதைச் செய்யும்போது யாரால் உயிர்தப்ப முடியும்?
24 கித்தீம்+ கரையோரத்திலிருந்து கப்பல்கள் மிதந்து வரும்.
அவை அசீரியாவை அலைக்கழிக்கும்.+
ஏபேரைப் பாடாய்ப் படுத்தும்.
ஆனால், அவனும் அடியோடு அழிந்துபோவான்” என்று பாடினான்.
25 அதன்பின் பிலேயாம்+ எழுந்து, தான் தங்கியிருந்த இடத்துக்குப் போனான். பாலாக்கும் தன்னுடைய இடத்துக்குப் போனான்.
25 இஸ்ரவேலர்கள் சித்தீமில்+ குடியிருந்த சமயத்தில், மோவாபியப் பெண்களுடன் பாலியல் முறைகேட்டில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.+ 2 அந்தப் பெண்கள் அவர்களிடம், ‘எங்களுடைய தெய்வங்களுக்குப் பலி செலுத்துகிறோம், நீங்களும் வாருங்கள்’ என்று சொல்லிக் கூப்பிட்டார்கள்.+ அவர்களும் போய் அந்தத் தெய்வங்களுக்குப் படைக்கப்பட்டதைச் சாப்பிட்டு, அவற்றைக் கும்பிட்டார்கள்.+ 3 இப்படி, பாகால் பேயோரின் வணக்கத்தில் இஸ்ரவேலர்கள் கலந்துகொண்டார்கள்.+ அதனால், அவர்கள்மேல் யெகோவாவுக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது. 4 யெகோவா மோசேயிடம், “இவர்களுடைய தலைவர்கள் எல்லாரையும் பிடித்துக் கொன்று பட்டப்பகலில் யெகோவாவுக்கு முன்னால் மரக்கம்பத்தில் தொங்கவிடு. அப்போதுதான், இஸ்ரவேலர்கள்மேல் பற்றியெரிகிற யெகோவாவின் கோபம் தணியும்” என்றார். 5 மோசே இஸ்ரவேலர்களின் நியாயாதிபதிகளிடம்,+ “நீங்கள் ஒவ்வொருவரும் போய், பாகால் பேயோரைக் கும்பிட்ட உங்கள் ஆட்களைக் கொலை செய்யுங்கள்”+ என்றார்.
6 சந்திப்புக் கூடார நுழைவாசலில் இஸ்ரவேலர்கள் அழுது புலம்பிக்கொண்டிருந்தபோது, இஸ்ரவேலன் ஒருவன் மீதியானியப் பெண் ஒருத்தியை+ மோசேக்கும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக முகாமுக்குள் கூட்டிக்கொண்டு போனான். 7 குருவாகிய ஆரோனின் பேரனும் எலெயாசாரின் மகனுமாகிய பினெகாஸ்+ அதைப் பார்த்ததும், ஜனங்களின் நடுவிலிருந்து உடனடியாக எழுந்துபோய் ஓர் ஈட்டியைக் கையில் எடுத்துக்கொண்டார். 8 பின்பு, அந்த இஸ்ரவேலனுக்குப் பின்னால் அவனுடைய கூடாரத்துக்குள் போய் அவனையும் அந்தப் பெண்ணையும் ஒரே குத்தாகக் குத்தினார்; ஈட்டி அந்தப் பெண்ணின் அடிவயிற்றை* துளைத்தது. உடனே, இஸ்ரவேலர்களைத் தாக்கிய கொள்ளைநோய் ஓய்ந்தது.+ 9 அந்தக் கொள்ளைநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 24,000.+
10 பின்பு யெகோவா மோசேயிடம், 11 “இஸ்ரவேலர்கள் மத்தியில் குருவாகிய ஆரோனின் பேரனும் எலெயாசாரின் மகனுமாகிய பினெகாஸ்+ எனக்காகப் பக்திவைராக்கியம் காட்டி, அவர்கள்மேல் எனக்கிருந்த கோபத்தைத் தணித்துவிட்டான்.+ அதனால்தான், நான் முழு பக்தியை* எதிர்பார்க்கிற கடவுளாக+ இருந்தாலும் இஸ்ரவேலர்களை அடியோடு அழிக்காமல் விட்டுவிட்டேன். 12 நீ அவனிடம் போய், அவனோடு நான் சமாதான ஒப்பந்தம் செய்யப்போகிறேன் என்று சொல். 13 குருத்துவச் சேவை அவனுக்கும் அவனுடைய சந்ததிக்கும் நிரந்தரமானது என்பதற்கு இந்த ஒப்பந்தம் அடையாளமாக இருக்கும்.+ ஏனென்றால், தன்னுடைய கடவுளுக்காகப் பக்திவைராக்கியம் காட்டி,+ இஸ்ரவேல் ஜனங்களுக்காகப் பாவப் பரிகாரம் செய்தான்” என்றார்.
14 மீதியானியப் பெண்ணுடன் கொலை செய்யப்பட்ட இஸ்ரவேலனின் பெயர் சிம்ரி. அவன் சல்லூவின் மகன், சிமியோனியர்களின் தந்தைவழிக் குடும்பத்துக்குத் தலைவன். 15 கொலை செய்யப்பட்ட அந்த மீதியானியப்+ பெண்ணின் பெயர் கஸ்பி. அவள் மீதியானியனான சூரின்+ மகள். அவன் தன்னுடைய தந்தைவழிக் குடும்பத்துக்குத் தலைவன்.
16 பிற்பாடு யெகோவா மோசேயிடம், 17 “மீதியானியர்களுக்கு விரோதமாகப் போய், அவர்களைக் கொன்றுபோடுங்கள்.+ 18 ஏனென்றால் பேயோரின் விஷயத்திலும்,+ பேயோரில் கொள்ளைநோய் பரவிய நாளில் கொலை செய்யப்பட்ட+ அவர்களுடைய சகோதரியான மீதியானியத் தலைவனின் மகள் கஸ்பியின்+ விஷயத்திலும் அவர்கள் உங்களுக்கு விரோதமாகத் தந்திரமாக நடந்துகொண்டார்கள்” என்றார்.
26 அந்தக் கொள்ளைநோய்+ ஓய்ந்த பின்பு, யெகோவா மோசேயிடமும் குருவாகிய ஆரோனின் மகன் எலெயாசாரிடமும், 2 “படையில் சேவை செய்யத் தகுதியான ஆண்களில் 20 வயதும் அதற்கு அதிகமான வயதும் உள்ளவர்களை இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து தேர்ந்தெடுங்கள். அவர்களுடைய தந்தைவழிக் குடும்பங்களின்படி அவர்களைக் கணக்கெடுங்கள்”+ என்றார். 3 அதனால், எரிகோவுக்குப்+ பக்கத்திலே யோர்தானை ஒட்டியுள்ள மோவாப் பாலைநிலத்தில்+ இருந்த ஜனங்களிடம் மோசேயும் குருவாகிய எலெயாசாரும்,+ 4 “மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே, 20 வயதும் அதற்கு அதிகமான வயதும் உள்ள எல்லாரையும் கணக்கெடுங்கள்”+ என்றார்கள்.
எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த இஸ்ரவேல் வம்சத்தார் இவர்கள்தான்: 5 இஸ்ரவேலின் மூத்த மகன் ரூபன்.+ ரூபனின் மகன்களும்+ அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: ஆனோக், இவருடைய வம்சத்தார் ஆனோக்கியர்கள்; பல்லூ, இவருடைய வம்சத்தார் பல்லூவியர்கள்; 6 எஸ்ரோன், இவருடைய வம்சத்தார் எஸ்ரோனியர்கள்; கர்மீ, இவருடைய வம்சத்தார் கர்மீயர்கள். 7 இவர்கள்தான் ரூபன் வம்சத்தார். இவர்களில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 43,730 பேர்.+
8 பல்லூவின் மகன் எலியாப். 9 எலியாபின் மகன்கள்: நேமுவேல், தாத்தான், அபிராம். இந்த தாத்தானும் அபிராமும் ஜனங்களின் பிரதிநிதிகள். அவர்கள் கோராகுவின் கூட்டாளிகளோடு+ சேர்ந்துகொண்டு மோசேயையும் ஆரோனையும் எதிர்த்தார்கள்.+ இப்படி, யெகோவாவையே எதிர்த்தார்கள்.+
10 அப்போது, பூமி பிளந்து அவர்களை விழுங்கியது. கோராகுவும் அவருடைய கூட்டாளிகள் 250 பேரும் நெருப்புக்குப் பலியானார்கள்.+ அவர்களுடைய கெட்ட உதாரணம் எல்லாருக்கும் ஓர் எச்சரிக்கையாக ஆனது.+ 11 ஆனால், கோராகுவின் மகன்கள் சாகவில்லை.+
12 சிமியோனின் மகன்களும்+ அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: நேமுவேல், இவருடைய வம்சத்தார் நேமுவேலர்கள்; யாமின், இவருடைய வம்சத்தார் யாமினியர்கள்; யாகீன், இவருடைய வம்சத்தார் யாகீனியர்கள்; 13 சேராகு, இவருடைய வம்சத்தார் சேராகியர்கள்; சாவூல், இவருடைய வம்சத்தார் சாவூலியர்கள். 14 சிமியோன் வம்சத்தாராகிய இவர்கள் மொத்தம் 22,200 பேர்.+
15 காத்தின் மகன்களும்+ அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: சிப்போன், இவருடைய வம்சத்தார் சிப்போனியர்கள்; ஹகி, இவருடைய வம்சத்தார் ஹகியர்கள்; சூனி, இவருடைய வம்சத்தார் சூனியர்கள்; 16 ஒஸ்னி, இவருடைய வம்சத்தார் ஒஸ்னியர்கள்; ஏரி, இவருடைய வம்சத்தார் ஏரியர்கள்; 17 ஆரோத், இவருடைய வம்சத்தார் ஆரோதியர்கள்; அரேலி, இவருடைய வம்சத்தார் அரேலியர்கள். 18 இவர்கள்தான் காத் வம்சத்தார். இவர்களில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 40,500 பேர்.+
19 யூதாவின் மகன்கள்+ ஏர், ஓனேன்.+ ஆனால், இவர்கள் இரண்டு பேரும் கானான் தேசத்தில் இறந்துபோனார்கள்.+ 20 யூதாவின் மகன்களும் அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: சேலா,+ இவருடைய வம்சத்தார் சேலாவியர்கள்; பாரேஸ்,+ இவருடைய வம்சத்தார் பாரேசியர்கள்; சேராகு,+ இவருடைய வம்சத்தார் சேராகியர்கள். 21 பாரேசின் மகன்களும் அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: எஸ்ரோன்,+ இவருடைய வம்சத்தார் எஸ்ரோனியர்கள்; ஆமூல்,+ இவருடைய வம்சத்தார் ஆமூலியர்கள். 22 இவர்கள்தான் யூதா வம்சத்தார். இவர்களில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 76,500 பேர்.+
23 இசக்காரின் மகன்களும்+ அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: தோலா,+ இவருடைய வம்சத்தார் தோலாவியர்கள்; புவா, இவருடைய வம்சத்தார் புவாவியர்கள்; 24 யாசூப், இவருடைய வம்சத்தார் யாசூபியர்கள்; சிம்ரோன், இவருடைய வம்சத்தார் சிம்ரோனியர்கள். 25 இவர்கள்தான் இசக்கார் வம்சத்தார். இவர்களில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 64,300 பேர்.+
26 செபுலோனின் மகன்களும்+ அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: சேரேத், இவருடைய வம்சத்தார் சேரேத்தியர்கள்; ஏலோன், இவருடைய வம்சத்தார் ஏலோனியர்கள்; யாலேயேல், இவருடைய வம்சத்தார் யாலேயேலியர்கள். 27 இவர்கள்தான் செபுலோன் வம்சத்தார். இவர்களில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 60,500 பேர்.+
28 யோசேப்பின் மகன்களான+ மனாசே, எப்பிராயீம்+ ஆகியவர்களின் வம்சத்தார் இவர்கள்தான். 29 மனாசேயின்+ மகன்கள்: மாகீர்,+ இவருடைய வம்சத்தார் மாகீரியர்கள். மாகீரின் மகன் கீலேயாத்.+ கீலேயாத்தின் வம்சத்தார் கீலேயாத்தியர்கள். 30 கீலேயாத்தின் மகன்களும் அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: ஈயேசேர், இவருடைய வம்சத்தார் ஈயேசேரியர்கள்; ஏலேக், இவருடைய வம்சத்தார் ஏலேக்கியர்கள்; 31 அஸ்ரியேல், இவருடைய வம்சத்தார் அஸ்ரியேலர்கள்; சீகேம், இவருடைய வம்சத்தார் சீகேமியர்கள்; 32 செமீதா, இவருடைய வம்சத்தார் செமீதாவியர்கள்; ஹேப்பேர், இவருடைய வம்சத்தார் ஹேப்பேரியர்கள். 33 ஹேப்பேரின் மகனாகிய செலோப்பியாத்துக்கு மகன்கள் இல்லை, மகள்கள் மட்டும்தான் இருந்தார்கள்.+ செலோப்பியாத்தின் மகள்களுடைய பெயர்கள்:+ மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள். 34 இவர்கள்தான் மனாசே வம்சத்தார். இவர்களில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 52,700 பேர்.+
35 எப்பிராயீமின்+ மகன்களும் அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: சுத்தெலாக்,+ இவருடைய வம்சத்தார் சுத்தெலாக்கியர்கள்; பெகேர், இவருடைய வம்சத்தார் பெகேரியர்கள்; தாகான், இவருடைய வம்சத்தார் தாகானியர்கள்; 36 சுத்தெலாக்கின் மகன், ஏரான். இவருடைய வம்சத்தார் ஏரானியர்கள். 37 இவர்கள்தான் எப்பிராயீம் வம்சத்தார். இவர்களில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 32,500 பேர்.+ இவர்கள்தான் யோசேப்பின் வம்சத்தார்.
38 பென்யமீனின் மகன்களும்+ அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: பேலா,+ இவருடைய வம்சத்தார் பேலாயர்கள்; அஸ்பேல், இவருடைய வம்சத்தார் அஸ்பேலர்கள்; அகிராம், இவருடைய வம்சத்தார் அகிராமியர்கள்; 39 செப்புப்பாம், இவருடைய வம்சத்தார் சுப்பீமியர்கள்; உப்பாம், இவருடைய வம்சத்தார் உப்பாமியர்கள். 40 பேலாவின் மகன்கள் ஆரேத், நாகமான்.+ ஆரேத்தின் வம்சத்தார் ஆரேத்தியர்கள்; நாகமானின் வம்சத்தார் நாகமானியர்கள். 41 இவர்கள்தான் பென்யமீன் வம்சத்தார். இவர்களில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 45,600 பேர்.+
42 தாணின்+ மகன் சூகாம், இவருடைய வம்சத்தார் சூகாமியர்கள். தாண் வம்சத்தார் இவர்கள்தான். 43 சூகாமியர்களின் வம்சத்தாரில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 64,400 பேர்.+
44 ஆசேரின் மகன்களும்+ அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: இம்னா, இவருடைய வம்சத்தார் இம்னாவியர்கள்; இஸ்வி, இவருடைய வம்சத்தார் இஸ்வியர்கள்; பெரீயா, இவருடைய வம்சத்தார் பெரீயாவியர்கள்; 45 பெரீயாவின் மகன்கள்: ஹேபெர், இவருடைய வம்சத்தார் ஹேபெரியர்கள்; மல்கியேல், இவருடைய வம்சத்தார் மல்கியேலியர்கள். 46 ஆசேருடைய மகளின் பெயர் சேராள். 47 இவர்கள்தான் ஆசேர் வம்சத்தார். இவர்களில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 53,400 பேர்.+
48 நப்தலியின் மகன்களும்+ அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: யாத்சியேல், இவருடைய வம்சத்தார் யாத்சியேலியர்கள்; கூனி, இவருடைய வம்சத்தார் கூனியர்கள்; 49 எத்செர், இவருடைய வம்சத்தார் எத்செரியர்கள்; சில்லேம், இவருடைய வம்சத்தார் சில்லேமியர்கள். 50 இவர்கள்தான் நப்தலி வம்சத்தார். இவர்களில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 45,400 பேர்.+
51 இப்படி, இஸ்ரவேலில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 6,01,730 பேர்.+
52 பின்பு யெகோவா மோசேயிடம், 53 “ஒவ்வொரு கோத்திரத்திலும் உள்ள ஆட்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி நிலத்தைப் பங்குபோட்டுக் கொடுக்க வேண்டும்.+ 54 ஒரு தொகுதியில் நிறைய பேர் இருந்தால் அதிக நிலத்தைப் பங்குபோட்டுக் கொடுக்க வேண்டும், கொஞ்சம் பேர் மட்டும் இருந்தால் கொஞ்சம் நிலத்தை மட்டும் பங்குபோட்டுக் கொடுக்க வேண்டும்.+ பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி ஒவ்வொரு தொகுதிக்கும் நிலத்தைக் கொடுக்க வேண்டும். 55 ஆனாலும், குலுக்கல் முறையில்தான் தேசத்தைப் பங்குபோட்டுக் கொடுக்க வேண்டும்.+ ஒவ்வொரு தொகுதிக்கும் அந்தந்த கோத்திரத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தைப் பங்குபோட்டுக் கொடுக்க வேண்டும். 56 பெரிய தொகுதிக்கும் சரி, சிறிய தொகுதிக்கும் சரி, யாருக்கு எந்தப் பகுதி என்பதைக் குலுக்கல் போட்டுத் தீர்மானிக்க வேண்டும்” என்றார்.
57 பெயர்ப்பதிவு செய்யப்பட்ட லேவியர்களும்+ அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: கெர்சோன், இவருடைய வம்சத்தார் கெர்சோனியர்கள்; கோகாத்,+ இவருடைய வம்சத்தார் கோகாத்தியர்கள்; மெராரி, இவருடைய வம்சத்தார் மெராரியர்கள். 58 லேவியர்களின் வம்சத்தார் இவர்கள்தான்: லிப்னியர்கள்,+ எப்ரோனியர்கள்,+ மகேலியர்கள்,+ மூசியர்கள்,+ கோராகியர்கள்.+
கோகாத்தின் மகன் அம்ராம்.+ 59 அம்ராமின் மனைவி பெயர் யோகெபேத்.+ இவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்தவள். இவள் ஆரோனையும் மோசேயையும் இவர்களுடைய சகோதரி மிரியாமையும்+ அம்ராமுக்குப் பெற்றெடுத்தாள். 60 ஆரோனுக்கு நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்ற மகன்கள் பிறந்தார்கள்.+ 61 நாதாபும் அபியூவும் அத்துமீறி* தூபம் காட்டியதால் யெகோவாவின் சன்னிதியில் செத்துப்போனார்கள்.+
62 லேவியர்களில் ஒரு மாதமும் அதற்கு அதிகமான வயதும் உள்ள எல்லா ஆண்களும் பெயர்ப்பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் மொத்தம் 23,000 பேர்.+ ஆனால், அவர்கள் மற்ற இஸ்ரவேலர்களோடு சேர்த்து பெயர்ப்பதிவு செய்யப்படவில்லை.+ ஏனென்றால் இஸ்ரவேலர்களின் நடுவில் அவர்களுக்கு எந்தச் சொத்தும் கொடுக்கப்படவில்லை.+
63 எரிகோவுக்குப் பக்கத்தில் யோர்தானை ஒட்டியுள்ள மோவாப் பாலைநிலத்தில் மோசேயும் குருவாகிய எலெயாசாரும் பெயர்ப்பதிவு செய்த இஸ்ரவேலர்கள் இவர்கள்தான். 64 ஆனால், மோசேயும் குருவாகிய ஆரோனும் சீனாய் வனாந்தரத்தில் பெயர்ப்பதிவு செய்த யாருமே இவர்களோடு இல்லை.+ 65 ஏனென்றால், “வனாந்தரத்தில் அவர்கள் நிச்சயம் சாவார்கள்” என்று யெகோவா சொல்லியிருந்தார்.+ அதனால், எப்புன்னேயின் மகனாகிய காலேபையும் நூனின் மகனாகிய யோசுவாவையும் தவிர அவர்களில் ஒருவர்கூட இவர்களோடு இல்லை.+
27 யோசேப்பின் மகன் மனாசே, மனாசேயின் மகன் மாகீர், மாகீரின் மகன் கீலேயாத், கீலேயாத்தின் மகன் ஹேப்பேர், ஹேப்பேரின் மகன் செலோப்பியாத்.+ செலோப்பியாத்தின் மகள்களுடைய பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள். 2 இந்தப் பெண்கள் சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாசலுக்கு வந்து, மோசேக்கும் குருவாகிய எலெயாசாருக்கும் தலைவர்களுக்கும்+ ஜனங்களுக்கும் முன்னால் நின்று, 3 “எங்களுடைய அப்பா வனாந்தரத்தில் செத்துப்போனார், ஆனால் யெகோவாவுக்கு அடங்கி நடக்காத கோராகுவின் கும்பலோடு+ சேர்ந்ததால் அவர் சாகவில்லை, தன்னுடைய பாவத்தினால்தான் செத்துப்போனார். அவருக்கு மகன்கள் யாரும் இல்லை. 4 எங்களுடைய அப்பாவுக்கு ஆண் வாரிசு இல்லை என்பதற்காக அவருடைய பெயர் ஏன் அவருடைய வம்சத்திலிருந்து மறைந்துபோக வேண்டும்? எங்கள் அப்பாவின் அண்ணன் தம்பிகளோடு எங்களுக்கும் சொத்தில் பங்கு கொடுங்கள்” என்றார்கள். 5 உடனே மோசே அவர்களுடைய வழக்கை யெகோவாவிடம் சொன்னார்.+
6 அப்போது யெகோவா மோசேயிடம், 7 “செலோப்பியாத்தின் மகள்கள் கேட்பது சரிதான். நீ அவர்களுடைய அப்பாவின் அண்ணன் தம்பிகளோடு அவர்களுக்கும் கண்டிப்பாகச் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும். அவர்களுடைய அப்பாவின் சொத்தை அவர்களுடைய பெயருக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும்.+ 8 இஸ்ரவேலர்களிடம் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘ஒருவன் ஆண் வாரிசு இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய பரம்பரைச் சொத்து அவனுடைய மகளுக்குப் போய்ச் சேர வேண்டும். 9 அவனுக்கு மகளும் இல்லாவிட்டால், அவனுடைய பரம்பரைச் சொத்தை அவனுடைய சகோதரர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். 10 அவனுக்குச் சகோதரர்களும் இல்லாவிட்டால், அவனுடைய அப்பாவின் சகோதரர்களுக்கு அந்தச் சொத்தைக் கொடுக்க வேண்டும். 11 அவன் அப்பாவுக்கும் சகோதரர்கள் இல்லாவிட்டால், அவனுடைய மிக நெருங்கிய இரத்த சொந்தத்துக்கு அந்தச் சொத்தைக் கொடுக்க வேண்டும். அது அவருக்குச் சொந்தமாகிவிடும். மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடி, இந்தத் தீர்மானம்* இஸ்ரவேலர்களுக்கு ஒரு சட்டமாக இருக்கும்’” என்றார்.
12 பின்பு யெகோவா மோசேயிடம், “அபாரீம் மலைக்கு+ ஏறிப்போய், இஸ்ரவேலர்களுக்கு நான் கொடுக்கப்போகும் தேசத்தை அங்கிருந்து பார்.+ 13 அதை நீ பார்த்த பிறகு, உன் அண்ணன் ஆரோன் இறந்ததுபோல்+ நீயும் இறந்துபோவாய்.*+ 14 ஏனென்றால், சீன் வனாந்தரத்தில் ஜனங்கள் என்னிடம் வாக்குவாதம் செய்தபோது, அவர்களுக்குத் தண்ணீர் கொடுத்த விஷயத்தில் நீங்கள் இரண்டு பேரும் என்னை மகிமைப்படுத்தாமல், என் கட்டளையை மீறி நடந்தீர்கள்.+ அந்தத் தண்ணீர்தான் சீன் வனாந்தரத்தில்+ காதேசுக்குப்+ பக்கத்திலுள்ள மேரிபாவின் தண்ணீர்”+ என்றார்.
15 அப்போது மோசே யெகோவாவிடம், 16 “யெகோவாவே, எல்லா ஜனங்களுக்கும் உயிர் கொடுக்கிற கடவுளே, இந்த ஜனங்களுக்காக ஒரு தலைவனை நியமியுங்கள். 17 அவன் எல்லா விஷயங்களிலும் இவர்களுக்குத் தலைமை தாங்கி, இவர்களை வழிநடத்தட்டும். அப்போதுதான், யெகோவாவின் ஜனங்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல இருக்க மாட்டார்கள்” என்றார். 18 அதனால் யெகோவா மோசேயிடம், “அதற்குத் தகுந்த குணமுள்ளவன் நூனின் மகனாகிய யோசுவாதான். அவனைக் கூப்பிட்டு, அவன்மேல் உன் கையை வை.+ 19 பின்பு, குருவாகிய எலெயாசாருக்கும் ஜனங்கள் எல்லாருக்கும் முன்பாக அவனை நிற்க வைத்து, அவர்களுடைய கண் முன்னால் அவனைத் தலைவனாக நியமி.+ 20 உனக்கு இருக்கிற அதிகாரத்தில் கொஞ்சத்தை அவனுக்குக் கொடு.+ அப்போதுதான், இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் அவன் பேச்சைக் கேட்பார்கள்.+ 21 யோசுவா குருவாகிய எலெயாசாருக்கு முன்னால் நிற்க வேண்டும். எலெயாசார் அவனுக்காக ஊரீம்+ மூலம் யெகோவாவிடம் விசாரித்துச் சொல்வான். பின்பு, தங்களுக்குக் கொடுக்கப்படும் கட்டளையை யோசுவாவும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் பின்பற்றுவார்கள்” என்றார்.
22 யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார். அவர் யோசுவாவைக் கூப்பிட்டு, குருவாகிய எலெயாசாருக்கு முன்னாலும் எல்லா ஜனங்களுக்கு முன்னாலும் நிற்க வைத்தார். 23 பின்பு, அவர்மேல் கை வைத்து அவரை நியமித்தார்.+ யெகோவா சொன்னபடியே மோசே செய்தார்.+
28 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “நீ இஸ்ரவேலர்களுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘எனக்கு உணவு படைக்க, அதாவது பலி செலுத்த, நீங்கள் மறக்கக் கூடாது. நான் சொல்லியிருக்கும் நேரங்களில், அதைத் தகன பலியாக எனக்குச் செலுத்த வேண்டும்.+ அந்த வாசனை எனக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.’
3 அதோடு நீ அவர்களிடம், ‘குறையில்லாத ஒருவயது செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் இரண்டை ஒவ்வொரு நாளும் யெகோவாவுக்குத் தகன பலியாக நீங்கள் செலுத்த வேண்டும். அதுதான் தினமும் செலுத்தப்படுகிற* தகன பலி.+ 4 ஒரு செம்மறியாட்டுக் கடாக் குட்டியைக் காலையிலும் இன்னொரு செம்மறியாட்டுக் கடாக் குட்டியைச் சாயங்காலத்திலும் செலுத்த வேண்டும்.+ 5 அவற்றோடு, இடித்துப் பிழிந்த ஒரு லிட்டர்* எண்ணெயை, ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* நைசான மாவில் கலந்து உணவுக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும்.+ 6 அதுதான், சீனாய் மலையில் யெகோவா கட்டளை கொடுத்தபடியே அவருக்குத் தினமும் செலுத்தப்படுகிற* தகன பலி.+ அந்த வாசனை அவருக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். 7 அதனோடு சேர்த்து திராட்சமதுவைக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு செம்மறியாட்டுக் கடாக் குட்டிக்காகவும் ஒரு லிட்டர் திராட்சமதுவைச் செலுத்த வேண்டும்.+ யெகோவாவுக்குக் காணிக்கையாக அதைப் பலிபீடத்தில்* ஊற்ற வேண்டும். 8 இன்னொரு செம்மறியாட்டுக் கடாக் குட்டியைச் சாயங்கால நேரத்தில் செலுத்த வேண்டும். காலையில் செலுத்தியதைப் போலவே, இந்தப் பலியோடு சேர்த்து உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+
9 ஓய்வுநாளில்,+ குறையில்லாத ஒருவயது செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் இரண்டைச் செலுத்த வேண்டும். அதனோடு சேர்த்து, உணவுக் காணிக்கையாக, எண்ணெய் கலந்த நைசான மாவை ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு* கொண்டுவர வேண்டும். அதனோடு கொடுக்க வேண்டிய திராட்சமது காணிக்கையையும் கொண்டுவர வேண்டும். 10 ஓய்வுநாளில் செலுத்த வேண்டிய தகன பலி இதுதான். தினமும் செலுத்தப்படுகிற* தகன பலியோடும் அதனோடு கொடுக்க வேண்டிய திராட்சமது காணிக்கையோடும் இதைச் செலுத்த வேண்டும்.+
11 ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும், யெகோவாவுக்குத் தகன பலியாக இரண்டு இளம் காளைகளையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும், குறையில்லாத ஒருவயதுள்ள ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் செலுத்த வேண்டும்.+ 12 ஒவ்வொரு காளையுடனும், உணவுக் காணிக்கையாக, எண்ணெய் கலந்த நைசான மாவை ஒரு எப்பா அளவிலே பத்தில் மூன்று பங்கு* கொண்டுவர வேண்டும்.+ செம்மறியாட்டுக் கடாவுடன், உணவுக் காணிக்கையாக, எண்ணெய் கலந்த நைசான மாவை ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு* கொண்டுவர வேண்டும்.+ 13 ஒவ்வொரு செம்மறியாட்டுக் கடாக் குட்டியுடனும், உணவுக் காணிக்கையாக, எண்ணெய் கலந்த நைசான மாவை ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* கொண்டுவர வேண்டும். இவற்றைத் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+ 14 ஒவ்வொரு காளையுடனும் ஒன்றே முக்கால் லிட்டர்* திராட்சமதுவையும்,+ செம்மறியாட்டுக் கடாவுடன் ஒன்றேகால் லிட்டர்* திராட்சமதுவையும்,+ ஒவ்வொரு செம்மறியாட்டுக் கடாக் குட்டியுடனும் ஒரு லிட்டர்*+ திராட்சமதுவையும் காணிக்கையாகச் செலுத்த வேண்டும். வருஷத்தின் எல்லா மாதங்களிலும் செலுத்த வேண்டிய தகன பலி இதுதான். 15 தினமும் செலுத்தப்படுகிற* தகன பலியோடும் அதனோடு கொடுக்க வேண்டிய திராட்சமது காணிக்கையோடும், பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் யெகோவாவுக்குச் செலுத்த வேண்டும்.
16 முதல் மாதம், 14-ஆம் நாளில் யெகோவாவுக்குப் பஸ்காவை அனுசரிக்க வேண்டும்.+ 17 அந்த மாதத்தின் 15-ஆம் நாளில் ஒரு பண்டிகை கொண்டாட வேண்டும். ஏழு நாட்களுக்குப் புளிப்பில்லாத ரொட்டியைச் சாப்பிட வேண்டும்.+ 18 முதலாம் நாளில் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும். அன்றைக்கு நீங்கள் கடினமான வேலை எதுவும் செய்யக் கூடாது. 19 இரண்டு இளம் காளைகள், ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றை நீங்கள் யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அவை குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+ 20 அவற்றோடு சேர்த்து, எண்ணெய் கலந்த நைசான மாவை உணவுக் காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும்;+ ஒவ்வொரு காளைக்கும் ஒரு எப்பா அளவிலே பத்தில் மூன்று பங்கு* மாவும், செம்மறியாட்டுக் கடாவுக்கு ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு* மாவும் கொண்டுவர வேண்டும். 21 அந்த ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளில் ஒவ்வொன்றுக்கும் ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* மாவைக் கொண்டுவர வேண்டும். 22 அவற்றுடன், உங்களுக்குப் பாவப் பரிகாரம் செய்வதற்காக ஒரு வெள்ளாட்டைக் கொண்டுவர வேண்டும். 23 தினமும் காலையில் செலுத்தும் தகன பலி தவிர, இவற்றையும் நீங்கள் செலுத்த வேண்டும். 24 இவற்றை ஏழு நாட்களும் இதேபோல் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். தினமும் செலுத்துகிற* தகன பலியோடும் அதனோடு கொடுக்க வேண்டிய திராட்சமது காணிக்கையோடும் அதைச் செலுத்த வேண்டும். 25 ஏழாம் நாளில் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும்.+ அன்றைக்கு நீங்கள் கடினமான வேலை எதுவும் செய்யக் கூடாது.+
26 புது தானியத்தில் செய்யப்பட்ட உணவுக் காணிக்கையை நீங்கள் யெகோவாவுக்குச் செலுத்துகிற நாளில்,+ அதாவது முதல் விளைச்சலைச் செலுத்துகிற அறுவடைப் பண்டிகை*+ நாளில்,+ பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும். அன்றைக்கு நீங்கள் கடினமான வேலை எதுவும் செய்யக் கூடாது.+ 27 இரண்டு இளம் காளைகள், ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைத் தகன பலியாக நீங்கள் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+ 28 அதோடு, உணவுக் காணிக்கையாக எண்ணெய் கலந்த நைசான மாவைக் கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு காளைக்கும் ஒரு எப்பா அளவிலே பத்தில் மூன்று பங்கு* மாவும், செம்மறியாட்டுக் கடாவுக்கு ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு* மாவும் கொண்டுவர வேண்டும். 29 அந்த ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளில் ஒவ்வொன்றுக்கும் ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* மாவைக் கொண்டுவர வேண்டும். 30 அவற்றுடன், உங்களுக்குப் பாவப் பரிகாரம் செய்வதற்காக ஒரு வெள்ளாட்டைக் கொண்டுவர வேண்டும்.+ 31 தினமும் செலுத்துகிற* தகன பலியையும் அதனோடு சேர்த்துக் கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கையையும் தவிர, அவற்றையும் நீங்கள் செலுத்த வேண்டும். அவை குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+ அவற்றோடு சேர்த்துத் திராட்சமது காணிக்கையையும் செலுத்த வேண்டும்’ என்று சொல்” என்றார்.
29 பின்பு அவர், “‘ஏழாம் மாதம் முதலாம் நாளில், நீங்கள் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும். அன்றைக்குக் கடினமான வேலை எதுவும் செய்யக் கூடாது.+ அந்த நாளில் எக்காளம் ஊத வேண்டும்.+ 2 ஒரு இளம் காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைத் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும். 3 அவற்றோடு சேர்த்து, எண்ணெய் கலந்த நைசான மாவை உணவுக் காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். இளம் காளையுடன் ஒரு எப்பா அளவிலே பத்தில் மூன்று பங்கு* மாவையும், செம்மறியாட்டுக் கடாவுடன் ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு* மாவையும் கொண்டுவர வேண்டும். 4 ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஒவ்வொன்றுடனும் ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* மாவைக் கொண்டுவர வேண்டும். 5 அவற்றோடு, ஒரு வெள்ளாட்டுக் கடாக் குட்டியை உங்களுடைய பாவப் பரிகாரத்துக்காகக் கொண்டுவர வேண்டும். 6 ஒவ்வொரு மாதமும் செலுத்துகிற தகன பலி, அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கை+ மற்றும் திராட்சமது காணிக்கை, தினமும் செலுத்துகிற* தகன பலி, அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கை+ மற்றும் திராட்சமது காணிக்கை+ ஆகியவற்றோடு, இவற்றையும் நீங்கள் செலுத்த வேண்டும். வழக்கமான முறைப்படியே இவற்றைத் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.
7 ஏழாம் மாதம் 10-ஆம் நாளில், நீங்கள் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும்.+ அன்றைக்கு உங்களையே வருத்திக்கொள்ள வேண்டும்.* எந்த வேலையும் செய்யக் கூடாது.+ 8 ஒரு இளம் காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைத் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+ 9 அவற்றோடு சேர்த்து, எண்ணெய் கலந்த நைசான மாவை உணவுக் காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். இளம் காளையோடு ஒரு எப்பா அளவிலே பத்தில் மூன்று பங்கு* மாவையும், செம்மறியாட்டுக் கடாவோடு ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு* மாவையும் கொண்டுவர வேண்டும். 10 ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஒவ்வொன்றுடனும் ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* மாவைக் கொண்டுவர வேண்டும். 11 பாவப் பரிகாரம் செய்வதற்கான பலியையும்+ அதனோடு கொடுக்க வேண்டிய திராட்சமது காணிக்கையையும், தினமும் செலுத்துகிற* தகன பலியையும் அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் தவிர, பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் கொண்டுவர வேண்டும்.
12 ஏழாம் மாதம் 15-ஆம் நாளில், நீங்கள் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும். அன்றைக்குக் கடினமான வேலை எதுவும் செய்யக் கூடாது. ஏழு நாட்கள் யெகோவாவுக்குப் பண்டிகை கொண்டாட வேண்டும்.+ 13 அப்போது 13 இளம் காளைகள், 2 செம்மறியாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 14 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைத் தகன பலியாகச் செலுத்த வேண்டும்.+ அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+ 14 அவற்றோடு சேர்த்து, எண்ணெய் கலந்த நைசான மாவை உணவுக் காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். 13 காளைகள் ஒவ்வொன்றுடனும் ஒரு எப்பா அளவிலே பத்தில் மூன்று பங்கு* மாவையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்கள் ஒவ்வொன்றுடனும் ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு* மாவையும் கொண்டுவர வேண்டும். 15 14 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஒவ்வொன்றுடனும் ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* மாவைக் கொண்டுவர வேண்டும். 16 பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் கொண்டுவர வேண்டும். அதோடு, தினமும் செலுத்துகிற* தகன பலியையும் அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் கொண்டுவர வேண்டும்.+
17 பண்டிகையின் இரண்டாம் நாளில் 12 இளம் காளைகள், 2 செம்மறியாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 14 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைச் செலுத்த வேண்டும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+ 18 அந்தக் காளைகள், செம்மறியாட்டுக் கடாக்கள், செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் வழக்கமான முறைப்படி செலுத்த வேண்டும். 19 அதோடு, பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும், அதனோடு கொடுக்க வேண்டிய திராட்சமது காணிக்கையையும், தினமும் செலுத்துகிற* தகன பலியையும், அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் செலுத்த வேண்டும்.+
20 மூன்றாம் நாளில் 11 காளைகள், 2 செம்மறியாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 14 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைச் செலுத்த வேண்டும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+ 21 அந்தக் காளைகள், செம்மறியாட்டுக் கடாக்கள், செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் வழக்கமான முறைப்படி செலுத்த வேண்டும். 22 அதோடு, பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும், தினமும் செலுத்துகிற* தகன பலியையும், அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் செலுத்த வேண்டும்.+
23 நான்காம் நாளில் 10 காளைகள், 2 செம்மறியாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 14 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைச் செலுத்த வேண்டும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+ 24 அந்தக் காளைகள், செம்மறியாட்டுக் கடாக்கள், செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் வழக்கமான முறைப்படி செலுத்த வேண்டும். 25 அதோடு, பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும், தினமும் செலுத்துகிற* தகன பலியையும், அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் செலுத்த வேண்டும்.+
26 ஐந்தாம் நாளில் 9 காளைகள், 2 செம்மறியாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 14 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைச் செலுத்த வேண்டும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+ 27 அந்தக் காளைகள், செம்மறியாட்டுக் கடாக்கள், செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் வழக்கமான முறைப்படி செலுத்த வேண்டும். 28 அதோடு, பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும், தினமும் செலுத்துகிற* தகன பலியையும், அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் செலுத்த வேண்டும்.+
29 ஆறாம் நாளில் 8 காளைகள், 2 செம்மறியாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 14 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைச் செலுத்த வேண்டும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+ 30 அந்தக் காளைகள், செம்மறியாட்டுக் கடாக்கள், செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் வழக்கமான முறைப்படி செலுத்த வேண்டும். 31 அதோடு, பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும், தினமும் செலுத்துகிற* தகன பலியையும், அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் செலுத்த வேண்டும்.+
32 ஏழாம் நாளில் 7 காளைகள், 2 செம்மறியாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 14 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைச் செலுத்த வேண்டும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+ 33 அந்தக் காளைகள், செம்மறியாட்டுக் கடாக்கள், செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் வழக்கமான முறைப்படி செலுத்த வேண்டும். 34 அதோடு, பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும், தினமும் செலுத்துகிற* தகன பலியையும், அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் செலுத்த வேண்டும்.+
35 எட்டாம் நாளில், விசேஷ மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும். அன்றைக்குக் கடினமான வேலை எதுவும் செய்யக் கூடாது.+ 36 ஒரு காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைத் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+ 37 அந்தக் காளைகள், செம்மறியாட்டுக் கடாக்கள், செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் வழக்கமான முறைப்படி செலுத்த வேண்டும். 38 அதோடு, பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும், தினமும் செலுத்துகிற* தகன பலியையும், அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் செலுத்த வேண்டும்.+
39 இவற்றையெல்லாம் பண்டிகை நாட்களில்+ யெகோவாவுக்குச் செலுத்த வேண்டும். நேர்ந்துகொண்டதை நிறைவேற்றவோ+ நீங்களாகவே விருப்பப்பட்டோ செலுத்தும்+ தகன பலி,+ உணவுக் காணிக்கை,+ திராட்சமது காணிக்கை,+ சமாதான பலி+ ஆகியவற்றோடு இவற்றையெல்லாம் செலுத்த வேண்டும்’ என்று ஜனங்களிடம் சொல்” என்றார். 40 யெகோவா கொடுத்த எல்லா கட்டளைகளையும் மோசே இஸ்ரவேலர்களுக்குச் சொன்னார்.
30 மோசே இஸ்ரவேலின் கோத்திரத் தலைவர்களிடம்,+ “யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் கட்டளை இதுதான்: 2 ஒருவன் எதையாவது செய்யப்போவதாக அல்லது தவிர்க்கப்போவதாக யெகோவாவிடம் நேர்ந்துகொண்டாலோ+ உறுதிமொழி எடுத்தாலோ+ அதை மீறக் கூடாது.+ தான் நேர்ந்துகொண்ட எல்லாவற்றையும் நிறைவேற்ற வேண்டும்.+
3 ஒரு இளம் பெண் தன்னுடைய அப்பாவின் வீட்டில் வாழும்போது எதையாவது செய்யப்போவதாக அல்லது தவிர்க்கப்போவதாக யெகோவாவிடம் நேர்ந்துகொண்டால், 4 அவள் நேர்ந்துகொண்ட எல்லாவற்றையும் அவளுடைய அப்பா கேள்விப்பட்டும் அவளைத் தடுக்காவிட்டால், நேர்ந்துகொண்ட எல்லாவற்றையும் அவள் நிறைவேற்ற வேண்டும். 5 ஆனால், அவளுடைய அப்பா அதைக் கேள்விப்பட்டு அவளைத் தடுத்தால், நேர்ந்துகொண்டதை அவள் நிறைவேற்ற வேண்டியதில்லை. அவளுடைய அப்பா அவளைத் தடுத்துவிட்டதால் அவளை யெகோவா மன்னிப்பார்.+
6 அவள் எதையாவது நேர்ந்திருக்கும் சமயத்தில் அல்லது அவசரப்பட்டு சத்தியம் செய்திருக்கும் சமயத்தில் அவளுக்குக் கல்யாணமானால், 7 அவளுடைய கணவன் அதைக் கேள்விப்படும் நாளில் அவளைத் தடுக்காவிட்டால், நேர்ந்துகொண்ட எல்லாவற்றையும் அவள் நிறைவேற்ற வேண்டும். 8 ஆனால், அவளுடைய கணவன் அதைக் கேள்விப்படும் நாளில் அதற்கு அனுமதி தர விரும்பாவிட்டால், அவள் நேர்ந்துகொண்டதை அல்லது அவசரப்பட்டு சத்தியம் செய்ததை அவர் ரத்து செய்யலாம்.+ யெகோவா அவளை மன்னிப்பார்.
9 விதவைப் பெண்ணோ விவாகரத்தான பெண்ணோ எதையாவது நேர்ந்துகொண்டால் அதைக் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும்.
10 ஆனாலும், ஒரு பெண் தன்னுடைய கணவனின் வீட்டில் வாழும்போது எதையாவது செய்யப்போவதாக அல்லது தவிர்க்கப்போவதாக கடவுளிடம் நேர்ந்துகொண்டால், 11 அவளுடைய கணவன் அதைக் கேள்விப்படும்போது அதற்கு ஆட்சேபணையோ மறுப்போ தெரிவிக்காவிட்டால், தான் நேர்ந்துகொண்ட எல்லாவற்றையும் அவள் நிறைவேற்ற வேண்டும். 12 ஆனால் அவளுடைய கணவன் அதைக் கேள்விப்படும் நாளில், அவள் நேர்ந்துகொண்ட எல்லாவற்றையும் முழுவதுமாக ரத்து செய்தால் அவள் அவற்றை நிறைவேற்ற வேண்டியதில்லை.+ அவளுடைய கணவன் அவற்றை ரத்து செய்ததால் யெகோவா அவளை மன்னிப்பார். 13 எதையாவது செய்யப்போவதாக அல்லது தன்னையே வருத்திக்கொள்ளப்போவதாக* அவள் நேர்ந்துகொண்டாலோ உறுதிமொழி எடுத்தாலோ, அதை அவள் நிறைவேற்ற வேண்டுமா வேண்டாமா என்பதைக் கணவன் தீர்மானிக்கலாம். 14 ஆனால், பல நாட்களாகியும் அவளுடைய கணவன் எந்த ஆட்சேபணையும் தெரிவிக்காவிட்டால், அவள் நேர்ந்துகொண்ட எல்லாவற்றுக்கும் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்று அர்த்தம். ஏனென்றால், அதைக் கேள்விப்பட்ட நாளில் அவர் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. 15 ஆனால், அதைக் கேள்விப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு ரத்து செய்தால், அவளுடைய குற்றத்துக்கு அவர்தான் பொறுப்பு.+
16 ஏதோவொன்றை நேர்ந்துகொள்ளும் விஷயத்தில் கணவனுக்கும் மனைவிக்கும், அப்பாவுக்கும் அவர் வீட்டில் வாழ்கிற மகளுக்கும் மோசே மூலமாக யெகோவா கொடுத்த விதிமுறைகள் இவைதான்” என்றார்.
31 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “இஸ்ரவேலர்களுக்காக மீதியானியர்களை+ நீ பழிவாங்கு.+ அதன்பின், நீ இறந்துபோவாய்”*+ என்றார்.
3 அதனால் மோசே ஜனங்களிடம், “யெகோவாவின் சார்பாக மீதியானியர்களை நீங்கள் பழிவாங்க வேண்டும். அவர்களோடு போர் செய்வதற்காக ஆட்களைத் தயார்படுத்துங்கள். 4 ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் 1,000 பேரை நீங்கள் போருக்கு அனுப்ப வேண்டும்” என்றார். 5 அதன்படியே, லட்சக்கணக்கில் இருந்த இஸ்ரவேலர்களின்+ ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் 1,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மொத்தம் 12,000 பேர் போருக்காகத் தயார்படுத்தப்பட்டார்கள்.
6 ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் 1,000 பேரை மோசே போருக்கு அனுப்பினார். அவர்களுடன் குருவாகிய எலெயாசாரின் மகன் பினெகாசை+ அனுப்பினார். இவர் பரிசுத்த பாத்திரங்களையும் போர் எக்காளங்களையும்+ கையில் எடுத்துக்கொண்டு போனார். 7 மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே மீதியான் தேசத்துக்கு எதிராக இஸ்ரவேலர்கள் போர் செய்து, எல்லா ஆண்களையும் கொன்றுபோட்டார்கள். 8 மீதியான் தேசத்தின் ஐந்து ராஜாக்களான ஏவி, ரெக்கேம், சூர், ஹூர், ரேபா ஆகியவர்களையும் வெட்டி வீழ்த்தினார்கள். பெயோரின் மகன் பிலேயாமையும்+ வாளால் வெட்டிப்போட்டார்கள். 9 ஆனால், மீதியானியப் பெண்களையும் பிள்ளைகளையும் பிடித்துக்கொண்டு போனார்கள். மீதியானியர்களின் எல்லா மந்தைகளையும் எல்லா பொருள்களையும் சூறையாடினார்கள். 10 அவர்கள் குடியிருந்த எல்லா நகரங்களையும் முகாம்களையும் தீ வைத்துக் கொளுத்தினார்கள். 11 பின்பு, தாங்கள் பிடித்துவந்த ஆட்களையும் மிருகங்களையும் கூட்டிக்கொண்டு, 12 சூறையாடிய பொருள்களை எடுத்துக்கொண்டு மோசேயிடமும் எலெயாசாரிடமும் ஜனங்களிடமும் வந்தார்கள். அதாவது, எரிகோவுக்குப் பக்கத்தில் யோர்தானை ஒட்டியுள்ள மோவாப் பாலைநிலத்தில் இருந்த முகாமுக்கு+ வந்தார்கள்.
13 அப்போது, மோசேயும் குருவாகிய எலெயாசாரும் ஜனங்களின் தலைவர்கள் எல்லாரும் அவர்களைச் சந்திக்க முகாமுக்கு வெளியே போனார்கள். 14 போரிலிருந்து திரும்பி வந்த படைத் தலைவர்களைப் பார்த்து, அதாவது 1,000 வீரர்களுக்குத் தலைவர்களையும் 100 வீரர்களுக்குத் தலைவர்களையும் பார்த்து, மோசே கோபப்பட்டார். 15 மோசே அவர்களிடம், “பெண்கள் எல்லாரையும் உயிரோடு விட்டுவிட்டீர்களா? 16 பேயோரின் விஷயத்தில்,+ இவர்கள்தானே பிலேயாமின் பேச்சைக் கேட்டு இஸ்ரவேலர்களை யெகோவாவுக்கு விரோதமாகத் துரோகம் செய்ய வைத்தார்கள்!+ இவர்கள்தானே யெகோவாவின் ஜனங்கள்மேல் கொள்ளைநோயை வர வைத்தார்கள்!+ 17 அதனால் ஆண் பிள்ளைகள் எல்லாரையும், ஆணோடு உறவுகொண்ட பெண்கள் எல்லாரையும் கொன்றுபோட வேண்டும். 18 ஆனால், எந்த ஆணோடும் உறவுகொள்ளாத பெண்கள் எல்லாரையும் உயிரோடு விட்டுவிடலாம்.+ 19 நீங்கள் ஏழு நாட்கள் முகாமுக்கு வெளியே தங்க வேண்டும். போரில் கொலை செய்தவர்களும் கொலை செய்யப்பட்டவர்களின் உடலைத் தொட்டவர்களும்+ தங்களை மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தூய்மைப்படுத்த வேண்டும்.+ நீங்கள் பிடித்துக்கொண்டு வந்தவர்களும் நீங்களும் இப்படிச் செய்ய வேண்டும். 20 எல்லா உடைகளையும், தோல் பொருள்களையும், வெள்ளாட்டு மயிரில் செய்யப்பட்ட பொருள்களையும், மரச் சாமான்களையும் தூய்மைப்படுத்த வேண்டும்” என்றார்.
21 பின்பு, குருவாகிய எலெயாசார் போரிலிருந்து திரும்பி வந்த ஆட்களைப் பார்த்து, “யெகோவா மோசேக்குக் கொடுத்த சட்டம் என்னவென்றால், 22 ‘நெருப்பைத் தாக்குப்பிடிக்கிற எல்லாவற்றையும், அதாவது தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, தகரம், ஈயம் போன்ற எல்லாவற்றையும், 23 நீங்கள் நெருப்பில் போட வேண்டும். அப்போது அவை சுத்தமாகும். அதேசமயத்தில், அவற்றைச் சுத்திகரிப்பு நீராலும்+ தூய்மைப்படுத்த வேண்டும். ஆனால், நெருப்பைத் தாக்குப்பிடிக்காத எல்லாவற்றையும் தண்ணீரில் கழுவ வேண்டும். 24 ஏழாம் நாளில் உங்களுடைய உடைகளைத் துவைக்க வேண்டும், அப்போது நீங்கள் சுத்தமாவீர்கள். அதன்பின் முகாமுக்குள் வரலாம்’”+ என்றார்.
25 பின்பு யெகோவா மோசேயிடம், 26 “பிடித்துக்கொண்டு வந்த மனுஷர்களையும், மிருகங்களையும் நீ கணக்கெடுக்க வேண்டும். குருவாகிய எலெயாசாருடனும் தந்தைவழிக் குடும்பத் தலைவர்களுடனும் சேர்ந்து இதைச் செய்ய வேண்டும். 27 பின்பு, அந்த மனுஷர்களையும் மிருகங்களையும் இரண்டு பங்காகப் பிரித்து, போருக்குப் போனவர்களுக்கு ஒரு பங்கும் ஜனங்களுக்கு ஒரு பங்கும் கொடுக்க வேண்டும்.+ 28 போருக்குப் போன வீரர்களுக்குக் கொடுக்கிற மனுஷர்களிலும், மாடுகளிலும், கழுதைகளிலும், ஆடுகளிலும் 500-க்கு ஒன்றைப் பிரித்தெடுத்து யெகோவாவுக்காகக் கொடுக்க வேண்டும். 29 அவர்களுக்குக் கிடைத்த பாதிப் பங்கிலிருந்து இந்த மனுஷர்களையும் மிருகங்களையும் பிரித்தெடுத்து யெகோவாவுக்குக் காணிக்கையாகக் குருவாகிய எலெயாசாரிடம் கொடுக்க வேண்டும்.+ 30 இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கிடைத்த பாதிப் பங்கில், அதாவது மனுஷர்களிலும் மாடுகளிலும் கழுதைகளிலும் ஆடுகளிலும் வீட்டு விலங்குகளிலும், 50-க்கு ஒன்றைப் பிரித்தெடுத்து லேவியர்களுக்குக் கொடுக்க வேண்டும்.+ ஏனென்றால், யெகோவாவின் கூடாரத்தில் செய்ய வேண்டிய வேலைகளை அவர்கள் செய்கிறார்கள்”+ என்றார்.
31 யெகோவா கட்டளை கொடுத்தபடியே, மோசேயும் குருவாகிய எலெயாசாரும் செய்தார்கள். 32 போரிலிருந்து திரும்பியவர்கள் பயன்படுத்தியது தவிர மீதியிருந்தவை இவைதான்: 6,75,000 ஆடுகள், 33 72,000 மாடுகள், 34 61,000 கழுதைகள். 35 எந்த ஆணுடனும் உறவுகொள்ளாத பெண்கள்+ மொத்தம் 32,000 பேர். 36 போருக்குப் போனவர்களுக்குக் கிடைத்த பாதிப் பங்கில் 3,37,500 ஆடுகள் இருந்தன. 37 அவற்றில் யெகோவாவுக்கான பங்கு 675. 38 அவர்களுடைய பங்கில் 36,000 மாடுகள் இருந்தன. அவற்றில் யெகோவாவுக்கான பங்கு 72. 39 அவர்களுடைய பங்கில் 30,500 கழுதைகள் இருந்தன. அவற்றில் யெகோவாவுக்கான பங்கு 61. 40 அவர்களுடைய பங்கில் 16,000 மனிதர்கள் இருந்தார்கள். அவர்களில் யெகோவாவுக்கான பங்கு 32 பேர். 41 யெகோவாவுக்கான பங்கை குருவாகிய எலெயாசாரிடம் மோசே கொடுத்தார்.+ இப்படி, யெகோவா கட்டளை கொடுத்தபடியே செய்தார்.
42 போர் செய்யப் போனவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தது தவிர, இஸ்ரவேல் ஜனங்களுக்கு மோசே, 43 3,37,500 ஆடுகளையும், 44 36,000 மாடுகளையும், 45 30,500 கழுதைகளையும், 46 16,000 மனிதர்களையும் பிரித்துக் கொடுத்தார். 47 பின்பு, இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்த பாதிப் பங்கில், அதாவது மனிதர்களிலும் மிருகங்களிலும், 50-க்கு ஒன்றைப் பிரித்தெடுத்து, யெகோவாவின் கூடாரத்தில் வேலை செய்த+ லேவியர்களுக்கு மோசே கொடுத்தார்.+ யெகோவா கட்டளை கொடுத்தபடியே அவர் செய்தார்.
48 அதன்பின் படைப்பிரிவுகளின்* தலைவர்களான 1,000 வீரர்களுக்குத்+ தலைவர்களும் 100 வீரர்களுக்குத் தலைவர்களும் மோசேயிடம் வந்து, 49 “எங்களுக்குக் கீழுள்ள வீரர்களை உங்கள் ஊழியர்களாகிய நாங்கள் கணக்கெடுத்தோம், அவர்களில் ஒருவர்கூட குறையவில்லை.+ 50 அதனால், நாங்கள் ஒவ்வொருவரும் கைப்பற்றிய தங்கச் சாமான்கள், கொலுசுகள், காப்புகள், முத்திரை மோதிரங்கள், தோடுகள், மற்ற நகைகள் எல்லாவற்றையும் யெகோவாவுக்குக் காணிக்கையாகத் தருகிறோம். யெகோவாவின் முன்னிலையில் எங்களுக்குப் பாவப் பரிகாரமாக இவற்றைத் தருகிறோம்” என்றார்கள்.
51 அவர்கள் கொடுத்த தங்க நகைகளை மோசேயும் குருவாகிய எலெயாசாரும் வாங்கிக்கொண்டார்கள். 52 1,000 வீரர்களுக்குத் தலைவர்களும் 100 வீரர்களுக்குத் தலைவர்களும் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுத்த தங்கத்தின் எடை மொத்தம் 16,750 சேக்கல்.* 53 போருக்குப் போன வீரர்கள் ஒவ்வொருவருக்கும் கைப்பற்றப்பட்ட பொருள்களிலிருந்து ஒரு பங்கு கிடைத்தது. 54 1,000 வீரர்களுக்குத் தலைவர்களும் 100 வீரர்களுக்குத் தலைவர்களும் கொடுத்த தங்கத்தை மோசேயும் குருவாகிய எலெயாசாரும் சந்திப்புக் கூடாரத்துக்குள் கொண்டுவந்தார்கள். இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு நினைப்பூட்டுதலாக இருக்கும்படி அந்தத் தங்கத்தை யெகோவாவுக்கு முன்னால் வைத்தார்கள்.
32 ரூபன் வம்சத்தாருக்கும்+ காத் வம்சத்தாருக்கும்+ ஆடுமாடுகள் ஏராளமாக இருந்தன. யாசேர் பிரதேசமும்+ கீலேயாத் பிரதேசமும் ஆடுமாடுகள் மேய்வதற்கு நல்ல இடமாக இருப்பதை அவர்கள் பார்த்தார்கள். 2 அதனால், காத் வம்சத்தாரும் ரூபன் வம்சத்தாரும் மோசேயிடமும் குருவாகிய எலெயாசாரிடமும் ஜனங்களின் தலைவர்களிடமும் வந்து, 3 “அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன்,+ எலெயாலே, சேபாம், நேபோ,+ பெயோன்+ ஆகிய இடங்களை 4 இஸ்ரவேலர்களின் கண் முன்னால் யெகோவா வீழ்த்தினார்.+ இவை ஆடுமாடுகள் மேய்வதற்கு நல்ல இடங்கள். உங்கள் ஊழியர்களாகிய எங்களுக்கு ஏராளமான ஆடுமாடுகள் இருக்கின்றன.+ 5 அதனால் நீங்கள் பெரியமனதுபண்ணி, உங்கள் ஊழியர்களாகிய எங்களுக்கு இந்த இடங்களைச் சொத்தாகக் கொடுங்கள். ஆனால், யோர்தானை மட்டும் கடந்துபோகச் சொல்லாதீர்கள்” என்றார்கள்.
6 அப்போது மோசே, காத் வம்சத்தாரிடமும் ரூபன் வம்சத்தாரிடமும், “உங்களுடைய சகோதரர்கள் போருக்குப் போகும்போது நீங்கள் மட்டும் இங்கே இருக்க வேண்டுமோ? 7 யெகோவா அந்தத் தேசத்தைக் கண்டிப்பாகத் தரப்போவதாய்ச் சொல்லியிருக்கும்போது, அங்கு போக நினைக்கிறவர்களின் ஆர்வத்தை நீங்கள் ஏன் கெடுக்கிறீர்கள்? 8 அந்தத் தேசத்தைப் பார்ப்பதற்கு உங்களுடைய தகப்பன்களை காதேஸ்-பர்னேயாவிலிருந்து நான் அனுப்பியபோது அவர்களும் இப்படித்தான் செய்தார்கள்.+ 9 அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குவரை போய்+ அந்தத் தேசத்தைப் பார்த்துவிட்டு வந்த பிறகு, யெகோவா தரப்போவதாய்ச் சொல்லியிருந்த தேசத்துக்குப் போக நினைத்தவர்களின் ஆர்வத்தைக் கெடுத்தார்கள்.+ 10 அதனால், அந்த நாளில் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்தது. அப்போது அவர், 11 ‘எகிப்திலிருந்து வந்தவர்களில் 20 வயதும் அதற்கு அதிகமான வயதும் உள்ளவர்கள், ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் நான் வாக்குக் கொடுத்த தேசத்தைப்+ பார்க்கப்போவதில்லை.+ ஏனென்றால், அவர்கள் முழு இதயத்தோடு எனக்குக் கீழ்ப்படியவில்லை. 12 யெகோவாவாகிய எனக்கு முழு இதயத்தோடு கீழ்ப்படிந்த+ கெனிசியனான எப்புன்னேயின் மகன் காலேபையும்+ நூனின் மகன் யோசுவாவையும்+ தவிர வேறு யாரும் அதைப் பார்க்கப்போவதில்லை’ என்று ஆணையிட்டுச் சொன்னார்.+ 13 இஸ்ரவேலர்கள்மேல் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்ததால், அவர்களை 40 வருஷங்கள் வனாந்தரத்திலேயே அலைந்து திரிய வைத்தார்.+ பாவம் செய்த அந்தத் தலைமுறையில் எல்லாரும் சாகும்வரை யெகோவா அவர்களை அப்படி அலைந்து திரிய வைத்தார்.+ 14 உங்களுடைய தகப்பன்களைப் போலவே நீங்களும் இப்போது பாவம் செய்கிறீர்கள். இஸ்ரவேலின் மேல் யெகோவாவின் கோபம் இன்னும் அதிகமாகப் பற்றியெரியும்படி செய்கிறீர்கள். 15 நீங்கள் அவரைவிட்டு விலகிப்போனால், எல்லா ஜனங்களும் மறுபடியும் இந்த வனாந்தரத்திலேயே கிடக்கும்படி அவர் கண்டிப்பாக விட்டுவிடுவார். உங்களால் இவர்கள் எல்லாரும் அழிந்துபோவார்கள்” என்றார்.
16 அதன்பின் அவர்கள் அவரிடம் வந்து, “நாங்கள் இங்கேயே எங்களுடைய ஆடுமாடுகளுக்குத் தொழுவங்களையும்* பிள்ளைகளுக்கு நகரங்களையும் கட்டிக்கொள்கிறோம். 17 இங்குள்ள ஜனங்களால் எந்த ஆபத்தும் வராதபடி எங்களுடைய பிள்ளைகள் மதில் சூழ்ந்த நகரங்களில் குடியிருக்கட்டும். ஆனால், நாங்கள் இஸ்ரவேலர்களை அவர்களுடைய இடத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும்வரை அவர்களுக்கு முன்னாலேயே போவோம். எப்போதும் போருக்குத் தயாராக இருப்போம்.+ 18 இஸ்ரவேலர்கள் எல்லாருக்கும் அவரவர் சொத்து கிடைக்கும்வரை நாங்கள் எங்களுடைய வீடுகளுக்குத் திரும்ப மாட்டோம்.+ 19 யோர்தானுக்குக் கிழக்கே எங்களுடைய பங்கை நாங்கள் வாங்கிக்கொண்டதால்,+ யோர்தானுக்கு மேற்கிலும் அதைத் தாண்டியும் அவர்களோடு பங்கு கேட்க மாட்டோம்” என்றார்கள்.
20 அதற்கு மோசே அவர்களிடம், “போர் செய்வதற்காக நீங்கள் ஒவ்வொருவரும் யெகோவாவின் முன்னிலையில் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு,+ 21 யோர்தானைக் கடந்து போனால், யெகோவா தன்னுடைய எதிரிகளை விரட்டியடித்த பின்பு,+ 22 அதாவது யெகோவா அந்தத் தேசத்தை வீழ்த்திய பிறகு,+ நீங்கள் திரும்பி வரலாம்.+ அப்போது யெகோவாவுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் முன்னால் குற்றமற்றவர்களாக இருப்பீர்கள். யெகோவாவின் முன்னிலையில் இந்தத் தேசம் உங்களுக்குச் சொந்தமாகும்.+ 23 நீங்கள் இப்படிச் செய்யாவிட்டால், யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்துவிடுவீர்கள். அந்தப் பாவத்துக்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். 24 இப்போது, உங்கள் பிள்ளைகளுக்காக நகரங்களையும் உங்கள் மந்தைகளுக்காகத் தொழுவங்களையும் நீங்கள் கட்டிக்கொள்ளலாம்.+ ஆனால், நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும்” என்றார்.
25 அப்போது, காத் வம்சத்தாரும் ரூபன் வம்சத்தாரும் மோசேயிடம், “எஜமானே, உங்கள் கட்டளைப்படியே உங்கள் ஊழியர்களாகிய நாங்கள் செய்வோம். 26 எங்கள் மனைவிமக்கள் எல்லாரும் எங்கள் வீட்டு விலங்குகளோடு கீலேயாத்தின் நகரங்களில் குடியிருப்பார்கள்.+ 27 ஆனால் எஜமானே, உங்கள் ஊழியர்களாகிய நாங்கள், நீங்கள் சொல்கிறபடியே, யெகோவாவின் முன்னிலையில் போர் செய்வதற்கு ஆயுதங்களை எடுத்துக்கொண்டு யோர்தானைக் கடந்துபோவோம்”+ என்றார்கள்.
28 அதனால், இவர்களைப் பற்றி குருவாகிய எலெயாசாருக்கும் நூனின் மகன் யோசுவாவுக்கும் இஸ்ரவேலின் தந்தைவழிக் குடும்பத் தலைவர்களுக்கும் மோசே இப்படிக் கட்டளை கொடுத்தார்: 29 “காத் வம்சத்தாரும் ரூபன் வம்சத்தாரும் யெகோவாவின் முன்னிலையில் போர் செய்வதற்கு ஆயுதங்கள் எடுத்துக்கொண்டு உங்களோடு யோர்தானைக் கடந்து வந்தால், அந்தத் தேசமும் உங்கள்முன் வீழ்ச்சி அடைந்தால், கீலேயாத் பிரதேசத்தை இவர்களுடைய பங்காகக் கொடுத்துவிடுங்கள்.+ 30 ஆனால், இவர்கள் ஆயுதங்கள் எடுத்துக்கொண்டு உங்களோடு யோர்தானைக் கடந்து வராமல் இருந்தால், கானான் தேசத்தில் உங்களோடு குடியேற வேண்டும்.”
31 அதற்கு காத் வம்சத்தாரும் ரூபன் வம்சத்தாரும், “உங்கள் ஊழியர்களாகிய நாங்கள் யெகோவா சொன்னபடியே செய்வோம். 32 நாங்கள் ஆயுதங்கள் எடுத்துக்கொண்டு யெகோவாவின் முன்னிலையில் யோர்தானைக் கடந்து கானான் தேசத்துக்குப் போவோம்,+ ஆனால் எங்களுடைய பங்கு யோர்தானுக்குக் கிழக்கிலேயே இருக்கும்” என்றார்கள். 33 அப்போது காத் வம்சத்தாரிடமும் ரூபன் வம்சத்தாரிடமும்+ யோசேப்பின் மகனாகிய மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரிடமும்,+ எமோரியர்களின் ராஜாவான சீகோனின் ராஜ்யத்தையும்+ பாசானின் ராஜாவான ஓகின் ராஜ்யத்தையும்+ மோசே கொடுத்தார். அதாவது, அவர்களுடைய நகரங்களையும் அங்கிருந்த ஊர்களையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் கொடுத்தார்.
34 காத் வம்சத்தார் மதில் சூழ்ந்த நகரங்களாகிய தீபோன்,+ அதரோத்,+ ஆரோவேர்,+ 35 ஆத்ரோத்-சோபான், யாசேர்,+ யொகிபேயா,+ 36 பெத்-நிம்ரா,+ பெத்தாரன்+ ஆகியவற்றையும் மந்தைகளுக்குத் தொழுவங்களையும் கட்டிக்கொண்டார்கள். 37 ரூபன் வம்சத்தார் எஸ்போன்,+ எலெயாலே,+ கீரியாத்தாயீம்,+ 38 பெயர் மாற்றப்பட்ட நகரங்களான நேபோ,+ பாகால்-மெயோன்+ ஆகியவற்றையும் சிப்மாவையும் கட்டினார்கள். திரும்பக் கட்டிய நகரங்களுக்கு அவர்கள் புதிய பெயர்களை வைத்தார்கள்.
39 மனாசேயின் மகனாகிய மாகீரின் மகன்கள்+ கீலேயாத்துக்கு எதிராகப் படையெடுத்துப் போய் அதைக் கைப்பற்றி அங்கிருந்த எமோரியர்களை விரட்டியடித்தார்கள். 40 அதனால், மனாசேயின் மகன் மாகீருக்கு மோசே கீலேயாத்தைக் கொடுத்தார், அவன் அதில் குடியிருந்தான்.+ 41 மனாசேயின் மகனாகிய யாவீர் கீலேயாத்தின் சிற்றூர்களுக்கு எதிராகப் படையெடுத்துப் போய் அவற்றைக் கைப்பற்றினான். அவற்றுக்கு அவோத்-யாவீர் என்று பெயர் வைத்தான்.+ 42 நோபாக் என்பவன் கேனாத்துக்கு எதிராகப் படையெடுத்துப் போய், அதையும் அதன் சிற்றூர்களையும்* கைப்பற்றினான். நோபாக் என்ற தன்னுடைய பெயரை அதற்கு வைத்தான்.
33 மோசே மற்றும் ஆரோனின் தலைமையில்,+ இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து அணி அணியாகப்+ புறப்பட்டு,+ பல இடங்களில் பயணம் செய்தார்கள். 2 யெகோவாவின் கட்டளைப்படி, அவர்கள் பயணம் செய்த ஒவ்வொரு இடத்தையும் பற்றி மோசே பதிவு செய்தார். அவர்கள் பயணம் செய்த இடங்கள் இவைதான்:+ 3 முதல் மாதம் 15-ஆம் நாளில்,+ ராமசேசிலிருந்து அவர்கள் புறப்பட்டார்கள்.+ பஸ்காவுக்கு அடுத்த நாளே,+ எகிப்தியர்களின் கண் முன்னால் இஸ்ரவேலர்கள் வீரநடை போட்டுக்கொண்டு போனார்கள். 4 அப்போது எகிப்தியர்கள், யெகோவா கொன்றுபோட்ட தங்களுடைய மூத்த மகன்களை அடக்கம் செய்துகொண்டிருந்தார்கள்.+ அவர்களுடைய தெய்வங்களுக்கு யெகோவா தண்டனை கொடுத்திருந்தார்.+
5 இஸ்ரவேலர்கள் ராமசேசைவிட்டுப் புறப்பட்டு சுக்கோத்தில் முகாம்போட்டார்கள்.+ 6 பின்பு, சுக்கோத்திலிருந்து புறப்பட்டு வனாந்தரத்தின் எல்லையில் இருந்த ஈத்தாமில் முகாம்போட்டார்கள்.+ 7 அதன்பின், ஈத்தாமிலிருந்து புறப்பட்டு பாகால்-செபோனுக்கு எதிரில் உள்ள பிககிரோத்துக்குத்+ திரும்பி, மிக்தோலுக்கு முன்னால் முகாம்போட்டார்கள்.+ 8 பின்பு, பிககிரோத்திலிருந்து புறப்பட்டு கடலின் நடுவே நடந்து+ வனாந்தரத்துக்குப் போனார்கள்.+ ஈத்தாம் வனாந்தரத்தில்+ மூன்று நாள் பயணம் செய்து, மாராவில் முகாம்போட்டார்கள்.+
9 அதன்பின், மாராவிலிருந்து புறப்பட்டு ஏலிமுக்கு வந்தார்கள். ஏலிமில் 12 நீரூற்றுகளும் 70 பேரீச்ச மரங்களும் இருந்ததால் அங்கே முகாம்போட்டார்கள்.+ 10 அடுத்ததாக, ஏலிமிலிருந்து புறப்பட்டு செங்கடலுக்குப் பக்கத்தில் முகாம்போட்டார்கள். 11 அதன்பின், செங்கடலுக்குப் பக்கத்திலிருந்து புறப்பட்டு சின் வனாந்தரத்தில் முகாம்போட்டார்கள்.+ 12 பின்பு, சின் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு தொப்காவில் முகாம்போட்டார்கள். 13 அடுத்ததாக, தொப்காவிலிருந்து புறப்பட்டு ஆலூசில் முகாம்போட்டார்கள். 14 அதன்பின், ஆலூசிலிருந்து புறப்பட்டு ரெவிதீமில் முகாம்போட்டார்கள்.+ அங்கு அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கிடைக்கவில்லை. 15 பின்பு, ரெவிதீமிலிருந்து புறப்பட்டு சீனாய் வனாந்தரத்தில் முகாம்போட்டார்கள்.+
16 அடுத்ததாக, சீனாய் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு கிப்ரோத்-அத்தாவாவில் முகாம்போட்டார்கள்.+ 17 பின்பு, கிப்ரோத்-அத்தாவாவிலிருந்து புறப்பட்டு ஆஸ்ரோத்தில் முகாம்போட்டார்கள்.+ 18 அதன்பின், ஆஸ்ரோத்திலிருந்து புறப்பட்டு ரித்மாவில் முகாம்போட்டார்கள். 19 அடுத்ததாக, ரித்மாவிலிருந்து புறப்பட்டு ரிம்மோன்-பேரேசில் முகாம்போட்டார்கள். 20 பின்பு, ரிம்மோன்-பேரேசிலிருந்து புறப்பட்டு லிப்னாவில் முகாம்போட்டார்கள். 21 அதன்பின், லிப்னாவிலிருந்து புறப்பட்டு ரீசாவில் முகாம்போட்டார்கள். 22 பிறகு, ரீசாவிலிருந்து புறப்பட்டு கேலத்தாவில் முகாம்போட்டார்கள். 23 பின்பு, கேலத்தாவிலிருந்து புறப்பட்டு சாப்பேர் மலையில் முகாம்போட்டார்கள்.
24 அதன்பின், சாப்பேர் மலையிலிருந்து புறப்பட்டு ஆரதாவில் முகாம்போட்டார்கள். 25 அடுத்ததாக, ஆரதாவிலிருந்து புறப்பட்டு மக்கெலோத்தில் முகாம்போட்டார்கள். 26 பின்பு, மக்கெலோத்திலிருந்து புறப்பட்டு+ தாகாத்தில் முகாம்போட்டார்கள். 27 அதன்பின், தாகாத்திலிருந்து புறப்பட்டு தேராகுவில் முகாம்போட்டார்கள். 28 பிறகு, தேராகுவிலிருந்து புறப்பட்டு மித்காவில் முகாம்போட்டார்கள். 29 பின்பு, மித்காவிலிருந்து புறப்பட்டு அஸ்மோனாவில் முகாம்போட்டார்கள். 30 அதன்பின், அஸ்மோனாவிலிருந்து புறப்பட்டு மோசெரோத்தில் முகாம்போட்டார்கள். 31 அடுத்ததாக, மோசெரோத்திலிருந்து புறப்பட்டு பெனெ-யாக்கானில் முகாம்போட்டார்கள்.+ 32 பின்பு, பெனெ-யாக்கானிலிருந்து புறப்பட்டு ஓர்-அகித்துகாத்தில் முகாம்போட்டார்கள். 33 அதன்பின், ஓர்-அகித்துகாத்திலிருந்து புறப்பட்டு யோத்பாத்தாவில் முகாம்போட்டார்கள்.+ 34 பிறகு, யோத்பாத்தாவிலிருந்து புறப்பட்டு எப்ரோனாவில் முகாம்போட்டார்கள். 35 அதன்பின், எப்ரோனாவிலிருந்து புறப்பட்டு எசியோன்-கேபேரில் முகாம்போட்டார்கள்.+ 36 பிற்பாடு, எசியோன்-கேபேரிலிருந்து புறப்பட்டு சீன் வனாந்தரத்திலே+ காதேசில் முகாம்போட்டார்கள்.
37 அடுத்ததாக, காதேசிலிருந்து புறப்பட்டு ஏதோம் தேசத்தின் எல்லையிலுள்ள ஓர் என்ற மலைக்குப் பக்கத்தில் முகாம்போட்டார்கள்.+ 38 யெகோவாவின் கட்டளைப்படி, குருவாகிய ஆரோன் ஓர் என்ற அந்த மலைமேல் ஏறிப் போனார். இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட 40-ஆம் வருஷம், ஐந்தாம் மாதம், முதல் நாளில் அவர் அங்கே இறந்தார்.+ 39 ஓர் என்ற மலையில் ஆரோன் இறந்தபோது அவருக்கு 123 வயது.
40 கானான் தேசத்திலே நெகேபில் வாழ்ந்துவந்த கானானியனாகிய ஆராத் ராஜா,+ இஸ்ரவேலர்கள் வருவதைக் கேள்விப்பட்டான்.
41 பிற்பாடு, அவர்கள் ஓர் என்ற மலைக்குப்+ பக்கத்திலிருந்து புறப்பட்டு சல்மோனாவில் முகாம்போட்டார்கள். 42 பின்பு, சல்மோனாவிலிருந்து புறப்பட்டு பூனோனில் முகாம்போட்டார்கள். 43 அதன்பின், பூனோனிலிருந்து புறப்பட்டு ஓபோத்தில் முகாம்போட்டார்கள்.+ 44 அடுத்ததாக, ஓபோத்திலிருந்து புறப்பட்டு மோவாபின் எல்லையிலுள்ள இய்யா-அபாரீமில்* முகாம்போட்டார்கள்.+ 45 பிற்பாடு, இய்யமிலிருந்து புறப்பட்டு தீபோன்-காத்தில்+ முகாம்போட்டார்கள். 46 பிறகு, தீபோன்-காத்திலிருந்து புறப்பட்டு அல்மோன்-திப்லத்தாயிமில் முகாம்போட்டார்கள். 47 அதன்பின், அல்மோன்-திப்லத்தாயிமிலிருந்து புறப்பட்டு நேபோவுக்கு+ முன்னால் உள்ள அபாரீம் மலைத்தொடர்களில்+ முகாம்போட்டார்கள். 48 கடைசியாக, அபாரீம் மலைத்தொடர்களிலிருந்து புறப்பட்டு எரிகோவுக்குப் பக்கத்தில் யோர்தானை ஒட்டியுள்ள மோவாப் பாலைநிலத்தில் முகாம்போட்டார்கள்.+ 49 யோர்தானை ஒட்டியுள்ள அந்த மோவாப் பாலைநிலத்தில், பெத்-யெசிமோத் பகுதியிலிருந்து ஆபேல்-சித்தீம்வரை+ அவர்கள் தங்கியிருந்தார்கள்.
50 எரிகோவுக்குப் பக்கத்தில் யோர்தானை ஒட்டியுள்ள மோவாப் பாலைநிலத்தில் யெகோவா மோசேயிடம், 51 “நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நீங்கள் யோர்தானைக் கடந்து கானான் தேசத்துக்குள் போகப் போகிறீர்கள்.+ 52 அந்தத் தேசத்து ஜனங்கள் எல்லாரையும் நீங்கள் துரத்தியடிக்க வேண்டும். அவர்கள் வைத்திருக்கும் எல்லா கற்சிலைகளையும்+ உலோகச் சிலைகளையும்+ உடைத்துப்போட வேண்டும். அவர்களுடைய ஆராதனை மேடுகள் எல்லாவற்றையும் இடித்துப்போட வேண்டும்.+ 53 அவர்களுடைய தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு அங்கே குடியிருக்க வேண்டும். அந்தத் தேசத்தை நான் நிச்சயம் உங்கள் கையில் கொடுப்பேன்.+ 54 நீங்கள் அந்தத் தேசத்தை அந்தந்த கோத்திரங்களுக்கும் குடும்பங்களுக்கும் குலுக்கல் முறையில் பங்குபோட்டுக் கொடுக்க வேண்டும்.+ ஒரு தொகுதியில் நிறைய பேர் இருந்தால் அதிக நிலத்தைக் கொடுக்க வேண்டும், கொஞ்சம் பேர் மட்டும் இருந்தால் கொஞ்சம் நிலத்தை மட்டும் கொடுக்க வேண்டும்.+ குலுக்கல் முறையில் ஒரு கோத்திரத்துக்கு எந்த இடம் விழுகிறதோ அந்த இடத்தைக் கொடுக்க வேண்டும். உங்கள் தகப்பன்களுடைய கோத்திரங்களின்படி உங்களுக்குச் சொத்து கிடைக்கும்.+
55 ஆனால், அந்தத் தேசத்திலுள்ள ஜனங்களை நீங்கள் துரத்தியடிக்காவிட்டால்,+ அவர்கள் உங்களுடைய கண்களை உறுத்துகிற துரும்பைப் போலவும் உங்களுடைய விலாவில் குத்துகிற முள்ளைப் போலவும் இருப்பார்கள். நீங்கள் குடியிருக்கும் தேசத்தில் அவர்கள் உங்களைப் பாடாய்ப் படுத்துவார்கள்.+ 56 நான் அவர்களுக்குச் செய்ய நினைத்ததை உங்களுக்குச் செய்வேன்’”+ என்றார்.
34 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “நீ இஸ்ரவேலர்களுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘கானான் தேசத்தில்+ உங்களுக்குச் சொத்தாகக் கிடைக்கப்போகிற இடங்களின் எல்லைகள் இவைதான்:+
3 உங்களுடைய தெற்கு எல்லை, ஏதோம் தேசத்தை ஒட்டியுள்ள சீன் வனாந்தரம் தொடங்கி கிழக்கே உப்புக் கடலின்* கடைசி வரைக்கும் போகும்.+ 4 அங்கிருந்து அது திசைதிரும்பி, அக்கராபீம் மேட்டுக்குத்+ தெற்குப் பக்கமாகச் சுற்றி, சீன் பகுதியைத் தாண்டி, காதேஸ்-பர்னேயாவின்+ தெற்குப் பக்கத்தை அடையும். அங்கிருந்து ஆத்சார்-ஆதார்+ பகுதிக்குப் போய் அஸ்மோன் பகுதியை அடையும். 5 பின்பு, அஸ்மோனில் திசைதிரும்பி எகிப்தின் பள்ளத்தாக்குக்கு* போய், கடைசியாக கடலில்* முடிவடையும்.+
6 உங்களுடைய மேற்கு எல்லை, பெருங்கடலும்* அதன் கரையோரப் பகுதியும்தான். இதுதான் உங்களுடைய மேற்கு எல்லை.+
7 உங்களுடைய வடக்கு எல்லை, பெருங்கடல் தொடங்கி ஓர் என்ற மலைவரை போகும். 8 பின்பு, அது அந்த ஓர் மலையிலிருந்து லெபோ-காமாத்*+ வரையிலும் சேதாத் வரையிலும் போகும்.+ 9 அதன்பின், சிப்ரோன் வரையில் போய், கடைசியாக ஆத்சார்-ஏனானில்+ முடிவடையும். இதுதான் உங்களுடைய வடக்கு எல்லை.
10 உங்களுடைய கிழக்கு எல்லை, ஆத்சார்-ஏனான் தொடங்கி சேப்பாம் வரையில் போகும். 11 அதன்பின், சேப்பாமிலிருந்து ஆயினுக்குக் கிழக்கே உள்ள ரிப்லா வரையில் போகும். பின்பு, கீழே போய் கின்னரேத் கடலின்*+ கிழக்குப் பக்கத்தைத் தாண்டிப் போகும். 12 அதன்பின், யோர்தானுக்குப் போய், கடைசியில் உப்புக் கடலில் முடிவடையும்.+ இதுதான் உங்கள் தேசமும்+ அதன் எல்லைகளும்’” என்றார்.
13 பின்பு மோசே இஸ்ரவேலர்களிடம், “நீங்கள் குலுக்கல் முறையில் பங்குபோட்டுக்கொள்ள வேண்டிய+ தேசம் இதுதான். ஒன்பதரை கோத்திரங்களுக்கு இதைப் பிரித்துக் கொடுக்கும்படி யெகோவா கட்டளை தந்திருக்கிறார். 14 ரூபன் கோத்திரத்தார் தங்கள் தந்தைவழிக் குடும்பத்தின்படியும், காத் கோத்திரத்தார் தங்கள் தந்தைவழிக் குடும்பத்தின்படியும் ஏற்கெனவே பங்கை வாங்கிக்கொண்டார்கள். அவர்களோடு மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் தங்கள் பங்கை வாங்கிக்கொண்டார்கள்.+ 15 யோர்தானுக்கு இந்தப் பக்கத்திலே எரிகோவின் கிழக்கில், இந்த இரண்டரை கோத்திரத்தார் ஏற்கெனவே தங்கள் பங்கை வாங்கிக்கொண்டார்கள்”+ என்றார்.
16 பின்பு யெகோவா மோசேயிடம், 17 “குருவாகிய எலெயாசாரும்,+ நூனின் மகனாகிய யோசுவாவும்+ அந்தத் தேசத்தை உங்களுக்குப் பங்குபோட்டுக் கொடுப்பார்கள். 18 நிலத்தைப் பங்குபோடுவதற்காக ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.+ 19 நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியவர்கள் இவர்கள்தான்: யூதா கோத்திரத்திலிருந்து,+ எப்புன்னேயின் மகன் காலேப்.+ 20 சிமியோன் கோத்திரத்திலிருந்து,+ அம்மியூத்தின் மகன் ஷெமுவேல். 21 பென்யமீன் கோத்திரத்திலிருந்து,+ கிஸ்லோனின் மகன் எலிதாத். 22 தாண் கோத்திரத்திலிருந்து,+ யொக்லியின் மகனும் தலைவருமான புக்கி. 23 யோசேப்பின் மகனாகிய+ மனாசேயின் கோத்திரத்திலிருந்து,+ எபோத்தின் மகனும் தலைவருமான அன்னியேல். 24 யோசேப்பின் மகனாகிய எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்து,+ சிப்தானின் மகனும் தலைவருமான கேமுவேல். 25 செபுலோன் கோத்திரத்திலிருந்து,+ பர்னாக்கின் மகனும் தலைவருமான எலிசாப்பான். 26 இசக்கார் கோத்திரத்திலிருந்து,+ ஆஸானின் மகனும் தலைவருமான பல்த்தியேல். 27 ஆசேர் கோத்திரத்திலிருந்து,+ செலோமியின் மகனும் தலைவருமான அகியூத். 28 நப்தலி கோத்திரத்திலிருந்து,+ அம்மியூத்தின் மகனும் தலைவருமான பெதாக்கேல்” என்றார். 29 இவர்கள்தான் கானான் தேசத்தை இஸ்ரவேலர்களுக்குப் பங்குபோட்டுக் கொடுக்க வேண்டும் என்று யெகோவா கட்டளை கொடுத்தார்.+
35 எரிகோவுக்குப் பக்கத்தில் யோர்தானை ஒட்டியுள்ள மோவாப் பாலைநிலத்தில்+ யெகோவா மோசேயிடம், 2 “இஸ்ரவேலர்கள் தங்களுக்குக் கிடைக்கிற தேசத்தில் லேவியர்களுக்காகச் சில நகரங்களையும் அவற்றைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களையும் கொடுக்க வேண்டும்.+ 3 அந்த நகரங்களில் அவர்கள் குடியிருப்பார்கள். அந்த மேய்ச்சல் நிலங்களில் ஆடுமாடுகளையும் அவர்களுக்குச் சொந்தமானவற்றையும் மற்ற மிருகங்களையும் வைத்துக்கொள்வார்கள். 4 லேவியர்களுக்கு நீங்கள் கொடுக்கிற மேய்ச்சல் நிலங்கள், நகரத்தின் மதிலைச் சுற்றிலும் 1,000 முழ* தூரத்துக்கு இருக்க வேண்டும். 5 ஒவ்வொரு நகரத்தின் வெளிப்பக்கத்திலும் அதன் மேய்ச்சல் நிலத்துக்காக கிழக்கே 2,000 முழமும், தெற்கே 2,000 முழமும், மேற்கே 2,000 முழமும், வடக்கே 2,000 முழமும் ஒதுக்க வேண்டும்.
6 லேவியர்களுக்கு நீங்கள் கொடுக்கிற நகரங்களில் ஆறு நகரங்கள் அடைக்கல நகரங்களாக இருக்கும்.+ யாரையாவது கொலை செய்தவன் அங்கே தப்பியோடலாம்.+ அவற்றைத் தவிர, 42 நகரங்களையும் லேவியர்களுக்குக் கொடுக்க வேண்டும். 7 மேய்ச்சல் நிலங்களோடு, மொத்தம் 48 நகரங்களைக் கொடுக்க வேண்டும்.+ 8 இஸ்ரவேலர்களாகிய உங்களுக்குக் கிடைக்கிற தேசத்திலிருந்து இந்த நகரங்களைக் கொடுக்க வேண்டும்.+ ஒவ்வொரு கோத்திரத்திலும், நிறைய பேருள்ள தொகுதிகள் நிறைய நகரங்களைக் கொடுக்க வேண்டும், கொஞ்சம் பேருள்ள தொகுதிகள் கொஞ்சம் நகரங்களைக் கொடுக்க வேண்டும்.+ ஒவ்வொரு தொகுதியும் அதற்குக் கிடைக்கும் நகரங்களுக்குத் தகுந்தபடி லேவியர்களுக்குச் சில நகரங்களைக் கொடுக்க வேண்டும்” என்றார்.
9 பின்பு யெகோவா மோசேயிடம், 10 “இஸ்ரவேலர்களிடம் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நீங்கள் யோர்தானைக் கடந்து கானான் தேசத்துக்குப் போகப்போகிறீர்கள்.+ 11 உங்களுக்கு வசதியாக இருக்கும் இடங்களில் அடைக்கல நகரங்களை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான், உங்களில் யாராவது தெரியாத்தனமாகக் கொலை செய்துவிட்டால் அங்கே தப்பியோட முடியும்.+ 12 ஜனங்களின் பிரதிநிதிகளால் அந்தக் கொலையாளி விசாரிக்கப்படுவதற்கு முன்பு, பழிவாங்குபவனால்*+ கொல்லப்படாமல் இருப்பதற்காக அந்த நகரங்களில் அவன் அடைக்கலம் பெறலாம்.+ 13 நீங்கள் கொடுக்கிற ஆறு அடைக்கல நகரங்களும் இதுபோல் பாதுகாப்பு தரும். 14 யோர்தானுக்கு இந்தப் பக்கத்தில் மூன்று நகரங்களையும்+ கானான் தேசத்தில் மூன்று நகரங்களையும்+ அடைக்கல நகரங்களாக நீங்கள் கொடுக்க வேண்டும். 15 உங்களுக்கும், உங்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களுக்கும் இந்த ஆறு நகரங்கள் அடைக்கல நகரங்களாக இருக்கும்.+ யாரையாவது தெரியாத்தனமாகக் கொலை செய்பவன் இந்த நகரங்களுக்குத் தப்பியோடி அடைக்கலம் பெறலாம்.+
16 ஆனால், யாராவது ஒரு இரும்புக் கருவியை வைத்து ஒருவனைத் தாக்கியதால் அவன் இறந்துபோனால், தாக்கியவன் கொலைகாரன். அந்தக் கொலைகாரனுக்குக் கண்டிப்பாக மரண தண்டனை கொடுக்க வேண்டும்.+ 17 யாராவது ஒரு கல்லால்* ஒருவனைத் தாக்கியதால் அவன் இறந்துபோனால், தாக்கியவன் கொலைகாரன். அந்தக் கொலைகாரனுக்குக் கண்டிப்பாக மரண தண்டனை கொடுக்க வேண்டும். 18 யாராவது ஒரு மரக் கருவியை* வைத்து ஒருவனைத் தாக்கியதால் அவன் இறந்துபோனால், தாக்கியவன் கொலைகாரன். அந்தக் கொலைகாரனுக்குக் கண்டிப்பாக மரண தண்டனை கொடுக்க வேண்டும்.
19 பழிவாங்க* வேண்டியவன்தான் அந்தக் கொலைகாரனைக் கொல்ல வேண்டும். அவனைப் பார்த்தவுடனே கொன்றுபோடலாம். 20 யாராவது முன்விரோதத்தின் காரணமாக ஒருவனைக் கீழே தள்ளியதால் அவன் இறந்துபோனால், அல்லது கெட்ட எண்ணத்தோடு ஒருவன்மேல் எதையாவது வீசியதால் அவன் இறந்துபோனால்,+ 21 அல்லது முன்விரோதத்தின் காரணமாக ஒருவனைக் கையால் அடித்ததால் அவன் இறந்துபோனால், கொலை செய்தவனுக்கு நிச்சயம் மரண தண்டனை கொடுக்க வேண்டும். அவன் கொலைகாரன். பழிவாங்குபவன் அவனைப் பார்த்தவுடனே கொன்றுபோடலாம்.
22 ஆனால், முன்விரோதம் இல்லாமல் எதேச்சையாக ஒருவனைக் கீழே தள்ளியதால் அல்லது எந்தக் கெட்ட எண்ணமும் இல்லாமல் ஒருவன்மேல் எதையாவது வீசியதால்+ 23 அல்லது ஒருவன் இருப்பது தெரியாமல் அவன்மேல் ஒரு கல்லைப் போட்டதால் அல்லது அவனை எதிரியாகப் பார்க்காமலும் அவனுக்குக் கெடுதல் நினைக்காமலும் தெரியாத்தனமாகக் கல்லைப் போட்டதால் அவன் இறந்துபோனால், 24 அவனைக் கொலை செய்தவனுக்கும் பழிவாங்குபவனுக்கும் ஜனங்களின் பிரதிநிதிகள் இந்த நீதித்தீர்ப்புகளின்படி தீர்ப்பு வழங்க வேண்டும்.+ 25 இப்படி, பழிவாங்குபவனின் கையிலிருந்து கொலைகாரனை ஜனங்களின் பிரதிநிதிகள் காப்பாற்ற வேண்டும். அவன் தப்பியோடிய அடைக்கல நகரத்துக்கே அவனைத் திருப்பி அனுப்ப வேண்டும். பரிசுத்த தைலத்தால் அபிஷேகம் செய்யப்பட்ட தலைமைக் குரு+ சாகும்வரை அவன் அங்கேயே இருக்க வேண்டும்.
26 ஆனால், அடைக்கல நகரத்தின் எல்லையைத் தாண்டி அவன் வெளியே வந்தால், 27 பழிவாங்குபவன் அந்த அடைக்கல நகரத்தின் எல்லைக்கு வெளியே அவனைப் பார்த்துக் கொன்றுபோட்டால், பழிவாங்குபவன்மேல் கொலைப்பழி* வராது. 28 ஏனென்றால், கொலைகாரன் தலைமைக் குரு சாகும்வரை அடைக்கல நகரத்தில்தான் இருக்க வேண்டும். தலைமைக் குரு இறந்த பிறகு, அவன் தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்பிப் போகலாம்.+ 29 நீங்கள் எங்கே குடியிருந்தாலும் சரி, இதுதான் தலைமுறை தலைமுறைக்கும் உங்களுக்குச் சட்டமாக இருக்க வேண்டும்.
30 ஒருவன் இன்னொருவனைக் கொலை செய்தால், சாட்சிகளின் வாக்குமூலத்தை+ வைத்து அந்தக் கொலைகாரனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்.+ ஒரேவொரு சாட்சியின் வாக்குமூலத்தை வைத்து யாருக்கும் மரண தண்டனை கொடுக்கக் கூடாது. 31 மரண தண்டனை கொடுக்கப்பட்ட ஒரு கொலைகாரனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் மீட்புவிலை வாங்கக் கூடாது. அவனைக் கண்டிப்பாகக் கொன்றுபோட வேண்டும்.+ 32 அடைக்கல நகரத்துக்குத் தப்பியோடிய ஒருவன் தலைமைக் குரு இறப்பதற்கு முன்பே சொந்த ஊருக்குத் திரும்பிப்போக விரும்பினால், அவனுக்காக மீட்புவிலை வாங்கிக்கொண்டு அவனை அனுப்பி வைக்கக் கூடாது.
33 நீங்கள் குடியிருக்கிற தேசத்தைத் தீட்டுப்படுத்தக் கூடாது. இரத்தம் சிந்தினால் தேசம் தீட்டுப்படும்.+ இரத்தம் சிந்தியவனுடைய இரத்தத்தைச் சிந்துவதைத் தவிர, சிந்தப்பட்ட இரத்தத்துக்கு வேறெந்தப் பாவப் பரிகாரமும் இல்லை.+ 34 நீங்கள் வாழ்கிற தேசத்தைத் தீட்டுப்படுத்தக் கூடாது. ஏனென்றால், நான் அங்கே இருக்கிறேன். யெகோவாவாகிய நான் இஸ்ரவேலர்களின் நடுவில் இருக்கிறேன்’”+ என்றார்.
36 யோசேப்பின் கொள்ளுப்பேரனும் மனாசேயின் பேரனும் மாகீரின்+ மகனுமான கீலேயாத்தின் வம்சத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவர்கள், மோசேயிடமும் இஸ்ரவேலின் கோத்திரத் தலைவர்களிடமும் வந்து, 2 “எஜமானே, இஸ்ரவேலர்களுக்குத் தேசத்தைக் குலுக்கல் முறையில் பங்குபோட்டுக் கொடுக்க வேண்டுமென்று யெகோவா உங்களிடம் சொன்னார்.+ எங்கள் சகோதரன் செலோப்பியாத்தின் சொத்தை அவருடைய மகள்களுக்குக் கொடுக்க வேண்டுமென்றும் யெகோவா உங்களிடம் சொன்னார்.+ 3 ஆனால், அந்தப் பெண்கள் இஸ்ரவேலிலுள்ள வேறொரு கோத்திரத்தைச் சேர்ந்தவர்களைக் கல்யாணம் செய்துகொண்டால், அவர்களுடைய சொத்து எங்களுடைய பரம்பரையைவிட்டுப் போய்விடும். குலுக்கல் முறையில் எங்கள் கோத்திரத்துக்குக் கிடைத்த சொத்து, அவர்களுடைய கணவர்களின் கோத்திரத்துக்குப் போய்விடும். 4 அதுமட்டுமல்ல, இஸ்ரவேலர்களின் விடுதலை* வருஷம்+ வரும்போது, அந்தப் பெண்களின் சொத்து எங்களுடைய கோத்திரத்தைவிட்டுக் கைமாறி அவர்களுடைய கணவர்களின் கோத்திரத்துக்கு நிரந்தரமாகப் போய்விடுமே” என்றார்கள்.
5 அப்போது, யெகோவாவின் உத்தரவுப்படி மோசே இஸ்ரவேலர்களிடம், “யோசேப்பு கோத்திரத்தார் சொல்வது சரிதான். 6 செலோப்பியாத்தின் மகள்களைப் பற்றி யெகோவா கொடுக்கும் கட்டளை என்னவென்றால், ‘அவர்கள் தங்களுக்குப் பிடித்தவரைக் கல்யாணம் செய்யலாம். ஆனால், அவர்களுடைய அப்பாவின் கோத்திரத்தைச் சேர்ந்தவரை மட்டும்தான் கல்யாணம் செய்ய வேண்டும். 7 இஸ்ரவேலர்களின் சொத்து ஒரு கோத்திரத்திலிருந்து இன்னொரு கோத்திரத்துக்குப் போகக் கூடாது. ஏனென்றால், இஸ்ரவேலர்கள் அவரவர் கோத்திரத்தின் சொத்தை அவரவரே வைத்துக்கொள்ள வேண்டும். 8 இஸ்ரவேலில் ஒரு பெண்ணுக்குப் பரம்பரைச் சொத்து கிடைத்தால், அவள் எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும், தன்னுடைய அப்பாவின் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவருக்கே மனைவியாக வேண்டும்.+ அப்போதுதான், இஸ்ரவேலர்கள் தங்களுடைய கோத்திரத்தின் சொத்தை தங்களிடமே வைத்துக்கொள்ள முடியும். 9 இஸ்ரவேலர்களின் சொத்து ஒரு கோத்திரத்திலிருந்து இன்னொரு கோத்திரத்துக்குப் போகக் கூடாது. ஏனென்றால், இஸ்ரவேலர்கள் அவரவர் கோத்திரத்தின் சொத்தை அவரவரே வைத்துக்கொள்ள வேண்டும்’” என்றார்.
10 மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே செலோப்பியாத்தின் மகள்கள் செய்தார்கள்.+ 11 செலோப்பியாத்தின்+ மகள்களான மக்லாளும், திர்சாளும், ஒக்லாளும், மில்காளும், நோவாளும் தங்களுடைய அப்பாவின் சகோதரர்களுடைய மகன்களைக் கல்யாணம் செய்துகொண்டார்கள். 12 யோசேப்பின் மகனாகிய மனாசேயின் வம்சத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு அவர்கள் மனைவிகளானார்கள். இதனால், அவர்களுடைய சொத்து அவர்களுடைய அப்பாவின் கோத்திரத்திலேயே இருந்தது.
13 எரிகோவுக்குப் பக்கத்தில் யோர்தானை ஒட்டியுள்ள மோவாப் பாலைநிலத்தில், மோசே மூலம் யெகோவா இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்த கட்டளைகளும் நீதித்தீர்ப்புகளும் இவைதான்.+
நே.மொ., “அவர்களுடைய படைகளின்படி.”
அதாவது, “லேவியனாக இல்லாத.”
நே.மொ., “அவர்களுடைய படைகளின்படியும்.”
வே.வா., “கூடாரத்தைக் காவல்காப்பது; கூடாரச் சேவை செய்வது.”
நே.மொ., “அவர்களுடைய படைகளின்படி.”
நே.மொ., “அவர்களுடைய படைகளின்படி.”
நே.மொ., “அவர்களுடைய படைகளின்படி.”
நே.மொ., “அவர்களுடைய படைகளின்படி.”
வே.வா., “தகாத விதத்தில்.”
சொல் பட்டியலைப் பாருங்கள்.
சொல் பட்டியலைப் பாருங்கள்.
அதாவது, “ஆரோனின் வம்சத்தைச் சேராத.”
வே.வா., “புனிதப்படுத்தினேன்.”
அதாவது, “லேவியனாக இல்லாத.”
ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “பரிசுத்த இடத்து.”
ஒரு கேரா என்பது 0.57 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “பரிசுத்த இடத்து.”
நே.மொ., “வழிபாட்டுக் கூடார விரிப்பு.”
நே.மொ., “சந்திப்புக் கூடார விரிப்பு.”
அதாவது, “சுமார் ஒரு கிலோ.”
நே.மொ., “பரிசுத்தமான.”
அநேகமாக, பிறப்பு உறுப்பை இது குறிக்கலாம்.
இது ஒருவேளை மலடியாக்குவதைக் குறிக்கலாம்.
அதாவது, “அப்படியே ஆகட்டும்! அப்படியே ஆகட்டும்!”
அதாவது, “அர்ப்பணிக்கப்பட்டவராய், பிரித்துவைக்கப்பட்டவராய்.”
சொல் பட்டியலில் “நெஃபெஷ், சைக்கீ” என்ற தலைப்பைப் பாருங்கள்.
நே.மொ., “தன் தலையைப் புனிதப்படுத்திக்கொள்ள.” அநேகமாக, தலைமுடியை மறுபடியும் வளர்ப்பதைக் குறிக்கலாம்.
அதாவது, “நெஞ்சுப் பகுதியோடும்.”
நே.மொ., “யெகோவா தன் முகத்தை நிமிர்த்தி.”
அதாவது, “வளைவான கூரை போடப்பட்ட மாட்டு வண்டி.”
வே.வா., “பரிசுத்த இடத்து.”
ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “பரிசுத்த இடத்து.”
வே.வா., “பரிசுத்த இடத்து.”
வே.வா., “பரிசுத்த இடத்து.”
வே.வா., “பரிசுத்த இடத்து.”
வே.வா., “பரிசுத்த இடத்து.”
வே.வா., “பரிசுத்த இடத்து.”
வே.வா., “பரிசுத்த இடத்து.”
வே.வா., “பரிசுத்த இடத்து.”
வே.வா., “பரிசுத்த இடத்து.”
வே.வா., “பரிசுத்த இடத்து.”
வே.வா., “பரிசுத்த இடத்து.”
வே.வா., “பரிசுத்த இடத்து.”
வே.வா., “பரிசுத்த இடத்து.”
வே.வா., “புனிதப்படுத்தினேன்.”
நே.மொ., “அவர்களுடைய படைகளின்படி.”
நே.மொ., “அவர்களுடைய படைகளின்படி.”
நே.மொ., “அவர்களுடைய படைகளின்படி.”
நே.மொ., “அவர்களுடைய படைகளின்படி.”
நே.மொ., “அவர்களுடைய படைகளின்படி.”
அதாவது, “எத்திரோவின்.”
அர்த்தம், “பற்றியெரிதல்.”
அநேகமாக, “இஸ்ரவேலர்கள் அல்லாத ஜனங்கள்.”
வே.வா., “பேராசைப்பட்டார்கள்.”
சில மரங்களிலிருந்து கிடைக்கும் ஒருவித வாசனைப் பிசின். பார்ப்பதற்கு முத்துபோல் இருந்தது; ஒளி ஊடுருவக்கூடியதாக இருந்தது.
வே.வா., “மூப்பர்களிலும்.”
வே.வா., “யெகோவாவின் கை ரொம்பச் சிறியது.”
வே.வா., “தீர்க்கதரிசனம் சொல்ல.”
இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
அர்த்தம், “ஆலாய்ப் பறந்தவர்களின் கல்லறைகள்.”
வே.வா., “சாந்தமானவராக.”
நே.மொ., “என் வீடு முழுவதிலும் அவன் உண்மையுள்ளவனாக இருக்கிறான்.”
வே.வா., “யெஹோஷுவா”; அர்த்தம், “யெகோவாவே மீட்பு.”
வே.வா., “காமாத்தின் நுழைவாசல்.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கை.”
அர்த்தம், “திராட்சைக் குலை.”
வே.வா., “மாறாத அன்பை.”
வே.வா., “நான் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
வே.வா., “நான் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.
அதாவது, “சுமார் ஒரு கிலோ.”
நே.மொ., “ஒரு ஹின் அளவில் நான்கில் ஒரு பங்கு.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
அதாவது, “சுமார் 2 கிலோ.”
நே.மொ., “ஒரு ஹின் அளவில் மூன்றிலொரு பங்கு.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
அதாவது, “சுமார் 3 கிலோ.”
வே.வா., “நீதித்தீர்ப்பும்.”
நே.மொ., “கொரகொரப்பான மாவில்.”
நே.மொ., “கொரகொரப்பான மாவில்.”
நே.மொ., “இதயமும்.”
ஒருவேளை, “மோசேயை எதிர்த்தவர்களோடு சேர்ந்துகொண்ட ஆட்களுடைய.”
ஒருவேளை அந்த ஆட்கள் தன்னைக் குருட்டுத்தனமாகப் பின்பற்ற வேண்டுமென்று மோசே எதிர்பார்ப்பதாக அவர்கள் அர்த்தப்படுத்தியிருக்கலாம்.
வே.வா., “மூப்பர்களும்.”
அதாவது, “லேவியனாக இல்லாத.”
அதாவது, “லேவியனாக இல்லாத.”
வே.வா., “பரிசுத்த இடத்து.”
ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
ஒரு கேரா என்பது 0.57 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
அதாவது, “நெஞ்சுப் பகுதியையும்.”
நே.மொ., “உப்பு ஒப்பந்தம்.”
மேரிபா என்பதன் அர்த்தம், “வாக்குவாதம்.”
நே.மொ., “தன் முன்னோர்களுடன் சேர்க்கப்படுவான்.” எபிரெயுவில் கவிதை நடையிலுள்ள இந்த வார்த்தைகள் மரணத்தைக் குறிக்கின்றன.
அர்த்தம், “அடியோடு அழித்தல்.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கின்.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்குகள்.”
அல்லது, “வனாந்தரத்தை.”
வே.வா, “அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும்.”
வே.வா., “மூப்பர்களிடம்.”
அநேகமாக, “யூப்ரடிஸ் ஆற்றுக்கு.”
வே.வா., “குறிசொல்வதற்கான.”
சேணம் என்பது மிருகங்களின் முதுகில் உட்கார்ந்து சவாரி செய்வதற்குப் போடப்படும் தோலினால் ஆன இருக்கை.
அல்லது, “வனாந்தரத்தை.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்குகள்.”
வே.வா., “சந்ததி.”
நே.மொ., “பிறப்புறுப்பை.”
வே.வா., “என்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று.”
வே.வா., “தகாத விதத்தில்.”
வே.வா., “நீதித்தீர்ப்பு.”
நே.மொ., “உன் முன்னோர்களுடன் சேர்க்கப்படுவாய்.” எபிரெயுவில் கவிதை நடையிலுள்ள இந்த வார்த்தைகள் மரணத்தைக் குறிக்கின்றன.
வே.வா., “வழக்கமான.”
நே.மொ., “ஒரு ஹின் அளவில் நான்கில் ஒரு பங்கு.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
அதாவது, “சுமார் ஒரு கிலோ.”
வே.வா., “வழக்கமான.”
நே.மொ., “பரிசுத்த இடத்தில்.”
அதாவது, “சுமார் 2 கிலோ.”
வே.வா., “வழக்கமான.”
அதாவது, “சுமார் 3 கிலோ.”
அதாவது, “சுமார் 2 கிலோ.”
அதாவது, “சுமார் ஒரு கிலோ.”
நே.மொ., “ஒரு ஹின் அளவில் பாதி.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
நே.மொ., “ஒரு ஹின் அளவில் மூன்றிலொரு பங்கு.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
நே.மொ., “ஒரு ஹின் அளவில் நான்கில் ஒரு பங்கு.”
வே.வா., “வழக்கமான.”
அதாவது, “சுமார் 3 கிலோ.”
அதாவது, “சுமார் 2 கிலோ.”
அதாவது, “சுமார் ஒரு கிலோ.”
வே.வா., “வழக்கமான.”
வாரங்களின் பண்டிகை என்றும் அழைக்கப்பட்டது.
அதாவது, “சுமார் 3 கிலோ.”
அதாவது, “சுமார் 2 கிலோ.”
அதாவது, “சுமார் ஒரு கிலோ.”
வே.வா., “வழக்கமான.”
அதாவது, “சுமார் 3 கிலோ.”
அதாவது, “சுமார் 2 கிலோ.”
அதாவது, “சுமார் ஒரு கிலோ.”
வே.வா., “வழக்கமான.”
விரதம் இருப்பதன் மூலமோ வேறு விதத்தின் மூலமோ தங்களைத்தாங்களே கஷ்டப்படுத்திக்கொள்வதைக் குறிக்கலாம்.
அதாவது, “சுமார் 3 கிலோ.”
அதாவது, “சுமார் 2 கிலோ.”
அதாவது, “சுமார் ஒரு கிலோ.”
வே.வா., “வழக்கமான.”
அதாவது, “சுமார் 3 கிலோ.”
அதாவது, “சுமார் 2 கிலோ.”
அதாவது, “சுமார் ஒரு கிலோ.”
வே.வா., “வழக்கமான.”
வே.வா., “வழக்கமான.”
வே.வா., “வழக்கமான.”
வே.வா., “வழக்கமான.”
வே.வா., “வழக்கமான.”
வே.வா., “வழக்கமான.”
வே.வா., “வழக்கமான.”
வே.வா., “வழக்கமான.”
விரதம் இருப்பதன் மூலமோ வேறு விதத்தின் மூலமோ தங்களைத்தாங்களே கஷ்டப்படுத்திக்கொள்வதைக் குறிக்கலாம்.
நே.மொ., “உன் முன்னோர்களுடன் சேர்க்கப்படுவாய்.” எபிரெயுவில் கவிதை நடையிலுள்ள இந்த வார்த்தைகள் மரணத்தைக் குறிக்கின்றன.
நே.மொ., “ஆயிரம் வீரர்கள் கொண்ட பிரிவுகளின்.”
ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
இவை கற்சுவர்களால் கட்டப்பட்ட நிரந்தரத் தொழுவங்களைக் குறிக்கின்றன.
வே.வா, “அதைச் சுற்றியுள்ள ஊர்களையும்.”
நே.மொ., “அபாரீமின் இய்யம் (இடிபாடுகள்).” இதுதான் அடுத்த வசனத்தில் இய்யம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, “சவக் கடலின்.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்குக்கு.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
அதாவது, “பெருங்கடலில்; மத்தியதரைக் கடலில்.”
அதாவது, “மத்தியதரைக் கடலும்.”
வே.வா., “காமாத்தின் நுழைவாசல்.”
அதாவது, “கெனேசரேத்து ஏரியின்; கலிலேயா கடலின்.”
இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
அதாவது, “கொலை செய்யப்பட்டவனின் நெருங்கிய உறவினரால்.”
நே.மொ., “உயிரையே பறித்துவிடுகிற கல்லால்.”
நே.மொ., “உயிரையே பறித்துவிடுகிற மரக் கருவியை.”
நே.மொ., “சிந்தப்பட்ட இரத்தத்துக்காகப் பழிவாங்க.”
வே.வா., “இரத்தப்பழி.”
வே.வா., “யூபிலி.”